அரக்கான்
arakkāṉ
அரக்கான் பர்மாவில் ஒரு மாகாணம் ; வங்காளக் குடாக்கடலின் வடகிழக்கு ஓரத்தில் உள்ளது.
அரக்கான் பர்மாவில் ஒரு மாகாணம் ; வங்காளக் குடாக்கடலின் வடகிழக்கு ஓரத்தில் உள்ளது. இது அக்கியாபு, வட அரக்கான் மலைப்பிரதேசம், சாண்டோவே, கியாக்ப்யூ என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டது. பரப்பு: சு. 16,000 மைல். 1826-ல் 1 இலட்சம் மக்கள் தொகையே யிருந்தது; 1941-ல் 11.86 738 ஆக மிகுந்துவிட்டது. இங்குள்ள யோமா மலைகள் முக்கியமானவை.நன்செய்ச் சாகுபடியே பெரும்பாலும் நடைபெறுகிறது. பழங்கள், மிளகாய், புகையிலை முதலியவை சிறு அளவில் கிடைக்கின்றன. அரக்கான் மக்கள் தங்கள் நாட்டு வரலாறு மிகப் பண்டையது என்று கூறிக்கொள்கிறார்கள்; இதற்கு வேறு சான்று இல்லை. இப்பிரதேசம் முதலில் போர்ச்சுகேசியர்களுக்குச் சொந்தமாயிருந்தது; பிறகு 1826 லிருந்து ஆங்கிலேயர் வசமிருந்தது. இந்நாட்டு மக்களுக்குத் தனி மொழியும் பழக்கவழக்கங்களும் உண்டு. பெரும்பான்மையோர் பௌத்த மதத்தினர். அரக்கான் என்னும் நகரம் முதலில் தலைநகரமாயிருந்தது; பிற்காலத்தில் அக்யாபு முக்கிய நகரமாயிற்று.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 184)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7nnbmnx2/
தமிழ்“அரக்கான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7nnbmnx2/APA
Oliyon Research. (2026). அரக்கான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7nnbmnx2/MLA
"அரக்கான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7nnbmnx2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment