அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு
aṭlāṇṭikkuc cūṟaimīṉ vaḷap pātukāppup paṉṉāṭṭuk kuḻu
அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்பிற்கென 17 அட்லாண்டிக்கு மண்டல நாடுகள், 1966–ஆம் ஆண்டு மே திங்களில் பிரேசில் நாட்டின் இரியோடி சனிரோ (Riode Janeiro) என்ற இடத்தில், இக்குழுவிற்கான உடன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தன.
அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்பிற்கென 17 அட்லாண்டிக்கு மண்டல நாடுகள், 1966–ஆம் ஆண்டு மே திங்களில் பிரேசில் நாட்டின் இரியோடி சனிரோ (Riode Janeiro) என்ற இடத்தில், இக்குழுவிற்கான உடன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தன. பின்னர், இசுபெயின் (Spain) நாட்டின் தலைநகரான மாட்ரிடு (Madrid) என்னுமிடத்தில் தலைமைச் செயலகம் நிறுவப்பட்டுச் செயல்படுகிறது. இத்தலைமைச் செயலகம், பல ஆய்வுத் திட்டங்களைக் கண்காணிப்பதோடு பல திட்டங்களையும் ஒருங்கிணைத்துக் குழுவின் நோக்கங்கள் நிறைவேறச் செயலாற்றுகிறது. புள்ளி விவரங்களைச் சேகரித்துத் தேவையான நாடுகளுக்கு வழங்கிச் சூறைமீன் (Tuna) வளம் பற்றிய நுட்ப அறிவினை வளர்ச்சியடையச் செய்யும் தகவல் மையமாகவும் திகழ்கிறது.
உறுப்பினர்கள்
அங்கோலா, பெனின் (Benin), பிரேசில், கனடா, கேப் வெர்டி (Cape Verde), கியூபா, பிரான்சு, கபான் (Gabon), கானா, அய்வரி கோசுட்டு (Ivory Coast), சப்பான், கொரியாக் குடியரசு, மொராக்கோ, போர்ச்சுகல், செனகல், தென்னாப்பிரிக்கா, இசுபெயின் (Spain), உருசியா, அமெரிக்கா ஆகியவை இப்போதைய உறுப்பு நாடுகள்.
நோக்கங்கள்
சூறைமீன் வனத்தைப் பெருக்குவது, மீன்வளம் முற்றிலும் சுரண்டப்பட்டு அழிந்து போவதைத் தடுப்பது, சூறை இனத்தைச் சார்ந்த பிற உயிரின வகைகளின் வளத்தைப் பாதுகாப்பது, இனப்பெருக்கத்தை வளப்படுத்தி மீன்பிடிப்பு முறைகளை வரையறை செய்வது ஆகிய சிறப்புக் குறிக்கோள்களைக்கொண்டு இக்குழு செயல்படுகிறது.
குழுவின் ஆண்டுக் கூட்டம் தவறாது நவம்பர்த் திங்களில் நடத்து வருகிறது. அதில் உறுப்பு நாடுகளின் வல்லுநர்கள், சிறப்புப் பேராளர்கள் ஆகியோர் கலந்து உரையாடிக் குழுவின் திட்டங்கள், கொள்கைகள், செயல் முறைகள் முதலியனவற்றை முடிவு செய்கின்றனர். உறுப்பு நாடுகள் எவ்வகை மீன் இனங்களை எந்த அளவில் பிடிக்கலாம் என்பதை இக்குழு வரையறை செய்கிறது. இசுகிப் சேக் துனா (Skip Jack Tuna) எனப்படும் மீன் இனம் அழிந்துபோகும் நிலையிலுள்ளது எனக் குழுவின் ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்தியதால், இப்போது அதனைப் பாதுகாப்பதற்கான திட்டங்களுக்கு முதலிடம் கொடுத்துப் பன்னாட்டு “இசுகிப் சேக் ஆண்டுத் திட்டம்” (Skip Jack Year Programme) ஒன்றை (1979-1982) உருவாக்கிச் செயல்படுத்துகிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 222)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/83may9r2/
தமிழ்“அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/83may9r2/APA
Oliyon Research. (2026). அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/83may9r2/MLA
"அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/83may9r2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment