அலரிக்
alarik
விசிகோத்துகளின் அரசர்களுள் ஒருவர்.
விசிகோத்துகளின் அரசர்களுள் ஒருவர். கி.பி. 400–ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இவர் இத்தாலியின்மீது படையெடுத்து உரோமாபுரியைக் கைப்பற்றினார். கி.பி. 395–ஆம் ஆண்டில் வீழ்ச்சியுறத் தொடங்கிய உரோமானியப் பேரரசு, கிழக்கு, மேற்குப் பேரரசுகளாகப் பிரியலாயிற்று. கிழக்கத்திய உரோமானியப் பேரரசின்மீது விசிகோத்துகளின் (Visigoths) படையைத் தலைமை தாங்கி நடத்திச் சென்ற அலரிக் (Alaric), இத்தாலியின் மீது கி. பி. 401–ஆம் ஆண்டில் படையெடுத்தார். மேற்கு உரோமானியப் பேரரசின் மீதும் பல தாக்குதல்களை இவர் நடத்தினார். உரோமாபுரியும் கி.பி. 408–9–ஆம் ஆண்டுகளில் இவரால் தாக்கப் பெற்றது. பெரும் தொகைகளை மீட்சிப் பணமாகப் பெற்று அலரிக் முற்றுகைகளைக் கைவிட்டார். மீண்டும், கி.பி. 410–ஆம் ஆண்டில் உரோமாபுரியைக் கொள்ளையடித்துக் கைப்பற்றினார். எனினும், அங்கிருந்த திருச்சபைகளை இவர் தொடவில்லை. அலரிக் ஆப்பிரிக்காவில் நிலையாகத் தங்கத் திட்டமிட்டிருந்தார். எனினும் கடும் புயலொன்று இவரைத் தென் இத்தாலியில் உள்ள கொசென்சாவில் தங்கும்படி செய்துவிட்டது. அங்கேயே கி.பி. 410 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அலரிக் காலமானர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 867)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7s4w5cj2/
தமிழ்“அலரிக்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7s4w5cj2/APA
Oliyon Research. (2026). அலரிக். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7s4w5cj2/MLA
"அலரிக்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7s4w5cj2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment