புள்ளி விவரங்கள் எண்களைக் கொண்ட நீண்ட பட்டியல்களில் எடுத்துக் கூறுவதை விடப் படங்களின் வாயிலாக எடுத்துக் காட்டப் பட்டால், அவை மக்களின் கவனத்தை ஈர்ப்பதோடு, நீண்ட நாள் நினைவில் பதிந்து விடவும் செய்கின்றன. எனவே, இத்தகைய படக் குறியீட்டு முறையில்(pictorial representation) தரப் படும் சித்திர விளக்கப் படங்கள் கண்காட்சி, விளம்பர நிறுவனம், வணிகச் சந்தை போன்ற இடங்களில், பெரிதும் கையாளப் படுகின்றன. மாறியின் மதிப்புகளை அதன் பண்பிற்கு ஏற்பப் படங்கள் வரைந்து, அவற்றின் வேறுபட்ட தன்மையினை ஒரே அளவுடைய, எண்ணிக்கையில் மாறுபட்ட பல படங்களாக வரையலாம்.எடுத்துக் காட்டாகப் பின் வரும் விவரங்களைப் படக் குறியீட்டு முறையில் வரையலாம். ஒரு புற நகர்ப் பகுதியில் 3 ஆண்டுகளில் புதிதாகக் கட்டப் பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை பின் வருமாறு: 160 வீடுகள் = 1 என்னும் அளவு கோலில், 1, 3, 4 வீடுகளாக வரையப் பட்டுள்ளது. படக் குறிப்பீட்டு முறையில் பிறிதொரு வகையும் உண்டு. இதில், மாறியின் அளவுகளில் மாறுபட்ட ஒரே படமாகவே வரைந்து காட்டலாம். ஒவ்வோர் ஆண்டும், அதற்குரிய வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, வீட்டின் அளவுகள் 1 : 3 : 4 : 5 என்னும் விகிதத்தில் அமைந்துள்ளன. சித்திர விளக்கப் படங்கள் புள்ளியியல் ஆய்வுகளுக்குப் பயன்படா. மேலும், இவற்றை வரைவதற்கு ஓவியத் திறமை வேண்டும். மாறியின் மதிப்புகள் 1360, 2410, 1907 போன்று வந்தால், பின்னங்களைப் படத்தில் காட்டல் கடினம். —கிருஷ்ணவேணி அருணாசலம்