பயன்பாட்டு அடுக்கு

payaṉpāṭṭu aṭukku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினிப் பிணையங்களில் இரு கணினிகளுக்கிடையே நடைபெறும் தரவுப் பரிமாற்றத்தின் தொழில்நுட்ப நெறிமுறைகளை பன்னாட்டுத் தரநிர்ணய அமைப்பு (lnternational Standards Organisation-ISO) வகுத்துத்துள்ளது. சமிக்கைப் பரிமாற்றங்களுக்குரிய ஒஎஸ்ஐ மாதிரி (OSI Model-Open System Inter connection Model) என்பது முக்கியமான ஒன்று. ஏழு அடுக்குகளைக் கொண்டது. அவற்றுள் பயன்பாட்டு அடுக்கும் ஒன்றாகும். இந்த அடுக்கில்தான் ஒரு தொலைதூரக் கணினியுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும், கோப்புப் பரிமாற்றம் செய்வதற்குமான சமிக்கைகள் அடங்கியுள்ளன. பயனாளருக்கு மிகவும் பயனுள்ள பணியைச் செய்வது இந்த அடுக்குத்தான். ஏழு அடுக்குகளில் ஏனைய கீழடுக்குகள், அனுப்பும்/பெறும் கணினிகளுக்கிடையே தரவு பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றன — application layer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 85)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7p2abj94/

தமிழ்
“பயன்பாட்டு அடுக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7p2abj94/
APA
Oliyon Research. (2026). பயன்பாட்டு அடுக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7p2abj94/
MLA
"பயன்பாட்டு அடுக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7p2abj94/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment