தனி உலோகமாகவோ, மற்ற உலோகங்களை உடன் கொண்ட கலவையாகவோ, பொறியியற் துறையில் சிறந்த முறையில் பயன் தரும் முதன்மையான உலோகங்களில் செம்பும் ஒன்று. இரும்பு, எஃகு இவற்றிற்கு அடுத்ததாக, இது முதன்மை பெறுகிறது. மின் துறையில் மட்டுமே, உலகத்தின் மொத்த செம்பு உற்பத்தியில் பாதி செலவாகிறது. தனி உலோகமாகத் தொழில் துறையில், பல்வேறு பண்புகளுடன் செம்பு காணப்படுகிறது. சில பண்புகள் மிகு மின்னியல் மற்றும் வெப்பங் கடத்தும் திறன், நல்ல துரு ஏறாத் தன்மை, எளிதாகக் கடைசல் செய்ய இயலும் தன்மை, மிதமான இழு திறன், கட்டுப்படத் தக்க வாட்டி பதப்படுத்தல் (annealing) குணம், சூட்டிளக்க இணைப்பு, மற்ற உலோகங்களுடன் கலவையாக மாறும் தன்மை போன்றவை. பொதுவாகச் செம்பு, செம்பு–இரும்பு சல்ஃபைடு தாதுவிலிருந்து கிடைத்த செம்பு சல்ஃபைடு எதிர் அனல் வெப்ப உலையில் (reverberatory furnace) உருக்கப்பட்டு, செம்பு, இரும்பு சல்பைடு முதலியவை கலவையாகப் பிரித்தெடுக்கப் படுகின்றன. இக்கலவை மேட் (matte) எனப்படும். இக்கலவையிலிருந்து, வேதியியல் முறையில், காற்றை அதன் மீது வீசச் செய்து, செம்பு சல்ஃபைடு, தூய செம்பு அல்லது பிளிஸ்டர் (blister) செம்பாக (98% செம்பு) மாற்றப் படுகிறது. இரும்பு சல்ஃபைடு முதலில் ஆக்சிஜனேற்றம் செய்யப் பட்டு, கசடாக வெளியேற்றப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஏறக் குறைய மாசுப் பொருள்கள் அனைத்தும் பிளிஸ்டர் செம்பிலிருந்து, தூய்மைப் படுத்தும் உலையில் சூடு படுத்தும் போது, கசடாகப் பிரித்தெடுக்கப் படுகின்றன. இவ்விதம், தீயின் மூலம் தூய்மை செய்யப்பட்ட செம்பு எனப்படுகிறது; வேறு சில மின்னியல் செயற்பாடுகளுக்காக, மின்னாற் பகுத்தல் முறையில், அதனால் உருவான செறிவு மிகு E.T.P. (electrolytic tough pitch copper) (99.95%) பெறப்படுகிறது. செம்பு–துத்தநாக உலோகக் கலவைகள் (copper–zinc alloys). செம்பு, துத்தநாக உலோகக் கலவைகள் பொதுவாகப் பித்தளை எனப்படுகின்றன. நுத்தநாகம் 5 சதவீதத்திற்கும் மிகுதியாக இருந்தால், பித்தளை எனப்படுகிறது. இரண்டு உலோகங்கள் உலோகச் சேர்மமாக மாறும் போது, பல்வேறு விதமான . இயற்பியல் பண்புகளைப் பெறுகின்றன. சில சமயங்களில் தனிப்பட்ட உலோகக் கலவைகள் (வேதியியல் விகிதத்தை அடிப்படையாகக் கொண்டவை) தனிப்பட்ட தேவைக்காக, வெப்பப் பதப்பாடு செய்யப்படுகின்றன. எந்திரவியல் செயற்பாடுகளுக்குத் தக்கவாறு செம்பு, துத்தநாகம் உலோகக் கலவைகள், பல வகைகளில் தேவையான விகிதங்களில் பயன்படுகின்றன. செம்பும், துத்தநாகமும் எளிய திண்மச் சேர்மமாக மாறுவதால், இயற்பியல் பண்புகள் குளிர்ச்சியான செயற்பாடுகளினால் உயர்த்தப் படுகின்றன. 20% துத்தநாகம் கொண்ட பித்தளை உயர் அளவிலான வளையும் தன்மை கொண்டதாக இருக்கிறது. நிலையான பித்தளை என்பது 70:30 பித்தளை ஆகும். (70% செம்பு, 30% துத்தநாகம்). பொறியியல் செயல்பாடுகளை நோக்கின், 35% துத்தநாகம், ஆல்பா (alpha) பித்தளைத் தயாரிக்க வரையறுக்கப் பட்ட அளவாகும்.30%ம் அதை விட உயர் அளவிலும், துத்தநாகம் கொண்ட பித்தளை உயர் தர பித்தளை என்றும், 30%க்குக் குறைவான துத்தநாகம் கொண்ட பித்தளை, கீழ்த் தர பித்தளை என்றும் குறிப்பிடப் படுகின்றன. செம்பு வெள்ளீய–வெண்கல உலோகக் கலவைகள் (copper–tin–bronze alloys). செம்பு, வெள்ளீய வெண்கல உலோகக் கலவைகள் பொதுவாக, வெள்ளீய வெண்கலம் என்றும், பாஸ்பர வெண்கலம் (phosphor bronze) என்றும் குறிக்கப் படுகின்றன. இவை செம்புடன் 10% வரை வெள்ளீயத்தைத் திண்மச் சேர்ம- மாக உலோகக் கலவையாக உருவாக்கப் படுகின்றன. மென் வெள்ளீயம் (wrought tin) பித்தளை, செம்பு–துத்தநாக பித்தளையை விட வலிமை வாய்ந்தது. குறிப்பாகக் குளிர்ந்த சூழ்நிலையில், நல்ல துரு ஏறாத் தன்மை கொண்டதாக விளங்கும். இதன் விலை சற்றுக் கூடுதலாக இருக்கும். —வி. சண்முகசுந்தரம் உலோகங்கள் கலப்பதால், செம்பின் தன்மைகளில் ஏற்படும் விளைவுகள். செம்பில் கலக்கப்படும் உலோகங்களில் ஆர்சனிக், ஆன்ட்டிமனி போன்றவை செம்புடன் சேர்ந்து ஒரு திண்மக் கரைசலாய் மாறுகின்றன. இவற்றைத் தவிர, பிஸ்மத், ஆக்சிஜன் போன்ற தனிமங்கள் திண்ம நிலைச் செம்பில் கரையாமலே, இருந்து விடுகின்றன. ஆர்சனிக் செம்பின் வளையுந் தன்மையையும், தகடாகும் தன்மையையும் பாதிக்காமலேயே, செம்பின் உறுதித் தன்மையும், வலிமையும் உயர்த்தப் படுகின்றன. கொதி கலன் குழாய்களின் செம்புடன் 0.5% வரை ஆர்செனிக் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், 0.1% ஆர்சனிக் தனிச் செம்பின் மின் கடத்துந் தன்மையை 25% வரை குறைத்து விடுகிறது. ஆன்ட்டிமனி மின்கடத்துத் தன்மையைப் பெரும்பான்மையாக குறைப்பதுடன், நொறுங்குந் தன்மையையும் உருவாக்கி விடுகிறது. 0.005% அளவுக்குக் குறைந்து காணப்படும் அளவில் உள்ள பிஸ்மத் கூடச் செம்பில் நொறுங்குந் தன்மையை மிகுதியாக்கி விடுகிறது. இதனால், பிஸ்மத் கலந்த செம்புக் கம்பி உருவுகைக்குப் பயனற்றதாகி விடுகிறது. ஆக்சிஜன் செம்பின் உறுதியை மிகுதிப் படுத்துகிறது. சில வகைக் செம்புக் கலவைகளில் நொறுங்குந் தன்மையைக் கட்டுப்படுத்த, ஆக்ஸிஜன் தேவைப் படுகிறது. செம்பு உலோகக் கலவை- வகைகள். இவற்றைப் பொதுவாக மூன்றாகப் பிரிக்கலாம். அவை: மிகக் குறைந்த அளவு பிற உலோகம் கலந்த செம்பு பித்தளை (செம்பு, துத்தநாகக் கலவை) வெண்கலம் (செம்பு, தகரம் சேர்ந்த கலவை) இவற்றின் உட்பிரிவுகளை முறையே அட்டவணை 1, 2, 3 இல் காணலாம். நாகம் 1% மாங்கனீஸ் நாகம் —வயி. அண்ணாமலை நூலோதி. M.M. Schwartz, Metals Joining Manual, McGraw-Hill Book Company, London, 1979.