இடையன் பூச்சி
iṭaiyaṉ pūcci
இடையன் பூச்சி (Mantis) : கும்பிடு பூச்சி என்றும் இதைச் சொல்லுவார்கள்.
இடையன் பூச்சி (Mantis) : கும்பிடு பூச்சி என்றும் இதைச் சொல்லுவார்கள். கரப்பான், வெட்டுக்கிளி முதலிய பூச்சிகளின் வமிசத்தைச் சேர்ந்தது. கடித்துண்ணும் தாடைகளையும், வளர்ச்சியில் இளம் பூச்சிப் பருவத்தையும் பெற்ற இப் பூச்சியின் முன்ஜதைக் கால்களின் இடை நீண்டும், தொடையும்முன்னங் காலும் வேறு பூச்சிகளைப் பிடித்துண்பதற்கேற்றவாறு அமையப்பெற்று மிருக்கின்றன. இப்பூச்சிகளின் மார்பின் முதற்பாகம் மற்றிரு பாகங்களைக் காட்டிலும் நீண்டிருக்கிறது. இரண்டு ஜதை இறக்கைகளும் கரப்பான் பூச்சிக்கிருப்பதுபோலிருக்கும். பெண் பூச்சி முட்டைகளை, உலர்ந்துபோய் நுரை போலக் காணும் கூண்டு ஒன்றினுள் வைக்கின்றது. சில நாட்கள் சென்று சிறு இடையன் பூச்சிகள் அதிலிருந்து வெளிவரும். காங்கைலஸ் (Gongylus) என்ற இடையன் பூச்சியின் பல பாகங்கள் இலைபோல் அகன்றிருக்கின்றன. அது பார்ப்பதற்கு ஒரு பூப்போல் இருக்கும். ஹம்பர்ட்டியெல்லா (Humbertiella) என்பது மரப்பட்டையின் நிறத்தையுடைய ஓர் இடையன் பூச்சி. ஜே. சா.]]
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 586)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7rb6trdk/
தமிழ்“இடையன் பூச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7rb6trdk/APA
Oliyon Research. (2026). இடையன் பூச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7rb6trdk/MLA
"இடையன் பூச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7rb6trdk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment