கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர்; சிநேந்திர மாலை என்னும் சோதிட நூல் இயற்றியவர்; சமண சமயத்தைச் சார்ந்து விளங்கிய புலவர். இவருக்குச் சைநமாமுனிவர் என்ற பெயரும் உண்டு. சிநேந்திர மாலையில் 464 பாடல்கள் உள்ளன. இந்நூல் சோதிடக்கலை பற்றியதாகும். சினேந்திரன் என்பது அருகனுக்குரிய பெயர்களுள் ஒன்று. அ.ஆ.