நுண்ணோக்கி, புல உமிழ்வு
nuṇṇōkki, pula umiḻvu
இது மின்னேற்றம் பெற்றுள்ள எலெக்ட்ரான்கள் அல்லது நேர் மின் அயனிகள் போன்ற துகள்களின் புல உமிழ்வைப் பயன் படுத்தி, அவற்றை உமிழும் பரப்பின் பெரிதாக்கப் பட்ட பிம்பத்தை ஒளிர் திரையில் ஏற்படுத்தும் ஒரு கருவியாகும்.
இது மின்னேற்றம் பெற்றுள்ள எலெக்ட்ரான்கள் அல்லது நேர் மின் அயனிகள் போன்ற துகள்களின் புல உமிழ்வைப் பயன் படுத்தி, அவற்றை உமிழும் பரப்பின் பெரிதாக்கப் பட்ட பிம்பத்தை ஒளிர் திரையில் ஏற்படுத்தும் ஒரு கருவியாகும். புல உமிழ்வு நுண்ணோக்கியில் (field emission microscope), ஓர் உமிழ்ப்பானின் கூர் முனையின் உதவியால், வில்லைகளின் உதவியின்றியே, நேரடியாகப் பிம்பம் ஏற்படுத்தப் படுகிறது. இதனால், பெறப் படும் உருப் பெருக்கம் 1,000,000 ஆகும் . உமிழப் படும் துகள் எலெக்ட்ரான் எனில், நுண்ணோக்கியின் பகு திறன் 2x10-9 மீட்டர் ஆகும். பல உலோகங்கள், உலோகக் கலவைகள் சேர்மங்கள் ஆகியவை, இவ்வாறு உருப் பெருக்கம் செய்யப் பட்டு, ஆராயப் பட்டுள்ளன. நடுத்தர வடிவமைப்புள்ள மூலக் கூறுகளை, இதன் உதவியால் தனித் தனியாகப் பார்க்க இயலும். இது வரை அமைக்கப் பட்டுள்ள நுண்ணோக்கிகளுள், இதுவே மிகவும் சிறந்தது. இதன் வடிவமைப்பு, செயல் படு முறையும், புல அயனி நுண்ணோக்கியின் வடிவமைப்பையும், செயற்பாட் டையும் ஒத்திருக்கும். —ப. தர்மலிங்கம்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 85)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7na49yjw/
தமிழ்“நுண்ணோக்கி, புல உமிழ்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7na49yjw/APA
Oliyon Research. (2026). நுண்ணோக்கி, புல உமிழ்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7na49yjw/MLA
"நுண்ணோக்கி, புல உமிழ்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7na49yjw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment