நைட்ரேட்
naiṭrēṭ
நைட்ரிக் அமிலத்திலிருந்து பெறப் படும் NO₃ என்னும் எதிரயனிச் சேர்மங்கள் நைட்ரேட்டுகள் எனப் படுகின்றன.
நைட்ரிக் அமிலத்திலிருந்து பெறப் படும் NO₃ என்னும் எதிரயனிச் சேர்மங்கள் நைட்ரேட்டுகள் எனப் படுகின்றன. அனைத்து உலோக நைட்ரேட்டுகளும் நீரில் கரைவனவாதலால், இவை இயற்கையிலிருந்து கிடைப்பதில்லை. நைட்ரேட் எனும் சேர்மம் மட்டும் விதிவிலக் காகும். இதைச் சிலிசால்ட்பீட்டர் என்றும் குறிப்பிடுவர். நைட்ரேட்டுகளில் நைட்ரஜன் தனிமத்தின் ஆக்சிஜனேற்ற நிலை பெரும நிலையில் (5+) உள்ளமையால், இவ்வயனி சிறந்த ஆக்சிஜனேற்றக் காரணியாக உள்ளது. இப்பண்பினால், தீப்பெட்டி, வெடி மருந்து ஆகியவற்றின் தயாரிப்பில் நைட்ரேட்டுகள் பெருமளவில் பயன் படுகின்றன. அம்மோனியம் நைட்ரேட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கினால், அது வெடிக்கும். இதைப் பின் வரும் சமன்பாடு விளக்கிறது. NH_4NO_3 \rightarrow N_2O + 2H_2O நைட்ரஜன் உரங்களின் முக்கிய மூலப் பொருள்களாக நைட்ரேட்டுகள் உள்ளன. நைட்ரேட் அயனியைக் கண்டறிய உதவும் பண்பறி ஆய்வில், பழுப்பு நிற வளைய ஆய்வு சிறப்பாக உதவுகிறது. நைட்ரேட் உப்புடன் செறிவான சல்ஃப்யூரிக் அமிலத்தைச் சேர்த்துப் பின் ஆய்வுக் குழாயின் பக்கங்களின் வழியே ஃபெர்ரஸ் சல்ஃபேட் கரைசலைச் சேர்த்தால், இரு நீர்மங்களும் சந்திக்கும் இடத்தில், ஒரு பழுப்பு நிற வளையம் உண்டாகிறது. நைட்ரைட் அயனியும் கலந்திருந்தால், பழுப்பு நிறம் கரைசல் முழுவதும் பரவுகிறது. இந்தப் பழுப்பு நிறம் உருவாதலுக்குக் காரணமாக Fe(NO)2+ எனும் அளவு அமைகிறது. –NO₂ எனும் தொகுதியைக் கொண்ட கரிமச் சேர்மங்கள் நைட்ரோ சேர்மங்கள் எனப் படும். இதில் TNT போன்ற வெடி மருந்துகளும் அடங்கும். —த. தெய்வீகன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 270)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7vax9vge/
தமிழ்“நைட்ரேட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7vax9vge/APA
Oliyon Research. (2026). நைட்ரேட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7vax9vge/MLA
"நைட்ரேட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7vax9vge/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment