இலாசியம்
ilāciyam
இலாசியம் என்பது இந்திய நடன வகைகளுள் ஒன்றாகும்.
இலாசியம் என்பது இந்திய நடன வகைகளுள் ஒன்றாகும். இந்திய நடனம் இலாசியம், தாண்டவம் என்னும் இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் ஆடும் நடனம் தாண்டவ நடனவகையைச் சேர்ந்தது. தாண்டவம் ஏழு பெரும் பிரிவுகளும் 108 வகைகளும் உடையது. இலாசியம் மென்மையான நடனத்தைக் குறிக்கும். உமையவள் இலாசிய நடனம் ஆடியதாகப் புராணங்கள் கூறுகின்றன. நாட்டிய சாத்திரம் இலாசிய நடனத்தை, ஒரு நடனக்கலைஞர் மட்டும் தனித்துப் பல்வேறு நடனப் பகுதிகளை ஆடும் முறை என்றும், இதில் பத்து உறுப்புகள் அடங்கியுள்ளன என்றும் கூறுகிறது. இந்தப் பத்து உறுப்புகளிலும் நடனக் கலைஞர் பல்வேறு மனவெழுச்சிகளை வெளிப்படுத்தி ஆடுவர். இவற்றினின்று பிற்காலத்தில் முக அபிநயங்கள் தோன்றின என்று கருதப்படுகிறது. இலாசிய நடனத்தில் அபிநயம் தலையாய இடம் பெறுகிறது. இக்காலத்தில் சதிர் நாட்டிய முறையில் ஆடப்படும் பரத நாட்டியம் இலாசிய நடன வகையைச் சேர்ந்ததாகும். இலாசிய நடனத்தில் பதம் என்னும் பகுதியில் மிகுதியான அபிநயங்களைக் காட்டும் வாய்ப்பு உள்ளது. இந்திய நடனங்களுள் மணிபுரி நடனம் இலாசிய நடனமாகவே அமைந்துள்ளது. காண்க: அபிநயம்; இந்திய நடனங்கள்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 362)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7yz77gx5/
தமிழ்“இலாசியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7yz77gx5/APA
Oliyon Research. (2026). இலாசியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7yz77gx5/MLA
"இலாசியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7yz77gx5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment