வெய்ஸ்

veys
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விரிபரப்பு தகவல் வழங்கன் என்று பொருள்படும் Wide Area Information Server என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். இணையத்தில் ஆவணங்களைத் தேடி எடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் யூனிக்ஸ் அடிப் படையிலான மென்பொருள்.இணையத்தில் குவிந்துகிடக்கும் ஏராளமான ஆவணங்கள் கருப்பொருள் வாரியாக வகைப்படுத்தப்பட்டு அவற்றின் இருப்பிட முகவரிகள் 400-க்கு மேற்பட்ட வெய்ஸ் வழங்கன்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட திறவுச்சொல் அடிப்படையில் அவற்றுள் நமக்குத் தேவையான தகவலைத் தேடிப்பெற முடியும். திங்கிங் மெஷின் கார்ப்பரேஷன், ஆப்பிள் கம்ப்யூட்டர், டோவ் ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து வெய்ஸை உருவாக்கினர். இயற்கை மொழி அடிப்படையிலான வினவல்களைப் பரிச்சீலிக்க இவர்கள் இஸட் 39.50 தர வரையறைகளைப் பயன்படுத்தினர். தனித்த வலைத்தளம் ஒன்றிலும் வெய்ஸ் நிரலை ஒரு தேடு பொறியாகப் பயன்படுத்த முடியும். சிலவேளைகளில் வெய்ஸ் மூலம் பெறப்படும் ஆவணப்பட்டியலில் தேவையற்ற தகவல்களும் இடம் பெறுவதுண்டு. வெய்ஸ் வழங்கனில் தகவலைத் தேட பயனாளர்கள் வெய்ஸ் கிளையன் மென்பொருளைப் பயன்படுத்த வேண்டும். — WAIS
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 485)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7u2mcmje/

தமிழ்
“வெய்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7u2mcmje/
APA
Oliyon Research. (2026). வெய்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7u2mcmje/
MLA
"வெய்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7u2mcmje/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment