செசெக்கித் தட்டு கடலிலும், நன்னீர் நிலைகளிலும் ஒளி ஊடுருவலைக் கணிக்க, இன்றும் பயன்படும் ஓர் எளிய கருவியே செக்கித் தட்டு ஆகும். நிலத்தைப் போன்றே, நீரிலும் தாவரங்கள் வளர்கின்றன. தாவரங்களின் ஒளிச் சேர்க்கைக்குக் கதிரவன் உச்சியிலிருக்கும் போது, ஒளிக் கதிர்கள் நேராக அதிக ஆழத்திற்கு ஊடுருவிச் செல்லும். கதிரவன் கிழக்கு அல்லது மேற்குப் பக்கமாக உள்ள போது, ஒளிக் கதிர்கள் சாய்வாக ஊடுருவுவதால், அவை அதிக ஆழம் செல்வதில்லை. எனவே, தாவரங்கள் நீரின் மேல் மட்டத்திலிருந்து ஏறக் குறைய, 60–100 மீ. ஆழம் வரையே பரவியுள்ளன. நீரினுள் பல வண்ணக் கதிர்கள் ஊடுருவும் ஆழத்தைக் கணக்கிட, இப்போது ஒளி மின்கலங்களைக் கொண்ட கருவிகள் உள்ளன. ஆனால், தொடக்க காலத்தில் ஓர் எளிய கருவியான செக்கித் தட்டு பயன் பட்டது. இப்போதும், அது சில இடங்களில் பயன்படுகிறது. பியட்ரோ என்ஜெலோ செக்கி என்னும் இத்தாலிய கத்தோலிக்கப் பாதிரியாரின் பெயர் கொண்ட செக்கித் தட்டு, தற்போது 20 செ.மீ. விட்டத்துடன், வார்ப்பு இரும்பினால் ஆக்கப்பட்ட வட்ட வடிவமாக உள்ளது. இதன் மேற்புறம் நான்கு சம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, இரண்டு எதிர்ப் பகுதிகள் வெள்ளையாகவும், எஞ்சிய இரண்டு பகுதிகள் கறுப்பாகவும் பூசப்பட்டிருக்கும். இத்தட்டின் மையத்தில் ஒரு வளையமும், நீளத்தைக் குறிக்கக் கயிறும் பிணைக்கப்பட்டிருக்கும். நீரினுள் எளிதில் மூழ்கும் பொருட்டும், நீரோட்டம் அலைக்கழிக்காதவாறும், இதன் அடிப்புறத்தில் ஒரு கனமாக உருண்டை இணைக்கப்பட்டிருக்கும். செக்கித் தட்டுடன் இணைந்த அளவு கோடுடைய கயிறு, நீரில் கீழ் நோக்கிச் செல்லும் போது, அது பார்வையிலிருந்து மறையும் ஆழத்தையும், மீண்டும் மேலுக்குக் கொணரும் போது, பார்வைக்குத் தோன்றும் ஆழத்தையும் சேர்த்து இரண்டால் வகுத்து வரும் ஆழமே ஒளி ஊடுருவல் ஆழமாகக் கருதப் படும். மேலும், ஒரே இடத்தில் வெவ்வேறான நேரங்களில் ஏற்படும் மாறுபாடுகளையும் செக்கித் தட்டினால் அறியக் கூடும். இது ஒரு சிறந்த கருவியாகக் கருதப்படவில்லை. பார்வைக்குத் தோன்றி மறையும் ஆழத்தையே செக்கித் தட்டினால் அளவிட முடியும். அந்த ஆழத்தை உண்மையான ஒளி ஊடுருவல் ஆழம் எனக் கருத முடியாது. ஏனெனில், மனிதருக்குள் பார்வையின் தன்மையில் வேறுபாடு தோன்றக் கூடும். ஒரே இடத்தில் இருவர் எடுக்கும். அளவில் கூட வேறுபாட்டைக் காண முடியும். செக்கித் தட்டைப் பயன்படுத்துவதில் சில பொதுவான வழி முறைகளைக் கையாள வேண்டும். வானம் தெளிவாக உள்ள போதும், கதிரவனை மேகங்கள் சூழ்ந்திராத போதும், கதிரவன் நேர் உச்சியிலிருக்கும் போதும், சிறிய படகிலிருந்து 1 மீ. உயரத்திலிருந்தும், காற்றினால் நீரில் அசைவுகள் இல்லாத போதும் செக்கித் தட்டைக் கையாளுதல் வேண்டும். <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்த பக்கத்தில் ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> செங்கடல் வட கிழக்கு ஆஃப்ரிக்காவிலிருந்து அரேபிய முந்நீரகத்தைப் பிரிக்கும் இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதிக்குச் செங்கடல் என்று பெயர். இப்பெயர் வந்ததற்குப் பல காரணங்கள் கூறப் படுகின்றன. அவற்றுள், சிவப்புப் பாசி நிறைந்த நீர்ப் பரப்பு, சிவப்பாகத் தோன்றுவது முக்கியமான காரணமாகும். மேலும், சுற்றியுள்ள குன்றுகளும், கடல் வாழ் பவள உயிரி, கடல் பாசி ஆகியவையும் சிவப்பாயுள்ளன. வெப்பக் காற்றால், கடலில் தள்ளப்படும் பாலைவன மணல், கடல் பரப்பில் தேங்கிச் சிவப்பு நிறத்தைக் கொடுப்பதும் காரணமாயிருக்கலாம். செங்கடலின் நீளம் ஏறத் தாழ 2250 கி.மீ. அகலம் 350 கி.மீ. சராசரி ஆழம் 610 மீ. 4,38,000 ச.கி.மீ.பரப்பளவு உள்ள இது கலிஃபோர்னியாவை விடச் சற்றுப் பெரியது. நீண்ட பெரிய பவளப் பாறைகள் பல இடங்களில் பரவியுள்ளமையால், கப்பல் போக்குவரத்துக்கு இது ஏற்றதாக இல்லை. செங்கடலின் தென் பகுதியைத் தவிர, பிற பகுதிகளுக்குப் படகுகளில் கூடச் செல்ல முடிவதில்லை. சூயஸ் கால்வாய்ப் போக்குவரத்துத் தொடங்கிய பிறகு, ஐரோப்பாவுக்கும், கீழை நாடுகளுக்கும் செங்கடல் வழியாகக் கப்பல்கள் செல்லத் தொடங்கின. இதற்கு முன்னர், வணிகப் பொருள்கள் ஒட்டகங்கள் மூலமாகவோ, நன்னம்பிக்கை முனை வழியாகவோ, எடுத்துச் செல்லப்பட்டன. செங்கடலின் இராணுவ முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்து அரசு அதன் தெற்கு முனையில் 1941இல் இரண்டாம் உலகப் போரின் போது, கண்ணி வெடிகளை வைத்து, இத்தாலியக் கப்பல்களை மூழ்கடித்து, மிட்சிவா துறைமுகத்தைக் கைப்பற்றியது. ஒரு மாபெரும் பாறையில் ஏற்பட்ட பிளவில் நீர் புகுந்து செங்கடல் உருவாகியிருக்கலாம். கடற்கரையில் உயிரினங்கள் இல்லை. ஒரு சில சிறிய துறைமுகங்கள் பாலைவனப் பகுதி ஓரங்களில் உள்ளன. கிழக்குப் பகுதியில் உயர்ந்த மலைப் பகுதிகளும், மேற்குக் கடற்கரையில் தாழ்ந்த மணற்குன்றுகளும், பாறைப் பலகங்களும் உள்ளன. இக்கரையில் பவளப் பாறைகள் மிகுந்துள்ளன. —கே.கே. அருணாசலம் செங்கல் இது களிமண்ணால் செய்யப் படும் ஒரு கட்டடப் பொருளாகும். செங்கல் (brick) செவ்வக வடிவில் வார்க்கப்பட்டு, சூளை அல்லது காளவாயில் சூடு படுத்தப்பட்டு வேக வைக்கப் படுகிறது. இதில் காணப்படும் சிவப்பு நிறம், இரும்பு ஆக்சைடுகளால் ஏற்படுகிறது. சீராகத் தோற்றமளிக்கும் செங்கல், முகப்புக் கல்லாகப் (face stone) பயன்படுகிறது. ஏனையவை, சாதாரண சுவர்க் கட்டுமானங்களுக்கும், பிற தேவைகளுக்கும் பயன்படுகின்றன. செங்கற்கள் ஏனைய பொருள்களாலும் செய்யப் படலாம். களிமண்ணுடன், மணல் அல்லது சுண்ணாம்புக் கலக்கப்பட்டு, அழுத்தப்பட்டு, நீராவியில் வேக வைக்கப்பட்டுச் சில செங்கற்கள் செய்யப் படுகின்றன. மின் காப்புப் பொருளாகவும், வெப்பந் தாங்கு பொருளான தீச்செங்கல்லாகவும், கட்டகப் பொருளாகவும் இது பயன்படுகிறது, மண் அல்லது களிமண்ணுடன் வைக்கோலைக் கலந்து வார்க்கப் பட்டுச் சூரிய ஒளியால் காய வைக்கப்படும் செங்கல், சுடப்படாத செங்கல் (adobe brick) எனப்படும். இச்செங்கல்லை முற்காலத்தில் பயன் படுத்தினர். தற்போது, உலர் தட்ப வெப்ப நிலைகளில் பெரிதும் பயன்படுகிறது. செங்கல் மிகப் பழமையான. மலிவான கட்டகப் பொருளாகும்.இது நீண்ட காலம் உழைக்கும் தன்மையும், எளிதாக வேலை செய்வதற்கு ஏற்ற தன்மையும் பெற்றுக் காணப் படுகிறது. சாதாரண செங்கற்கள் தீயினால் சிறிதளவு பாதிப்படைகின்றன. ஆனால், தீச்செங்கல் 4000°F வரை வெப்பத்தைத் தாங்கும் வலிமை பெற்றுள்ளது. களிமண்ணாலான செங்கல் அமில எதிர்ப்புத் தன்மை மிக்கது. செங்கல் பல அளவுகளிலும், வடிவங்களிலும் செய்யப்படுகின்றது. வேக வைக்கப்படும் போது, சிறிதளவு சுருங்கும். வெண்மை, சிவப்பு, மஞ்சள் கலந்த பழுப்பு, சிவப்பு கலந்த பழுப்பு, நீலம், கரு நீலம் முதலிய நிறங்களில் இது செய்யப்படுகிறது. களிமண்ணில் காணப்படும் இரும்பு ஆக்சைடு, மாசு, வேக வைக்கப்படும் முறை ஆகியவற்றைப் பொறுத்து, இதன் நிறம் அமைகிறது. வேக வைக்கும் வெப்ப நிலை மிகுதியானால், செங்கல்லின் நிறமும் அடர்ந்து இருக்கும். மட்பாண்டங்களைப் போலச் செங்கல்லும், பல நிறங்களில் பளப்பளப்பூட்டப்படுகிறது. செங்கல் உயர் அழுக்கு வலிமை (high compressive strength) பெற்றுள்ளது. ஆனால் இழு வலிமையைக் குறைவாகவே பெற்றுள்ளது. செங்கல் செய்யும் முறை. அனைத்துச் செங்கற்களும் களிமண்ணால் செய்யப்படுகின்றன. ஈரமாக இருக்கும் போது, களிமண் வழவழப்புத் தன்மையும், நெகிழ் தன்மையும் பெற்றுள்ளது. உலர்ந்த பின், இறுக்கமாகவும், கல் போன்றும் கெட்டிக்கிறது. ஆனால், உயர் வெப்ப நிலைக்குச் சூடு படுத்திய பின், வேதி மாற்றம் ஏற்பட்டு, ஈரமானாலும் நெகிழ் தன்மையை அடைவதில்லை. செங்கற்கள் 1600–2200°F வரை சூடேற்றப்படுகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை செங்கல் கைகளாலேயே செய்யப்பட்டது. நிலத்திலிருந்து களிமண் எடுக்கப்பட்டு, முதலில் காய வைக்கப் படுகிறது. பின்னர், சிறிது நீர் விட்டுக் கலந்து பசை போல் பிசையப் படுகிறது. இப்பசை மர வார்ப்புகளில் இடப்பட்டுச் சூரிய ஒளியில் காய வைக்கப் படுகிறது. மழைக் காலங்களில், சூரிய ஒளி முறையால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டதால், அடுப்பு, காளவாய், சூளை ஆகியவற்றால் வேக வைக்கும் முறை கண்டுபிடிக்கப் பட்டது; தற்போது பலவகைச் சூளைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. செங்கல் தொடர் சூளை அல்லது காளவாய்களால் செய்யப்படுகின்றது. கடின–மண் முறை, மென்–மண் முறை, உலர் முறை எனச் செங்கல் தயாரிப்பு மூன்று வகைப்படும். கடின–மண் முறை. இம்முறையில், களிமண் நீருடன் கலக்கப்பட்டு, இறுக்கமான பசை போல் செய்யப் படுகிறது. இப்பசை துளைகள் வழியே அழுத்தத்துடன் செலுத்தப் படுகிறது. வெளி வரும் பசை, கத்தி அல்லது கம்பிகளால் தேவையான அளவுகளுக்கு வெட்டப்பட்டு, உலர்த்தப்பட்டுச் சூளைகளில் வேக வைக்கப் படுகிறது. மென்–மண் முறை. இது கை அல்லது கருவியால் செய்யப்படும் பழமையான முறையாகும். இதில் களிமண்ணும், நீரும் மென் பசையாகக் கலக்கப் பட்டு, வார்ப்புகளில் இடப் பட்டு, வேக வைக்கப் படும். உலர் முறை. இதில் களிமண் பசையாக்கப்படும் அளவிற்கு மிகச் சிறிதளவு நீர் சேர்த்துப் பிசையப் பட்டு, நீரியல் அமுக்கிகள் (hydraulic presses) மூலம் செங்கல் வடிவமைப்புக் கொடுக்கப் படுகிறது. நீர் குறைந்தளவே இருப்பதால், உலர்த்தப் படாமல், நேரடியாக வேக வைக்கப் படுகிறது. அதனால், தயாரிப்பு நேரமும் குறைவேயாகும். கட்டடங்களில் பயன்படுத்தப்படும் முகப்புச் செங்கற்கள் உலர்வதற்கு முன் மீண்டும் ஒரு முறை அழுத்தம் கொடுக்கப் படுகிறது. இதனால், விளிம்புகள் சீராகவும், மேற்பரப்பு வழவழப்புத் தன்மை பெற்றும் காணப்படும். ஓவிய அலங்காரமுடைய (tapestry brick) செங்கற்கள் தயாரிப்பில், அதன் வார்ப்பிலேயே ஓவிய வடிவமைப்பு பதிக்கப்படுகிறது. தீச்செங்கல்லில், உருகாப் பொருள்கள் சிறிதளவு கலக்கப்படுகின்றன. உயர் வெப்பந் தாங்கும் செங்கற்களில் சிர்கோனியா, மக்னிஷியா, குரோமைட் முதலிய கனிமங்கள் உள்ளன. உயர் அலுமினா செங்கல், டயாஸ்போர் அல்லது அலுமினாவிலிருந்து தயாரிக்கப் படுகிறது. முகப்புச் செங்கற்கள் உட்புற மற்றும் வெளிப்புற அலங்கரிப்புகளுக்குப் பயன் படுகின்றன. கனிமப் பூச்சு பெற்ற முகப்புச் செங்கற்கள் பெரிதும் சமையலறையில் பயன் படுகின்றன. மேலும், நடைபாதை, தோட்டச் சுவர்கள், புகை போக்கி, தடுப்புச் சுவர் முதலிய இடங்களிலும் பயன் படுகின்றன. பளபளப்பாக்கப் பட்ட செங்கற்கள், கழிவறைச் சுவர்கள், கூரை, தளம் முதலிய இடங்களில் பயன் படுகின்றன. வளரும் தொழில் நுட்பவியலில் செங்கற்களின் பயன் இன்றியமையாததாகும். —இரா. சரசவாணி நூலோதி. Clois E Kicklighter, Modern Masonry, The Goodheart-Willcox Company, Inc., Illinois, 1980. செங்கோணச் சார்புகள் தோராயக் கொள்கை (approximation theory), காசியன் பரப்பு காண் முறை (Gaussian quadrature), வரம்பு மதிப்புக் கணக்குகள் (boundary value problems), தொகையீட்டுச் சமன்பாடுகள் (integral equations) போன்ற கணிதப் பாடங்களில் செங்கோணச் சார்புகள் (orthogonal function) இடம் பெறுகின்றன. \int_a^b fₘ (x) fₙ(x) .dx = 0 எனில், fₘ(x), fₙ(x) என்னும் சார்புகள் (a,b) என்னும் இடைவெளியில் செங்கோணச் சார்புகள் ஆகும். பொதுவாக, \int_a^b ω (x) fₘ (x) fₙ(x) dx = 0 எனில், fₘ(x), fₙ(x) என்னும் சார்புகள் ω(x) என்னும் மிகை மதிப்புள்ள எடைச் சார்பைப் (weight function) பொறுத்து (a,b) என்னும் இடைவெளியில் செங்கோணச் சார்புகள் ஆகும். இறுதியாக, சார்புகளின் கணத்தில் (set) உள்ள எந்த இரு வெவ்வேறு சார்புகளும் (a,b) என்னும் இடைவெளி- யில் செங்கோணச் சார்புகள். எனில் இக்கணக் (a, b) என்னும் இடைவெளியில் செங்கோணச் சார்புகளின் கணம் எனப்படும், எடுத்துக்காட்டாக, கணம் (0,1) என்னும் இடைவெளியில் செங்கோணச் சார்புகளின் கணம் ஆகும், மேற்காண்பவை இன்றியமையாத செங்கோணப் பல்லுறுப்புக் கோவைகள் (orthogonal polynomials) ஆகும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —சி. சௌ. கருப்பன்செட்டி செசபிக் விரிகுடா இது வெர்ஜினியாவிற்கு வடக்கேயுள்ள வட அட்லாண்டிக் பெருங்கடலின் நீண்ட, குறுகிய நீர்ப் பகுதியாக உள்ளது. இது மேரிலாண்டை இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. 320 கி.மீ. நீளமும் 6–64 கி.மீ. அகலமுங் கொண்ட இதற்குப் பெரிய உப்பு நீர்க் கடல் என்றும் பெயருண்டு. இதன் முனையில் உள்ள கால்வாய் 19 கி.மீ. அகலமுடையது. கப்பல்கள் விரிகுடாவின் முழுப் பரப்பிலும் செல்ல முடியும். விரிகுடாவின் கரையில் பல நதிகளின் கழிமுகங்கள் உள்ளன. இதில் ஜேம்ஸ், யார்க், ராப்பண்ணாக், போட்டோமாக், சுஸ்குவி ஹன்னா ஆகிய நதிகள் கலக்கின்றன. பால்ட்டிமோர், நார்ஃபோக், போர்ட்ஸ்மவுத்- ஆகிய சிறு துறைமுகங்கள் உள்ளன. மேற்குக் கரையில் அன்னாபோலிஸ் என்னுமிடத்தில் அமெரிக்கக் கடற்படைக் கழகம் உள்ளது. —கே. கே.அருணாசலம் செஞ்சாய் சதுரத் தொகுதிப் படிகங்கள் இத்தொகுதியில் மூன்று படிக அச்சுகளும் ஒன்றுக்கொன்று செங்கோணத்தில் வெட்டிக் கொள்ளும். ஆனால், அவற்றின் நீளங்கள் வெவ்வேறானவை. a ≠ b ≠ c = 90°; சமச் சீர் மையம் உண்டு. இத்தொகுதியில் பல்வேறு.அமைப்புகள் காணப்படும், அடி இணை வடிவு (basal pinacoid). இது 2 முகங்கள் கொண்டது. முகங்கள் இரண்டும் செங்- குத்து அச்சை (c) வெட்டுகின்றன. கிடை அச்சுக்கு இணையாக உள்ளன. பொதுக் குறியீடு (001). நீள் அச்சு இணை வடிவு (macro pinacoid). இது 2 முகங்கள் கொண்டது. ஒவ்வொரு முகமும் குட்டையான கிடை அச்சை மட்டும் வெட்டுகிறது. முகங்கள் இரண்டும் நீள் அச்சுக்கு இணையானவை. பொதுக் குறியீடு (100). குறு அச்சு இணை வடிவு (brachy pinacoid). இது 2 முகங்கள் கொண்டது. முகங்கள் இரண்டும் நீளமான கிடை அச்சை மட்டும் வெட்டுகின்றன. குட்டையான அச்சுக்கு இணையாக உள்ளன. பொதுக் குறியீடு (010). பட்டகம் (prism). இது திறந்த வடிவமும், 4 முகங்களும் கொண்டது. ஒவ்வொரு முகமும் செங்குத்து அச்சுக்கு இணையாக உள்ளது. பொதுக் குறியீடு (110). நீள் அச்சு இணை கவிமாட வடிவம் (macrodome). இது 4 முகங்கள் கொண்டது. ஒவ்வொரு முகமும் நீள் அச்சுக்கு இணையாக உள்ளது. (h o l) குறு அச்சு இணை கவிமாட வடிவம் (brachydome). இது திறந்த உருவமும், 4 முகங்களும் கொண்டது. ஒவ்வொரு முகமும் குறை அச்சுக்கு இணையாக உள்ளது. (o k l) பட்டைக் கூம்பு (pyramid). இது 8 முகங்களைக் கொண்டது. செஞ்சாய் சதுரத் தொகுதி நேரியல் வகுப்பில் (normal class) பேரைட், கந்தகம், புட்ப ராகப் படி கங்கள் அடங்குகின்றன. —அ. வே உடையனபிள்ளை நூலோதி. W.E. Ford, Dana's Text Book of Mineralogy, Fourth Edition, Wiley Eastern Ltd. New Delhi, 1949. செடிகள் <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> தாவர உலகில் காணப்படும் செடிகள் பல வகைப் பட்டவை. நுண்ணோக்கி மூலம் பார்க்கக் கூடிய பாக்டீரியா முதல் 100 மீ. உயரம் வளரக் கூடிய ஊசியிலை மரங்கள் வரை யாவும் தாவரயினங்களே. இத்தாவ- ரங்களைப் பலவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளனர். படிமலர்ச்சி அடிப்படையில் அமைந்துள்ள எங்ளர் வகைப்பாடு பின் வருமாறு காணப்படும். தாலோஃபைட்டா. தாவர உடல் வேர், இலை, தண்டு எனும் பாகுபாடு அற்றது. இனப் பெருக்க உறுப்புகள் ஒரு செல்லால் ஆனவை. இத்தொகுதி ஆல்காக்கள், பூஞ்சைகள் என இரண்டாகப் பிரிக்கப் பட்டுள்ளது. ஆல்காக்கள். பாசிகள் என்னும் நீர் வாழ் செடிகளான இவை, பச்சையத்தைப் பெற்றுள்ளமையால், தங்களுடைய உணவை ஒளிச் சேர்க்கை மூலம் தயாரித்துக் கொள்ளும். உயர் வாழ் தனி இனமான இவற்றைக் கடல் நீர், நன்னீர் நிலைகளில் மிகுதியான அளவில் காணலாம். இவற்றில் பச்சை, பழுப்பு, சிவப்புத் தங்கம், நீலப் பசுமை போன்ற நிறப் பாசி வகைகள் உண்டு. பூசணங்கள். பசுமையற்ற சிறு செடியினங்களாகிய இவை, தங்களுக்குத் தேவையான உணவைப் பிற உயிரினங்களிடமிருந்தோ, கரிமப் பொருள்களிலிருந்தோ பெற்றுக் கொள்ளும். இவற்றை ஒட்டுண்ணிகள் என்றும், சாறுண்ணிகள் என்றும் கூறுவர். பூசணங்கள் ஒளி குறைந்த ஈரப் பாங்கான இடங்களில் காணப்படும். எ-டு. பூசணக் காளான். நாய்க் குடை முதலியன. பிரையோஃபைட்டா. இச்செடிகளின் உடல், தண்டு, வேர், இலை போன்று பாகுபாடு அற்றதாக இருந்தாலும், தாலோஃபைட்டாவை விடச் சற்று மேம்பாடுடையதென்று கூறலாம். இனப் பெருக்க உறுப்புகள் பல செல்களால் ஆனவை. வாழ்வதற்கு நிலமும், நீரும் தேவைப்படும். இவை ஈருடகத் தாவரங்கள் (amphibious) எனப்படும். இப்பிரிவில் இரண்டு துணை ப்பிரிவுகளுண்டு. அவை ஈரல் தாவரங்கள் (liver worts), மாஸ் (moss) என்பவை, இவை யாவும் பொதுவாக, ஈரப் பாங்கான பகுதிகளிலேயே காணப்படும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> டெரிடோஃபைட்டா. இப்பிரிவைச் சேர்ந்த செடிகளுக்குத் தண்டு, வேர், இலை போன்ற உறுப்புகளுண்டு. பொதுவாக, இத் தாவரங்கள் மித வெப்பமும், குளிரும் உடைய பகுதிகளில் காணப்படும். காற்றறைத் திசுக்கள் (vascular tissue) கொண்ட இவை, விதைகள் (spores) மூலம் இனப் பெருக்கம் செய்கின்றன. பெரணிகள் எனப்படும் செடிகள் இப்பிரிவைச் சேர்ந்தவை. ஜிம்னோஸ்பர்ம்கள். இவற்றை விதை மூடாத் தாவரங்கள் என்பர். பெரும்பாலான, மிக உயரமான, வயதான மரங்கள் இப்பிரிவைச் சேர்ந்தவை. கலிஃபோர்னியாவில் உள்ள பைனஸ் அரிஸ்டேடா (Pinus aristeta), என்ற மரத்திற்கு வயது 4600 ஆண்டுகள் என அறியப் பட்டுள்ளது. மேலும், வட அமெரிக்காவின் தேசியப் பூங்காவிலுள்ள சீகோயா எனப்படும் செம்மரங்களும் மிக உயரமானவை; வயதானவை. இவற்றில் ஒன்றான கிரான்ட் ஷர்மன் என்னும் மரம் 90 மீ. உயரம், 30 மீ. அடிச் சுற்று, 3500 ஆண்டு வாழ்காலம் கொண்டதாகும். பெரும்பாலான விதை மூடாத் தாவரங்கள், பொருளாதாரச் சிறப்பு வாய்ந்தவை. இவற்றில் ஊசியிலை மரங்களும் அடங்கும். ஆன்ஜியோஸ்பர்ம்கள். இப்பிரிவைச் சார்ந்த செடிகள் படிமலர்ச்சியால் மேம்பாடடைந்தவை. இவற்றின் இனப் பெருக்க உறுப்புகளான, மகரந்தம், சூல் முதலியன மலரில் காணப்படும். மகரந்தச் சேர்க்கை காரணமாகத் தோன்றிய விதைகள், கனியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். வாழ்நாள் அடிப்படையில் பூக்கும் செடிகள், நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு பருவச் செடிகள் (annuals), ஓராண்டு அல்லது ஒரு பருவத்தில் தங்கள் வாழ்க்கைச் சுழலை (முளைத்தல், வளர்தல், மலர் தோற்றுவித்தல், மகரந்தச் சேர்க்கை, விதை, கனி உருவாக்குதல், விதை பரவுதல்) முடித்துக் கொள்ளும். எ-டு. சூரிய காந்தி, சின்னியா, அவரை, உளுந்து. இவற்றுடன் நெல், கோதுமை, சோளம் போன்ற புல் வகைகளும் அடங்கும். இரு பருவச் செடிகள் (biennials) இரு பருவங்கள் உயிர் வாழும். முன் பருவத்தில் தழைப் பகுதி வளர்ச்சி நடை பெறும். இலைகளில் தயாரிக்கப்பட்ட உணவு சேமித்து வைக்கப்படும். இரண்டாம் பருவத்தில், சேமித்து வைக்கப்பட்ட உணவைக் கொண்டு மஞ்சரி, கனி, விதைகள் முதலியன தோற்றுவிக்கப் படுகின்றன. பெருவாரியான கிழங்கு வகைகள், இப்பிரிவைச் சேர்ந்தவையாகும். எ-டு. முள்ளங்கி, காரட், பீட்ரூட், வெங்காயம், பூண்டு முதலியன. பல் பருவச் செடிகள் (perennials) பல ஆண்டு வாழ்வன. ஒவ்வோர் ஆண்டும், மலர், விதை, கனிகளைத் தோற்றுவிக்கும். இவ்வகையைப் பாலிகார்பிக் (polycarpic) என்றும் கூறுவர். எ.டு. ஆல், அரசு, மா, புளி முதலியன. 156 மீ. உயரமான யூகலிப்டஸ் அமிக்டாலினா (Eucalyptus amygdalina) என்னும் ஆஸ்திரேலிய மரம் உலகிலேயே மிக உயரமானது. ஆஃப்பிரிக்காவைச் சேர்ந்த அடன்சோனியா டிஜிடேட்டா (Adansonia digitata) என்னும் மரத்தின் வயது 5000 ஆண்டுகள் எனவும், இதுவே மிக முதிய உயிரினம் எனவும் கருதப்படுகிறது. பல்லாண்டுச் செடிகள் (multiennials), இச்செடிகள் பல்லாண்டு வாழ்ந்தாலும், தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையே பூக்கவும், காய்ச்கவும் செய்கின்றன. இச்செடிகளில் பூத்தல் என்பது, அச்செடியின் இறுதியைக் குறிக்கும். எ-டு. மூங்கில், தாளிப் பனை, இரயில் கற்றாழை முதலியன. 30 ஆண்டுகள் வாழும் மூங்கில் பூத்தவுடன் மடிந்து விடும். தாளிப் பனைகளும் 70–80 ஆண்டு உயிருடனிருந்து, பிறகு மிகப் பெரிய மஞ்சரியைத் தோற்றுவித்து, அது காய்ந்தபிறகு, மடிந்து விடும். இரயில் கற்றாழையும் 50–100 ஆண்டு வாழ்ந்து, பூத்த பிறகு, மடிந்து விடும். பெரும்பாலான செடிகள் உறுதியான தண்டுடன் காணப்பட்டாலும், சில மென்மையான தண்டுகளைக் கொண்டிருக்கும். அவற்றில் பல வகையுண்டு. நெருஞ்சி, தரைப் பசலை போன்றவை நிலத்தில் படர்ந்து வளரக் கூடியவை. சில செடிகள், ஒரு தண்டு கொண்டவை. தண்டின் கணுக்களிலிருந்து, வேர்கள் தோன்றும். எ-டு. பொடுதலை, ஆரை, சர்க்கரை வள்ளி, வல்லாரை முதலியன. பற்றுக் கோடான தாவரங்களின் மீது படர்ந்து வளரும் இவற்றில், இரு வகையுண்டு, 1) பற்றுக் கொடிகளில் (climbers), பற்றுக் கம்பிகளும் (tendril) பற்று வேர்களும் காணப் படும். எ-டு. மிளகு, வெற்றிலை, புடல், பிரண்டை, முடக்கத்தான். 2) சுழல் கொடிகள், பற்றுக் கோடான செடியைப் பற்றிக் கொள்ளத் தண்டையே பயன் படுத்துகின்றன. எ-டு. அவரை, சங்குப் பூச்செடி, வள்ளிக் கொடி, செடிகள் இடம் விட்டு இடம் பெயர்வதில்லை. அதனால், அவற்றின் உடலமைப்பு, திசுக்களின் அமைப்பு, செயலியல் முதலியன ஏற்றவாறு அமைந்துள்ளன. செடிகளின் வேர், நிலத்திலிருந்து சவ்வூடு பரவுதல் மூலம் உட்கொண்ட நீரை, காற்றறைத் திசுக்கள், குறிப்பாக கட்டைத் திசு (xylem) மூலம் இலைக்குக் கடத்திச் செல்லும். அங்கு ஒளிச் சேர்க்கை நடை பெறுவதால், கரிமப் பொருள்கள் தோன்றுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட உணவு, ஃப்ளோயம் (phloem) மூலம், சேமிப்புப் பகுதிக்குக் கடத்திச் செல்லப்படுகிறது. இவையே, மனிதன் மற்றும் விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகின்றன. மிகவும் எளிதாகக் காணப்படும் தாவரம், ஒரே இடத்தில் வளர்ந்து, தனக்குத் தேவையான செயல்களை நடத்திக் கொள்வதற்கு ஏற்ப அதன் உறுப்புகளும் அமைந்துள்ளன. வெப்ப மண்டலக் காடுகளில் ஏற்ற சூழ்நிலை காணப்படுவதால், சில தன் உணவாக்கித் தாவரங்கள் நிலத்தோடு தொடர்பின்றி, மற்றொரு செடியின் கிளையிலோ, அடி மரத்திலோ வளரும் தன்மை கொண்டுள்ளன. இவற்றைத் தொற்றும் தாவரங்கள் (epiphytes) என்பர். வளரத் தேவையான இடம், மரம், செடிகளில் இருந்தால் போதும். இவற்றில், வெலாமன் (velamen) வேர்கள் காணப்படும். அவை காற்றில் ஊசலாடிய நிலையில் அமைந்து, வளி மண்டலத்திலுள்ள ஈரப் பசையை ஈர்க்கும் தன்மை கொண்டுள்ளன. பசுங் கனிகங்கள் அற்ற செடிகள், தங்களுக்குத் தேவையான ஆற்றலைப் பிற உயிரினங்களிடமிருந்தோ, கரிமப் பொருள்களிலிருந்தோ பெறுகின்றன. இவற்றை வேற்றுண்ணிகள் (heterotrophs) என்பர். உயிரினங்களிலிருந்து, தம் தேவைகளைப் பெற்றுக் கொண்டால், அவற்றை ஒட்டுண்ணிகள் (parasites) என்பர். அவை, பெரும்பாலும் நோய்த் தோற்றுவிப்பான்களாகவும், ஓம்புயிருக்கு (host) ஊறு விளைவிப்பனவாகவுமே இருக்கும். எ-டு. பாக்டீரியா, பூசணம், புல்லுருவி, சந்தனம் முதலியன. ரஃப்லீஷியா எனப்படும் மலேசிய வேர் ஒட்டுண்ணி உலகிலேயே பெரிய மலரைத் தோற்றுவிக்கிறது. இம்மலரின் மொட்டு புவியைப் பிளந்து வெளி வந்து, மலரும் போது, 1 மீ. குறுக்களவு இருக்கும். சில வேற்றுண்ணிகள் கரிமப் பொருள்களைச் சிதைத்துத் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களைப் பெறுகின்றன. இவை சாறுண்ணிகள் (saprophytes) எனப்படும். எ. டு. நாய்க் குடை, ரொட்டிக் காளான், சில பாக்டீரியாக்கள். இவற்றை இயற்கையின் தோட்டி (nature's scavenger) என்பர். இவை, சூழ்நிலையை மாசுபடுத்தக் கூடிய கரிமப் பொருள், நச்சுப் பொருள்களைச் சிதைத்து எளிமையான கனிமப் பொருள்களாக மாற்றுகின்றன. தாவர உலகில் ஊன் உண்ணும் தாவரங்களின் வாழ்க்கை முறை வியப்பானது. இத்தாவரங்கள் வாழும் இடங்கள் சதுப்பு நிலமாகக் காணப்படுவதாலும், அங்கு, பாக்டீரியா இல்லாமையாலும், நைட்ரேட் உப்பு இருப்பதில்லை. தாலர வளர்ச்சிக்கு இன்றியமையாத புரதத் தயாரிப்புக்கு, நைட்ரேட் அயனிகள் மிகவும் தேவை. அதனால், ஊண் உண்ணும் தாவரங்கள், தங்களுக்குத் தேவையான புரதத்தைப் பூச்சிகளைப் பிடித்துக் கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்கின்றன. இவற்றின் இலைகளும் ஏற்றவாறு அமைந்துள்ளன. இலைகளில் பச்சையம் உள்ளமையால், அவை ஸ்டார்ச்சைத் தயாரித்துக் கொள்ள முடியும். இங்ஙனம் ஊண் உண்ணும் தாவரங்கள் பகுதி தன்னுணவாக்கிகளாகவும், பகுதி வேற்றுண்ணிகளாகவும் செயல்படுகின்றன. —தி. ஸ்ரீகணேசன் நூலோதி. P. Maheswari and R. N. Konar, Pinus, CSIR, New Delhi, 1971; K. N. Rao and K.V Krishnamurthy, Angiosperms, S. Viswanathan Pvt. Ltd., Madras, 1976. செடிகளின் துப்புரவு. வேட்டையாடித் திரிந்த அக்கால மனிதன், ஓரிடத்தில் தங்கி, தனக்கும், கால் நடைகளுக்கும் தேவையான உணவுக்காக, வேளாண்மையைக் கையாள முற்பட்ட நாளிலிருந்து, செடிப் பாதுகாப்பு தொடங்கியது. பயிர் மேம்பாடு என்பது விளைச்சலைப் பெருக்கும் புது வகைகளைப் புகுத்துவது மட்டுமல்லாமல், பூச்சி, நோய்களிலிருந்து பயிரைக் காப்பதும் அடங்கும். நீர், உரம் இட்டு விளைச்சலைப் பெருக்கி, இறுதியில் திடீரென்று பூச்சியோ, நோயோ தோன்றினால், பயிர் பாதிக்கப் படும். எனவே, செடிப் பாதுகாப்பு, வேளாண்மையின் இன்றியமையாத பகுதியாகும். இதில் தவிர்த்தல், நீக்கல், பாதுகாத்தல், எதிர்ப்புத் திறன் ஊட்டல் என்னும் நான்கு வழி முறைகள் உள்ளன. தவிர்த்தல். இதை வருமுன் காக்கும் முறை என்று கூறலாம். தொடக்கத்திலேயே, தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதால், நோய்க் காரணிகள் பயிர்களோடு தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பதே, இம்முறையின் நோக்கம். செடி நோய்ச் சட்டங்கள் மூலம் செடிகளோ, செடியின் பகுதிகளோ ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லாதவாறு தடுக்கலாம். அவ்வாறு, அவற்றை எடுத்துச் செல்ல நேரிட்டால், தகுந்த ஆய்வுக்கு உட்படுத்தலாம். செடிகள் வயலில் நடப்படுவதற்கு முன், நோய்க் காரணிகளை நீக்கி விடலாம். இவ்வாறு, செடிகளோடு தொடர்பு கொண்ட நோய்க் காரணிகள் புது இடத்தை அடைவதைச் சட்டங்கள் மூலம் தடை செய்வது வழக்கம். ஒவ்வொரு நாட்டிற்கும் பயிர்ப் பாதுகாப்புச் சட்டங்கள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மைச் சங்கம், பின் வரும் சட்டங்களை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து செடிகள் கொண்டு வரும் போது, அவற்றோடு செடி நலச் சான்றிதழும் கொண்டு வர வேண்டும். செடிகள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தால், அவற்றை அங்கேயே அழித்து விட வேண்டும். கட்டுப்பாடுகளை மீறிச் செடிகள் எடுத்துச் செல்லப்பட்டால், தண்டனை அளிக்கப்படும். இங்கிலாந்தில் 1947இல் ஒரு குறிப்பிட்ட நோய் தோன்றியவுடன், பாதிக்கப்பட்ட செடிகளைப் பிடுங்கி, அங்கேயே தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதனால், நோய்த் தாக்கம் குறைந்தது. மேலும், நோயின் அறிகுறிகள் காணப்படும் வயல், தோட்டங்களிலிருந்து விதைகள் விற்பனை செய்வதையும், இச்சட்டம் தடை செய்கிறது. பயிர்ச் சாகுபடியின் போது, நோய்கள் தோன்றவில்லை என்னும் சான்றிதழோடு கூடிய விதைகளையே வாங்குவது நல்லது. இச்சான்றிதழ் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு விதை, செடிகள் எடுத்துச் செல்ல இன்றியமையாதது. சுங்கத் துறையின் ஒரு பிரிவு, செடிகளை ஆய்வு செய்த பிறகே அனுமதிக்கும். தாவர உறுப்பில் நோயின் அறிகுறிகள் காணப்பட்டால், அவற்றை நீக்கி விட்டு வளமான பகுதியை ஏற்கலாம். பெரும்பாலான நோய்கள் விதைகள் மூலமே பரவுகின்றன. ஆகவே, சுங்க உயர் அலுவலர்கள் விதைகளை ஈரம் உறிஞ்சும் தாள் மீது முளைக்க வைக்கும் போது, விதைகளிலுள்ள பூசணங்களும் வளர்வதைக் கண்டு பிடிப்பர். மேலும், புற ஊதாக் கதிர்கள் மூலமும் பாதிக்கப்பட்ட விதைகளை இனம் காணலாம். பாதிக்கப்பட்ட விதை, தாவர உறுப்புகளை அந்நாளில் உப்பு நீர் அல்லது புகை மூட்டத்திலிட்டுத் தூய்மைப்படுத்துவது வழக்கம். தற்காலத்தில் பல வகை வேதிப் பொருள், கதிர் வீச்சு ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். மருந்துப் பொருள்களை விதைகளுடன் கலந்து விடலாம். சில நோய்க்காரணிகளை வெப்பக் காற்று, வெந்நீர் மருத்துவம் மூலமும் கட்டுப் படுத்தலாம். திசுவளர்ப்பு முறையைக் கையாண்டு, நச்சுயிரி அற்ற வகைகளைத் தோற்றுவிக்க முடியும். திசு-வளர் தளத்தில், மாலகைட் பச்சை என்னும் வேதிப் பொருளைச் சேர்ப்பதால், நச்சுயிரிகள் திசுக்களைத் தாக்குவதில்லை. இவ்வாறு, நச்சுயிரி அற்ற கரும்பு, பழ மரம், அழகு செடி முதலியவை உண்டாக்கப் பட்டுள்ளன. நீக்கல். பொதுவாக, தகுந்த முன்னேற்பாடுகள் எடுத்துக் கொண்ட போதும், வயலில் நோய் தோன்றுவதுண்டு. அந்நோய்க் காரணியை நீக்குவது. அழிப்பது, பரவாமல் தடுப்பது என்பவை, அடுத்தடுத்த நடவடிக்கைகள் ஆகும். சாகுபடிமுறையில் பயன்படுத்தும் வேதிப் பொருள் கொண்டு, நோய்க் காரணிகளை நீக்க முடியும். நோயுற்ற செடியை அகற்றுவதே எளிய வழியாகும். நோயின் அறிகுறிகள் தோன்றியவுடனே, கால தாமதமில்லாமல் அழிப்பதே நல்லது. அவ்வாறு செய்யாவிடில், அந்த ஒரு செடியே பிற செடிகளின் அழிவுக்கு வழி வகுத்து விடும். சில நேரங்களில் நோயுற்ற தாவரத்தை விட்டு விட்டு, அதைச் சுற்றியுள்ள பிற செடிகளை நீக்கியும், நோய் பரவுவதைத் தடுக்கலாம். காட்டாக, வாழையில் தோன்றும் தேமல் (mosaic) நோய்க்கு இம்முறையே பின்பற்றப் படுகிறது. அமெரிக்காலில் எலுமிச்சையை பாக்டீரிய சொறி (canker) நோயிலிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தும் முறையும் இதுவே. சில சூழ்நிலைகளில் நீக்கல் முறை தோல்வியடைவதுண்டு. பக்சீனியா (puccinia) என்னும் பூசணம் துரு நோய்க்குக் காரணமாகும். இதன் வாழ்க்கைச் சுழல் முழுமையடைய இரு ஓம்புயிரிகள் (hosts) தேவைப்படுகின்றன. அவற்றில் ஒன்று, கோதுமையின் பார்பெரி எனப்படும் களைச் செடியாகும். அமெரிக்காவில், துரு நோய் பெருமளவில் தோன்றிய போது, கோதுமையை அந்நோயிலிருந்து பாதுகாக்கப் பார்பெரி செடியை அடியோடு நீக்க வேண்டும் என்னும் சட்டத்தை அரசு கொண்டு வந்தது. எவ்வித நடவடிக்கை எடுத்த போதும், துரு நோய்த் தாக்கத்தைக் குறைக்க முடியவில்லை. இதற்குக் காரணம், பக்சீனியா மற்றொரு வகையில், தன் இனத்தைப் பெருக்கிக் கொள்வதேயாகும். நோயுற்ற செடிகளை அடுத்துள்ள பிற செடிகளை நீக்குவதன் மூலமும் தடுக்க முடியும் என்று அமெரிக்காவில் மெய்ப்பித்துள்ளனர். மிளகாயில் தோன்றும் தேமல் நச்சுயிரி நோயை நீக்க, வயலைச் சுற்றி 50மீ. வரையுள்ள பிற தாவரங்களைக் குறிப்பாகச் சொலானம் சிற்றினங்களை நீக்குவதால், பெருவாரியான இழப்புக் குறைகிறது. நோயுள்ள செடியை வேரோடு நீக்கத் தேவையில்லை. பெரிய பழ மரங்கள் பாதிக்கப்படும் போது, முழு மரத்தையும் வெட்டுவது இழப்பை ஏற்படுத்தலாம். அதற்கு மாறாகப் பாதிக்கப்பட்ட கிளைகளை மட்டும் வெட்டி நீக்கி விடுவது வழக்கம். வெட்டிய பகுதியில் தடவும் மருந்து, மேற்கொண்டு நோய் பரவாமல் தடுக்கும். பூச்செடிகளில் சில நோய்கள் தோன்றும் போது, இலைகள் மட்டுமே அகற்றப் படும். சில நோய்க் காரணிகள் காய்ந்த இலை, குச்சி போன்ற பகுதிகளிலிருந்து, அடுத்த பருவத் தாவரத்தைத் தாக்குவதுண்டு. அதனால், அறுவடை முடிந்தவுடன், வயலிலுள்ள குப்பை, கூளங்களைத் திரட்டி, நெருப்பிலிட்டுக் கொளுத்தி விடுவர். வேளாண் கருவிகள் மூலமும், நோய் பரவ வாய்ப்புள்ளது, அதனால், பயிர்ச் சாகுபடிக்குப் பயன்படுத்தும் கருவிகளைத் தூய்மையாக வைத்திருத்தல் தேவை. அவற்றைப் பயன்படுத்திய பின், மருந்துகள் மூலமாகவோ, சூடேற்றுவது மூலமாகவோ தூய்மைப் படுத்த வேண்டும். பல நோய்க் காரணிகள் பூச்சிகள் மூலம் பரவுகின்றன. இவ்வித பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதோ, அழிப்பதோ நோய் பரவுதலைக் குறைக்கும். பயிர்ச் சுழற்சி மூலமும் நோய்க் காரணிகளை நீக்கி விடுவது வழக்கம். பொதுவாக, நோய் தாக்கப் படாத பயிர்களைப் பயிர்ச் சுழற்சியில் சேர்ப்பதால், நோய்க் காரணிகளின் வாழ்க்கைச் சுழல் அறுபட்டு, அவை நீக்கப் படும். ஒரே பயிரின் பல வகைகளை வயலில் சாகுபடி செய்யக் கூடாது. இதனால், கலப்பினம் ஏற்பட்டுச் சிற்றினத்தின் தனித் தன்மை கெட்டு விடும். பயிர்ச் சுழற்சியின் போது, நோய்க்கு உள்ளாகும் பயிர்களைச் சாகுபடி செய்வதைத் தவிர்த்தல் நோய் பெருகுதலைத் தடுக்கும். பூச்சி, பூசணக் கொல்லிகள் மூலமும், நோய்க் காரணிகளை நீக்கலாம். ஆனால், அவை மனிதனுக்கும், ஏனைய உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கலாம். மண்ணைத் தூய்மைப்படுத்துவது, மற்றொரு வகையாகும். சில நோய்க் காரணிகள் மண்ணில் தங்கி, மறு பருவத் தாவரத்தைப் பாதிக்கலாம். இதைத் தடுக்க, நீர் கட்டுதல், வெப்பமேற்றுதல், வெந்நீர் பாய்ச்சுதல் போன்ற முறைகளைப் பின்பற்றலாம். பாதுகாப்பு. இது நோய்க் காரணி ஓம்புயிரியுள் பரவாதவாறு, நோய்க் காரணியைக் கொன்று விடும் முறையாகும். அதாவது, நோயின் அறிகுறிகள் தோன்றியவுடன், எடுக்கும் நடவடிக்கையாகும். பூச்சி, பூசணக் கொல்லிகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை, கனிம வேதிப் பொருள்கள், கரிம வேதிப் பொருள்கள் என்பன. கனிமப் பூசணக் கொல்லிகளில் மிகவும் முக்கியமானது போர்டோக் கலவை மருந்தாகும். இதில் மயில் துத்தம், சுண்ணாம்பு, நீர் முதலியவை 1:1:100 என்னும் விகிதத்தில் இருக்கும். இக்கலவையைப் பயன்படுத்தி, பெரும்பாலான பூசண நோய்க் காரணிகளைக் கட்டுப் படுத்தியுள்ளனர். கந்தகக் கலவைகளும் சிறந்த நோய்க் கொல்லிகளாகும். கரிம கந்தகப் பூசணக் கொல்லிகளுள் டைதயோ ஃபார்பமேட் முக்கியமானது. இம்மருந்துகள் கடைகளில் பல வணிகப் பெயர்களில் விற்கப்படுகின்றன. ஸீரேம், ஃபெர்பேம், தீரேம், நாபாம். சீனெப், மேனப் என்பவை முக்கியமானவை. நோய்க் கட்டுப்பாட்டில், நுண்ணுயிர் எதிர்ப் பொருள்கள் (antibiotics) பெருமளவில் பயன்படுகின்றன. ஆரியோ பஞ்சின்சால் நுண்ணுயிர் எதிர்ப் பொருள் பூசணங்களைக் கட்டுப் படுத்தும் தன்மை கொண்டது. இதைக் கொண்டு, மண் வாழ் நோய்க் காரணிகளைக் கட்டுப் படுத்தலாம். இது விதைகளில் புறத்திலும், அகத்திலும் உள்ள நோய்க் காரணிகளைக் கொன்று விடும். உயிரினம் மூலம் கட்டுப்பாடு (biological control). வேதிப் பூச்சி கொல்லிகளால் பல கேடுகள் விளையும். அதனால், நோய்க் காரணிகளை உயிரினங்கள் மூலம் கட்டுப் படுத்த முடியும். கரும்பில், நடுக்கணு, மேற்கணு, நுனிக் குருத்துப் புழுக்கள் அழிவை விளைவிப்பதுண்டு. இம்மூவகைப் புழுக்களையும், மற்றொரு பூச்சியைக் கொண்டு கட்டுப் படுத்தலாம். இந்த ஒட்டுண்ணிகள், நோய்க் காரணிகளின் முட்டைகளில் தங்களுடைய முட்டைகளை இட்டு விடும். ஒட்டுண்ணி முட்டையிலிருந்து வெளி வரும் புழுக்கள் நோய்க் காரணியின் புழுக்களைக் கொன்று விடும். தற்சமயம், வேளாண்மை அலுவலகங்களில் ஒட்டுண்ணி அட்டைகளை விற்பனை செய்கின்றனர். ஒவ்வோர் அட்டையிலும் ஆயிரக்கணக்கான ஒட்டுண்ணியின் முட்டைகள் காணப்படும். அட்டையில் குறிப்பிட்டுள்ள நாளிலிருந்து ஒரு வாரத்தில், ஒட்டுண்ணிகள் வெளிப்பட்டுக் குருத்துப்புழுக்களின் முட்டைகளைத் தாக்கும். இம்முறை மிகவும் சிக்கனமானது. கேடு விளைவிக்காதது. வேதிப் பூசணக் கொல்லி மருந்துகள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. எனவே, அவை பயிரையும், பாலூட்டிகளையும் பாதிக்கக் கூடும், ஆனால், இப்பண்பு, பெரும்பாலும் சூழ்நிலையைப் பொறுக்து அமைந்துள்ளது என்று ஆய்வாளர் கருதுவர், பூச்சி, பூசணம் ஆகியவற்றைக் கொல்லப் பயன்படுத்தும் மருந்துகள் செடியில் சில காலம் தங்கிச் செயற்படும். சில மருந்துகள் அவ்வாறு தங்கி அறுவடை செய்யும் உணவுப் பொருள்களோடு கலந்து, மனிதருக்கும், கால்நடைகளுக்கும் தீங்கு விளைவிக்கலாம். இவ்விதமான பக்க விளைவுகளைத் தவிர்ப்பதற்காகவே, உயிரின–பூச்சி கொல்லிகளைப் (bio-insecticides) பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறது. பைரீத்திரம், புகையிலை நீர் போன்றவை சிறந்த பூச்சி கொல்லிகளாகும். இம்மருந்துகளைத் தெளிக்கும் விதம், அதற்கேற்ற சூழ்நிலை, பருவம்,நேரம் இவற்றைச் செடிகளுக்கு எவ்வாறு அளிப்பது என்பது, பயிருக்குப் பயிர், நோய்க்கு நோய் வேறுபடும். அதை கருத்திற் கொண்டு மருந்துகளைக் கையாள வேண்டும். வேதிப் பூச்சி கொல்லிகளைப் பயன்படுத்துவதில், பல இடையூறுகள் உள்ளன. பொதுவாக, இவற்றைப் பெருமளவில் பயன்படுத்த வேண்டியிருக்கும், போர்டோக் கலவை போன்ற மருந்துகளைத் தயார் செய்வது சற்றுக் கடினம். மேலும், இவற்றைத் தூவ முகமூடி, கையுறை, தெளிப்பான் போன்ற கருவிகள் வாங்குவது செலவினத்தை அதிகப்படுத்தும். எதிர்ப்புத் திறன். செடிகளை நோய்க் காரணிகளிலிருந்து பாதுகாக்கக் கையாளப்படும் சிக்கலான முறைகளைத் தவிர்ப்பதே, எதிர்ப்புத் திறன் வகைகளை அறிமுகப் படுத்துவதன் நோக்கமாகும். இம்முறை பக்க விளைவுகளைத் தோற்றுவிப்பதும் இல்லை. துங்கோ வைரஸ் (Tungo virus) நெல்லைப் பெருமளவில் பாதிக்கிறது. பா திக்கப்பட்ட வயலில் ஒன்று அல்லது இரண்டு நெல் செடிகள், நோயின் அறிகுறிகளே இல்லாமல், செழுமையாக இருப்பதைக் காணலாம். அவையே இயற்கையான எதிர்ப்புத் திறன் கொண்டவை. அவற்றை இனப் பெருக்கம் செய்து, அழிவைத் தவிர்க்கலாம். செங்குத்து எதிர்ப்பு (vertical resistance), கிடை எதிர்ப்பு (horizontal resistance) என எதிர்ப்புத் திறன் இரு வகைப்படும். செங்குத்து எதிர்ப்பு வகையில், குறிப்பிட்ட பயிர், நோய்க் காரணியின் ஒரு வகைக்கு மட்டுமே எதிர்ப்பை வெளிப்படுத்தும் நிலையிலிருக்கும். ஆனால், கிடை எதிர்ப்பு வகையில், குறிப்பிட்ட பயிர், நோய்க் காரணியின் பல வகைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் பண்பு கொண்டது. உழவர்கள் கிடை எதிர்ப்பு வகைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். எதிர்ப்புத் திறன் வகைகளைத் தேர்வு செய்வதிலும் சிக்கல் உள்ளது. ஏதாவது ஒரு பயிர், ஒரு நோய்க் காரணிக்கு எதிர்ப்புக் காட்டினாலும், புது நோய்க் காரணிகள் தாக்கினால், அப்பயிரில் வேறு ஒரு நோய் தோன்றக் கூடும். ஆகவே, செடிப் பாதுகாப்பில் ஒரு முறையை மட்டும் பின்பற்றாமல், பல முறைகளைக் கையாள்வது சிறந்தது. நோய் எதிர்ப்புத் தன்மை மரபு வழியாகவும் அமையலாம். அதனால் கலப்பின முறை இத்தன்மையை, ஓரினத்திலிருந்து மற்றொன்றிற்குக் கொண்டு செல்லலாம். காட்டாக, சோலானம் டியூபரோசம் (solanum tuberosum) பொருளாதாரச் சிறப்பு வாய்ந்த உருளைக் கிழங்குச் செடியாகும். இது கிழங்குகளைத் தர வல்லது. ஆனால், இது எளிதாகப் பூசண நோயால் தாக்கப் படுகிறது. உருளைக் கிழங்கு வகையைச் சேர்ந்த மற்றொரு சிற்றினமான சோலானம் டெமிசம் (solanum demissum) என்பது காட்டுச் செடியாகும். இதில் கிழங்குகள் தோன்றுவதில்லை; பூசண நோயால் பாதிக்கப்படுவதும் இல்லை. இதற்குக் காரணம், இவ்வினத்தில் காணப் படும் ஜீன்களேயாகும். இதில் 16 வகை உண்டு என்று கண்டறிந்துள்ளனர் தாவர ஆராய்ச்சியாளர்கள். இவ்விரு சிற்றினங்களையும் கலப்பினம் செய்து, கிடைத்த கலப்புயிரி, உருளைக் கிழங்குகளைத் தருவதுடன், டெமிசத்தைப் போல், நோய் எதிர்ப்புத் தன்மையும் பெற்றுள்ளது. நோய் எதிர்ப்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு சாகுபடி செய்யும் போது, வயல் எதிர்ப்புத் தன்மையைக் (field resistance) கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு செடி ஆய்வகத்தில் நன்றாகச் செயல் படலாம். ஆனால், வயலில் இயற்கைச் சூழ்நிலையில் பிற காரணிகளோடு தொடர்பு கொள்ளும் போது, அதன் எதிர்ப்புத் தன்மை பாதிக்கப்படலாம். —தி ஸ்ரீகணேசன் நூலோதி. B.E.J. Wheeler, An Introduction to Plant Diseases, ELBS, London, 1972; Ustimenko and Bakumovsky, Plant Growing in Tropics and Subtropics, Mir Publishers, Moscow, 1983. செடி மீது தெளிப்பு. தாவரப் பகுதிகளில் மேல் மருந்திட்டுப் பெரும்பாலான பயிர் நோய்களையும், பூச்சிகளையும் கட்டுப் படுத்துவதற்காகச் செடி மீது தெளிப்பு முறை (foliar spray) மேற்கொள்ளப் படுகிறது. தண்டு, இலை, காய் முதலியவற்றில் காணப் படும் பூச்சி, நோய் போன்றவற்றை முறையே பூச்சி கொல்லிகள், பூசணக் கொல்லிகள் மூலம் கட்டுப் படுத்தப் பயன்படும் முறையே தெளித்தல் ஆகும். இம்முறையில் நனையும் தூள் மருந்துகளும், நீர்ம மாற்றுத் திரட்டுகளும் தெளி நீர்மம் தயாரிப்பதற்குப் பயன்படுகின்றன. இம்மருந்துகளுடன், குறிப்பிட்ட அளவு நீரைச் சேர்த்துக் கிடைக்கும் கரைசல் பயிரின் மீது தெளிக்கப் படுகிறது. மருந்துக் கரைசலைத் தெளிப்பானில் இட்டு, அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். இக்கரைசல் மிக நுண்ணிய துளிகளாகப் பகுக்கப்பட்டுப் பயிரில் பரவலாக விழும். மருந்து தெளிக்கும் போது, ஓரிடத்தில் நீண்ட நேரம் தெளிக்கக் கூடாது; அவ்வாறு தெளித்தால், பல நுண்துளிகள் ஒன்று சேர்ந்து, பெரிதாகிக் கீழே வடிந்து, விடும். மேலும் தெளிப்பினால், எந்தப் பயனும் இல்லாமல் போய் விடும். ஒரு ஹெக்டேர் நிலப் பரப்பிலுள்ள பயிரில் தெளிப்பதற்குச் சாதாரண தெளிப்பானைப் பயன் படுத்தினால், 400–1000 லி. மருந்துக் கரைசலும், விசைத் தெளிப்பானைப் பயன்படுத்தினால் 80–200லி. மருந்துக் கரைசலும் தேவைப்படும். இதில் தேவைப் படும் நீரின் அளவு மாறுபடுமே தவிர, மருந்தின் அளவு இரு வகைத் தெளிப்பானுக்கும் ஒன்றேயாகும். பயிரில் மருந்து தெளிப்பதைப் பெரும்பாலும், காலையிலோ, மாலையிலோ மேற்கொள்ள வேண்டும். பனிக் காலங்களில் பனித் துளிகள் மறைந்த பிறகே, மருந்தைத் தெளிக்க வேண்டும். உயர் வேகத்தில் காற்றடிக்கும் போது, மருந்து தெளிக்கக் கூடாது. மருந்தடிப்பதற்கு முன்பு, நீர் பாய்ச்ச வேண்டும். .தெளிப்பு முறையால் ஏற்படும் நன்மைகள். குறிப்பிட்ட பரப்பளவில் மருந்து தெளிப்பதால், அதற்குத் தேவைப்படும் மருந்தின் விலை மிகக் குறைவு. மருந்துத் துளிகள், ஒரே சீராகப் படியும் தன்மையும், நன்றாக ஒட்டிக் கொள்ளும் தன்மையும் பெறுகின்றன. தெளிக்கும் மருந்து, நனையும் தூள் மருந்து, நீர்ம மாற்றுத் திரட்டுப் போன்ற பல வடிவங்களில் கிடைக்கிறது. தெளிப்பதற்குப் பல வகைத் தெளிப்பான்கள் உள்ளன. தெளிக்கும் மருந்து, தூவும் மருந்தை விட, மிகவும் பயன் தருகிறது. காற்று முதலிய இயற்கை ஓட்டத்தால் வீணாகும் மருந்தின் அளவு, குறைவேயாகும். காற்றின் வேகம் மணிக்கு 16 கி.மீ. வரை இருந்த போதும், தொடர்ந்து தெளிக்கலாம். குறிப்பிட்ட பரப்பளவில் தெளிக்க வேண்டிய மருந்தின் அளவைக் கூட்டவோ, குறைக்கவோ, கருவியில் சிறிது மாற்றம் செய்யலாம். தெளிப்பு முறையில், மருந்திட்ட பகுதியில், பூசணக் கொல்லியின் நச்சுத் தன்மை நீடிப்பது கூடுதலாகும். இம்முறையில் பயன்படுத்துவோருக்கு மருந்தினால் ஏற்படும் கேடுகள் தூவும் முறையில் இருப்பதை விடக் குறைவேயாகும். மருந்தின் அளவு. குறிப்பிட்ட நிலப் பரப்பில் தெளிப்பதற்குப் பயன்படும் மருந்தின் அளவு, சாகுபடி செய்துள்ள பயிரின் வளர்ச்சி, பயிர் வகை, மொத்த இலைப் பரப்பு, பயிரின் வயது, பயிரின் ஊட்டம் முதலியவற்றைப் பொறுத்து மாறுபடும். சான்றாக, படர் வகை (spreading variety) நிலக் கடலைப் பயிருக்கு மிகுந்த அளவு மருந்தும், கொத்துக் கடலை வகைக்குக் (bunch variety) குறைந்த அளவு மருந்தும் தேவைப்படும். கரும்பை விட, நெற்பயிக்கு ஏறக் குறைய இரண்டரை மடங்கு குறைந்த அளவே மருந்து தேவைப்படும். ஒரு பயிரின் இளம் பருவத்திற்குக் குறைந்த அளவும், வளர்ந்த பயிருக்குக் கூடுதலான அளவும் மருந்து தேவைப்படும். உரமிட்டவயலிலுள்ள பயிர்கள் ஊட்டத்துடன் மிகுந்த பரப்பைப் பெற்றுள்ளமையால், அவற்றிற்கு உரமிடுதல், வளரும் பயிர்களுக்குத் தேவைப்படும் மருந்தின் அளவை விடக் கூடுதலாகத் தேவைப்படும். மேலும், மானாவாரிப் பயிரை விட, இறைவைப் பயிர்களுக்குக் கூடுதலான மருந்து தேவைப்படுகிறது. தெளிப்பான்கள். கைத் தெளிப்பான், விசைத் தெளிப்பான் ஆகியவை தெளிப்பதற்குப் பயன்படுகின்றன. கைத் தெளிப்பான்களில், சிறிய கைத் தெளிப்பான், வாளித் தெளிப்பான், நேப்சேக் தெளிப்பான், ராக்கர் தெளிப்பான் ஆகிய நான்கு வகை உண்டு. விசைத் தெளிப்பானில் நீர்மவியல் தெளிப்பான் (hydraulic sprayer) நுண் துளித் தெளிப்பான் (mist blower) என இரு வகை உண்டு. தெளிப்பான்களைக் கொண்டு குறைந்த பரப்பளவில் தோன்றும் பூச்சி நோய்களைக் கட்டுப் படுத்தலாம். ஒரே சமயத்தில், பெரும் நிலப் பரப்பில் பூச்சி அல்லது நோய்கள் காணப் பட்டால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு, விமானம் மூலம் மருந்துகளைத் தெளிக்கலாம். விமானத்தைப் பயன்படுத்தி, ஒரு நாளில் ஏறக் குறைய 1000 ஹெக்டேர் நிலப் பரப்பிற்கு மருந்து தெளிக்கலாம். —கா. சிவப்பிரகாசம் நூலோதி. Y.L. Nere, Fungicides in Plant Disease Control, Oxford and IBH Publishing Co., New Delhi, 1971. <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்த பக்கத்தில் ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> செண்பகம் இது குக்குலிபார்மிஸ் வரிசையில், குக்குலிடே குடும்பத்தைச் சேர்ந்த குயில், கோகிலம், குசில் ஆகியவற்றோடு நெருங்கிய உறவுடையது. அண்டங் காக்கை அளவுள்ள செண்பகத்தின் உடல், கருப்பாகவும், இறக்கைகள் செம்பழுப்பாகவும் இருக்கும். காக்கையின் வாலை விடக் கறுத்து, நீண்ட வாலைக் கொண்டது. முழு வளர்ச்சி பெறாத பறவைகளின் உடல், ஆழ்ந்த செம்பழுப்புக் குறுக்குக் கோடுகளைக் கொண்டும், இறக்கைகள் பளபளக்கும் செம்பழுப்புக் கோடுகளைக் கொண்டுமிருக்கும். பெண், ஆணை விடக் குறிப்பிடத் தக்க வகையில், உருவில் பெரியது. தனித்தும், இணையாகவும் தரையில் புதர்களிடையே தாவித் திரிந்து, இரை தேடும். அப்போது, வாலை உடலோடு நேராக இருக்கும் படி வைத்துக் கொண்டு, அடிக்கடி விரித்து மடக்கும். சில சமயம், இறக்கைகளை விரித்துத் தலை வரை முக்காடிட்டது போல நீட்டுவது, தப்பிச் செல்லப் பார்க்கும் இரையைத் தப்ப விடாமல் மடக்க மேற்கொள்ளும் செயலாகக் கருதப் படுகிறது. நன்கு நடக்கவும் ஓடவும் வல்ல இது பறக்கும் ஆற்றல் திறனுடையதன்று; கிளைக்குக் கிளை தாவி அமர்ந்து, இரை தேடும். இது ஆள் அரவம் கேட்டவுடன், புதர்களிடையே தாவி அமர்ந்து, மறையும். பல்லி, பாம்பு, பூச்சி, புழுக்கள், வெட்டுக் கிளி, தவளை, மட்கி அழுகிய மீன், சுண்டெலி முதலிய பலவற்றையும் உணவாக்கும். உரக்க, பெருங்குரலில் 'கூப்… கூப்… கூப்…’ எனத் தொடர்ந்து ஆறேழு முறை கத்தும். இது போலச் சில போது, இருபது, முப்பது முறை கூடத் தொடர்ந்து குரல் கொடுப்பதுண்டு. இவ்வாறு ஒரு பறவை குரல் கொடுக்கும் போது, அதன் துணை அதற்கு எதிர்க் குரல் கொடுக்கக் கேட்கலாம். குயிலினத்ததாயினும், கூடு கட்டி முட்டையிடும் பழக்கம் உடையது. தென்னிந்தியாவில், நவம்பர்–மேயில் பந்து வடிவிலான கூட்டை, புல், இலை, தழை ஆகியன கொண்டு, கொடிகள் படர்ந்துள்ள மூங்கில் மற்றும் முட்செடி, முள் மரங்களிடையே தரையிலிருந்து சற்றே உயரக் கட்டி, 3 அல்லது 4 நீண்ட கூம்பு வடிவ மங்கிய வெண்ணிற முட்டைகளிட்டு ஆணும் பெண்ணுமாக அடை காக்கின்றன. இதன் இறைச்சி, மூச்சிரைப்பு, எலும்புருக்கி நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மையுடையது எனக் கூறப் படுகிறது. மேலும், இது கூடு கட்டும் போது, மிக அரிதான ஒரு வகைப் புல் அல்லது வேரைக் கொண்டு வந்து சேர்க்கிறது எனவும், அது மந்திர ஆற்றல் வாய்க்கப் பெற்றது எனவும், நோய் தீர்க்கும் தன்மையுடையது எனவும், நம்பும் மக்கள் உண்டு. அதன் புல்லையோ, வேரையோ பிரித்து எடுத்து, கூட்டினை ஓடும் நீரில் பிரித்து விட்டால், அந்த மூலிகை நீரினை எதிர்த்துச் செல்லும் எனவும் நாட்டுப்புற மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. செதில்கள் மீன்களில் தலை முதல் வால் வரை தோல் மூடியாக உள்ள வட்ட வடிவ மென்தகடுகள், செதில்கள் எனப் படுகின்றன. ஒரு சில இரு வாழ்விகளிலும், ஊர்வனவற்றிலும் செதில்கள் உண்டு. மீனின் செதில்கள், தோலின் உட்பகுதியிலிருந்து (அகத் தோல்) தோன்றிப் பதிந்துள்ளன. ஊர்வனவற்றின் செதில்கள், புறத் தோலிலிருந்து தோன்றுகின்றன. மீனின் செதில்கள் தோலுக்குப் பாதுகாப்பளிக்கின்றன. பெரும்பாலான மீன்களில், செதில்களே தோல் சட்டமாக அமைந்துள்ளன. மீன் செதில்களில் காஸ்மாய்டு, ரோம்பாய்டு, கேனாய்டு, பிளேக்காய்டு, சைக்ளாய்டு, டீனாய்டு எனப் பலவகையுள்ளன. தொல்லுயிரூழியின் சைலூரிய, டிவோனியக் காலங்களில் வாழ்ந்து அற்றுப் போன மீனையொத்த முதுகெலும்பிகளின் முன்னோடிகளான தகட்டுத் தோலிகளில், பல வடிவத் தகடுகளோ, செதில்களோ காணப்பட்டன. இத்தகடுகள், அடிப்படையில் மூன்று அடுக்குகளுடையவை. அகவடுக்கு, அடர்த்தியாக அமைந்த எலும்புப் பொருளாலும், நடுவடுக்கு, பஞ்சு போன்ற மென்மையான எலும்புத் திசுக்களாலும், புறவடுக்கு, தந்தினிப் (dentine) பொருளாலும் ஆனவை. இப்புறச் சட்டகத்தின் மேற்பகுதியில், தந்தினியாலான புடைப்புகளும், தடிப்புகளும் இருந்தன. இவை தற்காலக் குருத்தெலும்பு மீன்களில் உள்ள செதிலமைப்பில் உள்ளன. மீன்களின் முன்னோடியான அகாந்தேடியன்களில் இருந்த செதில்கள், இன்றைய சில எலும்பு மீன்களில் காணப்படும் கேனாய்டு செதில்களை ஒத்துள்ளன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> செதில்களின் உருவமைப்பு, அளவு, பருமன் ஆகியவை இனத்திற்கு இனம் மாறுபடும். நுண்ணோக்கிக் கொண்டே பார்க்கக் கூடிய அளவிற்கு மிகச் சிறிய விலாங்கு மீன் செதில்களிலிருந்து, சில நன்னீர் மீன்களில் காணப்படும் 20 ச. செ. மீ. அளவுள்ள பெரிய செதில்கள் வரை பல வகை உள்ளன. டிரங்க் மீன் வகைகளில், செதில்கள் இணைந்து பெட்டி போன்ற அமைப்புடன் உடல் முழுதும் மூடி- யுள்ளன. கடற் குதிரை, குழல் மீன் வகைகளில் செதில்கள் நெருக்கமாக இணைந்து, வரிசை வரிசையாக அமைந்துள்ளன. காஸ்மாய்டு செதில்கள். இவை மறைந்த கதுப்புத் துடுப்பு மீன்களிலும், நுரையீரல் மீன்களிலும் காணப்பட்டன. காஸ்மின் என்ற பொருளால் ஆக்கப்பட்ட இச்செதில்களின் மேல் மெல்லிய காரை (enamel) போன்ற பொருள் உள்ளது. இதற்கு விட்ரோ தந்தினி (vitro dentine) எனப் பெயர். காஸ்மின் அடுக்கு, மையத்திலிருந்து பரவிச் செல்லும் நுண் குழாய்களையும், கூழ்க் குழிகளையும், சிறு துளையுடன் கூடிய குருதி அறைகளையும் கொண்டது. செதில்களின் அடியில், ஐசோபீடின் அடுக்குகளும், புறப் பரப்பில் காஸ்மின் உறை பொருள்களும் சேர்வதால், இவை வளர்கின்றன. காஸ்மாய்டு செதில்கள் சாய் சதுர வடிவமாகவோ, வட்ட வடிவமாகவோ இருக்கும். இவை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டோ, முனையும், துளையும் இணைப்புக் கொண்டோ அமைந்துள்ளன. தற்காலம் வாழும் நுரையீரல் மீன்களான செரட்டோடஸ் (ஆஸ்திரேலியா), புரோட்டாப்டிரஸ் (ஆஃப்ரிக்கா), லெபிடேசைரன் (தென் அமெரிக்கா) ஆகியவை படிமலர்ச்சியில், காஸ்மாய்டு செதில்களை இழந்து விட்டன. மெல்லிய சைக்ளாய்டு செதில்களே உள்ளன. 1960இல் உயிருடன் பிடிக்கப்பட்ட லாட்டிமீரியா என்னும் சீலக்காந்த மீனில், பண்டைய மீன்களைப் போலவே, செதில்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்தன. செதில்கள் டீனாய்டு அமைப்புடனும், பிளேகாய்டு முள்கள் நிறைந்தவையாயும் இருந்தன. முதனிலை முதுகெலும்பின் செதில்களின் குறுக்கு வெட்டித் தோற்றம் <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> கேனாய்டு செதில்கள். இவை தொன்மையான கதிர்த் துடுப்பு மீன்களில் (actinopterygian) காணப் பட்டன. இச்செதில்கள் பளபளப்புள்ள காரையையொத்த கேனாயின் என்னும் செல்லற்ற கனிம உப்புகளால் ஆக்கப்பட்டுப் பல அடுக்குகளைக் கொண்டிருந்தன. உருவமைப்பிலும், வளர்ச்சி முறையிலும் இவை காஸ்மாய்டு செதில்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. வளர்ச்சியின் போது, மேலும், கீழும் புதிய அடுக்குகளைச் சேர்த்துக் கொள்வதால், செதில்கள் தடித்துப் பெருக்கின்றன. கேனாயின் அடுக்கின் கீழே நுண் குழாய்களும், குருதிக் குழாய் கொண்ட தந்தினி அடுக்குகளும் உள்ளன. இவ்வடுக்கின் மேற்பரப்பிலிருந்தே செதில் வளர்ச்சி தொடங்குகிறது. கீழ்ப் பகுதி தடித்த எலும்பு அடுக்குகளைக் கொண்டுள்ளது. செதில்கள் சாய் சதுரமாகவோ, வட்டமாகவோ இருக்கும். ஒன்றன் மேல் ஒன்றாக, அடுக்குடனோ, முனையும், துளையும் கொண்ட இணைப்புடனோ இருக்கும். சிலவற்றில் கூரிய நுண் முள் இருக்கும். தற்காலம் வாழும் காண்டிராஸ்டியை (chondrostei) மீன்களில் உள்ள கேனாய்டு செதில்கள், சிறு மாற்றங்களுடன் காணப்படுகின்றன. பாலிப்டிரஸ் வகையில், மூவடுக்குடைய இணை செதில்கள் உள்ளன. ஸ்டர்ஜன், துடுப்பு மீன் ஆகியவற்றின் செதில்களில், கேனாயின் அடுக்குகள் இல்லை. வால் துடுப்பின் மேற்பகுதியில் மட்டும், சில நீள் சதுரச் செதில்கள் உள்ளன. துடுப்பு மீன்களில், ஆங்காங்கே முள்கள் தோலில் பதிந்து காணப்படுகின்றன, இன்று வாழும் கதிர்த் துடுப்பு மீன்களில், கார்பைக் (garpike) என்னும் மீனைத் தவிர, ஏனைய எலும்பு மீன்களின் செதில்களிலும் சேனாயின் பொருளில்லை. இதனால் செதில்களின் திண்மையும், உறுதியும் குறைந்து விட்டன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> கார்பைக் மீன்களின் செதில்களில் எலும்புப் பொருளாலான உள்ளடுக்குகளும், மேலே தடித்த சேனாயின் அடுக்குகளும் உள்ளன. காஸ்மாய்டு குழாய்களும், அடுக்குகளும், குழிகளும் இல்லை. மாறாக, கிளைகளற்ற, சிறு கால்வாய்கள் மேலிருந்து கீழாக ஊடுருவியுள்ளன. இக்கால்வாய்களில் நடுப்படைச் (mesoderm) செல்களும், குருதி நுண் குழல்களும் காணப்படுகின்றன. இக்குழல்கள், செதில்களின் கீழ்ப் பரப்பிலிருந்தும், பக்கவாட்டிலிருந்தும் தொடங்கி, அடுக்குகளின் குறுக்காக உள் நோக்கிச் செல்கின்றன. இரு பக்கங்களிலும், பொருள்கள் அடுக்கடுக்காகச் சேர்க்கப்படுவதால், வளர்கின்றன. கேனாயின் அடுக்கு 90–100μ பருமன் இருக்கும். மேற்பரப்பில், பிளேக்காய்டு முள்கள் காணப்படுகின்றன. செதில்கள், சாய் சதுர வடிவமுள்ளவை. அவை ஒன்றோடொன்று துளைகளின் மூலம் இணைக்கப்பட்டு, இணைப்புத் திசுவால் கட்டப்பட்டுள்ளன. ஹோலாஸ்டியை வகையைச் சேர்ந்த வில் துடுப்பு மீனில் செதில்களின் கேனாயின் போர்வை காணப்படவில்லை. உருவமைப்பில் இவை சைக்ளாய்டு செதில்களையே ஒத்துள்ளன.பிளேக்காய்டு செதில்கள். ஒரு சில சிறப்பினங்களைத் தவிர, சுறா, திருக்கை, எலி மீன்களில் இவை காணப்படுகின்றன. பல சுறாமீன்களின் தோலில் இவை சாய்ந்தவாறு உள்ளன. திருக்கை மீன்களில், செதில்கள் ஒழுங்கற்றுப் பரவலாகப் பொருந்தியுள்ளன. எலி மீன்களின் உடலில், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படுகின்றன. ஒவ்வொரு பிளேக்காய்டு செதிலிலும், தட்டையான சாய் சதுர அடித் தகடும், அதிலிருந்து பின்னோக்கி வளைந்து புறத்தே நீட்டிக் கொண்டிருக்கும் முள் போன்ற பகுதியும் உள்ளன. அடித் தகடு தோலின் மேற்பகுதியில் புதைந்துள்ளது. அமைப்பில், பிளேக்காய்டு செதில் ஒரு பல் போன்று காணப்படும். முள் போன்ற பகுதி, தந்தினியால் ஆன புறச் சுவரையும், அதனுள் அடங்கிய கூழ்க் குழியையும் கொண்டுள்ளது. இக்குழியிலிருந்து எண்ணற்ற நுண் கால்வாய்கள் வெளி நோக்கிக் கிளைத்துப் பரவுகின்றன. செதிலின் அடித் தகடு, தோலின் புறவடுக்குச் செல்களோடு சிறு துளைகள் மூலம் தொடர்பு கொண்டுள்ளமையால், அதன் மூலம் குருதி நாளங்களும் நிண நீர் கால்வாய்களும், நரம்புகளும் செதிலில் கலக்கின்றன. செதிலின் முள் போன்ற புறப் பகுதி, மேலே ஒளி ஊடுருவக் கூடிய உறுதியான காரை போன்ற விட்ரோ தந்தினியால் போர்த்தப் பட்டுள்ளது. பிளேக்காய்டு செதில்களில் கூம்பு வடிவம், குமிழ் வடிவங் கொண்ட பல வகை உண்டு. சிலவற்றில தட்டை வடிவத்தில், நெருக்கமாக, ஓடு போல் தோல் மீது வேயப்பட்டோ, பரவலாக ஒழுங்காகப் பதிக்கப்பட்டோ இருக்கும். சைக்ளாய்டு, டீனாய்டு செதிலகள். தற்கால எலும்பு மீன்களின் செதில்கள், காஸ்மின், கேனாயின் அடுக்குகளை முற்றிலும் இழந்து விட்டன. செதில்கள் வளையும், ஒளியூடுருவும் மெல்லிய அமைப்புடன் உள்ளன. சைக்ளாய்டு செதில்கள் அமைப்பில் எளியவை. இவ்வகைச் செதில்கள் தொன்மையான மென் கதிர்த் துடிப்பு எலும்பு மீன்களிலும், டீனாய்டு செதில்கள் மேம்பட்ட முள் கதிர்த் துடுப்பு எலும்பு மீன்களிலும் காணப்படுகின்றன. சில மீன்களில் இவ்விரு வகைச் செதில்களும் காணப்படும். எ-டு. சேற்று மீன் தோற்றத்திலும், வளர்ச்சியிலும் இவ்விரு வகைச் செதில்களும் ஒத்திருப்பினும், புற அமைப்பில் பெரிதும் வேறுபட்டுள்ளன. டீனாய்டு செதில்களின் பின்புறத்தில், நுண்ணிய கூர் முள்களுள்ளன. சைக்ளாய்டு செதில்களில், இத்தகைய முள்கள் இல்லை. சில மீன்களில், கூர் முள்கள் மென்மையாகவும், குட்டையாகவும் இருக்கும். இவற்றைக் குற்றிழை முள்கள் என்பர். ஒவ்வொரு செதிலும், எலும்பாலான மேற்பரப்பையும், நார்களாலான உட்பகுதியையும் கொண்டது. வேதியியல் அமைப்பு. நீரற்ற, உலர்ந்த செதில்கள் பொதுவாக 41–80% புரதமும், 50–60% தாதுப் பொருள்களும் கொண்டவை. புரதப் பொருள்களில் கொலாஜன் 24% உம், இக்திலெப்பிடின் 76%உம் உள்ளன. சூரிய மீன், கார்பைக் மீன், பேத்தை மீன் (puffer fish), குருத்தெலும்பு மீன்களின் தோல் சட்டகங்களில் இக்திலெப்பிடின் இல்லை. பல எலும்பு மீன்களில், சைக்ளாய்டு, டீனாய்டு வகைச் செதில்களுக்குப் பதிலாக, வேறு வகைச் செதில்கள் உள்ளன. உள்ளான் மீனில், பிளேக்காய்டு செதில்களை ஒத்தவை காணப்படுகின்றன. வௌவால் மீனின் செதில்களில், ஒற்றை முள்ளும், தவளை மீனில் கிளையுள்ள முள் பகுதியும் உள்ளன. விசை மீன்களிலும், அர மீன்களிலும் செதில்களின் அடித் தகட்டில் பல முள் இருக்கும். சில கவசக் கெழுத்தி மீன்களில், அடித் தகட்டு முள்கள் அசையக் கூடியனவாக இருக்கும். முள்களும், பெருமளவில் பிளேக்காய்டு செதில் அமைப்பை ஒத்துள்ளன. குழல் மீன், குதிரை மீன் போன்றவற்றில் கண்ட அமைப்புகள் பெற்ற எலும்புத் தகடு தோல் சட்டகமாக உள்ளது. தென் அமெரிக்கக் கவசக் கெழுத்தி மீன், முதலை மீன், பெட்டி மீன்களில் எலும்புத் தகடுகள் உள்ளன. முள்ளம் பன்றி மீன், கோள மீன் ஆகியவற்றின் தோலில் கூர் எலும்பு முள்களுள்ளன. இம்மீன்களை எதிரிகள் அணுகினால், உடலைப் பந்து போல் வைத்துக் கொள்ளும். அப்போது முள்கள் நிமிர்ந்து அஞ்சத் தக்க தோற்றத்தை அளிப்பதால், எதிரிகள் ஓடி விடுகின்றன. இம்முள்கள் தற்காப்புக்காகப் பயன்படுகின்றன. ஸ்கல்பின் மீன்களில் தோலில் புதைந்து காணப்படும் சிறு முள்களே, அவற்றின் உண்மைச் செதில்களாகும். மொத்த உறிஞ்சு மீன்களில் (lump sucker) காணப்படும் செதில்கள் எலும்பு மருக்களே. குதிரை மேக்கரல் ட்ரகூரசில் (horse mackeral trachurus) மருங்குக் கோட்டிலும், ஹெர்ரிங் மீன்களின் நடு வயிற்றுப் புறத்திலும் காணப்படும் கவச முள்களும் செதில்களே. முக்கூர் முள் முதுகில் (three spined stickle back) செதில்களுக்குப் பதிலாகப் பக்கவாட்டு வரிசைத் தகடுகள் உள்ளன. வான்மீனின் இள நிலையில் காணப்படும் தடிப்புடைய செதில்கள், வளர் நிலையில் காணப்படுவதில்லை. கெழுத்தி மீன்களிலும், முதிர் நிலையில் செதில்களில்லை. விலாங்கு மீன்களில், செதில்கள் மிகச் சிறியனவாகவும், டார்பான் மீன்களில், செதில்கள் 5 செ.மீ. நீளம் உடையனவாகவும், பார்பஸ் டார் மீன்களில் 6–8 செ.மீ. நீளமுடையனவாகவும் உள்ளன. சைக்ளாய்டு செதில்கள் எளிதில் உதிரும் வகையிலும், டீனாய்டு செதில்கள், தோலில் ஆழமாகப் பதிந்த முறையிலும் உள்ளன. பொதுவாக கவசப் போர்வையால் முற்றிலும் போர்த்தப்பட்ட மீன்கள் விரைவாக நீந்தா. மாறா, அசையும் முறையில் இணைக்கப்பட்ட செதில்களுடையவை எளிதாக, உடலை வளைத்து நீரில் விரைவாக நீந்தும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> மாறுபட்ட செதில்கள். சில மீன்களில் காணப்படும் புற உறுப்புகள் தோலிலிருந்து தோன்றுவதிலும், அடிப்படை அமைப்பிலும், செதில்களை ஒத்துள்ளன. இவை உண்மையில் செதில்களே. செதில்கள் மாறுபட்டும், வளர்ந்தும் விரிவடைவதால், தேவைக்கேற்ற உருவைப் பெற்றுள்ளன. இவ்வாறு, மாறுபட்ட ஒரு சில உறுப்புகள் புறத் தோற்றத்திலும், அமைப்பிலும் செதில்களை ஒத்திருப்பன அல்ல. சுறா மீன், சிறப்பாக முள் நாய் மீன்களின் இரு முதுகுத் துடுப்புகளிலும் காணப்படும் ஒற்றை முள். செதில்களின் இணைப்பால், தோன்றியதாகவே கருதப் படுகிறது. கிமேராக்களிலும் (chimacras) முதுகு முள் உண்டு. இவை, நச்சுச் சுரப்பிகளுடன் தொடர்பு கொண்டுள்ளமையால், தற்காப்பு உறுப்புகளாகப் பயன்படுகின்றன. கொட்டும் திருக்கைகளின் வாலில் காணப்படும் வரிப் பள்ளமுடைய முள்கள் செதில்களின் இணைப்பாலோ, மாற்றத்தாலோ ஏற்பட்டவை. இவையும், தற்காப்பு உறுப்புகளே. அறுவை மீன் வாலின் அடிப் பகுதியில் செதில்கள் கத்தி போன்ற பட்டை முள்களாக மாறியுள்ளன. தோலினாலான பைகளில் புதைந்துள்ள இவை, தேவைப் படும் போது வெளிப்பட்டுப் பயன்படும். வேலா மீன் அல்லது ரம்ப மீன்களின் முன் புற நீள் மூக்கு மருங்கில் காணப்படும் பற்கள், பிளேக்காய்டு செதில்களின் மருவலால் உண்டான அமைப்பு- களேயாகும். இவ்வுறுப்பு தற்காப்புக்கும், இரையை வீழ்த்தி விழுங்குவதற்கும் பயன்படுகிறது. சுறா போன்ற குருத்தெலும்பு மீன்களில் உள் வாய், தொண்டைப் பகுதிகளில் காணப் படும் பற்கள், பிளேக்காய்டு செல்களின் மருவல்களே. இரையைக் கவ்விப் பிடிக்க, இவை பயன்படுகின்றன. சில எலும்பு மீன்களில் உள்ள இணைந்த துடுப்புக் கதிர்களை உருவாக்கும் சதுர அல்லது நீள் வட்ட வடிவங்கொண்ட கண்டங்களும், மருவிய செதில்களேயாகும். பல எலும்பு மீன்களில், மார்புத் துடுப்பு உடலோடு இணைந்துள்ள மேல் கோணத்திலும், இடுப்புத் துடுப்பின் வெளிப் பகுதியிலும், கூர்மையான குத்து வாளையொத்த ஓர் உறுப்புக் காணப்படும். இதுவும், செதிலின் மருவலெனக் கருதப்படுகிறது. ஒட்டு மீன்களிலும், மின்னோ வகை மீன்களிலும், இனப் பெருக்கக் காலங்களில் செதில் மீது கரணை, மரு, குருணை போன்ற முத்து உறுப்புகள் தோன்றுகின்றன. ஆண், பெண் இன உறவின் போது, தோலில் உண்டாகும் கோழையால் வழுக்கி விடாமல், சுரசுரப்புத் தன்மை கொடுக்க, இவ்வுறுப்புகள் பயன்படுகின்றன; பின்னர், இவை மறைந்து விடுகின்றன. —கோவி. இராமசுவாமி செதில் இறக்கையுடையவை இணைக் காலிகள் (arthropoda) தொகுதியில், பூச்சிகள் (insecta) வகுப்பில், இறக்கை உடையவை (pterygota) துணை வகுப்பில், உள்ளிறக்கைப் பூச்சிகள் (endopterygota) அல்லது நிறை உருமாற்றப் பூச்சிகள் (holometabola) பிரிவில், லெப்பிடாப்டிரா அல்லது செதில் இறக்கையுடையவை (lepidoptera) வரிசையில் வரும் பூச்சிகளுக்கு வண்ணத்துப் பூச்சிகளையும், அந்திப் பூச்சிகளையும் சான்றாகக் கூறலாம். இவ்வரிசையில் வரும் பூச்சிகளுக்கு, வளர்ந்த மெல்லிய சவ்வாலான ஈரிணை இறக்கைகள் காணப்படும். இவ்விறக்கைகள் வண்ணத் துகள்களுள்ள நுண் செதில்களால் மூடப்பட்டுப் பல நிறத்துடன் காணப் படும். முதிர்ந்த உயிரியின் வாயுறுப்புகள் உறிஞ்சுவதற்கேற்பவும், நீள் துருவு தாடைகள் (maxillae), சுருளக் கூடிய உறிஞ்சு குழலாக (proboscis) மாறியும் அமைந்திருக்கும். பிற வாயுறுப்புகள் சுருங்கி இருக்கும். ஆனால், கீழுதட்டுத் (Iabium) தடிப்புகள் நன்றாக வளர்ந்திருக்கும். முன் மார்புக் (prothorax) கண்டம், நடு மார்புக் கண்டத்துடன் (mesothorax) இணைந்திருக்கும். நிறை உரு மாற்றம் நிகழும். இதன் இளவுயிரிகளுக்குக் கம்பளிப் புழு என்று பெயர். இளவுயிரியில் மூன்று இணை மார்புக் கால்களும், ஐந்து இணை வயிற்றுக் கால்களும், கடிக்கும் வாயுறுப்புகளும் காணப்படும். கூட்டுப் புழுப் பருவம் கக்கூன் (cocoon) எனும் உறைகளாலோ, மண் கூடுகளாலோ மூடப்பட்டிருக்கும். பூச்சி இனங்களின் மிகப் பெரிய வரிசையில், லெப்பிடாப்டிரா வரிசையும் ஒன்றாகும். இதில், ஏறத்தாழ 1,05,000 சிற்றினங்கள் வரை காணப் படுகின்றன. இவ்வரிசையில் வரும் பூச்சியினங்கள், பொருளாதாரச் சிறப்புடையவை. இப்பூச்சிகளின் இளவுயிரிகள் பல்வேறு தாவரங்களின் இலைகளையும், சேமித்து வைக்கப்பட்டிருக்கும் உணவு தானியங்களையும் உண்டு வாழ்கின்றன. சில முதிர்ந்த அந்துப் பூச்சிகள் பழச் சாற்றை உறிஞ்சி வாழ்வதன் மூலம், மனிதனுடைய உணவுப் பொருளான பழத்தைச் சேதப் படுத்துகின்றன. ஒரு சில அந்தி மற்றும் வண்ணத்துப் பூச்சிகளின் இளவுயிரிகள், செதில் பூச்சிகளையும், உணவுப் பூச்சிகளையும் உண்டு அழிப்பதன் மூலம், மனிதனுக்கு நன்மையை விளைவிக்கின்றன. பூக்களின் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவி புரிவதன் மூலம், இப்பூச்சிகள் மலர்களுக்கு மட்டுமல்லாமல், மக்களுக்கும் உதவுகின்றன. பட்டுப் புழுக்களிலிருந்து பெறப்படும் பட்டு இழைகள், மனிதனுக்குத் தேவையான ஆடைகள் நெய்வதற்குப் பயன் படுகின்றன. இப்பூச்சிகள் அழகாக இருப்பதால், ஓவியங்கள் வரைவதற்கும், பல்வேறு வேலைப்பாடுகளை உருவாக்குவதற்கும் பயன்படுகின்றன. வகைப்பாடு பெண் இனப் பெருக்க மண்டலத்தை அடிப்படையாகக் கொண்டு லெப்பிடாப்டிரா வரிசையை 3 துணை வரிசைகளாகப் பிரிக்கலாம். அவை சிக்லோடிரா (Zeugloptera), மானோட்ரைசியா (Monotrysia), டைட்ரைசியா (Ditrysia) எனப்படும். சிக்லோடிரா. அண்ட நாளமும், மலக் குடலும், ஒரே பொதுத் துளை பெற்றிருக்கும். இளவுயிரிகளும், முதிர்ந்த உயிரிகளும், அரை தாடைகளின் உதவியால், உணவை உட்கொள்ளும். துருவு தாடை (maxilla) நன்கு வளர்ச்சியுற்ற லெசினியாவுடன் இருக்கும். இளவுயிரிகள் எட்டு இணை வயிற்றுக் கால்களை உடையவை. மானோட்ரைசியா. இனப் பெருக்கத் துளைகள் ஒன்றோ, அரிதாக இரண்டோ இருக்கும். இத்துளை 9ஆம் வயிற்றுப் புறத் தட்டில் திறந்திருக்கும். முதிர் உயிரியில் செயல்படும் அரை தாடைகள் இரா. லெசினியா இல்லாத துருவு தாடையையும், ஏழு இணைகளுக்கு மிகாத இளவுயிரிகள், வயிற்றுக் கால்களையும் பெற்றிருக்கும். முதிர் உயிரிகள், கூர்மையான இறக்கைகளை உடையவை. டைட்ரைசியா. இனப் பெருக்கப் பையிலிருந்து தோன்றும் ஒரு துளை 8ஆம் வயிற்றுப் புறத் தட்டிலும், முட்டைகளை வெளியேற்றும் மற்றொரு துளை 9ஆம் வயிற்றுப் புறத் தட்டிலும் தனித் தனியே திறக்கும். முதிர் உயிரியில் செயல்படும் அரை தாடைகள் இரா. லெசினியா இல்லாத துருவு தாடையும், ஐந்து இணைகளுக்கு மிகாத இளவுயிரிகள் முன் கால்களையும் பெற்றிருக்கும். இறக்கைகளில் கூர்மை இல்லை. முன் இறக்கையும், பின் இறக்கையும் ஒத்த அமைப்புடையவை அல்ல. இறக்கைகளின் அமைப்பை வைத்து ஒத்த இறக்கை அமைப்புடையவை (homoneura), வேறு பட்ட இறக்கை அமைப்புடையவை (heteroneura) என்ற இரு துணை வரிசைகளாகப் பிரிக்கலாம். முதல் வகைக்குக் கரப்பான்பூச்சி போன்று கடிக்கும் வாயுறுப்புடைய ஆஸ்திரேலியாவில் காணப்படும் கூஸ்டு அந்திப் பூச்சிகளையும் (ghost moth), இரண்டாம் வகைக்குப் பெரும்பாலான அந்திப் பூச்சிகளையும், வண்ணத்துப் பூச்சிகளையும் சான்றாகக் கூறலாம். வண்ணத்துப் பூச்சியின் வெளித் தோற்றம். முதிர் உயிரிகள் தலைப் பகுதியில் இரண்டு நீண்ட குச்சி வடிவ உணர் கொம்புகளையும், இரண்டு கூட்டுக் கண்களையும், இரண்டு எளிய கண்களையும் பெற்றிருக்கும். வாயுறுப்பு பூக்களிலுள்ள தேனை உறிஞ்சுவதற்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். அரை தாடைகள் இல்லை. முதல் துருவு தாடை துதிக்கை வடிவில் உறிஞ்சு குழலாக மாற்றமடைந்து, பயன்படா நிலையில் சுருண்டு காணப்படும். கீழுதடு குறைவுற்றும், அதன் இணைப்புடை நீட்சிகள் (palps) குறுகியும் காணப்படும். வலிமை குன்றிய 3 இணைக் கால்கள் மார்புப் பகுதியில் காணப்படும். இக்கால்கள் நடப்பதற்கோ, ஓடுவதற்கோ பயன்படுவதில்லை. மாறாக, நிற்பதற்கு மட்டுமே பயன்படுகின்றன. இரண்டு இணை இறக்கைகளைக் கொண்டு பறக்கும் தன்மையுடையது. நிற்கும் போது, இறக்கைகள் செங்குத்தாக மடங்கிக் காணப்படும். இத்தன்மையில், இது அந்திப் பூச்சிகளிலிருந்து வேறுபட்டும் காணப்படுகிறது. இறக்கைகள் கெட்டியாக ஒளி ஊடுருவ முடியாதவாறு, ஒன்றின் மீது ஒன்றாக, நுண் செதில்களால் மூடப் பெற்றிருக்கும். இவற்றில் நிறத் துகள் இருப்பதால், பல வித வண்ண அமைப்புகள் ஏற்படுகின்றன. வாழ்க்கை வரலாறு. இதனுடைய வாழ்க்கைச் சுழற்சியில், நான்கு பருவங்கள் காணப் படுகின்றன. அவை, முட்டைப் பருவம், கம்பளிப் புழு அல்லது இளவுயிரிப் பருவம், கூட்டுப் புழுப் பருவம், முதிர் உயிரிப் (adult or imago) பருவம் எனப்படும். முட்டைப் பருவம். முதிர்ச்சி அடைந்த பெண் வண்ணத்துப் பூச்சிகள், இலைகளின் அடிப் பகுதியில் தங்களின் கருவுற்ற முட்டைகளை இட்டு, அவற்றைத் தம் உடலிலிருந்து சுரக்கும் நீர்மத்தால், ஒட்டச் செய்கின்றன. கரு முட்டை வளர்ச்சி அடைந்து, கம்பளிப் புழுவாக வெளி வருகிறது. கம்பளிப் புழுப் பருவம். கம்பளிப் புழுவின் உடல் மெல்லிய, மென்மையான உறையால் மூடப் பட்டு, நீண்டு காணப்படும். இதற்கு, ஒரு தெளிவான தலையும், தொடர்ந்து மூன்று மார்புக் கண்டங்களும், 10 வயிற்றுக் கண்டங்களும் உள்ளன. தலையில் ஒரு தடித்த உறையும், அதில் இரண்டு உணர் கொம்புகளும், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு குழுவாக அமைந்த எளிய கண்களும் இருக்கும். தலையின் கீழ்ப் புறத்தில் கடிக்கும் தன்மையுள்ள வாயும், பற்களுடன் கூடிய 2 அரை தாடைகளும், இரண்டு துருவு தாடைகளும், ஒரு கீழுதடும் அமைந்திருக்கும். கீழுதட்டுக்கு அருகில், பட்டுச் சுரப்பியின் (silk gland) துளை காணப் படுகிறது. மார்புக் கண்டங்களில் மூன்று இரட்டை இணைப்புடைய உண்மையான கால்களும் (true legs) 3. 4. 5. 6 5 மற்றும் 10ஆம் வயிற்றுக் கண்டங்கள் ஒவ்வொன்றிலும், ஓர் இரட்டை இணைப்பற்ற மொட்டையான சதைப்புடைய முன் கால்களும் (pro legs) உள்ளன. 10ஆம் வயிற்றுக் கண்டத்தில் காணப்படும் முன் கால்களுக்குப் புணர்ச்சி உறுப்புகள் (claspers) என்றும் பெயருண்டு. ஒவ்வொரு முன் காலிலும், ஓர் உறையாலான அடிப் பகுதியும், காக்சா (coxa) என்னும் நடுப் பகுதியும், உள்ளிழுக்கக் கூடிய பிளாண்டா (planta) என்னும் நுனிப் பகுதியும் இருக்கும். மலப் புழை, உடலின் பின் முனையில் காணப்படும். சுவாசப் புழைகள், முன் மார்புக் கண்டத்தில் ஓர் இணையும், முதல் எட்டு வயிற்றுக் கண்டங்களில் எட்டு இணையும் காணப்படுகின்றன. இளவுயிரியின் உணவுப் பழக்கம், வெளி அமைப்பு, உள் அமைப்புப் போன்றவை முதிர் உயிரியிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கும். இளவுயிரி தன் கடிக்கும் வாயுறுப்பின் உதவியால், தாவரங்களின் இலையை மிக வேகமாகவும், அதிகமாகவும் உட்கொண்டு, நான்கு முறை தோலுரித்து, முழு வளர்ச்சியுற்ற பின், இறுதியில் கூட்டுப் புழுப் பருவத்தை அடைகிறது. இப்பருவத்தை அடைவதற்கு முன்பு, இளவுயிரிகள் உணவு உண்பதை நிறுத்திக் கொண்டு, தமக்குத் தகுந்த இடத்தை இலையில் தேர்வு செய்து, புணர்ச்சி உறுப்பின் மூலம், இலையில் ஒட்டிய பிறகு, பட்டுச் சுரப்பியிலிருந்து சுரக்கும் நீர்மத்தைக் கொண்டு, பாதுகாப்பான பட்டுக் கூடுகளை அமைத்து, அதில் கூட்டுப் புழுக் காலத்தைக் கழிக்கின்றன. அப்போது, கூட்டுப் புழுவின் மேற்புறம் கடினமான ஓர் உறையினால், மூடப் பட்டிருக்கும். இப்பருவத்தில், கூட்டுப் புழு உணவு உட்கொள்வதில்லை. உணவுக் குழலின் நடுப் பகுதி, நரம்பு மண்டலம், சுவாச மண்டலம் போன்றவை நீங்கலாகப் பிற திசுக்கள் இப்பருவத்தில் சிதைந்து, புதிய திசுக்களை உண்டாக்குகின்றன. கூட்டுப் புழுவின் உள், வெளி அமைப்புகள் நன்கு மாற்றமடைந்தவுடன், கூட்டை உடைத்துக் கொண்டு, இறக்கைகளுடன் கூடிய முதிர் பூச்சியாக வெளி வரும். ஒரு வார காலம் முட்டை நிலையிலும், 4 வார காலம் கம்பளிப் புழு நிலையிலும், 10–12 நாள் வரை கூட்டுப் புழு நிலையிலும் இருந்து, வண்ணத்துப் பூச்சிகள் தம் வளர் மாற்றத்தை அடைகின்றன. இவ்வளர் மாற்ற காலம் சூழ்நிலை, உணவு போன்றவற்றைப் பொறுத்து, வண்ணத்துப் பூச்சிக்கு வண்ணத்துப் பூச்சி வேறுபட்டுக் காணப் படுகிறது. வண்ணத்துப் பூச்சியின் வாழ் நாளை வரையறுக்க முடியாது. அது, ஒரு சில நாள் முதல் பல மாதங்கள் வரை நீடிக்கலாம். அனைத்து வண்ணத்துப் பூச்சிகளும், பகலில் திரியக் கூடியவை. இந்தியாவில் காணப் படும் வண்ணத்துப் பூச்சிகளுக்குப் பேப்பிலியோ, டைனாயிஸ் போன்றவற்றைக் காட்டாகக் கூறலாம். அந்திப் பூச்சிகள். வண்ணத்துப் பூச்சிகளைப் போன்றே, இப்பூச்சிகளுக்கும், செதில்களையுடைய இறக்கைகள் காணப்படுகின்றன. முதிர் உயிரியின் வாயுறுப்புகள் நீர்ம உணவை உறிஞ்சிக் குடிப்பதற்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். இதனுடைய வளர்ச்சியின் போது, முழு வளர் உருமாற்றம் நிகழ்கிறது. மங்கலான நிறமுடைய இவற்றை, இரவில் மட்டுமே வெளியில் காணலாம். தரையில் நிற்கும் போது, இறக்கைகள் பின்னோக்கி மடிந்தும், கூர்மையற்ற உணர் கொம்பில் இறகுகளும் காணப்படும். கூட்டுப் புழுப் பருவத்தைக் கக்கூன் என்னும் கூட்டில் கழிக்கும். பெரிய அந்தி பூச்சிகளுக்கு, அக்ரன்ஸ்யா ஸ்டைஸ் (Achaerontia styx), ஆக்டியஸ் செலின் (Actias selene), டேயிலிபில்லா நிரியி (Deilephila nerii), ஹெர்ஸ் கன்வலுலி (Herse convoluli) போன்றவற்றை எடுத்துக் காட்டாகக் கூறலாம். அந்திப் பூச்சிகளின் வாழ்க்கை வரலாற்றிற்குப் பட்டுப் புழுவின் (Bombyx mori) வரலாற்றை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறலாம். வாழ்க்கை வரலாறு. இரு பால் உயிரிகளான பட்டுப் புழுக்களில் புணர்ச்சிக்குப் பிறகே, உட்கருவுறுதல் நடை பெறுகிறது. கருவுற்ற சிறு நேரத்திற்குள் 400–500 முட்டைகள் வரை, மல்பரி இலையின் மீது, ஒரு பெண் பட்டுப் புழு இட்டு, அம்முட்டைகளை இலையுடன் ஓட்டச் செய்யும். இம்முட்டை உருண்டை வடிவில், மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்நிறம் நாளுக்கு நாள் மாற்றம் அடையும். முட்டையிட்ட 10 நாளுக்குப் பிறகு, முட்டை பொரிந்து, 6 மி.மீ. நீளமுள்ள கம்பளிப் புழுவாக வெளி வரும். மஞ்சள் கலந்த வெள்ளை நிறமுள்ள இப்புழுவிற்கு, 12 கண்டங்கள் இருக்கும். தலையில், அரை தாடையுடைய வாயுறுப்புகள் காணப்படும். வண்ணத்துப் பூச்சியில் உள்ளது போலவே, இதிலும் சுவாசப் புழைகளும், கால்களும் உள்ளன. 8ஆம் வயிற்றுக் கண்டத்தின் மேற்புறத்தில் ஒரு கொம்பு இருக்கும். இளவுயிரிகள் மல்பரி இலைக் குருத்துகளையும், வளர்ந்த இளவுயிரிகள் முதிர்ந்த இலைகளையும் வேகமாகவும், அதிகமாகவும் உட்கொள்கின்றன. பொரிந்த 21–25 நாளுக்குள் கம்பளிப் புழு நான்கு முறை தோலுரித்து, 7.5 செ.மீ. நீளம் வரை வளரும். அதன் பின் உண்பதை விடுத்து, மல்பரி இலையின் ஒரு மூலைக்கு நகர்ந்து, பட்டுச் கரப்பித் துளை வழியாக வெளி வரும். 1000–1200 மீட்டர் நீளமுள்ள நீர்ம இழையைக் கொண்டு, மூன்று நாளுக்குள் கக்கூன் என்னும் பட்டுக் கூட்டைத் தன்னைச் சுற்றி அமைத்து, அதில் தன்னுடைய கூட்டுப் புழு வாழ்க்கையைக் கழிக்கிறது. நீர்ம நிலையில் வெளி வந்த இழைகள் காற்றில் உலர்ந்து, பட்டு இழைகளாக உருவாகின்றன. 10–12 நாள் வரை தொடரும் கூட்டுப் புழுப் பருவத்தில், வயிற்றுப் பகுதியில் அமைந்திருந்த கால்கள் மறைந்து, மார்புப் பகுதியில் 2 இரட்டை இறக்கைகள் தோன்ற, கூட்டை வெட்டிக் கொண்டு, முதிர்ந்த பட்டுப் பூச்சியாக வெளி வரும். கூட்டிலிருந்து வெளி வந்த பட்டுப் பூச்சிகள் புணர்ச்சியில் ஈடுபட்டு, முட்டைகளை இட்ட பின், இறந்து விடுகின்றன. பட்டுப் பூச்சிகளில், 6 வகைகள் காணப் படுகின்றன. அவை மியூகா (Muga or Antheraea assamensis), ஏரி (Eri or Attacus rechinil), ஓக் (oak or Antheraea pernyl) இராட்சஸ (Giant or Attacus alias), டாசர் (Tasar or Antheraea paphia), மல்பரி (mulberry or Bombyx mori) பட்டுப் பூச்சிகள் எனப்படும். மேலே குறிப்பிட்ட ஆறு வகைகளில், மல்பரி, எரி, மியூகா, டாசர் என்ற நான்கு வகைகளே பட்டு உற்பத்தியில் பயன்படுகின்றன. இவ்வரிசையில் வரும் முதிர் பூச்சிகளில் பெரும்பாலானவை, நன்மை பயக்கக் கூடியவையாக இருந்த போதும், இவற்றின் இளவுயிரிகள் நெல், சோளம், கரும்பு, மணிலா, உருளை, கத்தரி, முட்டைக் கோஸ், பருத்தி, திராட்சை போன்ற பயிர் வகைகளை மிகவும் பாதிக்கின்றன. —இரா.பக்தவச்சலம் நூலோதி. M. Ekambaranatha Ayyar and T.N. Ananthakrishnan, A Manual of Zoology, Vol-I, Part II, S. Viswanathan Pvt. Ltd, Madras, 1986; K.K. Nayar, et. al., General and Applied Entomology, Tata McGraw-Hill Publishing Company Ltd., New Delhi, 1983. செதுக்கம் காண்க: துணிப்பு <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்த பக்கத்தில் ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> செந்தடிப்பு பெரும்பாலும் உடலின் இணைப்புத் திசுக்கள் பாதிக்கப் படும் இந்த நோயில், எந்த உறுப்பும் பாதிக்கப் படலாம். இந்நோய் ஏறி இறங்கும் தன்மையுடையது. செந்தடிப்பு (lupus erythyomatous) பெரும்பாலும் 20–45 வயதுப் பெண்களையே தாக்குகிறது. ஆண்களை விடப் பெண்களில் மிகுதியாகக் காணப்படும். இந்நோய்க் காரணம் புலனாகவில்லை. எனினும், நுண்ணுயிர்த் தாக்கம், அறுவை, காயம், உட்செல்லும் மருந்து போன்றவை இந்நோயை ஊக்குவிக்கலாம். பலர் இதைத் தன்தடுப்பாற்றல் நோய் (auto-immune disease) எனக் கருதுகின்றனர். இதில் தோன்றும் எதிர்ப் பொருள்கள், குருதியின் சிவப்பணு, வெள்ளணு, தட்டணு, குருதியை உறையச் செய்யும் பகுதி, சிறுநீரகம், இதயம், கல்லீரல் ஆகியவற்றுடன் எதிர் வினை புரிகின்றன. இந்நோய் மெதுவாகவே தொடங்குகிறது. சூரிய ஒளி, புற ஊதாக் கதிர், நுண்ணுயிர்ப் பாதிப்பு, பேறு காலம், உணர்ச்சி நிலை ஆகியவற்றால், நோய் தீவிரம் அடைகிறது. இதனால், காய்ச்சல், இதயத் துடிப்பு, சோர்வு, எடை இழப்பு ஆகியவை தோன்றுகின்றன. தசை எலும்புகள் பாதிக்கப்படல், இதய உறை அழற்சி, சிறு நீரக அழற்சி, நுரையீரல் உறையில் நீர்மத் தேக்கம் ஆகியவை தோன்றலாம். 80% நோயினரின் தோலில் ஏற்படும் பொரிப்பு குறிப்பிடத் தக்கது. சிவப்பான பொரிப்புகள் முகம், காது, தாடை, கழுத்து, மார்பின் மேற்பகுதி, தோள் பட்டை, முன் கை, பாதம் ஆகியவற்றில் தோன்றுகின்றன. முகத்தில் தோன்றும் தோல் நைவுகள், வண்ணத்துப் பூச்சி போன்ற தோற்றமுடன் இரண்டு பகுதிகளிலும் காணப்படும். இதன் ஓர விளிம்புகள் சிவந்தும், தடித்தும், நடுப் பகுதி வெளிறியும் காணப் படும். செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டால், பசியின்மை, குமட்டல், வாந்தி, வலி ஆகியவை தோன்றும். கல்லீரலும், மண்ணீரலும் வீங்கிக் காணப்படும். நடு நரம்பு மண்டலம் பாதிக்கப் படும் போது, பக்க வாதம், வலிப்பு, கபால நரம்புச் செயலிழப்பு ஆகியவை தோன்றலாம். உடலின் பல இடங்களில் நிணக் கணுக்கள் வீங்கிச் சிவந்து காணப் படுகின்றன. செந்தடிப்புச் செல் ஆய்வு (L. E. cell test) நோய் அறுதியிடலில் உதவுகிறது. நோய் நுண்ணுயிரிகளைக் குருதியிலோ, எலும்பு மஜ்ஜையிலோ காணலாம். நியூட்ரோஃபிலின், சைடோபிளாசத்தில் தளமேற்பிப் (busophil) பொருள் ஆகியவற்றைக் காணலாம். செல்லின் நியூக்ளியஸ் ஓரமாகத் தள்ளப் படுகிறது. 80% நோயினரில் இந்தச் செல்லைக் காணலாம். வெள்ளணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. தேவையிருந்தால், பாதிக்கப்பட்ட உறுப்புகளின் பிணிக் கூற்றாய்வு செய்து, நோயை உறுதி செய்யலாம். பாதிக்கப்பட்ட உறுப்புகளின் நிலையைப் பொறுத்து நோயின் முன் கணிப்பு அமைகிறது. மருத்துவம். அறிகுறிகளைப் பொறுத்தே, மருத்துவம் அமைகிறது. ஓய்வு, ஊட்டப் பொருள், வைட்டமின் ஆகியன பயன் தரும். குளோரோகுயின் 250 மி.கி. அலகு அல்லது காமாக்குயின் 200 மி.கி. அலகில் நாளும் 3 வேளை கொடுத்தால், பயன் கிடைக்கிறது. கார்டிகோஸ்டீராய்டுகள், ஐசோ தயோப்பிரின், சைக்ளோ பாஸ்ஃபமைடு போன்ற பல மருந்துகளும் கொடுக்கப் படுகின்றன. —மு. கி.பழநியப்பன் நூலோதி. P. S. Shankar, A. P. I. Text Book of Medicine, Third Edition, API Publishers, Bombay, 1979 செந்தர நேரம் காண்க: திட்ட நேரம் செந்நட்டு இது நான்கு சிற்றினங்களைக் கொண்ட கேஸ்டேனியா (Castanea) என்ற இனத்தைக் குறிப்பதாகும். இனிப்புச் செந்நட்டு (sweet chestnut) பொருளாதாரச் சிறப்பு வாய்ந்தது. இதன் தாவரவியல் பெயர் கேஸ்டேனியா சட்டைவா (Castanea sativa). இது ஃபேகேசி எனப்படும் இரு வித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. கேஸ்டேனியா இனத்தில் காணப்படும் 40 சிற்றினங்களில் சில சிற்றினங்களே பொருளாதாரச் சிறப்பு வாய்ந்தவை. அழகுக்காகவும், கட்டைகளுக்காகவும் வளர்க்கப்படும் இவை, இலையுதிர் மரங்களாகும். தாயகம். இனிப்புச் செந்நட்டு யுரேஷியா, வட ஆஃப்ரிக்கா ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டது. இது மத்திய தரைக் கடல் பகுதியில் தோன்றி, அங்கிருந்து ரோமானியர்களால் ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப் பட்டது. கேஸ்டேனியா சிற்றினங்கள், வட கோளத்தின் மித வெப்ப நாடுகளில் காணப் படுகின்றன. இனிப்புச் செந்நட்டு 1800ஆம் ஆண்டு அமெரிக்காவில் புகுத்தப் பட்டது. இச்சிற்றினம் ஃபிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் காணப்படுவதால், இதற்கு அந்தந்த வட்டாரப் பெயர்களுண்டு. இவை ஐரோப்பிய, ஃபிரான்ஸ்–ஸ்பானிய இத்தாலிய செந்நட்டு எனப் படும். இனிப்புச் செந்நட்டு என்பது ஆங்கிலக் கவிகளால் சூட்டப்பட்ட பெயராகும். வகைப்பாடு. இனிப்புச் செந்நட்டைத் தவிர, இக்குடும்பத்தில் பல செந்நட்டுகளுண்டு. அமெரிக்க–செந்நட்டு (C.dentata), சீன–செந்தட்டு (C.mollissima), ஐப்பானிய–செந்தட்டு (C.orenta) ஆகியவை பொருளாதாரச் சிறப்பு வாய்ந்தவை. இங்கிலாந்தில் காணப்படும் குதிரைச் செந்நட்டு (horse chestnut) வேறொரு குடும்பத்தைச் சேர்ந்ததாகும். வயதான இனிப்புச் செந்நட்டை, மரப் பட்டையின் அமைப்பைக் கொண்டே இனம் காணலாம். மரப் பட்டைகளில் மேல் நோக்கிச் சுழல் முறையில் அமைந்துள்ள வெடிப்புகள், இதன் சிறப்புப் பண்பாகும். பொதுவாக, செந்நட்டின் காய்களில் 3 அல்லது 4 கொட்டைகள் காணப்படும். ஆனால், ஒற்றைக் கொட்டை கொண்ட இனங்களைச் சின்கோபின்ஸ் (chinquapins) என்பர். பெரும்பாலும், செந்நட்டுகள் நீண்ட காலம் உயிர் வாழக் கூடிய மரங்களாகும். சிசிலி தீவில் காணப்படும் ஒரு மரம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இம்மரம் 1000 ஆண்டு வாழ்ந்ததோடன்றி, ஒரு காலத்தில் 100 போர் வீரர்களைக் கடும் சூறாவளிப் புயல் காற்றிலிருந்தும் பாதுகாத்ததாக, வரலாற்றின் மூலம் அறியப் படுகிறது. வளரியல்பு. செந்நட்டுகள் பொதுவாக, உயரமான கிளை மிகுந்த இலையுதிர் மரங்களாகும். ஏறத் தாழ, 30 மீ. உயரம் வளரும். செந்நட்டில் இரு வகைக் கிளைகள் தோன்றும். நீண்ட கிளைகள் நுனி மொட்டுகளுடன் காணப்படும். சிறு பக்கக் கிளைகள் (spur shoots) நுனி மொட்டற்றுக் காணப்படும். பக்க மொட்டுகள் பனிக் காலத்தில், 3 அல்லது 4 செதில் இலைகளால் பாதுகாக்கப்படும். இலைகள். தனியிலைகள், மாற்றிலையடுக்கு அமைப்பு இரு வரிசைகளில் காணப்படும். இலையடிச் செதில்கள் மொட்டுப் பாதுகாப்பில் பங்கு பெறுகின்றன. இலைப் பரப்பு நீள் முட்டை அல்லது ஈட்டி முனை வடிவம் கொண்டது. விளிம்பு கூரானது. மஞ்சரி. மலர்கள் ஒரு பால் பூக்கள், மஞ்சரிகளிலும் ஆண், பெண் என்று இரு வகை காணப்படும். இவை ஓரில்ல (monoecious) வகையாகும். ஒரே மரத்தில் இரு வகைப் பூக்களும் காணப்படும். ஆண் மஞ்சரி, சிறு கிளைகளின் கீழிலை அல்லது செதில் இலைகளின் இலைக் கோணத்தில் தோன்றும். இவை 15–20 செ.மீ. நீளமுள்ள நீண்ட கதிர் போலிருக்கும். இவற்றில், ஆண் மலர்கள் 3–7 சேர்ந்து, சைம் (cyme) அமைப்பில் காணப்படும். ஒவ்வொரு சைம் அமைப்பைச் சுற்றியும், பூக்காம்புச் செதில்களுண்டு. பெருவாரியான செந்நட்டுகளில் பெண் மலர்கள், ஆண் மஞ்சரியின் அடிப் பகுதியில் தோன்றும் (androgynous). ஆண் மலர். அல்லிகளற்றது. புல்லி வட்டம் 6 ஆகப் பிளவு பட்டிருக்கும். மகரந்தத் தாள்கள் 10–20 வரை ஒவ்வொரு மலரிலும் காணப்படும்.பெண் மலர். பொதுவாக 3 மலர்கள் சேர்ந்து, காணப்படும். இவற்றைச் சூழ்ந்து, பூவடிச் செதில்கள் காணப்படுகின்றன. ஒன்றோடொன்று இணைந்து, கிண்ணம் போன்றிருக்கும். தொடக்க நிலையில், பள பளப்பாகச் சதைப் பற்றுடன் பச்சையாகக் காணப் படும்; பிறகு, கெட்டியாக மாறி விடும் இது முள்களைக் கொண்டது. முள்கள் பொதுவாகக் கொத்துக் கொத்தாகக் காணப்படும். முள்களோடு கூடிய மேலுறையை உமி (husk) என்பர். பெண் மலரில் புல்லி வட்டம் மட்டுமே காணப்படும். அது 6 ஆகப் பிளவு பட்டிருக்கும். சூலகம். சூலகத் தண்டு 6–9 ஆகப் பிளவு பட்டிருக்கும். புல்லி வட்டம் சூல் பையோடு இணைந்திருக்கும். சூல் பை 6 சூலறைகளைக் கொண்டது. ஒவ்வோர் அறையிலும் 2 தொங்கும் சூல்களுண்டு. கனி. உலர் கனி; இதைக் கொட்டை என்பர். செந்நட்டில் 3 கொட்டைகள் முள்ளோடு கூடிய உறையால் சூழப்பட்டிருக்கும். முதலில் கொட்டைகளை முழுவதுமாக மூடியுள்ள உறை, கொட்டைகள் முற்றியதும், இரண்டாகவோ, நான்காகவோ பிளவு படும். இதன் மூலம் கொட்டைகள் வெளிப் படும். வளர் சூழ்நிலை. ஐரோப்பாவில், எந்தப் பயிரும் வளர முடியாத வறண்ட மலைச் சரிவுகளில் செந்நட்டுப் பயிரிடப்படும். இம்மரங்களில், கனிகள் தோன்ற, குறிப்பிட்ட வெப்பம் தேவைப் படுகிறது. இனிப்புச் செந்நட்டுகள் இங்கிலாந்தில் புகுத்தப் பட்ட போதும், அங்குள்ள குளிரால் அவை கனிகளைக் கொடுப்பதில்லை. இந்தியாவில் இனிப்புச் செந்நட்டு இமயமலைச் சாரல், காசிக் குன்று, பஞ்சாப் ஆகிய இடங்களில் பயிரிடப்படுகிறது. மகரந்தச் சேர்க்கை. பொதுவாக ஃபேகேசி குடும்பத் தாவரங்களான ஓக், பீச், பிரிச் முதலியவை காற்று நாட்ட வகைகளாகும். செந்நட்டு, பூச்சி நாட்டம் கொண்டதாகும். இதன் ஆண் மஞ்சரி, செங்குத்தாக அல்லது சற்றே சாய்ந்து காணப்படும். ஆண் மலர்களின் புல்லி வட்டம், மகரந்தத் தாள்கள் மஞ்சள் வண்ணத்துடனும், நறுமணத்துடனும் காணப்படுவதால், பூச்சிகள் மரங்களை நாடி வருவதுண்டு. பெண் மலரில்,சூலகத் தண்டுகள் தடிப்பாக, பசையோடு கூடிய நுனியைக் கொண்டமையால், பூச்சிகள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெற வழியேற்படுகிறது. சூல் பையில், பல சூல்கள் இருந்த போதும், ஒரேயொரு சூல் மட்டுமே விதையாக மாறுவதால், ஒரு மலருக்கு ஒரு விதை எனக் காணப்படுகிறது. இம்மரங்கள் ஜூன் மாதத்தில் மலரும். அக்டோபர் மாதத்தில், காய்கள் வெடித்துக் கொட்டைகள் வெளிப்படும். உட்கூட்டுப் பொருள். செந்நட்டு ஏனைய வணிகக் கொட்டைகளிலிருந்து வேறுபடுவதற்குக் காரணம், இவற்றில் மிகுந்த மாவுப் பொருள்களும் குறைந்த புரோட்டீன், கொழுப்புகளும் இருப்பதேயாகும். செந்நட்டுக் கொட்டையிலுள்ள பொருள்கள்: நீர் 29, மாவுப் பொருள்கள் 33%, சர்க்கரை 22%, புரோட்டின் 11%, கொழுப்பு 2%, சாம்பல் சத்து 3%. சாகுபடி. பொதுவாக விதைகள் பாத்தியில் ஊன்றப் பட்ட பின்பு, வளர்ந்த நாற்றே நடப்படும். பனிக் காலத்தில் எலி, அணில், முயல் இவற்றின் தொல்லை குறைவானதால், கொட்டைகளை அந்தப் பருவங்களில், பாத்திகளில் ஊன்றுவர். அவை முளைத்து ஓராண்டு ஆன பிறகு, இளவேனிற் காலத்தில், தோட்டங்களில் நாற்றுக்கு நாற்று 2 மீ. இடைவெளி இருக்கும்படி நடுவர். கொட்டைகளுக்காக வளர்க்கப்படும் இனங்களை ஒட்டுக் கட்டுதல் மூலம் மேம்பாடடையச் செய்வர். கட்டைகளுக்காகப் பயிரிடப்படும் மரங்கள் நட்ட, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, தரைமட்டத்தில் வெட்டப்படும். வெட்டப் பட்ட அடிக் கட்டைகளிலிருந்து புதுக் குருத்துகள் முளைக்கும். இவை வளர்ந்து, 10–15 செ.மீ. கனமுள்ள கம்புகளாக மாற, 10–15 ஆண்டுகள் தேவைப்படும். அவற்றை வெட்டிப் பயன்படுத்துவர். பயன். செந்நட்டு மரங்கள் கொட்டைகளுக்கும், கட்டைகளுக்கும் பயிரிடப்படுகின்றன. செந்நட்டு உருட்டுக் கட்டைகளை வேளிலி, பந்தல், கொடிக்கால் போன்றவற்றுக்குப் பயன்படுத்துவர், கட்டைகள் வெயில் பட்டால் வெடித்து விடும். ஆகையால், வீட்டு வேலைக்குப் பயன்படுத்துவதில்லை. கள்ளிப் பெட்டி, முரட்டு நாற்காலி போன்றவை செய்யப் பயன்படும். ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் செந்நட்டுக் கொட்டைகளைக் காய்கறிகளாகப் பயன் படுத்துகின்றனர். காய்ந்த கொட்டைகளை அரைத்துப் பொடி செய்த மாவினால் திண்பண்டம் தயாரிப்பர். செந்நட்டுத் தோல் மிகவும் கடினமாக இருக்குமாதலால், கொட்டையை முதலில் வேக வைத்து, மென்மையான பின் மேலுறையை நீக்கி விட்டு, மீண்டும் வேக வைத்துப் பயன்படுத்துவர். பிரெஞ்சு சிறப்பு உணவுப் பொருளான மேருன்ஸ்க்ளேஸ் (marronsglaces) என்பது, செந்நட்டிலிருந்து தயாரிக்கப் படுவதாகும். கொட்டைகள் கால் நடைத் தீவனமாகவும் பயன்படுகின்றன. இலை, பட்டை, கட்டை இவற்றில் டானின் உள்ளமையால் (8–13% ) கனமான தோலைப் பதனிட, இவற்றைப் பயன்படுத்துவர். இங்கிலாந்தில் செந்நட்டை, கட்டைகளாகப் பயன்படுத்துவர். செந்நட்டைக் குச்சி அல்லது மொட்டு ஒட்டுக் கட்டுதல், மூலம், மேம்பாடடையச் செய்கின்றனர். தேர்வு மூலம் பெரிய கொட்டைகளையுடைய வகைகளே பயிரிடப்படுகின்றன. முழுக் கொட்டைகளைச் சர்க்கரைப் பாகில் ஊற வைத்துப் பயன்படுத்துவர். பொதுவாகக் கொட்டைகளை வறுத்தும், வேக வைத்தும், பச்சையாகவும் உண்ணலாம். நோய். செந்நட்டுக் குலை நோய் (Chestnut blights) பெருமளவில் அழிவை விளைவிக்கக் கூடியது. இதற்குக் காரணம் எண்டோதீகா பாரசைடிகா (Endotheca parasitica) என்னும் பூசணமேயாகும். 1900ஆம் ஆண்டு அமெரிக்காவின் பல மாநிலங்களில், செந்நட்டு மரங்கள் அழிந்தன. இப்பூசணம் முதலில் பட்டையைத் தாக்கும். பிறகு, உட்புகுந்து மென்மையான மரப் பகுதியை அடையும். அங்கு, பூசணம் பெருக்கமடைவதால் கட்டைத் திசுக் குழாய்கள் அடை பட்டு விடும். இதனால், வேரிலிருந்து உணவு செல்வது தடைப்பட்டு, மரத்தின் மேற்பகுதி வாடி விடும். இப்பூசணம், ஜப்பானிலிருந்து புகுத்தப்பட்டதாகும். ஐப்பான், சீனாவில் பூசணத் தாக்கம் பெருமளவில் இல்லை. தற்சமயம், அமெரிக்கச் செந்நட்டைச் சீனா அல்லது ஜப்பான் செந்நட்டோடு கலப்புச் செய்து, நோய் எதிர்ப்புப் பண்பு கொண்ட வீரிய வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. —தி.ஸ்ரீ. கணேசன் நூலோதி. S.L. Kochher, Economic Botany in the Tropics, Macmillan India Ltd., Madras, 1981. H.A. Gleason, The National Geography of plants, Columbia University Press, New York, 1964. செந்நாய் நாய்க் குடும்பத்தைச் (canidae) சேர்ந்த செந்நாயை டோல் (dhole) என்றும், காட்டு நாய் என்றும் குறிப்பிடுவர். அடர்ந்த காடுகளில் கூட்டமாக வாழும் செந்நாய்கள், இந்தியா, இந்தோசீனா, ஜாவா, சீனா ஆகிய நாடுகளில் காணப் படுகின்றன. கிழக்கு ஆசியாவில் குவான் அல்பினஸ் அல்பினஸ் (Cuon alpinus alpinus) என்ற சிறப்பினமும், மேற்கு ஆசியாவில் குவான் அல்பினஸ் ஹெஸ்பெரியஸ் (Cuon alpinus hesperius) என்ற சிறப்பினமும் வாழ்கின்றன. இந்தியக் காடுகளில், மூன்று சிறப்பினங்கள் வாழ்கின்றன. குவான் டுக்குனன்சிஸ் (Cuon dukhunensis) என்னும் சிறப்பினத்தைச் சேர்ந்த செந்நாய் கங்கை நதிக் கரையின் தென் பகுதிக் காடுகளிலும், குவான் பிரைமேலஸ் (C.a. primaevus) சிறப்பினம் குமாவோன் (Kumaon) காடுகளிலும், நேபாளம், சிக்கிம், பூடான் நாட்டுக் காடுகளிலும், குவான் லாங்கியர் (C.a. langier) சிறப்பினம் காஷ்மீரக் காடுகளிலும் வாழ்கின்றன. செவ்வண்ணத்தில் காணப்படும் செந்நாயின் வயிற்றுப் பகுதியிலுள்ள மயிர் மஞ்சளாகவோ, அழுக்கடைந்த வெண்மையாகவோ இருக்கும். அடர்த்தியான நடு முதுகு மயிர்க் கற்றை கறுப்பு நிறத்தில் அமைந்துள்ளது. காதுகளின் அகன்ற பகுதி செந்நிறத்தில் இருக்க, கூரிய முனைப் பகுதிகள் கறுப்பாயுள்ளன. 5 அல்லது 6 அங்குல நீளமுள்ள வாலின் முனைப் பகுதியில் பெரும்பாலும் கறுப்பாகவும், சிறிது சாம்பல் நிறமாகவும் உள்ள மயிர்க் கற்றை காணப்படுகிறது. பழுப்பு நிறமுள்ள செந்நாய்க் குட்டிகள், மூன்று மாதத்தில் முதிர்ச்சியடைகின்றன. அப்போது, அவை செந்நிறத்தைப் பெறுகின்றன. வலிமையான கழுத்தையும், மிகப் பெரிய தாடைகளையும் பெற்றுள்ள செந்நாயின் கீழ்த் தாடையில் இரண்டு கடை வாய்ப் பற்கள் இல்லை. வேகமாக ஓடுவதற்கு ஏற்றவாறு, கால்கள் அமைந்துள்ளன. ஆண் நாய் 22 அங்குல உயரமும், பெண் நாய் 20 அங்குல உயரமும் உள்ளவை. செந்நாயின் சராசரி உடல் எடை 37 கி.கி. Page 750 செந்நாய்கள் 5–12 எண்ணிக்கையாகக் கூட்டமாகச் சேர்ந்து வாழ்கின்றன. ஒரு செந்நாய்க் கூட்டத்தில் 20 நாய்கள் வரை இருக்கும் என்றும், ஒரு செந்நாய்க் கூட்டம் பிறிதொரு செந்நாய்க் கூட்டத்துடன் கலப்பதில்லை என்றும் வன விலங்கியல் அறிஞர்கள் கூறுகின்றனர். டேவிட் மேக்டோனால்ட் என்னும் வன விலங்கியலறிஞர் பந்திப்பூர் வன விலங்கு சரணாலயத்தில் 100 செந்நாய்கள் அடங்கிய ஒரு கூட்டத்தைத் தாம் பார்த்ததாகக் கூறுகிறார். தம் வாழிட எல்லையைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்காக, ஒரு கூட்டத்தைச் சேர்ந்த அனைத்துச் செந்நாய்களும் பொதுவான ஓர் இடத்தில் எச்சமிடுகின்றன. ஒரே கூட்டத்தைச் சேர்ந்த நாய்கள் தம் வாழிட எல்லையை அடையாளம் காண்பதற்கும், நுகர்ந்தறியும் பிறிதொரு கூட்டம் அவ்வாழிட எல்லையை விட்டு அகன்று செல்வதற்கும், பொதுவாக எச்சமிடும் இடங்கள் பயன்படுகின்றன. செந்நாய்கள் விலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை உண்கின்றன. சிறு பூச்சிகள், ஊர்வன, காட்டுப் பழங்கள் ஆகியவற்றையும் உண்கின்றன. இறைச்சியைப் பற்களால் மென்று உண்ணாமல், பெரிய துண்டுகளாகவே விழுங்கி விடும் என்றும், அவற்றின் எச்சத்தில் எலும்புகளும், மயிரும் காணப்படும் என்றும் டன்பார் பிராண்டர் (Dunbar Brander), ஜான்சிங் என்னும் வன விலங்கியலறிஞர்கள் கூறுகின்றனர். செந்நாய்கள் கூட்டமாகச் சென்று காட்டெருமை, கட மான், சதுப்பு மான், புள்ளி மான், காட்டுப் பன்றி போன்ற வன விலங்குகளைத் தாக்கிக் கொன்று அவற்றின் இறைச்சியை உண்கின்றன. வலிமையான புலியையும், செந்நாய்கள் தாக்கிக் கொன்று விடுகின்றன என்கிறார் டன்பார் பிராண்டர். சிறுத்தை, கரடி ஆகிய விலங்குகளையும் கொன்று, அவற்றின் இறைச்சியைச் செந்நாய்கள் உண்டன என்று டேவிட் மேக்டோனால்ட் என்பார் குறிப்பிடுகிறார். இவ்வாறு, கொடூரமாகக் கொலை புரியும் செந்நாய்கள் மனிதனைத் தாக்குவதில்லை; ஆனால் வளர்ப்பு நாய்களைத் தாக்கிக் கொன்று விடுகின்றன. செந்நாய்கள் கூட்டமாகத்தான் வேட்டையாடச் செல்லும். தனியொரு நாய் வேட்டையாடும் கட்டாயம் ஏற்படும் போது, வலிமையான, பெரிய விலங்குகளைத் தவிர்த்து எளிதாகத் தாக்கக் கூடிய மான் குட்டி, காட்டு முயல் போன்ற விலங்குகளையே கொன்று உண்ணும். கூட்டமாகச் சென்று வேட்டையாடும் செந்நாய்கள் இரையாகும் விலங்குகளை மிகக் கொடூரமாகத் தாக்கிக் கொல்கின்றன. நுகர்ச்சிப் புலன் மூலம் இரையாகும் விலங்கைக் கண்டு பிடிக்கின்றன. இரையாகும் விலங்கு புதர்களுக்குள் மறைந்திருந்தால், கூட்டத்தில் ஏதாவதொரு செந்நாய் உயரமான அப்புதரை ஒரே எட்டில் தாண்டிக் கடந்து, இரையாகும் விலங்கின் இருப்பிடத்தைக் கண்டறியும். ஒன்றன் பின் ஒன்றாகவோ, தாறுமாறாகவோ செல்லாமல், ஒழுங்கான நேர் வரிசையில் அணி வகுத்துச் செல்லும் செந்நாய்கள், இரையாகும் மானையோ, காட்டெருமையையோ உடனே தாக்கிக் கொல்வதில்லை. குறைந்தது 0.5 கி.மீ. வரை துரத்திச் சென்று, மானோ, காட்டெருமையோ களைப்படைந்து அயர்ந்து போகும் தருணத்தில், அவற்றின் கண், காது, மூக்கு, உதடு ஆகியவற்றை வாயால் பற்றிக் கொண்டு தொங்குகின்றன. அட்டைகளைப் போல் இரையாகும் விலங்கின் உடலோடு, தம்மைச் சேர்த்துக் கொள்கின்றன. திடீர்த் தாக்குதலால் அதிர்ச்சியடைந்துள்ள மான் அந்த அதிர்ச்சியினின்றும் மீள்வதற்குள், செந்நாய்கள் மானின் குதத்துக்குள்ளிருந்து அதனுடைய குடலை வெளியில் இழுத்துப் போடுகின்றன. அதிர்ச்சியாலும், குருதிப் பெருக்காலும் தாக்கப்படும் மான், உடனே இறந்து விடும். மான் இறப்பதற்கு முன்பே கூடச் செந்நாய்கள் அதனுடைய தசைப் பகுதிகளைக் கடித்து, உண்ணத் தொடங்கி விடுகின்றன. சில சமயங்களில், செந்நாய்களால் துரத்தப்படும் மான் ஆழமான ஆற்றின் மையத்திற்குத் தப்பி ஓடி விடுவதும் உண்டு. அப்போது, சில செந்நாய்கள் நீருக்குள் இறங்கிச் சென்று, மானை விரட்டிக் கரைக்குக் கொண்டு வரும். தன்னிலை தளர்ந்து போகும் மான் பக்கவாட்டில் சரிந்து விழுந்து விடும். அப்போதும் கூடச் செந்நாய்கள் மானைத் துரத்துவதை நிறுத்தா. அச்சமுற்ற மான் முதுகில் ஊர்ந்த படியே கரைக்கு வந்து சேரும். கரையில் தயாராக நிற்கும் மற்றச் செந்நாய்கள் உடனே மானைத் தாக்கிக் கொன்று விடுகின்றன. இரையாகும் மான் ஆண் மானாக இருந்தால், செந்நாய்கள் அதனுடைய விந்தகங்களை முதலில் கடித்து உண்கின்றன. பின்னரே இதரப் பகுதிகளை உண்ணத் தொடங்குகின்றன. புதர்களில் மறைந்திருக்கும் மான்களைத் துரத்தி வெளியில் கொண்டு வந்த பின், அவற்றின் கண்களில் சிறுநீரைப் பெய்து குருடாக்கி விடும். இவ்வாறு யானை, புலி போன்ற வலிய விலங்குகளையும் செந்நாய்கள் கொன்று விடுகின்றன. செந்நாய்கள் இறந்து கிடக்கும் விலங்குகளை உண்பதில்லை. ஆனால், அவை புலி, சிறுத்தை ஆகியவை உண்டு விட்டுப் போட்டுச் செல்லும் விலங்குகளின் எஞ்சிய உடற் பகுதிகளை உண்கின்றன. உணவுக்காகச் செந்நாய்கள் தமக்குள் போட்டியிடும் முறை விந்தையானது. கொன்று போட்டுள்ள விலங்கின் தசைக்காக அவை சண்டை போடுவதில்லை. இறைச்சியை விரைந்து உண்பதற்கே, அவை கடுமையாகப் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு செந்நாயும் 60 நிமிடங்களில் 4 கி.கி. எடையுள்ள இறைச்சியை விழுங்கி விடுகிறது. பெரிய இறைச்சித் துண்டுகளைக் கவ்விச் சென்று, மறைவான இடங்களில் தங்கி உண்ணும். இரையைக் கொன்றவுடன், முதலில் இதயம், ஈரல், குதப் பகுதி, கண்கள் ஆகிய பகுதிகளைச் செந்நாய்கள் உண்கின்றன. ஆறோ, குளமோ, வேறு நீர் நிலைகளோ அருகில் இருந்தால், அடிக்கடி நீர் அருந்தச் செல்கின்றன. பின்னர், தொடர்ந்து உண்கின்றன. நீர் நிலைகள் அருகில் இல்லாத போது, இறைச்சி முழுவதையும் உண்டு முடித்த பின்னர், நீர் நிலைகளைத் தேடிச் செல்கின்றன. குளிர் காலத்திலும், செந்நாய்கள் நீர் நிலைகளில் படுத்திருப்பதைப் பெரிதும் விரும்புகின்றன. செந்நாய்கள் புலியையும் அஞ்சாமல் தாக்குகின்றன என டன்பார் பிராண்டர் தெரிவிக்கிறார். ஒரு புலியைச் சீண்டி, அதனுடன் இரு செந்நாய்கள் சண்டையிட்டனவென்றும், முடிவில் செந்நாய்களும், புலியும் இறந்து விட்டனவென்றும், அவற்றின் தோல்களைக் காட்டுவாசிகள் டன்பார் பிராண்டரிடம் கொடுத்தனரென்றும், கடுமையான புண்களின் வலியை, முனகாமல் தாங்கிக் கொள்ளும் மன வலிமை வாய்ந்தவை செந்நாய்கள் என்றும் டன்பார் பிராண்டர் தெரிவிக்கிறார். ஓராண்டு வயதுடைய செந்நாய்கள் உடலுறவுக்குத் தயாராகின்றன. நவம்பர், ஏப்ரல் மாதங்களில் செந்நாய்கள் உடலுறவு கொள்கின்றன. கருவுற்ற பெண் நாய் எட்டுக் குட்டிகளை ஈன்றெடுக்கும். குட்டிகளை ஓடைகளுக்கு அருகிலுள்ள பாறை இடுக்குகளிலும், பிற விலங்குகள் அமைத்திருக்கும் மண் குழிகளிலும் வைத்துப் பராமரிக்கும். ஒரு கூட்டத்தைச் சேர்ந்த அனைத்துப் பெண் நாய்களும் தம் குட்டிகளை மொத்தமாகக் குழிகளில் வைத்துப் பராமரிப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர். பந்திப்பூர் வன விலங்குப் புகலிடத்தில், மூன்று செந்நாய்கள் தம் குட்டிகளை ஒன்றாகவே வைத்துப் பாதுகாத்துப் பராமரித்தன என்று டன்பார் பிராண்டர் தெரிவிக்கிறார். பாலருந்தும் குட்டிகள் தாயுடனே தங்கியிருக்கும். மூன்று வாரங்களுக்குப் பின், பாதி செரித்த இறைச்சி உணவைத் தன் குட்டிக்கு ஊட்டுகிறது. எண்பது நாள்கள் நிறைவானவுடன், குட்டிகள் வெளியில் வருகின்றன. ஐந்து மாதங்களுக்குப் பின், அவை வேட்டையாடச் செல்லும் தாயுடன் சேர்ந்து கொள்கின்றன. அவையும் வேட்டையாடப் பழகுகின்றன. குரைத்தல், கத்துதல், ஓலமிடுதல், விசிலடித்தல் போன்ற பலவகையான ஒலிகளின் மூலம் செந்நாய்கள், தன் கூட்டத்தைச் சேர்ந்த பிற செந்நாய்களுடன் தொடர்பு கொள்கின்றன. உடலுறவுக்கு அழைக்கும் போது விசிலடிக்கும் ஒலியையே அவை பயன்படுத்துகின்றன. ஆஃப்ரிக்காவில் வாழும் செந்நாய்களும் கூட்டமாகவே வாழ்கின்றன. அவை கூட்டமாகவே வேட்டையாடும்; ஓய்வெடுக்கும்; பாலுறவு கொள்ளும். ஒரு செந்நாய்க் கூட்டத்தில், 20 செந்நாய்கள் வரை இருக்கும். அவை வரிக் குதிரைகளை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் துரத்திச் சென்று கொல்லும். வலிமையான ஆண் செந்நாய்களுக்குத்தான் பெண் செந்நாய்கள் உடலுறவுக்கு இணங்கும். பிறக்கின்ற குட்டிகளின் கண்கள் மூடியவாறுள்ளன. குட்டிகளுக்குப் பாதி செரித்த இறைச்சி உணவைத் தாய் ஊட்டுகிறது. வரிக் குதிரையைத் தாக்கும் போது, அதனுடைய வால், உதடு ஆகியவற்றை வாயால் பற்றிக் கொண்டே செநநாய்கள் தொங்குகின்றன. செந்நாய்கள் வரிக் குதிரையின் குதத்தின் வழியாக, அதனுடைய குடலையே முதலில் வெளியில் இழுத்துப் போடுகின்றன. உயிருக்குப் போராடும் வரிக் குதிரையின் உடல் பகுதிகளைச் சற்றும் இரக்கமின்றிச் செந்நாய்கள் கடித்து உண்கின்றன. —எஸ்.ஆர்.டி. சுந்தரமூர்த்தி செந்நிலை முப்பொருட்சிக்கல் பேரண்டத்தில் பல்வேறு கோள்களும், துகள் பொருள்களும் மிகுவேக இயக்கத்தில் உள்ளன. இவ்வியக்கத்தில் தீர்வு காண முடியாத சில சிக்கல்கள் உள்ளன. இவற்றில் முப்பொருள் சிக்கலும் ஒன்றாகும். இது ஒன்றுக்கொன்று ஈர்ப்பு விசைகளால் மட்டுமே செயல்படும் மூன்று கோளகப் பொருள்களின் இயக்கத்தைப் பற்றியதாகும். பொருள்களின் இயக்கங்கள் நியூட்டனின் இயக்க விதிகளுக்கும், ஈர்ப்பு விதிகளுக்கும் உட்பட்டவை. இவ்விதிகளைப் பயன்படுத்தி, இரு பொருள் அமைப்புகளில் அவற்றின் இயக்கங்களை முழுதுமாக அறுதியிடலாம். ஆனால், முப்பொருள்களைக் கொண்ட அமைப்புகள் சிக்கலானவை. எளிதில் தீர்க்க முடியாதவை. சில குறிப்பிட்ட அமைப்புகளைத் தவிர, ஏனையவற்றை அறுதியிடல் கடினமாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கணக்கியல் வல்லுநர்களான லெனார்ட் ஆய்லர், கோசப் லெக்ரான்ஞ்சி ஆகியோர், இத்தகைய சிக்கல் மிகுந்த கடினமான கணக்கீடுகளுக்குத் தீர்வுகளை உருவாக்கினர். அவற்றில் ஒன்று, ஒரு சம பக்க முக்கோணத்தின் மூன்று முனைகளில், மூன்று பொருள்கள் இருக்கும் என்று கொள்ளப்பட்டது. இப்பொருள்கள் அண்டவெளியில் தற்சுழற்சியுடையவையாக இருக்கலாம். இவ்வமைப்பில், ஒரு பொருள் ஏனையவற்றை விட மிகுந்த பொருண்மையுடையதாக இருப்பின், இது நிலைத் தன்மையுடன் இருக்கும். சான்றாக, சூரியன், ஜூபிடர் கோளம், டிரோஜன் அஸ்டிராய்டு ஆகியவற்றைக் கொள்ளலாம். மற்றொரு வகை அமைப்பில், மூன்று பொருள்களும் ஒரே நேர் கோட்டில் அமைவதாகக் கொள்ளப்படும். ஆனால், இவ்வமைப்பு மிகுந்த நிலைத் தன்மையற்றது. மிகச் சிறிய இடையூறு கூட இவ்வமைப்பைக் கலைத்து மாற்றி விடக் கூடும். முப்பொருள் சிக்கல்கள் பெரும்பாலும் துணைக் கோள் இயக்கங்களைக் கணக்கிடுவதில்தான் தோன்றுகின்றன. இதில் ஒரு பொருள், ஏனைய இரண்டையும் விட, மிகு தொலைவில் இருக்கும். மற்றொரு வகை மூன்று கோள்களுக்கிடையே இயக்கங்களைக் கணக்கிடுவதில் தோன்றும் சிக்கலாகும். இதில் ஒன்றுக்கொன்று இடைப்பட்ட தொலைவுகள் சமமாக இருக்கும். ஆனால், ஒன்றின் நிறை, ஏனையவற்றை விடப் பன்மடங்கு மிகுதியாக இருக்கும். சில குறிப்பிட்ட வகைகளில், மூன்று பொருள்களில் ஒன்றின் நிறை ஏனையவற்றை விட மிகக் குறைவாக, பிற இயக்கங்களைப் பாதிக்காத அளவில் இருக்கும். இப்பொருள்கள் ஒன்றோடொன்று வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும். எடுத்துக் காட்டாகப் புவி, சந்திரன், விண்வெளிக் கலம் ஆகியவற்றின் இயக்கங்களைக் குறிப்பிடலாம். —எஸ். சோமசுந்தரம் <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்த பக்கத்தில் ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> செந்நிலை விசையியல் இயல்பான பொருள்களின் நிலையையும், நேரஞ் சார்ந்த விசையையும் பற்றி விளக்கும் அறிவியலின் பிரிவுக்குச் செந்நிலை விசையியல் (classical mechanics) என்று பெயர். விசையியலின் பல விதிகள், ஆர்க்மிடிசிற்கு முன்பே ஏற்படுத்தப்பட்டன. 1638இல் கலிலியோ விசையியலின் முதன்மையான கருத்துகளை வரையறுத்தார். 1687இல் ஐசக் நியூட்டன் இயக்கவியலின் அடிப்படை விதிகள், ஈர்ப்பியல் விதி, கோள்களின் இயக்கம் ஆகியவற்றை வெளியிட்டார். 18ஆம் நூற்றாண்டில் டி அலெம்பெர்ட், லக்ரான்ஜி, லாப்லாஸ் ஆகியோரின் விசையியலின் சிறப்பு மிக்க கண்டுபிடிப்பு செந்நிலை விசையியல் ஆகும். இது நியூட்டோனியன் விசையியல் என்றும் குறிக்கப் படுகிறது. இது தற்கால விசையியலான புள்ளியியல், சார்பியல், குவாண்டமியல் போன்றவற்றிற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. செந்நிலை விசையியலின் பொதுவான கருத்துகள் கணிதவியல் அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றன. கணித தருக்க முறைப்படி, பொருளின் இயக்கம் கணக்கிடப்பட்டு, அது ஆய்வகக் கணக்கீட்டுடன் ஒப்புமைப் படுத்தப் படுகிறது. இது, இயற்கைப் பொதுக் கொள்கைகளை நன்கு விளக்குகிறது. புது இயற்பியலின் பல பிரிவுகளுக்கும், இது தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. இதன் கணிதவியல் விளக்கம் தற்சார்பியல் கொள்கைக்கும், மற்ற ஆய்வுகளுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது. செந்நிலை விசையியல் முறையே வளிம, நீர்ம, திண்மங்களின் இயக்கங்களை விளக்குகிறது. ஆனால், பொதுவாக, இது திண்மங்களின் இயக்கத்தையே தெளிவாக வரையறுக்கிறது. இது நிலையியல், இயங்கியல் மற்றும் இயக்கவியல் என்ற துணைப் பிரிவுகளைக் கொண்டது. தொடர்பு கொண்டுள்ளது. திண்ம இயற்பியலில் பல கோட்பாடுகளைச் செந்நிலை விசையியல் கொண்டே விளக்க வேண்டியுள்ளது. இந்தத் தொடர்பு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அட்டவணையில் திண்மக் கோடுகள் (solid lines) அதன் கோட்பாட்டு இயற்பியலையும், புள்ளிகளால் இணைக்கும் கோடுகள் அதன் பிரிவுகளையும் குறிப்பிடும். நியூட்டோனியன் சமன்பாட்டை வடிவமைத்தல். ri, Pi = miri என்பன முறையே i-ஆவது துகளின் நிலை வெக்டர், நேர் கோட்டு உந்தம் ஆகும். ri என்பது துகளின் திசை வேகம் ஆகும். இந்த அமைப்பின் நியூட்டன் இயக்கச் சமன்பாட்டைப் பின்வருமாறு குறிப்பிடலாம். \frac{\mathrm{d}p_i}{\mathrm{d}t} = F_i^{(e)} + \sum_{j \ne i}F_{ji} \qquad \qquad \text { (1) } இங்கு F_i^{(e)} என்பது i ஆம் துகளின் மீது செயல் படும் வெளி விசை. Fij என்பது j ஆம் துகளுக்கும், i ஆம் துகளுக்கும் இடையே உள்ள இடை விசை ஆகும். துகளின் மீது செயல்படும் விசையின் தன்மையைப் பொறுத்து, நியூட்டன் இயக்க விதியிலிருந்து, பல்வேறு அழிவின்மை விதிகள் பெறப் படுகின்றன. (எ-டு. Fji = - Fij. அமைப்பின் மொத்த நேர் கோட்டு உந்தம் மாறா இயக்கமாக உள்ளது Fji = -Fij P = \sum_i P_i \qquad \qquad \qquad \qquad \text { (2) } என்பது ri-rj என்ற திசையில் இருக்கிறது. அதன் வெளி விசை மூலத்தில் (origin) சுழியாகிறது. கோண உந்தம் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. L = \sum_i r_{i} \times P_i \qquad \qquad \text { (3) } இந்த அமைப்பின் நேரியல் திருப்பங்கள் சமச் சீர்மை பெற்றுள்ள போது, நேரியல் கோண அழிவின்மை பொருந்துகிறது. இதே போல், ஒரு புள்ளியைப் பொறுத்த கோண உந்த அழிவின்மை, அதே புள்ளியைச் சார்ந்த சமச் சீர்மைத் திருப்பங்களுக்குச் சமமாக இருக்கும். iஆம் துகளின் மீது செயல் படும் மொத்த விசைகளைக் கொண்டு, பிறிதொரு அழிவின்மைக் கோட்பாடு பெறப்படுகிறது. எதிர்ச் சரிவின் திசையிலி V அனைத்து ஆயங்களின் சார்பு ஆகும். அமைப்பின் மொத்த ஆற்றல் E = T + V \qquad \qquad \qquad \text { (4) } இங்கு T இயக்க ஆற்றல் ஆகும். T = \frac {1}{2} \sum m_i (\hat r)^2 \qquad \qquad \text { (5) } V நிலை ஆற்றல் ஆகும். இதிலிருந்து இயக்கத்தை வரையறுக்கும் லக்ரான்ஜின் சமன்பாடுகள் பெறப்படுகின்றன. காண்க: லக்ரான்ஜின் சமன்பாடுகள், இயக்கவியல் —பெ. துரைசாமி நூலோதி. S.L. Gupta, V.Kumar and H.V. Sharma, Classical Mechanics, Pragati Prakashman Publication, Meerut, 1982. செப்பியோலைட் இது நீர் சேர்ந்த மக்னீசியம் சிலிக்கேட் களிக் கனிமமாகும். ஒரு வகைக் குட்டி மீன் முள்ளைப் போல் இக்கனிமம் தோற்றமளிப்பதால், இப்பெயர் இதற்கு ஏற்பட்டது. இதை, கடல் நுரை என்றும் கூறுவர். செப்பியோலைட்டின் (sepiolite) வேதி இயைபு 2H₂O.2MgO.3SiO₂, Mg₈(H₂O)₄ (OH)₄Si12O30. இதன் இயைபு கனிமத்தில் நீர் சேரச் சேர மாறு படும். எனினும், இதன் வேதியலமைப்பு திட்டமானது; தூய கனிமத்தின் அடர்த்தி 2.26. இக்கனிமம் மண் தன்மையது; வழவழப்பானது; நார்ப் பொருளாகவும், படிகத் தன்மையற்ற பொருளாகவும் காணப்படுகிறது. நார்ப் பொருளுக்கு ஆல்ஃபா செப்பியோலைட் என்றும், படிகத் தன்மையற்ற பொருளுக்குப் பீட்டா செப்பியோலைட் என்றும் பெயர். இது சாம்பல் கலந்த வெண்மை, மங்கிய மஞ்சள், நீலங் கலந்த பசுமை, இளஞ் சிவப்பு நிறங்களில் காணப்படும். இரட்டை ஒளி அச்சுகளைக் கொண்டது. (-)2v மிகச் சிறியது. ஒளி விலகல் எண் 1.52–1.53. பல திசைப் புலன்களை யுடைய நார்க் கனிமங்களால் பின்னப்பட்ட கூட்டுக் கனிமமாக அமைந்த பின், இது திண்ணிய பொருளாக மாறுகிறது. இரு விதமான நார்க் கனிமங்கள் காணப்படுகின்றன. இவை திண்ணிய பின்னல்களைக் கொண்ட இழையமைப்பை உருவாக்குகின்றன. இவ்வமைப்புகளில், படிவடுக்குகளிடையே ஏடு போன்ற அமைப்பில், வளர்ந்திருக்கும் கல் நார் போன்ற நார்க் கனிமங்களைக் கொண்ட செப்பியோலைட் ஆம்பிபோல் குழுவிலுள்ள கனிமங்களைப் போன்ற படிக அமைப்பைக் கொண்டிருக்கும். இரட்டை அலகுகளைக் கொண்டு, ஆம்பிபோல் சங்கிலித் தொடரமைப்புக் கொண்ட கனிமத்தைப் பாலிகோர்ஸ்கைட், ஆட்டபுல்கைட் என்பர். படிகக் கட்டமைவில் மூன்று அலகுகளைக் கொண்ட கனிமத்தைச் செப்பியோலைட் என்பர். இல்வினைட் என்னும் கனிம நார், செப்பியோலைட்டின் இரண்டு மக்னீசியம் அயனிக்குப் பதிலாக, நான்கு சோடியம் அயனிகளைக் கொண்டிருக்கும். அதனால், இக்கனிமம் மக்னீசியம் குளோரைடில் நனைந்திருக்கும் போது, கல் நார் போன்ற நார்களையுடைய செப்பியோலைட் கனிமமாக மாறுகிறது. மிகவும் நுண் துளைத் தன்மைபெற்றமையால், காய்ந்த கனிமங்கள் நீரில் மிதக்கும் இயல்பின. இக்கனிமத்தாலாகிய கற்களை எளிதாகக் குடையலாம். மெழுகுடன் சேர்த்துக் கல்லில் மிகுந்த பள பளப்பை ஏற்படுத்தலாம். இக்கனிமத்தைச் சூடு படுத்த நீரிழந்து, உறுதியடைகிறது. கிழக்கு மையக் கடல் நிலப் பகுதிகளில் அணிகலன்களாகவும் புகைக் குழாய்களாகவும் பயன் படுகிறது. செப்பியோலைட் குழுக் கனிமப் படிவங்களை, எண்ணெய்க் கிணறுகளில் உள்ள துரப்பண நீர்மங்களை உறிஞ்சி வெளியேற்றப் பயன் படுத்துகின்றனர். துரப்பணங்கள் உப்படக்கம் மிக்க நீரிடையே ஊடுருவிச் செல்கையில், செப்பியோலைட் கனிமங்கள் துரப்பண நீர்மங்களை வெளியேற்றப் பெருமளவில் பயன் படுகின்றன. எண்ணெய்களின் நிறங்களை வெளுக்கவும், இவை பயன்படுகின்றன. உறிஞ்சு பொருளாக அமையும். பூச்சி கொல்லி மருந்துகளை எடுத்துச் செல்லவும், பூச்சி கொல்லி மருந்தின் நிரப்பிகளாகவும் பயன் படுகிறது. செப்பியோலைட் இரண்டாம் நிலைக் கனிமமாகச் செர்பன்டின், மாக்னசைட், ஒப்பல் ஆகிய கனிமங்களுடன் படிகமாக வளரும். பாலிகோர்ஸ்கைட் ஆட்டபுல்கனட்டுப் படிகங்கள், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள ஃபுளோரிடா, ஜியார்ஜியா பகுதிகளில் தோண்டி எடுக்கப் படுகின்றன. சோவியத் ஒன்றியக் குடியரசில் உக்ரைனிலும், காகசஸ் மலைப் பகுதிகளிலும் வெட்டியெடுக்கப் படுகிறது. செப்பியோலைட் ஸ்பெயின், வட ஆஃபிரிக்கா, அரேபியா ஆகிய நாடுகளில் தோண்டி எடுக்கப்படுகிறது. —இரா. இராமசாமி நூலோதி. W.A.Deer, et. al., An Introduction to Rock Forming Minerals, ELBS, London, 1966. செப்பு நெருஞ்சில் இதன் தாவரவியல் பெயர் இண்டிகோஃபெரா ரின்னேய் (Indigofera rinnaei) என்பதாகும். இதன் மறு பெயர்கள் இண்டிகோஃபெர்ரா இன்னேயாபில்லா (Indigofera enneaphylla), ஹெடிசாரம் புரோஸ்ட்ரேட்டம் (Hedysarum prostratum). தமிழில் நிலப் பிரண்டை என்று இதைக் குறிப்பிடுவர். இது லெகுமினேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இச்செடியைக் கடற்கரையோரம், சம வெளி, மலைப் பகுதிகளில் 750–900 மீ. உயரம் வரை காணலாம். சாகுபடி செய்யாத நிலங்களிலும், பயிரிடும் நிலத்திலும் களைச் செடியான இதைக் கூட்டமாகக் காணலாம். பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, பர்மா, இந்தோசீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் காணப்படும். இது விதை மூலம் இனப் பெருக்கமடைகிறது. விதைகள் தோன்றும் முன்னர்ச் செடியை வேருடன் பிடுங்கிப் பசுந் தாளுரமாகப் பயன்படுத்தலாம். செடி. செப்பு நெருஞ்சில் தரையில் படர்ந்திருக்கும் சிறிய செடி. கிளைகள் உருண்டையாகவோ, கோணமாகவோ, வெள்ளையான மயிர்களால் போர்த்தப்பட்டிருக்கும். இலைகள், ஒற்றைச் சிறகுக் கூட்டிலையமைப்பைக் கொண்டு, 3.5 செ. மீ. அளவிலிருக்கும். சிற்றிலைகள் காகிதம் போன்றவை. அடிப் பகுதியில், மென்மயிர் கொண்டவை. சிற்றிலைக் காம்பின் அடிப் பகுதி, ஆப்பு வடிவில் இருக்கும். ஓரம் முழுமையானது; முனை மழுங்கியது. இலையடிச் சிதல்கள் வளைந்தும், நீண்டும் கூரியதாயிருக்கும். இலைக் காம்பு மிகச் சிறியது. பூக்கள் சிறியவை, காம்பில்லாதவை, 2.5 மி.மீ. குறுக்களவுள்ளவை. அடர்சிவப்பு அல்லது குங்கும நிறத்தில் 10–20 பூக்களாக அடர்த்தியான ரெசீமில் இலைக் கக்கங்களில் தலை மஞ்சரி போல் இருக்கும். புல்லி வட்டத்தின் பற்கள் நீளமாக இருக்கும். அவரையில் உள்ளது போன்று கொடி, சிறகு, படகு அல்லி இதழ்கள் உண்டு. மகரந்தத் தாள்கள் பத்து, இரு கற்றைகளாக உள்ளன. மகரந்தப் பைகள் ஒரே சீரானவை, கூர்மையானவை. சூல் பை காம்பற்றோ, சிறிதளவு காம்புடேனா இருக்கும். 1–2 அல்லது பல சூல்களைக் கொண்டிருக்கும். இதன் நுனி கூரியதாயும், வளைந்தும், 4 மி.மீ. அளவில் வெள்ளையான சிறு மயிர்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு காயிலும், இரண்டு கோண அல்லது கோள வடிவில் பளபளப்பான மஞ்சள் கலந்த பழுப்பு நிற விதைகள் இருக்கும். இது செப்டம்பர்–பிப்ரவரி மாதங்களில் பூக்கிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> பயன்கள். இதன் கொடி, வேர், காய் முதலியவை மருந்தாகின்றன. இது சிறுநீரைப் பெருக்கும் தன்மை கொண்டது. இதனால், முப்பிணி, உடல் வெப்பம், காய்ச்சல், வெள்ளை நோய்கள் போகும். இச்செடிச் சாறு உடலுக்கு உரந் தரும், இது நீண்ட நாள் தீராத பால் நோய்களைத் தீர்க்க உதவுகிறது. பைத்தியத்தைத் தெளிவிக்கும், குத்துக்காரன் சம்மட்டி என்பதன் தாவரப் பெயர் இண்டிகோஃபெரா டிரிஸ்டா (Indigofera trista) ஆகும். இதன் வேரினால் வாத நோய், திமிர் வாதம் போன்றவை போகும். —கோ.அர்ச்சுணன் செபச் சுரப்பி இது பாலூட்டிகளில் புறப்படையிலிருந்து தோன்றும் ஒரு வகைத் தோல் சுரப்பி. தோலுக்கடியிலுள்ள தசைப் பகுதியில் அமைந்திருக்கும் இது, ஓர் எண்ணெய்ச் சுரப்பி. இச்சுரப்பி மயிர்க் காலின் அடிப் பகுதியிலுள்ள சுரப்பிச் செல்களால் ஆனது. சுரப்பிச் செல்கள் இணைந்த பல சிறு பைகளாக அமைந் திருக்கும். இவற்றின் வடிகுழல்கள் மயிர்க் குலையின் மேற்பகுதியில் திறக்கின்றன. மயிர்க் குலைகளின் கழுத்து வழியாகச் செல்லும் மயிர்த் தண்டுகள் மீது செபம் (sebum) என்னும் நீர்மத்தைச் செபச் சுரப்பி (sebaceous gland) சுரக்கிறது. மயிர்க் குலைகளின் கீழ்ப் பரப்பில், தோலின் உள்ளே செபம் காணப்படும். மயிரின் நெகிழ் தன்மையைப் பாதுகாக்க உதவும் செபம், எண்ணெய் போன்ற பொருளாகும். மயிர்க் குலையின் வாயைச் சுற்றியுள்ள புறத் தோல் பரப்பின் மீது செபம் உள்ளது. செபத்திற்கும், வியர்வைக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டு பிடிக்க, ஒரு கண்ணாடித் தட்டில் செபத்தையும், வியர்வையையும் ஒட்ட வைத்தால், வியர்வை விரைவிலேயே உலர்ந்து விடுகிறது. செபம் உலர்வதில்லை. செபச் சுரப்பியின் நாளம் அடைபட்டால், நுண்ணுயிரித் தாக்கம் நிகழலாம். பெரும்பாலும், தலையின் மேற்பகுதியிலேயே தோன்றும் செப நீர்ப் பை (sabaceous cyst) தீங்கற்றது. அளவில், பெரியதாக இருந்தால், அறுவை மருத்துவம் மூலம் அகற்றி விடலாம். —மு. கி. பழனியப்பன் நூலோதி. Richard S. Snell, Clinical Anatomy for Medical Students, Third Edition, Little Brown & Co, Boston, 1906. செபச் சுரப்பிகள் (sebaceous glands) சில பாலூட்டிகளில் மல வாயின் பக்கத்திலுள்ள மயிரற்ற பெரினியல் குழிகளில், பெரினியல் சுரப்பிகளாக அமைந்திருக்கும். இவற்றின் சுரப்பு, ஒரு குறிப்பிட்ட நாற்றத்தைத் தருகிறது. இது பாலின ஈர்ப்புக்குப் பயன் படுவதாகக் கருதப்படுகிறது (எ-டு. முயல்). செபச் சுரப்பிகள் கண் இரைப்பியின் உட்புற அருகுகளில் அமைந்து, கண் இமையையும், விழிக் கோளத்தையும், தம் சுரப்பு எண்ணெயால் பதனாக வைத்திருக்கப் பயன்படும். இவை, சுரப்பிச் செல்களில் பல நுண்ணறைகளையும், அதன் குழல்களையும் கொண்டவை. இவற்றுக்கு மெய்போமியன் சுரப்பிகள் என்று பெயர். —எஸ். கே. வள்ளி செஃபலாக்சின் இது செஃபலோஸ்போரியம் அக்ரிமோனியம் என்னும் காளானிலிருந்து எடுக்கப்படும் செஃபலோஸ்போரின் வகையைச் சார்ந்த மருந்து. இது வேதி அமைப்பில், பெனிசிலினை ஒத்தது. அடிப்படை உட்கரு, 7- அமினோ செஃபலோஸ்போரானிக் அமிலமாகும். இதில், டைஹட்ரோதையசின் உட்கருவும், லாக்டம் வளையமும் காணப்படும். இவை பெனிசிலினைப் போன்றே இருக்கும். லாக்டம் வளையமே, நுண்ணுயிர் எதிர்ப்புக்குக் காரணமாகிறது. செஃபலாக்சின் (cephalexin) பெனிசிலினைப் போன்று வினைபுரிதிறம் பெற்றிருந்தாலும் பென்சிலி னேஸ் விளைவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. எனினும் எண்டரோகாக்கை, புரோடியஸ் நுண்ணுயிர் கள் மீது வினைபுரிவதில்லை. அமில நிலையில் நிலையாக இருக்கும் செஃபலாக்சின் செரிமானப் பாதையில் நன்கு இறுக்கப்படுகிறது. இம்மருந்து ஃபுளுரா, இதய உறை, மூட்டு நீர்மம், தோல், தசை, இதயம், இரைப்பைச் சுவர், கல்லீரல், மண்ணீரல். 13. நரம்பு முலைகள் 14. அன்தகட்டு முனைகள் 15. கொல்றி இழைகள் சிறுநீரகம் ஆகியவற்றுள் புகுந்து வினை புரிகிறது. கொழுப்பில் கரையாமையால், செல்களுக்குள்ளோ குருதி மூளைத் தடையைத் தாண்டியோ உட்செல்வதில்லை. மிகச் செறிவடைந்த நிலையில், சிறுநீரில் வெளிப்படுகிறது. கிளப்சீலா நிமோனியா பாதிப்பில் செஃபலாக்சின் நன்கு வினை புரிகிறது. ஜெண்டாமைசீனுடன் சேர்த்துக் கொடுத்தால், நல்ல பயனளிக்கிறது. சிறுநீரகப் பாதிப்புகள், மூச்சுக் குழல் அழற்சி, இன்ஃபுளுயென்சா போன்ற நோய் நிலைகளில் செஃபலாக்சின் பெரும் பயனளிக்கிறது. பெனிசிலினுக்குக் கூருவுணர்வு கொண்டவர்களுக்கு இம்மருந்தைக் கொடுக்கக் கூடாது. செஃபலாக்சின் 250–500 மி.கி. குளிகையாகவும், 1 கிராம் மாத்திரையாகவும், 5 மி.லி. கரையத்தில் 125, 500 மி.கி. அளவில் கிடைக்கிறது. ஒரு மி லிட்டருக்கு 100 மி.கி. என்னும் அளவில் சொட்டு மருந்தாகவும் கிடைக்கிறது. —அ. கதிரேசன் நூலோதி. Charles R.Craig, Modern Phamacology, First Edition, Little Brown and Co., Boston, 1982. செபிஷேவ் சமனிலி சம வாய்ப்பு மாறியின் (random variable) நிகழ் தகவுப் பரவல் (probability distribution) கொடுக்கப் பட்டால், அதன் சராசரி (μ)–(mean) தர விலகல் (σ) (standard deviation) முதலியவற்றைக் காணலாம். சராசரியை மையமாகக் கொண்ட ஏதேனும் ஓர் இடைவெளியில் x மதிப்புக் கொள்வதற்கான நிகழ் தகவை, செபிஷேவின் சமனிலி கொடுக்கிறது. முதலில் ரஷிய கணித வல்லுநர் செபிஷேவ் என்பாரால் 1853இல் கண்டு பிடிக்கப்பட்டு 1856இல் பைநேமி என்பாரால் இது விரிவாக்கப்பட்டது. செபிஷேவ் சமனிலி. மாறி x இன் சராசரி μ மற்றும் தர விலகல் σ என்றால், block_center|P\left(|X - \mu \right| > K \sigma) \le \frac{1}{K^2} ,மற்றும் P\left(|X - \mu \right| < K \sigma) \ge 1- \frac{1}{K^2} இதில் K ஒரு மிகை எண் (positive number), பைநேமி இதைக் கீழ்க்காணுமாறு விரிவாக்கம் செய்தார். குறையெண்ணாகாத x இன் சார்பு g(x) என ஒவ்வொரு மிகை எண் Kக்கும் P\{g\left(x\right) \ge K \} \le \frac{1}{K}E\{g\left(x\right)\} இச்சமனியில் g(x) = (x-μ)² என எடுத்துக் கொண்டால், செபிஷெவின் சமனிலி கிடைக்கிறது. இச்சமனிலியின் துணை கொண்டு தற்செயல் மாறிகளின் நிகழ் தகவால், ஒருங்கும் பண்பை (convergence in probabilistic sense) வரையறுக்கலாம். அவ்வரையறை பின்வருமாறு: x₁, x₂, x₃, ……xn…… ஒரு தற்செயல் மாறிகளின் தொடரி (sequence) a ஒரு மாறிலி; எவ்வளவு சிறியதாயினும், கொடுக்கப்பட்ட மிகை எண் εக்கு ஏற்ப, எனில், மாறிகளின் தொடரி, aக்கு நிகழ் தகவால், ஒருங்கும் என்பர். இவ்வரையறையைக் கொண்டு, பின்வரும் செபிஷேவின் தேற்றத்தை அறியலாம். x₁, x₂, x₃, ……xn…… ஒரு தற்செயல் மாறிகளின் தொடரி: μ₁, μ₂, μ₃, ……μn…… அவற்றின் கூட்டுச் சராசரிகளின் தொடரி : σ, σ, σ, …… σ,…… .அவற்றின் திட்ட விலக்க வர்க்கச் சராசரிகளின் தொடரி ஆகும். மேலும், கந்தழியை அணுகும் போது, σn சுழியை அணுகும். n கந்தழியை அணு கும் போது, (xn - μn) நிகழ்தகவால் சுழியை ஒருங்கும். செபிஷேவின் சமனிலியால் உடனடியாகக் கிடைக்கப் பெறுவது பேரெண் மெலிவு விதி (weak law of large numbers): x₁, x₂, x₃, ……xn…… ஒரு தற்செயல் மாறிகளின் தொடரி: μ₁, μ₂, μ₃, ……μn…… அவற்றின் எதிர்ப்பார்ப்புகளின் (expectation) தொடரி: Bn = var (x₁ + x₂ + x₃ + …… + xn) < ∞ எடுத்துக் கொள்ள n கந்தழியை அணுகும் போது, சுழியை அணுகுமாயின், n தற்செயல் மாறிகளின் (அவை ஏற்ற மதிப்புகளின்) கூட்டுச் சராசரி; அவற்றின் எதிர்பார்ப்புகளின் கூட்டுச் சராசரியை விட, கொடுக்கப்பட்ட எந்த ஒரு சிறிய மிகை எண்ணிற்கும் குறைவான வேறுபாட்டை நிகழ்வமைவிற்கேற்ப (certainty) ஏற்படுத்திக் கொள்ளலாம். என்ற கட்டுப்பாடு (condition) போதுமானதன்றித் தேவையானதன்று. தற்செயல் மாறிகள் ஒன்றிற்கொன்று சாராதனவாகவும், சமச் சீரான பரவல்களை உடையனவாகவும் இருக்குமானால், முந்தைய கட்டுப்பாடு போதுமானதும், தேவையானதும் ஆகும். பெர்னோலியின் பேரெண் விதியும் (Bernoulli's law of large numbers) செபிஷேவின் சமனியால் நிறுவப்படுகிறது. இவ்விதியே n முயல்வுகளில் (trials) x வெற்றிகள் அமையுமானால், என்பது ஒரு முயல்வில் வெற்றிக்கான நிகழ் தகவாகக் கொள்ளுதற்கு அடிப்படையாக அமையும். இச்சமனிலி தற்செயல் மாறியின் பரவல் தெரியாதிருக்கும் போதும், அதன் மதிப்பிற்குரிய நிகழ் தகவிற்கான எல்லைகளை வரையறுக்க உதவும். —எல். இராஜகோபால் —மு. திரவியம் செபிஷேவ், பாஃப்னட்டி லிவோவிச் கணித, புள்ளியியல் அறிஞரான பாஃப்னட்டி லிவோவிச் செபிஷேவ் (Pafnuty Lvovich, Chebyshev) சோவியத் ஒன்றியக் குடியரசிலுள்ள ஒக்டோவா என்னுமிடத்தில் 1821ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் நாள் பிறந்தார். செபிஷேவ் கல்வி நிறுவனம் எனப்படும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கணிதக் கல்வி நிறுவனம், இவரால் நிறுவப்பட்டதாகும். 1847ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள பல்கலைக் கழகத்தில் கணித உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1860ஆம் ஆண்டு தாளாளர் ஆனார். நிகழ்தகவுக் கோட்பாட்டில் மிகவும் அடிப்படைச் சமனிலியான செபிஷேவ் சமனிலியை (Chebyshev inequality) உருவாக்கினார். இதன் பொதுமைப் படுத்தப்பட்ட (generalised) அமைப்பு பைனாமி செபிஷேவ் சமனிலி (Brienayme Chebshev inequality) எனப்படும். பெரிய எண்களின் விதியை (law of large numbers) விவரிக்கும் போது, எளிய, தெளிவான விளக்கம் பெறுவதற்கு இச்சமன்பாடு பயன்படுகிறது. கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்குக் குறைவாக உள்ள பகா எண்களின் (prime numbers) எண்ணிக்கைகளைக் கண்டறிவது உட்பட, பல கருத்துகளைப் பகா எண் கோட்பாட்டில் கண்டறிந்தார். கோட்பாட்டு இயக்கவியலில் (theortical mechanics) பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் கண்டறிந்த இணை இயக்கம் (parallel motion) மூன்று பட்டை இணைப்புடையது (three bar linkage) ஆகும். இது பொருத்தமான செங்கோட்டு இயக்கத்திற்கு (exact rectilinear motions) மிகவும் நெருங்கிய தோராயம் (approximation) ஆகும். இந்த இயக்கத்திற்குச் செபிஷேவ் இணை இயக்கம் (Chebyshev parallel motion) எனப் பெயர். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இவருடைய கணித ஆய்வுகள் மிகவும் பரவலாக அமைந்திருந்தன. அவற்றுள் நிகழ் தகவுக் கோட்பாடு, இரு படி அமைப்புகள் (quadratic forms) செங்கோணச் சார்புகள் (orthogonal functions), நிலவியல் வரைபடங்கள் உருவாக்குதல், செபிஷேவ் பல்லுறுப்புக் கோவை (Chebyshev polynomial) போன்றவை குறிப்பிடத் தக்கவை. 1849ஆம் ஆண்டு வெளியிட்ட முற்றிசைவுக் கோட்பாடு (theory of congruences) என்னும் நூல் இவரை, கணிதவியலார் என்னும் நிலைக்கு உயர்த்தியது. இந்நூல் ரஷ்யப் பல்கலைக் கழகத்தில், பல ஆண்டுகளுக்குப் பாடமாக இருந்தது. செபிஷேவ் 1894ஆம் ஆண்டு டிசம்பர் எட்டாம் நாள் லெனின்கிரேடு என்னுமிடத்தில் இறந்தார். —பெ. வடிவேல் செம்பருத்தி இதன் தாவரவியல் பெயர் ஹைபிஸ்கஸ் ரோசாசைனன்சிஸ் (Hibiscus rosasinensis). செம்பருத்தி மால்வேசி என்னும் இரு வித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.ஹைபிஸ்கஸ் இனத்தில் ஏறத் தாழ, 300 சிற்றினங்களுண்டு. அவை சிறு செடிகள், செடிகள் அல்லது மரங்களாக இருக்கும். பெரும்பான்மையானவை, பொருளாதாரச் சிறப்பு வாய்ந்தவை. தோற்றம். இது சீனாவைத் தாயகமாகக் கொண்டதாகும். இப்போது உலகில் வெப்ப, மித வெப்ப நாடுகளில் இதைத் தன்னிச்சையாகக் காண்பதரிது. இந்தியாவில், வீட்டுத் தோட்டங்களிலும், பூங்காக்களிலும் அழகுக்கு மட்டுமன்றி, வேலிச் செடியாகவும் வளர்க்கப்படுகிறது. பெரிய பூங்காக்களில், புல்வெளிகளின் நடுவில் கூட்டமாகப் புதர் போல் இதை வளர்ப்பர். செம்பருத்தி, சிவப்பு நிற மலர்களைக் கொண்டிருந்த போதும், மஞ்சள், வெள்ளை, மஜந்தா, வண்ண வரிகளுடன் கூடிய மலர்களும் காணப்படும். ஆற்றுப் பூவரசு எனப்படும் ஹை.டிலியேஷியஸ் (H.tiliaceous) குஞ்சலச் செம்பருத்தி எனப்படும் ஹை.சைஷோபெடாலஸ் (H. Schizopetalous) முதலியவற்றுடன் கலப்பு நடத்திய பின், இன்றைய செம்பருத்தி தோன்றியிருக்கலாம் எனக் கருதுகின்றனர். செம்பருத்திப் பூவைச் சீன ரோஜா, காலணிப் பூ என்றும் கூறுவர். இதன் தாயகமான சீனாவில் அக்காலத்திலிருந்தே, இம்மலர்களின் இதழ்களைக் கொண்டு, காலணிகளில் சாயம் ஏற்றும் வழக்கம் இருந்ததால், இப்பெயர்கள் வந்தன. தென்னாட்டில் சிவப்பு மலரோடு கூடிய பருத்திச் செடியையும், செம்பருத்தி என்று குறிப்பிடுவதுண்டு. அதிலிருந்து வேறு படுத்தும் வகையில், இதைச் செம்பரத்தை என்று கூறுவர். வளரியல்பு. செம்பருத்தி 2–3 மீ. உயரம் வளரக் கூடிய புதர்ச் செடியாகும். பொதுவாகக் கிளைகள் கீழிருந்தே தோன்றும். இலைகள். தனியிலை மாற்றிலையடுக்கு அமைப்பு, நீண்ட காம்பு கொண்டது. இலையடிச் செதில்கள் 2 சிறியவை. இலைப் பரப்பு முட்டை வடிவம். இலை ஓரங்கள் கீழ்ப் பக்கம் முழுமையாகவும், மேற்பக்கம் பற்கள் போன்றுமிருக்கும். 3 அல்லது 5 முக்கியமான நரம்புகள் கீழிருந்து தோன்றும். மலர்கள். இலைக்கோணத் தனி மஞ்சரி, மலர் பெரிதாகவும், பகட்டாகவும் அமைந்திருக்கும். மலரின் காம்பு இணைந்தது. அதாவது, மலர்க் காம்பின் நடுவில் ஒரு வளையத்தைக் காணலாம். அதன் மேற்பகுதியைப் பூக்காம்பு என்றும், கீழ்ப் பகுதியை மஞ்சரிக் காம்பு என்றும் தாவரவியலார் கூறுவர். மலர்கள், பூவடிச் செதில்கள் கொண்டவை. பூக்காம்புச் செதில்கள், 8–10 வரை புல்லி வட்டத்திற்கு வெளியே வட்டமாக அமைந்திருக்கும். இதையே புறப் புல்லி (epicalyx) என்பர். புல்லி வட்டம். 5 புல்லிகள் இணைந்து, கிண்ணம் போல் காணப்படும். அல்லி வட்டம். 5 அல்லிகள், தனித்துச் சிவப்பு வண்ணம் 'கொண்டிருக்கும். திருகு அமைப்பு. மகரந்தத் தாள்கள். எண்ணற்றவை. மகரந்தத் தாள்கள் 10 என்றும், அவற்றில் புல்லிகளுக்கு எதிரிலுள்ள ஐந்தும் மலடாக மாறி, மகரந்தத் தாள் குழலைத் தோற்றுவிக்கின்றன என்றும், தாவரவியலார் கருதுவர். அல்லிகளுக்கு எதிரிலுள்ள ஐந்தும் தொடக்க நிலையில் பிளவு படுவதால், இன்றைய நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். மகரந்தத் தாள்களின் குழல் நுனியிலுள்ள 5 பற்கள் போன்ற அமைப்பே மலட்டு மகரந்தத் தாள்களாகும். மகரந்தப் பைகள் அவரை வடிவம் கொண்டவை. ஓரறை மகரந்தப் பை. சூலகம். ஐந்து சூலிலைகள் இணைந்து, 5 சூலறை கொண்ட மேல் மட்டச் சூல் பை. எண்ணற்ற சூல்கள் அச்சு ஒட்டு முறையில் அமைந்துள்ளன. சூலகத் தண்டு மகரந்தக் குழல் மூலம் சென்று, நுனியில் வெளிப்படும். சூலக முடி ஐந்தாகக் கிளைத்திருக்கும். கனி. வளர்ப்புச் செடிகளில் கனிகள் தோன்றுவதில்லை. சூழ்நிலை. எவ்வகை மண்ணிலும் வளரும் தன்மையுடையது. உரமிட்டுப் பண்படுத்தப்பட்ட நிலத்தில் நன்கு வளரும். சாகுபடி. பொதுவாகப் பயிரிடப்படும் செம்பருத்திச் செடி, விதைகளைத் தோற்றுவிக்காமையால், விதையில்லா இனப் பெருக்க முறையே கையாளப்படுகிறது. போத்து நடுதலே சிறந்த முறையாகும். கிளைகளிலிருந்து முதிர்ந்த குச்சிகளை வெட்டி நடுவது வழக்கம். குச்சிகளை I.A.A. எனப்படும் வளர்ச்சி ஊக்கிகளில் நனைத்து ஊன்றுவதால், வேர்கள் விரைவில் தோன்றும். செடிகள் பொதுவாக, ஆண்டு முழுதும் பூக்கும் தன்மை பெற்றும், மழைக் காலத்தில் மட்டும் கூடுதலாகப் பூக்குந் திறன் பெற்றும் காணப்படும். வகை. வீட்டுத் தோட்டம், பூங்கா, கோவில் நந்தவனம் ஆகியவற்றில் பயிரிடப்படும் செம்பருத்திச் செடி, 5 சிவப்பு அல்லிகளைக் கொண்டிருக்கும். இதை ஒற்றைப் பூ என்பர். இது அனைத்துத் தட்ப வெப்ப நிலைகளிலும் வளரக் கூடியது. சில வகை, செண்டு அல்லது அடுக்குப் பூக்களைக் கொடுக்க வல்லது. இச்செடிகள் அடர் பச்சை இலைகளோடு காணப்படும், மேலும், இப்பூக்களிலுள்ள மகரந்தத் தாள்களே அல்லிகளாக மாறுவதாகத் தாவரவியலார் கூறுவர். அண்மைக் காலங்களில் இந்தியத் தோட்டங்களில், ஒரு வகைச் செம்பருத்தி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதை ஹை.ரோ வகைக் கூப்பிரி (H.r.Var.Cooperi) என்பர். இதன் இலைகள் ஒழுங்கற்று வெள்ளை அல்லது இளம் சிவப்பு வண்ணத் தட்டுகளுடன் காணப்படும். இவ்வகையில், மலர்கள் சரியாக வளராத போதும், வேறுபட்ட இலைகளுக்காகவே, தோட்டங்களில் இவை வளர்க்கப்படுகின்றன. இவ்வினங்களில் பசுமைப் பகுதி குறைவாக உள்ளமையால், சூரியக் கதிர்களை நேராக ஏற்கும் ஆற்றல் இல்லை. அதனால், இவ்வகைகளைக் கண்ணாடித் தோட்டம் அல்லது நிழற்பாங்கான இடங்களில் வளர்ப்பர். பயன்கள். செம்பருத்தி மலர், இலை ஆகியன பயன் படுகின்றன. சீனா போன்ற நாடுகளில், இம்மலரிதழ் சாயத்தின் உதவியால் தலை முடி, புருவம், உணவுப் பொருள், குடி நீர், தோல் முதலியவற்றிற்கு வண்ணமேற்றுகின்றனர். இலை, மலர் ஆகியன மருத்துவத்தில் பயன் படுகின்றன. நாட்டு மருத்துவத்தில் வேர்கள் பயனாகின்றன. ஆல்தேயா (Althaea) எனப்படும் செடியின் வேர், மிகவும் சிறந்த மருந்துப் பொருளாகும். செம்பருத்திச் செடியின் வேரைக் கொண்டு, அதைக் கலப்படம் செய்வர். மலேயா நாட்டில் பால் வினை நோய்களுக்கு வேரைப் பயன்படுத்துகின்றனர். இச்செடியின் இலை, மலரிதழ் ஆகியன சிறந்த வெப்ப நீக்கியாகும். செம்பருத்தியிலையை நீருடன் சேர்த்தரைத்து, வழவழப்பாக மாறியவுடன், அதைத் தலையில் தேய்த்துக் குளிப்பது வழக்கம், இதனால், கண்ணுக்குக் குளர்ச்சியேற்படும் எனக் கருதப்படுகிறது. சிலர் இதை மென்று தின்பதுமுண்டு. இதனால், உடல் வெப்பம் தணியும், மலேயா நாட்டில் கருத்தரித்த பெண்மணிகள் நலமான மகப் பேறு பெறச் செம்பருத்தி அல்லது மூக்குத்திப் பூண்டு எனப்படும் வெர்னோனியா சீனிரா (Veronia cinera) செடியின் இலைச் சாற்றை உட்கொள்வர். செம்பருத்திப் பூவில் தங்கச் சத்து இருப்பதாகச் சித்தர்களின் நூல் கூறுகிறது. நாற்பது நெல்லிடைப் பூவைத் தின்பதால், ஒரு நெல்லிடைத் தங்கத்தை உட்கொண்ட பயன் கிடைக்கும் என ஆயுர்வேத மருத்துவ நூல்களால் அறியப்படுகிறது. இப்பூக்களிலிருந்து பானம், குல்கந்து போன்றவற்றைத் தயார் செய்து மருந்தாகப் பயன் படுத்துவர். இவற்றைக் கொண்டு, கணைச் சூடு, எலும்புருக்கி, இதயத் துடிப்பு, உடல் எரிச்சல், இருமல் வகை, தலைப் பொடுகு, வெள்ளை, வெட்டை, கல்லீரல் வீக்கம் முதலிய பல வகை நோய்களைக் குணப்படுத்தலாம். குழந்தைகளுக்குக் கல்லீரல் வீங்குவதால், காய்ச்சல் ஏற்படும் போது, செம்பருத்திப் பூவின் சாறு சிறந்த கை மருந்தாகச் செயல் படுகிறது. காம்பு நீக்கிய பூவைத் தின்பதால், வெள்ளை, வெட்டை போன்ற நோய்கள் நீங்குமெனச் சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. பூக்களைக் கொண்டு, களிம்பு தயாரித்து வேனற் கட்டி, கொப்புளங்களுக்குப் போடுவதுண்டு. சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பூக்களைப் பச்சையாகவும், ஊறுகாயாகவும் உண்பதுண்டு. இலைகளில் கரோட்டின் உள்ளமையால், இது சிறந்த கால் நடைத் தீவனமாகும். நோய்கள். கோனிஃபோரா இன்ஃபண்டிபுலிஃ பெரா என்னும் பூசணத்தால், பூக்கள், அழுகல் நோயால் பாதிக்கப்படலாம். —தி. ஸ்ரீகணேசன் செம்பு இழப்பு செம்புக் கடத்திகளில் மின்னோட்டம் பாயும் போது, அதன் மின் தடையால் வெப்பமாக மாற்றப் பட்டு, ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது. இந்நிகழ்வு செம்பு இழப்பு (copper loss) எனப்படுகிறது. இது மின் மாற்றி, மின்னோடி, மின்னாக்கி போன்றவற்றில் ஏற்படுகிறது. மின்னோட்டத்தின் அளவை (ஆம்பியர்), ஈரடுக்கு மின் தடையின் அளவை (ஓம்), இரண்டையும் பெருக்கிச் செம்பு இழப்பு, வாட்களாகக் கணக்கிடப்படுகிறது. இது மின்னோட்டத்தின் பெருக்கல் மின் தடை இழப்பு எனப்படும். செம்பு இழப்பு முழுதும் வெப்பமாக மாற்றப் படுகிறது. அனுமதிக்கக் கூடிய வெப்ப உயர்வு மின் கருவிகளிலுள்ள மின்னோட்டத்தின் நியமத்தை அறுதியிடும். மேலும், அது செம்புக் கடத்திகளில் பயன்படும் மின் காப்புப் பொருள்களைப் பொறுத்து முடிவு செய்யப் படும். வெப்ப உயர்வைக் கட்டுப் படுத்தும் காரண எண்ணாகச் செம்பு இழப்பு உள்ளது. எந்த ஒரு மின் கருவி, மின் பளுவின் ஈரடுக்கால் மிகுதியாகும் நிலையான செம்பு இழப்பும், வேறுபடுகிற செம்பு இழப்பும் சமமாக இருக்குமாறு, குறிப்பிட்ட மின் பளுவில் இயங்குகிறதோ, அப்போது, அந்த மின் கருவி பெரும அளவு மின்திறம் (efficiency) பெற்று விளங்குகிறது. —மா. தாயுமானசாமி நூலோதி. B.L. Theraja, A Text Book of Electrical Technology, Sixteenth Edition, S.Chand and Co. Ltd, New Delhi, 1977. செம்பு உலோகக் கலவைகள் தனி உலோகமாகவோ, மற்ற உலோகங்களை உடன் கொண்ட கலவையாகவோ, பொறியியற் துறையில் சிறந்த முறையில் பயன் தரும் முதன்மையான உலோகங்களில் செம்பும் ஒன்று. இரும்பு, எஃகு இவற்றிற்கு அடுத்ததாக, இது முதன்மை பெறுகிறது. மின் துறையில் மட்டுமே, உலகத்தின் மொத்த செம்பு உற்பத்தியில் பாதி செலவாகிறது. தனி உலோகமாகத் தொழில் துறையில், பல்வேறு பண்புகளுடன் செம்பு காணப்படுகிறது. சில பண்புகள் மிகு மின்னியல் மற்றும் வெப்பங் கடத்தும் திறன், நல்ல துரு ஏறாத் தன்மை, எளிதாகக் கடைசல் செய்ய இயலும் தன்மை, மிதமான இழு திறன், கட்டுப்படத் தக்க வாட்டி பதப்படுத்தல் (annealing) குணம், சூட்டிளக்க இணைப்பு, மற்ற உலோகங்களுடன் கலவையாக மாறும் தன்மை போன்றவை. பொதுவாகச் செம்பு, செம்பு–இரும்பு சல்ஃபைடு தாதுவிலிருந்து கிடைத்த செம்பு சல்ஃபைடு எதிர் அனல் வெப்ப உலையில் (reverberatory furnace) உருக்கப்பட்டு, செம்பு, இரும்பு சல்பைடு முதலியவை கலவையாகப் பிரித்தெடுக்கப் படுகின்றன. இக்கலவை மேட் (matte) எனப்படும். இக்கலவையிலிருந்து, வேதியியல் முறையில், காற்றை அதன் மீது வீசச் செய்து, செம்பு சல்ஃபைடு, தூய செம்பு அல்லது பிளிஸ்டர் (blister) செம்பாக (98% செம்பு) மாற்றப் படுகிறது. இரும்பு சல்ஃபைடு முதலில் ஆக்சிஜனேற்றம் செய்யப் பட்டு, கசடாக வெளியேற்றப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஏறக் குறைய மாசுப் பொருள்கள் அனைத்தும் பிளிஸ்டர் செம்பிலிருந்து, தூய்மைப் படுத்தும் உலையில் சூடு படுத்தும் போது, கசடாகப் பிரித்தெடுக்கப் படுகின்றன. இவ்விதம், தீயின் மூலம் தூய்மை செய்யப்பட்ட செம்பு எனப்படுகிறது; வேறு சில மின்னியல் செயற்பாடுகளுக்காக, மின்னாற் பகுத்தல் முறையில், அதனால் உருவான செறிவு மிகு E.T.P. (electrolytic tough pitch copper) (99.95%) பெறப்படுகிறது. செம்பு–துத்தநாக உலோகக் கலவைகள் (copper–zinc alloys). செம்பு, துத்தநாக உலோகக் கலவைகள் பொதுவாகப் பித்தளை எனப்படுகின்றன. நுத்தநாகம் 5 சதவீதத்திற்கும் மிகுதியாக இருந்தால், பித்தளை எனப்படுகிறது. இரண்டு உலோகங்கள் உலோகச் சேர்மமாக மாறும் போது, பல்வேறு விதமான . இயற்பியல் பண்புகளைப் பெறுகின்றன. சில சமயங்களில் தனிப்பட்ட உலோகக் கலவைகள் (வேதியியல் விகிதத்தை அடிப்படையாகக் கொண்டவை) தனிப்பட்ட தேவைக்காக, வெப்பப் பதப்பாடு செய்யப்படுகின்றன. எந்திரவியல் செயற்பாடுகளுக்குத் தக்கவாறு செம்பு, துத்தநாகம் உலோகக் கலவைகள், பல வகைகளில் தேவையான விகிதங்களில் பயன்படுகின்றன. செம்பும், துத்தநாகமும் எளிய திண்மச் சேர்மமாக மாறுவதால், இயற்பியல் பண்புகள் குளிர்ச்சியான செயற்பாடுகளினால் உயர்த்தப் படுகின்றன. 20% துத்தநாகம் கொண்ட பித்தளை உயர் அளவிலான வளையும் தன்மை கொண்டதாக இருக்கிறது. நிலையான பித்தளை என்பது 70:30 பித்தளை ஆகும். (70% செம்பு, 30% துத்தநாகம்). பொறியியல் செயல்பாடுகளை நோக்கின், 35% துத்தநாகம், ஆல்பா (alpha) பித்தளைத் தயாரிக்க வரையறுக்கப் பட்ட அளவாகும்.30%ம் அதை விட உயர் அளவிலும், துத்தநாகம் கொண்ட பித்தளை உயர் தர பித்தளை என்றும், 30%க்குக் குறைவான துத்தநாகம் கொண்ட பித்தளை, கீழ்த் தர பித்தளை என்றும் குறிப்பிடப் படுகின்றன. செம்பு வெள்ளீய–வெண்கல உலோகக் கலவைகள் (copper–tin–bronze alloys). செம்பு, வெள்ளீய வெண்கல உலோகக் கலவைகள் பொதுவாக, வெள்ளீய வெண்கலம் என்றும், பாஸ்பர வெண்கலம் (phosphor bronze) என்றும் குறிக்கப் படுகின்றன. இவை செம்புடன் 10% வரை வெள்ளீயத்தைத் திண்மச் சேர்ம- மாக உலோகக் கலவையாக உருவாக்கப் படுகின்றன. மென் வெள்ளீயம் (wrought tin) பித்தளை, செம்பு–துத்தநாக பித்தளையை விட வலிமை வாய்ந்தது. குறிப்பாகக் குளிர்ந்த சூழ்நிலையில், நல்ல துரு ஏறாத் தன்மை கொண்டதாக விளங்கும். இதன் விலை சற்றுக் கூடுதலாக இருக்கும். —வி. சண்முகசுந்தரம் உலோகங்கள் கலப்பதால், செம்பின் தன்மைகளில் ஏற்படும் விளைவுகள். செம்பில் கலக்கப்படும் உலோகங்களில் ஆர்சனிக், ஆன்ட்டிமனி போன்றவை செம்புடன் சேர்ந்து ஒரு திண்மக் கரைசலாய் மாறுகின்றன. இவற்றைத் தவிர, பிஸ்மத், ஆக்சிஜன் போன்ற தனிமங்கள் திண்ம நிலைச் செம்பில் கரையாமலே, இருந்து விடுகின்றன. ஆர்சனிக் செம்பின் வளையுந் தன்மையையும், தகடாகும் தன்மையையும் பாதிக்காமலேயே, செம்பின் உறுதித் தன்மையும், வலிமையும் உயர்த்தப் படுகின்றன. கொதி கலன் குழாய்களின் செம்புடன் 0.5% வரை ஆர்செனிக் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், 0.1% ஆர்சனிக் தனிச் செம்பின் மின் கடத்துந் தன்மையை 25% வரை குறைத்து விடுகிறது. ஆன்ட்டிமனி மின்கடத்துத் தன்மையைப் பெரும்பான்மையாக குறைப்பதுடன், நொறுங்குந் தன்மையையும் உருவாக்கி விடுகிறது. 0.005% அளவுக்குக் குறைந்து காணப்படும் அளவில் உள்ள பிஸ்மத் கூடச் செம்பில் நொறுங்குந் தன்மையை மிகுதியாக்கி விடுகிறது. இதனால், பிஸ்மத் கலந்த செம்புக் கம்பி உருவுகைக்குப் பயனற்றதாகி விடுகிறது. ஆக்சிஜன் செம்பின் உறுதியை மிகுதிப் படுத்துகிறது. சில வகைக் செம்புக் கலவைகளில் நொறுங்குந் தன்மையைக் கட்டுப்படுத்த, ஆக்ஸிஜன் தேவைப் படுகிறது. செம்பு உலோகக் கலவை- வகைகள். இவற்றைப் பொதுவாக மூன்றாகப் பிரிக்கலாம். அவை: மிகக் குறைந்த அளவு பிற உலோகம் கலந்த செம்பு பித்தளை (செம்பு, துத்தநாகக் கலவை) வெண்கலம் (செம்பு, தகரம் சேர்ந்த கலவை) இவற்றின் உட்பிரிவுகளை முறையே அட்டவணை 1, 2, 3 இல் காணலாம். நாகம் 1% மாங்கனீஸ் நாகம் —வயி. அண்ணாமலை நூலோதி. M.M. Schwartz, Metals Joining Manual, McGraw-Hill Book Company, London, 1979. செம்புனலலைத் துணி தெளிவாக அலைகளைப் போன்று தோற்றமளிக்கும் ஈரத் துணிகள் செம்புனலலைத் துணி (moire) எனப் படும். துணியின் மேற்பரப்பிலுள்ள பல பகுதிகளிலிருந்து, ஒளி எதிர்பலிப்பதால் (reflection), இது அலைத் தோற்றம் பெறுகிறது. பட்டு, பருத்தி, ரேயான் இழைகளால், இவை பெரும்பான்மையாகத் தயாரிக்கப் படுகின்றன. இதில் முகப்பு நூல்கள், மிக நெருக்கமாக அமைக்கப்படுகின்றன. ஆனால், நேராக நூல்கள் விறைப்பாகவும், கடினமாகவும் காணப்படும். ஒரே தரமுள்ள இரு துணிகளையோ, ஒரே துணியையோ இரண்டாக மடித்து, நேருக்கு நேராக வைத்து ஈரமாக்கி, இரு வெப்ப உருளைகளுக்கிடையே அழுத்தம் கொடுக்கப் படுகிறது. இதுவே வழக்கமாகச் செய்யப் படும் ஈரமாக்கும் செயல் முறையாகும். நுணிகளிலுள்ள இரு மேல் வரிகள் (rib) ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பின், மேற் பரப்பிலுள்ள நூல்கள் தட்டையாகக் காணப்படும்; ஆனால், ஒரு துணியிலுள்ள மேல் வரி அடுத்த துணியிலுள்ள மேல் வரிக்கிடையே வந்தால், நூல்கள் வட்டமாகக் காணப்படும். எதிர்ப் பக்கங்களிலிருந்து நோக்கினால், இத்துணி அடர் மற்றும் வெளிர் நிழல்களை மாறி, மாறிக் காட்டுகிறது. இதில், முற்றிலும் வேறுபட்ட வடிவமைப்புக் காணப்படும். மற்றொரு முறையில், துணியின் மேற்பரப்பை ஓர் உருளை செயல் படுத்துவதால், துணியில் தேவையான அலை வடிவமைப்புப் பதிக்கப் படுகிறது. இத்துணிகளிலுள்ள நேரான நூல்களுக்கு மெருகூட்டப் பட்ட பருத்தி இழைகள், கடினமாக இருப்பதால் பயன் படுகின்றன. இவை அழுத்த உருளைகளின் செதுக்கச் செயல்பாட்டைத் தாக்கி, தெளிவான அலை நெளிவு தோற்றம் ஏற்பட உதவுகின்றன. —இரா. சரசவாணி நூலோதிZ. Grosicki, Watson's Textile Design and Colour, Seventh Edition, Butterworth and Co Ltd., London, 1975. செம்பூ மரம் இதன் வேறு பெயர்கள் மயில் பூ, மயில் ரோஜா, புனித ஆவி மரம் என்பன. ஈஸ்டர் பண்டிகைக்கு 50 நாளுக்குப் பின், பெந்தேகோஸ்த் விருந்தின் போது, இம்மரம் மிகுதியான பூக்களைத் தோற்றுவிப்பதால், இதைப் புனித ஆவி மரம் என்பர். இம்மரத்தின் தாவரப் பெயர் டெலானிக்ஸ் ரீஜியா (Delonix regia) என்பதாகும். இதற்குப் பாயின்சியானா ரீஜியா (Poinciana regia) என்ற இணை தாவரப் பெயரும் உண்டு. செம்பூ மரம் லெகுமினேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் மடகாஸ்கர் ஆகும். இம்மரம் மிதமாகவே வளர்ச்சியுறும் தன்மை கொண்டது. சம வெளிகளிலும், மலைப் பகுதிகளில் 750–1200 மீ. உயரமான இடங்களிலும், பொதுவாக வளர்கிறது. வாத நாராயணன் பேரினத்தைச் சேர்ந்த இம்மரம் அதனைப் போல், நன்கு கிளைப்பது இல்லை; மிகு வளர்ச்சியைத் தருவதும் இல்லை; களர் நிலப் பகுதிகளில் நன்கு வளர்வதும் இல்லை; அடி மரம் வாத நாராயணன் மரத்தை விடச் சிறியதாக இருக்கும். மரம். முள் இல்லாத இம்மரத்தில், இலைகள் இரட்டைச் சிறகுக் கூட்டிலை அமைப்பில் இருக்கும். இலையடிச் சிதல்கள் சிறியவை. சிற்றிலைகள் இளம் பச்சை நிறத்தில் சிறியவையாக இருக்கும். ஒவ்வொரு கூட்டிலையும் 50 செ.மீ. நீளத்தில் இருக்கும். ஒவ்வோர் இலையிலும் 10–20 சிற்றிலைகள் காணப் படும். ஒவ்வொரு சிற்றிலையும் 6 மி.மீ. நீளமானது. பிப்ரவரி–மார்ச் மாதங்களில் இலைகள் உதிர்கின்றன. மரத்தில் உள்ள இலைகள் முழுதும் உதிர்ந்த பிறகே, பூக்கத் தொடங்கும். பூக்கள் கொப்புகளின் நுனியில் மிகப் பெரிய ரெசீமாக இருக்கும். பூவடிச் சிதல்கள் உதிரும் தன்மை கொண்டவை. பூக்காம்புச் சிதல்கள் இல்லை, புல்லிக் குழல் குட்டையானது. இதில் வெவ்வேறு ஐந்து கதுப்புகள், ஒழுங்கற்ற தொடு இதழ்களாக இருக்கும். அல்லிகள் சிவப்பு, ஆரஞ்சு மஞ்சள் கலந்த நிறங்களில் ஒளிரும். அல்லி இதழ்கள் தேக்கரண்டியின் வடிவத்தில், அழகான நெளிவுடைய விளிம்புகளைக் கொண்டுள்ளன. மேற்பகுதியில் உள்ள அல்லி மட்டும் வெள்ளையாகவும், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கோடுகளுடனும் காணப்படும். பத்து மகரந்தக் கேசரங்கள் தனித் தனியாகவும் வெளியே தெரியுமாறும் இருக்கும். மகரந்தப் பைகள் சீராக இருக்கும். சூல் பையில் சூல்கள் பல உள்ளன. சூலகத் தண்டு இழை போன்றது. சூலக முடி முனை முறிந்தது. காய்கள் 75 செ.மீ. நீளத்திலும், 5 செ.மீ. அகலத்திலும் உள்ளன. முற்றிய நெற்று உறுதியாகவும், தட்டையாகவும், கறுப்பாகவும் இருக்கும். பிஞ்சு, காய்கள் ஆகியன பச்சையாக இருக்கும். நெற்றுகள் வெடித்து, நீள் சதுரமான விதைகளைச் சிதறச் செய்யும். வளர்ப்பு முறை. விதை மூலம், இனப் பெருக்கம் நடைபெறுகிறது. நெற்றுகளை வெயிலில் உலர்த்திக் குச்சியால் அடித்து, விதைகளைத் தனித்தெடுக்கலாம். விதைகளை வெந்நீரில் 70–80°C ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து விதைக்க வேண்டும். பாலித்தீன் பைகளில் தயாரித்து வைக்கப்பட்ட மண்–மட்குக் கலப்பில், விதைகளை ஊன்றிக் கன்றுகள் தயாரித்து நடலாம். ஏறக் குறைய, 10–12 மாத வயதுடைய கன்றுகளை ஊன்றிக் கால் நடைகள் மேயாமல், பாதுகாத்து வளர்க்க வேண்டும். இவ்வாறு விதைத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் மரத்திலிருந்து பூக்கள் உண்டாகும். பதியன் முறையில் நட்டும், இனப் பெருக்கம் செய்யலாம். பயன்கள். பூக்கள் நேராகவும், கண்ணைக் கவரும் தோற்றத்திலும் உள்ளமையால், சாலை ஓரங்களில் நடுவதற்கும், பூங்காக்களில் வளர்ப்பதற்கும், இம்மரம் ஏற்றதாகும். மரக் கட்டை வெள்ளையாகவும், எடை குறைந்தும் இருக்கும். மரத்தின் கிளைகளை வெட்டி, இழைத்து, அரிவாள், களைக் கொத்துகளுக்குக் கைப் பிடி செய்யலாம். பொருள்களை அனுப்பும் பெட்டிகள் செய்யலாம். ஓரளவே நிழல் தரும் இம்மரத்தின் தழைகளை வெட்டி, நெல் வயலுக்குப் பசுந்தழை உரமாக இடலாம். —கோ.அர்ச்சுணன் செம்பெயர்ச்சி விண் இயற்பியல் வளர்ச்சியில், செம்பெயர்ச்சி (redshift) பெரும் பங்காற்றுகிறது. பேரண்ட வெளியில் (universe) பொதுத் தன்மை, பல்லாயிரக் கணக்கான ஒளி ஆண்டுகளுக்கு (light year) அப்பால் உள்ள விண்ணுறுப்புகளின் சிறப்புத் தன்மை, விண் மீன்களின் சார்பு இயக்கங்கள், அவற்றின் வளர்ச்சிப் படிகள் பற்றிய உண்மைகள் போன்ற பல்வேறு கருத்துக்களைப் புரிந்து கொள்ள, செம்பெயர்ச்சித் தொடர்பான அறிவு பயன்படும். ஓர் அணுவின் நிற மாலையில் உள்ள வரிகள், அவ்வணுவில் உள்ள எலெக்ட்ரான்கள் ஆகியன ஒரு புறச் சுற்றுப் பாதையிலிருந்து, ஓர் அகச் சுற்றுப் பாதைக்குத் தாவுவதால், செம்பெயர்ச்சி ஏற்படுகிறது. இதன் படி, எலெக்ட்ரானின் ஒரு குறிப்பிட்ட இடைத் தாவலுக்கு ஓர் அணு, தன் இயல்பான சூழ்நிலையில் என்னும் ஒரு குறிப்பிட்ட அலை நீளமுடைய மின் காந்த அலையை மட்டும் உமிழும் என்றும், நிற மாலையில் காணப்படும் வெவ்வேறு வரிகள் எலெக்ட்ரான்களின் வெவ்வேறு இடைத் தாவல்களின் விளைவே ஆகும் என்றும் கூறலாம். ஒரு சில காரணங்களின் பொருட்டு, மனிதரால் உணரப் படும் அலையின் அலை நீளம், அணுவால் உமிழப் படும் அலையின் அலை நீளத்திலிருந்து, வேறு படலாம். இவ்வேறுபாடு, நிற மாலையில் காணப் படும் பெயர்ச்சிக்குக் காரணமாகிறது, உணரப் படும். அலையின் அலை நீளம் λ எனில், அலை நீள வேறுபாடு (λ-λ₀) ஆகும், பொதுவாக நிற மாலைப் பெயர்ச்சி, ஒரு குறிப்பிட்ட அலையின் அலை நீளத்தில் காணப்படும் வேறுபாட்டிற்கும் (λ-λ₀) அதன் இயல்பு அலை நீளத்திற்கும் உள்ள தகவால் குறிக்கப் படும். இந்தப் பின்ன வேறுபாட்டை (fractional change) என்று குறிப்பிடுவது மரபு. Z = \frac {\lambda - \lambda_0}{\lambda_0} Zஇன் மதிப்பு சுழிக்கு மேற்பட்டு, நேர் மதிப்புக் (positive) கொண்டிருப்பின், பெயர்ச்சி உயர்வலை நீளப் பக்கமும் (நிற மாலையில் சிவப்பு முனை) சுழிக்குக் கீழே எதிர் மதிப்புடையதாக (negative) இருப்பின், பெயர்ச்சி தாழ்வலை நீளப் பக்கமும் (நிற மாலையில் ஊதா முனை) இருக்கும். முன்னதைச் செம்பெயர்ச்சி என்றும், பின்னதை நீலப் பெயர்ச்சி (blue shift) என்றும் கூறுவர். செம்பெயர்ச்சியின் வகை. செம்பெயர்ச்சியில் மூன்று வகை உண்டு. முதல் வகை, ஒளி மூலத்திற்கும், காண்போருக்கும் இடையில் காணப்படும் சார்பு வேகத்தின் பொருட்டு ஏற்படும் டாப்ளர் விளைவால் உண்டாவதாகும். பெயர்ச்சியின் தன்மை மற்றும் மதிப்பைக் கொண்டு ஒளி மூலம் புவியை நோக்கி நெருங்கி வருகிறதா அன்றி விட்டு விலகிச் செல்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம். நேர் பெயர்ச்சி (positive shift) விலகிச் செல்வதையும், எதிர்ப் பெயர்ச்சி (negative shift) நெருங்கி வருவதையும் குறிப்பிடுகின்றன என்று விண்ணியலார் கூறுகின்றனர். இதன் மூலம், மீதொலைவில் உள்ள விண் மீன்களின் இயக்கங்களை அறிந்து கொள்ள முடிகிறது. இரண்டாம் வகைப் பெயர்ச்சியைப் பொதுச் சார்புக் கொள்கையில் (general theory of relativity) புரிந்து கொள்ள முடியும். இவ்வகைப் பெயர்ச்சி ஈர்ப்பியல் செம்பெயர்ச்சி (gravitational red shift) எனப்படும். ஒரு விண் மீனால் உமிழப்படும் ஒளி, அதன் ஈர்ப்பினாலேயே பாதிக்கப் படுகிறது. ஒளியை ஃபோட்டான் (photon) எனப்படும் ஒளித் துகள்களாகக் கருதினால், இத்துகள் விண் மீனின் வலிமையான ஈர்ப்பை எதிர்த்து வெளியேற வேண்டியுள்ளது. அதற்குத் தேவையான ஆற்றலை, அது தன் இயக்க ஆற்றலிலிருந்தே பெற விழைவதால், அதன் இயக்க வேகம் தாழ்வுற அதற்கேற்ப, அதன் அலை நீளம் அதிகரிக்கிறது. அதாவது செம்பெயர்ச்சி ஏற்படுகிறது. எனவே, ஒளி, வலிமை மிகுந்த ஈர்ப்புப் புலத்திலிருந்து, வலிமை குறைந்த ஈர்ப்புப் புலத்திற்குச் செல்லும் போது செம்பெயர்ச்சி உண்டாகிறது. அண்ட வெளியிலிருந்து புவியை வந்தடையும் போது, ஒளி வலிமை குறைந்த ஈர்ப்புப் புலத்திலிருந்து, வலிமை மிகுந்த ஈர்ப்புப் புலத்திற்குச் செலுத்தப்படுகிறது. ஈர்ப்பு முடுக்கம் காரணமாக ஒளித் துகளின் இயக்க வேகம் அதிகரிப்பதால், ஒளியின் அலை நீளம் தாழ்வுறுகிறது. இது நீலப் பெயர்ச்சிக்குக் காரணமாகிறது. ஒளி மூலமான விண் மீன்களின் ஈர்ப்புப் புலத்துடன் ஒப்பிட, புவியின் ஈர்ப்புப் புலம் செறிவற்றதே. இதனால், செம்பெயர்ச்சியின் அளவை விட, நீலப் பெயர்ச்சியின் அளவு புறக்கணிக்கக் கூடியவாறு, மிகவும் குறைவாக இருக்கும். இதனால், ஈர்ப்பியல் பெயர்ச்சிக் காரணமாக எப்போதும் செம்பெயர்ச்சியே ஏற்படுகிறது என்றும், நீலப் பெயர்ச்சி ஏற்படுவதில்லை என்றும் கூறலாம். ஈர்ப்பியல் செம்பெயர்ச்சியின் அளவு, ஒரு விண் மீனின் நீளம், அதன் ஆரம் ஆகியவற்றின் தகவிற்கு நேர் விகிதத்தில் இருக்கிறது. இதனால், ஈர்ப்பியல் செம்பெயர்ச்சியின் மதிப்பு மிகவும் தாழ்ந்ததாக உள்ளது. நியூட்ரான் விண் மீன் (neutron star) கருந்துளை விண் மீன் (black hole star) என்று விண் மீனின் வளர்ச்சிப் படிகளில் நிறை செறிவு மிக்கனவாக விளங்கும் விண் மீன்களில் மட்டுமே, ஈர்ப்பியல் செம்பெயர்ச்சி குறிப்பிடும் படியாக இருக்கிறது. மூன்றாம் வகைச் செம்பெயர்ச்சி, இப்பேரண்டம் தொடர்ந்து, விரிவடைந்து கொண்டிருப்பதால், ஏற்படுகிறது. விரிவடையும் போது, வெவ்வேறு இடம், காலங்களில் ஒளி உமிழ்தலும், அதை உணர்தலும் நிகழ்வதால், இப்பெயர்ச்சி உண்டாகிறது. இதை அண்டவியல் செம்பெயர்ச்சி (cosmological red shift) என்று கூறுவர். அண்டம், தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருப்பதால், இவ்வகையில் நீலப் பெயர்ச்சி ஏற்படுவதில்லை. செம்பெயர்ச்சியும் விண் இயற்பியல் துறை வளர்ச்சியும். செம்பெயர்ச்சியின் போது, அலை நீள வேறுபாடு நிற மாலையில் காணப்படும் அனைத்து வரிகளுக்கும், சம விழுக்காட்டில் இருக்கும். காட்டாக, 0.1 என்னும் செம்பெயர்ச்சிக் கொண்டுள்ள ஓர் அண்டத்தின் நிற மாலையில் 861 A அலை நீளமுள்ள ஹைட்ரஜன் வரி 486 A அலை நீள மாற்றம் பெற்று, 5347 A அலை நீளமுள்ள வரியாகப் பெயர்ச்சி அடைகிறது. அது போல, 6563 A அலை நீளமுள்ள வரி 656 A அலை நீள மாற்றத்திற்கு உள்ளாகி, 7219 A அலை நீளமுள்ள வரியாகப் பெயர்ச்சி அடைகிறது. பல்வேறு அண்டங்களின் செம்பெயர்ச்சியின் அளவை மதிப்பீடு செய்த போது, மிகத் தொலைவில் உள்ள அண்டங்கள், அருகாமையில் உள்ள அண்டங்களை விடக் கூடுதலான செம்பெயர்ச்சியைப் பெற்றிருக்கின்றன எனும் பேருண்மை தெரிய வந்தது. இது அண்டத்தில் செம்பெயர்ச்சிக்கும், அது புவியிடமிருந்து விலகியுள்ள தொலைவிற்கும் இடையே ஒரு நெருக்கமான தொடர்பு இருக்க வேண்டும் என்பதைப் புலப்படுத்துவதாக உள்ளது. ஹபுள் <!---- https://en.wikipedia.org/wiki/Edwin_Hubble ---->எனும் விண்ணியலார் 1928ஆம் ஆண்டில், இத்தொடர்பை உறுதி செய்தார். இவரின் கருத்துப்படி பேரண்ட விரிவின் காரணமாக ஓர் அண்டம் பேரண்ட மையத்திலிருந்து விலகிச் செல்லும் வேகம், அவ்வண்டத்தின் செம்பெயர்ச்சிக்கு நேர் விகிதத்தில் இருக்கின்றது. இதை \upsilon = CZ என்று குறிப்பிடுவர். C என்பது வெற்றிடத்தில் ஒளியின் திசை வேகமாகும். செம்பெயர்ச்சியின் அளவு அண்டம் இருக்கும் தொலைவிற்கு நேர் விகிதத்தில் இருக்கிறது என்பதால், இதை \upsilon = HD என்று காட்டலாம். இதில் D என்பது அண்டம் புவியிடமிருந்து விலகி இருக்கும் தொலைவைக் குறிப்பிடுகிறது. H என்பது ஹபுள் மாறிலி அண்ட இடைவெளி மெகா பார்செக் (MPC) (1 பார்செக் = 3.0856 × 1016 மீட்டர்) என்ற அலகில் குறிப்பிடப்படும். எனவே, ஹபுள் மாறிலியின் அலகு, கி. மீ/நொடி / மெகா பார்செக் ஆகும். இந்த அலகில் H இன் மதிப்பு 53 ஆகும். எண்ணிலாத் தொலைவில் உள்ள அண்டங்களின் தொலைவு மற்றும் அவற்றின் தனிச் சிறப்பு இயக்கங்களை அறிந்து கொள்ள இவ்விதி பெரிதும் பயன் படுகிறது. —மெ. மெய்யப்பன் <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்து ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> செம்மந்தாரை இதன் வேறு பெயர்கள் இந்திர நீலப் பாஹினியா, சிவப்பு மந்தாரை, கருஞ்சிவப்பு மந்தாரை, மந்தாரை, காட்டுக் கருங்காலி, செம்பூவாத்தி, நீலத் திருவாத்தி, பெரிய திருவாத்தி என்பன. செம்மந்தாரையின் தாவரப் பெயர் பாஹினியா பர்புரியா (Bauhinea purpurea). இதற்கு பா. ட்ரையாண்ட்ரா (B.triandra) என்னும் பெயரும் உண்டு. இந்தியாவில், இமய மலை அடிவாரத்தில் 1200 மீ. உயரம் வரை தானே வளரும், பசுமை மாறாத மரங்களுள் இதுவும் ஒன்று. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இம்மரத்தை விரும்பி வளர்க்கின்றனர். சண்டிகார் நகரில் சாலை ஓரங்களில் அழகுக்காக, விரும்பி வளர்க்கப்படுகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> வளரியல்பு. இம்மரம் 15 மீ. உயரம் வளரும். சிறு கிளைகள் முண்டு முடிச்சுகளுடன் காணப்படும். இலைகள் கால் நடைகளின் குளம்புகளைப் போல் பிளந்திருக்கும். சில சமயங்களில், குளம்பு போன்ற கதுப்புகள் ஒன்றன் மீது ஒன்றாக இருக்கும். இலைகள் நீள் சதுர வடிவானவை; 11–13 நரம்புகள் இருக்கும்; கீழ்ப் பகுதியில் சடை போன்றிருக்கும்; ஓரம் முழுமை- யானது. நுனி மழுங்கியோ, சற்றுக் கூர்மையாகவோ இருக்கும். இலைக் காம்பு 3 செ.மீ. நீளமானது. இலையடிச் செதில்கள் முக்கோண வடிவமுள்ளவை. மஞ்சரி, கொப்புகளின் நுனியிலோ, இலைக் கக்கங்களிலோ ரெசீமாகவோ, கதிராகவோ 15 செ.மீ. நீளத்தில் இருக்கும். மஞ்சரிக் காம்பு தடிப்பாக 5 செ.மீ. நீளத்தில் இருக்கும். பூவடிச் சிதல்கள், முட்டை வடிவானவை; 4 செ.மீ. அளவுள்ளவை. மொட்டுகள் குறுகியும், தலை கீழ் முட்டை வடிவிலும், முனை மழுங்கியும் இருக்கும். பூக்கள் செப்டம்பர் மாதத்தில் மிகுதியாகப் பூக்கும். இதன் நுனி, இரண்டாகப் பிளவுற்றிருக்கும். அல்லி இதழ்கள் ஐந்தும், ரோஜா அல்லது இளஞ் சிவப்பு, நீலங் கலந்த சிவப்பு நிறத்தில் ஒரே மாதிரியாக இருக்கின்றன. இவை தலை கீழ் முட்டை வடிவில் 3.5 X 1.5 செ.மீ. காணப்படும். மகரந்தக் கேசரங்கள் ஐந்து. மகரந்தத் தாள் 2.5 செ.மீ. நீளமானது. சூல்கள் பல. சூலகத் தண்டு 1 செ.மீ. நீளமானது. சூலக முடி உருண்டையானது. நெற்றுகள் நீள் சதுரமானவை; தட்டையானவை. காம்பருகின் பகுதி குறுகியிருக்கும். நெற்றின் நுனி கொம்பு போல் வளைந்திருக்கும். ஒவ்வொரு கருஞ் சிவப்பு நிற நெற்றிலும், 10 முட்டை வடிவ விதைகள் இருக்கும். பயன்கள். இம்மரத்தை அழகுக்காகச் சாலை ஓரங்களிலும், தோட்டங்களிலும் வளர்ப்பதுண்டு. மரக் கட்டை சாம்பல் கலந்த பழுப்பு நிறமுடையது. காற்றில் உலர்ந்த மரக் கட்டை ஒரு கன அடி 16.3 கி.கி. எடையுடன் இருக்கும். இதனைத் தண்டு துளைப்பான், கறையான் ஆகியன பாதிக்கலாம். இம்மரத்தை வேளாண் கருவிகள், அளவுப் படி (scantling), தோணி மரம் போன்ற கட்டுமான வேலைகளுக்குப் பயன்படுத்தலாம். விதையில் 15% எண்ணெய் அடங்கியுள்ளது. பட்டையில் டானின் அடங்கியுள்ளது. இதன் பட்டை, தோல் பதனிடவும், சாயம் தயாரிக்கவும் பயன்படுகிறது. மரத்தைக் கட்டடம் கட்டுவதற்குப் பயன்படுத்தலாம். இதன் மரக் கட்டை ஓரளவே உறுதியாக இருக்கும். இலைகளைக் கால்நடைகளுக்குத் தீவனமாகத் தரலாம். தேனீக்கள் மகரந்தத்தையும், தேனையும் சேகரிக்க இம்மரத்தைத் தேடி வருகின்றன. இம்மரத்தின் பூ, பட்டை முதலியவை மருந்துக்கு உதவுகின்றன. வேர்ப் பட்டை, நச்சுத் தன்மை கொண்டது. இம்மரப் பட்டைக் குடி நீர் வயிற்றுப் போக்குக்கு உதவுகிறது. பட்டை, வேர், பூ ஆகியவற்றை அரிசிக் கஞ்சியில் அரைத்துத் தடவக் கொப்புளம் பழுத்துக் குணம் உண்டாகும். பட்டைக் குடி நீரைக் கொண்டு, அழுகிய புண்களைக் கழுவலாம். பட்டையைச் சுக்குத் தூளுடன் சேர்த்துக் கழுநீர் விட்டரைத்துக் கண்ட மாலைக்குப் பூசலாம். பட்டையுடன், வேலம் பட்டை, மாதுளம் பூ ஆகியவற்றைச் சேர்த்துக் குடி நீரிலிட்டு வாய்க் கொப்பளித்து வர, வாய் நீரூறல், தொண்டைப் புண் முதலியவை நீங்கும். பூக்களுக்கு மலத்தை இளக்கும் குணமுண்டு. காய்ந்த பூ மொட்டுகளைச் செரியாமைப் பேதிக்கும், பூச்சிகளைக் கொல்வதற்கும் பயன்படுத்தலாம். பூ மொட்டுகளைக் குடி நீரிலிட்டுத் தர, இருமல், குருதிப் போக்கு, பெரும்பாடு ஆகியன நீங்கும். கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும் எண்ணெயிலும் இது சேர்க்கப்படுகிறது. —கோ.அர்ச்சுணன் செம்மரம் இம்மரங்களின் கட்டைகளும், பட்டைகளும் கொண்ட நிறத்தாலோ, வெட்டப்படும் போது, மரப்பட்டையிலிருந்து பால் வடிவதாலோ, இவற்றைச் செம்மரங்கள் என்பர். செம்மரம் என்ற வட்டாரப் பெயரைக் கொண்ட மரங்கள் பல உண்டு. தவிர, இம்மர இனங்களிடையே வேறு எந்த உறவு முறையும் இல்லை. லுஷிங்டன் என்பார் செம்மரம் என்ற பெயரைக் கொண்ட மரங்களின் பட்டியலைத் தந்துள்ளார். (பக்கம் 749) அஃபேனோ மிக்ஸிஸ் பாலிஸ்டேகியா. இதன் முந்தைய தாவரவியல் பெயர் அமூரா ரோகிடுகா (Amoora rohituka). இம்மரம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் பசுமை மாறாக் காடுகளில் காணப்படும். 10–20 மீ. வளரக் கூடிய இம்மரத்தின் அடி மரம், 2 மீ. சுற்றளவு இருக்கும். அஸ்ஸாம், வங்காளம் ஆகிய மாநிலங்களில் காணப்படும். மரம் அறுக்கப்பட்டவுடன், சிவப்பாகவும், காற்றுப் பட்டவுடன் செம்பழுப்பு நிறமாகவும் மாறி விடும். தச்சு வேலைக்குக் குறிப்பாக, இழைப்பிற்கு மிகவும் ஏற்றது. மெருகு வேலைக்குப் பிறகு, பளபளப்பாகத் தோன்றும். மரக் கட்டைகளைத் தோணி, படகு, கட்டு மரம் தயாரிக்கப் பயன்படுத்துவர். விதைகளிலிருந்து எடுக்கப்படும் சிவப்பு நிற எண்ணெய், மருந்தாகப் பயன்படும். சோய்மீடா ஃபெப்ரிஃப்யூகா. வேம்புக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மரத்தைச் சோழ-மண்டலச் செம்மரம், இந்திய-மகாகனி என்றும் கூறுவர். மத்திய, தென்னிந்திய தாழ்ந்த குன்றுகளிலும், உலர் காடுகளிலும் நன்றாக வளரும். செம்மண் நிலம் இதற்கு ஏற்றது. கட்டையின் வைரம் பாய்ந்த பகுதி, சிவப்பாகவும், மென்மரம் குறுகலாகவும், வெண்மையாகவுமிருக்கும், வைரம் பாய்ந்த பகுதி, நெருக்கமான ரேகைகளுடன் கடினமாக இருக்கும். இவை கறையானால் பாதிக்கப் படுவதில்லை. கட்டைகள் வீடு கட்டவும், கிணற்றுச் சகடை, கலப்பை, உழவு கருவிகள், நாட்டுச் செக்கு ஆகியவை செய்யவும் பயன்படுகிறது. கசப்பான மரப் பட்டை மருந்தாகப் பயன்ப டுகிறது. கொயிலாப் பட்டை போல், இதுவும் காய்ச்சலுக்குப் பயன்படுவதால், இதற்கு இச்சிற்றினப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தோல் பதனிடுவதற்கும், வலிமையான கயிறு திரிக்கவும் பட்டைகளைப் பயன்படுத்துவர். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> டெரொகார்பஸ் சாண்டலைனஸ் என்ற சிவப்பு அல்லது செஞ்சந்தனம் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடக மாநிலக் காடுகளில் கற்பாங்கான, ஈரப் பசையற்ற மலைப் பகுதிகளில் மிகுதியாக வளரும். கனத்த மரப் பட்டையைக் கொண்ட இம்மரங்கள் வெட்டப்படும் போது, சிவப்பு நிறப் பால் வெளிப் படும். காய்ந்த கட்டைகளை ரம்பம் மூலம் அறுப்பது சற்றுக் கடினமானதால், கோடாரி மூலம் வெட்டுவர். உளி மூலமே செதுக்குவர். ஜப்பானில், கட்டையைக் கொண்டு ஒரு வகை இசைக் கருவி செய்வதால், பெருமளவில் கட்டைகள் அங்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. இக்கட்டைகளைக் கொண்டு திருப்பதிப் பொம்மைகள், படச் சட்டங்கள் கடைசல் பொருள்கள் ஆகியன தயாரிப்பர். இம்மரத்தில், சிவப்பு நிற வேதிப் பொருளான சாண்டோலின் காணப்படுகிறது. டெரோகார்பஸ் டால்பர்ஜியாய்டஸ். வேங்கை என்று கூறப்படும் இம்மரம் பொதுவாக, அந்தமான் தீவுகளில் பெரிதும் காணப்படுகிறது. அரிதாக, மேற்கு வங்காளத்திலும், தென்னிந்தியாவிலும் இதைக் காணலாம். மரத்தின் மென்கட்டை குறுகியும், பழுப்பு நிறத்துடனும் இருக்கும். வைரம் பாய்ந்த கட்டை இளஞ்சிவப்பும், ரேகையும் கூடிய ஒளிர் நிறம் கொண்டிருக்கும். கனமாகவும், கெட்டியாகவும், வலிவாகவும் காணப்படும். அழகான வண்ண ரேகைகளைக் கொண்டதால், அடி மரம் பெரிதும் விரும்பப் படுகிறது. கை, எந்திர ரம்பம் மூலம் எளிதில் அறுக்கலாம். தேக்கு மரப் பண்புகளை ஒத்துள்ள இது, நுணுக்கமான, அழகான கடைசல் வேலைகளுக்கு மிகவும் ஏற்றது. கப்பலில் அறை முதலிய பல மர வேலைகளில் இது பயன்படுகிறது. அடினாந்தீரா பவோனினா. நடுத்தர உயரம் கொண்ட இம்மரம், 20–25 மீ. வளரக் கூடியது. இமய மலையை அடுத்த பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலை, அந்தமான் காடுகள் இவற்றில் காணலாம். தற்சமயம் இவை சாலை மரங்களாகவும் வளர்க்கப் படுகின்றன. வைரம் பாய்ந்த கட்டை சிவப்பாக இருப்பதால், செஞ்சந்தனத்திற்குப் பதில் மர வேலைகளில் பயன் படுகிறது. அலமாரி, பெட்டிகள் செய்ய ஏற்றது. கட்டையைப் பொடி செய்து, அதைக் கொண்டு, நாமச் சிவப்புத் தயாரிக்கின்றனர். எரித்ராக்சைலான் மோனோகைனம். இது 8 மீ. வரை வளரக் கூடிய செடி அல்லது சிறு மரமாகும். தக்காண, கர்நாடக, ஆந்திர உலர் பசுமைக் காடுகளில் இதைக் காணலாம். இது ஒரு வறட்சி தாங்கும் (drought resistance) இனமானதால், வனத் துறை இதை விதைகளிலிருந்து அதிக அளவில் பெருக்கி வருகிறது. இச்செடியின் இலை கனி ஆகியன உண்ணத் தக்கவை. வைரம் பாய்ந்த கட்டை ஆழ்ந்த பழுப்பு நிறத்துடனும், இனிய மணத்துடனும் காணப்படும். நன்றாக வண்ணம் ஏற்றுக் கொள்ளும். கட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், மரக் கட்டைப் பாதுகாப்பாகப் பயன்படுகிறது. பிரைடீலியா கிரேனுலேட்டா. இலையுதிர் வகையைச் சேர்ந்த இம்மரம், மேற்குத் தொடர்ச்சி மலையில் 150–180 மீ. உயரமுள்ள மலைப் பகுதிகளில் காணப்படும். இம்மரம் 15–20 மீ. உயரம் வளரும். வெட்டப்பட்ட மரப் பட்டை சிவப்பு நிறத்தோடு காணப்படுவதால், இதற்குச் செம்மரம் என்னும் பெயர் வந்திருக்கலாம். மரக்கட்டைகளுக்காகப் பெரிதும் காடுகளில் வளர்க்கப் படுகின்றது. இந்தியாவைத் தவிர, மலேசியா, பர்மா, இலங்கை, நேப்பாளம், இந்தோசீனா போன்ற நாடுகளிலும் வளர்கிறது. சீகோயா செம்பர் வைரன்ஸ். காலிஃபோர்னியாச் செம்மரம் எனப்படும் இச்சிற்றினங்கள், ஊசியிலை மரங்களாகும். இவை விதை மூடாத் தாவரப் பிரிவைச் (gymnosperms) சேர்ந்தவை. இம்மரங்கள் 100–120 மீ. உயரம் வளரக் கூடியவை. அவற்றின் குறுக்களவு 9–10 மீ. இருக்கும். சில உயிருள்ள மரங்களின் அடி மரத்தைக் குடைந்து, பேருந்து போன்ற ஊர்திகள் போவதற்கு ஏற்ற பாதை அமைத்துள்ளனர். உலகிலேயே வயதான உயிரினங்கள் என இவற்றைச் சொல்லலாம். சில மரங்கள் 3000–4000 ஆண்டு வாழ்பவையாகும். —தி. ஸ்ரீகணேசன் செம்மறி ஆடு காண்க : ஆடுகள் செம்மீன் இது இந்தியா, மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கடலிலும், வடக்கு, தெற்கு, அட்லாண்டிக் பெருங்கடலிலும், மொரீஷியஸ் தீவிலும் காணப்படும். செம்மீனின் (Atherina brownii) வெள்ளி நிறக் கண்கள், கருவளையத்தைக் கொண்டுள்ளன. அகன்ற கொழுப்பு இமைகளும், கண்களுக்கு மேலாக அமைந்துள்ளன. உடல் தடிமன், அதன் உயரத்தில் இரண்டிலொரு பங்காக உள்ளது. முனை மழுங்கிய நீள் மூக்கு, வாய்ப் பகுதியின் முன்பு காணப்படுகிறது. மேல் தாடை பக்கத் துடுப்பு வரை நீண்டுள்ளது. கீழ்த் தாடை குறுகியும் அழுத்தமாகவும் விளங்குகிறது. மேல் தாடையில் வரிசையாக அமைந்துள்ள பற்கள் வலிமையாக உள்ளன. உட்குழிவுடைய கீழ்த் தாடை பஞ்சு நுனி போன்ற இழைகளைக் கொண்டுள்ளது. முதுகுத் துடுப்பு, வால் துடுப்பின் அடிப் பகுதியிலிருந்து தோன்றுகிறது. பெரும் எண்ணிக்கையிலான நீட்சிகளுடைய உதிரும் செல்கள், மார்புத் துடுப்பின் அடியில் காணப்படுகின்றன. முன் பக்கத்திலுள்ள 12 செதில்கள் நடுக் குழாய் போன்று அமைந்துள்ளன. செம்மீன்கள் பசுமை கலந்த வெள்ளி நிறத்திலும், வெள்ளி நிறப் புள்ளிகளுடைய தங்க நிறத்திலும் காணப்படும். ஒரு பெரிய கரும் புள்ளி தலையின் பின் பகுதியில் உள்ளது. ஓர் அகன்ற வெள்ளி நிறப் பட்டை வால் துடுப்பின் நடுவில் அமைந்துள்ளது. நுண்ணிய கரும் புள்ளிகளைக் கொண்ட மஞ்சள் நிறத் துடுப்புகளும், சில மீன்களில் காணப்படும். எட்டு அங்குலம் வரை வளரும் இயல்புடைய செம்மீன்கள் மலபார் தீவுகளில் பெருமளவில் உணவிற்காகப் பிடிக்கப் படுகின்றன. செய்திக் கோட்பாட்டியல் இது ஒரு வகைத் தொலை தொடர்புக் கோட்பாடு (communication theory) ஆகும். இது தொலைத் தொடர்பில் குறியீடு மாற்றல் (coding) கணக்கீடுகளில் பயன்படுகிறது. செய்திக் கோட்பாட்டியலின் (information theory) முதன்மையான கருத்து, கிடைக்கக் கூடிய செய்திகளில் எவ்வளவு செய்திகள் பயன் படும் வகையில் அமைந்துள்ளன என்பதாகும். செய்தி கோட்பாட்டியல், கணித அறிவியலான நிகழ் தகவைக் கொண்டு விளக்கப்படுகிறது. தொலைத் தொடர்பில் குறிப்பலைகளைப் பெறுதல், இரைச்சல் கட்டுப்பாடு, விரைவுச் செய்திகள் போன்றவற்றிற்குப் பயன்படுகிறது. வெவ்வேறு தொலைத் தொடர்பு அமைப்புகளை வேறுபடுத்தி அறிய, செய்திக் கோட்பாட்டியல் உதவுகிறது. 1940இல் இந்த ஒப்புமை நோக்கு ஆய்வு பயனுள்ளதாக இருந்தது. செய்தித் தொடர்புக் கம்பிகள், ரேடியோ அதிர்வெண் நிற மாலை போன்றவற்றை அறிய, பல்வேறு அமைப்புகள் கண்டறியப் பட்டன. 1920இல் தந்திப் பொறி அமைப்பின் சிக்கல்கள் நைகுயிஸ்ட், ஹார்ட்லி ஆகியோரைக் கவர்ந்தன. பின்னர், செய்திக் கோட்பாட்டியலுக்கு அடிப்படையாக ஒரு தத்துவத்தை வெளியிட்டனர். 1948இல் செனான் என்பார், செய்தி கோட்பாட்டியலை அடிப்படையாகக் கொண்டஒரு பொதுவான கொள்கையை வெளியிட்டார். செய்திக் கோட்பாட்டியலில், தொலைத் தொடர்பு அமைப்புகள் குறிப்பலையாக்க வீதத்தை அடிப்படையாகக் கொண்டு ஒப்புமைப்படுத்தப் படுகின்றன. குறிப்பலையாக்க வீதத்தை வரையறுப்பது சற்றுச் சிக்கலாகவே இருந்து வந்தது. பின்னர், செனான் என்பார் அளவிடப்பட்ட செய்திகளிலிருந்து குறிப்பலையாக்க வீதத்தை வரையறுத்தார். ஏற்ற முறை (optimal system) என்பது ஒரு தொகுதித் தொலைத் தொடர்பு வசதியைக் கொண்டது. இது பெரும் குறிப்பலையாக்க வீதத்தை அடைகிறது. தொலைத் தொடர்பு அமைப்பை உருவமைப்பதில் ஏற்ற முறை குறிப்பலையாக்க மதிப்பீட்டைத் தருகிறது. எனினும், ஏற்ற முறையைப் பயன்படுத்துதல் சற்றுச் சிக்கலானது. இது விரைவுச் செயல் முறை அமைப்புகளுக்கு மிகு நுட்பத்தை அளிக்கிறது. தொலைத் தொடர்பு அமைப்புகள். செய்திக் கோட்பாட்டியியலின் நிலைப் புள்ளியிலிருந்து ஒரு வழித் தொடர்பு அமைப்பு வடிவமைக்கப்படுகிறது. அமைப்பை வடிவமைப்போருக்கு, மூன்று விதி முறைகள் உள்ளன. மூலம். இது அலை பரப்பியிலிருந்து செய்திகளை அனுப்புகிறது. இலக்கு. இது பரப்பியிலிருந்து வரும் செய்திகளைப் பெற்றுக் கொள்கிறது. வழி (channel). இது ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுள்ள குறிப்பலைகளை மூலத்திலிருந்து இலக்கிற்கு அனுப்புகிறது. அலை செல்லும் ஊடகத்தின் தன்மையைப் பொறுத்து, அதன் தடைகள் கண்டறியப்பட்டுக் கருவிகள் உருவமைக்கப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, வானொலியை உருவமைப்பதில், கொடுக்கப் பட்ட ஒரு குறிப்பிட்ட வானொலி அதிர்வெண் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அலைப் பரப்பியின் திறன் ஒரு வரம்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அனைத்துக் கட்டுப்பாடுகளும், வழியின் விளக்கத்தைக் கொண்டே அமைகின்றன. எப்போதும் மூலத்தின் செய்திகள் ஏற்றுக் கொள்ளக் கூடியனவாக அமைவதில்லை. பரப்பியின் இறுதியில், ஒரு துணைக் கருவி உள்ளது. இது ஒரு குறியீடு மாற்றி (encoder) ஆகும். இது செய்தி மூலங்களை உருவாக்கி, உள்ளீட்டிலிருந்து வழிக்கு அளிக்கிறது. இதே போல் ஏற்பியின் இறுதியில், ஒரு குறியீடு மாற்றி (decoder) இணைக்கப் பட்டுள்ளது. இது வெளியீட்டு வழியை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் மாற்றுகிறது. இரண்டு குறியீடு மாற்றிகளும் துணைக் கருவிகள் ஆகும். தொடர், தொடர்ச்சியற்ற நிகழ்ச்சிகள். மூலம் தொடர்ச்சியற்று இருக்கும் போது, செய்திகள் வரிசையான பகுதிகளைக் கொண்டிருக்கும். மூலங்கள் முழு எண் செய்திக் கூறுகளை உருவாக்குவது தொடர்ச்சியற்றது ஆகும். ஏனைய மூலங்கள் தொடர்ச்சியானவை ஆகும். (எ-டு. பேசுதல், இசை மூலங்கள்). எவ்வகைக் குறிப்பலைகளைப் பரப்புகின்றன என்பதைப் பொறுத்து, வழி தொடர்ச்சியானவை என்றும், தொடர்ச்சியற்றவை என்றும் வகைப்படுத்தப் படுகிறது. பல்வேறு அலை பரவும் ஊடகம் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. துடிப்பு முறையைக் (pulse techniques) கொண்டு, இதைத் தொடர்ச்சியற்ற வழியாக மாற்றலாம். தொடர் நிகழ்ச்சிகள், சில நேரங்களில் குறிப்பலையின் குறிப்பிட்ட பட்டை அகலத்தைக் கொண்டுள்ளன. இதை, தொடர்ச்சியற்ற எண்களாக மாற்ற இயலும். குறியீடு அல்லது செய்திக் கூறு மாற்றல். முதலில் ஒரு வகைக் குறியீடு மாற்றி செய்திகளைப் பல வரிசையான அடிப்படைப் பகுதிகளாகப் பிரிக்கும். அடுத்து, ஒவ்வொரு பகுதிக்குரிய உள்ளீட்டிற்கு ஏற்றவாறும் பிரதியிடும். இவ்வகைக் குறியீடு மாற்றி, பகுதிக் குறியீடு மாற்றி எனப் படுகிறது. எடுத்துக் காட்டாகத் தந்திப் பொறியில், பகுதிக் குறியீடு மாற்றி பயன்படுகிறது (ஒவ்வொரு பகுதியையும் தனிக் குறியீடுகள் குறிக்கின்றன). இரைச்சல் வழியால் (noisy channel) பெறப்படும் செய்திகளைக் குறியீடு மாற்றம் செய்ய முடிவதில்லை. வழி இரு வகையான துடிப்புகளைப் பரப்புகிறது. இரு நிலை இலக்கங்கள் (binary digit) 0, 1 என்பன இரு வகைத் துடிப்புகளைக் குறிக்கின்றன. மூலம் A, B, C, D என்னும் நான்கு எழுத்துகளில் குறிக்கப்படுகின்றது. ஒவ்வொரு தனி எழுத்தையும், இரண்டு இரு நிலை இலக்கமாகக் குறியீடு மாற்றம் செய்ய முடியும் (குறியீடு 1). குறியீடு மாற்றியில், ஒவ்வொரு நேரத்திலும் இரைச்சலின் காரணமாகப் பிழைகள் உண்டாக்கப்படும். இப்பிழைகள் குறியீடு IIஆல் குறிக்கப்படும். இவை மூன்று இலக்கங்களைக் கொண்டவை. குறியீடு II ஒற்றைப் பிழைக் கண்டறிதலையும், குறியீடு III இரட்டைப் பிழைக் கண்டறிதலையும் குறிப்பிடுகின்றன. ஓர் இரைச்சலற்ற இரு நிலை வழி (binary channel) பின் வருமாறு குறிக்கப் படுகிறது. ஓர் எளிய குறியீடு மாற்றல் 27 வெவ்வேறு ஐந்து இலக்கக் குறியீடுகளைக் கொண்டது. சொல் இடைவெளியின் (word space) குறியீடு # ஆகும். இவை #, A, B, C, …… Z; அதாவது # 00000, A 00001, В 00010, C 00011, …… Z 11011. சொல் # CAB என்பது 00000000110000100010 எனக் குறியீடு மாற்றம் செய்யப் படுகிறது. இதே முறை தந்திப் பதிவுச் செலுத்துகையில் (teletype transmission) பயன் படுகிறது. இரு நிலைச் சமச் சீர்மை வழி (binary symmetric channel). இரு சமமான இரு நிலை மூலங்களைக் கருதினால். ஒவ்வொரு குறியீடு பரவுவதற்கான நிகழ் தகவு p, அதற்கு மாறான நிகழ் தகவு q = 1-p ஆகும். மூலத்தின் இயல்பாற்றல் (entropy) H, வழியின் திறன் (capacity) C ஆகும். இரைச்சல் இருக்கும் போது, C இன் மதிப்பு H ஐ விடச் சிறியது ஆகும். C = 1 + p \log p + q \log q (எ-டு: ஒரு முறை பெறப்படும் பிழைகள் 64 எனில், திறன் \begin{align} C = 1 + 63/64 \log 63/64 + 1/64 \log 1/64 \\ = 1 - 0.116 = 0.884 \end{align} இரைச்சல் இல்லாத நிலையில், இதன் திறன் 88% ஆகக் குறைகிறது. —பெ. துரைசாமி செய்தித் தொடர்புக் கம்பி வடங்கள் செய்திகளை மின்னியல் குறிப்பலைகளாகச் செலுத்தும் இவை குறைந்த மின்னழுத்தம் மற்றும் குறைந்த மின்னோட்டங்களுக்காக வடிவமைக்கப் பட்டன. தொலை பேசிக் கம்பி வட மின் சுற்றிலுள்ள குறிப்பலை ஆற்றல், ஒரு வாட்டில் சில மில்லியனை விடக் குறைந்தது. தொலை வரிச் செய்திகள், தொலைபேசி அழைப்புகள் போன்றவற்றில் இவை மிகுதியாகப் பயன் படுகின்றன. நிலத் தொலைவரித் தொடர்களின் வளர்ச்சி. முதல் நெடுந்தொலைவு மின் செய்தித் தொடர்பு முறை 1830ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட தொலை வரியாகும். இக்கண்டுபிடிப்பு கம்பி மற்றும் கம்பி வடத் தொழிற்சாலைகள் தோன்றுவதற்குக் காரணமாயிருந்தது. கம்பங்களின் மேல்இருக்கும் கடத்தாப் பொருள்களின் மேல் தாங்கலாக வைக்கப் பட்டிருக்கும் உறையற்ற கம்பிகளில் தொலை வரிச் செய்திகள் செலுத்தப்பட்டன. 1860ஆம் ஆண்டில், ஏறக் குறைய, அமெரிக்காவிலுள்ள அனைத்து நகரங்களும், தொலை வரித் தொடர்களால் இணைக்கப்பட்டிருந்தன. தற்பொழுது, தொலை வரியில் பயன்படுத்தப் படும் மோர்ஸ் குறியீட்டில்தான் (தந்திச் செய்தி அனுப்பப் பயன்படும் ஒரு வகைக் குறியீடு) அக்காலத்திலும், செய்திகள் அனுப்பப்பட்டன. மோர்ஸ் குறியீட்டினால், சில நிமிடங்களிலேயே செய்திகள் நெடுந் தொலைவுக்கு அனுப்பப்படுகின்றன. நிலத் தொலை பேசிக் கம்பி வடத்தின் வளர்ச்சி. 1876ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்பார் தொலை பேசியைக் கண்டு பிடித்தார். பின்னர், தொலை பேசித் தொடர்களுக்குத் தேவையான கம்பி வடங்களை உருவாக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. கம்பங்களின் மேல் உள்ள உறையற்ற கம்பிகளையும், கடத்தாப் பொருள்களையும் கொண்டு உருவான தொலை வரித் தொடர்களைப் போல், முற்காலத் தொலை பேசித் தொடர்கள் அமைக்கப்பட்டன. தொலை பேசிக் கம்பி வடங்களை அமைக்கும் போது, நெடுந்தொலைவிற்குச் செலுத்தப் படும் பேச்சு, சிக்கல்களை உருவாக்கியது. ஏனெனில், சைகைத் திறனிழப்பு, உருக் குலைவு இவை பேச்சுச் சைகைகளை வாங்கி முனையில் தெளிவின்றிக் கேட்கச் செய்யும். கம்பி வடத்தின் மின் பண்புகளான மின் தேக்கம் மற்றும் மின் நிலைமம் போன்றவற்றின் இன்றியமையாமை இங்கிலாந்தின் ஒலிவர் ஹெவிசைட் (Oliver Heaviside) என்பவரால் வலியுறுத்தப் பட்டது. அமெரிக்க அறிவியலாரும், பொறியியல் வல்லுனருமான மைக்கேல் ஐ. பியூபின், 1899-ஆம் ஆண்டில், தொலை பேசிக் கம்பி வடங்களுக்குத் தூண்டு சுருள்கள் சேர்க்கப் பட்டால், வலிமை மிகு தெளிவான குரல் செலுத்தம் உண்டாகுமெனக் கண்டு பிடித்தார். நவீன நிலத் தொலைபேசிக் கம்பி வடம். ஜே.ஏ. பிலமிங், லீ டீ ஃபாரெஸ்ட் ஆகியோரால் இரு முனைய, மும்முனைய வெற்றிடக் குழாய்கள் கண்டு பிடிக்கப் பட்டன. பிறகு, பேச்சுச் சைகைகள் மிகைப் படுத்தப் பட்டு, ஒற்றைக் கம்பி வடத்தின் மேல் தொடர்ந்த உரையாடல்களைச் சுமக்க, சுமப்பி அதிர்வெண்கள் பயன்படுத்தப்பட்டன. மாறுபட்ட சுமப்பி அதிர்வெண்களில் நிகழும் உரையாடல்களைத் தனியாகப் பிரிக்க இசைவுறு வடிப்பான்கள் (tuned filters) பயன்பட்டன. . அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளில் 0.935 செ.மீ. ஆரமுள்ள ஒரே மையம் கொண்ட கம்பி வடங்கள் மிகுதியாகப் பயன்படும். இவை இரட்டைகளாகப் பயன்படும். ஒரு திசையிலிருந்து வரும் செய்திகளுக்காக ஒரு கம்பி வடமும், மற்றொரு திசையிலிருந்து வரும் செய்திகளுக்காக மற்றொரு கம்பி வடமும் பயன்படும். ஒழுங்கான சுமப்பி முறைகளில், இம்மாதிரியான கம்பி வடங்கள் ஓர் இரட்டைக்கு 36000 குரல் பாதைகளைக் கொடுக்கும். ஒரே மையம் கொண்ட 20 கம்பி வடங்கள், 432,400 குரல் பாதைகளைக் கொடுக்கும். அமெரிக்காவின் கண்டங்கள் கடந்து செல்கிற தொலை பேசித் தொடர்கள், கம்பி வடங்கள் ஆகியவை கீழ்க் காணும் வரிசையில் வளர்ச்சி அடைந்தன. அவை காப்பற்ற கம்பித் தொடர்கள், சுமையேற்றப்பட்ட கேளலை அதிர்வெண் கம்பி வடம், சுமப்பி அதிர்வெண் செலுத்தத்திற்கான பல இரட்டைக் கம்பி வடங்கள், சுமப்பி அதிர்வெண் செலுத்தத்திற்கான ஒரே மையம் கொண்ட கம்பி வடங்கள் என்பனவாகும். அமெரிக்காவைக் கடந்து செல்கிற முதல் தொலைபேசி வழி 1915இல் தொடங்கப் பட்டது. ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகியவற்றை இணைக்கும் முதல் கண்டங்களுக்கிடையேயான தொலை பேசிக் கம்பி வடம் 1956இல் நிறுவப்பட்டது. —இரா. இந்து நூலோதி. S. L. Uppal, Electrical Power, Twelfth Edition, Khanna Publishers, New Delhi, 1986. செய்தித் தொடர்புச் செயற்கைக் கோள் நெடுந் தொலைவு அல்லது கடல் கடந்த செய்தித் தொடர்புகளுக்குப் பயன்படக் கூடிய புவியைச் சுற்றும் ஒரு வகை ஊர்தியே செய்தித் தொடர்புச் செயற்கைக் கோள் ஆகும். இது ஒரு விண்வெளிக் கருவியாகும். நுண் உணர் சட்டமும், பரப்பியும் செயற்கைக் கோளில் அமைக்கப்பட்டிருக்கும். அயன மண்டலத்தைக் குறிப்பலைகள் தாண்ட வேண்டுமானால், நுண் அலைவெண்கள் வேண்டும். அயன மண்டலத்தை எளிய ரேடியோ அலை வெண்கள் கொண்ட சைகைகள் தாண்டா. மேலும் அகல் பட்டைகள் கொண்ட குறிப்பலைகளைக் கையாள நுண்ணலைகள் தேவைப் படுகின்றன. செயற்கைக் கோள்களில் உள்ள விண்வெளிக் கலத்தில் மிகு பயன் கொண்ட உணர் சட்டங்கள் பயன்படுகின்றன. 1965 ஆம் ஆண்டு முதல் வணிக நோக்குடன் விண்வெளிக் கலம் பணி புரியத் தெடங்கியது. 1965இலிருந்து கூடுதல் எண்ணிக்கையில் தொடர்பியல் செயற்கைக் கோள்கள் ஏவப் பட்டுள்ளன. இவை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செய்திகளை அனுப்பவும், தொலைக் காட்சிச் சைகைகளை உயர் பரப்பளவில் பரப்பவும், கப்பல்களுக்கும், விமானங்களுக்கும் தேவையான வழி காட்டவும் பயன்படுகின்றன. செயற்கைக் கோள்களை ஒரு நாட்டிற்கே பயன்படுமாறும், இரண்டு மூன்று நாடுகளுக்குப் பொதுவானதாகவும், உலகிற்கே பொதுவானதாகவும் பயன் படுத்தலாம். சான்றாக, கனடியன் டெலிசேட் இயக்கம் என்பது கனடாவுக்கு மட்டும் உரியது. பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி சிம்பனி இயக்கம் இரண்டு மூன்று நாடுகளுக்கு உரியது. இன்ட்டல் சாட் என்பது உலகிற்குப் பொதுவாகும். அனைத்துச் செய்தித் தொடர்புச் செயற்கைக் கோள்களின் (communication satellite) பணிகளையும் தொடர்பு படுத்த, உலகத் தொலைத் தொடர்பியல் சங்கம் பயன் படுகிறது. ஜெனிவாவிலிருந்து இவ்வியக்கம் பணி புரிகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> விண்வெளிக் கோள்கள் செயல் தன்மை கொண்டவை. குறிப்பலைகளை வாங்கிய பின், மீண்டும் அனுப்புகின்றன. செயல் தன்மையற்ற கோள்கள் பொதுவாகச் சைகைகளை எதிரொலித்து அனுப்பும் தன்மை கொண்டவை. செயல் தன்மை கொண்ட கோள்களில் திசை கொண்ட மிகவும் கூரிய உணர் சட்டங்களும் மிகவும் சிக்கலான மின் சுற்றுக் கொண்டவையாக இருக்கும். செயற்கைக் கோள்களை ஓரிடத்- தில் நிலையாகக் கட்டுப்படுத்த எந்திர வடிவமைப்புகள் தேவைப்படுகின்றன. செயற்கைக் கோள்களுக்கு வேண்டிய மின்னாற்றல், சூரிய ஒளியால் இயங்கும் மின் கலங்கள் மூலம் பெறப்படுகின்றது. நிக்கல் கேட்மியம் மின்கலங்கள், சூரிய ஒளியில்லாத காலங்களில், மின்னாற்றலைத் தேக்கிப் பயன்படுத்துகின்றன. செயற்கைக் கோள்கள் புவியிலிருந்து 600 ஆயிரம் மீட்டர் தொலைவில் உள்ளன. செயற்கைக் கோள்கள் ஒரு குறிப்பிட்ட பாதையில் செலுத்தப் படுகின்றன. பாதைகள் சாய்ந்த நீள் வட்டம், துருவ வட்டம், புவிக்கு நிலையானவை என்பன ஒவ்வொரு வகையான பாதையும், ஒவ்வொரு பணிக்கு உதவும். —க. அர. பழனிச்சாமி நூலோதி. W.M. Smart, Text Book on Spherical Astronomy, Sixth Edition, Vikas Publishing House Pvt Ltd, New Delhi, 1979. செய்முறை வடிவமைப்பு புள்ளியியலில், செய்முறை வடிவமைப்பு (experimental design) முறை முதன் முதலில் வேளாண் ஆய்வில்தான் பயன்பட்டது. ஆய்வுகள் செய்து, பாகுபாடற்ற முடிவுகளை அடைவதற்குச் செய்முறை வடிவமைப்பே ஏற்ற முறை என்பதை ஆர். ஏ. ஃஷா் என்பார் 1923இல் கண்டு பிடித்தார். பாகுபாட்டை அகற்றவும். திட்டப் பிழையைப் பற்றிய முறையான முடிவுகளை அடையவும், சம வாய்ப்பு தன்மை தேவைப் படுகிறது. இந்த ஆய்வில், எண்ணற்ற ஐயங்கள் உருவாகி, அவற்றை போக்கப் புதுப் புது முயற்சிகளும், திட்டங்களும் உருப் பெற்றன. அவற்றில், சம வாய்ப்புக் கட்ட வடிவமைப்பும் (randomised block design), லத்தீன் சதுரத் திட்ட அமைப்பும் (latin square design) முக்கியமானவை. செய்முறை வடிவமைப்பில், சம வாய்ப்புக் கட்ட வடிவமைப்பு மிகுதியாகப் பயன் படுகிறது. இதை அமைப்பது மிக எளிது. மேலும், இது சம வாய்ப்பைக் கொடுக்க வல்லதாகும். மூன்று வகைக் கோதுமையை உரமிட்டுப் பராமரிக்கும் 5 முறைகளைக் கொண்டு சோதிக்க விரும்பினால், நில வளத்தைப் பொறுத்து, ஒரு படித்தான தன்மை வாய்ந்த ஒரு பெரிய நிலப் பகுதியிலிருந்து சதுரமான அல்லது நீள் சதுரமான ஒரு நிலப் பகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதை, மூன்று சம வரிசைகளாகவும், ஒவ்வொரு வரிசையிலும் 5 சம பகுதிகள் வருமாறும், 15 சம அளவு கொண்ட நிலப் பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். குலுக்கல் முறையாலோ, சம வாய்ப்பெண்கள் முறையிலோ தேர்ந்தெடுக்கப்பட்ட கோதுமையின் மூன்று வகைகள் வரிசைக்கு ஒன்றாகச் சம வாய்ப்பு முறையில் பயிரிடப்படுகின்றன. அதன் பிறகு, ஒவ்வொரு வரிசையிலுமுள்ள ஐந்து சம பிரிவுகள், ஒவ்வொன்றிலும் ஒரு பராமரிக்கும் முறை சம வாய்ப்பு முறையில் தீர்மானித்த பிறகு, ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வுக்குப் பிறகு, நிரைகள் (rows) வகைகளையும், நிரல்கள் (coloumn) வெவ்வேறு பராமரிக்கும் முறைகளையும் குறிக்கும் பட்டியல் தரப் படுவதால், கொடுத்த விவரம் ஆராயப்பட்டு, பராமரிக்கும் முறைகளுக்கிடையே காணும் வேறுபாடு முறையாகக் கணிக்கப்படுகிறது. இரண்டாம் வடிவமைப்பான லத்தீன் சதுரத் திட்ட அமைப்பு வேளாண் ஆய்வில் பெரிதும் பயன் படுகிறது. இதைக் கொண்டு இரு வழிப் பாகுபாட்டிற்குத் தேவையான நிலப் பகுதியைக் கொண்டே மூவழிப் பாகுபாட்டு ஆய்வை நடத்தலாம். சான்றாகக் கீழ்க் காணும் சதுரத் திட்ட அமைப்பைக் காணலாம். இது போன்று 576 நான்கு வரிசை லத்தீன் சதுரத் திட்ட அமைப்புகளும், 161280 ஐந்து வரிசைத் திட்ட அமைப்புகளும், 812851200 ஆறு வரிசைத் திட்ட அமைப்புகளும் உள்ளன. இம்முறையில், ஒவ்வோர் ஆய்வுக்குரிய மாறியால் எழும் பிரிவுகளின் எண்ணிக்கையும் சமமாக இருக்க வேண்டும். எனவே, ஒரு நிரையில் n கட்டங்களும், ஒரு நிரலில் n கட்டங்களும் இருக்கும். ஏட்ஸ் (yates) நூலிலிருந்து, சம வாய்ப்பு முறையில் n வரிசை லத்தீன் சதுரத் திட்ட அமைப்பு ஒன்று தேர்ந்தெடுக்கப் பட்டு, நிரை, நிரல்கள் பலவாறு மாற்றிய பின் கிடைக்கும் சதுரத் திட்ட அமைப்பிற்கேற்ப A, B,C எழுத்துகள் n² பிரிவுகளுக்கு வழங்கப் படுகின்றன. ஒவ்வொரு நிரையிலும் அதற்குரிய பராமரிக்கும் முறை சம வாய்ப்பு முறையில் தீர்மானிக்கப்படுகிறது. அதே போன்று, நிரல்கள் வெவ்வேறு வகைகளைச் சம வாய்ப்பு முறையில் பெறுகின்றன. A, B, C,…… என்பவை கொடுக்கப் படும் உரத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். A எழுத்து இடம் பெற்ற நிலப் பகுதியில் 10 நாளுக்கொரு முறையும், B இடம் பெற்ற நிலப் பகுதியில் 15 நாளுக்கொரு முறையும், C இடம் பெற்ற நிலப் பகுதியில் 20 நாளுக்கொரு முறையும் உரம் இடம் பெறலாம். விளைச்சலின் அளவு கணக்கிட்டுத் தேர்ந்தெடுத்த சதுரத் திட்ட அமைப்பிலுள்ள எழுத்துகளுடன், அந்தந்தக் கட்டங்கள் குறிக்கும் நிலப் பகுதி விளைச்சலளவு குறிக்கப்படுகிறது. பரவற்படிப் பகுப்பாய்வு (analysis of variance) முறையைப் பயன் படுத்தி, மாறிகளில் ஏற்பட்ட விளைச்சலின் வேறுபாடு எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததென ஆராயப்படும். தேர்ந்தெடுக்கப்படும் நிலப் பகுதியின் நில வளம் ஒன்று போல் அமையா விடில், ஒரு மாறியால் ஏற்படும் பலனை ஆய்வு செய்ய இவ்வமைப்புப் பயன்படுகிறது. இவ்வமைப்பை விடச் சம வாய்ப்புக் கட்டத் திட்ட அமைப்பு பல வகையிலும் சிறந்தது. —எம். அரவாண்டி செய்வழிக் கட்டப் படம், கணிப் பொறி செய்யப் பட வேண்டிய ஒரு செயலின், பல படிகளை அவற்றின் தரத்திற்கேற்றவாறு பிரித்து அமைத்த நிலையைக் காட்டும் ஒரு விளக்கப் படத்திற்குச் செய் வழிக் கட்டப் படம் (flow chart) என்று பெயர். ஒவ்வொரு செயலும் அல்லது செயலின் ஒவ்வொரு பகுதியும், பட விளக்கமாகத் தனித் தனிப் பெட்டியில் காண்பிக்கப்படும். அப்பெட்டியின் அமைப்பு செய்யப் பட வேண்டிய செயலின் தரத்திற்கேற்ப அமையும். பொதுவாக ஒரு செய்வழிக் கட்டப் படம் “தொடங்குக” என்று குறியிட்ட பெட்டியில் தொடங்கி, “நிறுத்துக” என்று குறியிட்ட பெட்டியில் முடியும். இவ்விரு பெட்டிகளும், நீள் வட்ட வடிவப் பெட்டிகளாக இருக்கும். ஓர் எளிய செயல், நீள் சதுர அல்லது சதுரப் பெட்டியில் குறிக்கப் படும். ஒரு செயலின் உள்ளீடும், வெளியீடும் பொதுவாக, சாய் சதுர வடிவப் பெட்டிகளாகக் குறிக்கப் படும். செயல்களை வரிசைப் படுத்த அப்பெட்டிகளுக்கிடையில் அம்புக்குறிகள் பயன்படும். A, B, C என்னும் மூன்று எண்களைக் கூட்டுவதற்கான செய்வழிக் கட்டப் படம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு விற்பனையாளர் 50 ஆடைகளை ஒரு பெட்டியிலிருந்து எடுத்து, அவற்றைக் காட்சிக்கு வைப்பதாகக் கொண்டால், இச்செயலுக்குச் செய்வழிக் கட்டப் படம் பின்வருமாறு அமையும். இம்முறையை 50 முறை பின்பற்றினால், மேலே கொடுக்கப்பட்ட செயலை அவர் செய்து முடிக்கக் கூடும். ஆனால், இது ஒரு சரியான செய்வழிக் கட்டப் படம் தயாரிப்பதற்கான முறையாகாது. எனவே பின் வரும் சுருக்கமான முறையைப் பின்பற்ற வேண்டும். இரண்டாம் முறை, முதல் முறையை விட எளிதானதும், சிறந்ததுமாகும். செயல்களின் வரிசை, வளையங்களாகப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை முறை இச்செயலைச் செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகக் குறிக்கவில்லை. எனவே, மேற்காணும் செயல் முறை விளக்கப் படத்தின் அமைப்பில் எண்ணிக்கை குறிக்க வேண்டும். N என்னும் ஒரு திட்டம் செயல்படும் போது, மாறும் தன்மையைக் கொண்டது. N = 0 என்னும் நிலையில் தொடங்கி, N இன் மதிப்பை ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றாகக் கூட்டிக் கொண்டே செல்ல வேண்டும். இப்பொழுது எண்ணியின் அமைப்பு, பின் வருமாறு அமைகிறது. மதிப்பு மாறுதலடைந்த பெட்டி அச்செயலைச் செய்ய வேண்டிய முறைகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. இதை முந்தைய செய்வழிக் கட்டப் படத்துடன் இணைக்க வேண்டும். இச்செய்வழி கட்டப் படம் முந்தையதை விடச் சிறந்த முறையில் அமைந்துள்ளது. ஏனெனில், எத்தனை முறை ஒரு செயல் செய்யப்பட வேண்டும் என்பதற்கான விளக்கம் இதில் அமைந்துள்ளது. இருப்பினும், வெளி வருவதற்கான வழியும், செயலை முடிப்பதற்கான வழியும் இல்லாமையால், இது செய் வழிக் கட்டப் படம் ஆவதில்லை. எனவே, செயலை நிறுத்துவதற்கு ஒரு முடிவுப் பெட்டியை இணைக்க வேண்டும். முடிவுப் பெட்டி என்பது சாய் சதுர வடிவப் பெட்டியாகும். அதில் ஆம் அல்லது இல்லை என்னும் விடையைத் தரக் கூடிய வினாப் பகுதி ஒன்று இருக்கும். அவ்வினாவிற்கான விடை ஆம் எனில், செயல் நிரல் காட்டி ஒரு திசையிலும், இல்லையெனில், அது வேறு திசையிலும் பிரிந்து செல்லும், முடிவுப் பெட்டியைச் சேர்த்த பிறகு செய்ய வேண்டிய செயலின் செய்வழிக் கட்டப் படம் படம் 7இல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலே காணும் செய்வழிக் கட்டப் படம் ஒரு பெட்டியிலிருந்து, 50 ஆடைகளை எடுத்து, அவற்றைக் காட்சிக்கு வைக்க வேண்டிய செயல் முறையைக் குறிக்கிறது. ஒரு பெட்டியிலிருந்து, 200 ஆடைகளை எடுத்துக் காட்சிக்கு வைக்க வேண்டிய செயல் முறையைக் குறிப்பிட வேண்டுமென்றால், தனியாக ஒரு செயல் நிரல் காட்டியைத் தயாரிக்க வேண்டிய தேவையில்லை. முடிவுப் பெட்டியில் N = 200 என்று குறித்தாலே போதும். இவ்வாறாகப் பெட்டியிலிருந்து, எத்தனை ஆடைகளை எடுத்துக் காட்சிக்கு வைத்தாலும், அதற்கென்று தனியாக ஒரு செயல் முறை விளக்கப் படம் தயாரிக்க வேண்டியதில்லை. பொதுவாக ஒரு செயலுக்கான செயல் முறை விளக்கப் படத்தைத் தயாரிக்கும் போது, பின் வரும் முறைகளைக் கொள்ள வேண்டும். அச்செயலைச் சிறு சிறு செயல்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். தொடங்குக (start), உள்ளீடு (input), செயல்கள் (operation), வெளியீடு (output), நிறுத்துக (stop) இவற்றைத் தனித் தனி அமைப்புகளாகக் குறித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு சிறு செயலை யும், அதன் தரத்திற்கேற்ப வரிசைப் படுத்த அம்புக் குறிகளைப் பயன் படுத்த வேண்டும். கணிப் பொறித் திட்டங்களின் செய்வழிக் கட்டப் படங்கள். கொடுக்கப்பட்ட கணக்கை ஒரே முறை- யாகச் செய்ய கணிப் பொறியால் முடியாது. கணிப் பொறியில் கொடுக்கப் படும் செய்திகள் எளிய எண் கணிதச் செயல்களைக் கொண்ட, சிறு எளிய அடிப்படை எண் கணிதச் செயல்களை மட்டும் செய்யக் கூடியதாகும். வரிசைப் படுத்தப்பட்ட சார்புடைய செய்திகளை உள்ளடக்கிய கணிப் பொறியில் நினைவு மண்டலம் (memory centre) என்னும் பகுதி ஒன்று உள்ளது. ஒரு குறிப்பிட்ட தீர்விற்குத் தேவையான சார்புடைய செய்திகளை உள்ளே செலுத்த வேண்டும். கணிப் பொறி படிப்படியாக எடுத்துக் கொள்ளும் செய்திகளுக்குத் திட்டம் (programme) என்று பெயர். தீர்க்க வேண்டிய கணக்கு அல்லது தீர்விற்குத் தயாரிக்கும் திட்டமும், அதற்கான செய்முறை எண் கணிதச் செய்திகளும், கணிப் பொறி புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் கொடுக்கப்பட வேண்டும். ஒரு கடினமான கணக்கைத் தீர்ப்பதற்குத் தயாரிக்கும் திட்டம், பற்பல செய்திகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதற்குச் செயல் நிரல் காட்டி, கணிப் பொறியைப் பயன்படுத்துபவருக்கு மிகவும் இன்றியமையாதது. y = ax + b என்னும் சமன்பாட்டில், y–இன் மதிப்பைக் கணக்கிட வேண்டும். a, b, x இவற்றின் மதிப்புகள் செய்திகளாகக் கணிப் பொறியில் செலுத்தப் பட வேண்டும். இச்சமன்பாடு கூட்டல், பெருக்கல் என்னும் எளிய செயல்களைக் கொண்டு அமைந்துள்ளமையால், இதை ஒரு குறிப்பாகக் கொடுக்கலாம். பிறகு y-இன் மதிப்பைக் கூறும்படி, கணிப் பொறியைக் கேட்கலாம். பின்னர், குறிப்பிட்டுள்ள செய்வழிக் கட்டப் படத்தில் இந்தச் செயல்கள் குறியீடுகளால் குறிப்பிடப்பட்டுள்ளன. 210–இன் மதிப்பைக் கணக்கிடுவதற்கான செய்வழிக் கட்டப் படம். இதை வாய் மொழியாகச் செய்யும் போது, 2, 4, 8, 16,…… என்று ஒவ்வொரு முறையும், முந்தைய எண்ணை 2ஆல் பெருக்கிக் கொண்டே செல்ல வேண்டும். இவ்வாறாக நினைக்கும் எண்ணை R எனவும், எண்ணும் எண்ணை C எனவும் கொண்டால், 210 R–இன் தொடக்க மதிப்பை 2 எனவும், C–இன் தொடக்க மதிப்பை 1 எனவும் எடுத்துக் கொள்ள வேண்டும். R–இன் மதிப்பை இரட்டையாக்கக் கிடைப்பது R = 2 X R C–இன் மதிப்பை ஒன்று மிகுதிப்படுத்தக் கிடைப்பது C = C + 1 C–இன் மதிப்பு 10 என்பதை ஆய்ந்து பார்க்க வேண்டும். ஆம் எனில் ஐந்தாம் படிக்குச் செல்லலாம். இல்லையெனில், நான்காம் படியின் மூலமாக இரண்டாம் படியை மீண்டும் தொடங்க வேண்டும். R–இன் மதிப்பைக் குறிப்பிட வேண்டும். இரண்டாம் படியை ஒவ்வொரு முறையும் செய்யும் போது, R–இன் மதிப்பு 2 மடங்காகிறது (முந்தைய மதிப்பிற்குப் பதிலாக அதன் 2 மடங்கு என்ற புதிய மதிப்பைப் பிரதியிட வேண்டும்). இதே போல், C = C + 1 என்பது C இன் மதிப்பு ஒன்று கூடுகிறது என்பதைக் குறிக்கிறது. மேற்காணும் கணக்கீட்டிற்கானசெய்வழிக் கட்டப் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்வழிக் கட்டத்தின் செயல் முறைகள் கீழ்க் காணுமாறு நடை பெறுகின்றன. இதில் R, C என்னும் இரு குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. R என்னும் குறியீடு தொடர்ந்து எண்களை 2ஆல் பெருக்குவதற்கும், C என்னும் குறியீடு பெருக்கலின் எண்ணிக்கையைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்படும். R,C என்ற குறியீடுகளில் தகுந்த எண்களைப் பிரதியிடுதலைக் கொண்டு, இத்திட்டம் செயல்படுதலைச் சரி பார்க்க வேண்டும். முடிவாகக் கிடைக்கும் எண் 10, 1024. அதாவது, 210–1024. கொடுக்கப்பட்ட எண்களில் மிகப் பெரிய எண்ணைக் காண்பதற்கான செய்வழிக் கட்டப் படம். A₁, A₂, A₃……,An என்பன கொடுக்கப்பட்ட n எண்கள் ஆகும். இவற்றில் மிகப் பெரிய எண்ணைக் காணச் செயல் நிரல் காட்டியைத் தயார் செய்வதற்கான முறைகள் கீழே தரப்பட்டுள்ளன. முதல் எண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை 2ஆம் எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இவ்விரு எண்களில் முதல் எண் பெரியது என்றால், அல்லது இவை இரண்டும் சமம் என்றால், முதல் எண்ணை மட்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் இரண்டாம் எண் பெரியது என்றால், இரண்டாம் எண்ணை மட்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தக்க வைத்துக் கொண்ட எண்ணைப் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள அடுத்த எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 5ஆம் படியின் வழியாக 3 ஆம் படியைப் பட்டியலில் உள்ள இறுதி எண்ணைத் தக்க வைத்துக் கொண்ட எண்ணுடன் ஒப்பிடும் வரை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். இம்முறையைக் குறிப்பதற்கான சரியான முறை இயற் கணித வடிவமாகும். செயலைத் தவற விடாமல் இருப்பதற்காக, 3 என்ற எண்ணியைப் பயன்படுத்த வேண்டும். எண்கள் ஒப்பிடப்பட்டுப் பெரிய எண் ஒப்பிடப்பட்ட இடத்தை Z எனக் கொள்ள வேண்டும். இம்முறை பின்வருமாறு அமைகிறது. Z = A எனக் கொள்ளலாம். J = 2 எனக் கொள்ளலாம். J > N எனில், கணக்கிடுவதை நிறுத்தி விட்டு, 8ஆம் படிக்குச் செல்லலாம். இல்லை எனில், 4ஆம் படிக்குச் செல்லலாம். Z < Aj எனில், 5ஆம் படிக்குச் செல்லலாம். இல்லை எனில், 6ஆம் படிக்குச் செல்லலாம். Z = Aj என்று அமைத்துக் கொள்ளலாம். Jஇன் மதிப்பை ஒன்று அதிகப் படுத்த கிடைப்பது 3ஆம் படிக்குச் செல்லலாம். Zஎன்பது தேவையான எண்ணாகும். இதன் செய்வழிக் கட்டப் படம், படம் 10 இல் கொடுக்கப் பட்டுள்ளது. —பெ. துரைசாமி <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்த பக்கத்தில் ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> செயல் திறன் குறைவு செயலிழப்பும், உணர்ச்சியற்ற நிலையும், தடுமாற்ற நடையும் இல்லாத போது, ஒன்றை இயக்க முடியாத நிலைக்குச் செயல் திறன் குறைவு என்று பெயர். தானாகவே இயங்கும் அசைவு, கண்களின் அசைவு, முகத் தசைகளின் இயக்கம், பேசுதல், சுவைத்தல், விழுங்கல், கை கால்களை அசைத்தல், உட்கார்ந்து எழுதுதல் போன்ற அனைத்துமே செயல் திறன் குறைவால் பாதிக்கப்படலாம். மூளையின் இடப் பக்க மடலின் (parietal) நைவுகளில், இரு பக்கங்களிலும் செயல் திறன் குறைவு ஏற்படலாம். இப்பகுதிக்கும், இட மைய முன் மேடுகளுக்கும் இடையே நைவுகள் ஏற்பட்டால், வலப் பக்கக் கை கால்கள் மட்டுமே பாதிக்கப்படும். வலப் புறத்தில் நைவுகள் ஏற்பட்டால், இடப் பக்கக் கை, கால்களில் செயல் திறன் குறைவு ஏற்படும். நோயாளியிடம் நாக்கை நீட்டச் சொன்னால், முதலில் வாயைத் திறந்து, சிறிது நேரம் கழித்து நாக்கை நீட்டுவான். உடைகளை அணிவதில் செயல் திறன் குறைவு ஏற்படின், அது வலப் பக்க மடலின் நைவைக் குறிக்கும். ஒரு விரலைக் கொண்டு, ஏனைய விரல்களைத் தொடச் சொன்னால், நோயாளியால் செய்ய இயலாது. ஆனால், கையை முழுதுமாக அசைத்துத் தம் காதைத் தொட முடியும். தீக்குச்சிகளை ஒரு வடிவத்தில் அடுக்கி வைத்து, அவ்வாறே செய்யச் சொன்னால், அவரால் செய்ய இயலாது. அப்போது தம் தவறையும், இயலாமையையும் உணர்வார். இதுவும் செயல் திறன் குறை நிலையாகும். —அ. கதிரேசன் செயல் திறன் மதிப்பீடு பணியாளர் அல்லது தொழிலாளர்களின் கல்வித் தகுதி, பட்டறிவு, பணியில் அவர்கள் காட்டும் ஆர்வம், தேவையான நேரங்களில் தலைமை ஏற்று ஆற்றும் பணிகள், உடல் தகுதி, நண்பர்களிடம் காட்டும் பரிவு, அவர்களுக்குக் கொடுக்கும் உரிமை ஆகியவற்றை முறையாக மதிப்பிட்டு வகைப்படுத்துவதே செயல் திறன் மதிப்பீடு (performance rating) எனப்படுகிறது. பணியாளரின் செயல் திறனை முறையாக, குறிக்கோளுடன் மதிப்பிட வேண்டும். பலருக்கு வழி காட்டியும், பணியாளர்கள் தவறு செய்தால், அவர்களைத் திருத்தியும், பதவி உயர்வு பெற, அவர்களை வேறு பதவிக்கு மாற்றவும், ஊதிய உயர்வு மற்றும் கூலி ஊக்கத் தொகையை அறுதியிடவும் செயல் திறன் மதிப்பீடு மிகவும் பயன்படும். குறிக்கோள்கள். இது பணியாளர்கள் ஊதிய உயர்வு பெற வழி செய்கிறது. உற்பத்தியில் ஈடு படுத்தப்பட்ட தொழிலாளரைப் பணியில் நிலைக்கச் செய்யலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யவும், எந்தப் பணியாளர் பதவி உயர்விற்குத் தகுதியானவர் என்பதை அறுதியிடவும் உதவுகிறது. தெரிவு செய்யும் அலுவலகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட வர்களின் தகுதி பயன்படுகிறது. பணியாளர்கள் விருப்பு வெறுப்பின்றிப் பணியாற்ற உதவுகிறது. தொழிலாளர்களின் செயல் திறனை மதிப்பிட்டுக் கணக்கிட, வருகைப் பதிவேடு, தோழர்களிடம் ஒற்றுமை, உயர் அலுவலரிடம் பணிவாக இருத்தல், தன் முயற்சித் திறன், பாதுகாப்பான வழக்கங்கள், தீர்மானித்தல், நீதி நெறி, நேர்மை, அறிவு முதலியவை துணை செய்யும். செயல் திறன் மதிப்பீட்டிற்குத் தேவையானவை. செயல் திறன் மதிப்பீட்டை உயர் அலுவலர் மேற்கொண்டு செவ்வனே செய்வது நல்லது. செயல் திறன் மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மூலக் கூறுகள் பற்றிய அனைத்து விவரங்களும் செயல் திறன் மதிப்பீட்டாளருக்குத் தெரிய வேண்டும். செயல் திறன் மதிப்பீட்டாளருக்கு ஒழுங்கான, முறையான பயிற்சிகள் அளிக்க வேண்டும். மதிப்பீட்டாளர்கள் ஒழுங்கான பயிற்சி பெற்றிருந்தால் தான் அவர்கள் மேற்கொள்ளும் செயல் திறன் மதிப்பீட்டின் பேரில் துறை அலுவலர் நடவடிக்கை எடுக்க முடியும். செயல் திறன் மதிப்பீட்டின் வகை. பல வகைகளில் ஒரு பணியாளரின் செயல்திறனை மதிப்பிடலாம். எனவே அவற்றில் சில பின் வருமாறு: வரிசை வகையிடல் முறை (ranking method). இம்முறையில் மேற்பார்வையாளர்கள், தொழிலாளர்களைத் திறமையின் அடிப்படையில் மதிப்பிட்டு, தகுதிப் படியை வகைப்படுத்துவர். அதாவது, மிக நல்லவர் முதல் மோசமானவர் வரை முறைப் படுத்தலாம். ஒரு தொழிலகத்தில் ஏறத் தாழ, பத்து தொழிலாளர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அவர்களின் செயல் திறனை மதிப்பிட்டு, ஒன்று முதல் பத்து வரை வகைப்படுத்தலாம். ஆனால், இம்முறை மிகுதியான பணியாளர்களைக் கொண்ட தொழிலகத்தில், அவர்களின் செயல் திறன் மதிப்பீட்டைக் கணக்கிட எளிதாக இருக்காது. மேலும் செயல் திறன் மதிப்பீட்டில் வேறுபாடு காண்பதும் அரிது. இணையாக ஒப்பிடல் (paired comparison). இம்முறையின் படி, மேற்பார்வையாளர் ஒவ்வொரு பணியாளரையும், அந்தக் குழுவிலிருக்கின்ற ஒவ்வொரு வருடனும் ஒப்பிட்டுக் கணிப்பார். எனவே, மொத்தச் செயல் திறன் மதிப்பீடு கீழ்க் காணுமாறு கணக்கிடப் படுகிறது. பத்துப் பணியாளர்களின் செயல் திறனை மதிப்பீடு செய்வதாக வைத்துக் கொண்டால், எனவே, 10 தொழிலாளர்கள் உள்ள தொழிலகத்தில், 45 முறை ஒப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஒரு வேளை, ஒவ்வொரு பணியாளரையும் ஐந்து முறை செயல் திறன் மதிப்பீடு செய்வதாக இருந்தால், மொத்தமாக 45 X 5 = 225 முறை ஒப்பிட்டுக் கொள்ள வேண்டும். இம்முறை மிகவும் கூடுதலான தொழிலாளர்கள் பணி செய்யும் தொழிலகத்தில், 'சிக்கலாக இருக்கும். வரைபட அளவு முறை. ஒவ்வொரு குறிப்பிட்ட நிலையிலும், பணியாளர்களின் நிலையை (line or scale) அறியலாம். ஒவ்வொரு பணியாளரும் எத்தகைய திறன் பெற்றுள்ளனர் என்று கணக்கிடலாம். இம்முறை மிகுதியாகவும், பொதுவாகவும் தொழிலகங்களில் பயன்படுகிறது. எளிதில் புரிந்து கொள்ளவும், இம்முறை ஏற்றது. வலியுறுத்தும் பங்கீட்டு முறை. இம்முறையில் குறிப்பிட்ட பணியாளர்களைக் குறிப்பிட்ட பணித் திறமைகளின் அடிப்படையில் வகைப்படுத்துகின்றனர். பணித் திறமையின் அளவைக் கணக்கிடுவதற்கும், பதவி உயர்வு அளிப்பதற்கும், பணியாளர்களின் பல்வேறு திறமைகள் தெரிவு செய்யப்படும். மேலும் இம்முறை ஹாலோ விளைவு (hallo effect) எனப்படும். சில குறைகளைக் குறைக்க, வழி செய்கிறது. பணியாளர்களின் திறமைகளை வகைப் படுத்தும் போது, அவர்கள் பெறும் திறன் மதிப்பீடு மிகக் குறைவு, குறைவு, சராசரி, நன்று, மிக நன்று என்பதன் அடிப்படையில் அமைகிறது. வலியுறுத்தும் விருப்பு முறை (forced choice method). இம்முறையில் பணியாளர்களின் பொதுவான தன்மைகள் அடங்கிய குறிப்புகளை ஒரு தாளில் அச்சடித்துப் பொறுப்பு அலுவலர்களிடம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பணியாளரின் திறமை, தன்மை ஆகியவற்றைப் பட்டியலோடு சரி பார்த்துக் குறிப்பிட்டுக் கொண்டு, அறுதியிடப்பட்ட மதிப்பெண்களில் பணியாளர்கள் பெற்ற மதிப்பெண்களைக் கூட்டி, எந்தப் பணியாளர் உயர் மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். பட்டியல் சரிபார்த்தல் முறை. பணியாளரின் திறமை, பணிகள் அடங்கிய, அவர்களைச் சார்ந்த பல கேள்விகளடங்கிய விவரப் பட்டியல் விளக்க உரை தயாரிக்கப்பட்டு, அவர்களின் ஆம் அல்லது இல்லை என்னும் பதிலின் அடிப்படையில், ஒவ்வொரு வரும் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு, அவர்களின் தகுதி மற்றும் முன்னுரிமை எண் அறுதியிடப் படும். துறை மறு ஆய்வு. பணியாளர்களின் அறிவுத் தன்மையை வகைப்படுத்துவதில், இம்முறை பயன்படுகிறது. பணியாளர்கள் துறையில் ஒருவரை அனுப்பி, தொழிலக மேற்பார்வையாளரின் ஒத்துழைப்பின் பேரில் செயல் திறன் மதிப்பீட்டை நன் முறையில் ஆக்கலாம். பணியாளர் துறையிலுள்ள (personnel department) அந்தப் பிரிவு வல்லுநர், தொழிலகத்திற்குச் சென்று, மேற்பார்வையாளர்களுக்கும், முதலாள் (foreman) ஆகியோருக்கும், முறை சாரா நேர்முகத் தேர்வு நடத்தி, முறையாக அவர்களின் செயல் திறனை வகைப்படுத்துகின்றனர். இம்முறையில் பல நன்மைகள் உள்ளன. அதாவது, மேற்பார்வையாளர்கள், வாய் மொழித் தேர்வையே விரும்புகின்றனர். நிர்வாகம், ஒவ்வொரு தொழிலாளரின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்துவதால், முறையாகச் செயல் திறன் மதிப்பீடு செய்து கொள்கிறது. கூர்த்த நிகழ்ச்சி (critical incident). இது தற்காலத்தில், நவீன முறையில் பணியாளர்களின் செயல் திறன் மதிப்பீட்டைக் கணக்கிடும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட முதன்மையான முறையாகும். கூறப் பட்ட முறைகளிலுள்ள தீமைகளைத் தவிர, இது புது வழி முறைகளை அறிமுகப்படுத்துகிறது. இம்முறையில், ஒவ்வொரு பணியாளரின் பட்டறிவையும் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் செயல் திறன் மதிப்பிடப்படுகிறது. செயல் திறனை மதிப்பீடு செய்வதற்குப் பல வகையான விண்ணப்பங்கள் பல விவரப் பட்டியலுடன், ஒவ்வொரு துறைக்கேற்றவாறு தயாரிக்கப் படுகின்றன. சான்றாக, ஒரு துறையிலுள்ள பணியாளர்களின் செயல் திறன் மதிப்பீட்டு விண்ணப்பம் பக்கம் 763இல் உள்ளவாறு அமையும். செயல் திறன் மதிப்பீட்டின் நன்மைகள். பணியாளரின் நடத்தை, திறன், தன்மை போன்றவற்றை மேற்பார்வையாளர்கள் வேறுபாடின்றி, முறையாக மதிப்பீடு செய்வதற்கு இது உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட காரண அடிப்படையில், அனைத்துப் பணியாளர்களையும் மதிப்பீடு செய்வதால், ஒரு நியாயமான ஊதியத்தை அறுதியிட முடியும். தொழிலாளரின் திறமையின் அடிப்படையில் செயல் திறன் மதிப்பீடு செய்வதால், திறமையுள்ள தொழிலாளர்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வழி செய்கிறது. பணியாளரை மாற்றவோ, பதவி உயர்வு கொடுக்கவோ உதவுகிறது. செயல் திறன் மதிப்பீட்டின் மூலம், தொழிலாளரைத் திறமை வாய்ந்தவர், திறமை குறைந்தவர் என வகைப்படுத்தலாம். மேலும், இச்செயல் திறன் மதிப்பீட்டின் மூலம், ஒருவர் மிகவும் குறைந்த மதிப்பெண் பெற்றுத் தொழிலுக்குப் பொருத்தமற்றவர் என்று கருதும் போது, அத்தொழிலாளரை முன்னரே தெரிவு செய்ததும், பணியில் அமர்த்தியதும் தவறு என்பதைக் காட்டுகிறது. எனவே, தெரிவு செய்யப் படும் முறையிலும், பணியில் அமர்த்தும் முறையிலுமுள்ள குறைகளைத் துறைகளுக்குச் சுட்டிக் காட்டுவதுடன், எதிர் காலத்தில் தொழிலாளர்களைத் தெரிவு செய்யும் முறைகளை மாற்றி அமைக்கவும் வழி செய்கிறது. தொழிலாளர்களைச் செயல் திறன் அடிப்படை வகைப்படுத்துவதால், பணியாளர்களுக்குள்ளேயே அறிவு சார்ந்த போட்டி மனப் பான்மை ஏற்படக் கூடும்.அதனால், ஒவ்வொருவரும் தம் திறமையை உயர்த்திக் கொள்ள, இயன்ற வழி முறைகளைக் கடைப்பிடிப்பர். விரைவில், அவர்களுடன் பணியாற்றும் திறமை வாய்ந்த தொழிலாளர் நண்பர்கள் பெறும் ஊதியம் மற்றும் ஊக்கக் கூலி, ஊதியத்திற்குச் சமமாகப் பெற வழி உண்டாகும். மேலும், உற்பத்தியை இவ்வகைத் தொழிலாளர்கள் பெருக்க முன் வருவதால், தொழிலாளர்களுக்குக் கூலி ஊக்கத் தொகை கிடைப்பதோடு, தொழிலதிபர்களுக்கும் உயர் உற்பத்தி பெருகுவதால் இலாபம் கிடைக்க வழி ஏற்படுகிறது. தொழிலாளர்கள் தங்களுடைய பணியில் ஏற்படுகின்ற சிக்கல்கள், இன்னல்களை மேற்பார்வையாளர்கள் அறிந்து, அவற்றைத் தவிர்த்து, தக்க வழி முறைகளைக் கடைப்பிடிக்க, இச்செயல் திறன் மதிப்பீடு உதவுகிறது. —ஆர், ராஜு நூலோதி. K.K. Ahuja, Industrial Management, Third Edition, Khanna Publishers, New Delhi, 1986. செயல் முறை ஆய்வு 1940ஆம் ஆண்டு முதன் முதலில் மெக்லாஸ்கை, திரில்தென் ஆகியோரால் செயல் முறை ஆய்வு என்னும் சொல் பயன்படுத்தப்பட்டது. இருந்த போதிலும், 1952ஆம் ஆண்டில்தான் அமெரிக்காவில் முறைப்படி இச்சொல் நடைமுறைக்கு வந்தது எனலாம். அதே சமயம், அங்குச்செயல் முறைகள் ஆய்வுக் கழகம் (Operations Research Society) தோற்றுவிக்கப் பட்டது. இன்று, உலகெங்கிலும் செயல் முறை ஆராய்ச்சிக் கழகங்கள் நிறுவி வருகின்றனர். பெரும்பாலான தொழிற்கூட அமைப்புகள், இப்பெயரைக் கொண்டுள்ளன. பல்கலைக் கழகங்களில் இதற்கென்று தனியாகத் துறை ஏற்படுத்தி, இதன் இன்றியமையாமையை அறியச் செய்கின்றனர். இந்தியாவில் செயல் முறை ஆய்வு. இந்தியாவில் 1949ஆம் ஆண்டு, ஹைதராபாத்தில் வட்டார ஆராய்ச்சிக் கூடம் நிறுவிய போது, செயல் முறை ஆய்வு கொண்டு வரப்பட்டது. அதன் பின்பு, தொழிற்சாலைகளின் செயற்முறைகள் அனைத்திலும் பயன்படுத்தப் பட்டது. 1955ஆம் ஆண்டு இந்தியச் செயல் முறைகள் ஆராய்ச்சிக் கழகம் நிறுவப்பட்டது. 1963ஆம் ஆண்டு, ஆப்செர்ச் (opsearch) என்ற இதழ் வெளியிடப்பட்டது. இன்று சில அரசுத் துறைகள், பருத்தி ஆலைகள் தவிர, ஏனைய அனைத்துத் துறைகளிலும் செயல்முறை ஆய்வு பயன்படுகிறது. திட்டக் குழு, இந்திய விமானப் போக்குவரத்து, ஆயுள் காப்பீட்டுக் கழகம், இந்திய தொடர் வண்டித் துறை (Indian Railways) ஆகியவற்றில் செயல் முறை ஆய்வு பெருமளவில் பயன்படுகிறது. செயல் முறை ஆய்வு என்பது அளவிடக் கூடிய பொது அறிவு (quantitative common sense) என்றும், அறிவியல் வழியாக முடிவு எடுத்தல் (scientific approach to decision making) என்றும் விளக்கப் படுகிறது. பல அறிஞர்கள் செயல் முறை ஆய்வு பற்றிப் பல கோணங்களில் விளக்கியுள்ளனர். செயல் முறை ஆய்வின் கட்டங்கள். செயல்முறை ஆய்வு கீழ்க் காணும் ஏழு கட்டங்களாகப் பிரிக்கப் படும். தொடக்க ஆய்வுக் கட்டம் (initial diagnostic phase). முதலில் எடுத்துக் கொள்ளப் போகும் சிக்கல் பற்றி அலசி ஆய்ந்து, திறனாய்வுக் காரணிகள் (critical factors), முக்கிய முடிவுகள் (principal decisions), கையாளப் போகும் அளவுகள் ஆகியவை குறித்து விவரங்கள் சேகரிக்க வேண்டும். சிக்கலை முறைப்படுத்தல் (formulating the problem). எடுத்துக் கொண்ட சிக்கல் குறித்துத் தெளிவான அறிக்கை ஒன்று தயாரிக்க வேண்டும். இவ்வறிக்கையில் கட்டுப் படுத்தக் கூடிய காரணிகள், கட்டுப் படுத்த முடியாத காரணிகள், அடைய விரும்பும் நோக்கம், வரையறை (restriction) ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். படிமை கட்டுதல் (building the model). கணிதக் குறியீடுகளைக் கொண்டு படிமை கட்ட வேண்டும். தீர்வு காணல். கணித முறையில் பகுத்து முடிவு எடுக்க வேண்டும். படிமையை நவீனமாக்குதல் (updating the model). நடப்புக் காலத்திற்கு ஏற்ப மாற்றங்களைச் செய்து, படிமையை நவீனப்படுத்துதல் வேண்டும். தீர்வைக் கட்டுக்கோப்பில் வைத்திருத்தல். பின் ஊட்ட முறையால் (feed back) தீர்வைக் கட்டுக்கோப்பில் கொண்டு வரவேண்டும். செயல்படுத்துதல். இறுதியாக விளைவை ஆய்ந்து, நடைமுறைப் படுத்த வேண்டும். செயல் முறை ஆய்வினைப் பயன் படுத்தும் போது, கீழே கொடுத்துள்ள முதன்மை விவரங்களைக் கவனிக்க வேண்டும். எடுத்துக் கொள்ளப்பட்ட சிக்கல் முழுதும் சரியாக விளக்கப்பட வேண்டும்; அடிப்படை விவரங்கள் சேகரிப்பதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதால், முறையாகத் திட்டமிடுதல் வேண்டும்; கண்டுபிடிக்கப் பட்ட முடிவு நடப்புக் காலத்திற்கு ஏற்றதாக இருக்கும். அதை எதிர்காலத்திற்கு ஏற்றாற் போல், அமைக்க மாற்றங்களைச் சேர்த்துச் சரி நிலைப் படுத்த வேண்டும். இதை, எல்லோரும் ஏற்றுக் கொள்ளத் தக்கவாறு, படிம, கருவி, நுட்பம் கொண்டு அணுக வேண்டும்; இறுதியாக எடுக்கப்பட்ட முடிவைச் செயல் முறைக்குக் கொண்டு வந்து, கட்டுக்கோப்பிற்குள் வைத்தல் இன்றியமையாதது. செயல் முறை ஆய்வில், நேரியல் திட்டமிடுதல் (linear programming) என்னும் நுட்பமே, பெரும்பாலும் பயன்படுகிறது. இதை ஒரு பெருங்குறையாக எடுத்துக் கொண்டு, செயல் முறை ஆய்வின் பயனைக் குறைத்து மதிப்பிடுவது சரியன்று. அதே சமயம், செயல் முறை ஆய்வு என்பது தவறே இழைக்காத 100% சரியான விடையைத் தர வல்ல அறிவியல் என்பதும் தவறு. ஆகவே, செயல் முறை ஆய்வு என்பது ஒரு முதன்மை நோக்கத்தை அடைவதற்கான ஏற்புடைய தீர்வை அளிப்பதில், ஏனைய அறிவியலை விட, முதன்மையாக விளங்குகிறது எனலாம். எடுத்துக் காட்டிற்குச் செயல் முறைச் சிக்கல் ஒன்று கொடுக்கப் பட்டுள்ளது. ஒரு நிறுவனம் அ, ஆ, இ ஆகிய மூன்று பொருள்களை உற்பத்தி செய்து வருகிறது. அவற்றால் ஏற்படும் இலாபம் முறையே ‘அ’வின் மூலம் ரூ. 4உம், ‘ஆ’வின் மூலம் ரூ.3உம் ‘இ’யின் மூலம் ரூ.5உம் ஆகும். இம்மூன்று பொருள்களையும் உற்பத்தி செய்ய, ஏ, பி என்ற இரு எந்திரங்கள் பயன்படுகின்றன. இவ்விரு எந்திரங்களும் மேற்கூறிய மூன்று பொருள்களை உற்பத்தி செய்வதில், கீழ்க் காணும் நேரத்தை எடுத்துக் கொள்கின்றன. எந்திரம் ஏ மொத்தம் 2000 நிமிடங்களும், எந்திரம் பி மொத்தம் 2500 நிமிடங்களும் வேலை செய்ய முடியும். அந்த நிறுவனமோ, அ, ஆ, இ ஆகிய மூன்று பொருள்களையும், 100, 200, 50 என்னும் எண்ணிக்- கையில் உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால், அ என்ற பொருள் மட்டும் 150க்கு மிகாமல் உற்பத்தி செய்யப் பட வேண்டும். இந்நிலையில், அந்நிறுவனம் தன் இலாபத்தைப் பெருக்கிக் கொள்ள உதவும் உற்பத்தித் திட்டத்தைக் காணலாம். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —கா. செயராமன் நூலோதி. A. Taha Hamdy, Operations Research, Macmillan Book Co., London, 1987. செயல் முறைப் பொறியியல் அனைத்துச் செயல்களின் வரிசையை அறுதியிடவும் சிறப்புக் கருவிகளான கல்வி, நிலைப்படுத்தி போன்றவற்றையும், அவற்றின் செயல் முறைகளையும் தேர்ந்தெடுப்பதற்கும், இப்பிரிவு இன்றியமையாதது. செயல் முறை வல்லுநர், பொறியியல் வரைவியலுக்கு (engineering drawing) தக்கவாறு மூலப் பொருள்களை மாற்றங்களுக்குட்படுத்தித் தேவையான உருவ மாற்றம் செய்வதற்கு உதவும் அனைத்துச் செயல் முறைகளையும் கவனித்துச் செயல்படுவர். இவ்வாறாக, தன்னிடம் உள்ள செயல் முறைகளை மட்டுமல்லாது, வெளி இடங்களில் கிடைக்கும் முறைகளையும் பயன்படுத்திக் கொள்வர். பொதுவாக, கிடைக்கும் அனைத்து முறைகளிலும், சிறந்ததைத் தேர்வு செய்து, அதைப் பயன்படுத்துதல் முறையானதாகும். செயல் முறை வடிவமைப்பில், கீழ்க் காணும் வடிவமைப்புத் தேவைகளை கவனித்தல் வேண்டும். அவை மூலப் பொருள்களின் வகை, பயன் படுத்த வேண்டிய கருவி, தேவையான மூலப் பொருள்களின் அளவு, கருவிகளைக் குறிப்பிட உதவும் புவியியல் தன்மைகள், கருவிகளின் மேற்பரப்புத் தன்மை, தயாரான பகுதிகளின் எண்ணிக்கை, செயல் முறைகளின் பொருளாதாரம் ஆகியன. மேற்கூறிய விவரங்கள், துணைச் செயல் முறைகளுக்குப் பொருந்துவனவே. செயல் முறைத் தேர்வு. அடிப்படைச் செயல் முறைகளிலிருந்தும், துணைச் செயல் முறைகளிலிருந்தும் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுக்க, சில வழிகாட்டி முறைகள் வல்லுநருக்குத் தீர்வை அறுதியிட உதவும், சில கூறுகளையும் தெரிவிக்கிறது. தேர்வுத் தாள் என்பது பல்வேறு நிறுவனங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கொண்டது. இதில், ஒரே பொருளுக்கு அனைத்து நிறுவனங்களின் தயாரிப்பு மற்றும் இதர விவரங்களும் விளக்கமாகக் கொடுக்கப் பட்டிருக்கும். துணைச் செயல்முறைகளின் வரிசைப்பாடு. செயல் முறை வல்லுநர், இயலக் கூடிய செயல் முறைகளின் தன்மைகளை ஆய்ந்து, வடிவியல் மற்றும் அளவுக் கட்டுப்பாடு கொண்ட செயல் முறைகளை வகைப் படுத்துகின்றனர். இவ்வாறான வரிசைப்பாட்டில், அடிப்படைச் செயல் முறைகளில், முதலிலேயே கவனிக்கப்பட்டு,இறுதியில் சரி பார்க்கும் செயல் முறையை விளைப் பொருள்களைக் கட்டுகளாக்கும் முன் கவனிக்கப்பட்டு, இவ்வாறு அனைத்துச் செயல் முறைகளும் அவற்றின் தன்மைகளுக்கேற்ப வகைப்படுத்தப் படுகின்றன. எடுத்துக் காட்டாக, துளை கடைதல் (reaming) செய்வதற்கு முன்பே, ஒரு துளை இட்டிருத்தல் இன்றியமையாததாகிறது. உட்புறச் செயல் முறைகளின் இறுதித் தன்மை, வெளிப்புற இறுதித் தன்மைகளை விட மிகவும் முன்னதாகவே செய்யப்பட வேண்டும். துணைக் கருவிகளின் விவரங்கள். குறிப்பிட்ட தயாரிப்புச் செயல் முறைகளில் பயன்படுத்தக் கூடிய அனைத்து வகைத் துணைக் கருவிகளையும் செயல் முறை வல்லுநர் முடிவு செய்து செயல்படுத்த வேண்டும். சிறப்புக் கருவிகளான கவ்வி (jig), நிலைப்படுத்தி (fixtures), அச்சு (die), இதர கருவிகள் ஆகியன வேலை செய்யப்படும் பொருளைப் படிப்பதற்கும், உளியைச் செலுத்தவும், விளைவுகளை அளக்கவும் பயன்படுகின்றன. செயல் முறைகளின் போது, எந்த இடத்தில் சிறப்புக் கருவிகளைப் பயன் படுத்த வேண்டும் போன்ற விவரங்களையும், வல்லுநர் முடிவு செய்ய வேண்டும். செயல் முறைகளின் போது, துல்லியமான பிடிப்பும், செயற்பாடும் கொண்டுள்ளனவா என அடிக்கடி சரி பார்க்க வேண்டும். —வி. சண்முகசுந்தரம் நூலோதி. Harold A. Rothbart, Mechanical Design and Systems Handbook, McGraw-Hill Book Company, London, 1964. செயலன்கள் இன வகைக் கூறுகள் (categories), செயலன்கள் (functors) பற்றிய கருத்துகளை முதன்முதலில் ஐலன்பெர்க், மக்லேன் ஆகியோர் விளக்கினர். இயற்கணித இடத்தியலில் (algebraic topology) உள்ள கருத்துகளை விவரிக்கையில் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்ப, செயலன்களும், இன வகைக் கூறுகளும் அறிமுகப்படுத்தப் பட்டன. x என்னும் ஒரு கணத்தில், ⊙ ஓர் ஈருறுப்புச் செயல் (binary operation) எனவும், y என்னும் ஒரு கணத்தில் • ஓர் ஈருறுப்புச் செயல் எனவும் கொள்ளலாம். f(a ⊙ b) = f(a) • f(b) Ɐ a,b ∈ x என்னும் பொருள் பட, x இன் மேலுள்ள ⊙ செயலை, y இன் மேலுள்ள • செயலுக்கு எடுத்துச் செல்லும் தன்மை வாய்ந்தது. எனில், அது ஒரு செயல் மாற்றாச் சார்பு (morphism) எனப்படும். கொடுக்கப்பட்ட ஓர் இயற்கணிதத் தொகுதியிலிருந்து புதிய தொகுதிகளை உருவாக்கும் சார்புகள், கொடுக்கப்பட்ட தொகுதிகளுக்கிடையே வரையறுக்கப்படும். செயல் மாற்றாச் சார்புகளிலிருந்து, புதிய தொகுதிகளிடையே வரையறுக்கத் தக்க, செயல் மாற்றாச் சார்புகளையும் உருவாக்குகின்றன. இத்தகைய உருவாக்கிச் சார்புகள், அலகு செயல் மாற்றாச் சார்புகளையும், செயல் மாற்றாச் சார்புகளின் சேர்க்கையையும் தக்க வைக்கும் தன்மை கொண்டிருப்பின், அவை செயலன்கள் எனக் குறிக்கப்படும். குறிப்பாக, வளையங்களிலிருந்து குலங்களுக்கு வரையறுக்கப் படும் ஒரு செயலன் F ஆனது, R என்னும் ஒரு வளையத்தை F (R) என்னும் ஒரு குலத்திற்கும், f: R → S என்னும் வளையங்களின் செயல் மாற்றாச் சார்பு ஒன்றை F (f) : F(R) → F (s) என்னும் குலங்களின் செயல் மாற்றாச் சார்பு ஒன்றுக்கும், F(IR) = IF (R) • F (g⚬f) = F(g) ⚬ F(f) என்பன உண்மையாகுமாறு எடுத்துச் செல்கிறது. இந்திபந்தனைகள், ஒரு செயலன், செயல் மாற்றாச் சார்புகளை அலகு சார்புகளுக்கும், செயல் மாற்றாச் சார்புகளின் சேர்க்கையை, அவற்றின் உருக்களின் சேர்க்கைக்கும் எடுத்துச் செல்லும் தன்மை உடையது எனக் கூறுகின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> F:R→S, g:S→T என்னும் செயல் மாற்றாச் சார்புகளைப் பொறுத்த வரையில், இந்நிபந்தனைகளைக் கீழ்க் காணும் பரிமாற்ற வரைபடங்கள் மூலம் தெளிவு படுத்தலாம். உண்மையில், F என்னும் ஒரு செயலன் (இடப் புறம் உள்ள) ஒரு பரிமாற்ற வரை படத்தை (commutative diagram) (வலப் புறம் உள்ள) ஒரு பரிமாற்ற வரை படத்திற்கு எடுத்துச் செல்லும் தன்மையது என்பது (.) என்ற நிபந்தனைகள் மூலம் தெளிவாகும். எடுத்துக் காட்டாக, வளையங்களிலிருந்து குலங்களுக்கு வரையறுக்கத் தக்க ஒரு செயலன், Uஐக் காணலாம். இது ஒவ்வொரு வளையம் R உடனும் U(R) = R என்னும் கூட்டல் குலத்தை இணைக்கும் ஒன்றாகும். இது f:R → S என்னும் வளையங்களின் செயல் மாற்றாச் சார்பு ஒவ்வொன்றுடனும் U(f) = f என்னும் அதே சார்பையே இணைக்கும். (இப்போதும் இது கூட்டற் குலங்களுக்கிடையேயான செயல் மாற்றாச் சார்பேயாகும்.) இத்தகைய செயலன் U ஆனது (.) என்னும் நிபந்தனைகளை நிறைவு செய்யும் என்பது வெளிப்படை; இந்தச் செயலன் U மறதிச் செயலன் (forgetful functor) எனப்படுகிறது. குலங்களிலிருந்து கணங்களுக்கு வரையறுக்கத் தக்க, மற்றொரு மறதிச் செயலன் U. ஒவ்வொரு Gஐயும், U (G) = G என்னும் கணத்திற்கும், f:G→H என்னும் குலங்களின் செயல் மாற்றாச் சார்பு ஒவ்வொன்றையும் G, H கணங்களுக்கிடைப் பட்ட சார்பு fக்கும் எடுத்துச் செல்லும். L, G ஏதேனுமிரு குலங்கள் எனில், h○m (L,G) = .t/t : L→G குலங்களின் செயல் மாற்றாச் சார்பு} என்னும் கணம் L,.G குலங்களுக்கிடையே வரையறுக்கத் தக்க, செயல் மாற்றாச் சார்புகள் அனைத்தும் கொண்ட கணமெனக் கொள்ளப்படும். f:G → H ஒரு செயல் மாற்றாச் சார்பு எனில், h○m (L, f): h○m (L, G) → h○m (L, H) என்றொரு சார்பை, h○m (L, G), h○m (L, H) என்னும் செயல் மாற்றாச் சார்புக் கணங்களுக்கிடையே வரையறுக்க முடியும். இச்சார்பு h○m (L. G)இல் உள்ள ஒவ்வொரு செயல் மாற்றாச் சார்பு tஐயும் f○t என்னும் சார்புக்கு எடுத்துச் செல்லும், அதாவது, h○m (L, f), t = f○tஆகும். (g○f) ○ t = g ○ (f○t) ஆதலால், இச்சார்புகள் சேர்ப்புத் தன்மை உடையவை. இவ்வாறாக, ஒவ்வொரு நிலையான குலம் L உடனும் h○m (L…) என்னும் செயலனை, குலங்களிலிருந்து கணங்களுக்கு வரையறுக்க முடிகிறது. இச்செயலன், ஒவ்வொரு குலங்களின் செயல் மாற்றாச் சார்பு f: G → H ஐயும் h○m (L, f) என்னும் சார்புக்கு எடுத்துச் செல்கிறது. இது h○m செயலன் (h○m functor) என்று கூறப் படும். இது ஒரு நேர் மாற்றச் செயலன் (covariant functor) ஆகும். மேலே சொல்லப்பட்ட L ஒரு நிலையான வளையம் எனில், முன் போலவே h○m (L…) என்றொரு செயலனை, வளையங்களிலிருந்து கணங்களுக்கு வரையறுக்கலாம், இது ஒவ்வொரு வளையம் R ஐயும், h○m (L, R) என்னும் செயல் மாற்றாச் சார்புக் கணத்திற்கு எடுத்துச் செல்லும். இத்தகைய கருத்துகள் பிற இயற்கணிதத் தொகுதிகளுக்கும் பொருந்தும். கொடுக்கப்பட்ட ஒரே வகையான தொகுதிகள், இன வகைக் கூறுகள் எனப்படும். இன வகைக் கூறுகளுக்கிடையேயும் செயலன்களை வரையறுக்கலாம். அத்தகைய ஒரு செயலன், இரு சார்புகளைக் கொண்டது. ஒன்று, வகையினக் கூறு ஒன்றைக் கணமொன்றுக்கு எடுத்துச் செல்லும் பொருட்சார்பு(F…); மற்றொன்று, ஒவ்வொரு செயல் மாற்றாச் சார்பையும் கணங்களுக்கிடைப்பட்ட சார்பு ஒன்றுக்கு எடுத்துச் செல்லும் சார்புச் செயலன் (FM), ஆகும். —எம். அரவாண்டி செயலி (இயற்பியல்) குவாண்டம் எந்திரவியலில் இயற்பியல் அளவுகளும், உந்தம், ஆற்றல் ஆகியவையும், ஆயங்களும் செயலிகள் (operators) அல்லது அணிகளால் குறிப்பிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக p என்னும் உந்தம் \frac{2\pi i} {\hat h} \frac{\partial}{\partial q} என்னும் செயலியால் குறிப்பிடப்படும். அது ψ என்னும் அலைச் சார்பின் மேல் செயல் படும் போது, \frac{2\pi i} {\hat h} \cdot \frac{\partial \psi}{\partial q} என்றாகும். குவாண்டம் எந்திரவியலில் இருப்பிடம், உந்தம், ஆற்றல் போன்ற இயற்பியல் அளவுகளை, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் துல்லியமாக அளவிட முடியாது. தொடக்க நிலை அமைப்புகளின் அடிப்படை விதியாக விளங்குகிற ஐயப்பாட்டுக் கொள்கையே, இதற்குக் காரணம். இயற்பியல் அளவுகளின் இரண்டு பரிமாற்று இரட்டைகளை அளவிடுவதில் ஏற்படக் கூடிய சிறும ஐயப்பாடு பின்வருமாறு: block_center| \Delta \times \Delta p_x = \frac {\hat h}{2} அல்லது \Delta E \Delta t = \frac {\hat h}{2} Δx, Δpx , ΔE, Δt ஆகியவை முறையே இருப்பிடம், உந்தம், ஆற்றல், நேரம் ஆகியவற்றில் ஏற்படக் கூடிய ஐயப்பாடுகள் ஆகும். இத்தகைய ஐயப்பாடுகள் காரணமாகக் குவாண்டம் கொள்கையிலுள்ள இயற்பியல் மாறிகள் அவற்றின் சராசரி மதிப்புகள் அல்லது வாய்ப்புள்ள (probable) மதிப்புகளின் அடிப்படையில் குறிப்பிடப் படுகின்றன. தகுந்த இயல் கணிதச் செயலிகளின் உதவியுடன், இயற்பியல் அளவுகளின் சராசரிகளைக் கண்டு பிடிப்பது எளிதானது. இச்செயலிகள் தக்க அலைச் சார்புகளின் (நற்சிறப்பியல்புச் சார்புகளின்) மேல் செயல்பட்டுச் செயலிகளின் தற்சிறப்பியல்பு மதிப்புகளை அளிக்கின்றன. ‘F’ என்னும் அலைச் சார்பு, ஒரு குறிப்பிட்ட நிலையில் ஓர் அமைப்பை இடம் காண்பதற்கான நிகழ் தகவை அளிக்கிற ஒரு நிகழ் தகவு விளக்கம் கொண்டுள்ளது. அது விவரிக்கிற அமைப்பைப் பற்றிய அனைத்துத் தொடர்புடைய தகவல்களும், அதில் அடங்கியுள்ளன எனக் கொள்ளலாம். இரண்டு அமைப்புகள் ஒரே நிலையில் இருக்குமென்று கூறி விட முடியாது. ஆனால், அவற்றை இயற்பியல் தன்மையில் அளவிடக் கூடிய வாய்ப்புகள் சமமாக இருக்கும். ஓர் அமைப்பின் ஒவ்வொரு நிலையையும், விவரிக்க ஓர் அலைச் சார்பு வரையறுக்கப்படுகிறது. இந்த அலைச் சார்பு ஒரு வகுப்பாக அமையும். தனித் தனியாக அல்லது ஒரே வகுப்பாக, அலைச் சார்புகளின் மேல் ஒரு கணிதச் செயல் நடைபெறும் போது, அச்செயல்களின் விளைவுகளைக் கண்டுபிடிக்கச் செயலி முறைகள் உதவுகின்றன. செயலி என்பது ஒரு சார்பின் மேல் செயல்பட்டு, அதை வேறு ஒரு சார்பாக மாற்றி விடக் கூடிய ஒரு கணிதச் செயல் முறையில் பயன்படுத்தப் படுகிற ஒரு கணித அளவு ஆகும். Sinkx, eikx அல்லது x² போன்ற ஒரு சார்பாக ψ(x) கருதலாம். அதை d/dx, x அல்லது c-இனால் பெருக்குவது என்னும் கணிதச் செயலை நிகழ்த்தினால், ψ(x) வேறு சார்புகளாக மாறி விடுகிறது. d/dx,x,c ஆகியவை ψ(x) இன் செயலிகள் எனப்படும். ψ(x) என்பது செயப்படு சார்பு (operand) d/dx-ஆல் பெருக்கும் போது, x என்னும் மாறியைப் பொறுத்த வகையீட்டுச் செயல் விளைகிறது. ஏனைய இரண்டும், x என்னும் மாறி அல்லது c என்னும் மாறிலியால் எளிய பெருக்கல் செயல்களேயாகும். ஒரு கணிதச் செயலைக் குறியீட்டு முறையில் பின்வருமாறு எழுதலாம். இங்கு Aop என்பது Ψ(x)இன் மேல் செலுத்தப்படும் ஏதோ ஒரு செயலி. Φ(x) என்பது, அதனால் விளைந்த சார்பு. தோற்றங்கள். 1. Ψ என்னும் சார்பின் மேல் α, β ஆகியவை செயல் பட்டால்,block_center|αΨ(x) + βΨ(x) = (α + β)Ψ(x) எடுத்துக் காட்டாக, α = , β = x எனலாம். அப்போது \frac {d \psi (x)}{dx} + x \psi (x) = \big( \frac {d}{dx} + x \big) \psi (x) ஆகவே, செயலிகளுக்கு இயல் கணித அளவுகளுக்கு உள்ளதைப் போன்ற கூட்டல் பண்புகள் உள்ளமை தெளிவாகிறது. 2. சார்பின் மேல் முதலில் αஉம் பின்னர், βஉம் செயல்படுமானால், block_center|x \frac{d}{dx}[\psi(x)] = x \frac{d\psi(x)}{dx} ஆனால், முதலில் β செயல்பட்டு, அதன் பின்னர் α செயல்பட்டிருந்தால், block_center|x \frac{d}{dx}[x \psi(x)] = x \frac{d\psi(x)}{dx} + \psi(x) ஆகவே, பொதுவாக αβ ≠ βα என்று தெரிகிறது. ψ( x) சுழியை அணுகும் போது, இரண்டும் சமமாக இருக்கலாம். இயல் கணிதத்தில் சாதாரணமான எண்களுக்குப் பொருந்தும் பெருக்கல் விதிகளிலிருந்து, பெருக்கல் செயலிகளுக்கான விதிகள் வேறு பட்டவை. ஆனால், ( αβ)○p ψ( x) = ( αβ)○p ψ( x) + I○p ψ( x). இங்கு I○p என்பது அலகு செயலி (unit operator) எனப்படும். I○p ψ( x) = ψ( x). இத்தகைய அலகு செயலால் (identity operation) சார்பு மாற்றப்படுவதில்லை. A○p ψ( x) = 0 என்னும் வகையில் செயப்படு சார்பெண்களைச் சுழியாக்கும் செயலி, சுழிச் செயலி (null operator) எனப்படுகிறது. தலைகீழ்ச் செயலிகள் பின்வருமாறு வரையறுக்கப்படுகின்றன. A○p B○p = B○p A○p = I○p எனில், A = B○p அல்லது B = A○p Φ(x) = Aψ(x) எனில், Φ(x)இன் மேல் செயல்படும் தலைகீழ்ச் செயலியைப் பொறுத்தும் ψ(x)ஐப் பெற முடியும். ψ(x) = AΦ(x) ஒரு தலைகீழ்ச் செயலியைப் பெற்றுள்ள இத்தகைய செயலிகள் ஒற்றையல்லாத (non-singular) செயலிகள் எனப்படும். ஆனால் செயலின் விளைவு சுழி எனில், அதாவது A○pψ(x) = 0 எனில், A○p க்குத் தலை கீழ்ச் செயலி இல்லை. A○p ஒற்றையானது. ஏனெனில், அதிலிருந்து விளையும் சார்பின் தலை கீழ் மதிப்பிலிருந்து ψ(x)ஐ உருவாக்க முடியாது. பரிமாற்றிகள் (Commutators). (αβ–βα) என்னும் செயலி α, β ஆகியவற்றின் பரிமாற்றி எனப் படும். இவ்வாறு (x -xsfrac|d|dx} ) என்பது sfrac|d|dx}, x ஆகியவற்றின் பரிமாற்றி, \begin{align}\frac{d}{dx} \times \big[ \psi (x) \big] = \big( x \frac{d}{dx} + 1 \big) \psi (x) \\[6pt] \big( \frac{d}{dx} x - x \frac{d}{dx} \big) \psi (x) = 1\psi (x) \quad & \end{align} என முன்னர்க் காணலாம். எனவே, block_center|\big( \frac {d}{dx}x - x\frac {d}{dx} \big) = 1 இங்கு பரிமாற்றி ஓர் அலகு வெக்டார். x, ஆகியவற்றின் பரிமாற்றி இதே போல, 1க்குச் சமமாக இருக்கும். நேர் போக்குச் செயலிகள். ஓர் அமைப்பை வரையறுக்கிற அலைச் சமன்பாடுகளை, மேற்பொருத்தல் அல்லது நேர் போக்கு இணைப்பு மூலம் உருவாக்கலால், குவாண்டம் கொள்கை ஒரு நேர் போக்குக் கொள்கை ஆகும். ஃபூரியர் தொகையீட்டு வடிவில் உள்ள ஒற்றை நிற ஆக்கக் கூறுகளின் ஒரு நேர் போக்குக் கூட்டாக ஓர் அலைப் பொதியை (wave packet) எழுத முடியும். அலை இயக்கவியலில் பயன் படும் செயலிகள், நேர் போக்குச் செயலிகள். அவற்றுக்குப் பின்வரும் பண்புகள் உண்டு. ψ₁(x), ψ₂(x) என்னும் தன்னிச்சையான செயல் படு சார்புகளுக்கு α(ψ₁ + ψ₂) = αψ₁ + αψ₂ எனில், α என்னும் செயலி நேர் போக்கானது. C என்னும் செயலிக்கு. C(ψ₁ + ψ₂) = Cψ₁ + Cψ₂ என வருகிறது. எனவே αC=Cα. இத்தகைய செயலிகள் நேர் போக்கு உள்ளவை. தற்சிறப்பியல்பு மதிப்புகளும், தற்சிறப்பியல்புச் சார்புகளும். குவாண்டம் கொள்கையின் அலைச் சார்பு மாறிகளின் நல்ல நடத்தையுள்ள சார்புகளே இன்றியமையாதவை. தொடர்ச்சி நிபந்தனைகளையும், நிபந்தனைகளையும் நிறைவு செய்பவையாக எல்லை இருக்க வேண்டும். அமைப்பின் நிலையில், இத்தகைய சார்பாக ψ(x) இருக்க, அதன் மேல் A என்னும் செயலி செயல்பட்டால், வரும் விளைவை Aψ(x)= aψ(x) என எழுதலாம். இங்கு a என்பது ஏதோ ஒரு பொதுவான கூட்டு எண், ψ(x), Aஇன் தற்சிறப்பியல்புச் சார்பெண் எனப்படும். செயலின் விளைவாக, அது a என்னும் எண்ணால் பெருக்கப் பட்டாலன்றி, மாறாமல் இருக்கும். a என்பது A செயலியின் தற்சிறப்பியல்பு மதிப்பு எனப்படும். குவாண்டம் எந்திரவியலின் செயலிகள். வெளி ஆயம், உந்தம் ஆகியவற்றின் எதிர்பார்ப்பு மதிப்புகள் பின் வரும் சமன்பாடுகளால் கணக்கிடப்படுகின்றன. \begin{align} = \frac {\int \psi^{*}x \psi dx}{\int \psi^{*} \psi dx} \\ = \int\psi^{*}x \big( \frac{h}{i} & \frac {d}{dx} \big) \psi dx / \psi^{*}x \psi dx \end{align} முதல் சமன்பாட்டில் ψ(x) என்னும் அலைச் சார்பின் மேல் x–ஐச் செயல்படுத்தியும், இரண்டாம் சமன்பாட்டில், \big( \frac{h}{i}, \frac{d}{dx} \big)ஐச் செயல்படுத்தியும், இம்மதிப்புகள் கண்டு பிடிக்கப்படுகின்றன. இதே போல ஒரு துகளுக்கான சுரோடிஞ்சர் சமன்பாட்டைப் பின்வருமாறு எழுதலாம். block_center|- \frac{h^2}{2m}\cdot \frac {d^2\psi}{dx^2} + v(x) \psi = w\psi அல்லது\big[- \frac{h^2}{2m}\nabla^2 + v(x) \big] \psi = w\psi இவ்வாறு - \frac{h^2}{2m}\nabla^2 + v(x) என்பது ஓர் அமைப்பின் மொத்த ஆற்றலுக்கு நேரிணையான செயலி; இது பழங்கொள்கைப்படியான மொத்த ஆற்றலுக்கான \frac{p^2}{2m} + v(x) = w என்னும் ஹாமில்டன் கோவைக்கு நேரிணையானது. இவ்வாறு, H = \frac{p^2}{2m} + v(x) -\frac{d^2 \psi}{d y^2} + y^2 \psi = \lambda \psi என்னும் சீரிசை அலைவு இயற்றிக்கான கோவையிலிருந்து, λ என்னும் தற்சிறப்பியல்பு மதிப்புக்குள்ள செயலியைப் பின்வருமாறு எழுதலாம். block_center|\big( -\frac{d^2}{d y^2} + y^2 \big) \psi = \lambda \psi எனவே, பழங்கொள்கைப்படியான இயக்கவியல் அளவுக்கு நேரிணையான ஓர் அளவு குவாண்டம் எந்திரவியல் கொள்கையிலும் உள்ளது என்பது தெளிவாகும். வெளி, உந்தம், ஆற்றல் ஆகியவற்றின் குவாண்டம் எந்திரவியல் செயலிகளால் இத்தொடர்பு நிறுவப்பட்டிருக்கிறது. இந்த ஒப்புமையைப் பின் வரும் பொதுவாக்கப்பட்ட எளிய கருது கோள்களாகச் சுருக்கிக் காணலாம். வெளி, உந்தம் ஆகியவற்றின் ஒவ்வொரு பழங்கொள்கைப் படியான சார்புக்கும் குவாண்டம் கொள்கையில் ஒரு சமமான குவாண்டம் எந்திரவியல் செயலி உள்ளது. அதாவது A○p = A(x, , ) A ஐ அளந்து A○pஇன் தற்சிறப்பியல்பு மதிப்பைப் பெறலாம். அது A○pஇன் எதிர்பார்ப்பு மதிப்பாக இருக்கும். ψஇன் ஒரே மாதிரியான நிலையின் அமைப்பின் மொத்த மதிப்பு (ensemble) மேல் செய்யப்பட்ட ஓர் அளவீட்டு வரிசையின் விளைவாக இது இருக்கும். = \frac {\int \psi^{*} A_{\circ p} \psi dx}{\int \psi^{*} \psi dx} இந்தக் கருதுகோள்களை டிராக் என்பார் வெளியிட்டார். இவை பழங்கொள்கை எந்திரவியல் அளவுகளுக்கும், அவற்றுக்கு நேரான குவாண்டம் எந்திரவியல் அளவுகளுக்கும் இடையில் உள்ள ஒப்புமையின் பொதுவாக்கம் ஆகும். முப்பரிமாணமுள்ள நிகழ்வுகளுக்கும், திரளான துகள்கள் கொண்ட அமைப்பு- களுக்கும் இந்தக் கருதுகோள்கள் ஏற்றவை. இவ்வாறு A⚬pψ = λψ எனில், λ என்பது Ψ என்னும் நிலையின் A என்னும் செயலியின் தற்சிறப்பியல்பு மதிப்பு. ஹெர்மிசியன் செயலிகள். F என்பது ஒரு புலனாகிற இயற்பியல் அளவாக இருந்தால் Ψ என்னும் இயல்பாக்கப்பட்ட ஆற்றல் நிலைக்கு அது பின் வரும் எதிர்பார்ப்பு மதிப்பை அளிக்கும். மெய்யான புலனாகும் அளவுகளில் இந்த எதிர் பார்ப்பு மதிப்புகள் இயல்பாக்கப்பட்டவையாகவும், மெய்யானவையாகவும் இருக்க வேண்டும். எதிர் பார்ப்பு மதிப்புகளில், சில ஒரு கூட்டு வடிவத்தை அளிக்கின்றன. வழக்கமான பொருளில் இவை புலனாகுபவையாகக் கொள்ளப்படுவதில்லை. வெக்டர் வடிவத்தில் < F > = (\stackrel \rightarrow \psi, F\stackrel \rightarrow \psi). வெக்டார்களின் ஒரு திசையிலி பெருக்கற் பலனில் உள்ளது போல (\stackrel \rightarrow \psi, F\stackrel \rightarrow \psi) = (F\stackrel \rightarrow \psi, \stackrel \rightarrow \psi) எனில், வரிசை எப்படியிருப்பினும், அது ஒரு பொருட்டானது அன்று. இந்த உறவுக்குக் கீழ்ப்படிகிற ஒரு நேர் போக்குச் செயலி, ஹெர்மிசியன் செயலி (hermitian operator) எனப்படும். இத்தகைய செயலிகள், மெய்யான தற்சிறப்பியல்பு மதிப்புகளை அளிக்கின்றன. ஒரே ஹெர்மிசியன் செயலியால், செயல் ஆற்றப்பட்ட பிறகு, தற்சிறப்பியல்புச் சார்புகள் இரண்டு தற்சிறப்பியல்பு மதிப்புகளை அளிக்குமானால், அவை செங்கோணச் சார்புகளாக இருக்கும். Ψ₁, Ψ₂ ஆகியவை, a என்னும் தற்சிறப்பியல்பு மதிப்புக்கொண்ட A என்னும் ஒரு செயலியின் நேர் போக்குத் தன்மையில் தன்னிச்சையான தற்சிறப்பியல்புச் சார்புகளாக இருந்தால், இந்தச் சார்புகளின் ஒரு நேர் போக்கு இணைப்பும், Aஇன் ஒரு தற்சிறப்பியல்புச் சார்பாக இருக்கும். அதற்கும் a என்னும் ஒரு தற்சிறப்பியல்பு மதிப்பு உண்டு. சமத்துவச் செயலி (parity operator). இது ஒரு சிறப்பு வகையான கணிதச் செயலி. இது π என்னும் எழுத்தால் குறிக்கப்படும். Ψ(x) என்னும் ஓர் அலைச் சார்பெண்னின் மேல், இந்தச் செயலி செயல் பட்டால், அந்தச் சார்பெண் தன் ஆயங்களில் எதிர் பலிக்கப்பட்டு விடும். இவ்வாறு πΨ (x) = Ψ (-x) π–செயலி ஒரு நேர் போக்குச் செயலியாகும். அது ஹெர்மிசியன் தன்மையும் கொண்டது. அதன் தற்சிறப்பியல்பு மதிப்புகள் மெய்யானவை. —கே.என்.ராமச்சந்திரன் நூலோதி. B. N. Srivastava, Quantum Mechanics, Pragathi Prakashan, Meerut (India), 1972. செயலி (கணிதம்) கூட்டல், பெருக்கல், வகையீடு காணல், மூலங்கள் காணல் போன்ற செயல்களைத் தனியாகவோ, ஒரு தொகுப்பாகவோ நிறைவேற்றப் பயன்படும் குறியீடு செயலி (operator) எனப்படும். எடுத்துக்காட்டாக, D அல்லது என்னும் செயலி, வகையீடு காணும் குறியீடு ஆகும். ஒருபடிச் செயலிகள் (linear operators). அடிக்கடி பயன்படுத்தப்படும், இவை, A(f(x)+g(x)) = Af(x) + Ag(x) விதியையும் A. cf(x) = c. Af(x) (c மாறிலி) என்னும் விதியையும் நிறைவு செய்யும். சார்பின் மேல் செயலிகள் பயன்படுத்தும் விதத்தில், வரிசை பொருட்டன்று எனில் அச்செயலிகள் மாற்று விதியை (commutative law) நிறைவு செய்யுமெனக் கருதப் படும். எ-டு a, b மாறிலி A = a + மற்றும் B = b + எனலாம். இச்செயலிகளை f(x) என்னும் சார்பின் மேல் செயல்படுத்துகையில், A B f(x) = a + b + f(x)=BAf(x). A மற்றும் B மாற்று விதியை நிறைவு செய்கின்றன. ஆனால், P = மற்றும் Q = x என்னும் செயலிகளை எடுத்துக் கொண்டால், P Q f(x)=f(x) + QP(x) இதில் PQ ≠ QP. A,B என்பன மாற்று விதியை நிறைவு செய்யாத செயலிகள் எனில், அவற்றின் பரிமாற்றி (commutator) (A, B) = AB - BA என வரையறை செய்யப் படுகிறது. குவாண்டம் கொள்கைப்படி இயங்கு மாறி (dynamic variables) இரண்டின் பரிமாற்றி சுழியானால், ஒரு மாறியின் இயக்கத்தில் ஏனையது ஈடுபடாது. ஒன்று அல்லது பல முறை வகையீடு செய்தலைக் கொண்டு வருபவை, வகையீட்டுச் செயலிகள் (differential operator) எனப்படும். (எ-டு) D = , D = , … Dn = , F(u) = f(x)u” + g(x) u’ + h(x)u பொதுவான n–வகைச் செயலி L(u) ~=~ \sum_{i=0}^n \big[ f_i (x)u^{(r_i)} \big]^{(s_i)} எனில், அதன் சேர்ப்புச்செயலி (adjoint operator) L(u) ~=~ \sum_{i=0}^{n} (-1)^{r_i+s_i}\big [ f_i(x) u^{(s_i)} \big]^{(r_i)} என வரையறை செய்யப்படுகிறது. எனில், அவை தன் சேர்ப்புச் செயலிகள் (self adjoint operators) எனப் படும். இரண்டாம் படி வகையீட்டுச் செயலி ஒன்று தரப்பட்டால் exp ∫sfrac|{q-f’)|fdx என்ற தொகைக் கெழுவைப் (integrating factor) பயன்படுத்தித் தன் சேர்ப்புச் செயலி காணப்படும். —கா. ஜெயராமன் செயலிப் பண்புகள் வகையிடல் செய்கை என்னும் குறியீடு மூலம் குறிப்பிடப்படுகிறது. என்பதற்குப் பிரதியாக ஒரே எழுத்து Dஐப் பயன்படுத்துவது செயல் முறையில் உள்ளது. D வகையீட்டுச் செயலி (differential operator) எனப்படும். அதாவது, D = ; Dy = ஆகும். இங்கு Dy என்பதை ஒரு பெருக்கலாகவோ, y இன் கெழுவாகவோ கருதக் கூடாது. D என்னும் வகையீட்டுச் செயலி y என்னும் சார்பின் மேல் இயங்குகிறது எனக் கொள்ள வேண்டும். மேலும் என்பது ஒரு x ஐப் பொருத்த சார்பாகும். இவ்வாறே, D²y = ; D³y = , …… பொதுவாக Dny = ஆகும். D முதல் வகைக் கெழுச் செயலி என்றும், D² இரண்டாம் வகைக் கெழுச் செயலி என்றும், … Dn என்பது n முறை வகைக்கெழுச் செயலி என்றும் கருத வேண்டும். (D-x)y இன் D ஒரு செயலி, α ஓர் இயற்கணித மாறி எனக் கொண்டால், (D-α)y = Dy-αy என்பதில், αy என்பது α, y இரண்டின் பெருக்கம் என்றும், Dy என்பது {[sfrac|dy|dx என்றும் கொள்ள வேண்டும். (D - α) (D - β)y எனில், முதலில், y மேல் (D - β) செயல்பட்டுப் பெறப்படும் சார்பின் மீது D - α செயல்படும். α, β மாறிகளாவன: (D - α) (D - β)y = (D - α) ((D - β)}y = (D - α)(Dy - βy) = D(Dy - βy) - α(Dy - βy) = D²y - (α + β)Dy + αβy இவற்றிலிருந்து D(αy) = α (Dy) D (βy) = β(Dy) என்றும் (α+β) Dy = α (Dy) + β (Dy) என்றும் அறியலாம். தலைகீழ்ச் செயலிகள். Dy = u எனக் கொண்டால், = u, ∴y = ∫u dx y = u = D-1 u என்பதிலிருந்து D-1 u = ∫u dx எனக் கிடைக்கிறது ஒரு சார்பின் வகைக்கெழு காண்பதும், பின்னர், அவ்வகைக் கெழுவின் தொகை காண்பதும் முறையே செயலும், தலைகீழ்ச் செயலுமாகும். மாற்று முறையும் பொருத்தமாகும். எடுத்துக்காட்டாக, D[ ∫f(x) dx] = ∫[Df(x)] = f(x) என ஆகும். —பங்கஜம் கணேசன் செயலூக்கப் பகுப்பாய்வு ஓர் அணு உலையினுள், நியூட்ரான்களைப் பல தனிமங்கள் மீது ஒளிரச் செய்யும் போது (irradiate), அத்தனிமங்கள் கதிர் வீசும் திறன் பெறுகின்றன. இவ்வடிப்படையில்தான் செயலூக்கப் பகுப்பாய்வு (activation analysis) மேற்கொள்ளப்படுகிறது. கிளர்வுற்ற கதிர் வீசும் ஐசோடோப்புகள் வெவ்வேறான அரை வாழ்வுக் காலத்தைக் கொண்டுள்ளன. அவற்றின் கதிர் வீச்சுச் செறிவையும், காலத்தையும், வரை படம் வரையும் போது, சிதைவு வளை கோடு (decay curve) கிடைக்கிறது. இவ்வரை கோட்டிலிருந்தும், மேலும் பல வகையான கதிர் வீச்சுகளை அடையாளங் கண்டு கொள்வதாலும், தனிமக் கலவையின் கலப்பு விகிதத்தைக் கண்டு பிடிக்கலாம். இவ்வகை ஆய்வின் முடிவு மூன்று உண்மைகளைச் சார்ந்துள்ளது. (அ) உள்ளடங்கிய தனிமங்களின் நியூட்ரான் பிடிக்கும் குறுக்கு வெட்டுத் தோற்றம் (ஆ) நியூட்ரானைக் கொடுக்கும் மூலத்தின் (source) செறிவு (இ) தனிமத்தின் அரை வாழ்வுக் காலம்: காட்டாக, ஒரு கலவையிலுள்ள ஏதேனும் ஒரு தனிமத்தின் (E) அளவைக் கண்டு பிடிப்பதாகக் கொள்ளலாம். இதற்கு, ஐசோடோப்பை நீர்மமாக்கும் முறையைப் (isotope dilution) பயன்படுத்தலாம். முதலில் ஒரு குறிப்பிட்ட குறைந்த அளவுள்ள Eஇன் கதிரியக்க ஐசோடோப் கலவையுடன் சேர்க்கப்படுகிறது. பிறகு, கலவையிலுள்ள தனிமம், Eஐயும் கலந்த கதிரியக்க ஐசோடோப்பையும் கலவையிலிருந்து பிரித்தெடுத்து, அவற்றின் கதிர் வீச்சுத் திறன் கணக்கிடப்படுகிறது. கதிரியக்க ஐசோடோப்பைக் கலந்த பிறகு, கலவையிலுள்ள தனிமத்தின் நியமக் கதிரியக்கத் திறனும் (specific activity) பிரித்தெடுக்கப்பட்ட தனிமத்தின் நியமக் கதிரியக்கத் திறனும் சமம். \frac{I_0}{m_0 + m_x} = \frac{I_1}{m_1} I0–சேர்க்கப்பட்ட கதிரியக்க ஐசோடோப்பின் கதிரியக்கத் திறன். I1–பிரித்தெடுக்கப்பட்ட தனிமத்தின் கதிரியக்கத் திறன். m0–சேர்க்கப்பட்ட ஐசோடோப்பின் நிறை. m1–பிரித்தெடுக்கப்பட்ட தனிமத்தின் நிறை. mx–அளவு தெரியாத தனிமத்தின் நிறை (எடை) எனவே, mx= (m1-m0) அல்லது. mx = m0( -1) S0 - சேர்க்கப்பட்ட ஐசோடோப்பின் நியம கதிரியக்கத் திறன். S1- பிரித்தெடுக்கப்பட்ட தனிமத்தின் நியம கதிரியக்கத் திறன். ஒரு கலவையிலுள்ள தனிமத்தின் அளவை, வேறு முறையிலும் கண்டு பிடிக்கலாம். ஒரே சூழ்நிலையில், ஒரே நேரத்தில், அளவு தெரியாத (கண்டு பிடிக்க வேண்டிய) தனிமத்தின் மேலும், நியம தனிமத்தின் மேலும் (standard composition) நியூட்ரான் வீச்சுப் படும் போது, அவை கதிரியக்கத் திறன் பெறுகின்றன. அவற்றின் கதிரியக்கத் திறனிலிருந்து அளவு தெரியாத தனிமத்தின் நிறையைக் கண்டு பிடிக்கலாம். mx–அளவு தெரியாத தனிமத்தின் நிறை (எடை). mx1–நியம தனிமத்தின் நிறை. Ax–அளவு தெரியாத தனிமத்தின் கதிரியக்கத் திறன். Ax1–-நியம தனிமத்தின் கதிரியக்கத் திறன். செயலூக்கப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் தனிமங்கள், ஓர் அணு உலையுள் நியூட்ரான்களாலோ, சைக்ளோட்ரானில் மின் சுமையுள்ள துகள்களாலோ, பீட்டா, காமாக் (β, γ) கதிர்களாலோ, தாக்கமடைகின்றன. இச்செயலூக்கப் பகுப்பாய்வு அறிவியலில் மிக முக்கியத்துவத்தை அடைந்துள்ளது. 0.001–1.14 MEV வரை பாய்மச் செறிவுள்ள (flux intensity) நியூட்ரான்கள் கதிர் விடப் படுகின்றன. மின் வேதி முறைகள். ஒரு கரைசலின் செறிவை மின்னழுத்தப் பகுப்பாய்வு முறையிலும் (potentiometric analysis) கண்டுபிடிக்கலாம். இம்முறையில், முதலில் குறிப்பிட்ட கரைசலின் மின்னழுத்தத்தைக் (electrical potential) கணக்கிடுவதன் மூலம் அந்தக் கரைசலின் செறிவு கண்டுபிடிக்கப்படுகிறது. அந்தக் கரைசலின் மின்னழுத்தத்தைப் பயன்படுத்தி, அதன் pHஐயும் கண்டு பிடிக்க முடியும், இம்மின்னழுத்த முறையில், பல வகையான மின் முனைகள் பயன்படுகின்றன. அவை பெரும்பாலும் அயனி–தேர்ந்தெடுப்பவையாக (ions selective) உள்ளன. மின் முனைகளுக்குக் கரைசலில் உள்ள ஒரு குறிப்பிட்ட அயனிக்கு மட்டுமே செயல்படும் திறன் உள்ளது. இம்மின்னழுத்த முறையில் செறிவு கண்டுபிடிக்கப் பட வேண்டிய கரைசலின் அயனி தேர்ந்தெடுக்கும் மின்முனை ஒன்றைச் செருகி, அதை இன்னொரு நியம மின்முனையோடு (standard electrode) இணைத்து, ஒரு மின்கலன் அமைக்கப்படுகிறது. இம்மின்கலனில் மின்னழுத்தத்தைக் கணக்கிடுவதன் மூலம், அந்தக் கரைசலின் செறிவு அல்லது pH ஐக் கண்டு பிடிக்கலாம். அலைவு இயல் (oscillometry). இம்முறையில் ஒரு கரைசலின் மின் கடவா மாறிலியைக் (dielectric constant) கண்டுபிடிப்பதன் மூலமாகவோ, கடத்துந் திறனைக் (conductivity) கண்டு பிடிப்பதன் மூலமாகவோ, அந்தக் கரைசலின் செறிவைக் கண்டு பிடிக்கலாம். இம்முறையில் பயன்படும் மின் கலங்களின் மின் முனைகளுக்கு அதிக அலைவு எண் கொண்ட மாற்ற மின்னோட்டக் குறியீடுகள் (high frequency alternating signals) அனுப்பப்படுகின்றன. வோல்ட்டாயியல் (voltametry). இம்முறையிலும், செறிவு கண்டு பிடிக்க வேண்டிய கரைசலில் இரண்டு மின் முனைகளைச் செருகி, ஒரு மின் கலன் அமைக்கப் படுகிறது. இம்மின் முனைகளில் ஒன்று, மிகச் சிறியதாகவும், மந்தமாகவும் உள்ளது. (பெரும்பாலும் Au அல்லது pt) பிறிதொரு வகை மின் முனைகள் மிகப் பெரியவையாக உள்ளன. இவற்றின் மின் செறிவு மிகக் குறைவு. எனவே, மின் கலனிலிருந்து வெளி வரும் மின்சாரம் மந்த மின் முனையை நோக்கி நகரும் பொருள்களின் வேக விகிதத்தைப் பொறுத்து அமையும், இம்முறை கரிம, கனிமச் சேர்மங்களின் பகுப்பாய்வில் பயன்படுகிறது. மாறும் மின்னழுத்தம், மாறும் மின்னோட்டம், மாறா மின்னோட்டம் போன்ற நிலைகளிலும், இம்முறை பயன்படும். இம்முறை, கால மின்னழுத்த முறை (chrono potentiometry) எனப்படும். ஒவ்வொரு முறையிலும், மின்னோட்டத்திற்கும், மின்னழுத்தத்திற்கும் தொடர்புள்ள ஒரு வரை படம் பெறப் படுகிறது. இவ்வரை படம் வடிவ வளை கோடுகளைக் கொடுக்கும். இதிலிருந்து கரைசலின் செறிவைக் கண்டு பிடிக்கலாம். —கி. மு. மோகன் செயற்கை அருமணி <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இயற்கையாகக் கிடைக்கும் ஒன்பது நிறங்கள் கொண்ட கற்கள் நவமணி எனப்படும். அவை வைரம், மரகதம், மாணிக்கம், வைடூரியம், நீலம், கோமேதகம், முத்து, பவளம், புட்பராகம் முதலியவையாகும்.இவை தவிர, நிலாக் கல், ஓப்பல் போன்ற பலவிதமான கற்களும் காணப்படுகின்றன. தற்காலத்தில் வளர்ந்து வரும் தொழில் நுட்பவியலால், செயற்கைக் கற்களும் (artificial stone), போலிக் கற்களும் தயாரிக்கப்படுகின்றன. இயற்கை, செயற்கை, போலி மணிகள் அனைத்தும் சேர்த்து, தற்போது எண்பத்து நான்கு வகை கண்டறியப்பட்டுள்ளது. இயற்கையாகக் கிடைக்கும் மணிளை விடச் செயற்கை, போலி மணிகள் இன்று மிகுதியாகக் காணப் படுகின்றன. வேதியியல்பு, வெளிப்புறத் தோற்றம், கடினத் தன்மை, ஒளியியல்பு, நிறம் முதலிய தன்மைகளில் இயற்கை மணிகளை ஒத்து, செயற்கை மணிகள் (synthetic or manufactured gem) காணப் படுகின்றன. போலி மணிகள் கண்ணாடியிலிருந்து செய்யப் படுகின்றன. சில நெகிழியிலிருந்தும் (plastic) தயாரிக்கப்படும். வைரம், மாணிக்கம், மரகதம் முதலியவை பெரும்பாலும் செயற்கையாகக் செய்யப்படுகின்றன. வியன்னாவைச் சேர்ந்த ஜோசப் ஸ்டிராசர் 1758ஆம் ஆண்டு ஒரு விதக் கண்ணாடியிலிருந்து, செயற்கை மணியைத் தயாரித்தார். அது வைரம் எனப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அகஸ்டி வெர்னிஸ் 1902இல் செயற்கை மாணிக்கத்தையும், 1910இல் செயற்கை மரகதத்தையும் தயாரித்தார். தற்போது இயற்கையாகக் கிடைக்காத நிறங்களில் கூடப் பல வண்ணக் கற்கள் தயாரிக்கப்படுகின்றன. பெருகி வரும் மக்கள் தொகையில் இன்று தொழில் துறைக்குப் பெரும்பான்மையாக மணிகள் தேவைப் படுகின்றன. ஆனால், இவை இயற்கையில் மிகுதியாகக் கிடைப்பதில்லை. ஆதலால், செயற்கை மணிகள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. மேலும், இயற்கையாகக் கிடைக்கும் மணிகளை விடச் சிறந்த மணிகளைச் செயற்கையாகத் தயாரிக்க முடிகிறது. இவை நிறம், ஒளி, கடினத் தன்மை முதலியவற்றில் சிறந்து விளங்குகின்றன. அறிவியல் வேதி ஆய்வுகளுக்குச் செயற்கை மணிகள் தேவைப் படுகின்றன. இயற்கையில் கிடைக்காத அருமணியைக் கூடச் செயற்கையாகத் தயாரிக்கலாம். 1948இல் டிட்டானியம் என்ற செயற்கை மணி தயாரிக்கப் பட்டது. பின்னர் பாபுலைட் என்ற மணியும் செய்யப் பட்டது. இயற்கை மணிகளுக்கும், செயற்கை மணிகளுக்கும் வேறுபாடு காண்பது அரிது. இயற்கை மணிகளில் ஊடுருவல் இருக்கும். சில மணிகளில் காற்று, காற்றுக் குமிழ், நீர் ஆகியவை ஊடுருவியிருக்கும். இந்த ஊடுருவல் சில மணிகளுக்கு ஒளிச் சிறப்பைத் தருகிறது. செயற்கை மணிகளில் ஊடுருவல் இராது. ஆனால், காற்றுக் குமிழ் இருக்கும். நிறம் குறைந்த மணிகளைச் சூடு படுத்தி, வேறு நிறத்திற்கு மாற்றுவதுண்டு. பல மணிகளில் இந்நிறம் நிலைக்காது, வெளுத்து விடும். எகிப்தியர்கள், கண்ணாடி மணிகளை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முதன் முதலில் செய்துள்ளனர். —இரா. சரசவாணி நூலோதி. அ. அய்யூப், நவமணிகள், முதல் பதிப்பு, தேவநேயன் அச்சகம், சென்னை, 1985. செயற்கை இழைகள் செயற்கை முறையில் (மனிதனால்) தயாரிக்கப் படும் இழைகள் செயற்கை இழைகள் ஆகும் (synthetic fibres). 1910இல் பட்டுக்கு, பதிலீடாகத் தயாரிக்கப்பட்ட ரேயான், முதல் செயற்கை அல்லது தொகுப்பு இழையாகும். செயற்கைப் பட்டு எனப்படும் ரேயானின் இயைபு, பட்டின் இயைபிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். அதற்குப் பின்பு, தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்ட இழைகள் எவையும், இயற்கை இழைகளைப் போல இருக்கவில்லை. தொகுப்பு வழியில் பெறப்பட்ட, செல்லுலோஸ் வகையல்லாத இழை என்ற வரையறையும் உள்ளது. இயற்கையிழையான பருத்தியைத் திருத்தம் செய்து (மறு வீழ்படிவு செய்து) பெறப்பட்ட ரேயான் இவ்வரையறையில் அடங்காது. ரேயானையும், அசெட்டேட் இழையையும், பகுதித் தொகுப்பு இழைகள் (semi-synthetic fibres) எனலாம். முழுத் தொகுப்பு இழைகளைத் தயாரிப்பதற்கு வேதிப் பொருள்களே அடிப்படையாகும். இவ்வேதிப் பொருள்களுக்கும், இழைத் தன்மைக்கும் எவ்வகைத் தொடர்பும் இல்லை. சில மூலப் பொருள்கள் வளிம நிலையிலோ, நீர்ம நிலையிலோ இருக்கக் கூடும். தொகுப்பு இழைகளை வகையிடுகையில் இழைகளுக்கும், நீட்சி நெகிழிகளுக்கும் (elastomers) இடைப் பட்ட நிலையைக் கருத்திற் கொள்ள வேண்டும். சில ரப்பர்கள், இழைத் தன்மைகளைப் பெற்றுள்ளன: எ-டு. ஸ்பான்டஸ். 1930-40ஆம் ஆண்டில் புதிய, மாறுபட்ட செயற்கை இழை ஆய்வுகள் பல்வேறு நிறுவனங்களில் செய்யப் பட்டன. இக்கால கட்டத்தில், தொழில் நுட்பம் மறையமாகப் பாதுகாக்க ப்பட்டது. தயாரிக்கப்பட்ட இழைகளுக்கு முறையான வேதி உய்த்துணர் (chemically derived) பெயர்கள் இடப்படவில்லை. மாறாக, தயாரித்த நிறுவனங்கள், தம் நோக்கங்களுக்குத் தக்கவாறு வணிகப் பெயர்களை அளித்தன. இதனால், இவ்விழைகளைப் பற்றிய செய்திகளில் மிகுந்த குழப்பம் நிலவியது. தற்போது ஒவ்வோர் இழையும் திட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளது. அசெட்டேட் இழைகள். இது செல்லுலோஸ் அசெட்டேட்டை இழைப் பொருளாகக் கொண்ட இழை. இங்கு மொத்த —OH தொகுதிகளில் 92% அசெட்டைலேற்றம் கொண்டுள்ளது. டிரை அசெட்டேட் (triacetate) எனும் பெயர், இவ்விழையின் பொதுப் பெயராகும். இதன் அடர்த்தி 1.3–1.32 ஆகும். ஈர மர ஈர்ப்பு (moisture regain), 3.2% இழு வலிமை 124-158 M.Pa. பூசண நிறம் மாறுதலுக்கு ஈடு கொடுக்கக் கூடியது. ஆனால், நீண்ட நாள்கள் சூரிய ஒளி படுமாறு வைக்கப் பட்டிருந்தால், வலிமை இழப்பு ஏற்படுகிறது. தேய்மான எதிர்ப்பு மிகுந்த இழையாகும். ஆக்சிஜனேற்றிகளால் பாதிக்கப் படுகிறது. ஹைப்போகுளோரைட், பெராக்சைடு நிற நீக்கிகளையும், கரைப்பான்களையும் எதிர்க்க வல்லது. அசெட்டோன், டிரைகுளோரோ எத்திலீன், அடர் அசெட்டிக் அமிலம், மெத்திலீன் குளோரைடு ஆகியவற்றில் பருத்துப் பெருகுகிறது. 232°C. வரை பெட்டிப் போடும் போது, டிரை அசெட்டேட் பிசுபிசுப்பை ஏற்பதில்லை; 300°C இல் உருகுகிறது. சாதாரண அசெட்டேட் இழை (அசெட்டைலேற்றம் முழுமையுறாதது) 177–191°C இல் பிசுபிசுப்புத் தன்மை அடைகிறது. 204–230°C வரம்பில் மென்மையுறுகிறது. டிரை அசெட்டேட் படல வடிவிலும், அசெட்டேட் படல, வெட்டிழை வடிவுகளிலும் கிடைக்கின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> துணியின் விலையைக் குறைக்கும் பொருட்டோ, இரு வேறு இழைகளின் விரும்பத் தக்க தன்மைகளை ஒருங்கே பெறும் பொருட்டோ, அசெட்டேட் இழைகள் ஏனைய இழைகளுடன் கலக்கப் படுகின்றன. இயற்கை இழைகளுக்குள், கம்பளியே அசெட்டேட்டுடன் கலப்பதற்கு ஏற்ற இழையாகும். அசெட்டேட் கலக்கப்பட்ட கம்பளி இழை எளிதில் சுருங்குவதில்லை; மடிப்புக் கலையாது, பாதுகாக்கப்படுகிறது. அக்ரிலிக் இழை. மொத்த எடையில் குறைந்தது 85% அக்ரிலோநைட்ரைல் தொகுதிகளைக் கொண்ட நீண்ட சங்கிலியுடைய தொகுப்பு இழை. இது எனும் ஒரு படித் தொகுதி கொண்டது. அடர்த்தி 1.16–1.18; ஈர மறு ஏற்பு: 1–2.5%; இழு வலிமை: 207–373 MP. பூசணம், சூரிய ஒளி, தேய்மானம், கரைப்பான்கள், நிற நீக்கிகள், நாட்படத் திறந்து வைத்தல் ஆகியவற்றைச் செவ்வனே எதிர்க்க வல்லது. கனிம அமிலங்களையும், வீரியம் குறைந்த காரங்களையும் பாதிக்கவொட்டாதது. 150°C வரை பெட்டிப் போட ஏற்றது; எரிதலை ஊக்குவிப்பதில்லை; சிதறிய நிலை மற்றும் எதிரயனிச் சாயங்களை ஏற்கின்றது. நீள் தன்மை குறைவாக அமையப் பெற்றது; ஆனால், மீட்சி (resilience) மிகுந்தது. பருத்தியில் 25%உம் கம்பளியில் 10% உம் அடர்த்தியைக் கொண்டது. 220–330°C வெப்ப நிலை வரம்பில் பிசுபிசுப்புத் தன்மை அடைகிறது. பருத்தி, கம்பளி, மோஹேர் (mohair), ரேயான் ஆகியவற்றுடன் கலப்பினமாக்க ஏற்றதெனினும், ஒவ்வொரு கலப்பின இழையும் வேறுபட்ட தன்மை கொண்டது. அரமிட் இழை. இது குறைந்தது 85% அமைடு பிணைப்புகள், இரு அரோமாடிக் வளையங்களுடன் நேரடியாகப் பிணைக்கப்பட்டிருக்கும் அமைப்புள்ள பல் அமைடு நீள் சங்கிலி; அடர்த்தி 1.38–1.44; ஈர மறு ஏற்பு: 4.5–7%; இழு வலிமை: 620–2760 MP. பூசண எதிர்ப்பு மிக்கது. நீண்ட நாள்களுக்குச் சூரிய ஒளி படுவதால், சீர்கேடடைகிறது. தேய்மான எதிர்ப்பும், கரைப்பான்களால் பாதிப்புறாமையும் மிக்கது. பெரும்பாலான அமிலங்களால் பாதிக்கப் படுவதில்லை. எனினும், HCl, HBr, HNO₅, H₂SO₄ போன்ற கனிம அமிலங்கள் படுமாறு நீண்ட நாள்கள் திறந்து வைத்திருப்பின், வலிமையிழப்பு நேருகிறது; எளிதில் எரிவதில்லை; தீச்சுடரைப் பரப்புவதில்லை; உருகுவதில்லை. 370–500°C வெப்ப நிலை வரம்பில் சிதைவுறுகிறது. நீளிழை சாயமேற்றத் தக்கதன்று; வெட்டிழை எதிரயனிச் சாயங்களை ஏற்கிறது. வெப்பம் கடத்தும் தன்மையற்றது. வியர்வையால் பாதிப்புறுவதில்லை. அரமிட் இழையை ஏனைய இழைகளோடு கலப்பினமாக்குவதன் நோக்கம், அதன் சுடர் எதிர்ப்புத் தன்மையை உயர்த்துவதேயாகும். சூரிய ஒளி அல்லது செயற்கை ஒளிக்கு 50 மணி நேரத்திற்கு மேல் படுமாறு வைத்திருந்தால், இழையின் வலிமையில் பாதி குறைந்து, வெண்கல (மஞ்சள்) நிறமடையும். அரமிட் இழைகளின் வணிகப் பெயர்கள்: கெவ்லார், நொமெக்ஸ் என்பன. புளூரோகார்பன் இழைகள். இது கார்பன் அணு கொண்ட நீள் சங்கிலியில் புளூரின் அணுக்கள் இணைப்புகளாக உள்ள இழை. டெஃப்ளான் என்பது இதன் வணிகப் பெயர்களுள் ஒன்றாகும். அடர்த்தி 0.8–2.2; ஈர மறு ஏற்பு இல்லை; இழு வலிமை 173–793 Mpa. பூசணம், சூரிய ஒளி, தேய்மானம் ஆகியவற்றை எதிர்க்க வல்லது. அமிலங்களாலும், காரங்களாலும் பாதிப்புறுவதில்லை. உருகு நிலையான 288°C வரை மிகுதியும் பாதிப்புறுவதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட கரைப்பான்களைப் பயன்படுத்திச் சில வகைகளுக்கு நிறமேற்றலாம். விஸ்கோஸ் ரேயானை ஒத்த வலிமை கொண்ட இவ்விழை டிரை அசெட்டேட்டை விட வலிமை குன்றியது. டெஃப்ளான் துணி, மின் தடுப்புப் பொருளாகும். எந்நீர்மமோ, திண்மமோ, டெஃப்ளான் பரப்பில் ஒட்டுவதில்லை. இத்துணி பொதுவாகத் தொழிலகங்களில் மட்டுமே பயன்படுகிறது. தாங்கு வலிமை, அரிமான எதிர்ப்பு, வெப்ப எதிர்ப்பு ஆகிய தன்மைகள் தேவைப்படுகையில், இவ்விழைகள் பயன்படுகின்றன. எனினும், இவற்றின் விலையும், மீச்சூட்டில் நச்சு வளிமம் உமிழ்தலும், பயனைக் குறைக்கின்றன. மோடாக்ரிலிக் இழை. இது 35%க்குக் குறையாமலும், 85%க்கு மேற்படாமலும், அக்ரிலோ நைட்ரைல் தொகுதிகளைக் கொண்ட ரப்பராகவோ, பல் அமைடாகவோ, வகையிடப்பட முடியாத தொகுப்பு வகை இழை. அடர்த்தி: 1.35–1.37; ஈர மறு ஏற்பு 2.5–3%; இழு வலிமை: 200–325 MPa. பூசணம், சூரிய ஒளி, கரைப்பான்கள், சலவைப் பொருள்கள் ஆகியவற்றினால் எளிதில் தாக்கப்படுவதில்லை. பெரும்பாலான அமிலங்களினாலும், வீரியம் குறைந்த காரங்களினாலும் பாதிப்புறுவதில்லை. சற்றே நிற மாற்றம் நிகழ்கிறது. கொதி நீரில் ஏற்படும் சுருக்கம் 1% வெப்பத்தால் தோன்றும் சுருக்கம் 200°C இல் 5% எரிதலை ஊக்குவிப்பதில்லை. நடு நிலையான, உலோகமேற்றப்பட்ட, நேரயனி, சிதறல் வகைச் சாயங்கள் ஏற்றவை. சாய நிற மாற்றமோ, வியர்வையால் பாதிப்போ இல்லை. பெரும்பாலான வகைகள் பெட்டிப் போடத் தேவையற்றவை. சலவை செய்வதற்கு ஏற்றதெனினும், தோய்த்தாலோ, அழுத்திப் பிழிந்தாலோ, இழைப் பிசிர் தோன்றக் கூடும். இரு வேறு வணிக நிறுவனங்கள் இரு வேறு பெயர்களில் (SEF மற்றும் VEREL) இவ்விழையைத் தயாரிக்கின்றன. பருத்தி–மோடாக்ரிலிக் கலப்பின இழைகள், விளையாட்டு வீரர் உடைகள், உள்ளாடைகள் ஆகியவற்றின் தயாரிப்பில் பயன்படுகின்றன. பாலி எத்திலீன். இவை குறை அடர்த்தி மற்றும் உயர் அடர்த்தி ஒற்றை நீளிழைகள் என வகையிடப் பட்டுள்ளன. குறை அடர்த்தி வகையின் தன்மைகள்: அடர்த்தி 0. 92; ஈர மறு ஏற்பு புறக்கணிக்கத் தக்கது. இழுவலிமை: 76–240 MPa. உயர் அடர்த்தி வகையின் அடர்த்தி: 0.95: ஈர மறு ஏற்பு புறக்கணிக்கத் தக்கது. இழு வலிமை: 200–580 MPa. இரு வகைப் பல் எத்திலீன் இழைகளுக்கும் பொதுவான இயல்புகளாவன: அமில, காரப் பாதிப்பு இல்லை. ஆக்சிஜனேற்றிகள் பாதிக்கின்றன. தயாரிக்கும் போதே, நிறமேற்றப் படுகிறது. தேய்மான எதிர்ப்பு மிக்கது. குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோ கார்பன்களில் பருத்துப் பெருகுகிறது. பாலிபுரோப்பிலீன். இதன் (PP) தயாரிப்புக்காகச் சீக்லிர் (Ziegler) என்னும் ஜெர்மானியரும், நட்டா (Nutta) என்னும் இத்தாலியரும் நோபல் பரிசு பெற்றனர். எனும் தொடர் அமைப்புக் கொண்ட இப்பல படியில் மெத்தில் தொகுதிகள் சங்கிலிக்கு ஒரே புறத்திலோ, மாறி மாறி மேலும், கீழுமாகவோ. தாறு மாறாகவோ அமையக்கூடும். இவற்றில் முதல் இரு வகைகளைத் தனித்துத் தயாரிப்பதற்கு ஏற்ற வினையூக்கிகளைச் சீக்லிரும், நட்டாவும் கண்டு பிடித்தனர். மெரக்லான், ஹெர்குலான், ரீவான் என்ற பெயர்களில், வணிக நிறுவனங்கள் இவ்விழையைத் தயாரிக்கின்றனர். பல்புரோபிலீன் பிசினுடன், அதன் இயல்பான வெப்ப, ஒளி பாதிப்புறுதலைத் தவிர்க்கும் பொருட்டுச் சில வேதிப் பொருள்கள் கலக்கப் படுகின்றன. இவ்விழை உருக்கிப் பிழிந்து, வார்த்தல் முறையில் நூற்கப் படுகிறது. ஒற்றை நீளிழைகளாகவும், பல் நீளிழைகளாகவும், ஏட்டு வடிவிலும் (sheet form) தயாரிக்க ஏற்றது. சாயமேற்றத் தக்கன. சாயமேற்றத் தகாதன என இரு வகைகளில் பெறலாம். நைலான் இழைகளை விட, நீள் தன்மை குறைந்தவை. துவளுமையும், வெப்பக் கடத்தாப் பண்பும், குளிர் கால உடைகள் தயாரிப்புக்கு PPஐ ஏற்றதாக்குகின்றன. நீரை உறிஞ்சுவதில்லை; ஒட்ட விடுவதுமில்லை. காஃபி, முட்டை, குளிர் பானங்கள், பழச் சாறுகள், உயவு நெய், ஒப்பனைப் பொருள்கள் ஆகியவற்றால் கறையுறுவதில்லை. ஈரத்தில் வலிமை இழப்பதில்லை. எளிதில் உலரும். சுருங்குவதில்லை. 100°Cஇல் 5–12% வரை சுருங்குகின்றது; 140°Cஇல் இளகும்: 160°Cஇல் உருகும். 288°Cஇல் சிதைவுறும், சூரிய ஒளியின் புற ஊதாக் கூறு பெரும் பாதிப்பைத் தோற்றுவிக்கிறது. பூசணம், அந்துப் புழு, அமிலம், காரம் ஆகியவற்றை நன்கு எதிர்க்கும், எளிதில் சாயமேற்பதில்லையாதலால், இழையைக் தயாரிக்கும் போதே, நிறமேற்றம் செய்யப்படுவது. அடக்க விலைக் குறைப்பு, நூல் எடைக் குறைப்பு, நூலின் பருமனை உயர்த்துதல், வலிமையையும், திடத்தையும் கூடுதலாக்குதல். பாலிபுரோப்பிலீனை ஏனைய இழைகளுடன் கலப்பினமாக்குவதன் நோக்கங்கள் ஆகும். நைலான். 83%க்கும் குறைவான அளவில் அமைடு பிணைப்புகள் இரு அரோமாடிக் வளையங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொகுப்பு வகை பாலிஅமைடு, நைலான் எனப்படும். டூபாண்ட் (Dupont) எனும் நிறுவனத்தில் ஆராய்ச்சி நிகழ்த்தி வந்த காரோதாஸ் எனும் வல்லுநரால் முதன் முதலாகப் பாலி அமைடு தயாரிக்கப் பட்டது. எந்த டைகார்பாக்சிலிக் அமிலத்தையும், எந்த ஈரிணைய அமீனுடனும் வினைப்படுத்திப் பல் அமைடை உருவாக்கலாம் என்றாலும், பயன்படுத்தப் படும் வினைப் பொருளைப் பொறுத்தே இழையின் தன்மை அமைகிறது. ஹெக்சா மெத்திலீன் டைஅமீன் (hexa methylenediamine), அடிபிக் அமிலம்(adipic acid) ஆகியவற்றை இணைப் பல்லுறுப்பாக்கி, முதல் நைலான் தயாரிக்கப் பட்டது. இந்நைலானை, நைலான் 6.6 என்பர். அமீன், அமிலம் ஒவ்வொன்றிலும் 6 கார்பன் அணுக்கள் இடம் பெற்றிருப்பதால், இப்பெயர் அளிக்கப்பட்டது. நைலான் மூலக் கூறு புரதத்தின் இயைபைப் பெற்றிருந்தமையால், இயற்கை வழிப் புரத இழைகளான கம்பளி, பட்டு, மயிர் ஆகியவற்றின் தன்மைகளை ஓரளவுக்குப் பெற்றுள்ளது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> அடர்த்தி 1.14; ஈரமறு ஏற்பு 2.8–5%: இழு வலிமை 275–925 MPa. ஃபீனால் வகைச் சேர்மங்களைத் தவிர, ஏனைய கரிமக் கரைப்பான்களில் கரைவதில்லை. வலி மிக்க ஆக்சிஜனேற்றிகளும், கனிம அமிலங்களும் சில நைலான் வகைகளைச் சிதைவுறச் செய்கின்றன. எரிகாரங்களினால் பாதிப்புறுவதில்லை. 229°Cஇல் பிசுபிசுப்பை அடைகிறது; உருகு நிலை 250–275°C. 150°Cஇல் பல மணி நேரங்கள் வைத்திருந்தால், வெண்ணிற நைலான் பழுப்பு நிறமடைகிறது. 316–388°C வெப்ப நிலை வரம்பில் சிதைவுறுகிறது. எல்லா வகைச் சாயங்களையும் ஏற்கிறது. ரேயான், அசெட்டேட் இழைகளைப் போலன்றி, நைலான் உருக்கி நூற்கப்படுகிறது. நைலானின் குறிப்பிடத் தக்க பண்புகளாவன: உயர் வலிமை–எடை விகிதம்; அறுந்து போகும் தறுவாயிலும், உயர் நீட்சி (high elongation at break); வடிவ மாற்றத்திலிருந்து எளிதில் மீட்பு; உயர் தேய்மான எதிர்ப்பு மற்றும் உயர் மடித்தல் எதிர்ப்பு. இரு பாலருக்கும் ஏற்ற உள்ளாடைகள் (lingerie), நீச்சலுடை, விளையாட்டு மற்றும் வேட்டைக்காரர் சீருடை, காலுறைகள், கையுறைகள் ஆகியன நைலான் துணியால் தயாரிக்கப் படுகின்றன. நைலான்களில், பிற வகைகளாவன: நைலான் 6.10; நைலான் 6.11; நைலான் 6. பாலி எஸ்டர். டெரிப்தாலிக் அமிலம் உள்ளிட்ட பல வகை அரோமாடிக் அமிலங்களினாலான எஸ்டர் தொகுதிகளைக் குறைந்தது 85% கொண்ட நீள் சங்கிலிப் பல்லுறுப்பாகும். மீண்டும், மீண்டும் பல்லுறுப்புச் சங்கிலியில் இடம் பெறும் தொகுதியின் வாய்ப்பாடு; அடர்த்தி: 1.34–1.39; ஈர மறு ஏற்பு: 0.4%; இழு வலிமை : 230–1140 MPa. சூரிய ஒளி படுமாறு நீண்ட நேரம் வைத்திருந்தால், வலிமையிழப்பு நேருகிறது. சலவைப் பொருள், சோப்பு, கடல் நீர், வியர்வை, உலர் சலவை வேதிப் பொருள்கள் ஆகியன பாலி எஸ்டரை எளிதில் பாதிப்பதில்லை. ஏறத் தாழ, 230°C இல் பிசுபிசுப்புத் தன்மை அடைகிறது. உருகு நிலை சுமார் 250°C. பெரும்பாலான கனிம அமிலங்களால் பாதிக்கப் படுவதில்லை. அடர் H₂SO₄இல் பகுதிச் சிதைவுடன் கரைகிறது. வலிவு மிக்க காரங்களினால் பெரும் பாதிப்பு ஏற்படுவதில்லை. அக்ரிலிக் இழைகளை விடப் பாலி எஸ்டர் இழைகள் கூடுதலான வெப்பம் கடத்துமையைப் பெற்றவை. பாலி எஸ்டர் வெட்டிழைகள் அலைவு மிக்கவை; எனவே, நூல்களிலும், துணிகளிலும் உயர் வெப்பக் காப்பீட்டை எதிர் பார்க்க முடிகிறது. பருத்தி, லினன், ரேயான் ஆகியவற்றை விடக் கூடுதல் சூட்டுப் பாதுகாப்பையும் (கதகதப்பையும்), கம்பளி, அக்ரிலிக், பட்டு ஆகியவற்றை விடக் குறைவான சூட்டுப் பாதுகாப்பையும் அளிக்கிறது. பூசணம், பூச்சி, புழு ஆகியவற்றினால் முழுதும் தாக்குறுவதில்லை. சிதறல் வகை மற்றும் அசோச் சாயங்களை ஏற்க வல்லது. சலவையினாலோ, ஒளியினாலோ சாயம் மாறுவதில்லை. கார வகைச் சாயங்களை ஏற்குமாறு, சில பாலி எஸ்டர்கள் திருத்தப்படுகின்றன. பல இழைகளுடன் பாலி எஸ்டர் இழை இனக் கலப்பாக்கப்பட்டுள்ளது. 65% பாலி எஸ்டர் கொண்ட பாலி எஸ்டர்–பருத்திக் கலப்பின இழைகள் புகழ் பெற்ற சட்டைத் துணி இழைகளாகும். பருத்தியைப் போல், இத்துணி மடிப்பு, சுருக்கம் ஏற்பதில்லை. 80/20 பாலி எஸ்டர்–பருத்தி கலப்பு வலிமையையும், சுருக்க எதிர்ப்பையும், பரிமாண நிலைப்பையும் கூடுதலாக்குகிறது; நீர் ஏற்பு குறைகின்றது.பாலி எஸ்டர்-கம்பளிக் கலப்பில் சுருக்க எதிர்ப்பு, மடிப்பு நிலைப்பு, தேய்மான எதிர்ப்பு ஆகியன கூடுதலாக உள்ளன. 50/50–65/35 வரை பாலி எஸ்டர்–கம்பளிக் கலப்பு இழைகள் தயாரிக்கப் படுகின்றன. 65%பாலி எஸ்டரும், 35% உயர் ஈரக் குணக ரேயானும் சேர்ந்த கலப்பிழை வலி மிக்கது; திடம் மிக்கது; நீடித்து உழைக்கும். பாலி எஸ்டர்–நைலான் கலப்பிழை நிலைப்புத் தன்மை, எளிதில் உலர்தல், பூசண எதிர்ப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இரு இழைகளுமே வெப்பத்தால் இளக வல்லனவாதலாலும், நீர்மங்களை உறிஞ்சுவதில்லையாதலாலும், சலவை செய்து பெட்டிப் போடாமல் அணிவதற்கு இவற்றின் கலப்பினத் துணி சிறந்ததாகும். பாலி எத்திலீன் கிளைக்கால் டெரிப்தாலேட்டைத் தவிர, PCDT (பாலி-1.4. வளைய ஹெக்சிலீன் டைமெதிலீன் டெரிப்தாலேட்) எனும் பாலி எஸ்டரும் பயன் மிக்கதாகும். ஸ்பாண்டெக்ஸ் (spandex). இது குறைந்தது 85% பாலி யூரிதேன் தொகுதிகளை உள்ளடக்கிய நீள் சங்கிலி வடிவுடைய தொகுப்பு இழை. மீண்டும், மீண்டும் இடம் பெறும் தொகுதி: அடர்த்தி 1.2; இழு வலிமை 76–104 MPa: ஈர ஏற்பு < 1% வலிமை. குறைந்த அமில, காரங்களால் தாக்கப்படுவதில்லை. நீர்த்த HCI, H₂SO₄ ஆகியவற்றில் இத்துணி பழுப்பாகிறது. உயர் வெப்ப நிலைகளில் அடர் அமிலங்களால் பாதிக்கப்படுகிறது. கரைப்பான்களால் பாதிக்கப்படுவதில்லை. 75–216°C வரை பிசுபிசுப்புத் தன்மை அடைகிறது. உருகு நிலை -268°C. சிதறிய நிலை, அமில, உலோகம். புகுத்தப் பட்ட சாயங்கள் ஸ்பாண்டிக்சுக்கு ஏற்றவை. இது ஒன்றே ரப்பராலான துணி இழையாகும். கார்பன், பாலிபென்சிமிடசோல், கண்ணாடி ஆகியவற்றினாலான இழைகளும், தொகுப்பு வகை- யைச் சார்ந்தவையேயாயினும், இவை ஆடை தயாரிப்பில் பயன் படுவதில்லை. —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. B.P. Corbman, Textiles–Fibre to Fabric, Sixth Edition, McGraw-Hill Book Company, New York, 1987. செயற்கைக் கதிரியக்கம் காண்க : கதிரியக்கம் செயற்கைக் கோள்கள் புவி போன்ற கோளைச் சுற்றி வரும் இயற்கையான துணைக் கோள் அக்கிரகத்தின் சந்திரன் ஆகும். மனிதனால் உருவாக்கப் பட்டுப் புவி சுற்ற ஏவப்படும் துணைக்கோள், செயற்கைத் துணைக் கோள் எனப் படும். இதைச் சுருக்கமாகச் செயற்கைக் கோள் (artificial satellite) எனலாம். 1957 இல் ரஷியா செலுத்திய ஸ்புட்னிக்–1 எனும் உலகின் முதலாம் செயற்கைக் கோள் தொடங்கி, இன்று வரை 5000க்கும் மிகுதியான விண் கலங்கள் (space crafts) ஏவப் பட்டுள்ளன. சுற்றியக்கம். செயற்கைக் கோள் சுற்றி வரும் தளத்தைச் சுற்று தளம் (orbital plane) எனலாம். நில நடுக் கோட்டின் நேர் மேலாகவே இயங்கி வரும் போது, சுற்று தளச் சாய்மானம் (inclination) சுழியாக இருக்கும். ஆயின், 90° கோண அளவுக்குட் பட்ட சாய்மானத்துடன் துருவப் பகுதிகளின் வழி வட்டமடிக்கும் செயற்கைக் கோள்கள் கிழக்கு முகமாகவே விரைகின்றன. ஆதலால் 0–90° வரை தள சாய்மானம் உடைய சுற்றுப் பாதைகள் முன்னோக்குச் சுற்றுப் பாதைகள் (prograde orbits) எனப்படும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சாய்மானம் 90° க்கும் கூடுதலாகும் போது, அச்செயற்கைக் கோள் மேற்கு நோக்கி, எதிர்ப் பயணம் புரியத் தொடங்கும். இவ்வகைச் சுற்றுப் பாதைகளைப் பின்னோக்குச் சுற்றுப்பாதைகள் (retrograde orbits) எனலாம் (படம் 1). ஆயினும், ஒவ்வொரு செயற்கைக் கோளும், ஒரு குறிப்பிட்ட சாய்மானமுடைய சுற்றுத் தளத்திலேயே இயங்கும். இதன் அடிப்படையில், குறிப்பாக, மூவகைச் சுற்றுப் பாதைகளை வரையறுக்கலாம். தாழ் புவிச் சுற்றுப் பாதை. புவிக்கு மேல் ஏறக்குறைய 600 கி.மீ உயரம் வரை இயங்கும் செயற்கைக் கோள்களின் பாதை தாழ் புவிச் சுற்றுப்பாதை அல்லது தாழ் புவி வட்டப் பாதை ஆகும். சோவியத் ஒன்றியக் குடியரசிலிருந்து ஏவப்பட்ட ஆர்யபட்டா, பாஸ்கரா முதலான இந்திய செயற்கைக் கோள்கள் இத்தகைய தாழ் புவி வட்டப் பாதைகளில் இயங்கின. இவை புவியை ஒரு முறை வலம் வர ஏறக்குறைய 1½ மணி நேரம் ஆகும். புவியைச் சூழ்ந்துள்ள வளி மண்டலம், அயன மண்டலம் (atmosphere), காந்த மண்டலம் (ionosphere) போன்ற வான் மண்டலங்கள் மற்றும் வான் ஆலன் வளையங்கள் (van allen belts) எனும் கதிர் வீச்சுப் பகுதிகளை ஆராயவும், உள் நாட்டு–வெளி நாட்டுப் படைத் தளங்களைக் கண்காணிக்கவும், இவ்வகைச் செயற்கைக் கோள்கள் பயன்படும். இவற்றை, முறையே வானிலை ஆய்வுச் செயற்கைக் கோள்கள் (meteorological satellites) என்றும். வேவுச் செயற்கைக் கோள்கள் (reconnaissance satellites) என்றும் குறிக்கலாம். புவி நிலை வட்டப் பாதை. புவி மேலாகச் செயற்கைக் கோளின் குத்துயரம் (altitude) கூடுதலானால், அதன் சுழற்சித் திசை வேகம் (orbital velocity) குறைந்து, புவி சுற்றுக் காலம் (orbital period) நீடிக்கும். சுற்று வரைவு (V), நிறை ஈர்ப்பு மாறிலி (gravitational constants) (G), புவி நிறை (M), புவி ஆரம் (R), குத்துயரம் (h) இவற்றைத் தொடர்புறுத்தும் சமன்பாடு: x-smaller| V = \sqrt{\frac{GM}{(R + h) இதில் நிறை ஈர்ப்பு மாறிலி = 6.668×1011 நியூட்டன். மீ.² /கி.கி.² புவி நிறை = 5.98×1024 கி.கி. புவி மையத்திலிருந்து 42000 கி.மீ. உயரத்தில் மிதக்கும் செயற்கைக் கோளின் வேகம் நொடிக்கு ஏறத் தாழ 3 கி.மீ. ஆகும். நில நடுக் கோட்டின் மேல் ஏறக் குறைய 36000 கி.மீ. உயரத்தில் இயங்கும் அச்செயற்கைக் கோளின் புவிச் சுற்றுக் காலம் ஏறத் தாழ 24 மணி நேரம். அதாவது, புவி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள எடுக்கும் அதே கால அளவு புவியின் சுழற்சி வேகத்தோடு ஒத்து விரைவதால், இதைப் புவி ஒத்தியக்கச் செயற்கைக் கோள் (geo-synchronous satellite) எனலாம். நில நடுக் கோட்டின் மேல் அவ்வுயரத்தில் இயங்கும் புவி ஒத்தியக்கச் செயற்கைக் கோளின் சுற்றுத் தளம் 0° சாய்மானம் கொண்டிருப்பதால், அதன் இயக்கத்தின் போது, எக்கணமும் நில நடுக் கோட்டின் மேல் ஒரு நிலைத்த புள்ளிக்கு நேர் உச்சியில் நிறுத்தப் பட்டிருப்பது போல் தோன்றும். இத்தகைய சுற்றுப் பாதையே புவி நிலை வட்டப் பாதை ஆகும். இந்திய இன்சாட் (INSAT) முதலான தகவல் தொடர்புச் செயற்கைக் கோள்கள் இவ்வகையைச் சார்ந்தவை. (படம் 2). ஆயினும், புவி ஒத்தியக்கச் செயற்கைக் கோள்கள் அனைத்துமே புவி நிலை வட்டப் பாதைகளில் அமைய வேண்டியதில்லை. அவை புவி சுற்ற 24 மணி நேரம் எடுத்துக் கொள்ள, நில நடுக் கோட்டின் மேலாக ஏறத் தாழ 3600 கி.மீ. உயரத்தில் மட்டுமே விரைய வேண்டும் என்பதில்லை. சோவியத் ஒன்றியக் குடியரசின் மோல்நியா (molniya) வகைச் செயற்கைக் கோள்கள், மாதிரிப் புவிக்கு அருகிலும் (perigee), அப்பாலும் (apogee) ஆன நீள் வட்டப் பாதையில் (elliptical orbit) செயல் படக் கூடும். சுற்றுத் தளமும் நில நடுக் கோட்டுடன் சாய்மானம் உடையதாக அமையும். ஆயினும், ஒவ்வொரு முறையும் புவி சுற்றுக் காலம் 24 மணி நேரமே. இவை புவியோடு ஒத்த வேகத்தில் இயங்கினாலும், புவி நிலை வட்டத்தில், ஓரிடத்தில் மேல் நிலையாக நிறுத்தி வைக்கப் படாத மற்றொரு வேறு பட்ட சுற்றுப் பாதையில் இயங்குவன. சூரிய ஒத்தியக்கப் பாதை. நில நடுக் கோட்டோடு ஏறக் குறைய 90° சாய்மானம் உடைய செயற்கைக் கோள் துருவங்களின் வழி ஏறத் தாழ 1000 கி.மீ. உயரத்தில் ஒரு நாளைக்கு 15 அல்லது 16 முறை புவியைச் சுற்றும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு குறிப்பிட்ட சுற்றின் போதும், நில நடுக் கோட்டை ஒரு குறித்த தல நேரத்தில் (local time), கடக்கும். அதாவது, நாள் தோறும் அது நில நடுக் கோட்டைக் கடந்து பறக்கும் இடம், சூரிய ஒளியால் ஒரே அளவு ஒளி பெற்றுத் திகழ்கிறது. அதனால், நில நடுக் கோட்டின் அடுத்தடுத்த இடங்களை ஒரே பொழுதின் சீரான பகல் ஒளியில் படம் பிடிக்க இவ்வகைத் துருவச் செயற்கைக் கோள்களால் (polar satellites) இயலும். புவிக்குள் உறைந்து கிடக்கும் எண்ணெய், தாது, கனி வளங்களைத் தொலைவிலிருந்து ஆய்வு செய்ய இவை உதவும். 1988 ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் நாள் வாஸ்டாக் ஏவு கலன் மூலம் துருவப் பாதையில் கொண்டு விடப்பட்ட முதலாம் இந்தியத் தொலை உணர்வுச் செயற்கைக் கோள் ஐ. ஆர். (Indian Remote Sensing Satellite IRS-1A) இந்தியத் தல நேரப் படி காலை 10.25 மணிக்கு நில நடுக் கோட்டைக் கடந்து செல்கிறது (படம் 3). இங்ஙனம் சூரிய ஒளிக் கதிர்கள் ஒரே சாய்வாக விழும் பகுதி களைக் குறிப்பிட்ட தல நேரத்தில், நாடோறும் பதிவாக்கும் இச்செயற்கைக் கோள்களின் பாதையைச் சூரிய ஒத்தியக்கப் பாதை என்று குறிப்பிடுவர். பயன்பாடுகள். அறிவியல் ஆய்வு, தொலைத் தகவல் தொடர்பு, வானிலை ஆய்வு, வானவியல், கடலியல், புவி அளவை, பாதுகாப்புப் படை போன்ற பல துறைகளில் செயற்கைக் கோள்கள் மிகுதியாகப் பயன் படுகின்றன. கட்டமைப்பு. பொதுவாக, செயற்கைக் கோள்கள், உருளை வடிவம், கன செவ்வக (cubic rectangular), கோளக (spherical), நான்முக (tetrahedron), எண்முக (octahedron) அமைப்புகளில் பலவாறு உருவாக்கப் படலாம். உருண்டை, உருளை, பெட்டகம் போன்ற வெவ்வேறு வடிவங்களில் அமைக்கப்படும் செயற்கைக் கோள்கள் சிலவற்றின் எடை ஏறத் தாழ 30 டன் கூட இருக்கும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இவை பெரும்பாலும் எடை குறைந்ததும், உறுதி மிக்கதுமான சிறப்பு உலோகக் கலவையால் ஆனவை. அலுமினியம், பெரிலியம், மக்னீசியம் தவிரக் கிராஃபைட் எனும் கரி இழை வலிவூட்டிய நெகிழிப் பொருள்கள் (graphite reinforced fibre plastics) கொண்டு கட்டமைக்கப் படுகின்றன. வெளியில், மெல்லிய நெகிழித் தகடுகள் (plastic sheets) ஒட்டி, அவற்றின் மேல் மெல்லிய அலுமினியம் அல்லது தங்கப் படலம் மூடியிருக்கும். இப்புறத் தோலே, செயற்கைக் கோளின் வெப்பத் தடுப்புப் பூச்சாக (thermal insulation) உதவுகிறது. ஏனெனில், விண் வெளியின் கடுங் குளிரிலிருந்து 7K மீ வெப்ப நிலை வரை தட்ப வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் திறன் இச்செயற்கைக் கோள்களின் இன்றியமையாத செயற்பாட்டிற்குரிய முதல் தேவை. இதற்கென்றே விண்வெளிக்கு அனுப்பும் முன்பு, இச்செயற்கைக் கோள்களை நீர்ம ஹைட்ரஜன் பீப்பாய்க்குள் மூழ்கச் செய்தும், உயர் வெப்ப நிலைக்குச் சூடேற்றியும், அவற்றின் வெப்பந் தாங்கும் தன்மையை ஆய்வு செய்வர். திறன் உற்பத்தி. செயற்கைக் கோள்களின் தளக் கணிப் பொறிகள் (onboard processors), கருவிகள் ஆகியன பணியாற்ற, திறன் வேண்டும். இதற்கென, செயற்கைக் கோளின் இரு புறமும் வண்டின் சிறகுகள் போன்று இரண்டு ஒளிர் பலகைகள் இருக்கும். அவற்றில், சிறு சிறு துகள்களாகப் பதிக்கப்பட்ட சூரிய மின் கலங்கள் (solar cells) செயற்கைக் கோளின் இயக்கத்தில், எப்போதும் சூரியனையே நோக்கி இருப்பதால், அவை கதிரொளியின் ஒளியாற்றலை உட் கவர்ந்து, அதை மின்னோட்டமாக்கி, செயற்கைக் கோளுக்குள் பொருத்தப்பட்டிருக்கும் மின்னடுக்குகளுக்கு (batteries) கொடுக்கும். ஒவ்வொரு சுற்றின் போதும், செயற்கைக் கோள் சூரியனுக்கு அப்பால் புவியின் இருண்ட பகுதியில் சுற்றி வரும் போது, தன் மின்னடுக்குகளில் சேமித்து வைத்துள்ள மின்னாற்றலைச் செலவழிக்கும். ஒரு சில செயற்கைக் கோள்கள், சிறு அணு உலைகளையும் (nuclear reactors), கதிரியக்கப் பொருள்களையும், ஆற்றல் உற்பத்தி மூலங்களாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> கட்டுப்பாட்டு அமைப்பு. விண்ணின் சுற்றுப் பாதையில் கொண்டு விடப்பட்ட பிறகும், செயற்கைக் கோளின் குத்துயரம் சற்றுக் குறையவோ, இயக்கம் தடுமாறவோ கூடும். அதன் சுற்றுப் பாதை, குத்துயரம், செயல்பாடு இவற்றில் வேறுபாடு எழாது, நிலையாக இயங்கிடச் செயற்கைக் கோளைத் தொடர்ந்து கண்காணித்துக் கட்டுப் படுத்த வேண்டும். இதற்கென ஹைட்ரசீன் போன்ற நீர்ம எரி பொருளால் இயங்கும் சிறு உந்துளிப் பொறிகள் (thrusters) செயற்கைக் கோளில் உண்டு. இந்த எரி பொருள், கொள் கலனில் பொதுவாகத் தேவைப்படும் ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே செயற்கைக் கோளின் தகுதி, நிறைக்கேற்ப நிறைக்கப் பட்டிருக்கும். எரி பொருள் தீர்ந்து போயின், செயற்கைக் கோள்கள் இயங்கா. எந்த ஒரு செயற்கைக் கோளையும் திறம் பட உருவாக்க, ஏறத் தாழ 50 கோடி ரூபாய் செலவாகும். இதனால் விளையும் பயன்கள் மிகுதி. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, படம், பக்கத்தின் ஆரம்பத்தில், கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —சு. முத்து நூலோதி. Arthur C. Clerk, The Promise of Space, Hodder and Stonghton Publication, London, 1968. செயற்கைக் கோள்களைக் கட்டுப் படுத்தும் தரை நிலையங்கள். பல நாடுகள் குழுக்களாகச் சேர்ந்து, மண்டலத் தொலைத் தொடர்புக் கோள் கழகங்களை ஏற்படுத்தியுள்ளன. அவை மண்டலத் தேவைக்காகவும், பொது நலனுக்காகவும் இவ்வமைப்புகளை ஏற்- படுத்திக் கொண்டுள்ளன. இந்தோனேசியா நாடுதான் முதன் முதலில் மண்டலக் கோள் அமைப்புக்கு வழி வகுத்தது எனலாம். அந்நாடு தன் 3000க்கும் மேலான தீவுப் பகுதிகளிடையே செய்தித் தொடர்புக்குப் பலாப்பா என்னும் செயற்கைக் கோளை 1970ஆம் ஆண்டில் ஏவியது. பின்னர், பிலிப்பைன்ஸ் நாட்டையும், ஏனைய அண்மை நாடுகளையும், பலாப்பா கோளைப் பயன்படுத்திக் கொள்ள உதவியது. அதற்கு அடுத்து ஏற்பட்ட மண்டலக் கோள் அமைப்பு ஐரோப்பிய அஞ்சல் மேலாண்மைக் கழகம் ஆகும். அதன் பயனாக, 1980இல் ஐரோப்பிய விண்வெளி முகவாண்மை (European Space Agency) தொடங்கப் பட்டது. 1983இல் ஐரோப்பிய செய்தித் தொடர்புக் கோள் அமைப்பு (European Communication Satellite) ஏற்படுத்தப் பட்டது. ESA ஒரு மண்டலக் கழகம் மட்டுமன்று; இது விண் வெளியில் ஏவூர்தித் தளத்தை மேலாண்மை செய்து வருகிறது. இதன் கோள் ஏவு அமைப்பு, ஏரியன் கோள் ஏவு தளம் (Ariane Satellite launcher) ஆகும். அனைத்து நாட்டுத் தொலைத் தொடர்புக் கழகமே (Intelsat) செயற்கைக் கோள்களை ஏவிக் கொள்ள இதன் உதவியை நாடுகிறது. ஐரோப்பியத் தொலைக் காட்சி நிகழ்ச்சி Eurovision என்னும் பெயரில், அந்நாடுகளுக்கிடையில் செயற்கைக் கோள்கள் மூலம் பரப்பப் படுகிறது. இந்நிகழ்ச்சியைப் பரப்பும் பணியை, ஐரோப்பிய செய்தித் தொடர்புச் செயற்கைக் கோள் அமைப்பு செவ்வனே செய்து வருகிறது. மற்றொரு புகழ் பெற்ற செயற்கைக் கோள் நிறுவனம் அராப்சாட் (Arabsat) என்பதாகும். இது அரபு நாடுகளின் தொலை பேசிக்கும், தொலைக் காட்சிக்கும் உதவும் செயற்கைக் கோள் ஆகும். பல நாடுகள் கூட்டாக அமைத்துக் கொண்ட மண்டலச் செயற்கைக் கோள் அமைப்புக்கும், ஒரு நாட்டின் சொந்த உள் நாட்டுக் கோள் அமைப்புக்கும், செயல் படும் விதத்தில் பெரும் வேறுபாடு இல்லை. இவை இரண்டும் பல பொதுவான அமைப்புகளைக் கொண்டவை எனக் கூறலாம். உள் நாட்டுச் செயற்கைக் கோள் (domestic satellite) அந்நாட்டின் பரப்புக்கு மட்டுமே குறிப்பலைகள் அனுப்பினால் போதும் என்பதால், அலைப் பரப்பு கருவிகள் மிகுதியாகத் தேவைப்படா. சில கருவிகளுடன் எளிதாக அமைத்தலே போதுமானதாகும். மண்டலச் செயற்கைக் கோளும், அண்மை நாடுகள் சேர்ந்து விண்வெளியில் ஏவிக் கொள்வதால், உள் நாட்டுக் கோளைப் போன்றே எளிதாக இருந்தாலே போதுமானது. ஆனால், அனைத்து நாட்டுச் செயற்கைக் கோள் (Intelsat) மட்டும் வேறுபாடானது. இதன் குறிப்பலைகள் உலகப் பரப்பில் மூன்றில் ஒரு பகுதியான 170 மில்லியன் ச.கி.மீ. பரப்பளவைச் சென்றடைய வேண்டும். உள் நாடு அல்லது மண்டல நாடுகளின் கோள் அனுப்பும் குறிப்பலை 6.6 மில்லியன் ச.கி.மீ. இருந்தாலே போதுமானது. செயற்கைக் கோள்களைக் கட்டுப்படுத்தும் அமைப்புகள், புவியின் பல இடங்களில் உள்ளன. அவையே செயற்கைக் கோள்களைப் பின்பற்றி வழி நடத்தும் தரைக் கட்டுப்பாடு நிலையங்கள் (Ground Control Stations). செயற்கைக்கோள்களின் வேகத்தையும், அவை செல்ல வேண்டிய பாதையையும் கட்டுப் படுத்தி, கோள்கள் தடம் புரண்டு விடாமல், தரைக் கட்டுப்பாடு நிலையங்கள் கவனித்துக் கொள்கின்றன. தரைக் கட்டுப்பாடு நிலையங்கள் செயற்கைக் கோள்களுக்கு, மின் குறிப்பலைகளை அனுப்பி எப்பொழுதும் பின் தொடர்ந்தும், அது நிலை பிறழும் போது கட்டுப்படுத்தியும், அதன் இயக்கத்தைக் கண்காணித்தும் வழி நடத்துகின்றன. செயற்கைக் கோள்கள் புவியின் சுழல் வேகத்திற்குச் சமமான வேகம் கொண்டுள்ளமையால், ஓரிடத்தில் நிலைத்திருக்கும் படி செய்யப்படுகின்றன. அவ்வாறு இருந்தும், ஒரு கோள் நாள் ஒன்றுக்கு 20 கி.மீ. தொலைவு வரை தன் நிலையிலிருந்து நகர்ந்து விடுகிறது. அப்போது, தரையிலிருந்து கட்டுப்பாட்டுக் குறிப்பலைகளை அனுப்பி, கோளைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவது இந்நிலையங்களேயாகும். தரைக் கட்டுப்பாடு நிலையங்கள் அனைத்தும் ஒரே வகையானவை அல்ல. இதில் A வகை நிலையம் பெரியதாகும். கோளுக்குக் குறிப்பலைகளை அனுப்பும் இதன் உணர்சட்டம் ஒரு பெரிய பர வளையம் போன்று இருப்பதோடு 30 மீ. விட்டமும் கொண்டிருக்கும். அடுத்த B வகை நிலையத்தின் குறிப்பலை அனுப்பும் உணர்சட்டம் பர வளையம் போல அமைக்கப்பட்டாலும், சிறியதேயாகும். இதன் விட்டம் 11 மீ. இருக்கும். இவ்விரு வகை நிலையங்களின் கோளுக்கு அனுப்பும் அலையின் அதிர்வெண் 6000 மெகா ஹெர்ட்சாகவும், கோளிலிருந்து பெறும் அதிர்வெண் 4000 மெகா ஹெர்ட்சாகவும் இருக்கும். ஆனால், மூன்றாம் வகை C நிலையத்தின் அலை அனுப்புதல் அதிர்வெண் 14000 மெகா ஹெர்ட்சிலும், அலை பெறுதல் 11,000 மெகா ஹெர்ட்ஸ் அதிர்வெண் என்றும் அதிகரிக்கப்பட்டிருக்கும். இதன் அலை அனுப்பும் உணர்சட்டத்தின் பர வளையம் 19 மீ. விட்டத்துடன் இருக்கும். ஆஸ்திரேலியாவில் கர்னர்வான் என்னுமிடத்திலுள்ள நிலையம், பசிபிக் கடல் பகுதிக் கோளைக் (Pacific Ocean Satellite) கண்காணிக்கிறது. அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள நிலையமும், ஜப்பானிலுள்ள இபராகி (Ibaraki) நிலையமும், பசிபிக் கடற் பகுதிக் கோளைக் (POS) கண்காணிக்கும் நிலையங்கள் ஆகும். ஜப்பானில் யாமகுச்சி என்னுமிடத்திலுள்ள நிலையம், ஏனைய இந்தியப் பெருங்கடல் பகுதிக் கோளை (IOS) நோக்கியிருக்கும்படி அமைக்கப் பட்டுள்ளது. ஒரே இடத்தில் வெவ்வேறு கோள்களை நோக்கியபடி உணர்சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் கூன்கில்லியில் அமைக்கப்பட்டுள்ள நிலையத்தின் உணர்சட்டங்கள் தனித் தனியே அட்லாண்டிக் கடல் பகுதிக் கோளையும் (AOS), இந்தியப் பெருங்கடல் பகுதிக் கோளையும் (IOS) பின் தொடர்கின்றன. ஹாங்காங்கிலுள்ள ஒரு நிலையம், பசிபிக் கடல் பகுதிக் கோளையும் (POS) இந்தியப் பெருங்கடல் பகுதிக் கோளையும் பின் தொடர்கின்றன. உள்நாட்டுக் கோளைக் கட்டுப் படுத்த, ஒவ்வொரு நாட்டிலும் அதன் கட்டுப்பாட்டு நிலையம் உண்டு. இந்தியாவுக்குச் சொந்தமான இன்சாட் IB கோளை வழி நடத்தும் நிலையம் புது டெல்லிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. —பெ. துரைசாமி செயற்கைக் கோள்கள், அறிவியல் அறிவியல் நுண்ணறிவு பெறப் பயன்படும் செயற்கைக் கோள்கள், அறிவியல் சார்ந்த செயற்கைக் கோள்கள் எனப்படுகின்றன. இவ்வகைச் செயற்கைக் கோள்களை, செயற்பாட்டுச் செயற்கைக் கோள்களுடன் ஒப்பு நோக்கலாம். சில சமயங்களில் இவ்வகை அறிவியல் செயற்கைக் கோள்கள் ஆய்வு வகைச் செயற்கைக் கோள்கள் என்றும் குறிப்பிடப் படுகின்றன. செயற்பாட்டுச் செயற்கைக் கோள்கள், செயற்படும் விதங்களைக் கொண்டு மேற்கோளிட்டு வழங்கப்படுகின்றன. எ.டு: கப்பற்துறைச் செயற்கைக் கோள்கள். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படங்கள், பக்கத்தின் கடைசியில் & ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகின்றன.----> மூன்று விதங்களில் அறிவியற் செயற்கைக் கோள்கள் ஆய்வுகளை மேற்கொள்கின்றன. அவை, தன்னிலையைப் பற்றியும் (local conditions), வெளிப் புறக் கண்டறிதல்கள், புவியைப் பற்றிய உள் நோக்கிய ஆய்வுகளில் பங்கேற்குமாறும் செயல்படுகின்றன. ஏனைய செயற்கைக் கோள்கள் தனிப்பட்ட சிறப்புப் பணிகளை மேற்கொள்கின்றன. புவி அறிவியல், புவியைச் சூழ்ந்துள்ள அயன மண்டலம் (ionosphere), சூரிய குடும்பத்தில் அதன் பங்களிப்புப் போன்ற வானவியல் தகவல்கள், புவி மேற்கோட்டில் நிகழும் சலனங்கள், கண்டங்களின் நகர்ச்சி (continental drift) ஆகியன காலப் போக்கில் மாறி வரும். நில அமைப்புகள் பற்றிய புவி நிலை இயல் (geodesy) குறிப்புகள் போன்றவை புவி அறிவியற் பாற்படும். இந்தியாவின் பாஸ்கரா உட்பட எண்ணற்ற செயற்கைக் கோள்கள், இத்தகைய அறிவியல் செயற்கைக் கோள்களே. புவியின் மேல் ஏறத்தாழ 90– 150 கி.மீ. உயரத்தில் அடர்த்தி குறைந்த வளிமஅணுக்கள், விண் வெளியிலிருந்து வந்து மோதும் காஸ்மிக் கதிர் வீச்சினால் அயனிகளாக்கப் படுகின்றன. அந்த அயன மண்டலத்தில் D-படலம், E- படலம், F1, F2 படலங்கள் என உயரத்திற்கும், இயல்பிற்கும் ஏற்ப வெவ்வேறு தள அடுக்குகள் உள்ளன. செறிவு குறைந்த E- படலமே சிற்றலை வானொலிப் பரப்பைச் சுமந்து வரும் மின்காந்த அலைகளை எதிரொலித்து, நெடுந் தொலைவுள்ள இடங்களிலும் கேட்கும்படிச் செய்கிறது. அயன மண்டல ஆய்விற்குத் தாழ் புவி சுற்றுச் செயற்கைக் கோள்கள் உதவும். துருவப் பாதைச் செயற்கைக் கோள்களான அமெரிக்க லாண்ட்சாட், பிரான்சின் ஸ்பாட் போன்ற தொலை உணர்வுச் செயற்கைக் கோள்கள் இடம் பெயர்ந்து, நகரும் மிதவைக் கண்டங்கள் (plate tectonics) குறித்தும் ஆய்ந்துள்ளன. 1915இல் ஆல்ஃபிரட் வேகனர் எனும் ஜெர்மானிய அறிஞர் வெளியிட்ட கண்டங்கள் மற்றும் பெருங்கடல் தோற்ற மூலம் (The Origin of Continents and Oceans) எனும் நூலின் கொள்கை விளக்கப்படி, முன்னொரு காலத்தில் இந்திய துணைக் கண்டம் தென் ஆஃப்ரிக்கா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா இவற்றுடன் ஓட்டிக் கிடந்ததாகவும், பின்னர் பிரிந்து ஆண்டுக்கு ஏறத் தாழ 0.0015 மீ. வேகத்தில், வடக்கு நோக்கி நகர்ந்து சென்று, ஆசியக் கண்டத்துடன் மோதிக் கொண்டதாகவும் கருதப் படுகின்றது. வானவியல். சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழும் சூரியப் புள்ளிகள் (Sun Spots) சூரியனின் புறப் பரப்பிலிருந்து, அவ்வப்போது கடுமையாகத் தொடங்கி வீசும் சூரியக் காற்று அண்ட வெளியில் வெடித்துச் சிதறி, உருவாகும். சூப்பர் நோவா எனப் படும் மிகைப் புது விண் மீன்கள், எக்ஸ் கதிர் உமிழும் அரிய விண் மீன்கள் போன்றவை குறித்து ஆய்வு செய்ய புவியை விட விண் வெளிப் பாதையே ஏற்றது. அங்கே புழுதி, தூய்மையற்ற காற்று மண்டலம், மின் காந்த அலைகள் நெருக்கடி போன்ற இடையூறுகள் இல்லை. 1983ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடு செலுத்திய அகச் சிவப்பு வானவியல் செயற்கைக் கோள்களான ராஸ், புளுட்டேோ போன்றவை மீதொகைக் கோள்களையும் படம் பிடித்துள்ளன. விண்வெளிச் சூழல் ஆய்வுகள். விண்மீன்கள், கோள்கள் மட்டுமன்றி விண் வெளியிலிருந்து வரும் காஸ்மிக் கதிர்கள், உடுமண்டலங்களிலிருந்து (galaxies) புறப்படும் கதிர் வீச்சுகள் பற்றிய அறிவியல் உண்மைகள் இன்னும் புதிராகவே உள்ளன. விண் வெளியில் செயற்கைக் கோள் இயங்கி வரும் எடையற்ற நிலை புவியில் பல அறிவியல் விந்தைகளைப் புரிகிறது. செயற்கைக் கோள் சுற்றியக்கத் திசை வேகத்தால் (orbital velocity) ஊட்டப் படும் மைய விலக்கு விசையும் (centrifugal force), ஈர்ப்பு விசையும் (gravitational force) சரி சமப்படும் நிலையே, செயற்கைக் கோளின் ஒரு குறித்த சுற்றுப் பாதை இயக்க அடிப்படை. புவி ஈர்ப்பினால், நேராகப் புவியில் விழாமல், வளைவான சுற்றுப் பாதையில் இயல்பாக நழுவி விழும் நிரந்தர நிலையே (free falling state) செயற்கைக் கோளினுள் எடையற்றுப் போன நிலையை உருவாக்குகிறது. விண் வெளிச் சூழலில் மருத்துவ ஆய்வு, படிக வளர்ச்சி, உலோகங்கள் பற்று வைத்தல், உலோகக் கலவைகள் தயாரித்தல், நெகிழ்ம வகைச் (polymer) சிறப்புப் பொருள்கள் தொடர்பான ஆய்வுகள் பலவும், சோவியத் ஒன்றியக் குடியரசின் சல்யூட், மிர், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஸ்கை லாப் போன்ற விண்வெளி ஓடங்களில் நிறைவேறியுள்ளன. கருவிகள். இவ்வகை ஆய்வுக்கெனத் தொலைக் காட்டிகள், கீகர் எண்ணிகள் (Geiger counters), அயனியாக்க அறைகள் (ionization chambers), அழுத்த அளவிகள் (pressure gauges), காந்த அளவிகள் (magnetometers) போன்ற பல நுட்பமான கருவிகள் அறிவியல் செயற்கைக் கோள்களில் இடம் பெறுகின்றன. —க.முத்து —வி. சண்முகசுந்தரம் நூலோதி. W.M. Smart, Text Book on Spherical Astronomy, Sixth Edition, Vikas Publishing House Pvt Ltd, New Delhi, 1979. செயற்கைக் கோள்களின் தொழில் நுட்பம் மனிதனால் ஏவப்பட்டு, தொழில் மற்றும் அறிவியல் வினாக்களுக்கு விடையளிக்கும் வண்ணம், செயற்படும் செயற்கைக் கோள்கள் இவ்வகையைச் சார்ந்தவையாகும். இவை, ஒரு குறிப்பிட்ட சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தம் செய்யப்பட்டு, தகவல் தொடர்புத் துறை, அளவியல், கப்பல் துறை, வளி மண்டலக் கட்டுப்பாட்டுத் துறை போன்றவற்றிற்கு, மிக இன்றியமையாதவையாக விளங்குகின்றன. இது போன்ற தேவைகளை நிறைவேற்ற உதவும் தொழில் நுட்பம், பொதுவான ஒன்றே; அளவியல் தொடர்பான செயற்கைக் கோள்களின் செயற்பாடு, செயற்கைக் கோள்களில் உள்ள கருவிகளின் திசை, எப்போதும் புவியை நோக்கியே இருப்பது ஆகும். புவியின் சுற்றுப் பாதையில் செயற்கைக் கோளும் தொடர்ந்து செயற்பட்டு, அதை நோக்கியே அதன் கருவிகளையும் வைத்திருத்தல் மிகவும் இன்றியமையாதது. இதற்குச் செயற்கை கோள்களை முறைப்படி: நிலை பெற வைக்கும் தொழில் நுட்பம் உதவுகிறது. செயற்படத் தேவைப் படும் ஆற்றல்களை, முன்னமே தேவைக்கேற்ப வழங்க வேண்டும். இவற்றில், சூரிய ஆற்றல்களை பயன் படுத்திக் கொள்ளும் வண்ணம் சூரியக் கலன்களையும், பிற ஆற்றல் மூலங்களையும் பயன்படுத்தலாம். செயற்பாட்டுச் செயற்கைக் கோள்கள், தகவல் தொடர்புத் துறைக்கு மிகவும் உதவும் வகையில், புவிக்கு வானொலி அல்லது நெடுந்தொலைவு முறை வழியாகத் தகவல்களை அனுப்புகின்றன. நவீன செயற்கைக் கோள்களின் நுணுக்கங்கள் மிகுதியாக, அனுப்பப் படும் தகவல்களின் எண்ணிக்கையும் உயரும். மிகவும் ஆற்றல் வாய்ந்த செயற்கைக் கோள்களின் உணர் சட்டங்கள், இம்மாதிரியான வசதிகளை ஏற்படுத்தத் துணை புரிகின்றன. நுண்ணுணர் மின்னணுக் கருவிகளைக் கட்டுவிக்க, மிகவும் லேசான அமைப்பு இன்றியமையாததாகும். அவ்வமைப்பு செயற்கைக் கோள்களை ஏவும் போது ஏற்படும் உயர் அளவிலான அதிர்வுகளையும் தாங்கக் கூடியதாக அமைதல் வேண்டும். இதற்கு விண்வெளியில் வெப்பக் கட்டுப் பாட்டு அமைப்பு, சீரான வெப்ப நிலை மிகுந்த சூழ்நிலையைக் கொண்டிருத்தல் வேண்டும். பல கருவிகள், வானூர்தியின் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு வெப்பத்தைச் செலுத்தவும், வெப்ப நிலையைக் கட்டுப்படுத்தவும் பயன் படுகின்றன. இவ்விதமான பல்வேறு தேவைகளை நிறைவேற்ற, நீண்ட காலத்திற்குக் கருவிகளின் நீடிக்கும் தன்மை இருத்தல் வேண்டும். செயற்கைக் கோள்களை ஏவ ஆகும் செலவு மிகவும் உயர்வதால், அடிக்கடிச் செயற்கைக் கோள்களை ஏவ முடியாது. இக்காரணத்தால், செயற்கைக் கோள்களில் அமைந்திருக்கும் கருவிகளின் நீடிக்குங் காலம் முடிந்து விட்டால், செயற்கைக் கோள்களை மீண்டும் ஏவ வேண்டியிருக்கும். இதனைத் தவிர்க்க, மாற்றுக் கருவிகளைப் பொருத்திச் செயற்கைக் கோள்களைச் செலுத்துகின்றனர். தொழில் நுட்பத்தை விரிவாக்க, செயற்பாட்டு செயற்கைக் கோள்களை வரிசையாக அனுப்பி, ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். இச்செயற்கைக் கோள்கள் புவியிலிருந்து ஏறத் தாழ 35887.39 கி.மீ. உயரத்தில் நிலை பெற்று நில நடுக் கோட்டின் மேற்புறம் பணி புரிகின்றன. இவ்வுயரத்தில், செயற்கைக் கோள்கள் 24 மணி நேரம் துல்லியமாக சுற்றுப் பாதையில் செயற்படுமாறு அமைக்கப் பட்டிருக்கும். அதாவது, புவியின் சுழற்சிக்குத் தக்கபடி, அதற்கு சரியான சுழல் வேகத்தில் செயற்கைக் கோள்களும் செயல் படுகின்றன. இவ்விதமான அமைப்பால், புவியின் மேற்பரப்பில் ஒரு பகுதியை நோக்கிச் செயற்கைக் கோள்களை நிலை நிறுத்தி வைப்பதன் மூலம், அப்பகுதிக்குத் தொடர்ந்த தொடர்பு கொண்டிருத்தல் ஏதுவாகிறது. புவியிலிருந்து குறைந்த உயரத்தில், நிலை பெற்ற அளவியல் தொடர்பான செயற்கைக் கோள்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்காகச் சுற்றுப் பாதைகளிலும், குறிப்பாகச் சிலவற்றிலேயே நிலை நிறுத்தப் படுகிறது. இவ்வகைச் செயற்கைக் கோள்கள், மேகங்களின் அசைவுகளையும்,அவற்றைப் பற்றிய ஏனைய விவரங்களையும் கண்டறிகின்றன. புவியியலைப் பொறுத்த வரை, மிகக் குறுகிய கால வரையறையைக் கொண்ட நிகழ்ச்சிகளான இடி, மின்னல், நில நடுக்கம் போன்றவற்றின் தோற்றக் காரணங்கள் போன்ற மிக இன்றியமையாத விவரங்களையும் கண்டறிகின்றன. இவ்வாறு மனித வாழ்வின் நவீன தேவைகளான பல தொழில் நுட்பங்களும், பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. —வி. சண்முகசுந்தரம் நூலோதி. Arthur C. Clerke, The Promise of Space, Hodder and Stonghton Publication, London, 1968. தொழிலியல் (technology) என்பது தொழில் துறையின் (industry) முறையான அறிவும், செயல் நடவடிக்கையும் குறித்த இயல் ஆகும். அறிவியல், பொறியியலுடன் நெருங்கிய தொடர்புள்ளது. கருவிகள், தொழில் நுட்பங்கள் (techniques) உதவியுடன் பல திட்டங்களைச் செயல்படுத்தும் ஒழுங்கமைப்பே தொழிலியல். எனவே, இதனைத் தொழில் நுட்பவியல் அல்லது தொழில் நுட்பம் என்றே சுருங்கக் குறிப்பதும் உண்டு. பல்வேறு தொழில் நுட்பங்களை நிறுவிடக் கையாளும் ஆய்வுச் செயற்கைக் கோள்களே தொழிலியல் செயற்கைக்கோள்கள். செயற்கைக் கோள் ஏவுகலங்களின் (satellite launch vehicles) பறப்பு இயங்கியல் (flight dynamics). அவற்றின் பயணத் தடமறிதல், தொலைவு அளப்பு (tracking and telemetry), செயற்கைக் கோளுடன் குறித்த மின் காந்த அலை வரிசையில் கொள்ளும் தகவல் தொடர்புச் சிக்கல்கள் அதன் சுற்றுப் பாதை இயக்கவியல் (orbital mechanics) மற்றும் மின்னணுக் கருவிகள், கட்டுப்பாட்டு அமைப்பு (control system), எரி பொருள் தேர்வு போன்ற பல வகைத் தொழில் நுட்ப முறைகளை வெற்றி கரமாகக் கையாளும் பயிற்சியும், முயற்சியுமே. இவ்வகைச் செயற்கைக் கோள் உருவாக்கத்திற்குரிய அடிப்படைகளாகும். இந்தியாவின் ரோகிணி (Rohini) செயற்கைக் கோள்கள் இத்தகைய தொழிலியல் நிரூபணச் செயற்கைக் கோள்களே (technology proving satellites). அவ்வாறே தகவல் தொடர்புத் தொழிலியலில் தேர்ச்சியடையவும், செயற்கைக் கோளின் பயன்களைப் பொது மக்களுக்குப் புகட்டவும், கல்வியறிவு ஊட்டவும்–ஆகஸ்ட் 1975 முதல் ஜூலை 1976 வரை ‘சைட்’ (SITE) என்னும் 'செயற்கைக் கோள் வழி, கல்வி பயிற்றுத் தொலைக் காட்சி ஆய்வு (Satellite Instructional Television Experiment) நடத்தப்பட்டது. இத்திட்டத்திற்குக் களம் அமைத்துத் தந்த அமெரிக்காவின் ஏ. டி. எஸ்-6 (ATS-6) என்ற பயன் பாட்டுத் தொழிலியல் செயற்கைக் கோளைப் (Application Technology Satellite) படத்தில் காணலாம். —சு. முத்து செயற்கைக் கோள்களின் பயன்பாடுகள் விண்வெளி அறிவையும், தொழில் நுட்பத்தையும் மனித வாழ்வுக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் செயற்கைக் கோள்களைப் பயன்பாட்டுச் செயற்கைக் கோள்கள் எனலாம். பல்வகைப் பயன் கருதி, இச்செயற்கைக் கோள்களைப் பின் வருமாறு வகைப்படுத்தலாம். வானிலை ஆய்வுச் செயற்கைக் கோள்கள். புவி சூழ்ந்த வளி மண்டலம் ஏறத் தாழ 100 கி.மீ. வரை பரவியுள்ளது. இது வெவ்வேறு அடுக்குகள் கொண்டது. நில நடுக் கோட்டுப் பகுதியில் புவிக்கு மேல் ஏறத் தாழ 16 கி.மீ. உயரம் வரை வெப்ப நிலை குறைந்து கொண்டே செல்லும் பகுதியைத் திருப்ப மண்டலம் (troposphere) எனலாம். (கிரேக்க மொழியில் tropos என்றால் திருப்பம் என்று பொருள்). மழை, தட்ப வெப்பம் முதலான பருவ கால மாற்றங்கள் இங்குதான் நிகழ்கின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> 16–50 கி.மீ. உயரத்தில் வெப்ப நிலை பனி உறை நிலைக்குத் (-56°C) தாழ்ந்த அளவிலும், ஏறத் தாழ சீராகவே இருக்கும். சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை ஏற்று, உறிஞ்சிப் புவியைக் காக்கும் தடுப்பாக விளங்கும். ஓசோன் படலம் இப்பகுதியில் செறிந்துள்ளது. இதைச் சீரடுக்கு மண்டலம் (stratosphere) என்பர். அதற்கப்பால், ஏறத் தாழ 85 கி.மீ. வரை வெப்பம் உயருகிற இடை மண்டலமும் (mesosphere) அழுத்தம் குறைந்த 100 கி.மீ. உயரத்தில் நைட்ரிக் ஆக்சைடு வளிமம் நிரம்பிய வெப்ப மண்டலமும் (thermosphere) படர்ந்துள்ளன. கார்பன் டைஆக்சைடு, மெத்தேன் போன்ற தூய்மையற்ற வளிமங்களின் படலங்கள் நில வெப்பத்தை வெளியேற ஒட்டாமல் தடுத்துப் புவிக்கே எதிரொலித்து விடுவதால், புவி வெப்ப நிலை ஆண்டு தோறும் உயரவும், காலா வட்டத்தில் தாவரங்களும், உயிரினங்களும் அழிந்து விடவும் வாய்ப்புண்டு. இந்த வளிமங்கள் ஊட்டும் வெப்ப விளைவை, கண்ணாடி அறை விளைவு என்றும், பசுமைக் குடில் விளைவு (green house effect) என்றும் வழங்குவர். பொதுவாக, தாவரங்கள் பசுமையுடன் செழித்து வளரப் போதிய வெப்ப மூட்டுவதற்கு–அவற்றை உயர் வகைக் கண்ணாடி அறைக்குள் வெயில் பட வளர்ப்பதுண்டு. இதே பண்பின் அடிப்படையில் கண்ணாடி அறை போன்று வளிமண்டலம் ஊட்டும் வெப்ப விளைவே, கண்ணாடி அறை விளைவு எனப்படுகிறது. 1958இல் அமெரிக்கா செலுத்திய வான்கார்டு, எக்ஸ்புளோரர் மற்றும் 1960இல் தொடங்கிய ‘டைரோஸ்-1’ எனும் தொலைக் காட்சி மற்றும் அகச் சிவப்பு நோக்குச் செயற்கைக் கோள் (Television and infra red observation satellite) முதல் 1981இல் ஏவப்பட்ட டைனமிக்ஸ் எக்ஸ்புளோரர் வரையான வானிலை ஆய்வுச் செயற்கைக் கோள்களின் பயன்கள் விரிந்து பெருகும். சோவியத் ஒன்றியக் குடியரசின் மெட்டியர் விண் கலங்கள், சுவீடனின் வைக்கிங், இந்திய இன் சாட். ஜப்பானின் ஜி.எம்.எஸ் எனப்படும் புவி நிலை வட்ட வானிலை ஆய்வுச் செயற்கைக் கோளான (geostationary meteorological satellite) ஹிமவாரி, ஐரோப்பிய விண் வெளி முகவாண்மையின் (European space Agency) மெட்டியோசாட் ஆகியன குறிப்பிடத் தக்க வானிலை ஆய்வுக் கோள்கள். கடற் செயற்கைக் கோள்கள். உலகின் 70%கும் மிகுதியான பரப்பளவில் நீர் நிறைந்துள்ளது. கடலின் இயங்கியல் (ocean dynamics), மேற் பரப்பின் காற்று வீச்சு, நுரையிடும் அலைகள், கடல் படுகை, நில அமைப்பு போன்ற கடலின் பல தன்மைகளை ஆராயவும், கடல் வளம் பற்றி அறிந்து கொள்ளவும், கடற் செயற்கைக் கோள்கள் பயன்படும். ஜூன் 26, 1978இல் அமெரிக்கா செலுத்திய சீசாட் உலகின் முதலாம் கடற் செயற்கைக் கோள் எனலாம். அதனுள் பொருத்தப்பட்டிருந்த சிதறலளவி (scatterometer) கடல் தளக் காற்று வேகத்தையும், ராடார் குத்துயர அளவு (radar actimeter) அலைகளின் உயரத்தையும், வரியிடு பல தொடர்போடை நுண்ணலைக் கதிரளவி (scanning multichannel microwave radio meter) மழை மேகம், கடல் நுரை, கடல் புற வெப்பம் போன்ற பண்புகளையும் அளவிட்டன. சோவியத் ஒன்றியக் குடியரசின் ஓகின் திட்டமும், கனடாவின் ராடார்சாட் செயற்கைக் கோளும், ஜப்பானின் மோஸ் எனும் கடலாய்வுச் செயற்கைக் கோளும் இவ்வகைக்குரிய ஏனைய எடுத்துக் காட்டுகளாகும். சுற்றுப் புறச் செயற்கைக் கோள்கள். பொதுவாக, சூறைக் காற்று, புயல், சூறாவளி ஆகிய இயற்கை மாற்றங்களைப் பகற் பொழுதில் காணலாம். மீ உயர் பகுதிறன் கதிரளவி (very high resolution radiometer) இந்திய இன்சாட்-1பி (INSAT- IB) செயற்கைக் கோளில் இடம் பெறுகிறது. அமெரிக்காவின் டைரோஸ் செயற்கைக் கோள் துருவப் பாதையில் இயங்கினாலும், இரவிலும் மேகத் திரளைப் பதிவாக்கத் தகும் அகச் சிகப்புக் கண்கள் கொண்டிருக்கும். 1960 ஏப்ரல் 1இல் செலுத்தப்பட்ட டைரோஸ்–1 முதல் தொடங்கிய இவ்வரிசைச் செயற்கைக் கோள்கள், பின்னர், சுற்றுப் புறவியல் தொண்டு மேலாண்மை (Environmental Science Service Administration–ESSA) என்று வழங்கப் பட்டன. 1960 பிப்ரவரி 26இல் ஏவப்பட்ட எஸ்ஸா–9 (ESSA–9) துருவச் செயற்கைக் கோளிற்குப் பிறகு, தேசிய கடல் மற்றும் வளி மண்டலவியல் மேலாண்மை (National Oceanic and Atmosphere Administration) என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சுருக்கமாக NOAA எனப்படுபவை இவ்வரிசைச் செயற்கைக் கோள்களே. மேக மூட்டங்களைக் கண்டு, புயல், மழையை முன்னறிவிக்கவும், வெள்ளம் மற்றும் வறட்சி நிலைகளை உடனுக்குடன் கண்காணித்து, மீட்புப் பணிகளில் ஈடுபடவும், வேளாண்மைக்கு உறுதுணை புரியவும் இவ்வகைத் துருவச் செயற்கைக் கோள்களே பெரிதும் உதவுகின்றன. NOAAக்களின் பின் தோன்றல்களான நிம்பஸ் (Nimbus) வரிசைச் செயற்கைக் கோள்களின் பணி சற்று வேறுபடும். நிம்பஸ்–3 வளி மண்டலத்தில் ஓசோன் அளவைப் பதிவாக்கியது. நிம்பஸ்–5உம், 7உம் தென் துருவ அண்டார்டிகா பகுதியில் மெலிந்து வரும் பனிப் படிவங்கள் பற்றி எச்சரித்துள்ளன. ஏனெனில், காற்றில் கண்ணாடி அறை விளைவு உண்டாகி, துருவப் பனி மலைகள் உருகத் தொடங்கினால், இன்றைய கடல் மட்டம் 60 மீட்டராவது உயரும். அந்நிலையில் கண்டங்கள் நிலப் பரப்புகள் ஆகியன கடலுக்கடியில் மூழ்கி விடக் கூடும். அதனால், 1980முதல் வெட்டெல் கடற்பகுதி அறிவியலாரால் மிகுந்த கண்காணிப்பிற்குட் படுகிறது. NOAA திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்டு, புவி நிலை வட்டப் பாதையில் செயற்படும் சுற்றுப் புறச் செயற்கைக் கோள் எனும் கோயஸ் (Goes) இனச் செயற்கைக் கோள்களும் குறிப்பிடத் தக்கவை. இந்தியத் தொலை உயர்வுச் செயற்கைக் கோளிலும் (Indian Remote Sensing Satellite) துருவப் பகுதிப் பனிக் கட்டிகளை ஆய்வு செய்யும் கருவிகள் இடம் பெறுகின்றன. புவி அளவைச் செயற்கைக் கோள்கள். புவியின் உள்ளகத்தில் உறையும் தாதுப் பொருள்கள், எண்ணெய், மற்றும் கனி வளங்களைத் தொலைவிலிருந்தே கண்டறிய அமெரிக்காவின் லாண்ட்சாட், பிரான்சின் ஸ்பாட் முதலான துருவப் பாதைச் செயற்கைக் கோள்கள் பெருமளவில் உதவுகின்றன. தமிழ் நாட்டில் காவிரி நதிப் படுகையில் நரிமணம் என்னுமிடத்திலும், புவனகிரியிலும், ஆந்திராவில் கோதாவரி கழி முகத்திலும் பெட்ரோலிய எண்ணெய் அடியொழுக்கைக் கண்டுணர்த்தியவை இச்செயற்கைக் கோள்களே. பயண அமைப்புச் செயற்கைக் கோள்கள். 1960 ஏப்ரல் 13இல் அமெரிக்கா ஏலிய டிரான்சிட்-1பி விண்ணூர்தியே அந்நாட்டின் முதலாம் பயண அமைப்புச் செயற்கைக் கோள். கடல் வழியிலோ, காற்று வெளிப் பயணத்திலோ, தரைக் கட்டுப்பாட்டு நிலையங்களின் தொடர்பறுந்து திசை தவறி ஆபத்தில் சிக்கித் தவிக்கும் கலங்களுக்கு, உதவி செய்வது சோவியத் ஒன்றியக் குடியரசின் சார்சாட் (Sarsat) ஆகும். தேடிக் காப்பாற்றப் பயணத் தடமறிதல் (Search and Rescue Aided tracking) அதன் குறிக்கோள். 1982 ஜூன் 29இல் சோவியத் ஒன்றியக் குடியரசு செலுத்திய காஸ்மாஸ்–1383 விண் கலம் இங்ஙனம் அட்லாண்டிக் கடல் நடுவில் புயலில் சிக்குண்ட கப்பலொன்றை மீட்டது. அதுவே, சோவியத் ஒன்றியக் குடியரசு, அமெரிக்கா, பிரான்ஸ், கனடா நாடுகள் இணைந்த காஸ்பாஸ் சார்சாட் (Cospos Sarsut) திட்டத்திற்கு அடிப்படையாயிற்று எனலாம். இவ்வாறே கப்பல்கள், விமானங்களின் பயண அமைப்பில் உதவிடும் ஜீஸ்டார்–1 (Gstar–1) செயற்கைக் கோள் 1984 மே 8இல் ஏரியான்–3 ஏவு கலன் மூலம் விண்ணிற் பறக்க விடப் பட்டது. இவ்வகைச் செயற்கைக் கோள்களால் திசை தெரியாத காட்டிலும், நடுக் கடலிலும் அகப்பட்டுத் தவிக்கும் பயணியரை மீட்க முடியும். இத்தகைய கடல் ஆபத்திற்குதவும் பெரும் பணிகளில் தனித் தனியே ஈடு படுவதிலும், பல உலக நாடுகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பே சிக்கனமானதும், திறமிக்கதுமாகும். ஆதலால், 1981ல் பன்னாட்டுக் கடல் உதவிச் செயற்கைக் கோள் (Inter national Maritime Satellite) திட்டமான இன்மார் சாட் எனும் ஒன்றியம் உருவாயிற்று. அது 48 உறுப்பு நாடுகள் இணைந்த உலகளாவிய மனித நேயக் கூட்டு முயற்சி. வேவுச் செயற்கைக் கோள்கள். விண்ணிலிருந்தவாறே,வேற்று நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளை ஒற்றறியும் செயற்கைக் கோள்கள் வானில் மிகுதியாக உலவுகின்றன. நேட்டோ (Nato) மிடாஸ் (Midas), சாமோஸ் (Samos), வேலா (Vela), ஃப்ளிட் சாட்காம் (Fleet Satellite Communication system–FLTSATCOM) தடமறிந்து தரவு அஞ்சல் செயற்கைக் கோள் (Tracking and Data Relay Satellite) போன்ற உள் நாட்டுக் கடற்படை, இராணுவச் செயற்கைக் கோள்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ளன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> தகவல் தொடர்புச் செயற்கைக் கோள்கள். இராணுவத் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமன்றித் தொலைக் காட்சி ஒளி பரப்பு, தொலைபேசி இணைப்பு போன்ற தகவல் தொடர்புக்குரிய கருவிகளை சுமந்து புவி சுற்றி வரும் இவ்வகைச் செயற்கைக் கோள்கள் நேரடியாக மக்களைச் சென்றடையும் பயன் மிக்கவை. பெரும்பாலான தகவல் தொடர்புச் செயற்கைக் கோள்கள் புவி நிலை வட்டப் பாதையில் நில நடுக் கோட்டின் வெவ்வேறு தீர்க்க கோட்டுப் (longitude) புள்ளிகளின் மேல் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. ஏறக் குறைய 120° இடை விட்ட தீர்க்கக் கோடுகளில், 36,000 கி.மீ. உயரத்தில் நின்று செயல் படும் மூன்று தகவல் தொடர்புச் செயற்கைக் கோள்களால் உலகின் முழுப் பரப்பளவிலும் தொலைக் காட்சி, தொலை பேசி, தந்தி ஊடிணைப்புகள் நிறுவ முடியும். அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஏர்லி பேர்டு (Early Bird) எனும் முதலாம் தகவல் தொடர்புச் செயற்கைக் கோளான கம்சாட் (Comsat) இரண்டு இன்டெல் சாட் (Intelsat) செயற்கைக் கோள்களுடன் இணைந்து, 1967 ஜூன் 27இல் முதன் முறையாக உலகளாவிய ஒளி பரப்புச் சாதனையை நிகழ்த்தியது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் சாட்காம் (satcom) ஸ்பேஸ் நெட் (spacenet), சோவியத் ஒன்றியக் குடியரசின் ராதுகா ஸ்டேஷனர், எக்ரான் ஸ்டேஷனர், பிரான்சின் டெலிகாம், சீனாவின் எஸ்.டி. டபிள்யூ, ஜப்பானின் சகுரா, சி.எஸ் (cs), இந்தியாவின் இன்சாட், இந்தோனேஷியாவின் பலப்பா, கனடாவின் அணிக், மெக்சிகோவின் மொரிலோஸ், இங்கிலாந்தின் ஸ்கைநெட், ஆஸ்திரேலியாவின் ஆஸ்சாட், பிரேசில் நாட்டுப் பிரேசில்சாட், அரபு நாடுகளின் அராப்சாட் அனைத்தும் தகவல் தொடர்புச் செயற்கைக் கோள்களே. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சோவியத் ஒன்றியக் குடியரசின் பெரும் பகுதி வட பாதிக் கோளத்தில் தொலைவில் விரிந்து கிடப்பதால், அந்நாட்டுத் தகவல் செயற்கைக் கோள்களில் சில நில நடுக் கோட்டோடு மிகு சுற்று தளச் சாய்மானத்தில் ஏறத் தாழ 400 கி. மீ. புவி அருகும் (perigee), 36,000 கி.மீ. புவி அப்பாலும் (apogee) கொண்ட மாறு பட்ட நீள் வட்டப் பாதையில் இயங்குகின்றன. எ-டு: மோல்னியா பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், இங்கிலாந்து, ஆஸ்திரியா, ஸ்பெயின், நெதர்லாந்து, இத்தாலி, சுவிட்சர்லாந்து, சுவீடன், டென்மார்க் ஆகிய 11 ஐரோப்பிய நாடுகளும் இணைந்துருவான ஐரோப்பிய விண்வெளிக் கழகம் (European Space Agency). 1989 ஜூலை 12இல் தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானா மாநிலத்தில் கூறு எனும் ஏவு தளத்திலிருந்து ஏரியன்–3 ஏவு கலம் மூலம் செலுத்திய ஒலிம்பஸ் உலகின் மிகப் பெரிய தொலைத் தகவல் தொடர்புச் செயற்கைக் கோள் ஆகும். இதன் மூலம் வீடு தோறும் செயற்கைக் கோளிலிருந்து நேரடித் தொலைக் காட்சி ஒளி பரப்பைப் பெற முடியும். மேலும் 1989 டிசம்பர் 27இல் ஏரியன்–4 ஏவு கலத்தின் உதவியால் செலுத்தப்பட்ட அமெரிக்க இன்டெல்சாட் VI–எஃப் 2 (intelsat VI F-2) எனும் மிகப் பெரும் செயற்கைக் கோள், வணிக நிறுவனங்களுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவியாக விளங்குகிறது. ஆயினும், லத்தீனிய அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பிற நாடுகளுக்கும் தொலை பேசி, தகவல் பரிமாற்றம், தொலைக் காட்சி ஒளி ஒலி பரப்பிற்கு உதவுமாறு, உலகளவில் வணிக நோக்குடன் பணி புரியும் பான் அமெரிக்கச் செயற்கைக் கோளான பாஸ் (PAS) மட்டுமே தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான உலகின் முதற் பெரும் பன்னாட்டுத் தகவல் தொடர்புச் செயற்கைக் கோள் ஆகும். தொலைக் காட்சி ஒளி பரப்பு மட்டுமன்றி, வானொலி ஒலி பரப்பிற்கும் உதவும் செயற்கைக் கோள்களில் அமெரிக்க ஆஸ்கார் (oscar) குறிப்பிடத் தக்கது. ஹாம் (Ham) எனப்படும் அமெச்சூர் வானொலித் தொடர்பியல் வல்லுநர்கள் வடிவமைத்த முதலாம் ஆஸ்கார் 1961 டிசம்பர் 12இல் விண்ணிற் செலுத்தப்பட்டது. 18 நாள்களில் அது செயலிழந்து போயினும், பின்னர் செலுத்தப்பட்ட இவ்வகைச் செயற்கைக் கோள்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டு விமானப் படைத் துறைக்கு மிகுந்த உதவி புரிந்து வருகின்றன. 1988 ஜூன் 15இல் முதலாம் ஏரியன்–4 ஏவு கலம் மெட்டியோசாட் பாஸ்-1 ஆகியவற்றுடன் மேற்கு ஜெர்மனிக்குச் சொந்தமான அமெச்சூர் வானொலிக் கோளான அம்சாட்–III (Amsat–III) ஆகிய மூன்று செயற்கைக் கோள்களைச் சுமந்து சென்றது. அம்சாட், அமெச்சூர் வானொலி சுமக்கும் விண் சுற்றுச் செயற்கைக் கோள் (orbital satellite carrying amateur radio) என்பதால், பின்னர், ஆஸ்கார் என்றே சுருக்கிக் குறிப்பிடப்பட்டது. —சு. முத்து நூலோதி. Arthur C. Clerke, The Promise of Space, Hodder and Stonghton Publications, London, 1988. செயற்கைத் தொடு கோடு வானூர்திக்கும் செயற்கையான தொடு கோட்டிற்கும் இடையே உள்ள தொடர்பை உணர்த்தும் ஒரு கருவியே செயற்கைத் தொடு கோடு (artificial tangent) எனப்படும். இக்கருவியில், செங்குத்து நிலையில் உள்ள சுழலி, பறப்பு நிலைக்கு ஏற்பத் தொடு கோட்டுத் தண்டை நகர்த்துகிறது. தொடு கோட்டுத் தண்டின் தொடக்க நிலை, வானூர்தியின் ஒரு நிலை காட்டி மூலம் குறிக்கப்படுகிறது. தொடு கோட்டுத் தண்டின் அசைவு, கருவியில் தேவையற்ற மாற்றங்களை உருவாக்கி, வானூர்தியின் நிலையைத் துல்லியமாகக் குறிக்கிறது. விமானி ஊர்தியில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளின் வழியே வெளியே பார்த்தால் தெரியக் கூடிய காட்சி இக்கருவியிலும் உருவாக்கப் படுகிறது. சுழலி, மின்சாரத்தாலோ, காற்று ஆற்றலாலோ இயக்கப்படலாம். காட்சியின் இயல்பைச் சிறப்பாக்கக் கருவியில் தொடு கோட்டுக்கு மேல் உள்ள பகுதி நீல நிறமாக வும், கோட்டிற்குக் கீழ் உள்ள பகுதி கறுப்பு, பச்சை அல்லது அரக்கு நிறமாகவும் தோன்றும் வண்ணம் அமைக்கப் படுகிறது. விமானத்திற்கான திரைத் தோற்றம் ஒரு நீளக் கோடு, அதன் கீழ் ஒரு சிறு கோடு, இரண்டிற்கும் இடையே சிறு புள்ளி என்றமைந்து உண்மையான விமானம் போலவே தோன்றும். கருவியில் தோன்றும் விமான நிலைக்கேற்ப தேவைப்படும் திருத்தங்கள், கருவியிலேயே ஆணைகளாகப் பொறிக்கப்படும். இக்கருவியின் துணை கொண்டு, பறப்பின் நிலை தொடர்ந்து அறுதியிடப் பட்டுத் தேவையான மாற்றம் நிகழ்த்தப்படும். —வயி. அண்ணாமலை நூலோதி. Harold A. Rothbart, Mechanical Design and Systems Handbook, McGraw-Hill Book Company, London, 1964. <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்த பக்கத்தில் ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> செயற்கைத் தொடு வானம் விமானத்தினை செயற்கை வானத்துடன் ஒப்பு நோக்கும் போது, விமானி இருக்கும் உயர அளவைக் காட்டும் கருவி ஒன்றுள்ளது. தானியங்கு அல்லது செயற்கை வானம் இவற்றில் செங்குத்துத் தொடு வான முள், நிலையான விமானத்தின் குறியெண்ணுக்குத் தக்கவாறு அசைகிறது. விமானத்தின் உருளும் தன்மைக்கு ஏற்ப, கருவியின் முள் அசைவு இருக்கிறது. பலகணி வழியாக நோக்கினால், கிடைக்கும் தோற்றத்தை விமானி, உயரங் காட்டியைப் பார்த்து, அறிந்து கொள்ளலாம். செங்குத்துச் சுழல் வேகம் அக்கருவியின் மூலமாகவோ, விமானப் பரப்புக் கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாகவோ அமைந்திருக்கும். சுழல் வேகக் கருவி காற்றினாலோ, மின்சாரத்தாலோ ஓடக் கூடியது. கருவியின் முள் நீல வண்ணத்திலும், அதன் பின்புறம் உள்ள பரப்பு, கறுப்பு, பச்சை, காவி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிலும் அமைந்திருந்தால், அளவுகளைப் பார்ப்பது எளிமையாக இருக்கும். —வி. சண்முகசுந்தரம் நூலோதி. Harold A. Rothbart, Mechanical Design and Systems Handbook, McGraw-Hill Book Company, London, 1964. செயற்கைப் பட்டு பட்டின் இயல்புகளைப் பெருமளவில் கொண்ட செயற்கை இழைகளும், அவற்றைக் கொண்டு நெய்யப்படும் துணிகளும் செயற்கைப் பட்டு எனப் படுகின்றன. 1664இல் ராபர்ட் ஹுக் என்பார் பட்டு நூலை ஆய்வகத்தில் உருவாக்க இயலும் என்று கூறியிருந்தார். எனினும், 1840ஆம் ஆண்டு சில கரைசல்களை நுண் துளைகளின் வழியே பீச்சி, இழை வடிவாக்கலாம் என்னும் கருத்துத் தோன்றியது. 1855இல் ஜார்ஜ் ஆடிமார்ஸ் எனும் சுவிஸ் வேதியியலார், செல்லுலோஸ் நைட்ரேட்டைத் தயாரித்து, செயற்கைப் பட்டுத் தயாரிப்புக்கு அடிப்படை அமைத்தார். 30 ஆண்டுகளுக்குப் பின், கார்டோனெட், நைட்ரோ செல்லுலோசிலிருந்து முதன் முதலாகத் துணி இழைகளைத் தயாரித்து, ரேயான் தொழிலுக்கு அடிப்படை செய்தார். ரேயான் தயாரிப்புக்கு பிரான்ஸ் நாட்டு உரிமைப் பட்டயத்தைக் கோரிப் பெற்ற இவரை, ரேயான் தொழிலின் தந்தை என்பர். எனினும், பிற்காலத்தில் மாறுபட்ட சில வகைச் செயற்கைப் பட்டு வகைகளும், ரேயான் என வழங்கப்பட்ட போது, நைட்ரோ செல்லுலோஸ் ரேயானுக்கு மதிப்புக் குன்றலாயிற்று. ரேயான், செயற்கைப் பட்டு எனக் குறிப்பிடப் படும் இழைகளும், துணிகளும் உண்மையில் பருத்தித் துணிகளேயாகும். பருத்தியின் வேதி அடக்கப் பொருளான செல்லுலோசைச் சற்றே வேதி மாற்றத்திற்குட் படுத்தியோ, மாற்றாமலோ ஒரு நீர்மத்தில் கரைத்து, அக்கரைசலிலிருந்து மீண்டும் செல்லுலோஸ் பொருளை வேறு இயற்பியல் வடிவில் பெறுதலே ரேயான் தயாரிப்பின் அடிப்படைக் கொள்கையாகும். இதன் காரணமாகவே, ரேயான்கள் யாவும் மறு உருவாக்கப் பட்ட (regenerated) செல்லுலோஸ் எனக் குறிப்பிடப் படுகின்றன. ஆய்வகத்தில் வேதிப் பொருள்களைக் கலந்து, முழுமையாகத் தொகுக்கப் படுவதில்லையாதலால், செயற்கைப் பட்டு, பகுதித் தொகுப்பு இழை (semi-synthetic fibre) எனப் படுகிறது. தயாரிப்பு முறைகளையும், இழைப் பண்புகளையும் பொறுத்து, செயற்கைப் பட்டுகள் நான்காக வகையிடப் படுகின்றன. அவை நைட்ரோ செல்லுலோஸ் ரேயான் (கார்டோனெட் முறை); அசெட்டேட் ரேயான் (அசெட்டைலேற்ற முறை); குப்ரமோனியம் ரேயான் (ஸ்விட்சர் முறை); விஸ்கோஸ் ரேயான் (விஸ்கோஸ் முறை) ஆகியன. பொதுத் தயாரிப்பு முறை. செல்லுலோசை உள்ளடக்கிய ஒரு நீர்மப் பொருளை, ஓர் உலோகத் துளை முகப்பு வழியே (spinneret) பீச்சி வெளியேற்ற வேண்டும். அமிலங்களாலும், காரங்களாலும் பாதிப்புறாத பிளாட்டினம்–ரேடியம் உலோகக் கலவையே, துளை முகப்புத் தயாரிக்க ஏற்றது. அதிலுள்ள நுண்ணிய துளைகள் கண்களுக்கு எளிதில் புலப்படாத அளவுக்குச் சிறியனவாகும். ஒவ்வொரு நுண் துளையிலிருந்தும், ஒரு நுண்ணிழை வெளி வருகிறது. இந்நீர்மத் தெளிப்பு தக்க அமிலக் கரைசலில் இடப்படுவதாலோ, அதிலுள்ள கரைப்பான் குறையழுத்தத்தில் ஆவியாவதாலோ, திண்ம இழையாக உருவெடுக்கிறது. பட்டுப் பூச்சியிலிருந்து வெளி வரும் கோந்து போன்ற பொருளும், காற்றுப் படுவதாலேயே இழையாகிறது என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு நுண் துளை முகப்பில் ஏறத் தாழ 20,000 துளைகள் வரை இடம் பெறச் செய்யலாம். ஒரே அளவான நீளிழைகளை ஒரே நேரத்தில், இவ்வுத்தியால் பெறலாம். இவ்விழைகளை ஒரு சேர முறுக்கி, ரேயான் நூலைப் பெறலாம். ரேயான் தயாரிப்பு முறைகள் யாவற்றுக்கும் முதன்மையான மூலப் பொருள் செல்லுலோஸ் ஆகும். இது பருத்தியிலிருந்தும், மரக் கூழிலிருந்தும் (wood pulp) தயாரிக்கப்படுகிறது. நான்கு வகைகளுள் விஸ்கோஸ் ரேயானும், அசெட்டேட் ரேயானும் மட்டுமே தற்போது பெரிய அளவில் தயாரிக்கப்பட்டு வரும் செயற்கைப் பட்டு வகைகளாகும். விஸ்கோஸ் ரேயான். இவ்வகை ரேயான் பருத்தி விதைப் பிசிறிலிருந்தோ (cotton linters), மரக் கூழிலிருந்தோ தயாரிக்கப் படுகிறது. மரக் கூழ் தயாரிப்- புக்குப் பைன், யூகலிப்டஸ், தேவ தாரு. ஹெம்லாக் ஆகிய மரங்கள் ஏற்றவை. மென் மரங்களின் கூழ்கள் 94% வரை செல்லுலோசை உள்ளடக்கியனவாதலால், இழைத் தயாரிப்புக்கு ஏற்றனவாகக் கருதப் படும். செல்லர் என்னும் ஜெர்மன் நெசவாளர் 1840இல் முதன் முதலாக மரக் கூழை கரைக்கும் முறையைக் கண்டு பிடித்தார். 50 ஆண்டுகளுக்குப் பின்னர், கிராஸ், பெவான் ஆகிய இரு பிரிட்டிஷ் அறிவியலார் மரக் கூழை வேதி முறையில் கரைக்கும் முறையை நெறிப்படுத்தினர். 1910இல் அமெரிக்காவில் முதல் விஸ்கோஸ் ரேயான் தொழிற்சாலை நிறுவப் பட்டது. மரச் சிராய்கள் சல்ஃபர் டைஆக்சைடு கரைசலில் வேக வைக்கப்பட்டு, மரத்தின் லிக்னின் செல்லுலோசிலிருந்து பிரிக்கப் படுகிறது. மேலும், நிற நீக்கம் செய்யப் பட்ட செல்லுலோஸ் ஒற்றுத் தாள் (blotting paper) வடிவத்தில் தயாரிக்கப் படுகிறது. இத்தாள் எரிகாரக் கரைசலில் இடப்பட்டு, சிறு துண்டுகளாக வெட்டப் படுகிறது. கட்டுப் படுத்தப்பட்ட வெப்ப நிலை, ஈரப் பதன் கொண்ட சூழ்நிலையில் இத்துண்டுகள் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு முதிர்வுறச் செய்யப் படுகின்றன. பின்பு, இவை கார்பன் டைசல்ஃபைடு நீர்மத்தில் இடப்பட்டுச் செல்லுலோஸ் சாந்தேட் எனப் படும் ஆரஞ்சு நிறத் துண்டுகளாக மாற்றப் படுகின்றன. அடுத்த கட்ட மாக, இவை வலிமை குறைந்த எரிகாரக் கரைசலில் கரைக்கப்பட்டுப் பாகு தன்மை மிக்க, தேனையொத்த வண்ணமும், அடர்த்தியும் கொண்ட நீர்மமாக மாற்றப் படுகின்றன. விஸ்கோஸ் எனப் படும் இக்கரைசல் பல நாள்களுக்கு முதிர்வுற்ற பின்பு, பல முறை வடி கட்டப்பட்டு, வெற்றிட முறை வாயிலாகக் காற்றுக் குமிழிகள் அகற்றப் படுகின்றன. இறுதியாக, கரைசல் ஒரு நுண் துளை முகப்பு வழியே பீச்சித் தெளிக்கப் பட்டு, சல்ஃப்யூரிக் அமிலக் கரைசலில் விழுகிறது. இக்கட்டத்தில் செல்லுலோஸ் சாந்தேட்டிலிருந்து செல்லுலோஸ் இழை வடிவில் விடுவிக்கப் படுகிறது. விஸ்கோஸ் ரேயானின் சிறப்பியல்புகளைக் கட்டுப்பாடாக மாற்றியமைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. பளபளப்பைக் கூட்டுவதற்கும், குறைப்பதற்கும் பளபளப்பு நீக்கும் பொருளைத் தக்க அளவில் விஸ்கோஸ் கரைசலில் புகுத்தலாம். இக்கரைசலில் சாயப் பொருளைக் கரைத்தால், விளைவாகும் இழையில் வண்ணம் நிலைத் தன்மை பெறும். வீழ் படியும் கரைசலின் வேதி இயைபை மாற்றினால், இழையினுள் அலைவு பொதிந்து, பின்பு நீரில் நனைக்கையில் வெளி வரும். விஸ்கோஸ் கரைசலில் சோடியம் கார்பனேட்டைக் கரைத்து, நுண் துளை வழியே, அமிலக் கரைசலில் இட்டால், கார்பன் டை ஆக்சைடு இழையினுள் உருவாகி, இழையின் பருமனையும், உறிஞ்சு தன்மையையும், வழவழப்பையும் கூடுதலாக்கும். நுண் துளையில் செலுத்தப் படும் அழுத்தத்தையும், பிழிந்து பார்க்கையில், நீளிழையை இழுக்கும் விரைவையும் பொறுத்து, இழையின் குறுக்களவு அமையும். நுண் துளைகளின் வடிவத்தை மாற்றியமைத்து, இழையின் தோற்றத்தைக் கட்டுப்படுத்தலாம். நுண் துளை முகப்பிலிருந்து வெளியே இழுக்கப் படும் விஸ்கோஸ் ரேயான் இழை பல உத்திகளால் நூற்கப் படுகின்றது. பெட்டி நூற்பு முறையில், அமிலத் தொட்டியிலிருந்து வெளி வரும் முக்கோணச் சக்கரங்களின் (godet wheels) மீது சுற்றப் படுகிறது. இதனால், விளையும் இழு விசை இழையில், மூலக் கூற்று ஒருங்கிணைப்பையும், அதனால் நீளிழை வலிவூட்டத்தையும் கூடுதலாக்குகிறது. டோஃபம் பெட்டி (tophan box) எனும் மூடிய உருளையில், மேலும், கீழுமாக அசையும் புனல் வழியே, இழைகள் இட்டுச் செல்லப் படுகின்றது. இப்பெட்டி சுழலுவதால், மைய விலக்கு விசை தோன்றி, உருளையின் சுவர்ப் பகுதியில் ஓர் இழைக்கண்டு உருவாகிறது. இதனால், இழையிலும் சற்றே முறுக்கேற்றம் நிகழ்கிறது. இழை கழுவி உலர்த்தப்பட்ட பின், துளையிடப்பட்ட சக்கரங்களின் மீது சுற்றப் படுகிறது. நேரடியாகச் சக்கரங்களில் சுற்றும் முறையும் செயல்படுத்தத் தக்கதேயாகும். ரேயான் நூலின் இழைச் சிணுக்கு, டெனியர் (denier) அல்லது டெசிடெக்ஸ் (decitex) எனும் அலகில் குறிப்பிடப் படுகிறது. நூலின் தடிமன் துளை முகப்பின் துளை எண்ணிக்கையையும், துளை உருவளவையும் பொறுத்தது. 450 மீ. நீளச் சிட்டத்திற்கு டெனியரும், 10,000 மீ. நீளச் சிட்டத்திற்கு டெசிடெக்சும் திட்ட அலகுகளாக உள்ளன. ரேயானை ஒற்றை நீளிழையாகவோ, பல நூலிழையாகவோ நூற்கலாம். ஒற்றை நீளிழைகளாலான நூல் பின்னல் வகை உடைகளுக்கும், பல் நீனிழை வகை நூல் ஆடை, அறை கலன் உறை ஆகியவற்றுக்கும் பயனாகின்றன. 40 நீளிழைகளைக் கலந்து தயாரிக்கப்படும் நூல் 40–240 டெனியர் (40–270 டெசிடெக்ஸ்) நுண்மை கொண்டிருக்கும். ரேயானைச் சீர் செய்யும் முறைகள் ஏனைய இழைகளுக்கு உள்ளன போன்றவையேயாகும். விஸ்கோஸ் ரேயானின் இழு வலிமை கம்பளியின் வலிமையை விடக் கூடுதலாகும். பட்டை விடக் குறைவாகும். பருத்தி, லினன் ஆகிய இழைகளை விட வலிமை குறைவான ரேயானின் வலிமை ஈரத்தால் 40%. வரை மேலும் ஒடுங்குகிறது. விஸ்கோஸ் ரேயானின் நீட்சித் தன்மை பருத்தி, லினனை விடக் கூடுதலாகவும், பட்டு, கம்பளியை விடக் குறைவாகவும் உள்ளது. மீட்புத் தன்மை (resilience) குறைந்த இழையாகையால், எளிதில் மடிப்புகளும் சுருக்கங்கஞம் தோன்றுகின்றன. துவளும் தன்மையும், வெப்பங் கடத்துந் திறனும், ஈரத்தை உறிஞ்சும் இயல்பும் கூடுதலாகக் கொண்டது. வெப்பம், ஒளி, பூசணம் ஆகியவற்றின் தாக்குதல் பருத்திக்கு உள்ளதைப் போன்றதேயாகும். நேரடி, அமில, சிதறிய வகைச் சாயங்கள், விஸ்கோஸ் ரேயானுக்கு ஏற்றன. நூற்புக்குப் பயன்படுத்தப்படும் கரைசலிலேயே சாயத்தைக் கலந்து நூற்கும் முறை ரேயானின் சாயம் திடமாக இருப்பதற்கு உதவுகிறது. விஸ்கோஸ் ரேயான், ஈரத்தில் 70% வலிமை இழக்கக் கூடியதாகையால், அதன் ஈர வலிமையைக் கூடுதலாக்கும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. இதன் பயனாக, 1960இல் உயர் ஈரக் குணக ரேயான் (high wet modulus rayon) உருவாக்கப் பட்டது. இதை இரு வேறு நிறுவனங்கள் ஜான்ரெல், அவ்ரில் (zantrel, avril) எனும் வணிகச் சின்னங்களுடன் தயாரித்தன. குப்ரம்மோனியம் ரேயான். பெம்பர்க் என்னும் பெயரில் 1890இல் தயாரிக்கப்பட்ட் இந்த ரேயான் 1919இல் தான் முதன் முதலாக வணிக அளவில் வெற்றிகரமாகத் தயாரிக்கப்பட்டது. குப்ரம்மோனியம் முறையில், பருத்தியைக் (செல்லுலோசை) கரைப்பதற்கு தாமிர உப்புக் கரைசலில் மிகையளவு அம்மோனியா கலந்த கரைப்பான் பயன் படுகிறது. அடர் நீல நிறமுள்ள இக்கரைசலை ஸ்விட்சர் வினைப் பொருள் என்பர். இக்கரைசலை நுண் துளை முகப்பு வழியே கரைசலில் செலுத்தி, இழைகள் பெறப் படுகின்றன. பருத்தி விதைப் பிசிர்களும், மரக் கூழும் இம்முறைக்கான மூலப் பொருள்கள். இவை, தூய்மையாக்கப்பட்ட செல்லுலோஸ் குப்ரம்மோனியம் கரைசலில், குறை வெப்ப நிலையில் கரைக்கப் பட்டு, நிலையாக்க வினைப் பொருள்களும் எரி காரமும் (NaOH) சேர்க்கப் படுகின்றன. பின்பு, இக்கரைசல், நிக்கல் சல்லடைகளினூடே வடிக்கப்பட்டு, காற்றகற்றம் செய்யப் படுகிறது. நிக்கல் நுண் துளை முகப்பு வழியே இக்கரைசலை அழுத்தத்தில் செலுத்தி, நடு நிலையாக்கப் பட்டு நூற்கப் படுகிறது. நயமான நூல்கள் தயாரிப்பதற்குக் குப்ரோரேயான் சிறந்தாகும். ஏனைய ரேயான்களை விடக் குப்ரோரேயான், தயாரிப்புச் செலவைக் கூடுதலாகக் கொண்டது. நுண்மை, வலிமை, கவர்ச்சி, துவளுமை ஆகிய இயல்புகள் கூடுதலாகவுள்ளமையால், ஏனைய ரேயான்களை விட இவ்விழைக்கு மதிப்பு உயர்ந்துள்ளது. —மே.ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. B.P. Corbman, Textiles-Fibre to Fabric, Sixth Edition, McGraw-Hill Book Company, Singapore, 1985. <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்து ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> செயற்கைப் பதனிடு பொருள்கள் தோலுக்கான இயற்கைப் பதனிடு பொருள்களுக்குப் பகுதி அல்லது முழுப் பதிலீடாகவோ, சேர்க்கைப் பொருள்களாகவோ, பயனாகும் தொகுப்பு வழிப் பொருள்கள் செயற்கைப் பதனிடு பொருள்கள் (synthetic tanning materials) எனப்படும். பொதுவாக, இவை படிகத் தன்மையற்ற நீரில் கரையும் வேதிப் பொருள்களாகும். தூள் வடிவிலோ, கரைசல் நிலையிலோ கிடைக்கும் இவை, நிறமற்ற வகை முதல் அடர் பழுப்பு நிறம் வரை தயாரிக்கப் படுகின்றன. பெரும்பாலான செயற்கைப் பதனிடு பொருள்கள் ஃபார்மால்டிஹைடை ஃபீனால்கள், நாஃப்தலீன் சல்ஃபோனிக் அமிலங்கள், டை அரைல் சல்ஃபோன்கள், யூரியா, மெலமின், டைசயன்டை அமைடு, ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் குறுக்க வினைப் படுத்திப் பெறப் படுகின்றன. சில செயற்கைப் பதனிடு பொருள்கள் ஃபார்மால்டிஹைடை ஈடு படுத்தாமலே தயாரிக்கப்படுகின்றன. காட்டாக, ஸ்டைரீன்–மலியிக் நீரிலி, அரைல் டைஐசோ சயனேட்டுகள், லிக்னின் சல்ஃபோனேட்டுகள் ஆகியன. 1905இல் நீரின்ஸ்டீன் என்பார், ஃபீனால்–ஃபார்மால்டிஹைடு குறுக்க வினை பற்றிய தன் ஆய்வுகளின் போது, சில வினை விளைப் பொருள்கள் ஊன்பசை யுடன் வீழ் படிவைத் தருவதுடன், மர வகை டானின் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளமையையும் அறிந்தார். இவருடைய கண்டு பிடிப்பை ஸ்டியஸ்னீ என்பார் உறுதி செய்தார். 1913இல் ஸ்டியஸ்னீ ஓர் உரிமைப் பட்டயம் வேண்டிப் பெற்றார். பல ஆண்டுகளுக்கு நெரடால் என்னும் வணிகக் குறியுடன் இவருடைய தயாரிப்பு, தோல் பதனிடு பொருளாக விற்கப் பட்டு வந்தது. நாஃப்தலீன் α–அல்லது β–சல்ஃபோனிக் அமிலத்தை ஃபார்மால்டிஹைடுடன் வினைப் படுத்திப் பெறப் படும் தோல் பதனிடு பொருளின் இயற்கைப் பதனிடு பொருள்களில் இடம் பெறுவது போலன்றி, ஃபீனாலிக் தொகுதிகள் இடம் பெறுவதில்லை. எனவே, ஏனைய பதனிடு பொருள்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட செயல் முறை கொண்டிருக்கும். இப்பொருள் முழுதும் அயனி இயக்கமாகவே செயல் படுகிறது. எதிர்க் குறியீடு கொண்ட சல்ஃபா தொகுதிகள் தோலின் புரதத் தொகுதிகளுடன் வினையுறுகின்றன; மாறாக, பயிரின டானின்கள் ஃபீனாலிக் தொகுதிகள் வாயிலாக வினையுறுகின்றன. நாஃப்தலீன் வகைப் பதனிடு பொருள்கள் மிகக் குறைந்த pH மதிப்புக் கொண்ட கரைசல்களுக்கு மட்டுமே ஏற்றவை. எனவே, பயிரினப் பதனிடு பொருள்களுக்குப் பதிலீடாகவோ, அவற்றைப் பயன்படுத்தும் உத்தியைக் கொண்டோ நாஃப்தலீன், வகைப் பதனிடு பொருள்களைப் பயன்படுத்த இயலாது. பெரும்பாலும், இவை அமில அல்லது உப்பு வடிவில் பயன் படுகின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> பயன்கள். (அ) குரோமியப் பதனிடலுக்குப் படுத்தப்பட்ட தோலின் மீது, பதனிடு முதனிலையாக, நடு நிலையாக்கப் பொருளாக, நிற நீக்கியாக, ரெசின் வகைப் பதனிடலின் சிதறச் செய்யும் பொருளாக, அமில மற்றும் நேரடிச் சாயங்களுக்குச் சம மட்டப்படுத்தும் பொருளாக, காரச் சாயங்களுக்கு ஊன்று பொருளாகப் பல வகைகளிலும் ஈடுபடுத்தலாம். (ஆ) பயிரினப் பதனிடலுக்குப் படுத்தப்பட்ட தோலின் மீது, பதனிடு முதனிலையாக, வீழ் படிதலைத் தடுப்பதற்குப் பயிரினப் பதனிடு பொருள் சாற்றுடன் சேர்க்கைப் பொருளாக, பயிரினப் பதனிடு பொருள் தோலினுள் ஊடுருவுவதை ஊக்குவிக்கும் பொருளாகப் பயன்படுத்தலாம். அரோமாடிக் ஹைட்ராக்சி அமைப்புகள் (ஃபீனாலிக் அமைப்புகள்). நாஃப்தலீன் வகைகளை விட ஃபீனாலிக்குகள் பதனிடு திறனைக் கூடுதலாகக் கொண்டவை. கனத்த தோல் தயாரிப்பில் பயிரினப் பதனிடு பொருள்களுக்கு முழுப் பதிலீடாக, இவற்றைப் பயன் படுத்தலாம். வினை படு பொருள்கள், குறுக்க வினை, கரைசலாக்கம் ஆகியவற்றில் வேறுபட்ட பல பதனிடு பொருள்கள் தயாரிக்கப் பட்டுள்ளன. இச்செயற்கைப் பதன பொருள்களைத் தயாரிப்பதற்கு இரு பொது வழி முறைகள் உள்ளன; (அ) ஒரு ஃபீனாலிக் சேர்மத்தைச் சல்ஃபோனேற்றம் செய்து, பின்பு ஃபார்மால்டிஹைடுடன் குறுக்க வினையாக்கம் செய்தல். (ஆ) ஃபீனாலிக் சேர்மத்தை ஃபார்மால்டிஹைடுடன் குறுக்க வினைக்குட் படுத்தி, பெறப் படும் பொருளைச் சல்ஃபோனேற்றம் செய்தல், சல்ஃபோனேற்றம் செய்தல் என்பது. பதனிடு பொருளின் நீரில் கரையும் திறனைக் கூடுதலாக்கும் முறையாகும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> தொழிலக அளவில் தயாரிக்கப்படும் தொகுப்புப் பதனிடு பொருள்களுக்கு, தொடக்க வினைப்படு பொருள்களாக ஃபீனால்கள், கிரசால்கள், நாஃப்தால்கள், பிஸ்ஃபீனால்கள் ஆகியன பயனாகின்றன. ஃபீனால் சல்ஃபோனிக் அமிலங்களுடன், ஃபார்மால்டிஹைடைக் குறுக்க வினைப் படுத்தித் தோற்றுவிக்கப் படும் பதனிடு பொருள்களுக்குப் பதனிடு திறன் கூடுதலாகவுள்ளது. இட்டு நிரப்பும் பண்பு குறைவாக உள்ளமையால், இவை கனத்த தோல் தயாரிப்பில் பயிரினப் பதனிடு பொருள்களுக்கு மாற்றாகப் பயன் படுத்தத் தக்கவையல்ல. இக்குறையை நீக்கும் பொருட்டுச் சல்ஃபோனேற்றத்தை முழுமையாகச் செய்யாதிருத்தல் வழக்கம். பாலிஃபீனால்களுடன் ஃபார்மால்டிஹைடைக் குறுக்க வினை செய்து கிடைக்கும் பதனிடு பொருள்கள் சல்ஃபோனேற்றம் செய்யப் படாமலேயே, நீரில் கரைய வல்லவை; பதனிடு திறன், நிரப்பும் தன்மை ஆகியவற்றையும் கூடுதலாகக் கொண்டவை. ஃபார்மால்டிஹைடுடன் குறுக்க வினையூக்கம் செய்யும் அளவைக் கூடுத- லாக்குகையில் தொடக்கத்தில், பதனிடு திறன் கூடுதலாகி, பின்பு சரிகிறது. சல்ஃபோனேற்றத்தின் அளவு கூடுதலாக்கப் பட்டால், பதனிடு திறன் குறையக் கூடும். எனவே, பதனிடு பொருளின் நீரியக் கரை திறனை அறுதியிடும் அளவுக்கு மட்டுமே சல்ஃபோனேற்றம் நிகழ்த்தப் பட வேண்டும். சல்ஃபோனேற்றத்திற்குப் பிறகு ஃபார்மால்டிஹைடுடன் குறுக்க வினைப் படுத்தும் வழி முறையில் உருவாகும் செயற்கைப் பதனிடு பொருள்களிலுள்ள ஃபீனாலிக் தொகுதிகள் பதனிடு திறனைப் பாதிப்பதில்லை. –OH தொகுதிக்குப் பதிலாக –OCH₂ தொகுதியைக் கொண்ட பதனிடு பொருள்களும் பதனிடு திறனில் ஃபீனாலிக்குகளிலிருந்து வேறுபடுவதில்லை. மாறாக, ஃபார்மால்டிஹைடுடன், ஃபீனாலைக் குறுக்க வினை செய்து, பின்பு, சல்ஃபோனேற்றம் செய்து பெறப்பட்ட பதனிடு பொருள்களில் ஃபீனாலிக் தொகுதிகள் பதனிடு தன்மையைப் பாதிக்கின்றன. ஃபீனாலிக் தொகுதியை மெத்திலேற்றம் செய்தால், பதனிடு தன்மை அழிக்கப் படுகிறது. ஃபீனாலிக் தொகுதியின் அமிலத் தன்மையைக் கூடுதலாக்கிப் பதனிடு திறனை உயர்த்தலாம். எடுத்துக் காட்டாக, சல்ஃபோன் தொகுதியைப் புகுத்தி, பின்பு, ஃபார்மால்டிஹைடுடன் குறுக்க வினை நிகழ்த்தலாம்.சல்ஃபோனேற்றம் செய்யப்பட்ட சேர்மத்தையும், சல்ஃபோனேற்றத்திற்குட் படுத்தப் படாத சேர்மத்தையும் கலவையாக்கி, அக்கலவையை ஃபார்மால்டிஹைடுடன் குறுக்க வினைப் படுத்திப் பதனிடு பொருளைத் தொகுக்கலாம். பதனிடு திறன் ஃபீனாலிக் தொகுதிகள் எண்ணிக்கை, இருக்கை இரண்டையும் பொறுத்ததாகும். ஒரு மூலக் கூறுக்கு, ஓரிரு சல்ஃபோனேற்றமடையாத ஃபீனாலிக் வளையங்கள் இடம் பெற்றிருத்தல் பதனிடு திறனை உயர்த்த உதவும். அரோமாட்டிக் ஹைட்ராக்சி (செயற்கைப்) பதனிடு பொருள்களுடன், லிக்னின் சல்ஃபோனேட்டுகளைக் கலந்து, தயாரிக்கப்படும் கூட்டமைப்புகள் விலை குறைவாக இருப்பதுடன், பயிரினப் பதனிடு பொருள்களுக்கு முழுமையான பதிலீடாகவும் பயனாகின்றன. ஃபர்ஃபியூரால்–ரெசார்சினால் குறுக்க வினை விளைப் பொருளைத் தொடக்கமாகக் கொண்ட ஃபீனாலிக் அமைப்புகள் இவ்வகையில் சிறந்தவை ஆகும். டைஃபீனைல் சல்ஃபோன் வகைப் பதனிடு பொருள்கள் சாதாரண ஃபீனால் வகையைப் போன்று, நாளடைவில் பழுப்பு நிறமேற்பதில்லை. எனவே, வெள்ளை நிற மற்றும் வெளிர் நிறத் தோல் தயாரிப்பில் இப்பொருள் ஈடு படுத்தப் படுகிறது. ஃபார்மால்டிஹைடுக்குப் பதிலாக, யூரியா-ஃபார்மால்டிஹைடைப் பயன் படுத்தினால், ஒளி எதிர்ப்புத் திறன் கூடுதலாகக் கொண்ட பதனிடு சேர்மத்தைப் பெறலாம். யூரியா, மெலமீன், டைசயன்டைஅமைடு ஆகிய N–தொடர்புடைய செயற்கைப் பதனிடு பொருள்கள், ஃபீனாலிக் நாஃப்தலீன் வகைப் பொருள்களிலிருந்து பெருமளவு வேறுபட்டுள்ளன. மேற்கூறிய (நைட்ரஜன் கொண்ட) சேர்மங்களை ஃபார்மால்டிஹைடுடன் பகுதிப் பல்லுறுப்பாக்கம் (polymerisation) செய்து, தோலினுள் புகுத்தி, பின்பு, அமில வினையூக்கிகளைக் கொண்டு, பல்லுறுப்பாக்கத்தை முழுமையாக்க வேண்டும். குரோமியம் பதனிடப் பட்ட தோலை மீள் பதனிடல் செய்வதற்கு இது ஏற்ற முறையாகும். இலேசான, வெளிர் நிறங்கொண்ட தோல்களுக்கு ஸ்டைரீன்–மலியிக் நீரிலி வகை ஏற்றதாகும். ஓர் உலோக உப்பினால், தோலில் நிலை நிறுத்தப் படும் இப்பொருள் தோலின் நுண் துளைகளைச் செவ்வனே நிரப்புகிறது. நீரில் கரையா செயற்கைப் பதனிடு பொருள்கள். பதனிடு பொருளைப் பால்மமாக்கி, பின்பு தோலின் மீது ஏற்ற வேண்டும். நீருக்குப் பதிலாகக் கரிமக் கரைப்பானை அலிஃபாட்டிக் ஐசோசயனேட்டை பயன் படுத்தலாம். நீள் சங்கிலி அலிஃபாட்டிக் சல்ஃபோனைல் குளோரைடுகள் பால்ம வடிவத்தில் இடப் பட்டால், பதனிடு தன்மை பெறுவதும் அறியப் பட்டுள்ளது. சல்ஃபோனைல் குளோரைடுகள் தோலிலுள்ள காரத் தொகுதிகளுடன் வினைப் பட்டுச் சல்ஃபோனமைடு தொகுதிகளை உருவாக்குவதே பதனிடு செயலுக்கு அடிப்படையாகும். இரண்டாம் உலகப் பெரும் போரின் போது, தோன்றிய தோல் பதனிடு பொருள் பற்றாக் குறையை நீக்கும் பொருட்டு, ஜெர்மனியில் செயற்கைப் பதனிடு பொருள் தயாரிப்பு உத்திகளில் ஆய்வு நிகழ்த்தப் பட்டது. செயற்கைப் பதனிடு பொருள்கள் மூன்று நோக்கங்களுக்காகத் தயாரிக்கப் பட்டன. துணை நிலைச் செயற்கைப் பதனிடு பொருள்கள். இவை பயிரினச் செயற்கைப் பதனிடு பொருள்களுடன் சேர்ப்பதற்கு ஏற்றவை. கிரசால், நாஃப்தலீன், சல்ஃபோனிக் அமிலம் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்படும் இவை pH =1 கொண்டவை. பரிமாற்ற வகை. இவை பயிரின வகையைப் பதிலீடு செய்ய வல்லன. pH = 3 கொண்ட இவை ஃபீனால், டைஹைட்ராக்சி டைசல்ஃபோன் ஆகியவற்றை ஃபார்மால்டிஹைடுடன் குறுக்க வினைப் படுத்தி, பின்பு சல்ஃபோனேற்றம் செய்து பெறப் பட்டவை. உயர் வகை (supra). இவை வெண் தோல் போன்ற சிறப்பு வகைத் தோல் தயாரிப்புக்கானவை. டைஹைட்ராக்சி டைஃபீனைல் சல்ஃபோன், ஃபார்மால்டிஹைடு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப் படும் இப்பொருள் pH = 1.4 கொண்டது. மெட்டா டைஹைட்ரோபென்சீன், சல்ஃபோனைல் குளோ- ரைடை, பென்சிடீன் டைசல்ஃபோனிக் அமிலத்துடன் வினைப் படுத்தி, நைட்ரோ தொகுதிகளை அமினோ தொகுதிகளாக ஒடுக்கி, இறுதியாக 2,6 டைகுளோரோபென்சீன் சல்ஃபோனைல் குளோரைடுடன் குறுக்க வினைப் படுத்தி வெண் தோலைத் தயாரிக்கலாம். —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. J.M. Coulson and J.F. Richardson, Chemical Engineering, Third Edition, Pergamon Press, Oxford, 1978, செயற்கைப் பல் இயற்கையாகவோ, விபத்தாலோ விழுந்து விட்ட பற்களுக்குப் பதில், செயற்கையாகச் செய்யப்பட்ட பற்கள் அடங்கிய தொகுப்பைப் பொருத்தலாம். இது செயற்கைப் பல் தொகுப்பு (denture ) எனப் படுகிறது. செயற்கைப் பல் தொகுப்பை அணிந்து கொள்வதன் மூலம், ஒழுங்கான உச்சரிப்பு, உணவை அரைத்து உண்ணும் திறன், அழகு ஆகியவற்றை மீண்டும் பெறலாம். செயற்கைப் பல் தொகுப்பில் அனைத்துப் பல் தொகுப்பு, பகுதிப் பல் தொகுப்பு என இரு வகை உண்டு. முழுதுமாகப் பல் இழந்தவர்களுக்கும், வளர்ச்சிக் குறைபாட்டால் பல் உருவாகாத் தன்மை கொண்டவர்க்கும் தயாரிக்கப்படும் பல் தொகுப்புக்கு அனைத்துச் செயற்கைப் பல் தொகுப்பு என்று பெயர். ஓரிரு பற்கள் அல்லது சில பற்கள் இழந்தவர்க்கும், வளர்ச்சிக் குறைபாட்டால் ஓரிரு பற்கள் உருவாகாத் தன்மை கொண்டவர்க்கும் தயாரிக்கப்படும் பல் தொகுப்பு, பகுதிச் செயற்கைப் பல் தொகுப்பு எனப் படும். செயற்கைப் பல் தொகுப்புப் பொருத்தியவருக்குத் தொடக்கத்தில் பேசவும், உண்ணவும் கடினமாக இருக்கும். ஆனால், நாளடைவில் இது மறைந்து விடும். காலையில், செயற்கைப் பல் தொகுப்பைச் சோப்பு நீரில் தூய்மை செய்ய வேண்டும். —ஜே.ஜி. கண்ணப்பன் செயற்கை முறைக் கருவூட்டல் மகப் பேறின்மை நிலையைப் போக்கப் பெண்ணிற்குச் செய்யப்படும் மருத்துவ முறையைச் செயற்கை முறைக் கருவுறல் (artificial insemination) என்பர். சூலகத்திலிருந்து முட்டை வெளிப்படும் அன்று புணர்ந்து, விந்தணுக்கள் கருப் பையின் உட்சென்று முட்டையுடன் இணைவதையே பொலிவுறுதல் என்பர். இதைத் தொடர்ந்து சூல் உண்டாகிறது. ஆணின் விந்தணுவைப் பெறுவது மிக எளிது. ஆனால், அது பெண்ணின் முட்டையை அடைவது கடினமானது. அண்டநாள அடைப்பின் போது, சூலகத்தில் உள்ள முதிர்ந்த முட்டை கருப் பையை அடைய முடியாது. லாபராஸ்க்கோபியின் மூலம் முதிர்ந்த முட்டையை வெளியில் எடுத்து, ஆணின் விந்தணுவுடன் சேர்த்துப் பொலிவுறச் செய்வதையே ஆய்வகப் பொலிவுறல் (in-vitro fertilisation–IVF) என்பர். இதற்கு முன்னதாக, உரிய மருந்துகள் கொடுத்துப் பெண்ணிடமிருந்து குறைந்தது 8 முட்டைகளைப் பெற்று, விந்தணுவுடன் சேர்த்துப் பொலிவுறச் செய்கின்றனர். இங்கு பெட்ரி தட்டில் விந்தணுவையும், லாபராஸ்க்கோபி மூலம் எடுக்கப் பட்ட முட்டையையும், உடலியங்கியல் சார்ந்த சூழ்நிலையில் இணையச் செய்து கருவை உண்டாக்குகின்றனர். இதற்கு, அடைகாப்புக் கருவி பயன் படுகிறது. இதைக் கருப் பையில் பொதியச் செய்து கருச் சிசுவை வளரச் செய்யலாம். பின்னர் 10–15 நாள்களுக்குப் பிறகு செய்யப்படும் வேதி ஆய்வு மூலம் பொலிவுற்ற முட்டை, கருப் பையில் நன்கு பதிந்து விட்டதைத் தெரிந்து கொள்கின்றனர். பிற முறையில், பெண்ணின் சூலகத்திலிருந்து முட்டை இயல்பாக வெளிப் படுகிறது. ஆனால், வேறு பல காரணங்களால், விந்தணு அதை அடைய முடியவில்லை. இந்நிலையில், விந்தணுவை எடுத்துப் பீச்சுங் குழல் கொண்டு, கருப்பையின் கழுத்து வழியாக உட் செலுத்துகின்றனர். பின்னர், உள்ளே சென்ற விந்தணு, தன் விரைவான அசைவால், முட்டையை அடைந்து, அதைப் பொலிவுறச் செய்கிறது. இதை உடலின் உள் பொலிவுறல் என்பர். சில போது, தம்பதிகளில் எந்தக் குறைபாடும் இல்லாத போதும், விந்தணுவும், முட்டையும் கருப் பையின் சரியான இடத்தில் சந்திக்காமையால், பொலிவுறுவதில்லை. இந்நிலையில் முட்டையையும், விந்தணுவையும், செருகு குழல் மூலம் அண்ட நாளத்தினுள் செலுத்திப் பொலிவுறச் செய்யலாம். கருப் பொருளை அண்ட நாளத்தினுள் செலுத்தல் ( gamete intra fallopian transfer-GIFT) என இதைக் குறிப்பிடுவர். தெரிந்தெடுக்கப்படும் விந்தணு கணவனுடையதாக இருக்கலாம். கணவனுக்கு விந்தணுக் குறைபாடு அல்லது இல்லாத நிலை தோன்றும் போது, வேறு ஒருவரின் விந்தணுவைப் பயன் படுத்தலாம். தானமளிப்பவரின் விந்தணு கொண்டு பொலிவுறச் செய்வதைச் செயற்கை முறைக் கருவுறுதல் என்பர். செயற்கை முறைக் கருவுறுதலில், மேலும் பல ஆய்வுகள் நடை பெற்று வருகின்றன. உலகின் மிகச் சிறந்த மருத்துவ மையங்களில் கூட, செயற்கை முறைக் கருத்தரிப்பு 30% வெற்றியே பெறுகிறது. செயற்கை முறைகள் மூலம் கருத்தரிக்கா விடில், தம்பதிகளை மரபு நுட்ப அணு இயல் முறைப்படி ஆய்வு செய்திட வேண்டும். —சாரதா கதிரேசன் செயற்கை முறைக் கருவூட்டல் (கால்நடை) மாடு, ஆடு, நாய், குதிரை, கோழி போன்ற கால் நடைகளில் செயற்கை முறைக் கருவூட்டல் செய்யப் படுகிறது. செம்மறி ஆடுகளில், செயற்கை முறைக் கருவூட்டல் சோவியத் ஒன்றியக் குடியரசில் பெருமளவில் நடைபெறுகிறது. செயற்கைக் கருவூட்டலுக்கு விந்து சேகரித்தல். நோயற்ற பொலி காளையிலிருந்து வாரத்தில் மூன்று முறை விந்து சேகரிக்கலாம். ஒரு காளையிலிருந்து ஒரு முறை கிடைக்கும் விந்து ஏறக் குறைய, 3–5 மி.லி. இருக்கும். எருமை பொலி காளையிலிருந்து, சராசரியாக 2–3 மி.லிட்டரே கிடைக்கும். சேகரிக்கப் பட்ட விந்தை, விந்து கலக்கியுடன் சேர்த்து, 20 மடங்கு வரை விந்தின் அளவை அதிகரிக்கலாம். இவ்வாறு, விந்து கலக்கியுடன் கலந்து, விந்தைக் குளிர்ப் பாதுகாப்புப் பெட்டியில் வைத்திருக்க வேண்டும். விந்தை இரண்டு அல்லது மூன்று நாளுக்குள் பயன்படுத்த வேண்டும். நீர்ம நிலையில் கிடைக்கும் விந்தைப் பதப்படுத்தி, உறை விந்து (frozen semen) தயாரிக்கலாம். உறை விந்து பல்லாண்டுகளுக்குப் பாதுகாக்கப்பட்டுப் பயன் படுத்தப் படுகிறது. உறை விந்து 0.25 மி.லி. 0.5 மி.லி. 1.0 மி.லி. என்னும் அளவில் அதற்குரிய குழாய்களில் அடைக்கப்பட்டு, நீர்ம நிலையில் உள்ள நைட்ரஜன் நிரப்பப்பட்ட குடுவைகளில் வைத்துப் பாதுகாக்கப் படுகிறது. தேவையான காலத்தில் இதைப் பயன்படுத்தலாம். நன்மைகள். ஒரு நாளில் ஒரு முறை சேகரிக்கப் படும் விந்தை, விந்து கலக்கியுடன் கலந்த பின்பு, ஏறத் தாழ 100 மாடுகளுக்குச் செயற்கை இனப் பெருக்கம் செய்யலாம். ஆனால், பொலி காளை ஒன்றின் மூலம், ஓர் ஆண்டில் ஏறத் தாழ 100 மாடுகளில் மட்டுமே சினைப் படுத்தலாம். இயற்கை முறைக் கருத்தரித்தலில் பொலி காளையின் மூலம், நோய் பரவ வாய்ப்புள்ளது. ஆனால், செயற்கை முறைக் கருவூட்டலில், நோய் பரவ வாய்ப்பில்லை. உலகின் எந்த இடத்திலிருந்தும், பதப் படுத்திய உறை விந்தைப் பல பகுதிகளுக்கு எளிதில் கொண்டு சென்று, செயற்கை இனப் பெருக்கத்திற்குப் பயன் படுத்தலாம். பொலிகளை வைத்துப் பராமரிக்க வேண்டிய தேவையில்லை. செயற்கை முறைக் கருவூட்டலில் கவனிக்க வேண்டியவை. சினைப் பருவத்திற்கு வந்துள்ள கால் நடைகளைத் தக்க நேரத்தில் கண்டறிந்து, செயற்கை முறைக் கருவூட்டல் செய்வது மிகத் தேவை. சினை முன் பருவத்தில், செயற்கை முறைக் கருவூட்டல் செய்யாமல், சினை நடுப் பருவத்தில் கருவூட்டல் செய்ய வேண்டும். செயற்கை முறைக் கருவூட்டல் செய்த பின்னர், கருவறையிலிருந்து சளி போன்ற நீர்மம் தென்பட்டாலோ, நீர்மம் கசிந்தாலோ, மீண்டும் ஒரு முறை செயற்கை முறைக் கருவூட்டல் செய்ய வேண்டும். தரமுள்ள விந்தைச் செயற்கை முறைக் கருவூட்டலுக்குப் பயன் படுத்த வேண்டும். சில கலப்பின மாடுகளில் 4 அல்லது 5 ஆம் சினைப் பருவத்திலும், சினைப் பருவத்திற்கு வந்தது போல் அறிகுறிகள் தென்படும்; மற்றொரு மாட்டின் மேல் தாவும். இதைச் சினையில்லை என்று கருதிச் செயற்கை முறைக் கருவூட்டல் செய்யக் கூடாது, கால் நடை மருத்துவர் மூலம், இத்தகைய மாட்டைச் சினையாக உள்ளதா என்று ஆய்வு செய்து, சினையில்லை என்று நன்கு கண்டறிந்த பின்பே, செயற்கை முறைக் கருவூட்டல் செய்ய வேண்டும். ஏனெனில், சினையாக உள்ள கால் நடைகளில், செயற்கை முறைக் கருவூட்டல் செய்தால், உடனே கருச் சிதைவு ஏற்படும். செயற்கை முறைக் கருவூட்டலுக்கு, நீண்ட தொலைவு கால் நடைகளை நடத்திச் செல்லக் கூடாது. நீண்ட தொலைவு நடந்து செல்வதால், சோர்வுற்றுக் கருத்தரிக்கும் திறன் குறைந்து விடும். அவ்வாறு நடந்து செல்ல வேண்டியிருந்தால், செயற்கைக் கருவூட்டல் நிலையத்திற்குக் கொண்டு சென்று ஓய்வு கொடுத்து, பின்பு கருவூட்டல் செய்ய வேண்டும். செயற்கை முறைக் கருவூட்டலை, வெப்பம் மிகுந்த நேரத்தில் செய்யாமல், காலை அல்லது மாலையில் நிழல் தரும் இடத்தில் செய்வது நல்லது. மாடுகளில் சினைப் பருவக் காலங்களில், கருப் பையிலிருந்து வெளி வரும் நீர்மம், விளக்கெண்ணெய் போன்று இருக்கும். அவ்வாறன்றி, குருதி மஞ்சள் வெள்ளை நிறம் கலந்து வந்தால், கரு உறுப்புகளில் புண் ஏற்பட்டுள்ளது எனக் கொள்ளலாம். இப்போது, செயற்கை "முறைக் கருவூட்டல் செய்யாமல், கால் நடை மருத்துவர் மூலம் ஆய்வு செய்து, மருந்து கொடுத்து குணப் படுத்திய பின்னர், எவ்விதமான நிறமுமின்றி நீர்மம் வெளி வரும் சமயத்தில் தான், செயற்கை முறைக் கருவூட்டல் செய்ய வேண்டும். செயற்கை முறைக் கருவூட்டல் செய்தவுடன், வயிறு நிறைய தீவனமோ, நீரோ கொடுக்கக் கூடாது. ஏறக் குறைய 1 மணிக்குப் பின்பே, கொடுக்க வேண்டும். 2 அல்லது 3 முறைக்கு மேல் கருவூட்டல் செய்த பின்னரும், சினைப் பிடிக்கவில்லையெனில், கால்- நடை மருத்துவரிடம் காண்பித்துத் தகுந்த மருத்துவம் அளிக்க வேண்டும். —ந. மாரிமுத்து செயின்ட் லாரன்ஸ் வளைகுடா வட அமெரிக்கக் கடற்கரையில், மிகப் பெரிய வளைகுடாவான இது, அட்லாண்டிக் பெருங்கடலின் ஓர் ஆழ் பகுதியாகும். மெக்சிகோ வளைகுடாவை விடச் சற்றுச் சிறிய இதன், கிழக்கு எல்லையில் நியூஃபவுண்டுலாந்தும், தெற்கெல்லையில் நோவாஸ்காட்டியா, நியூபிரன்ஸ்விக் ஆகியவையும் உள்ளன. செயின்ட் லாரன்ஸ் வளைகுடா கிழக்குக் கனடாவுக்கும், வட அமெரிக்கப் பகுதிகளுக்கும், கப்பல் வணிகத்திற்குப் பெருமளவு பயன்படும். இவ்வளைகுடா செயின்ட் லாரன்ஸ் ஆறு, பெரிய ஏரிகள் ஆகியவற்றின் நீர் புகும் இடம் ஆகும். 1959 இல் ஆழப் படுத்தப் பட்ட செயின்ட் லாரன்ஸ் நீர் வழியே, மிகப் பெருங்கப்பல்கள் இங்கிருந்து பெரும் ஏரிகளின் இறுதிப் பகுதி வரை செல்கின்றன. வட அமெரிக்கப் பகுதியினர், அட்லாண்டிக் கடலைக் கடந்து வணிகம் செய்ய, இவ்வளைகுடா பெரிதும் உதவுகிறது. இது அட்லாண்டிக் பெருங் கடலுடன், கேபாட் நீர்ச் சந்தி, பெல்க் தீவுச் சந்தி இவற்றின் மூலமாக இணைந்துள்ளது. இவ்வளைகுடாவில் ஓதங்கள் (tides) தாழ்ந்த நிலையிலேயே இருந்தாலும், பல நாள் தொடர்ந்திருக்கும். அடர்த்தியான மூடு பனியும், மிதக்கும் பனிக் கட்டிகளும் கப்பல் பயணத்திற்கு ஏற்புடையன அல்ல. வளைகுடாவின் தென் முனையில் பிரின்ஸ் எட்வர்டு தீவும், லாரன்ஸ் ஆற்றின் கழிமுகம் அருகில், ஆன்டிகாஸ்டி தீவும் உள்ளன. தெற்கு, வடக்குக் கடற்கரையோரங்களில் பல சிறு தீவுகள் உள்ளன. செயின்ட் லாரன்ஸ் வளைகுடாவும், செயின்ட் லாரன்ஸ் ஆறும் 1535இல் ஜாக்ஸ் கார்ட்டியர் என்பாரால் கண்டுபிடிக்கப்பட்டன. —கே. கே. அருணாசலம் செர்ட் இது குவார்ட்ஸ் என்னும் கனிமத்தின் ஒரு வகையாகும். சால்சிடொனி, நுண் படிகக் குவார்ட்ஸ் முதலிய அமைப்பில் காணப்படும் அடர் நுண் படிகச் சிலிக்காப் பாறை செர்ட் (chert) எனப்படும். தற்போது, இதில் குவார்ட்ஸ் மிகுந்தளவும், சிலிக்கா அல்லது ஓபல் தூள்கள் இழைகளுக்கிடையே குறைந்தளவும் உள்ளமை அறியப் பட்டுள்ளது. மாசுகளைப் பொறுத்து, செர்ட்டின் நிறம் பலவாறாக வேறுபடுகிறது. செர்ட் பெரும்பாலும், வெளிர் நிறங்களில் காணப் படுகிறது. சங்கு முறிவிலிருந்து (conchoid fracture) சிராய் போன்ற முறிவு (splintery) வரை காணப்படுகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> ஃபிளிண்ட் என்னும் சொல், கலைப் பொருள்களைக் (artefact) குறிக்கப் பயன்பட்டாலும், செர்ட் என்னும் சொல்லே பாறைகளைக் குறிக்கப் பயன் படுகிறது. சைலெக்சைட், ஹார்ன்ஸ்டோன், ஃப்தானைட் (phthanite) முதலியவை செர்ட்டின் ஏனைய பெயர்களாகும். போர்செலினைட், அடர்ந்த கடினமான சிலிக்காப் பாறையாகும். இது களிமண் அல்லது சுண்ணப் பொருள்களாலான (argillaceous or calcareous) செர்ட்டாகும். நுண் படிகக் குவார்ட்ஸ் மிகுந்துள்ள நோவாகுலைட் ஒரு படுகைச் செர்ட்டாகும். உட்கூறுகள். கால மாற்றத்தைப் பொறுத்து, செர்ட்டின் உட்கூறுகள் மாறுபடுகின்றன. நிலத்திலும், ஆழ்கடலில் அகழ்ந்தெடுக்கப்பட்ட டெர்ஷியரி செர்ட்டுகளிலும் ஓபல் காணப் படுகிறது. ஆனால், பழமையான படுகைகளில் காணப்படுவதில்லை. பழமையான செர்ட்டுகளில், நுண் படிகக் குவார்ட்சும், சால்சிடொனியும் உள்ளன. கால்சைட், டோலமைட், களிமண் கனிமங்கள், தேய்ந்த குவார்ட்ஸ் முதலியவை செர்ட்டின் சிலிக்கா அற்ற உட்கூறுகளாகும். கிடைக்குமிடம். செர்ட் இரண்டு அமைப்பாகக் காணப் படுகிறது. படுகைகளாகவும், சுண்ணப் பாறை, டோலமைட் முதலியவற்றில் முடிச்சுகளாகவும் காணப்படுகிறது (படம் 1, 2). முடிச்சுகள், படுகைக்கு இணையாகத் தட்டையாகப் பல அளவுகளில் காணப் படுகின்றன. முடிச்சுகளில், தொல்லுயிர்ப் படிவுகள் பொதுவாகக் காணப் படுகின்றன. படுகைச் செர்ட்டுகள் 3மீ. தடிமன் வரை காணப் படுகின்றன. இவை அடுக்குகளாகவும் உள்ளன. இவ்வடுக்குகள், சிடரைட், ஹேமடைட், களிப் பாறை (shale) முதலிய படிவுகளால் பிரிக்கப் பட்டுள்ளன. முன்கேம்பிரியக் காலப் படுகைச் செர்ட்டுகளில், இரும்புத் தாதுப் படிவுகள் மிகுதியும் இணைந்து காணப் படுகின்றன. பழமையான முன்கேம்பிரியச் செர்ட்டுகளில் புவியிலுள்ள பழமையான உயிரிகளின் படிவங்கள் காணப் படுகின்றன. சில சொட்டுகள் முட்டை வடிவத்தில் (oolitic) உள்ளன. இவை சுண்ண மணிக் கற்களுக்குப் பதிலாக (calcareous oolite) உருவாகியுள்ளன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. செர்ட்டில் பொதுவாகக் கார்போனேட் உட்கூறுகள் காணப் படுகின்றன. ஆழ்கடலில் காணப்படும் செர்ட்டுகளில் மிகுந்த கவனம் செலுத்தப் படுகிறது. ஏனெனில், கல்லியம் சார்ந்த டெர்ஷியரி கால செர்ட்டுகள், ஆழ் கடலில் பரவலாகக் காணப் படுகின்றன. தற்போது, ஓஃப்பியோலைட் எனப் படும் பச்சைக் கல் வகை, ஆழ் கடலில் காணப்படும் செர்ட் மற்றும் களிமண்ணின் படிவுகள் என அறியப் பட்டுள்ளது. தோன்றுமிடம். செர்ட்டின் தோற்றத்தைப் பற்றி இரண்டு கோட்பாடுகள் கூறப் பட்டுள்ளன. அவை, மூலச் சுண்ணப் பொருள்களுக்குப் பதிலீடாக காணப் படுதல், சுற்றுச் சூழல் படிவு நீரிலிருந்து, சிலிக்கா வெளியேற்றம் முதலியவையாகும். —இரா, சரசவாணி நூலோதி. P. Ramdohr, The ore Minerals and their Intergrowths, Pergaman Press, Oxford, 1969. செர்ப்பென்டினைட் இது நுண்பரல் தன்மை மிக்க திண்ணிய பச்சை நிறமுள்ள மூலப் பாறையாகும், மூலத் தன்மை அல்லது அதிமூலத் தன்மையுள்ள பாறைகள் நீர்ம வெப்ப அல்லது நீராவி இயக்க மாற்றத்தால் மாற்றமடைந்து, செர்ப்பென்டினைட் (serpentinite) பாறைகளாகின்றன. இவ்வாறு பாறைகளைச் செர்ப்பென்டினைட் பாறைகளாக உருமாற்றும் இயக்கத்திற்குச் செர்ப்பென்டினாக்கம் என்று பெயர். பெரிடோடைட், சுண்ணாம்புப் பாறை மற்றும் டோலமைட் பாறைகள் செர்ப்பென்டினைட் ஆக்கமடைகின்றன. செர்ப்பென்டின் இயைபு 3Mg0–2SiO₂–2H₂O. செர்ப்பென்டினைட் பாறையில் பாறைக் கருத் திரளும் கனிமங்களும் செர்ப்பென்டினாக இருக்கும். எனவே, இது ஒரு தனிமப் பாறை வகையைச் சார்ந்தது. கனிமமும், பாறையும் ஒரே வேதி இயைபை கொண்டவை. செர்ப்பென்டின் கனிமம், செர்ப்பென்டினைட் பாறையிலிருந்து சிறிது வேறுபட்டுக் காணப் படுகிறது. பாறையில் செர்ப்பன்டின் கனிமம் தனித்த முழுப் படிக உருவுடன் காணப்படுவதில்லை. செர்ப்பன்டின் பரல்கள் பாறையில் காணப் படும் போது, அவை அரைகுறையாக மாற்றமடைந்த முந்தைய பாறைக் கனிமத்தின் மாற்றமடையாத கனிம விளிம்புகளுடன் (போலிக் கனிம உருவங்களுடன்) காணப் படும். ஆலிவின் கனிமங்கள் பொதுவாகச் செர்ப்பெண்டினாக மாறுவதால், செர்பென்டினில் அரை குறை மாற்றமடைந்த ஆலிவின் உருவங்கள் தென்படும். சில சமயங்களில், ஆம்பிபோல்களும், பைராக்சினும், ஏனைய மக்னீசியம் நிறைந்த கனிமங்களும், செர்ப்பென்டினாக மாற்றமடையும். செர்ப்பென்டின் கனிமங்கள் ஒற்றைச் சரிவுடைய படிகத் தொகுதியைச் சேர்ந்தவை. அடர்த்தி 2.55; கடினத் தன்மை 2.5. ஒளி விலகல் எண்கள் 1.53–1.57 வரை வேறுபடும். இரட்டைக் கதிர் விலக்கம் 0.004–0.015 வரை வேறு படும். இக்கனிமங்கள் பச்சை, மஞ்சள், வெள்ளை நிறங்களில் உள்ளன. இக்கனிமத்தின் சீவல், நிறமற்ற தன்மையிலிருந்து பச்சை நிறம் வரை வேறுபடும். திண்ணிய செர்ப்பென்டினைட்டுகள் அடுக்குகளாகவும், நுழைவுப் பாறைகளாகவும், தூய செர்ப்பென்டினைக் கொண்ட ஒடுக்கமான திண்டுகளாகவும், படிகத் தன்மை வாய்ந்த படலப் பாறைகளில் காணப் படும். பெரும்பாலான செர்ப்பென்டினைட்டுகள், குறைந்த வெப்ப நிலை உரு மாற்றத்தால் உண்டாகின்றன. மலைத் தொடர்களிலுள்ள பெரிடோடைட், டூனைட் போன்ற ஆலிவின் கனிமம் நிறைந்த பாறைகள், நீர்ம. வெப்ப உரு மாற்றமடைவதால், செர்ப்பென்டினைட்டுப் பாறைகள் உண்டாகின்றன. மலைத் தோற்ற இயக்கங்களால் உண்டான ஸ்பிலிடிக் ஊடுருவல் பாறைகள்,, பெரிடோடைட், செர்ப்பென்டினைட்டுப் பாறைகள் ஆகியவை ஒஃபியோலைட்டுகள் எனப்படும். மலைத் தோற்ற இயக்கப் பகுதிகளில் ஒஃபியோலைட்டுப் பாறைகள் மிகவும் தொன்மையான பாறைக் குழம்பின் ஊடுருவல் இயக்கத்தைச் சார்ந்தவை என்று கருதப் படுகிறது. ஆல்பைன் பெரிடோடைட்–செர்ப்பென்டினைட்–ஒஃபியோலைட்டுப் பாறைகள் ஆழ்கடற் புவியோட்டில் உண்டானவை என்று கருதப் படுகிறது. அப்பகுதிகளுக்குள், கீழாக இருக்கும் புவியின் புறக் கரு மண்டலத்தின் மேற்பகுதியில் ஒரு சிறு பகுதி உருகி, உருகிய குழம்பு மேலே உள்ள பாறைகளில், புவி இயக்க அசைவுகளால் ஊடுருவி, ஒஃபியோலைட்டுகள் தோன்றியுள்ளன என்று கூறப் படுகிறது. இப்பாறைகள் பெரும்பாலும் உந்து விசைப் பிளவுத் தளங்களில் அமைந்து எரிமலை இயக்கங்களின் அடிப்படையாக உள்ளன. குறைந்த அழுத்த நிலையில் மக்னீசியம் நிறைந்த போர்சுரைட் ஆலிவின் நீராவியுடன் கூடியிருக்கும் போது 400°C வெப்ப நிலைக்குக் கீழாக ஆலிவின், செர்ப்பென்டைன், புரூசைட்டாக மாற்றமடைகிறது. ஆனால், இருப்பு நிறைந்த ஆலிவின் இவ்வாறு குறைந்த வெப்ப நிலையில் மாற்றமடைவதில்லை. போர்சுரைட்டைப் போல எளிதாகச் செர்ப்பென்டைனாக மாறுவதும் இல்லை. பெரும்பாலான பாறைகளில் அரை குறையாக மாற்றமடைந்த ஆலிவின் உருவைக் கொண்ட (போலி உருவங்கள்) செர்ப்பென்டைன்கள் காணப் படுகின்றன. செர்ப்பன்டைன் கனிமங்களில் காணப் படும் ஆலிலின் உருவச் சுவடுகள், ஒரு வித வலை போன்ற பின்னலை உருவாக்குகின்றன. வேறு சில பாறைகளில், பச்சை நிறமுள்ள நார்த் தன்மை கொண்ட கிரிசோடைல் கனிமங்கள் உண்டாகின்றன. சில பாறைகளில், தகடுகளான ஆன்டிகோரைட் செர்ப்பென்டைன் கனிமங்கள் இழுவை, அழுத்த விசையால் தோன்றுகின்றன. சில சமயங்களில், ஆன்டிகோரைட் தகடுகள் நார்க் கட்டுகளாகப் பல வேறுபட்ட நிலைகளில் அமைந்திருக்கும். செர்ப்பென்டினாக்கத்தால் உண்டான செர்ப்பென்டைன் கனிமங்கள், அவற்றின் படிகத் தன்மையின் அளவைப் பொறுத்து, இலிசார்டைட்டு ஆன்டிகோரைட் எனப் பெயர் பெறுகிறது. கிரிசோடைல் கல் நார்களை உடைய பாறைக் கருத் திரள் பகுதிகள், செர்ப்பென்டினைட்டுப் பாறைகள் உண்டாகும் போதே, உருவாகின்றன அல்லது பாறைகள் உண்டான பின், பாறையில் காணப்படும் வெடிப்பு மற்றும் விரிசல் தளங்களில் சுழற்சியுறும் நீர்ம வெப்ப நீர்மங்களிலிருந்து படிந்து உருவாகின்றன. பாறைக் கருத் திரளிலும், விரிசல் தளங்களிலும், நார் போன்ற கிரிசோடைல் உட்புறமாகக் குழாய் போன்று வளர்கிறது. நார் போன்ற செர்பென்டைன் கனிமங்களே, கிரிசோடைல் கல் நார் எனப் படும். இக்கல் நாரில் 95% விற்பனைக்கு அனுப்பப் பட்டுப் பல தொழில் துறைகளிலும் பயன் படுகிறது. இதன் தகைவு வலிமை மிகுதியானதால், இது நெய்யப் பட்டுக் கல் நார்ப்பொருள்கள் தயாரிக்கப் படுகின்றன. தகடுகள் போன்ற ஆன்டிகோரைட் விலை குறைந்தது. செர்பென்டினைட்டுப் பாறைகளைச் சீவல்களாகவும், பலகைகளாகவும், எளிதாக அறுத்து, மெருகேற்றி, விலை மதிப்புள்ள கற்களாகப் பயன் படுத்துகின்றனர்; சுவர்களில் பதிக்கின்றனர். கிரிசோடைல் கல் நார் ஆந்திரத்தில் கடப்பை மாவட்டத்தில், புலிவெண்டுலா வட்டத்தில் மிகுதியாகக் கிடைக்கிறது. இப்பகுதியில் 15000 மீ. நீளமும் 1–3 மீ. உயரமுடை ய செர்பென்டைன் நிறைந்த மக்னீசிய சுண்ணாம்புக் கற்கள் உள்ளன. இவற்றில், கிரிசோடைல் கனிமப் பொருள் உள்ளமை அறியப் பட்டுள்ளது. மிகப் பெரிய அளவு கிரிசோடைல் கனிமத்தைக் கொண்ட அதி மூலப் பாறைகள் குபெக்கிலுள்ள தெட்போர்டு பகுதியிலும், தென் ஆஃப்ரிக்கா, சோவியத் ஒன்றியக் குடியரசு ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றன. —இரா. இராமசாமி நூலோதி. A.N. Winchell and H. Winchell, Elements of Optical Mineralogy, Wiley Eastern Private Ltd, New Delhi, 1968. செர்ப்பென்டைன் இது ஒரு சிலிக்கேட் கனிமம். இக்கனிமம் நீர் கலந்த மெக்னீசியம் சிலிக்கேட் [Mg₆(OH)₈(Si₄O10)] ஆகும். இதில் சிறிதளவு இரும்பு இருக்கக் கூடும். சில சமயங்களில், நிக்கல் மிகக் குறைந்த அளவில் காணப் படும். பாம்பு போல் நீண்டு வளைந்த தாரைகளாகக் கிடைப்பதால், இக் கனிமம் செர்ப்பன்டைன் என்னும் பெயர் பெற்றது. செர்ப்பன்டைன் ஒற்றைச் சரிவுத் தொகுதியைச் சேர்ந்தது. இது செதில்கள், ஏடுகள் அல்லது இழைகளாகக் காணப் படும். இதன் ஏடுகளையும், இழைகளையும் எளிதில் பிரிக்கலாம். இக்கனிமம் திண்மங்களாகவும், நுண் துகள்களாகவும், தொடக்க நிலைப் படிகங்களாகவும், பலகைகளாகவும் காணப் படும். செர்ப்பன்டைன் கனிமத்தில் (010) கனிமப் பிளவு தெளிவாகக் காணப் படும். பட்டகப் பக்கத்திற்கு இணையான கனிமப் பிளவுகள் சிலவற்றில் உள்ளன. இதில் சங்கு முறிவு அல்லது முள் குச்சி முறிவு காணப் படும். இது வழவழப்பாக இருக்கும். இதில் குறை அரக்கு மிளிர்வு, நெய் மிளிர்வு, முத்து மிளிர்வு, (மங்கிய) மண் மிளிர்வு அல்லது மெழுகு மிளிர்வு காணப் படும். இழை போன்றவை பட்டு மிளிர்வுடையன. இதன் கடினத் தன்மை 2.5–5,0; ஒப்படர்த்தி 2.50–2.65; செர்ப்பன்டைன் பாசிப் பச்சை, சருகு நிறம் கலந்த பச்சை, அழுக்குப் பச்சை, சருகு நிறம் கலந்த சிவப்பு (கருஞ்சிவப்பு), சருகு நிறம் கலந்த மஞ்சள் அல்லது வெளிறிய நிறத்தில் காணப் படும். இதன் தூள் நிறம் வெண்மையாக இருக்கும். இக்கனிமம் சற்றுப் பளபளப்பான தோற்றம் உடையது. இது ஒளி கசியும் அல்லது ஒளி புகாத் தன்மை உடையது. செர்ப்பன்டைன் கனிமத்தில் பல வகைகள் உள்ளன. கிரைசோடைல், இழைகளாக இருக்கும். லிசார்டைட், மெல்லிய ஏடுகளைப் போன்றது. ஆண்டிகோரைட் என்னும் வகை, தகடுகளைப் போன்று இருக்கும். போவினைட், ரிக்கோலைட், மர்மோலைட், பிக்கோரெய்ட் முதலியனவும் செர்ப்பன்டைன் கனிம வகைகளாகும். செர்ப்பன்டைனில் அதிர்வுத் திசை நிற மாற்றம் மிகவும் குறைவாகக் காணப் படும். இது எதிர் மறை ஒளிக் குறி உடையது. சோடைல் நேர் ஒளிக் குறி உடையது. இரண்டு ஒளி அச்சுகளைக் கொண்டது. இதன் ஒளி அச்சுத் தளம் (100) தளத்திற்கு இணையாக உள்ளது. இதில் X–அதிர்வுத் திசை (010) கனிமப் பிளவின் தளத்திற்குச் செங்குத்தாக உள்ளது. இதன் ஒளி அச்சுகளுக்கு இடையேயான கோணம் (2V) 20°–90°. இக்கனிமத்தின் ஒளி விலகல் எண்கள் 1.490–1.571 வரை மாறு படுகின்றன. செர்ப்பன்டைன் பாறைகளாகக் கிடைக்கிறது. இது டூனைட், பைராக்சினைட் முதலிய (SiO₃ மிகக் குறைந்த) மிகு கார அனற் பாறைகளிலிருந்து வெப்ப நீர் மாற்றமடைவதால் உண்டாகிறது. ஆம்பிபோல், பைராக்சின், கிரைசோலைட் முதலிய கனிமங்கள் மாற்றமடைந்து, செர்ப்பன்டைனாகின்றன. டோலமைட், சுண்ணப் பாறை முதலியன வெப்பத்தினால் உருமாறியப் பாறைகளாக மாறி, செர்ப்பன்டைன் உள்ள பாறைகளாகின்றன. இப்பாறை, ஒஃபிகால்சைட், டோலமைட், குரோமைட் ஆகிய கனிமங்களுடன் சேர்ந்திருக்கும். செர்ப்பன்டைன் இங்கிலாந்து, அமெரிக்கா, கிரீஸ், இத்தாலி, இந்தியா ஆகிய நாடுகளில் கிடைக்கின்றது. இதன் வகைகளில் ஒன்றான பளபளப்பான கிரைசோடைல் அணிகலக் கற்களாகப் பயன் படுகிறது. இது கல் நாராகக் காணப் படுகின்றது. —இல, வைத்திலிங்கம் செர்மெட் பீங்கான், உலோகம் இவற்றின் முழுமையான கலவையால் உருவாகும் பல்வேறு கலவைப் பொருள்கள் செர்மெட்டுகள் (cermets) எனப் படுகின்றன. கட்டமைப்பு (fabrication). உலோகப் பொருள், பீங்கான் பொருள் இவற்றைப் பொடியாக்கி, நன்றாகக் கலந்து, அழுத்தத்தின் மூலம் வடிவம் கொடுத்துப் பின்னர், சிட்டங்கட்டிப் போதல் மூலம் செர்மெட் உருவாக்கப் படுகிறது. ஓர் அடிப்படை உலோகமும், அதனை விடத் தூய்மையான (noble) பிறிதோர் உலோகமும் உள்ள நீர்த்த கரைசலின் உள்ளார்ந்த ஆக்சினேற்றத்தின் மூலமும், செர்மெட் உருவாகலாம். ஆக்சிஜனேற்றச் சூழலில் சூடாக்கப் படும் போது, தூய உலோகத்தின் நடு நடுவே அடிப்படை உலோகத்தின் ஆக்சைடுகள் தோன்றிப் பரவுகின்றன. பீங்கான் என்பது உலோக ஆக்சைடு, போரைடு, சிலிசைட், நைட்ரைட் போன்ற ஏதேனும் ஒன்றாகவோ, பலவற்றின் கலவையாகவோ இருக்கலாம். செர்மெட்டின் பயன்பாட்டைப் பொறுத்து, தேவை- யான உலோகம் தேர்ந்து எடுக்கப்படுகிறது. சில வகைச் செர்மெட்களும் அவற்றின் தனிமக் கூறுகளும் அட்டவணையில் தரப் பட்டுள்ளன. டைட்டேனியம் போரைடு இரும்பு, நிக்கல், கோபால்ட் <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> கலவையின் போது, நிகழும் வேதியியல் மாற்றத்தைப் பின் வரும் வகைகளாகப் பிரிக்கலாம். ஒத்த தன்மையற்ற கலவையில், பீங்கான் பொருளுக்கும், உலோகப் பொருளுக்கும் இடையே வேதியியல் மாற்றம் நிகழ்வதில்லை. புதிய பொருள் உருவாகாமல், எந்திரவியல் முறைப்படி பீங்கானுக்கும், உலோகத்துக்கும் இடையே ஒரு பிடிப்பு மட்டும் ஏற்படுகிறது. எ-டு: MgO-Ni கலவை பரப்பில் மட்டும் இரு பொருள்களும் இணைந்து, இரண்டிலும் கரையாத ஏதேனும் புதுப் பொருளை உருவாக்குகின்றன. எ-டு: Al₂O₃–Be கலவை. முழுமையாக ஒன்றில் மற்றொன்று கரைந்து ஒரு புதிய திண்ம நிலைக் கரைசலை உருவாக்கலாம். எ-டு: TiC–Ni கலவை மணி வரம்புகளில் மட்டும் மாற்றம் நிகழலாம். எ-டு: Al₂O₃– MO கலவை கட்டுமானத்தின் தன்மை. கட்டுமானம் என்பது பீங்கான் பொருளும், உலோகப் பொருளும் ஒன்றை ஒன்று பற்றி வலிமையேற்கும் விதத்தைக் குறிக்கிறது. இது பரப்பு வேதியியல் மாற்றத்தினாலோ, முழுமையான வேதியியல் மாற்றத்தினாலோ நிகழலாம். உலோகம் மற்றும் பீங்கானின் கலவையினால் உருவாவதால், செர்மெட்டுகள் மிகு வலிமை உடையனவாகவும் உயர் வெப்பத்திலும் செயல் படக் கூடியவையாகவும், மிகு தேய்வு எதிர்ப்பு உடையனவாகவும், அரிப்பு எதிர்ப்பு உடையனவாகவும் உள்ளன. பயன்பாடு. உராய்வுப் பகுதிகள், துளைக் கருவிகள், வெட்டுக் கருவிகள் ஆகியவற்றின் தயாரிப்பில் செர்மெட்டுகள் பயன்படுகின்றன. அணு மின் நிலையங்களில் பயன்படும் சில பொருள்களும் செர்மெட்டுகளால் ஆனவை. இழை வலிவூட்டல் (fibre reinforcement). இவ்வகைச் செர்மெட்டுகளில் பீங்கான் பொருள்களுக்கு உலோக இழைகளின் மூலம் வலிவூட்டி மின் கடத்துந் தன்மையை உயர்த்தலாம். அல்லது உலோகப் பொருளின் உள் பீங்கான் இழைகளைப் பொருத்தி, உயர் வெப்ப நிலையில் செயல் படத் தேவையான தகுதியை ஊட்டலாம். இந்த இழைகள் ஏறக் குறைய (0.5–2.5) 10-6 மி.மீ. நுண்ணளவு வரை விட்டம் உள்ள சிறு கம்பிகள் ஆகும். —வயி. அண்ணாமலை —வி. சண்முகசுந்தரம் நூலோதி. J.C. Kuriacose and J.Rajaram, Chemistry in Engineering and Technology, Tata McGraw-Hill Publishing Co. Ltd, New Delhi, 1984. செரங்கோவ் கதிர் வீச்சு ஓர் ஒளி கடத்தும், ஆனால், மின் கடத்தாத திண்ம நிலை ஊடகத்தின் வழியாக ஒளி செல்லக் கூடிய திசை வேகத்தைவிட அதிகமான திசை வேகத்துடன் ஒரு மின்னேற்றிய துகள் பயணம் செய்யுமானால், அத்துகளிலிருந்து ஒளிக் கதிர்கள் வெளிப்படும். இதற்குச் செரங்கோவ் கதிர் வீச்சு (Cerenkov radiation) என்று பெயர். ஓர் அணு உலையில், செயலுறு எரி பொருள் உறுப்புகளுக்கு அருகில் உள்ள நீரில், ஒரு நீல நிறப் பொலிவு தென்படும். அது இந்தச் செரங்கோவ் கதிர் வீச்சினால் ஏற்படுவதாகும். ஒரு துப்பாக்கிக் குண்டு அல்லது ஏவுகணை காற்றின் வழியாக ஒலியை விஞ்சும் வேகத்துடன் பாயும் போது, ஓர் அதிர்ச்சி அலை தோன்றும். செரங்கோவ் கதிர் வீச்சு அதற்கு ஒப்பான ஒரு நிகழ்வேயாகும். இரு நிகழ்வுகளிலும் ஊடகத்தின் வழியாகப் பயணம் செய்யும் பொருளின் திசை வேகம், அதன் விளைவாக ஊடகத்தில் தூண்டி விடப் படும் அலைக் குழப்பத்தின் திசை வேகத்தை விட மிகுதியாக உள்ளது. இந்நிகழ்வைப் பற்றி 1934ஆம் ஆண்டில் செரங்கோவ் ஊகித்து, முன்னறிவிப்புச் செய்தார். பின்னர் பிராங்க், டாம் ஆகியோர் கொள்கை அடிப்படையில் உறுதிப் படுத்தினர். இவ்விளைவு உயர் வேகத் துகள்கள் உள்ளமையைக் காட்டும் குறியீடாகவும், அத்தகைய துகள்களின் ஆற்றலை அளக்க உதவும் கருவிகளிலும் பயன் படுகிறது. செரங்கோவின் கதிர் வீச்சு, துகளின் பயணத் திசைக்கு ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வெளிப்படுகிறது. அக்கோணம் θ எனில் Cosθ = c/nν இங்கு c என்பது ஒளியின் திசை வேகம்; ν என்பது துகளின் திசை வேகம்; n என்பது ஊடகத்தின் ஒளி விலகல் எண். துகளின் பயணக் கோட்டைச் சுற்றி அமைந்த ஒரு கூம்பு வடிவத்தில், இக்கதிர் வீச்சு வெளிப் படுகிறது. அந்தக் கூம்பின் கோணம் θ ஆக இருக்கும். அந்தக் கோணத்தை அளவிட்டுத் துகளின் பயணத் திசை வேகத்தைக் கணக்கிட்டு விடலாம். மேற்காணும் சமன்பாட்டில் Cosθக்கு மெய்யான மதிப்புகளைத் தரக் கூடிய வகையில் n பெரிதாக அமைகிற அனைத்து அதிர்வெண்கள் உள்ள அலைக் கதிர்களும் செரங்கோவ் கதிர் வீச்சில் அடங்கியிருக்கும். செரங்கோவ் எண்ணிகள். செரங்கோவ் கதிர் வீச்சைப் பயன்படுத்துகிற துகள் துலக்கிகள் செரங்கோவ் எண்ணிகள் எனப்படும். ஒளியின் திசை வேகத்திற்கு நெருங்கிய திசை வேகம் கொண்ட துகள்களைக் கண்டு பிடிப்பதில், இவை உதவுகின்றன. பெரிய துகள் முடுக்கிகளிலும், காஸ்மிக் கதிர்களிலும் இத்தகைய துகள்கள் தோன்றுகின்றன. செரங்கோவ் கதிர் வீச்சின் பொலிவை அதிகமாக்க, ஒளிப் பெருக்கிக் குழல்கள் பயன் படுகின்றன. ஏறத் தாழ 10-10 நொடி அகலமுள்ள துடிப்புகளை இந்த எண்ணிகள் வெளியிடக் கூடியவை. எனவே, மிகக் குறுகிய கால இடை வெளிகள் அளக்கப் பட வேண்டிய பயண நேர அளவீடுகளில் இந்த எண்ணிகள் பயன் படுகின்றன. துகள்களின் திசை வேகங்களை நேரடியாகக் கணக்கிடவும் இக்கருவிகள் உதவும். கண்ணாடி, நீர், நிறமற்ற நெகிழிகள் போன்ற மின் கடவா ஊடகங்கள் செரங்கோவ் எண்ணிகளில் பயன் படுகின்றன. துகளின் திசை வேகத்தைப் பொறுத்து, ஊடகங்கள் தேர்வு செய்யப் படுகின்றன. ஏனெனில், வெவ்வேறு ஊடகங்களுக்கு ஒளி விலகல் எண் வெவ்வேறாக உள்ளது. ஒன்றன் பின் ஒன்றாக அமைந்த இரண்டு செரங்கோவ் எண்ணி களை ஒத்தியல்கிற முறையில், இணைத்துத் தக்கவாறு தேர்வு செய்யப்பட்ட மின் கடவா ஊஊடகத்தைப் பயன் படுத்தினால் இக்கருவி அமைப்பு, துகள்களின் ஒரு குறிப்பிட்ட திசை வேக நெடுக்கத்தை அளக்கக் கூடியதாக அமையும். துலக்கிகள் குவியப் படுத்தக் கூடிய வகையாகவும், குவியப் படுத்த இயலாத வகையாகவும் உள்ளன. குவியப் படுத்த இயலாத வகையில், மின் கடவா ஊடகத்தைச் சுற்றி ஓர் ஒளியை எதிரொளிக்கிற பொருள் அமைக்கப்பட்டிருக்கும். ஒளிப் பெருக்கிக் குழாய்கள் இணைக்கப் பட்டுள்ள இடத்தில் மட்டும் ஓர் இடைவெளி விடப் பட்டிருக்கும். வெளிப் படும் ஒளியின் திசையைப் பற்றிய பண்புகள் பயன் படுத்தப் படுவதில்லை. குவியப் படுத்தும் வகைக் கருவிகளில் வில்லைகளையும், ஆடிகளையும் கொண்டு ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வெளிப் படும் ஒளியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிகிறது. இதன் மூலம், துகளின் திசை வேகத்தைப் பற்றிய தகவல்களைப் பெறலாம். செரங்கோவ் எண்ணிகளை, விகித எண்ணிகளாகவும் பயன்படுத்தலாம். ஏனெனில், வெளிப்படும் ஒளிக் கற்றையிலுள்ள ஃபோட்டான்களின் எண்ணிக்கையைஊடகத்தின் பண்புகள், அளக்கப்படும் ஒளியின் அதிர்வெண் இடைவெளி, ஒளி வெளிப்படும் கோணம் ஆகியவற்றின் சார்பெண்ணாகக் கணக்கிட முடியும். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட பரிமாணமுள்ள துடிப்பில் அடங்கியுள்ள ஃபோட்டான்களின் எண்ணிக்கையிலிருந்து, துகளின் திசை வேகத்தைப் பற்றிய தகவல்களை அறிய முடியும். —கே. என். ராமச்சந்திரன் செரிமானம் உணவு, வாய் மூலம் உணவுக் குழல், இரைப்பை, சிறு குடல் ஆகியவற்றை அடையும் போது, நிகழும் பல மாற்றங்களைச் செரிமானம் எனலாம். இதன் மூலம், மனிதனின் இன்றியமையாத தேவைகளுக்கு வேண்டிய ஊட்டப் பொருள்கள் செரிமான மண்டலத்தில் உள்ளேற்கப் படுகின்றன. வாயில் சுரக்கும் டயலின் என்னும் அமைலேஸ் ஓரளவு உணவைக் கூழாக்குவதில் உதவுகிறது. அயனிகள் (ஹைட்ரஜன், குளோரைடு, சோடியம், பொட்டாசியம்) நீர், பெர்சினோஜன், சீதம், ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஆகியன இரைப்பையில் உள்ள ஆக்சிண்டிக் செல்களால் சுரக்கப் படுகின்றன. பெப்சினோஜன்கள், இரைப்பையின் பல பகுதிகளிலிருந்து சுரக்கின்றன. தவிர, சோடியம் பைகார்பனேட், கேஸ்டிரின் எனப்படும் ஹார்மோன், ஹிஸ்டமின் ஆகியவையும் இரைப்பையினுள் சுரக்கின்றன. இம்யூனோபுலின் Aஉம் சுரக்கிறது. இவை அனைத்தும் உணவுச் செரிமானத்தில் பங்கேற்கின்றன. செரிமானமும், உள்ளேற்பும் சிக்கலான நிகழ்வுகளாகும். இரைப்பை, சிறு குடல், பெருங் குடல் ஆகியவற்றில் நடைபெறும் நிகழ்வுகள், மனிதனில் மிகவும் சிறப்பாகவும், ஒருங்கிணைந்தும் நடை பெறுகின்றன. சாதாரணமாக, ஊட்டச் சத்து உணவில் சராசரி 100 கி. கொழுப்பும், 400 கி. கார்போஹைட்ரேட்டும், 100 கி. புரதமும், 1½–2 லி. நீரும் உள்ளன. உணவில், தேவையான அளவு சோடியம், குளோரைடு, பொட்டாசியம், கால்சியம் ஆகிய கனிமங்கள், வைட்டமின்கள் முதலானவை உள்ளன. மேலும், உட்புற நீர்மங்களான பித்த நீர், இரைப்பை நீர், கணைய நீர் ஆகிய ஏறத் தாழ 7 லி. நீர்மம் குடலினுள் செல்லும். இவற்றில் அயனின், புரதம், கொலஸ்ட்ரால், பாஸ்ஃபோலிப்பிட், பித்த உப்பு முதலியன காணப் படுகின்றன. மேற்கூறிய அனைத்தும் 200 கிராம் மலமாக வெளிச் செல்கின்றன. இதில் 2–6 கி. கொழுப்பு, 1–2 கி. நைட்ரஜன், சோடியம், பொட்டாசியம், குளோரைடு, பைகார்பனேட் ஆகியவை காணப் படுகின்றன. உணவின் கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் ஆகியன முன் சிறு குடலிலும், நடுச் சிறு குடலிலும், செரிமானமடைந்து உள்ளேற்கப்படுகின்றன. கால்சியம், இரும்பு, ஃபோலிக் அமிலம் ஆகியன சிறு குடலில் உள்ளேற்கப்படுகின்றன. பெரும்பாலான பித்த உப்புகளும், வைட்டமின் B12உம், கடைச் சிறு குடலில் உள்ளேற்கப்படுகின்றன. நீர் மற்றும் சோடியம் குளோரைடு, பைகார்பனேட் ஆகியன பெருங் குடலில் உள்ளேற்கப்படுகின்றன. குளூக்கோஸ், காலக்டோஸ், அமினோ அமிலங்கள், மோனோ, டைபெப்டைடுகள், சோடியம் குளோரைடு, சோடியம் பைகார்பனேட், இரும்பு, வைட்டமின் B12, கால்சியம் முதலியன முனைப்புடன் உள்ளேற்கப்படுகின்றன. கொழுப்பு அமிலங்கள், மோனோ கிளிசரைடு, லைசோபாஸ்ஃபோலிப்பிடுகள், கொலஸ்ட்ரால், வைட்டமின் A, D, E, K. பொட்டாசியம், நீர், ஃபிரக்டோஸ் முதலியன பரவலாக உள்ளேற்கப்படுகின்றன. —மு.கி. பழநியப்பன் நூலோதி. Jay H. Stein, Internal Medicine, First Edition, Little Brown and Co., Boston, 1983. செரின் இது ஓர் அமினோ அமிலம், பெர் அயோடேட்டுடன் வினை புரிந்து, கிளையாக்சலேட், அம்மோனியா, ஃபார்மால்டிஹைடு ஆகியவற்றைக் கொடுக்கிறது. கிளைசீன், சிட்ஸ்டைன், கோலின் போன்ற பல முக்கிய ஆக்கச் சிதை மாற்றப் பொருள்களின் (metabolites) உயிர் வேதித் தொகுப்பு முன்னோடியாக (biosynthetic precursor) உள்ளது. பாலிமிக்சின் என்னும் நுண்ணுயிர் எதிர் மருந்தில் (antibiotic) முக்கியக் கூறாக D-செரின் இணைந்துள்ளது. உயிர் வேதித் தொகுப்பின் படி, செரின் 3-பாஸ்ஃபோ கிளைசெரிக் அமிலத்தை மூலமாகக் கொண்டது. கிளைசீனும், செரினும் எளிதில் பரிமாற்றம் அடைவதால், கிளை யாக்சலேட் கிளைசீன் செரின் என்னும் உயிர் வினை வழியின் மூலமும், செரின் விளையலாம், இதன் அமைப்பு வருமாறு: செரின் மாற்றியத்தின் சில இயற்பியல் மாறிலிகள் (25° C இல்) கீழே கொடுக்கப்பட்டுள்ளன. \begin{align} pK_1 (COOH) = 2.21 \\[6pt] pK_2 (NH_3+) = 9.15\end{align} மின்சுமைமாய் நிலை (isoelectric point) = 5.68 ஒளியியல் சுழற்சி திறன் = [\alpha]_D(H_2O) = -7.5 = [\alpha]_D(5HCl) = +15.1 கரை திறன் (கி./100 மி.லி. H_2O) = 5.02(DL) ஆக்கச் சிதை மாற்றத்தின் போது, செரின்டிமேனேஸ் (டிஹைட்ரேஸ்) நொதி செரினைத் தாக்கிப் பைருவேட், அம்மோனியா ஆகியவற்றை விளைவிக்கிறது. வேறொரு வழி முறையில், ஹைட்ராக்சி மெத்தில் தொகுதி டெட்ரா ஹைட்ரோஃபோலிக் அமிலத்திற்குப் பரிமாற்றம் அடைந்து, கிளைசீனை உண்டாக்குகிறது. இறுதியில், டிரான்ஸ் அமினேஸ் நொதி செரினுடன் சேர்ந்து, 3 ஹைட்ராக்சிப் பைருவேட்டை விளைவிக்கிறது. —த. தெய்வீகன் செருகு வலிவூட்டிய நெகிழிகள் தனித்த இழைகள், இழை முறுக்கு, நெய்யப்பட்ட அல்லது நெய்யப்படாத துணிகளைச் செருகி வலிவூட்டிய நெகிழிகள், செருகு வலிவூட்டிய நெகிழிகள் (reinforced plastics) எனப்படும். பாலிஎஸ்ட்டர் ரெசின்களும் நீண்ட, மெலிந்த, நொறுங்காத இழைகளும் கண்டு பிடிக்கப்பட்ட பின், செருகு வலிவூட்டிய நெகிழிகளின் தொடக்கமும், வளர்ச்சியும் அறியப் பட்டன. பொதுவாக FRP (Fibre Reinforced Plastics) அல்லது GRP (Glass Reinforced Plastics) என்னும் சொற்கள், கண்ணாடியால் வலிவூட்டப்பட்ட பாலிஎஸ்ட்டரையும், பீச்சி வார்க்கும் இயல்புடைய கண்ணாடிச் செருகு வலிவூட்டப்பட்ட வெப்ப மீள் (thermoplastics) நெகிழிகளையும் குறிக்கும். மெலமின், ஃபீனாலிக்ஸ் போன்ற வெப்ப மீளா ரெசின்களைக் கண்ணாடி இழைகளால் வலிவூட்டிய நெகிழிகளை FRP என்னும் சொல் குறிக்காது. செருகு வலிவூட்டிய நெகிழிகளில், கண்ணாடியால் வலிவூட்டப்பட்ட பாலிஎஸ்ட்டர் சிறப்பிடம் பெறுகிறது. இந்நெகிழியை, அழுத்தமற்ற நிலை அல்லது குறைவழுத்தத்தில் (0–50 Psi) எளிதில் வடிவமைக்க முடியும். எப்பாக்சி ரெசின்களின் கண்டு பிடிப்பு செருகு வலிவூட்டிய நெகிழிகளில் புதுமை செய்தது. எப்பாக்சி ரெசினுக்கெனப் போரான், கிராஃபைட், சிலிக்கான் கார்பைடு, கெல்லர் எனப்படும் அரோமாட்டிக் பாலி அமைடு போன்ற தனிப்பட்ட இழைகள் தயாரிக்கப்பட்டன. தற்போது, போரான், கிராஃபைட், கண்ணாடி அல்லது கெல்லர் இழைகளால் வலிவூட்டப்பட்ட எப்பாக்சி அல்லது பாலி அமைடு நெகிழிகளைக் கூட்டுமம் (composite) எனக் குறிப்பிடுகின்றனர். சிக்கலான அமைப்புடைய மற்றும் முப்பரிமாணப் பகுதிகளைக் குறைந்த அழுத்தத்தில் செருகு வலிவூட்டிய நெகிழிகளைக் கொண்டு வடிவாக்கலாம். சாதாரண முறையில், இது போன்ற பகுதிகளைத் தயாரிக்க உயர் அழுத்த அச்சு (high pressure press) பெரிய வார்ப்பு அச்சு ஆகியன தேவை. ஆனால், எளிய மர அல்லது அலுமினிய அச்சைக் கொண்டு செருகி வலிவூட்டிய நெகிழிகளை வடிவமைக்கலாம். இவ்வாறு, தயாரிக்கப்படும் பகுதிகள் உயர் அழுத்தத் தொழில் நுட்பத்தில் கிடைக்கும் பகுதிகளுக்கு இணையானவை அல்லது மேம்பட்டவை. பெரிய கட்டுமானப் பொருள்களை எளிதில் இந்நெகிழிகளிலிருந்து தயாரிக்கலாம்; எளிதில் பழுது பார்க்கலாம்: எனவே, விமானம், கப்பல், தானியங்கு ஊர்திகளின் கட்டுமானத்தில் இந்நெகிழிகளின் பங்கு குறிப்பிடத் தக்கது, மேலும், இந்நெகிழிகளை வடிவமைக்க, எளிய கை வடிவமைப்பிலிருந்து (hand moulding) மிகவும் சிறந்த அழுத்த வார்ப்பு (compression moulding) அல்லது மாற்று வார்ப்பு (transfer moulding) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட செயல் முறையைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரே பகுதியை ஒன்றுக்கு மேற்பட்ட செயல் முறையிலும் தயாரிக்கலாம். பகுதியின் பயன்பாட்டுக்கேற்ப ஒரே பகுதியைப் பல நெகிழிகளைக் கொண்டும், செருகு வலுவூட்டியை வேறு படுத்தியும் தயாரிக்கலாம். இந்நெகிழியில் அடங்கும் பொருள்களாவன: ரெசின்கள், செருகு வலிவூட்டி (reinforcement), ஒட்டு விடுவிப்பி (release agent), களிப் பூச்சு (gel coat) ஆகியன. ரெசின்கள் செருகு வலிவூட்டிய நெகிழிகளில் ரெசின்கள், செருகு இழைகளைப் பிடித்துக் கொள்ளும். பளுவை, ஓர் இழையிலிருந்து மற் றொன்றுக்கு மாற்ற உதவும். இந்த ரெசின்கள் பக்குவப் படுத்துதலுக்கு (curing) முன்னரும், பின்னரும் இழைகளோடு நன்கு ஒட்டிக் கொள்ள வேண்டும். அறை வெப்ப நிலையிலிருந்து 150°C வரை எளிதில் கட்டுப்படுத்தும் திறனை இந்த ரெசின்கள் பெற்றி ருக்க வேண்டும். உரிய பாகுத் தன்மையுடன் நிரப்பி கள் (fillers), நிறமிகள் ஆகியவற்றுடன் இணக்கமாக இருக்க வேண்டும். ரெசின்களில் குறிப்பிடத் தக்கவை பாலிஎஸ்ட்டரும், எப்பாக்சியும் ஆகும். பாலிஎஸ்ட்டர் பாகுத் தன்மையில் பெரிதும் வேறுபட்ட நீர்மமாக கிடைக்கும். பல வினை வேக மாற்றிகளின் துணை யோடு, இந்த ரெசினை அறை வெப்ப நிலையிலோ, சூடேற்றியோ, புற ஊதாக் கதிர்களைப் பாய்ச்சியோ, கட்டுப் படுத்தலாம். எனவே நாள் முழுவதும் தேவை- யான பகுதிகளைத் தயாரித்து, இரவில் கட்டுப் படுத்தலாம். பாலிஎஸ்ட்டர் பொருள்கள் உயரிய வேதி, மின்னாற் பண்புகளைப் பெற்றுள்ளன. இந்நெகிழிகள் சுருங்கும் தன்மையன. ஈரப் பதச் சூழலில், கண்ணாடி இழைகளோடு எளிதில் ஒட்டாதவை. எப்பாக்சி ரெசின், பாலிஎஸ்ட்டரின் அனைத்து நல்லியல்புகளையும் பெற்றுள்ளது. மேலும், இது சுருங்காது; பெரும்பாலான பொருள்களோடு நன்கு ஒட்டும்; எனவே, இது செருகு வலிவூட்டிய நெகிழிகள் தயாரிப்பில் முதலிடம் வகிக்கிறது. ஃபீனாலிக்ஸ், சிலிக்கோன்கள், மெலமின்கள், பாலி இமைடுகள் ஆகிய வெப்ப மீள் ரெசின்களும் செருகு வலிவூட்டிய நெகிழிகள் தயாரிக்கப் பயன் படுகின்றன. செருகு வலிவூட்டிகள். கண்ணாடி இழை, பெருமளவில் பயன்படும் செருகு வலிவூட்டியாகும். இதைப் பின்னிய பாய், பின்னாத தகடு, வெட்டப் பட்ட இழை (chopperd fibres), குறு இழை (milled fibres) ஆகியவையாகப் பயன்படுத்தலாம். தேவைக்கேற்பக் கண்ணாடி இழைகளைத் தேர்ந்தெடுக்கலாம். E–கண்ணாடி இழைகள் மின் வேலைக்கும், S–கண்ணாடி இழைகள் உயர் வலிமைக்கும் ஏற்றவை. கண்ணாடி இழைகள் இழுக்கப் பயன் படும் மசகை முதலில் பொதுவாக வெப்பமூட்டி நீக்க வேண்டும். பெரும்பாலான கண்ணாடி இழைகளை இம்முதல் கட்டப் பக்குவத்திற்குப் பின், செருகு வலிவூட்டிகளாகப் பயன் படுத்தலாம். சில குறிப்பிட்ட ரெசின்களுக்கு, குறிப்பாக ஈரப் பதனுடைய சூழ்நிலையில் பிடிப்புத் திறனைக் கொடுக்க, இணைப்புச் சேர்மங்கள் (coupling agents) எனப் படும் பூச்சை, கண்ணாடி இழைகளின் மேல் பூச வேண்டும். குரோம் அணைவுகள் (chroma complexes), சிலேன்கள் ஆகியன இப்பூச்சுகளில் அடங்கும். வேதி எதிர்ப்புத் திறனுடைய வெப்பம் தாங்க வல்ல கல் நார் இழைகளும், சிறந்த செருகு வலிவூட்டிகளாகும். கட்டு மரங்கள் தயாரிக்கப் போரான், கிராஃபைட், கெல்லர் இழைகள் உதவும். இவற்றில் கிராஃபைட் இழைகளின் விலை குறைவு; விறைப்புத் தன்மை மிகுதி; அடர்த்தி குறைவு. எனவே, குறுகிய வளைவுள்ள முப்பரிமாண வடிவங்கள் தயாரிக்க, இது பெரிதும் உதவும். மேலும், இதன் வெப்ப விரிவு குணகம் மிகவும் தாழ்ந்துள்ளமையால், துல்லிய அளவுள்ள பகுதிகளை எளிதில் தயாரிக்கலாம். பாலி அரமிட் எனப்படும் கெல்லர் இழைகள், கண்ணாடி இழைகளைப் போல் இரு மடங்கு விறைப்புத் தன்மையும், 25% கூடுதலான இழு வலியும் பெற்றுள்ளன. ஒட்டு விடுவிப்பி. அனைத்துச் செருகு வலிவூட்டி நெகிழிகளும் வார்க்கப் படும் போது, வார்ப்பச்சில் ஒட்டிக் கொள்ளும். இதைத் தடுக்க ஒட்டு விடுவிப்பித் தேவை. இது வார்ப்புப் பகுதிக்கும், வார்ப்பு அச்சுக்கும் இடையே தடுப்பாக அமைந்து, ஒட்டுதலைத் தவிர்க்கும். ஒட்டு விடுவிப்பியை, வெளி ஒட்டு விடுவிப்பி (external release agent), உள் ஒட்டு விடுவிப்பி (internal release agent) என இரு வகையாகப் பிரிக்கலாம். வெளி ஒட்டுவிப்பியில் செல்லோஃபேன், பாலி வினைல் அசெட்டேட், பாலிஅமைடு (நைலான்), பாலிஎஸ்ட்டர் (மைலார்) போன்ற படலங்களும், படலம் உருவாக்கும் பொருள்களான நைலான் பாலி வினைல் அசெட்டேட் கரைசல்கள் ஆகியனவும் அடங்கும். இதே வகையில், துடைப்புப் பொருளான மெழுகுகளும், சிலிக்கோனின் காற்றுக் கரைசலும் (aerosol) அடங்கும். துடைப்புப் பொருள்களை வார்ப்பச்சின் உட்புறத்தில் தடவி அல்லது தெளிந்த பின்னர், துணியால் துடைக்க வேண்டும். உள் ஒட்டு விடுவிப்பியில், சில வேதிச் சேர்மங்கள் ரெசினில் கலக்கப் பட்டு, அச்சேர்மங்கள் நெகிழியைப் பக்குவப் படுத்தும் போது, பிதுங்கி வெளி வந்து வார்ப்பச்சில் ஒட்டாமல் தடுக்கும். துத்தநாக ஸ்டீரேட், கால்சியம் ஸ்டீரேட், கரிம பாஸ்ஃபேட்டுகள், சிலிக்கோன் எண்ணெய் ஆகியன உள் ஒட்டு விடுவிப்பிகளுக்கான எடுத்துக் காட்டுகள். களிப் பூச்சு. கண்ணாடி அல்லது ஏனைய இழைகளால் செருகி வலிவூட்டப்பட்ட பாலிஎஸ்ட்டர் நெகிழியை 0–15 psi அழுத்தத்தில் வார்க்கும் போது, அந்நெகிழியில் இழைகள் முப்பரிமாணத்தில் தனித்து வெளியே தெரியும். பாலிஎஸ்ட்டா ரெசின் இழைகளிலிருந்து அகன்று சுருங்குவதால், இத்தோற்றம் ஏற்படுகிறது. களிப் பூச்சு இத்தோற்றத்தைத் தவிர்க்கிறது. குறைந்த பாகுத் தன்மை உள்ள பாலிஎஸ்ட்டர் ரெசினில், கனிம நிரப்பிகளான கால்சியம் கார்பனேட், அலுமினியம் சிலிக்கேட், உலோகத் தூள் போன்ற பொருள்களை மிகுந்த அளவில் நிரப்பும் போது, களிப் பூச்சுக் கிடைக்கிறது. இப்பூச்சில், நிறமிகளும், கெட்டித் தன்மையைத் தரும் பொருள்களும் இடம் பெறும். களிப் பூச்சு செருகு வலிவூட்டிய நெகிழியில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுப்பதோடு, கீறல்கள் தோன்றாமலும் காக்கும். கறை ஏறாமல் தடுத்து, நெகிழியின் மேற்பரப்பில் பளபளப்பைக் கொடுக்கும். —என். அய்யாசாமி நூலோதி. Seymours Schwartz and Sidney H. Goodman, Plastics Materials and Processes, Van Nostrand Reinhold Co., New York, 1982. செருசைட் கார்பனேட் கனிமமான இது, ஈயக் கார்பனேட்டு(PbCO₃) ஆகும். செவ்வகத் தொகுதியைச் சேர்ந்தசெருசைட்டின் (cerussite) அணுக் கோப்பு இயல்பு அடிப்படை வகையைச் சேர்ந்தது. இதன் ஓர் அணுக் கோப்பில் நான்கு கூட்டணுக்கள் உள்ளன. இக்கனிமத்தின் அணு அமைப்பில், அணுக்களுக்கு இடையே உள்ள தொலைவு முன் பின் வாட்டத்தில் (a) 5.1726 Åஆகவும், பக்க வாட்டத்தில் (b) 8.4800 Å ஆகவும், குத்து வாட்டத்தில் (c) 6.1302 Å ஆகவும் இருக்கும். இதன் படிக அச்சுகளின் விகிதம் a:b:c = 0.60997:1:0.7230 ஆகும். செருசைட் படிகங்கள் பல வடிவங்களில் காணப் படுகின்றன.இவை, பெரும்பாலும் இரட்டுறல் ஆனவை. படிகங்கள் பொதுவாகத் தட்டையாக இருக்கும். அவை (010) முகத்திற்கு இணையாக இருக்கும். சில a–படிக அச்சுக்கு இணையாக நீண்டும், சில பட்டகங்கள் அல்லது பட்டகக் கூம்புகளாகவும் இருக்கும். செருசைட் ஊசிகளைப் போன்றும், மெல்லிய தட்டையாகவும் அரிதாகக் காணப்படும். துகள்களாகவும், திண்மங்களாகவும், இழைகளாகவும், கல் விழுதுகளைப் போன்றும், கெட்டியாகவும் காணப்படும். இதில் கீறல்கள் காணப்படும். செருசைட்டில் (110), (021) முகங்களுக்கு இணையான கனிமப் பிளவுகள் தெளிவாகக் காணப் படும். (010), (012) முகங்களுக்கு இணையான கனிமப் பிளவும் ஓரளவு காணப்படும். இது வளை முறிவு உடையது. மிகவும் நொறுங்கக் கூடியது. இது வைர மிளிர்வு அல்லது கண்ணாடி மிளிர்வு, அரக்கு மிளிர்வு, முத்து மிளிர்வு உடையது. சில சமயங்களில், குறை உலோக மிளிர்வுடன் காணப் படும். இதன் கடினத் தன்மை 3–3.5, ஒப்படர்த்தி 6.55. இது நிறமற்றதாயும், வெள்ளை, சாம்பல் நிறம், புகை நிறம் கொண்டுமிருக்கும். சில சமயங்களில், நீலம், பச்சை, இருண்ட சாம்பல் நிறம் அல்லது கறுப்பு நிறம் உடையது. இதன் கீற்று நிறம், நிறமற்றதாகவோ, வெண்மையாகவோ இருக்கும். செருசைட் நீண்ட அலை வேகமுடைய புற ஊதா ஒளியில் மஞ்சள் நிறக் கிளர் ஒளிர்வு கொண்டது. ஒளி புகும் அல்லது ஒளி கசியும் தன்மை உடையது. செருசைட் இரண்டு ஒளி அச்சுகளை உடைய கனிமம். அதன் ஒளி அச்சுத் தளம் (010) தளத்திற்கு இணையாக இருக்கும். இதன் ஒளி அச்சுக் கோணம் (2V) 9° ஆக இருக்கும். இது எதிர் மறை ஒளிக் குறி உடையது. இதில் ஒளிச் சிதறல் சிகப்பு நிற ஒளியை விட, ஊதா நிற ஒளியில் குறைவாகும். இதன் ஒளி விலகல் எண்கள் α = 1.8036, β = 2.0765 γ = 2.0786. செருசைட் ஆக்சைடு படிவுத் தாரைகளில், இரண்டாம் கனிமமாகக் காணப் படுகிறது. இது அமெரிக்க ஐக்கிய நாடுகள், பென்சில்வேனியா, ஆஃப்ரிக்கா, சாம்பியா, டாஸ்மேனிய, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து ஆகிய இடங்களில் கிடைக்கிறது. செருசைட், வெள்ளை ஈயத் தாது என்றும் கூறப் படும். இது ஈயம் தயாரிக்கப் பயன் படுகிறது. —இல. வைத்திலிங்கம் நூலோதி. I. G. Berry and B. Mason, Mineralogy, Second Edition, CBS Publishers and Distributors, New Delhi, 1985. செல் செல்லில் சைட்டோப்பிளாசம், நியூக்ளியஸ், மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்பு, பல நுண் உறுப்பு ஆகியன உள்ளன. இவை கரைசல் பொருள் செல்ல விடாமல், கரை நீர்மம் மட்டும் புகக் கூடிய சவ்வி- னால் சூழப்பட்டுள்ளன. உயிரின் அடிப்படைச் செயல்பாடுகளைச் செல் செய்கிறது. செல்லின் வடிவமைப்பு, அதன் செயல்பாட்டுக்கும், திசு அல்லது உறுப்பிற்கும் ஏற்றவாறு அமைந்துள்ளது. இது ஒற்றைச் செல் உயிரிகளில் பல வடிவங்களில் உள்ளது. பல செல்கள், முட்டை வடிவத்திலும், வட்ட வடிவத்திலும், நீள் வட்ட வடிவத்திலும், இயல்புக்கு மீறிய வடிவத்திலும் உள்ளன. விலங்கினங்களில் கரு வளர்ச்சியின் போது, குறுகிய காலத்தில் மட்டும் தொடக்கத்தில், வட்ட வடிவத்திலும் பின்னர் வேறுபட்டும் காணப் படுகின்றன. குருதிச் சிவப்பணுக்கள், குருதிக் குழாயில் எளிதாக ஆக்சிஜனை எடுத்துச் செல்வதற்கேற்றவாறு, வட்ட வடிவத்திலுள்ளன. தசைகளில் ஏற்படும் சுருங்கி விரியும் தன்மைக்கேற்றவாறு, அவற்றிலுள்ள செல்கள் நீள் வாட்டத்திலுள்ளன. உறுப்புகளில் பிடிப்புடன் இருக்க இவ்வமைப்பு உதவுகிறது. நிறமிச் செல்களில் இவை பல பொய்க் கால் கிளைகளைக் கொண்டுள்ளன. இவ்வமைப்பு நிறத்தைப் பரவலாக்க உதவுகிறது. நிறமி உயிரணுக்கள் சுருங்கும் போது, விலங்கின் நிறம் வெண்மையாகவும், விரியும் போது நிறம் அழுத்தமாகவும் தோற்றமளிக்கும். செல்கள் வடிவம், உடலமைப்பு, செயல்பாடு இவற்றிற்கேற்ப அமைந்துள்ளன. உறுப்புகளின் அலகாகச் செல் இருப்பதால், உறுப்புகளின் செயலுக்கு ஏற்றவாறு வடிவமைப்பும் கொண்டுள்ளன. பாக்டீரியா, நுண்ணுயிரிகளின் செல்களே மிகச் சிறியவை. அமீபா செல் 1 மி.மீ; ஆஸ்ட்ரிச் என்னும் தீக்கோழியின் முட்டையே மிகப் பெரிய செல் ஆகும். இதன் நீளம் 15 செ.மீ. இருக்கும். செல்லின் இயல்பான செயல் முறைகளைக் கட்டுப்படுத்தும் மையமாக, நியூக்ளியஸ் சைட்டோ பிளாசத்தின் உதவி கொண்டு, உயிரியின் உரு வளர்ச்சி, ஆக்கச் சிதை மாற்றம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. ஒரு சில சமயங்களில், நியூக்ளியஸ் இல்லாமலேயே, செல் இயங்கும். நியூக்ளியசின் ஆளுகை, ஒரு வரம்புக்கு உட்பட்டது. சைட்டோபிளாசம் மிக அதிகமாகி விட்டால், செல்லின் ஆக்கச் சிதை மாற்றம் சீர் குலைந்து விடலாம். அப்பொழுது, நியூக்ளியஸ் தன் உருவை மாற்றியோ, பருமனை அதிகரித்தோ, குரோமோசோம்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியோ, செல்லின் செயல்பாடுகளைக் கட்டுப் படுத்துகிறது. செல்லின் மேற்பரப்பு மிக இன்றியமையாதது. ஏனெனில், இதன் வழியாகவே நீர், வளிமம், ஊட்டப் பொருள் ஆகியவை செல்லின் உள்ளே செல்கின்றன. செல்லின் அனைத்துப் பகுதியிலும், ஆக்கச் சிதை மாற்றம் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். இதற்கு வேண்டிய பொருள்கள் செல் சவ்வு மூலமாக எடுத்துச் செல்லப் படுகின்றன. சைட்டோப் பிளாசம் ஒரு குறிப்பிட்ட அளவை விட அதிகமாகி விட்டால், ஆக்கச் சிதை மாற்றம் சீர் குலையலாம். இதைத் தடுக்க நியூக்ளியஸ் இரட்டிப்பாகவோ, பலவாகவோ பிரிகிறது. செல் எண்ணிக்கை. ஒற்றைச் செல் உயிரிகளில் முழு உயிரியே ஒரு செல்லாக உள்ளது. ஆனால், பல செல் உயிரிகளில் மிகுதியான செல்கள் உயிரியின் உருவ அமைப்புக்கும், பருமனுக்கும் ஏற்றவாறு உள்ளன. குழந்தை பிறந்தவுடன், அதன் செல்களின் எண்ணிக்கை ஏறத் தாழ 2000,000,000,000 (இரண்டு லட்சம் மில்லியன்கள்) ஆகும். 70 கி.கி. எடையுள்ள ஒரு மனிதன் உடலில் ஏறத் தாழ 600 கோடி செல்கள் இருக்கும். ஓர் உயிரியில் உள்ள செல்களின் எண்ணிக்கை செல் பகுபடுதலின் அளவைப் பொறுத்ததாகும். அனைத்து உயிரணுக்களிலும், செல் பகுபடுதல் ஒரே வீதத்தில் இருப்பதில்லை. சில உயிரிகளில் குறைந்த காலத்தில் முதிர் நிலையடைந்து, செல் பகுபடுதல் நின்று விடுகிறது. சிலவற்றில் இறக்கும் வரை செல் பகுபடுதல் நடக்கும். செல்கள் பெருத்தலாலும், அழிந்த செல்கள் மாற்றீடு செய்யப் படுவதாலும், செல்களின் எண்ணிக்கை நிலையாக இருப்பதில்லை. செல்களில் இரண்டு வகை உண்டு. அவை புரோகேரியோட்டிக் செல்கள், யூகேரியோட்டிக் செல்கள் என்பன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> புரோகேரியோட்டிக் வகைச் செல்கள் பாக்டீரியா, நீலப் பச்சைப் பாசி போன்றவற்றில் காணப் படுகின்றன. நியூக்ளியஸ் சவ்வு இல்லாமையால், குரோமோசோம்கள் சைட்டோபிளாசத்தில் மிதக்கின்றன. சைட்டோப்பிளாசத்தில் வேறு நுண் உறுப்புகள் இல்லை. மீசோசோம்களும், ரிபோசோம்களும் பரவலாகக் காணப் படுகின்றன. நியூக்ளியஸ், இழைகளாலான ஒரு திரட்சி போன்று சைட்டோப்பிளாசத்தில் மிதக்கிறது. குரோமோசோம்களுக்குச் சிறப்பான இழை வடிவமுமில்லை. மீசோசோம்களால் செல் சுவாசம் நடை பெறுகிறது. புரோகேரியோட்டிக் செல் மேற்பரப்புச் சவ்வு, மேம்பட்ட உயிரிகளின் பிளாஸ்மாச் சவ்வை விடச் சிறந்த செயல்களைப் புரியும். இவ்வகைச் செல்கள் ஒளிச் சேர்க்கையையும், சுவாசத்தையும் நடத்துகின்றன. வைரசையும் இத்துடன் சேர்க்கலாம். ஆனால், வைரசில் ஒளிச் சேர்க்கை, சுவாசம் போன்றவற்றை நடத்தும் சவ்வு, நொதியமைப்பு இல்லை. வைரசில் நியூக்ளிக் அமிலமும், புரதவுறையும் (protein coat) உள்ளன. யூகேரியோட்டிக் செல். இதில் சைட்டோபிளாச நுண் உறுப்புகளும், நன்கு தெளிவான நியூக்ளியசும் உள்ளன. ஒரு சிறிய அளவு புரோட்டோபிளாசத்தைச் சுற்றிப் பிளாஸ்மாச் சவ்வு உள்ளது. நியூக்ளியஸ் தவிர, செல்லில் பல நுண்ணுறுப்புகளும் (organelles) சேர்மங்களும் காணப் படுகின்றன. நுண்ணுறுப்புகளில், ஒவ்வொன்றும் ஒரு பணியைச் செய்கின்றன. ஆனால், சேர்மங்களுக்குத் தனியான பணியில்லை. இருப்பினும், செல் உயிருடன் செயல்படும். மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், செண்ட்ரோசோம், ரிபோசோம், லைசோசோம், பிளாஸ்ட்டிட்ஸ், குவாண்டோசோம், அகப் பிளாச வலைப் பின்னல் ஆகியவை செல்லில் காணப் படும் நுண்ணுறுப்புகளாகும். சுரக்கும் துகள்கள் (secretory granules), நிறமிகள், சேமித்துள்ள உணவுப் பொருள், துகள்கள் முதலியன சேர்மங்களாகும். நுண்ணுறுப்புகளை உயிருள்ளவை என்றும், சேர்மங்களை உயிரற்றவை என்றும் கூறுவர். பொதுவாக ஒரு செல்லில் பிளாஸ்மாச் சவ்வு, சைட்டோசோம், சைட்டோப்பிளாசம், அகப் பிளாச வலைப் பின்னல், மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்பு, லைசோசோம்கள், செண்ட்ரோசோம், மெட்டாப்பிளாசம், ரிபோசோம்கள், பிளாஸ்டிடுகள், நுண் குறு இழைகள், அடியுறுப்புகள், நீளிழைகள், சேர்மங்கள், குமிழிகள், எண்ணெய் நுண் துளிகள், படிகங்கள் ஆகியன காணப்படும். பிளாஸ்மாச் சவ்வு. பாஸ்ஃபோலிப்பிடுகள், புரதங்கள் ஆகியவற்றாலான இரு அடுக்குச் சவ்வு, செல்லின் புறவுறையாக உள்ளது. இதன் மூலமாகக் கரைசல் பொருள்கள் மட்டுமே செல்லின் உள்ளே செல்கின்றன. பிளாஸ்மாச் சவ்வில், ஆங்காங்கே நுண் துளைகள் உள்ளன. இவை செல் உறையில் (cell wall) இல்லை. செல் உறை சர்க்கரைப் பொருளால் (polysaccharides) ஆனது. சைட்டோசோம். இதில் சைட்டோப்பிளாசமும், நியூக்ளியசும் அடங்கும். சைட்டோப்பிளாசம். இது நிறமற்ற ஒளி புகும் அளவுக்கு அடர்த்தியான, அடிக்கடி மாறும் தன்மை கொண்ட நீர்மம். இதில் செல் நுண்ணுறுப்புகளும், சேர்மங்களும் உள்ளன. இதில் அகப் பிளாசம், புறப் பிளாசம் என்று இரு பகுதிகள் உள்ளன. புறப் பிளாசம், ஜெல் அல்லது ஜெல்லி போன்றும், அகப் பிளாசம், கரைசால் அல்லது நீர்மம் போன்றும் உள்ளன. சைட்டோப் பிளாசத்தைப் படியச் செய்தால், ஹயலோப் பிளாசம் என்ற ஒரு தெளிந்த நீர்மம் புலப்படும். இதில் நொதிகள் உள்ளன என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அகப் பிளாச வலைப் பின்னல். இது முப்பரிமாணச் சவ்வு மண்டலமாக நியூக்ளியசையும், செல்லையும் சுற்றி உள்ளது. இதிலுள்ள சவ்வுகள் பெரும்பாலும், மடிப்புள்ளவை. ஒரு சில மடிப்பற்றும், வேறு சில துகள்கள் பியோசோம் போலவும் உள்ளன. இவற்றில் ரைபோ நியூக்ளிய அமிலமும் (RNA), புரதமும் உள்ளன. அகப் பிளாச வலைப் பின்னல் இருப்பதால்தான், பொருள்கள் செல்லின் ஒரு பகுதியிலிருந்து ஏனைய பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. மைட்டோகாண்டிரியா. கோல் வடிவ அல்லது உருண்டை வடிவ இவ்வுறுப்பில், இரண்டு சவ்வுகள் உள்ளன. புறச் சவ்வு உருவமைப்பைக் கட்டுப் படுத்தவும், அகச் சவ்வு பல உள் மடிப்புகளைக் கொண்டும் உள்ளன. உள் மடிப்புகளில் ஆக்சிஜனேற்ற பாஸ்ஃபாரிலேற்றம் நடை பெறுகிறது. செல்லுக்கு வேண்டிய ஆற்றல் மூலமான ATP (adinosene tri phosphate) இங்குதான் உற்பத்தி செய்யப் படுகிறது. உணவுப் பொருளை எரிக்கும் கிரெப்ஸ் சுழல் நடக்கும் இடம் மைட்டோகாண்டிரியங்களே ஆகும். மைட்டோகாண்டிரியத்தை உயிரியின் ஆற்றல் அகம் எனக் குறிப்பிடுவர். கோல்கை உறுப்பு. இதில் வழவழப்பான மெல்லிழையுடன் கூடிய சவ்வுப் பொருள்கள் தனித் தனிக் குமிழிகள் போல அமைந்துள்ளன. செல் நீர்ம இயக்கத்தைச் சீரான நிலையில் வைத்தலும், சுரக்கும் பொருள்களை வெளியேற்றலும் இதன் பணிகளாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு, கோல்கை உறுப்பு ஆஸ்மிக் ஆக்சைடால் உண்டாக்கப் பட்ட அழகுப் பொருள் எனக் கருதப் பட்டது. எலெக்ட்ரான் நுண்ணோக்கியால் கண்டறியப்பட்ட பின்னரே, இதன் சரியான அமைப்பு முழுதும் விளங்கிற்று. பல நுண் கால்வாய்களோடு மிகுதியான நுண் குமிழிகளும் உள்ளன. சுரக்கும் பொருள்கள் அகப் பிளாச வலைப் பின்னல் நுண் கால்வாய்கள் மூலம் கோல்கை உறுப்புக்குக் கொண்டு வரப் பட்டு, பிறகு ஆய்வுகள் மூலம் செல்லில் மாவுப் பொருளும், புரதமும் இணைக்கப் படுகிற இடம் கோல்கை உறுப்பு என்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. லைசோசோம். இவை பெரும்பாலான விலங்குச் செல்களின் சைட்டோப்பிளாசத்தில் உள்ள நெட்டுருளை அல்லது உருளை வடிவத்திலுள்ள நுண்ணுறுப்புகள் ஆகும். தாவரச் செல்களிலும் இவை உள்ளன என்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இவற்றில் நீரிடைச் சேர்மத்தைப் பிரிக்கும் நொதிகள் உள்ளன. ஓரடுக்கு லிப்போபுரதத்தாலான சவ்வினால் சூழப் பட்டுள்ள இந்நொதிகள் அகச் செல் செரிமானத்திற்குப் பயன் படுகின்றன. தேவைப் படும் போது, குமிழிகள் தகர்ந்து அல்லது உடைந்து நொதிகள் வெளிப் படுகின்றன. லைசோசோம்களின் இயக்கம் சில ஹார்மோன்களால் கட்டுப் படுத்தப் படுகிறது. லைசோசோம்களைத் தற்கொலைப் பைகள் (suicide bags) எனவும் கூறுவர். ஏனெனில், லைசோசோம் சவ்வு கிழிந்து வெளிப்படும் நொதியால் வெளிப் பொருள்கள் செரிக்கப் படுவதுடன் அருகிலிருக்கும் சைட்டோப்பிளாசமும் செரிமானமடையும். செண்ட்ரோசோம். செல்லின் நடுவில் நியூக்ளியசின் அருகே ஒரு தெளிவான பகுதியில் ஒன்று அல்லது இரண்டு உருண்டை உறுப்புகள் உள்ளன. இவை செண்ட்ரியோல்கள் எனப்படும். செல் பகுப்பின் போது மட்டும் செண்ட்ரோசோம் தெரியும். செண்ட்ரோசோமும், செண்ட்ரியோலும் செல் பகுப்பின் போது, கதிர் ஆக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மெட்டாப்பிளாசம். ரிபோ நியூக்ளியப் புரதங்கள் சிறு மூலக் கூறுகளாகச் சைட்டோப் பிளாசத்தில் பரவலாக உள்ளன. இவற்றின் பயன் சரி வரத் தெரியவில்லை. அகப் பிளாச வலைப் பின்னல் சவ்வில் ஒட்டிக் கொண்டிருக்கும் இவை, ரிபோசோம்கள், RNA புரதம் கொண்ட மிகச்சிறிய நுண்துகள்களாகும். இவற்றின் இன்றியமையாப் பணி புரதச் சேர்க்கையாகும். பிளாஸ்ட்டிடுகள். இவை பெரும்பாலும் தாவரச் செல்களில் மட்டுமே காணப்பட்டாலும், சில ஒரு செல் உயிரிகளிலும் உள்ளன. பச்சை, சிவப்பு, பழுப்பு, வெள்ளை முதலான நிறங்களுடன் உள்ள இவை பல விதங்களில் பயன் படுகின்றன. பச்சை நிறப் பிளாஸ்ட்டிடுகள் பச்சையத்தின் உதவியால், ஒளிச் சேர்க்கைக்கும், சிவப்பு, பழுப்பு முதலியவை நிறமூட்டுவதற்கும். வெள்ளைப் பிளாஸ்ட்டிடுகள் எண்ணெய், புரதம், மாவுப் பொருள் போன்றவற்றைத் தேக்கி வைப்பதற்கும் பயன் படுகின்றன. சில செல்களில் அசையும் மயிர் போன்ற நீளிழைகளும், நுண் குறு இழைகளும் உள்ளன. இவை இரண்டும் ஒரே அமைப்புடையவையே. இவை அடியுறுப்புகளிலிருந்து உண்டாகின்றன. ஒரு செல் முதலுயிரிகளில், இவை இயக்கத்திற்கும், உணவுப் பொருள்களை உள்ளே இழுப்பதற்கும் பயன் படுகின்றன. சேர்மங்கள். நீர்மக் குமிழிகள், எண்ணெய் நுண் துளிகள், நுண் படிகங்கள் முதலானவை இதிலடங்கும். சுருங்கி விரியும் குமிழிகள், நீர்ம இயக்கத்திற்கும், எண்ணெய் நுண் துளிகள் ஆக்கச் சிதை மாற்றத்திற்கு வேண்டிய ஆற்றலை வழங்கவும், ஊட்டப் பொருள், கழிவுப் பொருள்கள் படிகங்களாக வைத்துக் கொள்ளவும் பயன் படுகின்றன. நியூக்ளியஸ் பாலூட்டிகளின் குருதிச் செவ்வணுக்களைத் தவிர, ஏனைய பெரும்பாலான செல்களில் உருண்டை வடிவ நியூக்ளியஸ் உள்ளது. செல்லின் அனைத்துச்செயல்களையும் கட்டுப் படுத்தும் இது இயல்பாக ஒரு செல்லுக்கு ஒன்றே இருக்கும். சில செல்களில் ஒன்றுக்கு மேற்பட்டவையும் இருக்கும். நியூக்ளியசைச் சுற்றி, ஈரடுக்குள்ள லிப்போப் புரதமும், நுண் துளைகளும் உள்ள நியூக்ளியச் சவ்வு உள்ளது. நியூக்ளியசில் தெள்ளிய நியூக்ளியோப் பிளாசத்தில் பல இழை போன்ற வலை குரோமோனிமேட்டாக்கள் உள்ளன. இவ்விழைகள் ஹிஸ்டோன் என்ற வேதிப் பொருளையும், டீ ஆக்சி ரிபோ நியூக்ளியிக் அமிலம், ரிபோ நியூக்ளியிக் அமிலம் ஆகியவற்றையும் கொண்டுள்ளன. இரண்டு நியூக்ளியிக் அமிலங்களும், பென்டோஸ் சர்க்கரை, பாஸ்ஃபோரிக் அமிலம், அடினைன் குவானின், தயமின், சைட்டோசின் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. நியூக்ளியசில் உருண்டை வடிவ நியூக்ளியோலசும் இருக்கிறது. இதில் செறிவான RNA இருப்பதால், புரதச் சேர்க்கையில் பெரும் பங்காற்றுகிறது. குரோமேட்டின் பொருள், இனச் சிறப்புப் பண்புகளைத் தாங்கும் குரோமோசோம்களாக உருவாகி, ஒவ்வோர் இனத்திலும், எண்ணிக்கையிலும், உருவத்திலும் வேறுபட்டிருக்கும். செல்லை அளக்கப் பயன் படும் அளவைக் குறிகள்: 1 மைக்ரான் = மீட்டரில் மில்லியனில் ஒரு பங்கு = 10–6m=h 1 மில்லி மைக்ரான் = மைக்ரானில் ஆயிரத்தில் ஒரு பங்கு - mu 1 ஆங்ஸ்ட்ராம் = 10–4 மைக்ரான் அல்லது 10–16 மீ. ஏ.ஜே. ஆங்ஸ்ட்ராம் என்னும் ஸ்வீடன் அறிஞர் பெயரால் Å எனப் படுகிறது. பிறிதோர் அலகான நானோ மீட்டர் (10–9மீ அல்லது 10Å) என்பது அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்ட குறியீடாகும். செல் அமைப்பு உயிரிகள் அனைத்தும் ஒரு செல் உயிரிகள் (unicellular organisms) எனவும், பல செல் உயிரிகள் (multicellular organisms) எனவும் இரண்டு வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன. இவ்வகைப்பாடு, உடற் கட்டமைப்பில் பங்கு கொள்ளும் செல்களின் அடிப்படையில் ஏற்பட்டதாகும். ஒளி நுண்ணோக்கி (light microscope) கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே, உயிரிகள் செல்களால் ஆனவை என்ற உண்மையை, உயிரியல் வல்லுநர் எடுத்துக் கூறினர். இதை ராபர்ட் ஹூக் என்பார் 1665இல் முதன் முதலாகக் கண்டறிந்தார். பின்னர், 1838 இல் எம்.ஜே.ஷ்லீடன் என்பாரும், ட்டி. எஸ். ஷ்வான் என்பாரும் இணைந்து, செல் கோட்பாடு (cell theory) ஒன்றை உருவாக்கி வெளியிட்டனர். தாவரங்களும், விலங்குகளும் செல்களால் ஆனவை என்பதே இக்கோட்பாட்டின் அடிப்படைக் கருத்தாகும். செல்கள் நியூக்ளியஸ் கொண்டவையாகக் கருதப் படுகின்றன. இவற்றில் சவ்வினால் சூழப்பட்ட தெளிவான நியூக்ளியஸ் காணப் படுவதில்லை. நியூக்ளியசுள்ள செல்கள், அனைத்து உயர் உயிரினங்களிலும் காணப் படுகின்றன. இவற்றில் சவ்வினால் சூழப்பட்ட தனித்த நியூக்ளியஸ் காணப் படுகிறது. செல்களிலுள்ள நியூக்ளியசின் எண்ணிக்கையை வைத்து, அவற்றை ஒற்றை நியூக்ளியச் செல் (mononucleate cell) இரு நியூக்ளியச் செல் (binucleate cell), பல நியூக்ளியச் செல் (multinuleate cell) என வகைப் படுத்தலாம். தாவரச் செல்களுக்கும் விலங்குச் செல்களுக்குமிடையே அடிப்படை வேறுபாடுகள் உள்ளன. முன்னவற்றில் செல் சுவர் நுண் குமிழ்கள் (vacuoles), பச்சையங்கள் (chloroplasts) ஆகியவை காணப் படுகின்றன. மேலும் மைய அமைப்பு (central body) தாவரச் செல்களில் காணப் படுவதில்லை. விலங்குச் செல்களில், செல் சவ்வும், மைய அமைப்பும் காணப் படுகின்றன; நுண் குமிழ்களும், பச்சையங்களும் காணப் படுவதில்லை. செல்கள் வட்ட வடிவம், முட்டை வடிவம், ஐங்கோண வடிவம், அறுங் கோண வடிவம் போன்ற வடிவங்களில் காணப் படுகின்றன. தோன்றும் முறை, செயற்பாடுகள், உருவமைப்பு ஆகியவற்றால், செல்கள் பல வகைப் படினும், அனைத்து வகைச் செல்களிலும் காணப்படும் சில இன்றியமையாத நுண் உறுப்புகளின் (cell organelles) அடிப்படையில், அவை யாவும் ஒத்த அமைப்புடையன. எலெக்ட்ரான் நுண்ணோக்கி (electron microscope) வழக்கத்துக்கு வந்த பின்னர், செல்களின் மிகு நுண் உறுப்புகளும் (ultra structures), அவற்றின் செயல்களும் தெளிவாகக் கண்டறியப் பட்டன. பொதுவாகச் செல்களை மூன்று பகுதிகளாகப் பிரித்து அறியலாம். அவை செல் சவ்வு (cell membrane), செல்பிளாசம் (cytoplasm), நியூக்ளியஸ் என்பன. செல் சவ்வு. செல்லைச் சூழ்ந்து காணப் படும் மெல்லிய சவ்விற்குச் செல் சவ்வு என்று பெயர். இதைப் பிளாஸ்மா சவ்வு (plasma lemma) என்றும் குறிப்பிடுவர். இச்சவ்வு நெகிழ் தன்மையுடையது. ஒளி நுண்ணோக்கி வாயிலாகப் பார்க்கும் போது, இச்சவ்வு கண்ணிற்குப் புலப் படுவதில்லை. நகேலி என்பார் 1855இல் இச்சவ்விற்குப் பிளாஸ்மா சவ்வு (plasma membrane) என்று பெயரிட்டார். இச்சவ்வின் மிகு நுண் அமைப்பு, வேதித் தன்மை ஆகியவை எலெக்ட்ரான் நுண்ணோக்கி வாயிலாகவும், நுண் ஆய்வு முறைகளாலும் கண்டறியப் பட்டன. செல்லினுள் காணப் படும் செல் பிளாசம், சவ்வைப் பாதுகாக்கிறது. சில செல்களில், பிளாஸ்மா சவ்வைச் சூழ்ந்து, செல் சாந்து (cell cement) காணப் படுகிறது. செல் பிளாசத்திலுள்ள மைட்டோகாண்ட்ரியங்கள் (mitochondria) மைய அமைப்பு, கோல்கை நுண் உறுப்பு ஆகியவற்றின் புற உறையும் நியூக்ளியச் சவ்வும், பிளாஸ்மா சவ்வினால் ஆனவை; எனினும், இவற்றினுள் செல் பிளாசம் காணப் படுவதில்லை. செல் சவ்வு பெரும்பாலும் 75 ஆங்ஸ்ட்ராம் (ஒரு ஆங்ஸ்ட்ராம் 1/1,000000 மி.மீ.) தடிமனுடன், கிளைக்கோ புரதத்தால் ஆனது. சில செல்களில் இச்சவ்வைச் சூழ்ந்து, கிளைக்கோ புரதத்தாலும், பாலி சாக்கரைடுகளாலும் (poly-saccharide) ஆன கிளைகோகேலிக்ஸ் காணப் படுகிறது. செல் சவ்வின் மேற்பரப்பில், ஆங்காங்கே வெளிப் பக்கம் நீண்டும், உள் பக்கம் மடங்கியுமுள்ள விரல்கள் போன்ற பல நீட்சிகள் காணப் படுகின்றன. இவற்றிற்கு நுண் விரல் நீட்சிகள் (micro villi) என்று பெயர். இவை உள்ளேற்புப் பரப்பை (absorptive surface) அதிகப் படுத்தப் பயன் படுகின்றன. மேலும், இச்சவ்வு சில இடங்களில் தடித்தும், மெல்லிய இழைகளோடும் காணப்படும். இப்பகுதிகளுக்குச் செல்லிணைப்பிகள் (desmosomes) என்று பெயர். இவற்றின் வாயிலாகச் செல்கள் ஒன்றோடொன்று இணைகின்றன. சில இடங்களில் செல் சவ்வு உட்குழிவுற்றுச் செல் பிளாசத்தின் நுண்பைகளாகக் காணப்படும். இவற்றிற்கு உட்குழிவுப் பைகள் (pinocytic vesicles) என்று பெயர். இவற்றின் வாயிலாக, நீர்மப் பொருள்கள் செல்லினுள் செல்கின்றன. செல் சவ்வு, செல் நுண் பொருள்களைப் பாதுகாப்பதுடன், சவ்வூடு பரவுதலுக்கும், மூலக் கூறுகள் ஊடு செல்வதற்கும் பயன்படும். இச்சவ்வின் உருவ, உயிரியல் பண்புகளை ஈரடுக்கு உருப் படிவம் (bilayer model), பல அடுக்கு உருப் படிவம் (sub unit model) ஆகியவற்றால் விளக்கலாம். செல் பிளாசம். செல் சவ்விற்கும், நியூக்ளியச் சவ்விற்கும் இடையில் காணப்படும் செல் பொருள் உயிரியக்கமும், கூழ் போன்ற தன்மையும் கொண்டுள்ளது. இதற்குச் செல் பிளாசம் என்று பெயர். செல் சவ்வை ஒட்டிய பகுதியிலுள்ள செல் பிளாசம் துகள்கள் அற்று, ஒளி ஊடுருவக் கூடிய மிகு செறிவுப் பொருளாகவும், செல்லிற்கு நிலையான உரு அமைப்பைத் தருவதாகவும் உள்ளது. இப்பகுதிக்குப் புறப் பிளாசம் (ectoplasm) என்று பெயர். இப்பகுதி களி நிலையிலிருந்து (gel) கரைசால் நிலைக்கும் (sol), கரைசால் நிலையிலிருந்து, களி நிலைக்கும் மாறும் தன்மையது. இத்தன்மை ஓரணு உயிரிகளில் போலிக்கால்கள் (pseudopodia) உண்டாகப் பயன் படுகிறது. புறப் பிளாசத்திற்கும், நியுக்ளியச் சவ்விற்கும் இடையில் காணப் படும் பகுதி அகப் பிளாசம் (endoplasm). நுண் துகள்கள் நிறைந்து, ஒளியூடுருவல் (transluscent) தன்மையுடன் காணப் படும் இப்பகுதியில், பல செல் நுண்ணுறுப்புகள் உள்ளன. ரிபோசோம்கள் (ribosomes), அகப் பிளாச வலை (endoplasmic reticulum), மைட்டோ காண்ட்ரியங்கள், மைய அமைப்பு, கோல்கை அமைப்பு ஆகியவை நுண்ணுறுப்புகள் ஆகும். இவை தவிர, நியூக்ளியசும் அகப் பிளாசத்தில் காணப் படும் நுண்ணுறுப்பாகக் கருதப் படுகிறது.இவை யாவும் செல்லின் செயல்பாடுகளில் பெரும் பங்கு கொள்கின்றன. மேலும், இவை அனைத்துச் செல்களிலும் காணப் படும் அடிப்படைப் பொருள்களாக அமைகின்றன. ரிபோசோம்கள். அகப் பிளாச வலையிலும், அகப் பிளாசத்திலும் காணப்படும் நுண் துகள்களை (microsomes) முதன் முதலில் கிளாட் என்பார் கண்டறிந்தார். பின்னர், பேலேட் என்பார் 1955இல் இத்துகள்களில் ரிபோநியூக்ளியிக் அமிலம் உள்ளமையைக் கண்டறிந்து, இவற்றிற்கு ரிபோசோம்கள் (ribosomes) என்று பெயரிட்டார். எலெக்ட்ரான் நுண்ணோக்கி வழியாகக் காணும் போது, இத்துகள்கள் 150–200 ஆங்க்ஸ்ட்ராம் விட்டமுடைய அடர் துகள்களாகவும் (dense granules), அகப் பிளாச வலையில் ஒட்டியும், அகப் பிளாசத்தில் சிதறியும் காணப்படுகின்றன. ரிபோசோம்கள் அனைத்து வகைச் செல்களிலும் காணப் படுகின்றன. இத்துகள்கள் நியூக்ளியஸ், மைட்டோகாண்ட்ரியங்கள், பச்சையங்கள் ஆகியவற்றிலும் காணப் படுகின்றன. மேலும், இவை ஈஸ்ட் செல்கள் (yeast cells), வளர் கருச் செல்கள் (embryonic cells), புற்று நோய் செல்கள் (cancerous cells) போன்ற மிகு செயற் செல்களில் (active synthetic cells) மிகுதியாகக் காணப் படுகின்றன. ஸ்வெட்பெர்க் (Swedberg) அலகுகளைக் கொண்டு ரிபோ துகள்களை 70 S ரிப்போ துகள்கள். 80 S ரிபோ துகள்கள் எனப் பிரிக்கலாம். முன்னவை, நியூக்ளியசற்ற செல்களிலும், பின்னவை, நியூக்ளியசற்ற செல்களிலும் காணப் படுகின்றன. 80 S ரிபோசோமில் 60 S பெரிய துகளும், 49 S சிறிய துகளும் உள்ளன; 70 S ரிபோசோமில் 50 S பெரிய துகளும், 30 S சிறிய துகளும் உள்ளன. இத்துகள்களின் உருவ அமைப்பு, ஸ்டோஃபியர் விட்மனின் போலிச் சமச் சீர் மாதிரியாலும், லேகின் சமச் சீரற்ற மாதிரியாலும் விளக்கப் படும். ரிபோசோம்கள் புரதச் சேர்க்கையில் பெரும் பங்கு கொள்கின்றன. மேலும், அவை, தாது ரிபோஸ் நியூக்ளிய அமில முன்னோடி இழைகளை (m RNA filament) நியூக்ளியேசின் நியூக்ளிய நொதிச் செயலிலிருந்து பாதுகாக்கின்றன. வாட்சன் என்பார் 1955இல் ரிபோ துகள்கள் நியூக்ளியோலசிலிருந்து தோன்றின எனக் கூறினார். அகப் பிளாச வலை. அகப் பிளாச வலை தாவரச் செல்களிலும், விலங்குச் செல்களிலும் காணப் படுகிறது. எனினும், முதிர்ந்த குருதிச் சிவப்பு வடிவங்களிலும், நியூக்ளியசற்ற செல்களிலும், அகப் பிளாச வலை காணப் படுவதில்லை. எலெக்ட்ரான் நுண்ணோக்கி மூலம், அகப் பிளாச வலையைக் காணும் போது, சிறு இழைகளாலான வலை போன்று, நியூக்ளியசிலிருந்து செல் சவ்வு வரை பரவலாகக் காணப் படுகிறது. போர்ட்டர்கால்மன் என்பார் 1952இல் இந்நுண்ணிய வலைக்கு அகப் பிளாச வலை எனப் பெயரிட்டார். இது துகளுடையது (granular), துகளற்றது (agranular) என இரு வகைப் படும். இது மடிப்புகளாகவும் cisternae) நுண் குழல்களாகவும், (fabules), நுண் பைகளாகவும் (vesicles) காணப் படும். இவ்வலையின் சவ்வுகள்,. செல் பிளாசத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கின்றன. சுரத்தல் பொருள்கள், உட் கழிவுப் பொருள்கள், விழுங்கு பொருள்கள் (phagoeytic material) ஆகியவற்றை உள்ளடக்கியது ஒரு பகுதியாகும், மைட்டோகாண்ட்ரியங்கள், ரிபோசோம்கள், செல் நுண் பொருள்களை உள்ளடக்கியது மற்றொரு பகுதியாகும், இவ்வலை 50 ஆங்க்ஸ்ட்ராம் தடிமனுடைய சவ்வுகளால் ஆனது. இது பிளாஸ்மா சவ்வை விட மெல்லியது. செல்கள் அரைக்கப்பட்டு, மைய விலக்கு விசைக்கு (centrifugation) உட்படுமேயானால், நுண் துகள்களாகக் காணப் படுபவை பெரும்பாலும், அகப் பிளாச வலைத் துகள்களேயாகும். அகப் பிளாச வலை, அகப் பிளாசத்தின் தாங்கு பொருளாக அமைகிறது. ரிபோசோம்கள் ஒட்டியுள்ள அகப் பிளாச வலை புரதச் சேர்க்கைக்கும், கிளைக்கோஜன், கொழுப்பு ஆகியவற்றின் ஆக்கத்திற்கும் பெரிதும் பயன் படுகிறது. கொழுப்புச் சேமிப்பிலும், கொழுப்பை ஏனைய செல் நுண் உறுப்புகளுக்கு எடுத்துச் செல்வதிலும், அகப் பிளாச வலையே பயன் படுகிறது. ஸ்டீராய்டு ஹார்மோன்களுக்கு (steriod hormones) முன்னோடியாகக் கருதப் படும் கொலஸ்ட்ரால் ஆக்கமும், அகப் பிளாச வலையில் நடை பெறுகிறது. மேலும், பெர் ஆக்சிடேஸ் (peroxidase) மிகுந்துள்ள நுண்ணமைப்புகளின் ஆக்கமும், அகப் பிளாச வகையில்தான் நடை பெறுகிறது. பல உயிரியச் செயல்கள், அகப் பிளாச வலை வாயிலாகவே நடை பெறுகின்றன. மைட்டோகாண்ட்ரியங்கள். மைட்டோகாண்ட்ரியங்கள், செல்லின் ஆற்றல் ஆலைகளாகச் (power centres) செயல் படுகின்றன. அனைத்து வகைச் செல்களிலும் இவை காணப் படுகின்றன. கோலிகர் என்பார், இவை துகள்கள் போன்றவை எனக் கூறினார். 1882இல் ஃபிளமிங் என்பார், மைட்டோ காண்ட்ரியங்கள் இழைகள் போன்றுள்ளன என்று கூறினார். 1898இல் பென்டா என்பார், இவை நூல்கள் போன்று காணப் படுவதால், நூல் துகள்கள் அல்லது மைட்டோகாண்ட்ரியங்கள் என்று பெயரிட்டார். 1940இல் பேலேடும், 1950இல் ஜோஸ்ட்ரேண்டும் மைட்டோகாண்ட்ரியங்களின் நுண் அமைப்பை, எலெக்ட்ரான் நுண்ணோக்கியின் மூலம் விளக்கினர். மைட்டோகாண்ட்ரியங்கள் நொதிகள் நிறைந்தவை; செரித்த உணவுப் பொருள்கள் இவற்றில் ஆக்சிஜனேற்றம் அடைவதால், ஆற்றல் வெளிப் படுகிறது. மைட்டோகாண்ட்ரியங்கள் 3–4 மைக்ரான் நீளமும், 0.5–1 மைக்ரான் விட்டமும் உடையவை. இவை பல உருவங்களில் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை செல் வகைக்கேற்பவும், செல்லின் ஆக்கச் சிதை மாற்ற நிலைக்கு (metabolic rate) ஏற்பவும் அமையும். இவை பாக்டீரியாக்களில் காணப் படுவதில்லை. விந்தணுக்களில் இவை 20–24 வரை காணப் படுகின்றன. சினையணுக்களில், 300000 வரை காணப் படுகின்றன. கயாஸ் கயாஸ் (Chaos chaos) என்ற முன்னுயிரியில் (protozoa) 500000 மைட்டோ காண்ட்ரியங்கள் காணப் படுகின்றன. பொதுவாக, உயிரணுக்களின் அகப் பிளாசத்தில் மைட்டோ காண்ட்ரியங்கள் ஒரே சீராகப் பரவியுள்ளன. எனினும், செல்களின் தன்மைக்கு ஏற்ப, அவை சில இடங்களில் மிகுதியாகவும், வேறு சில இடங்களில் குறைவாகவும் உள்ளன. ஒரு சில செல்கள் தவிர, ஏனையவற்றில் நகரும் தன்மை பெற்றுள்ளன. எலெக்ட்ரான் நுண்ணோக்கி வாயிலாக, மைட்டோகாண்ட்ரியத்தைக் காணும் போது, அது இரு சவ்வுகளால் ஆக்கப்பட்டமை தெரிய வரும். புறச் சவ்விற்கும், அகச் சவ்விற்கும் இடையில் உள்ள இடைவெளிக்குச் சவ்விடை வெளி (inter membrane space) என்று பெயர். இது 40–70 ஆங்க்ஸ்ட்ராம் அகலமுடையது. இதைச் சூழ்ந்து, ஒரு நீர்மம் உள்ளது. அகச் சவ்வில், பல உள் மடிப்புகள் உள்ளன. அம்மடிப்புகளுக்கு மைட்டோகாண்டிரிய கிரிஸ்ட்டே (cristae) என்று பெயர். இம்மடிப்புகளுக்கிடையில் உள்ள இடைவெளிகளுக்கு அக அறைகள் என்று பெயர். இவற்றினுள் செல்லிடைப் பொருள் உள்ளது. இதனுள், அடர் துகள்களும், ரிபோ துகள்களும், மைட்டோ காண்டிரிய டி ஆக்சிரிபோநியூக்ளியிக் அமிலங்களும் காணப் படுகின்றன. மைட்டோகாண்ட்ரியங்கள் 5–10 நாள்கள் மட்டுமே வாழ்கின்றன. இவற்றின் பிறக்கம் (origin) குறித்து, மூன்று வகையான கருத்துகள் நிலவுகின்றன. அவை ஏனைய சவ்வுகளிலிருந்து தோன்றல், பகுபடுதல் வாயிலாகப் புதியன தோன்றல், புதிதாக ஆக்கப் பட்டுத் தோன்றல் என்பனவாகும். மைட்டோ காண்டரியங்களே செல்லின் உயிரியக்கச் செயல்களுக்குத் திறன் தருபவை. இங்குதான் பொருள்கள் ஆக்சிஜனேற்றம் அடைந்து, ஆற்றல் வெளிப்படுத்தப் படுகிறது. ஆற்றல் வெளியேற்றத்திற்காக உள்ளேற்கப் பட்ட உணவுப் பொருள்கள் பல வேதி மாற்றங்களை அடைகின்றன. செல்லின் பல செயல்களுக்கு, மைட்டோகாண்ட்ரியங்கள் காரணமாக உள்ளன. செல் சுவாசம், பைருவிக் அமிலம் ஆக்சிஜனேற்றம் அடைதல், கிரெப் சிட்ரிக் அமிலச் சுழற்சி, ஆக்சிஜனேற்ற பாஸ்ஃபோரிலேற்றம் (oxidative phosphorylation) ஆகிய உயிரியச் செயல்கள் மைட்டோகாண்ட்ரியங்களிலேயே நடை பெறுகின்றன. செல் சுவாசித்தலின் போது, ஏற்படும் ATP மூலக் கூறுகள் எங்கு ஆற்றல் அதிகம் தேவையோ, அங்கு எடுத்துச் செல்லப் படுகின்றன. கொழுப்பாக்கத்திலும் மைட்டோகாண்ட்ரியங்கள் பங்கு கொள்கின்றன. தன்னழிவுப் பைகள் (lysosomes). 1949ஆம் ஆண்டு மைய விலக்கு விசைக்கு உட்படுத்தப்பட்ட போது, ரிபோசோம்களுக்கும், மைட்டோகாண்ட்ரியங்களுக்கும் இடைப்பட்ட சில அடர் துகள்கள் காணப் பட்டன. அவற்றிற்குப் பெரிகேனாலிகுலர் நுண்ணமைப்புகள் (pericanalicular bodies) எனப் பெயரிட்டனர். பின்னர் 1955இல் திதுவே என்பார் இத்துகள்களில் உள்ள நொதிகள் செல் நண்ணுறுப்புகளை அழிக்கும் ஆற்றல். படைத்தவை என்பதை அறிந்து இவற்- றிற்குத் தன்னழிவுப் பைகள் எனப் பொருள் படும் லைசோசோம் (lysosome) என்று பெயரிட்டார். லைசோசோம்கள் அகப் பிளாச வலையிலிருந்தோ, கோல்கை அமைப்பிலிருந்தோ, தோன்றுகின்றன. பின்னர், இவை உட்குழிவினாலோ, தன்விழுங்கு முறையினாலோ, ஏற்படும் பைகளுடன் இணைகின்றன. கோல்கை அமைப்பிலிருந்து தோன்றும் முதனிலைத் தன்னழிவுப் பைகளில் (primary lysosomal bodies), நீரேற்றிப் பிரிக்கும் நொதிகள் (hydrolytic enzymes) காணப் படுகின்றன. 1960இல் நோவிகாஃப் என்பார், லைசோசோம்கள் உட்குழிவுப் பைகளிலிருந்து உண்டாகின்றன என்று கூறினார். தன்னழிவுப் பைகளில் உள்ள நொதிகளைச் சூழ்ந்துள்ள சவ்வு, அதனுள் உள்ள நொதிகளால் பாதிக்கப் படுவதில்லை; இச்சவ்வு மிக மெல்லியதாக உள்ளது. இச்சவ்விலிருந்து நொதிகள் வெளிப்படுமேயானால், செல்லில் உள்ள அனைத்து நுண் உறுப்புகளையும் அழித்துச் செல்லையும் அழித்து விடும். எனவே, இவற்றைத் தற்கொலைப் பைகள் எனலாம். ஏறத் தாழ, 40 வகை நொதிகள் தற்கொலைப் பைகளினுள் காணப் படுகின்றன. ஒரே செல்லில், இவை பல உருவங்களில், காணப் படுகின்றன. இவற்றிலுள்ள நொதிகள் செல்லிடைச் செரிமானத்திற்கும், செல்லுள் செரிமானத்திற்கும் (intra cellular digestion) பயன் படுகின்றன. மேலும், இவை ஹார்மோன் சுரத்தலிலும், பங்கு கொள் கின்றன. கருவுதலின் போது, விந்துணுக்களில் உள்ள அக்ரோசோம்களில் உள்ள தன்னழிவுப் பைகள் உடைந்து வெளிப்படும் நொதிகள், முட்டை உறையை கரையச் செய்கின்றன. நுண்ணிழைகள் (microfilaments). நியூக்ளியசுள்ள உயிரணுக்களின் அகப் பிளாசத்தில் பல நுண்ணிழைகளும், நுண் குழல்களும் காணப் படுகின்றன. இவை நியூக்ளியசற்ற செல்களில் காணப் படுவதில்லை. நுண்ணிழைகள் இரு வகைப் படும். அவை 1.50–70Å விட்டமுடைய நுண்ணிழைகள், 2,100 Å விட்டமுடைய நுண்ணிய நரம்பிழைகள் (neuro filaments ) என்பன. முன்னவை செல் பகுபடுதலின் போது, உண்டாகும் பிளவுப் பள்ளம் ஏற்படவும், தாவரச் செல்களில் புரோட்டாபிளாச இயக்கத்திற்கும் பயன் படுகின்றன; பின்னவை, பொருள்களை ஆக்க மையத்திலிருந்து, ஆக்சானின் நுனி வரை கடத்தப் பயன் படுகின்றன. நுண் குழல்கள். டீராபர்ட்டீசும், பிராங்கையும் 1953இல் நரம்புச் செல்லின் சைட்டோப் பிளாசத்தில் இவற்றைக் கண்டு பிடித்தனர். இவை நியூக்ளியசுள்ள செல்களின் செல் பிளாசத்தில் மட்டும் காணப் படுகின்றன. அமீபாவின் போலிக் கால்களிலும் மறைமுகப் பகுப்பின் கதிர் இழைகளிலும் (mitotic spindle), காணப் படும் நுண் குழல்கள் நிலையானவையாக உள்ளன. இக்குழல்கள், பொதுவாக விறைப்பான தன்மை வாய்ந்தனவாக அமைந்து, செல் சட்டமாகக் (cytoskeleton) காணப் படுகின்றன. நுண் குழல்கள், செல் நுண் உறுப்புகள் பலவற்றில் காணப் படுகின்றன. நீளிழைகள், குற்றிழைகள், மையத் துகள்கள், அடித் துகள்கள் (basal bodies), நரம்புச் செல்கள், முன்னுயிரிகளின் ஆக்சோபோடியங்கள் (axopodia). குச்சிப் போலிக் கால்கள், குருதி நுண் தட்டுகள் (blood platelets), மறைமுகப் பகுப்பின் இழைகள், உணர் செல்கள் (sensory cells) போன்றவற்றில் இவற்றைக் காணலாம். நுண் குழல்கள் நீளக் குழல் போல உள்ளன. புற விட்டம் 250Å ஆகும். குழல் சுவரின் தடிமன் 50Å ஆக உள்ளது. குழலின் விட்டம் 150 Å: நீளம் பல மைக்ரான் வரை உள்ளது. நுண் குழல்கள் 13 சிற்றலகுகளால் ஆனவை. அவற்றிற்கு முன்னிழைகள் (protofilaments) என்று பெயர். நுண் குழல்கள் செல்களின் உருவத்தை நிலைப் படுத்தவும், செல் சவ்வின் இயக்கத்திற்கும், குற்றிழை, நீளிழைகளின் இயக்கத் திற்கும், செல் பகுப்பின் போது, குரோமோசோம்களின் இடப் பெயர்ச்சிக்கும், செல் பொருள்களை எடுத்துச் செல்வதற்கும், கரு வளர்ச்சியின் போது, நடை பெறும் உருவத் தோற்றத்திற்கும் (morphogenesis), உணர்வு அலை மாற்றத்திற்கும் (sensory transduction) பயன் படுகின்றன. மைய அமைப்பு. இவ்வமைப்பு, மையத் துகள்களை (centrioles) உடையது. இது, பெரும்பாலும் நியூக்ளியாசின் பக்கத்தில் கோல்கை அமைப்பிற்கு நடுவில் காணப் படுகிறது. இவ்வுறுப்பு உயர் விலங்குகளில் செல் பகுபடும் போது, செயல் படுகிறது.மையத் துகள்கள் உருவ அமைப்பில், நீளிழைகளில் காணப் படும் அடித் துகள்களை ஒத்துள்ளன. இவற்றின் தலையாய செயல் அசைவு இயக்கமாகும். மறைமுகப் பகுப்பில் செல் பகுபடும் போது, குரோமசோம்கள் இரு தொகுதிகளாகப் பிரிக்கப் பயன் படுகின்றன. முதிர்ந்த மையத் துகள்கள் 1600–2500 Å விட்டமும், 1600–8000Å வரை நீளமும் உடையன. பெரிய மையத் துகள்கள் சினையணுக்களில் காணப் படுகின்றன. செல் பகுபடுதலில், மையத் துகள்கள் பெரும் பங்கு கொள்கின்றன. கோல்கை அமைப்பு. கேமில்லோ கோல்கை (Camillo golgi) என்பார், 1898இல் இந்நுண்ணுறுப்பைச் செல்களில் கண்டு பிடித்ததால் இதற்குக் கோல்கை அமைப்பு என்று பெயரிடப்பட்டது. இது துகள்களற்ற அகப் பிளாச வலையால் ஆக்கப் பட்டுள்ளது. இதில் காணப்படும் சவ்வுகள், கொழுப்புத் துகள்களால் ஆக்கப் பட்டவை. இதற்கு டிக்டியோ சோம் (dictyosome) என்றும் ஒரு பெயர் உண்டு. தாவரச் செல்களிலும் விலங்குச் செல்களிலும் உள்ள கோல்கை நுண்ணுறுப்பு உருவத்தாலும், செய- லாலும் ஒத்திருக்கும். பெரும்பாலும், கோல்கை நுண்ணுறுப்பு நியூக்ளியசுக்கு மேற்பகுதியில் மைய அமைப்பைச் சூழ்ந்து, மெல்லிய சவ்வுகளால் ஆக்கப் பட்டதாகும். இது சுரத்தலில் ஈடுபட்டுள்ள செல்களில் (secretory cells) பெரும்பான்மையாகக் காணப் படுகிறது. சில செல்களில் இந்நுண்ணுறுப்பு, ஒரு குறிப்பிட்ட இடத்திலும், வேறு சிலவற்றில் செல் பிளாசம் முழுதும் துகள்களாகவும் காணப் படும். எலெக்ட்ரான் நுண்ணோக்கி கண்டு பிடித்த பின்னரே, கோல்கை நுண்ணுறுப்பின் உருவ அமைப்பையும், அதன் செயல்பாடுகளையும் நன்கு விளக்க முடிந்தது. பொதுவாக இவ்வுறுப்பு மூன்று வகை அமைப்புகளாகக் காணப் படுகிறது. அவை தட்டையான பைகள் (cisternae). நுண் குழல் கொத்துகள் அல்லது பைகள், துகள்கள் நிறைந்த அல்லது துகளற்ற குமிழ்கள் என்பன ஆகும். பெரும்பாலும், தட்டைப் பைகள், இணையாக ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்துள்ளன. இப்பைகள் ஒவ்வொன்றுக்கும் இடையே, 20–30 நானோ மீட்டர் வரை (நானோ மீட்டர் = 10-6மி.மீ.) இடைவெளி உள்ளது. இப்பைகள் பெரும்பாலும், மிக நெருக்கமாக அமைந்துள்ளன. ஒவ்வொரு செல்ளிலும் 3–7 பைகள் உள்ளன. எனினும், சில பாசிகளில் 10–20 பைகளும் காணப் படுவதுண்டு. கோல்கை நுண்ணுறுப்பு, செல்களின் பல உயிரியக்கச் செயல்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது. பொதுவாக, சுரத்தலில் ஈடுபடும் இவ்வமைப்பு, புரதச் சேர்க்கையிலும் பங்கு கொள்கிறது. பாலி சாக்கரைடுகளின் ஆக்கத்திலும், இது பங்கு பெறுகிறது. சல்ஃபேட் சிதை மாற்றங்கள், பிளாஸ்மாச் சவ்வு ஆக்கம் போன்ற செல் செயல்பாடுகளிலும் பங்கு கொள்கிறது. தாவரச் செல்களின் செல் சுவர், கோல்கை உறுப்பிலிருந்து உண்டாகிறது. ஸ்டீன், ஸ்டீன் ஆகியோர் கதிரியக்கப் பதிவு முறையை 1967இல் பயன் படுத்திச் செரிக்கப்பட்ட கொழுப்புப் பொருள்கள் கோல்கை உறுப்பு வாயிலாக, ஏனைய நுண்ணுறுப்புகளுக்கு எடுத்துச் செல்வதை அறிந்தனர். விந்தணுக்களின் அக்ரோசோம் கோல்கை நுண்ணுறுப்பால் ஆனது. தன்னழிவுப் பைகள் கோல்கை உறுப்பிலிருந்து உண்டாகின்றன என்பதை, நோவிகாஃப்பும், அவருடன் பணியாற்றிய ஏனைய உயிரியல் அறிஞர்களும் கண்டறிந்தனர். முதுகெலும்பிகளிலும், முதுகெலும்பற்றவையிலும் உள்ள நரம்பிய சுரப்புத் துகள்கள் (neuro secretory granules) கோல்கை நுண்ணுறுப்பின் பக்கத்தில் மிகுதியாகக் காணப் படுவதால், இத்துகள்கள் சுரக்கப் படுதலில் கோல்கை நுண்ணுறுப்பு பெரும் பங்கு கொள்வதாகக் கருதப் படுகிறது. மெலானின் நிறமித் துகள்கள் சுரக்கப் படுதலிலும், இது பங்கு கொள்கிறது. கீழ் நிலைப் பின்னுயிரிகளிலும் (lower metazoa) முன்னுயிரிகளிலும் நீர்மச் சம நிலைப் பேணுதலுக்குக் கோல்கை நுண் உறுப்பே காரணமாக உள்ளது. நியூக்ளியஸ். தெளிவுற அமைந்த நியூக்ளியசற்ற உயிரிகள் (prokaryotes) தவிர, ஏனைய உயிரிகள் அனைத்திலும் உள்ள செல்களில் நியூக்ளியஸ் காணப் படுகிறது. பொதுவாக, இது செல் பிளாசத்தின் மையத்தில் காணப் படுகிறது. ஆனால், சில செல்களில் அடிப் பகுதியில் காணப் படுகிறது. நியூக்ளியஸ் பொதுவாக, வட்டமாக, முட்டை வடிவாக அல்லது தட்டு வடிவாகக் காணப் படுகிறது. ராபர்ட் பிரவுன் என்பார், 1835இல் செல்களின் நியூக்ளியசைப் பற்றிய செய்திகளை வெளியிட்டார்; நியூக்கிளியசின் அளவு செல்களின் வகைக்கு ஏற்ப மாறு படுகிறது. அதன் அளவிற்கும், அதனுள் காணப்படும் செல் பிளாசத்திற்கும் உள்ள விகிதத்தை நியூக்ளிய செல் பிளாசக் குறியீட்டால் (nucleoplasmic index) குறிப்பிடுகின்றனர். இதைக் கீழ் வரும் வாய்பாட்டால், ஹெர்ட்விக் என்பார், 1906இல் விளக்கினார். ஒளி நுண்ணோக்கி மூலம் பார்க்கும் போது, நியூக்ளியசைச் சூழ்ந்து, ஒரு சவ்வு காணப் படுகிறது. இது ஒரே சவ்வால் ஆனது போலத் தோன்றுகிறது. எலெக்ட்ரான் நுண்ணோக்கி வாயிலாகக் காணும் போது, இச்சவ்வு இரு சவ்வுகளால் ஆனது என்றும், இரு சவ்வுகளுக்கிடையே உட்கருச் சூழ்வெளி (perinuclear space) காணப் படுகிறது என்றும் கண்டறிந்தனர். மேலும், இச்சவ்வு துளைகளுடையது என்பதும் தெரிய வந்தது. ஒவ்வொரு துளையும் ஒரு வளையத்தால் (annulus) சூழப் பட்டுள்ளது. எலெக்ட்ரான் நுண்ணோக்கி கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே, நியூக்ளியசின் நுண் பகுதிகளும், செயல்களும் விரிவான முறையில் விளக்கப் பட்டன. பொதுவாக, நியூக்ளியசை நான்கு பகுதிகளாகப் பிரித்து விளக்கலாம். அவை நியூக்ளியச் சவ்வு, நியூக்கிளியப் பிளாசம் (nucleoplasm), குரோமேட்டின் இழைகள் (chromatin fibres), நியூக்ளியோலஸ் என்பன ஆகும். நியூக்ளியச் சவ்வு. நியூக்ளியசைச் சூழ்ந்து காணப் படும் துளைகளுடைய இரு சவ்வினால் ஆகிய சவ்விற்கு, நியூக்ளியச் சவ்வு என்று பெயர். இது நியூக்ளியசைச் செல் பிளாசத்திலிருந்து பிரித்துக் காட்டுகிறது. இச்சவ்வில் காணப்படும் துளைகள் வாயிலாகப் பல இன்றியமையா நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன. பெரிய மூலக் கூறுகள் செல் பிளாசத்தி- லிருந்து இத்துளைகள் வழியாகவே, நியூக்ளியசுக்குள் செல்கின்றன. எனினும், இத்துளைகளை விடப் புரத மூலக் கூறுகள் சிறியவாயினும், அவற்றின் வழிச் செல்வதில்லை. நியூக்ளியப்பிளாசம். நியூக்ளியசின் உட்பகுதி, ஒளி ஊடுருவத் தக்க துகள்களுடைய கூழினால் நிரப்பப் பெற்றுள்ளது. இதில் நியூக்ளிய அமிலங்களும், நியூக்ளியப் புரதங்களும், சில நொதிகளும் காணப் படுகின்றன. DNA, பாலிமெரெஸ், அடினோசின் டை அமினேஸ், நியூக்ளியோசைடு, பாஸ்ஃபோரிலேஸ் போன்றவை அவற்றுள் குறிப்பிடத் தக்கன. குரோமேட்டின் இழைகள். நியூக்ளியப் பிளாசத்தில் காணப் படும் நூல் போன்ற சுருண்ட இழைகளுக்குக் குரோமேட்டின் இழைகள் என்று பெயர். இவ்விழைகள் செல் பகுபடும் போது, தடித்துக் குட்டையாகக் காணப் படுகின்றன. அவற்றிற்குக் குரோமோசோம்கள் என்று பெயர். குரோமேட்டின் இழைகளில் டி ஆக்சிரிபோ நியூக்ளியிக் அமிலம், ரிபோநியூக்ளிக் அமிலம் ஆகியவையும், புரதங்களும் காணப் படுகின்றன. ஹெட்டிரோ குரோமேட்டின். இறுகிய நிலையிலுள்ள குரோமேட்டிக் இழைகளைக் கொண்ட ஹெட்டிரோ குரோமேட்டின் பகுதிகள், யூக்குரோமேட்டிடை விட, இரண்டு அல்லது மும்மடங்கு அதிகமான DNAஐப் பெற்றிருந்தாலும், RNA தயாரிப்பில் ஈடு படுவதில்லை. நியூக்ளியோலஸ். ஃபாண்ட்டனா என்பார், 1781இல் நியூக்ளியசில் நியூக்ளியோலஸ் உள்ளமையைக் கண்டறிந்தார். செல்களின் செயல் திறனுக்கு ஏற்ப, நியூக்ளியோலசின் அளவு வேறு படுகிறது. விந்தணுக்களிலும், தசை நார்களிலும் நியூக்ளியோலஸ் சிறியதாக உள்ளது. சுரக்கும் செல்களில், நியூக்ளியோலஸ் பெரியதாக உள்ளது. இனத்திற்கு இனம் நியூக்ளியோலசின் எண்ணிக்கை வேறு படும். பெரும்பாலும், ஒரு செல்லில் நியூக்ளியோலஸ் 1–4 வரை காணப் படும். இது நியூக்ளியசின் மையப் பகுதியினின்று விலகியே அமைந்துள்ளது. எலெக்ட்ரான் நுண்ணோக்கி கண்டு பிடிக்கப் பட்ட பின்னர், நியூக்ளியோலசில் மூன்று பகுதிகள் உள்ளன என்பது தெரிய வந்தது. அவை, துகளுடைய பகுதி (granular region). இழைப் பகுதி (fibrillar region), துகளற்ற பகுதி (amorphous region) என்பனவாகும். நியூக்ளியோலசில் புரதமும், ரிபோ புரதமும் காணப் படுகின்றன. மேலும், அமில பாஸ்ஃபட்டேஸ் நியூக்ளியோசைடு பாஸ்ஃபோரிலேஸ் நொதிகளும் உள்ளன. செல்களில் காணப் படும் ரிபோ நியூக்ளியிக் அமிலத்தில், 70–90 நியூக்ளியோலசால்தான் ஆக்கப் படும். புரதச் சேர்க்கையும், நியூக்ளியோலசில்தான் நடை பெறுகிறது. ரிபோசோம்களும், நியூக்ளியோலசிலிருந்தே உண்டாகின்றன. நியூக்ளியசின் செயல்பாடுகள். செல்களின் செயல்பாடுகள் அனைத்தும் நியூக்ளியசிலிருந்தே கண்காணிக்கப் படுகின்றன. பாரம்பரியப் பொருளை ஒரு செல்லிலிருந்து மற்றொன்றுக்கு எடுத்துச் செல்ல, நியூக்ளியசே காரணமாகும். நியூக்ளியஸ் இல்லையெனில், செல்கள் தொடர்ந்து செயல் படுவதில்லை. —ச. சம்பந்தம் செல் ஆக்கச் சிதை மாற்றம் உயிரிகளில் நடைபெறும் அனைத்து இயக்கங்களும், மூலக் கூறுகள் அளவில் உயிர் வேதி வினைகளாக நிகழ்கின்றன. உயிரினங்களில் மட்டுமே தொடர்ந்து நடைபெறும் இம்மாற்றங்கள் ஆக்கச் சிதை மாற்றங்கள் (metabolism) எனப்படும். உயிர் இயக்கங்கள் நடை பெறத் தேவையான வேதி ஆற்றலை வெளிப் படுத்தவும், வெளிப்பட்ட ஆற்றலைச் செல்லின் வளர்ச்சிக்குப் பயன் படுத்தவும், இம்மாற்றங்கள் உதவுகின்றன. ஆக்கச் சிதை மாற்றம், வளர் மாற்றம் (anabolism) எனவும், சிதைவு மாற்றம் (catabolism) எனவும் இரு வகைப் படும். வளர் மாற்றம் ஓர் ஆக்கல் நிகழ்ச்சி (constructive process) ஆகும். எளிய மூலக் கூறுகளான குளூக்கோஸ், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், கிளிசரால், நியூக்ளியிக் அமில மூலப் பொருள்கள் ஆகியவற்றிலிருந்து முறையே செல்களின் ஆக்கப் பொருள்களான கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புப் பொருள்கள், நியூக்ளியிக் அமிலங்கள் போன்றவை தயாரிக்கப் படுகின்றன. மேலும், எளிதாகப் பெறக் கூடிய ஆற்றல் அளிக்க வல்ல பொருள்களும், பெருமளவில் சேமித்து வைக்கப் படுகின்றன. இப்பொருள்கள் உயிரிகளின் வளர்ச்சிக்கும், அவை தொடர்ந்து உயிர் வாழ்வதற்கும், அவற்றின் திசுப் புதுப்பித்தலுக்கும் பயன் படுகின்றன. மேற்கூறிய பொருள்களின் தயாரிப்புக்குத் தேவையான வேதி ஆற்றல், அடினோசின் டிரை பாஸ்ஃபேட் (ATP) மூலக் கூறுகளிலிருந்து பெறப் படுகிறது. சிதைவு மாற்றம் ஒரு சிதைவுறு நிகழ்ச்சி (degradative process) ஆகும். உணவிலிருந்து பெறப் படும் எளிய மூலக் கூறுகளான குளூக்கோஸ், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் போன்றவையும் உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புப் பொருள்கள், புரதங்கள் ஆகியவையும் ஆக்சிஜனேற்றம் அடைந்து, சிதைக்கப் பட்டு, ஆற்றலை வெளிப் படுத்துகின்றன. இவ்வேதி ஆற்றல் ATP மூலக் கூறுகளில் சேமித்து வைக்கப் பட்டு, தேவையான போது பயன் படுத்தப் படுகிறது. சிதைவு மாற்றத்தின் முடிவில் உண்டாகும் கழிவுப் பொருள்கள் வெளியேற்றப் படுகின்றன. மாற்றமும், சிதைவு மாற்றமும் செல்களில் தொடர்ந்து நிகழ்கின்றன. இவ்விரு மாற்றங்- களும் ஒரே நேரத்தில் நிகழ்வனவல்லாமல், ஒன்றுடன் ஒன்று இணைந்தும் செயல் படுகின்றன. ஒவ்வோர் ஆக்கச் சிதை மாற்றமும், நேரடியான ஒரே மாற்றமாக நிகழாமல், ஒரு குறிப்பிட்ட வரிசையில் பல தொடர் மாற்றங்களாக நடை பெறும். இவற்றிற்கு ஆக்கச் சிதை மாற்றத் தொடர்ச்சி (metabolic path way) என்று பெயர். ஒவ்வொரு மாற்றத்தின் போதும், ஒரு குறிப்பிட்ட நொதி வினையூக்கியாகச் செயல் படுகிறது. மூலப் பொருள்கள், பல நடு நிலைப் பொருள்களாக மாற்றமடைந்து, இறுதியில் புரோட்டோப்பிளாசமாகவோ, கழிவுப் பொருள்களாகவோ மாற்றமடைகின்றன. சிதைவு மாற்றம். பசுமையான தாவரங்கள் ஒளிச் சேர்க்கையின் மூலம், ATP மூலக் கூறுகளை உண்டாக்குகின்றன. வேதி வினைத் தன் முனைப்புப் பாக்டீரியாக்கள் (chemoautotrophic bacteria) ஹைட்ரஜன், கந்தகம், இரும்பு, அம்மோனியா ஆகியவற்றை ஆக்சிஜனேற்றம் செய்து, அவற்றினின்று தேவையான ஆற்றலைப் பெறுகின்றன. இவை தவிர, மற்ற உயிரினங்கள் அனைத்தும் தங்களுக்குத் தேவையான ஆற்றலைத் தாவரங்களிடமிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெறுகின்றன. இவற்றின் மைட்டோகாண்டிரியங்களில் கரிமப் பொருள்கள் ஆக்சிஜனேற்றம் அடையும் போது, ஆற்றல் மிகுந்த ATP மூலக் கூறுகள் உண்டாக்கப் படுகின்றன. ATP மூலக் கூறு ஒவ்வொன்றும் அடினைன், ரிபோஸ், டிரைபாஸ்ஃபேட் ஆகிய மூன்றும் இணைந்ததாகும். ATP, ஒரு மூலக் கூறு நீர் இணையும் போது, ஒரு பாஸ்ஃபேட் பகுதி பிரிகிறது. இதற்கு, பாஸ்ஃபர நீக்கம் (de-phosphorylation) என்று பெயர். இம்மாற்றத்தால் அடினோசின் டைபாஸ்ஃபேட் (adenosine diphosphate–ADP) உண்டாகிறது. பாஸ்ஃபர நீக்கத்தின் போது, வெளிப் படும் வேதி ஆற்றல், செல் ஆக்கப் பொருள்கள் தயாரிப்புக்கு உதவுகிறது. அடினோசின் டைபாஸ்ஃபேட் மீண்டும் ஒரு பாஸ்ஃபர ஏற்றம் பெறும் போது, உணவுப் பொருள்களிலிருந்து கிடைக்கும் ஆற்றல் அதில் சேமித்து வைக்கப் படுகிறது. இம்மாற்றம் பாஸ்ஃபர ஏற்றம் (phosphyrylation) எனப்படும். சிதைவு மாற்றத்தில், கார்போஹட்ரேட்டுகளும், கொழுப்புப் பொருள்களும், புரதங்களும் முக்கிய பங்கேற்கின்றன. இவை, ஒவ்வொன்றின் ஆக்சிஜனேற்றமும், வெவ்வேறு முறைகளில் தொடங்கினாலும், அவற்றில் தொடர் மாற்றங்கள் ஒரு பொதுவான சிட்ரிக் அமிலச் சுழற்சியில் முடிவடைகின்றன. இந்தச் சுழற்சி, கிரப்ஸ் சுழற்சி என்றும், டிரைகார்பாக்சிலிக் அமிலச் சுழற்சி என்றும் குறிக்கப் படுகிறது. கார்போஹைட்ரேட்டுகள். உயிரிகளுக்கு ஆற்றலை அளிக்கும் பொருள்களில், கார்போஹைட்ரேட்டுகள் முக்கியமானவை. முக்கிய கார்போஹைட்ரேட்டுகளான ஸ்டார்ச் தாவரங்களிலும், கிளைக்கோஜன் விலங்குகளிலும் சேமிக்கப் படுகின்றன. இவ்விரு பொருள்களும், நொதிகளின் உதவியால் குளூக்கோஸ் மூலக் கூறுகளாக மாற்றப் படுகின்றன. இம்மூலக் கூறுகளும், நேரடியாக உணவிலிருந்து பெறப் படும் குளூக்கோஸ் மூலக் கூறுகளும், குளூக்கோஸ் சிதைவு (glycolysis) என்னும் சிதைவு மாற்றத்தின் மூலம், ஆற்றலை வெளிப் படுத்துகின்றன. ஆக்சிஜன் அற்ற நிலையில் ATP உண்டாக்கப் படும் முறைக்கு எம்டன் மேயர் ஹாஃப் தொடர் வழி (Embden–Meyer Hof pathway) எனப் பெயர். ஆக்சிஜன் உள்ள நிலையில் (aerobic condition) நடை பெறும் மாற்றங்கள் சிட்ரிக் அமிலச் சுழற்சியில் முடிவடைகின்றன. குளூக்கோஸ் மூலக் கூறு ஒவ்வொன்றும், சிட்ரிக் அமிலச் சுழற்சியின் முடிவில் 36 ATP மூலக் கூறுகளையும் (ஏறத் தாழ 686,000 கலோரி ஆற்றல்), நான்கு நீர் மூலக் கூறுகளையும், இரு கார்பன் டைஆக்சைடு மூலக் கூறுகளையும் வெளிப் படுத்துகிறது. ஆனால், ஆக்சிஜன் அற்ற நிலையில், குளூக்கோஸ் மிகக் குறைந்த அளவில், நான்கு ATP மூலக் கூறுகளை (ஏறத் தாழ 58,000 கலோரி ஆற்றல்) வெளிப் படுத்துகிறது. கொழுப்புப் பொருள்கள். உயிரிகளுக்கு மிகுந்த ஆற்றலையும், வெப்பத்தையும் அளிப்பது கொழுப்புப் பொருள்களேயாகும். கொழுப்பு மூலக் கூறுகள், கொழுப்பு அமிலங்களும், கிளிசரால் பகுதிகளும் இணைந்தவை ஆகும். கொழுப்பு அமிலத்தில் உள்ள இரண்டாம் கரிம அணு ஆக்சிஜனேற்றம் அடைவதால், இதற்குப் பீட்டா ஆக்சிஜனேற்றம் (β–oxidation) என்று பெயர். இம்மாற்றத்தில் உண்டாகும் பொருள்கள், சிட்ரிக் அமிலச் சுழற்சியில் இணைகின்றன. மைட்டோகாண்ட்ரியங்களில் உள்ள நொதிகள் வினையூக்கிகளாகச் செயல் படுகின்றன. ஒவ்வொரு கொழுப்பு அமிலமும் முடிவில் 17 ATP மூலக் கூறுகளை உண்டாக்குகிறது. கொழுப்பு அமிலத்தைப் போன்று, கிளிசரால் பகுதியும் பாஸ்ஃபேட்டுடன் இணைந்து, குளூக்கோஸ் சிதைவு மாற்றத் தொடர் வழியுடன் சேர்ந்து விடுகிறது. ஆகவே, கொழுப்புப் பொருள்கள், சர்க்கரைப் பொருள்களை விட மிகுதியான ஆற்றலை வெளிப் படுத்துகின்றன. புரதங்கள். புரதங்களின் அடிப்படை அலகுகளான அமினோ அமிலங்கள், இரு வழிகளில் சிதைவு மாற்றமடைகின்றன. அவை அமினோ நீக்கம் (deamination), அமினோ மாற்றம் (trans-amination) எனப் படும். அமினோ நீக்க முறையில், அமினோ அமிலத்தின் அமினோ பகுதி நீக்கப்பட்டு, நீர் வாழ்விகளில் அம்மோனியாவாகவும், நில வாழ்விகளில் யூரியா மற்றும் யூரிக் அமிலமாகவும் வெளியேற்றப் படுகின்றன. அமினோ பகுதி நீக்கப்பட்ட அமினோ அமிலம் மாற்றங்களடைந்து, சிட்ரிக் அமிலச் சுழற்சியில் இணைகிறது. அமினோ மாற்ற முறையிலும், அமினோ பகுதி, கீட்டோ அமிலமாக மாறிச் சிட்ரிக் அமிலச் சுழற்சியில் சேர்கிறது. இவ்வாறு, சிட்ரிக் அமிலச் சுழற்சியின் பல நிலைகளில் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புப் பொருள்கள் இணைகின்றன. இதற்கு இடை நிலை ஆக்கச் சிதை மாற்றம் (intermediary metabolism) என்று பெயர். சிட்ரிக் அமிலச் சுழற்சி கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புப் பொருள்கள் ஆகியவற்றின் ஆக்கச் சிதை மாற்றத்தில், மிகச் சிறப்பான பங்கேற்பதால், இச்சுழற்சியை ஆக்கச் சிதை மாற்ற ஆலை (metabolic mill) எனலாம். வளர் மாற்றம். உயிரிகள், ATP மூலக் கூறுகளில் சேமித்து வைக்கப் பட்டுள்ள வேதி ஆற்றலைப் பயன் படுத்திச் செல் பொருள்களான கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புப் பொருள்கள். நியூக்ளிய அமிலங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றன. மேலும், தேவைக்கதிகமான சர்க்கரை மற்றும் கொழுப்புப் பொருள்களைச் சேமிப்பதற்கும், இவ்வாற்றலைப் பயன் படுத்துகின்றன. தாவரங்கள் ஒளிச் சேர்க்கை மூலம், சாக்கரைடுகள், புரதங்கள், கொழுப்புகள், நியூக்ளியிக் அமிலங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கின்றன. இப்பொருள்கள் உயிரிகளின் வளர்ச்சிக்கும், அவை தொடர்ந்து உயிர் வாழ்வதற்கும், இனப் பெருக்கம் செய்வதற்கும் மிக இன்றியமையாதன ஆகும். தாமே உணவைத் தயாரிக்க இயலாத பிற முனைப்பு உயிரிகள் (heterotrophs) இவற்றை உணவின் மூலம் பெறுகின்றன. கார்போஹைட்ரேட்டுகள். குளூக்கோஸ், பழச் சர்க்கரையான ஃபிரக்ட்டோஸ், பால் சர்க்கரையான காலக்ட்டோஸ் ஆகிய ஒற்றைச் சர்க்கரைடுகளிலிருந்து சுக்ரோஸ், மால்ட்டோஸ், லாக்ட்டோஸ் ஆகிய இரு சாக்கரைடுகளும், மாவுப் பொருள், கிளைக்கோஜன், செல்லுலோஸ் ஆகிய பல சாக்கரைடுகளும் தயாரிக்கப் படுகின்றன. இதற்கு ATP மூலக் கூறுகளிலிருந்து வெளிப் படும் ஆற்றல் பயன் படுகிறது. தேவைக்கதிகமான குளூக்கோஸ், கிளைக்கோஜன் சிந்தடேஸ் என்ற நொதி மூலம், கிளைக்கோஜனாக மாற்றப் பட்டுக் கல்லீரல் சட்டகத் தசைகளிலும் (skeletal muscles) சேமிக்கப் படுகிறது. இம்மாற்றம்கிளைக்கோஜன் ஆக்கம் (glycogenesis) எனப் படுகிறது. கொழுப்புப் பொருள்கள். செல்களில், நடு நிலைக் கொழுப்புகள், ஸ்டீராய்டுகள் போன்ற கொழுப்புகளின் உற்பத்தி பல வித மூலக் கூறுகளின் இணைப்பால் நடை பெறுகிறது. ஒவ்வொரு கொழுப்பு அமிலமும்–ATP மற்றும் பல மூலக் கூறுகளுடன் இணைந்து, மாற்றங்கள் அடைந்து, குறிப்பிட்ட கொழுப்புப் பொருளை உண்டாக்குகிறது. ஸ்டீராய்டுகள் தயாரிப்பில், கொலஸ்ட்ரால் அடிப்படைப் பொருளாக உள்ளது. வைட்டமின் D, அட்ரினோ கார்ட்டினாய்டுகள், பாலின ஹார்மோன்கள் ஆகியன கொலஸ்ட்ராலில் இருந்து தயாரிக்கப் படும் ஸ்டீராய்டுகள் ஆகும். கார்போஹைட்ரேட்டுகளிலிருந்தும் சில கொழுப்புப் பொருள்கள் தயாரிக்கப் படுகின்றன. பெருமளவில் கிடைக்கும் கொழுப்புப் பொருள்கள் உள்ளுறுப்புகளைச் சுற்றிலும், தோலுக்கு கீழும், கொழுப்புத் திசுக்களாகச் (adipose tissues) சேமிக்கப் படுகின்றன. புரதங்கள். புரதங்கள், உயிரினங்களின் அடிப்படைப் பொருளான புரோட்டோ பிளாசத்தில் மிகுதியாக உள்ளன. புரதத் தயாரிப்புக்குத் தவிர்க்க முடியாத மிகவும் இன்றியமையாத ஏறத் தாழ, இருபதுக்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் தேவைப் படுகின்றன. உயிரிகள் இவற்றை உணவின் மூலமே பெற முடியும். அமினோ அமிலங்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் 100–1000, குறிப்பிட்ட வரிசையில் ரிபோசோம்களில் ஒவ்வொன்றாகச் சங்கிலித் தொடர் போல் இணைந்து, ஒரு குறிப்பிட்ட புரதத்தைத் தோற்றுவிக்கின்றன. ஒவ்வோர் அமினோ அமிலமும், ஒரு நொதியால் செறிவூட்டப்பட்டு RNAயில் உள்ள செய்திகளின் அடிப்படையில் மாற்றும் RNAக்களின் உதவியால், குறிப்பிட்ட வரிசையில் இணைக்கப் படும். நியூக்ளியிக் அமிலங்கள். நியூக்ளியிக் அமிலங்கள், பாரம்பரியப் பண்புகளைச் சந்ததிகளுக்கு எடுத்துச் செல்வது மட்டுமின்றி, புரதத் தயாரிப்பிலும், பெரும் பங்கு கொள்கின்றன. நியூக்ளியிக் அமிலங்களின் தயாரிப்பிற்கு நியூக்ளியோடைடுகள் அடிப்படையாக உள்ளன. ஒரு ரிபோஸ் அல்லது டீஆக்சிரிபோஸ், ஒரு பாஸ்ஃபேட் பகுதி, ஒரு பியூரின் அல்லது பைரிமிடின் மூலக் கூறு ஆகியவை இணைந்ததே ஒரு நியூக்ஸியோட்டைடு ஆகும். பல நியூக்ளியோட்டைடுகள் இணைவதால், டீ.ஆக்சிரிபோ நியூக்ளியிக் அமிலம் (DNA) மற்றும் ரிபோ நியூக்ளியிக் அமிலம் (RNA) ஆகிய இரு நியூக்ளியிக் அமிலங்கள் உண்டாக்கப் படுகின்றன. ஒன்று அல்லது இரண்டு பாஸ்ஃபேட் பகுதிகள் நியூக்ளியோட்டைடுடன் இணையும் போது, பல இன்றியமையாத மூலக் கூறுகள் தோன்றுகின்றன. ATP போன்ற சில மூலக் கூறுகளும், சில துணை நொதிகளும், அவற்றில் குறிப்பிடத் தக்கவை ஆகும். இவை உயிரிகளின் பல்வேறு இயக்கங்களுக்கு இன்றியமையாதவை. —எம். சுப்பிரமணியம் செல் உயிரியல் உயிரிகள் அனைத்தும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செல்களால் ஆக்கப் பட்டவை. உயிரிகளின் அனைத்துச் செயல்களுக்கும், அமைப்பிற்கும் செல்களே அடிப்படையாக உள்ளன. செல்களின் உள்ள மைப்பு மற்றும் செயல்கள் போன்றவற்றைப் பற்றிய விலங்கியல் பிரிவுக்குச் செல்லியல் அல்லது செல் உயிரியல் (cell biology) என்று பெயர். தக்கை பல செல்களால் ஆக்கப்பட்டுள்ளது எனும் கருத்தை இராபர்ட் ஹூக் வெளியிட்டார். லீவென் ஹாக் தாம் கண்டு பிடித்த நுண்ணோக்கியின் உதவியால், ஒரு செல் உயிரிகளையும், அவற்றில் உள்ள ஒரு சில செல் உறுப்புகளையும் கண்டார். மிர்பெல், ஓக்கென். லாமார்க், டுட்ரோஷெட், டர்பின் போன்றோர் செல் பற்றி மேலும் ஆராய்ந்தனர். இறுதியில், ஷ்லெய்டன் எனும் தாவரவியல் வல்லுநரும், ஷ்வான் எனும் விலங்கியல் வல்லுநரும் செல் பற்றிய ஒரு தெளிவான கோட்பாட்டை வெளியிட்டனர். அனைத்து உயிரிகளும், செல்களால் ஆனவை; செல் பகுபடுதலின் மூலமே, செல்கள் உண்டாகின்றன. என்பவை இக்கோட்பாட்டின் அடிப்படைக் கருத்துகள் ஆகும். உயிர் வேதியியல் வளர்ச்சியடைந்த பிறகு, ஒரே அடிப்படை அமைப்பைக் கொண்டுள்ள இவற்றின், வேதியியல் பொருள்களும் ஒரே தன்மையுடையன என்பது தெரிய வந்தது. ஓர் உயிரியின் செயல்கள் அனைத்தும், அதன் பல்வேறு பகுதிகளிலுள்ள செல்கள் யாவும் ஒன்றிணைந்து இயங்குவதாலேயே நடை பெறுகின்றன. கோலிக்கர் என்பார் விந்தணுச் செல்லும், சினையணுச் செல்லும் இணைந்தே கரு முட்டை (zygote) உருவாகிறது என்பதை விளக்கினார். பிரவுன் என்பார், செல்லின் உள்ளேயுள்ள நியூக்ளியசே செல்லின் அமைப்பு மாறாப் பகுதியென்றும், செல்லின் அனைத்துச் செயல்களையும் அதுவே தீர்மானிக்கிறது என்றும் முடிவு செய்தார். ஜார்டின், ஷுல்ட்ஸ், புர்கின்ஜி, வான் மோல் ஆகியோர் செல்லில் உள்ள பொருளுக்குப் புரோட்டாப்பிளாசம் என்று பெயரிட்டனர். புரோட்டோப்பிளாசத் திரளே ஒரு சவ்வினால் சூழப் பட்டு, நியூக்ளியசைப் பெற்றுள்ள செல்லாக அமைந்துள்ளது எனும் கருத்து, காலப் போக்கில் உருவாகியது. நியூக்ளியசிலுள்ள புரோட்டாப்பிளாசம் நியூக்ளியோப்பிளாசம் எனவும், செல் சவ்வுக்குள் நியூக்ளியஸ் வெளியே உள்ள புரோட்டாப்பிளாசம், சைட்டோபிளாசம் எனவும் பெயரிடப் பட்டன. செல்களின் நேர்முகப் பகுப்பை இராமாக் என்பார் விவரித்தார். ஃபிளமிங் என்பார், விலங்குகளிலும், ஸ்ட்ராஸ்பர்கர் என்பார், தாவரங்களிலும் மறைமுகச் செல் பகுப்பைக் கண்டறிந்தனர். பின்னர், மறைமுகப் பகுப்பின் போது, குரோமோசோம்கள் எனும் நியூக்ளிய இழைகள் உண்டாகின்றன என்று வால்டெயரால் கண்டறியப் பட்டது. சைட்டோப்பிளாசத்திலுள்ள செல் மையத்துகள் என்னும் பகுதியை, வான் பெனிடன், போவெரி ஆகியோரும், மைட்டோகாண்டிரியாவை ஆல்ட்மென், பென்டா ஆகியோரும், வலைப் பின்னல் அமைப்பைப் போர்ட்டா. பலேடு, தாம்சன் ஆகியோரும், சுரத்தலில் பெரும் பங்கு பெறும் கொள்கை அமைப்பைக் கோல்கை (Golgi) என்பாரும் கண்டு பிடித்தனர். எலெக்ட்ரான் நுண்ணோக்கி எக்ஸ் கதிர் விளிம்பு விலகல் முறை ஆகியவை கண்டு பிடிக்கப் பட்ட பின்னர், செல்லியலில் மிக நுட்பமான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. உடற்செயலியல், உயிர் வேதியியல் ஆகியவை செல் பற்றிய விபரங்களை நுட்பமாக அறியத் துணை புரிந்தன. ஒ. ஹெர்ட்விக், ஹெச்.ஃபோல், ஸ்ட்ரார்பார்கர் ஆகியோர் கருவுறுதலை ஆராய்ந்து, பண்புகள் ஒரு தலைமுறையிலிருந்து, அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் செல்வதற்குச் செல்லின் நியூக்ளியசே இயற்பியல் அடிப்படை எனும் கருத்தை உணர்த்தினர். ரூக்ஸ் என்பார், நியூக்ளியசிலுள்ள உட்கரு இழைகளே (chromatin) குரோமோசோம்களாக மாறுகின்றன என்பதை விளக்கினார். இக்குரோமோசோம்களே கடத்தப் படும் பொருள்களை உள்ளடக்கிய அடிப்படை அலகுகள் என்று வீஸ்மென் விளக்கினார். 1865இல் செல்லியல் அடிப்படைகளை அறியாமலேயே, கிரகர் மென்டல் என்பார், மரபியல் விதிகளை வகுத்தார். செல்லமைப்பு இவ்விதிகளின் படிச் செயல் படுவது பின்னர், தெளிவாக்கப் பட்டது. உடற்செல்களில் இரு மடங்கு குரோமோசோம்கள் இருப்பதும், இனப் பெருக்கச் செல்களில் ஒரு மடங்கே குரோமோசோம்கள் இருப்பதும் இதை நிறுவின. மார்கன், ஸ்ட்ர்டிவான்ட், பிரிட்ஜஸ் போன்றோர் குரோமோசோம்களிலுள்ள ஜீன்களே பாரம்பரிய அலகுகளைப் பெற்றுள்ளன என்பதையும், அவை குரோமோசோம்களில் நிலையான இடங்களில் உள்ளன என்பதையும் விளக்கினார். வேதியியல் மற்றும் இயற்பியல் ஆய்வுகளின் அடிப்படையில், செல் வேதியியல் உருவானது. இது செல் மூலக் கூறு அமைப்பையும், செல் இயக்கத்தையும் விளக்குகிறது. —கோ. நாராயணன் செல் ஊடுருவல் தேவையான பொருள்களை வெளியிலிருந்து பெறுவதும், உண்டாக்கும் பொருள்களை வெளியேற்றுவதும், செல்லின் பணியாகும். இவ்விதம் செல்லுக்கும், அதைச் சூழ்ந்துள்ள பகுதிக்கும் ஏற்படும் பரிமாற்றம் செல்லின் பிளாஸ்மா சவ்வின் வழியாகவே நடை பெற வேண்டியுள்ளது. இதை, செல் ஊடுருவல் (cell permeability) என்பர். இவ்விதப் பரிமாற்றம் பல வழிகளில் நடை பெறுகிறது. பரவுதல். பரவுதல் (diffusion) மூலம் கரைந்துள்ள பொருள் அடர்வு மிகுந்த பகுதியிலிருந்து, அடர்வு குறைந்த பகுதிக்குத் தானாகவே நகர்கிறது. நீர், ஆக்சிஜன், கார்பன் டைஆக்சைடு போன்றவை இவ்வாறு செல்லினுள் அல்லது அதற்கு வெளியே பிளாஸ்மா சவ்வில் புகுந்து செல்கின்றன. பரவுதல் மூலம் ஒரு பொருள் செல்லின் உட்புக, செல் தன் ஆற்றலைப் பயன் படுத்தத் தேவையில்லை; ஆனால், தன்னைச் சுற்றியுள்ள திசு நீர்மத்தில் அப்பொருள் அடர்வு மிகுந்திருக்க வேண்டும். இவ்விதம் பிளாஸ்மா சவ்வின் வழியாகப் பரவுதல் மூலம் புகுவதற்குப் பொருளின் பல பண்புகள் காரணமாகின்றன. 1. சவ்வின் வழியாகப் பரவுவது பொருளின் மூலக் கூறு எடையைப் பொறுத்தது; கூடுதலான எடை இருப்பின், குறைந்த விகிதத்தில் ஊடுருவும்; 2. அப்பொருள் எண்ணெய், கொழுப்பு போன்றவற்றில், கரையும் தன்மை கொண்டது. அது மிகுதியாகக் கரையுமெனில், மிக எளிதாகச் செல்லின் உள்ளேயோ, வெளியேயோ நகரும். சான்றாக, எத்தனால் (சாராயம்), யூரியா இரண்டுமே அதிக வேறுபாடு அற்றவை; ஆயினும், யூரியாவை விட 100 மடங்கு மிக விரைவில் செல்லும்; 3. அயனியின் மின் திறன் உள்ளவற்றை விட மிக எளிதில் உட்புகும்: 4. இறுதியாக மூலக் கூற்றின் வடிவம், உட்புகும் விகிதத்தை அறுதியிடுகிறது; உருண்டை வடிவ மூலக் கூறுகள், மிகவும் சமச் சீர்மையற்ற (asymmetric) மூலக் கூறுகளை விட, மிக விரைவில் சவ்வின் ஊடே பரவும். பிளாஸ்மா சவ்வின் உள்ளே அமைந்திருக்கும் பரிமாற்ற அமைப்புகள், பொருள்களின் இயக்கத்தை மிகவும் தேர்ந்தெடுத்த முறையில் அதிகரிக்கின்றன. ஒவ்வொரு போக்குவரத்து அமைப்பும், ஒரு செல்லின் ஆக்கச் சிதை மாற்றத்துக்கு மிகவும் இன்றியமையாத, குறிப்பிட்ட தனிம அயனி அல்லது கரிம மூலக் கூறு அல்லது கரிம மூலக் கூறுகளின் தொகுதிகள் இவற்றுக்குப் பொருத்தமாக இருக்கும். சவ்வின் உட்பகுதியில் இத்தேர்ந்தெடுக்கும் திறன் அடங்கியுள்ளது. பரிமாற்றம் என்பது பொதுவாகச் செல்லின் செயல்பாடு (active) அல்லது எந்த வித முயற்சியும் இல்லா நிலைமையிலேயே (passive) நிகழும். தானாகவே நடைபெறும் பரிமாற்றம். இதுவும் பரவுதலைப் போன்று அடர்வு மிகுந்த பகுதி பிளாஸ்மா சவ்வின் ஒரு புறத்திலும், அதை விட அடர்வு குறைந்த பகுதி மற்றொரு புறத்திலும் இருப்பதால் நிகழ்கிறது. இது பரவுதலை விடக் கீழ்க் காணும் வகைகளில் வேறு படுகிறது: 1. தானாக நடைபெறும் பரிமாற்றம் பரவுதலை விட மிக விரைவாக நிகழ்கிறது. பிளாஸ்மா சவ்வில் அமைந்துள்ள சில சுமை தூக்கி (carrier) அமைப்புகளே இத்தகைய கூடுதலான இயக்கத்துக்குக் காரணம் ஆகும். சுமை தூக்கிகள் என்பவை பிளாஸ்மா சவ்வின் உள் அமைப்பின் ஒரு பகுதியான புரதங்கள் ஆகும். இவை எவ்விதம் பணியாற்றுகின்றன என்பது சரியாகப் புலனாகவில்லை. இப்புரதங்கள், தம் வழியாகக் கால்வாய்களை உண்டாக்கி, கொழுப்பு இரட்டை அடுக்கு (lipid bilayer) அமைந்த சவ்வைக் கடக்க உதவும் கொள்கை, இப்போது குறிப்பிடப் படுகிறது. இத்தகைய பரிமாற்றம் உள்ளேயும், வெளியேயும் நிகழ்கிறது. 2. மேலே கூறிய வகையில் அடர்வு மிகுந்த புறத்திலிருந்து, அடர்வு குறைந்த புறத்திற்குப் பொருள் நகர்கிறது. அடர்வு அதிகரிக்க, பொருளின் போக்குவரத்தும் விரைந்து கூடுகிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அடர்வு அதிகரித்தால், பரிமாற்றம் அதிகரிப்பதில்லை. ஏனெனில், சுமை தூக்கிகள் அனைத்தும் இப்பணியில் ஈடுபடுத்தப் பட்டு விட்டதால், மேன்மேலும் பொருளை எடுத்துச் செல்லத் தூக்கிகள் இருப்பதில்லை. 3. சுமை தூக்கிகள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பொருளை மட்டுமே எடுத்துச் செல்லும், சான்றாக, குளூக்கோசை எடுத்துச் செல்லும் தூக்கி, ஓர் அமினோ அமிலத்தைக் கொண்டு போகாது. ஆனால், அதுவே குளூக்கோஸ் போன்ற வேதி அமைப்புள்ள (மூலக் கூறு அமைப்புள்ள) காலக்டோஸ் அல்லது ரிபோஸ் போன்ற சர்க்கரைப் பொருள்களை எடுத்துச் செல்லும், அதாவது, ஒரே வகையான வேதி அமைப்புள்ள பொருள்கள் சுமை தூக்கியின் பற்றும் இடங்களுக்குப் (binding sites) போட்டியிடுகின்றன. செல்லின் செயல்பாட்டால் நிகழும் பரிமாற்றம். முன் கூறியவை போன்று அல்லாமல், இதில் செல் தனக்குத் தேவையான குறிப்பிட்ட மூலக் கூறுகளை திசு நீர்மத்தில், அவை மிகக் குறைந்த அடர்வில் இருந்த போதும் கூடத் தனக்குள் எடுத்துக் கொள்கிறது. அதாவது, அடர்வு குறைந்த பகுதியிலிருந்து, அடர்வு மிகுந்த பகுதிக்குப் பொருள் எடுத்துச் செல்லப் படுகிறது. இதன் மூலம், செல் தன் புரோட்டோப்பிளாசத்தில் சில வகை அயனிகள், உணவு மூலக் கூறுகள் போன்றவற்றின் அடர்வை எப்போதும் ஒரே அளவில் வைத்திருக்க முடிகிறது. தானாகவே நடை பெறும் பரிமாற்றத்தைப் போலவே, செல்லின் செயல்பாட்டால் நிகழும் பரிமாற்றமும் சுமை தூக்கிகளாலேயே நடை பெறுகிறது. ஆயினும், பின் கூறப்பட்டதற்குச் செல் தன் ஆற்றலைப் பயன் படுத்த வேண்டியுள்ளது. ATPஐக் கொண்டே, சுமை தூக்கிகளின் மூலம், இவ்வகைப் பரிமாற்றம் நிகழும். ATPஐத் தடுப்பான்களாக (inhibitors) ஃபுளூரைடு, ஆர்செனேட், சயனைடு போன்றவற்றைப் பயன்படுத்தி, ATP உண்டாவதைத் தடுத்தால், செயல்பாட்டால் நிகழும் பரிமாற்றம் நடை பெறுவதில்லை. பெரும்பாலும் ATP வடிவில், ஆற்றலைப் பயன் படுத்தும் சுமை தூக்கி அமைப்புகள், செல்லினுள் இருக்கும் பொருள் அடர்வு குறைந்திருப்பின், அடர்வு மிகுந்ததாக்கி விடும். சான்றாக, சூழ்ந்துள்ள நீர்மத்திலிருப்பதைப் போல் அமினோ அமிலங்களின் அடர்வு 300 மடங்கு கூடுதலாகச் செல்லுக்குள் இருக்கும் போதும் கூடச் சில வகைச் செல்கள் மேன் மேலும், அமினோ அமிலங்களைச் சேகரித்து வைத்துக் கொள்வதைக் காண முடியும். தானாகவே நடை பெறும் பரிமாற்றத்தைப் போல் அல்லாமல், செயல்பாட்டால் நிகழும் பரிமாற்றத்தின் போது, மூலக் கூறுகளும், அயனிகளும் பிளாஸ்மா சவ்வின் ஊடே ஒரே திசையில் மட்டுமே நகர்கின்றன. இது ஏற்றி இறக்கல் (pumping) எனப்படும். பெரும்பாலும், ஏற்றி இறக்கல் செல்லின் வெளிப் புறத்திலிருந்து உள்ளே செல்லும் திசையில் இருப்பினும், எதிர்த் திசையில் வேலை செய்கின்றன. சோடியம் அயனி இவ்விதம் சோடியம் அயனிகளைச் செல்லிலிருந்து வெளியேற்றுகிறது. செயல்பாட்டால் நிகழும் பரிமாற்றத்தில் அனைத்து அமைப்புகளும், மூன்று பகுதியாக உள்ளன. அவை: எடுத்துச் செல்ல வேண்டிய பொருள் பிளாஸ்மா சவ்வின் பரப்பில் உள்ள ஒரு புரதத்துடன் இணைதல், பிளாஸ்மா சவ்வின் குறுக்கே அப்பொருள் எடுத்துச் செல்லப் படுதல், ஆற்றல் இணைப்பு (energy coupling) மூலமாக ஆக்கச் சிதை மாற்றத்திலிருந்து பெறப் படும் ஆற்றலைப் (metabolic energy) பயன் படுத்தி, அடர்வு வேறுபாட்டுக்கு எதிராக, ஒரே திசையில் பரிமாற்றம் ஏற்படச் செய்தல் என்பன. —சோம. பேச்சிமுத்து செல் ஒட்டுதல் செல்கள் ஒன்றையொன்று இனம் கண்டு கொள்ளும் திறன் உடையன. இதனால், ஒரு திசுவில் உள்ள ஒரே வகையான செல்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்கின்றன. செல்களுக்கு இடையேயுள்ள தொடர்பு மூன்று வகையில் பகுப்படைந்து திசுக்களாகச் சேரும். பெரும்பாலானவற்றில், செல்லுக்குப் புறத்தேயுள்ள அடிப்படைப் பொருள் (matrix), செல்லின் வெளிப் புற உறையால் (coat) ஆனது. உறையின் பொருள்கள் (செல்லுலோஸ், ஹையலூரோனிக் அமிலம் முதலியன) செல்கள் ஒன்றையொன்று தொட்டதும் ஒன்று சேர்கின்றன. செல்களுக்கு இடையிலுள்ள இடைவெளி பெரும்பாலும், 15 நானோ மீட்டர் உள்ளமையை, எலெக்ட்ரான் நுண்ணோக்கியில் அறியலாம். இருப்பினும், இச்சிறிய இடைவெளியிலும் சிறிது பொருள் உள்ளது; இது மியூகோ புரோட்டீன் ஆக இருக்கக் கூடும்; செல்களின் சேர்க்கைக்கு இதுவே காரணமாகும். மேலும், இச்செல்களைப் பிரிப்பதில் மிகுந்த விளைவை உண்டாக்கும் நொதிகள் மியூகேஸ்களும், புரோட்டியேஸ்களும் ஆகும். ஒரு திசுவில் உள்ள செல்கள், செல் வாய்க்கால்களைப் (cell channels) பயன்படுத்தித் தமக்குள் சற்றேறக் குறையத் தடையின்றிப் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. தாவரச் செல்களில் பிளாஸ்மா டெஸ்மேட்டா எனப் படும் சைட்டோபிளாசப் பாலங்கள் உள்ளமை அறியப் பட்டுள்ளது. இவை செல்களுக்கு இடையில் செல்லுலோஸ் சுவரில் குறுகிய இணைப்புகளை உண்டாக்கி, அவற்றின் மூலம் அயனிகளும், பெரிய மூலக் கூறுகளும் (macro molecules) தடையின்றிச் செல்ல உதவுகின்றன. 1908இல் வில்சன் என்பார், உயிரோடுள்ள கடற் பஞ்சை நுண்ணிய துளைகள் அமைந்த பட்டு வளையின் மூலம் அழுத்தினால், தனித் தனியாகப் பிரிக்கப் பட்ட நகரக் கூடிய செல்களாகி, அதன் பின், அப்படியே வைத்திருந்தால், மீண்டும் ஒன்று கூடிப் புதிய கடற் பஞ்சாக உருவாவதை விவரித்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு, வளரும் கருவின் திசுக்கள் டிரிப்சினுடன் சேர்க்கப் பட்ட போது, தனித் தனிச் செல்களாகப் பிரிகின்றன என்பதும், பின்னர், அவையே மீண்டும் ஒன்று கூடித் தொடக்கத்தில் இருந்த திசுவின் குறிப்பிட்ட அமைப்பை உண்டாக்குகின்றன என்பதும் கண்டு பிடிக்கப் பட்டது. மீண்டும் ஒன்று கூடுதல் என்பது செல்களின் நகரும் தன்மையைப் பொறுத்தது. டிரிப்சினால் ஒரு கோழிக் குஞ்சுக் கருவில் உள்ள அனைத்துச் செல்களும் பிரிக்கப் பட்டு, அதன் பின், அப்படியே வைக்கப் பட்டால், மீண்டும் ஒன்று கூடும். ஒரே வகையான செல்கள் ஒன்றோடொன்று ஒட்டும் போது, அவை ஒரு குறிப்பிட்ட செல்களின் தொகுப்பாகின்றன; இவை ஒரு குறிப்பிட்ட தன்மையுள்ள செல் திரளாக (எ.டு: சிறுநீரகச் செல், எலும்புச் செல், விழித் திரைச் செல்) இருக்கும். மீண்டும், ஒன்று கூடுதல் என்பது இனங்களின் அடிப்படையில் ஏற்படுவதில்லை. சான்றாக, சுண்டெலிக் கருவின் செல்களும், கோழிக் குஞ்சுக் கருவின் செல்களும் கலக்கப் பட்டால், அவை செல் திரள் அடிப்படையில் ஒன்று கூடுகின்றனவேயன்றி, இன அடிப்படையில் கூடுவதில்லை. அதாவது, சுண்டெலியின் செல்கள் அனைத்தும் தம்முள் ஒன்று சேர்ந்தோ, கோழிக் குஞ்சின் செல்கள் அனைத்துமாகச் சேர்ந்தோ, ஒன்று கூடுவதில்லை. மாறாக, சிறுநீரகச் செல்களாகச் சேர்ந்து, சுண்டெலியின் செல்களும், கோழிக் குஞ்சின் செல்களும் கூடி, ஒரு சிறுநீரகத் திசுவை உண்டாக்கு- கின்றன. இவ்வாறு மீண்டும் ஒன்று கூடுவதற்குக் கால்சிய அயனிகளும், சில கார்போஹைட்ரேட்டுகளும், கிளைக்கோ புரதங்களும் இன்றியமையாதவை. —சோம. பேச்சிமுத்து செல் சட்டகம் சட்டகம் (skeleton) என்பது அது புறத்தே அமைந்திருப்பினும், உடலின் உள்ளே அமைந்திருப்பினும், ஒவ்வோர் உயிரிக்கும், ஒரு குறிப்பிட்ட வடிவம் அமைவதற்கும், இயக்கத்துக்கும் துணை செய்வதாகும். அதே போல, நுண் குழாய்கள், நுண் இழைகள், இடைப்பட்ட இழைகள் என்ற மூவகை நீண்ட இழைகள் நார் போன்ற அமைப்புகளால் ஆன வலைப் பின்னல் ஒன்று செல்களுக்குள் அமைந்து, செல் சட்டமாக உதவுகின்றது. இவ்வகைச் சட்டகம் நியூக்ளியஸ் உயிரிகளின் (eukaryotes) செல்களில் இருக்கிறது. இச்சட்டகத்தின் இழைகள் செல்லுக்குள்ளேயே பிரிக்கப்பட்டும், மீண்டும் இணைக்கப் பட்டும், மாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றன. இச்சட்டகம் செல்லுக்கு வடிவமளிப்பதுடன், அதன் இயக்கத்துக்கு வழி கோலவும் செய்து, நுண் குழாய்களில் ஆற்றலைச் சேமித்து வைத்துப் பிரிக்கப் படும் போது, இழுப்பு விசையை (elastic forces) வெளிப் படுத்திச் சைட்டோப்பிளாசத்தில் உள்ள வெவ்வேறு உறுப்புகளின் போக்குவரத்துக்கு உதவுமாறு செய்யவும் பயன் படுகிறது. அண்மைக் காலத்தில் செல் சட்டகத்தின் இயக்கச் செயல் (mobile function) பற்றிய விபரங்கள் தெளிவாகியுள்ளன. தசைச் செல்களில் உள்ளவற்றைப் போலவே, அவையல்லாத ஏனைய வகைச் செல்களிலும் உள்ள சட்டகத்தின் இழைகள், அமீபாவின் இயக்கம் போன்றவற்றிலும் சைட்டோப்பிளாசம் நீர் போல ஓடுவதிலும் பங்கு வகிக்கின்றன. செல் சட்டகம் விலங்குச் செல்களில் நன்கு காணப்படும்; சில வகைப் புரோட்டோசோவா இன உயிரிகளில் மிகத் தெளிவாகக் காணக் கூடும். செல் சட்டகத்தின் அமைப்பு. நுண் குழாய்கள் என்பன 30 நானோமீட்டர் (1 நா. மீ. = 1/1000 மைக்ரான் (அ) μm) குறுக்களவும், ஏறத் தாழ 8 நா.மீ. கனமுள்ள சுவர்களால் சூழப் பட்டுமுள்ள உள்ளீடற்ற நீண்ட குழாய்கள் ஆகும். இவை டியூபுலின் (tubulin) எனப் படும் புரத மூலக் கூறுகளால் ஆனவை, நுண் குழாய்கள் செல்களில் உதிரியாகவோ, கட்டுக் கட்டாகவோ இருந்து, செல்லுக்கு ஒரு வடிவத்தையும், விறைப்புத் தன்மையையும் தருகின்றன. சான்றாக, நரம்புச் செல்களினின்றும் புறப்படும் நீண்ட இழைகளில், இத்தகைய நுண் குழாய்களை மிகத் தெளிவாகக் காணலாம். செல் சட்டகத்தின் மற்றொரு வகையான உறுப்பு, நுண் இழைகள் ஆகும். இவை 5–7 நா.மீ. குறுக்களவுள்ள மிக மெல்லிய நீண்ட இழைகளாக இருக்கும். தசைச் செல்களில் உள்ளமை போல நுண் இழைகளும், ஆக்டின் என்ற புரத வகையால் உண்டானவை. அமீபாவின் இடம் பெயர்தல் மற்றும் பிற வகைச் செல்களின் இயக்கம் ஆகியவற்றுக்கு இவ்விழைகள் உதவுகின்றன. மூன்றாம் வகை நார் இடைப் பட்ட இழை (intermediate filament) எனப் படுகிறது. நுண் குழாய்கள், நுண் இழைகள் இவற்றுக்கு இடைப் பட்ட 7–12 நாமீ. வரை குறுக்களவு கொண்டிருக்கும். தோலில் உள்ள செல்கள் போன்ற சில வகைச் செல்களில் இவை, மிகப் பெரும் எண்ணிக்கையில் காணப் படும்; இவை வெவ்வேறு வகைப் புரதங்களால் ஆனவை. தோலில் உள்ள இந்த இழைகள், கெரோட்டினால் ஆனவை. நரம்புச் செல்களில் உள்ள இடைப் பட்ட இழைகள் வேறு பல புரதங்களால் ஆனவை. எந்த அசைவையும் ஏற்படுத்தாமல், செல்லுக்கு ஓர் அமைப்பை ஏற்படுத்தவே இவை உதவுகின்றன. கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாகவே நுண்ணோக்கியால் ஆய்பவர்கள், இவ்விதம் ஒரு செல் சட்டகம் உண்மையில் இருக்கிறதா, இல்லையா என்பதை ஆய்ந்தனர். கடந்த பத்தாண்டுகளில், இது உண்மையிலேயே உள்ளது என்பதை, ஒளி நுண்ணோக்கி (light microscope) மூலமும், புதிய முறைகளாலும், எலெக்ட்ரான் நுண்ணோக்கியின் உதவியாலும், மூலக் கூறுகளைப் பகுத்தறியும் முறையாலும், நிறுவ முடிந்தது. ஒளி நுண்ணோக்கியின் மூலம், செல் சட்டகத்தைக் காண, நின்றொளிர் எதிர்ப் பொருள் சட்டம் (fluorscent antibody technique) என்னும் முறை பயன் படுகிறது. இவ்வகையில் எடுக்கப்பட்ட நுண்ணோக்கிப் புகைப்படங்களைக் கண்ணுற்றால், செல் சட்டகத்தின் அமைப்பு மிகத் தெளிவாகப் புலனாகும். சைட்டோப்பிளாசமும், நியூக்ளியசும் இத்தகைய சட்டகத்தை உடையன; சைட்டோபிளாசத்தில் உள்ளதைச் செல் சட்டகம் எனவும், நியூக்ளியசில் அமைந்துள்ளதை நியூக்ளியஸ் பொருள் எனவும் கூறுவர். இவையிரண்டுக்கும் இடையே நேரடியான தொடர்பு இல்லை. —சோம. பேச்சிமுத்து செல் சார் நெகிழிகள் பெரும்பாலும் நுரையூட்டிய நெகிழிகள் எனக் குறிப்பிடப் படும் செல் சார் நெகிழிகள் (cellulose plastics) சிறப்பு வாய்ந்தவை. இவற்றைக் கடற்பஞ்சு போன்ற மென்மை, குறைந்த விறைப்புத் திறன், விறைப்பு போன்ற பல நிலைகளில் பெறலாம். மென்மையான நெகிழித் திரைச் சீலை, தானியங்கு ஊர்திகளின் இருக்கை ஆகியவற்றைத் தயாரிக்க இவை உதவும். மிதக்கும் கருவி, மின் காப்பீடு போன்றவற்றை அரை விறைப்புச் செல் சார் நெகிழிகளிலிருந்து தயாரிக்கலாம். விமானம் கட்டுதல், படகு கட்டுதல், வீட்டுப் பயன் பாட்டுத் தளவாடங்கள் (furniture) தயாரிப்பில் விறைப்புச் செல் சார் நெகிழிகள் பங்கு பெறுகின்றன. நுரையூட்டிய நெகிழிகள் வெப்பம் கடத்தா. அவை சிறந்த ஒலி தடுப்பான்கள் ஆகும். இந்நெகிழிகளை வெப்ப உருவாக்கல் முறை (thermofarming), பீச்சி வார்த்தல் (injection moulding), பிழிந்து வார்த்தல் (extrusion) போன்ற பல்வேறு செயல் முறைகளால் வடிவமைக்கலாம். செல் சார் நெகிழிகளை வெப்ப மீள் (thermoplastic), வெப்ப மீளா ரெசின்களிலிருந்து (thermosetting resin) தயாரிக்கலாம். திண்ம நெகிழியின் ஒரு பகுதியைச் செல் சார் நெகிழியால் பதிலிடும் போது, அப்பகுதியை எடை குறைவானதாகவோ, விறைப்புத் தன்மையுடையதாகவோ, இரண்டும் ஒருங்கே அமைந்த பகுதியாகவோ மாற்ற முடியும். திண்ம நெகிழியை விடச் செல் சார் நெகிழியின் எடையும், தயாரிப்புச் செலவும் குறைவு. செல் சார் நெகிழித் தயாரிப்பில், பெரும் பங்கு வகிக்கும் நெகிழிகளில் பாலி யூரத்தேன், பாலிஸ்டைரீன், பாலிஎத்திலீன், பாலி புரோப்பிலீன். சிலிக்கோன்கள், எப்பாக்சி, பாலி வினைல் குளோரைடு ஆகியன குறிப்பிடத் தக்கன. செல் சார் நெகிழிகளைப் பல வகையாகப் பிரிக்கலாம். நுரையூட்டப்பட்ட விரிவாக்கப்பட்ட நெகிழி. செல் சார் அமைப்புடைய எந்த நெகிழியும் இவ்வகையில் அடங்கும். வெற்றுக் கோள நெகிழி. நுண்கோளங்கள் (micro-spheres) எனப் படும் மிகச் சிறிய வெற்றுக் கோளங்களைப் பாலிஎஸ்ட்டர் அல்லது எப்பாக்சி ரெசினில் விரவச் செய்து கிடைக்கும் நெகிழிகளை வெற்றுக் கோள நெகிழிகள் என்பர். இதற்கான நுண் கோளங்கள் ஃபீனாலிக் ரெசின்கள், களிமண் அல்லது கண்ணாடியில் ஆனவை. மூடிய செல்சார் நெகிழி (closed cell foam). இதில் அமைந்த செல்கள் ஒன்றோடொன்று இணைக்கப் படாமல் தனித்திருக்கும். இந்நெகிழியை நீரில் அமிழ்த்தும் போது, நெகிழியின் புறப் பரப்பில் உள்ள செல்கள் மட்டும் நீரை உறிஞ்சிக் கொள்ளும். மிதவைப் பொருள்கள் தயாரிக்க, இந்நெகிழிகள் ஏற்றவை. திறந்த செல் சார் நெகிழி (Open cell foam). இந்நெகிழியில் உள்ள பெரும்பாலான செல்கள் ஒன்றோடொன்று திறந்த வழியில் இணைக்கப் பட்டுள்ளன. நீரில் இந்நெகிழியை அமிழ்த்தும் போது, நெகிழி முழுவதும் நீரை உறிஞ்சும். ஒளி தடுப்பான் தயாரிக்க, இது மிகவும் ஏற்றது. இரு வகை ஊது பொருள்களை (blowing agent) அடிப்படையாகக் கொண்டு செல்சார் நெகிழிகளைத் தயாரிக்கலாம். (1) உருகிய அல்லது நீர்ம நிலையில் உள்ள நெகிழியின் வழியே, வளிமத்தைச் செலுத்தலாம். (2) நெகிழியோடு கலக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சேர்மம், குறிப்பிட்ட வெப்ப நிலையில் சிதைந்து வெளி வரும் வளிமம் செல் சார்ந்த அமைப்பைத் தரும். ஏழு முறைகளைப் பின்பற்றிச் செல் சார் நெகிழிகளைத் தயாரிக்கலாம். (1) வேதி ஊது பொருள்களை நெகிழியோடு கலந்து, வெப்பமூட்டும் போது, வேதிப் பொருள் சிதைந்து, நைட்ரஜன் வளிமத்தை வெளியேற்றும். அசோடைகார்பமைடு அல்லது அசோபிஸ் ஃபார்மமமைடு போன்ற அசோ சேர்மங்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்படும் வேதி ஊது சேர்மங்களாகும். இவ்வேதிச் சேர்மங்களின் தூளை நீர்ம நெகிழியில் நன்கு விரவச் செய்யலாம் அல்லது நெகிழியோடு கலந்து வார்ப்புக் கட்டித் (moulding pellet) தயாரிக்கலாம். 110–280°C வெப்ப நிலை வரம்புக்குள் சிதையக் கூடிய பல வேதி ஊது சேர்மங்கள் உள்ளன. எனவே, நெகிழியின் உருகு நிலை அல்லது செயல் முறையின் வெப்ப நிலைக்குப் பொருத்தமான வேதி ஊது சேர்மத்தைத் தேர்ந் தெடுக்கலாம். (2) வளிமத்தை (பெரும்பாலும் நைட்ரஜனை) உருகிய அல்லது பகுதி பக்குவப் படுத்தப் பட்ட ரெசினில் பீச்ச வேண்டும். வளிமத்தைச் செயல் முறைக் கலன் அல்லது அழுத்தக் கலனில் (autoclave) செலுத்தி, கலனின் அழுத்தத்தைக் குறைக்கும் போது, வளிமம் விரிவடைந்து, செல்கள் கொண்ட கூடு அமைப்பைத் தரும். (3) ஐசோசயனேட் போன்ற இரு வினைத் திறனுடைய (bifunctional) மூலக் கூறுகளைப் பாலிஎஸ்ட் டர் அல்லது ஏதேனும் ஒரு நீர்ம ரெசினோடு கலந்து, திண்ம நிலைக்கு மாற்ற நெகிழியைப் பல்லுறுப்பாக்கம் செய்தால், ஐசோசயனேட் வினையுற்று, வளிமத்தை வெளிப் படுத்தும். இவ்வளிமம் செல் அமைப்பைத் தர உதவுகிறது. இம்முறையைப் பின் பற்றிச் செல் சார் பாலியூரத்தேன் நெகிழி தயாரிக்கப் படுகிறது. (4) தாழ்வான கொதி நிலை பெற்ற சேர்மங்களை ஆவியாக்கிச் செல் அமைப்பைப் பெறலாம். இதன் பொருட்டு, ஃபிரியான் போன்ற ஃபுளுரோகார்பன் சேர்மங்கள் பெரிதும் பயன் படுகின்றன. (5) ரெசின் கூழ்மத்தில் காற்றைச் செலுத்தி, நன்கு சுழற்றிக் கலந்து கிடைக்கும் சேர்மத்தைக் களியாக மாற்றலாம். இம்முறையில் நுரைத்த ரப்பர் கிடைக்கிறது. (6) வேதி வினைப் படாத, ஆனால், வளிமத்தை வெளிப்படுத்தும் சேர்மங்களை ரெசினில் கலந்து வெப்பமூட்டும் போது, வளிமம் வெளிப்படும். நன்கு தூளாக்கப்பட்ட கார்பன் தூளின் மேற்பரப்பில் ஒட்டியுள்ள வளிமம் இதற்கு எடுத்துக் காட்டாகும். (7) ஊது பொருள் அடைக்கப்பட்ட இளக வல்ல நெகிழியின் சிறு முனைகளை வெப்பமூட்டும் போது, விரிவடையும். செல்சார் பாலிஸ்டைரீனை இம்முறையில் தயாரிக்கலாம். —என். அய்யாசாமி நூலோதி. Schwartz and Sidney A. Goodman. Plastics Materials and Processes, Van Nostrand Remhold Co., New York, 1982. செல் சுழற்சி செல்கள் இனப் பெருக்கம் செய்வது அவற்றின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றாகும். ஒரு வயது வந்த மனிதனிடம் 1014 செல்கள் இருக்கக் கூடும். இவை யாவும், ஒரு கருவுற்ற அண்டத்திலிருந்து தோன்றிய செல்களாகும். முழு வளர்ச்சியைப் பெற்றுள்ள ஒரு வயது வந்த மனிதனை விடச் செல்களின் பெருக்கம் வியக்கத் தக்கதாக உள்ளது. ஒரு மனிதனில் 2.5 X 1013 குருதிச் சிவப்பு அணுக்கள் இருக்கின்றன. இவை ஏறக் குறைய, 107 நொடி முதல் 120 நாள்கள் வரை உயிரோடு இருக்கின்றன. குருதி தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருப்பதற்கு, ஒரு நொடிக்கு ஏறக் குறைய 2.5 மில்லியன் புதிய செல்கள் தேவைப்படுகின்றன. வயது முதிர்ந்த திசுக்களில் ஏற்படும் இழப்பினை ஈடு செய்வதற்கு ஏற்ப, இச்செல்களில் இனப் பெருக்கம் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருக்கும். ஒரு வளரும் செல்லில், செல்லின் சுழற்சி முக்கியமாக இரு நிலைகளில் நடை பெறுகிறது. ஒரு நிலையை இடை நிலை (interphase) என்றும், மற்றொன்றைப் பிரிவு நிலை (division) என்றும் கூறலாம். செல்களின் வாழ்நாளில் பெரும் பகுதி இடைக் காலத்திற்கென்றே செலவழிக்கப் படுகிறது. அக்காலத்தில், உயிர் சேகரிப்புச் செயல்கள் விரைவு படுத்தப் பட்டு, குறிப்பாகக் குரோமோசோமின் எண்ணிக்கையும் இரு மடங்காக்கப் பட்டுச் செல் அளவில் இரு மடங்காகப் பெருகுகிறது. முதலில் அணு மூலக் கூறு மட்டத்தில் ஏற்படும் மாற்றங்களின் முடிவே செல் பிரிகையாக (cell division) நுண்ணோக்கியில் காட்சியளிக்கிறது. இடைநிலையின் படிகள் (stages of interphase). குறிப்பிட்ட இடை நிலைக் காலத்தில் தயாரிப்பு அல்லது 'த’ காலத்தில் டி.என்.ஏ தயாரிக்கப் படுகின்றது. அதற்கு முன்னரும், பின்னரும் இடை நிலையின் இரண்டு வெற்றுக் காலங்கள் (வெ 1, வெ 2) உள்ளன. இவ்வெற்றுக் காலத்தில் DNA தயாரிப்பு நடை பெறுவதில்லை. ஆராய்ச்சியாளர்கள், இந்த ஆய்வுகளின் அடிப்படையில், உயிரணு சுழற்சியினை வெற்றுக் காலம், தயாரிப்பு, வெற்றுக் காலம், மறைமுகப் பிரிவு (mitosis) என்று நான்கு நிலைகளாகப் பகுத்துள்ளனர். வெ 1–நிலையானது. மறைமுகப் பிரிவு நிலையின் முடிவிற்கும், DNA தயாரிப்பின் தொடக்க நிலைக்கும், இடைப்பட்ட காலத்தைக் குறிக்கின்றது. ‘த’ காலத்தில் DNA தயாரிக்கப் படுகிறது. வெ 2–காலம் DNA தயாரிப்பின் முடிவு நேரத்திற்கும், மறைமுகப் பிரிவின் தொடக்க காலத்திற்கும் இடைப் பட்ட காலத்தைக் குறிக்கின்றது. தொடக்கத்தில், இரட்டை எண் (Diploid cell) குரோமோசோம் களைக் கொண்டிருந்த செல், த 2–காலத்தில், இரு மடங்கு (4c-tetraploid) DNAஐத் தன்னுள் கொண்டுள்ளது. மறைமுகப் பிரிவுக்குப் பின்னர், சேய்ச் செல்கள் (daughter cells) மீண்டும் வெ 1. காலத்தைத் தொடங்குகின்றன; பின்னர், முன்பு செல்லில் இருந்த DNA அளவுக்குச் சமமான DNA ஐக் கொண்டுள்ளன. செல் சுழற்சி நடை பெறும் காலம் செல்லுக்குச் செல் பெருமளவு மாறு படுகிறது. ஒரு பாலூட்டியின் செல்லை வளர்ப்பு முறையில் (culture) வளர்க்கும் போது, ஒரு தலைமுறைக்கான மொத்த நேரம் 16 மணி ஆகும். அதைத் தயாரிப்பு ஏழு மணிகள், வெற்றுக் காலம் 1–ஐந்து மணிகள், வெற்றுக் காலம் 2–மூன்று மணிகள், மறைமுகப் பிரிவு ஒரு மணி எனப் பகுக்கலாம். பொதுவாகத் தயாரிப்பு வெற்றுக் காலம் 2, மேலும் மறைமுகப் பிரிவு ஆகியவை ஒரே இனத்தைச் சார்ந்த செல்களில் ஒத்த நேரத்திலேயே நடை பெறுகின்றன. வெற்றுக் காலம்–1தான் அதன் கால நீளத்தில் பெரிதும் வேறு படுகிறது. செல்லின் உடல் செயலியல் நிலைமைகளைப் பொறுத்து, வெற்று காலம்–1 பல நாள்கள் நீடிக்கலாம். இயல்பாகப் பிளவு படாத (நரம்புச் செல்கள் அல்லது எலும்புகளுடன் சேர்ந்துள்ள தசைகள்) அல்லது மிக அரிதாகப் பிளவு படும் (எ-டு: சுழலும் நிண நீர்ச் செல்கள்) செல்களில் வெற்று காலம்–1 இருப்பதற்குச் சமமாக DNA இருக்கும். செல்லின் வெ–1 காலத்தில் ஒரு குறிப்பிட்ட நிலையில், அதைக் கட்டுப்படுத்திச் செல் சுழற்சியின் நேரத்தைக் கட்டுப் படுத்தலாம். கட்டுப் படுத்தப் பட்ட செல் வெ–1 நிலையில் இருப்பதாகக் கூறப் படுகிறது. வெ–0 நிலையில் செல் சுழற்சியினின்றும் பின் வாங்கிய தாகக் கருதலாம். செல்லில் நிலைமைகள் மாறி, அதன் வளர்ச்சி தொடங்கிய இடை நிலையில் குரோமோசோம்கள் சுருங்குவதனின்றும் மாறுபட்டு, நுண்ணோக்கியில் கண்ணுக்குத் தெரியாத உருவத்தை அடைகின்றன. ஓர் ஆய்வின் மூலம், இடை நிலையின் மூன்று நிலைகளிலும், குரோமோசோம்களின் சுருங்கிய உருவத்தைக் காணலாம். மறைமுகப் பிரிவுச் செல்களை இடை நிலைச் செல்களுடன் இணைத்தால், மறைமுகப் பிரிவுச் செல்கள் இடை நிலைச் செல்களின் நியூக்ளியசில் உள்ள குரோமோசோம்களை முன்னதாகவே உறையச் செய்யத் தூண்டுகின்றன. முன்னதாகவே சுருங்கிய வெ–1 நியூக்ளியசில் உள்ள குரோமோசோமில் ஒரு குரோமோடிட்டும். வெற்று–2 நியூக்ளியசில் இரண்டு குரோமோடிட்களும் உள்ளன. இதிலிருந்து, வெற்று–1 இடை நிலையில் DNA பதிப்புக்கு (replication) முன்னர் உள்ள நிலையையும், வெற்று–2 இடை நிலையின் DNAஇன் பதிப்புக்குப் பின்னர், உள்ள நிலையையும் காட்டுவதை அறியலாம். செல் சுழற்சியில் ஏற்படும் உயிர் வேதியியல் செயல்பாடுகள். மறைமுகப் பிரிவு நடைபெறும் போது, RNA தயாரிப்பு நிறுத்தி வைக்கப் படுகிறது. பின் முதல் (late prophase) நிலையில், RNA தயாரிப்பின் அளவு விரைவாகக் குறைந்து விடுகிறது. நடு நிலை (metaphase), முன்–கடை நிலை (anaphase) ஆகிய நிலைகளில், RNA தயாரிப்பு முற்றிலும் நின்று விடுகிறது. குரோமேட்டின் மிகுதியாகச் சுருங்கி இருக்கும் போது, அதை அச்சாகப் பார்த்துப் படியெடுத்து மாற்றக் கூடிய நொதிகள் அதை அணுக முடியாமையால், இந்நிலைகளில் தயாரிப்பு நடைபெறுவதில்லை. DNA தயாரிப்பு ‘த’ நிலையில்தான் நடை பெறுகிறது. இக்காலத்தில் பதிப்பு படிப் படியாக விரைவு படுத்தப் படுகிறது. அனைத்துச் செல்களிலும் குரோமோசோமில் மிகுதியாகச் சுருங்கிய மாறுபட்ட பகுதிகள், தயாரிப்பின் பின் பகுதியில் பதிப்புச் செய்கின்றன. வெ–1 நிலையில் முக்கியமான கட்டுப்பாட்டுச் செயல்கள் நடை பெறுகின்றன. அந்நிலையில், செல் மீண்டும் புதிய சுழற்சியைத் தொடக்க வேண்டும். அல்லது, வெ–0 நிலையில் சுழற்சி நடை பெற வேண்டும். ஒரு முறை செல் வெ–0 நிலையைக் கடந்து விட்டதெனில், அது புதிய சுழற்சி முடிவு பெறும் வரை தொடர்ந்து நடை பெறுகிறது. —கி. மகிபதி செல் பிரிதல் தாவரங்களும், விலங்குகளும் செல்களால் ஆனவை; ராபர்ட் ஹுக் என்பாரே, முதன் முதலாகச் செல்களை நுண்ணோக்கி வழியாகப் பார்த்தார். இவர் முதலில், ஒரு மெல்லிய தக்கைத் துண்டை, நுண்ணோக்கி மூலம் பார்த்து, அது பல செல்களைக் கொண்டது எனக் கண்டு பிடித்தார். 1831ஆம் ஆண்டில், ராபர்ட் பிரௌன் என்னும் ஆங்கில உயிரியல் வல்லுநர், செல்களில் ஓர் அடர்ந்த கோள வடிவப் பொருள் உள்ளது எனக் குறிப்பிட்டார். இதுதான் பின்னர், நியூக்ளியஸ் என்று பெயரிடப் பட்டது. ஷ்லிடன், ஷ்வான் ஆகிய ஜெர்மானிய உயிரியல் வல்லுநர், 1839ஆம் ஆண்டில் முறையாகச் செய்யப் பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், செல் கொள்கையை உருவாக்கினர். அனைத்துத் தாவரங்கள் அல்லது விலங்குகளின் அமைப்பிற்கும், செயல்பாட்டிற்கும் செல்களே அடிப்படை அலகுகள் என்பதும், செல்களில் முன்னரே உள்ள செல்கள் பகுபடுவதாலேயே புதிய செல்கள் உண்டாகின்றன என்பதும், செல் பற்றிய கொள்கைகளாகும். 125 ஆண்டுகளுக்கு முன்னரே, செல்களின் அமைப்பு உறுதிப் படுத்தப்பட்டது. உயிரிகள் அனைத்தும் வளர்ச்சி, இனப் பெருக்கம் ஆகிய இரண்டு சிறப்பான பண்புகளைப் பெற்றுள்ளன. இவ்விரண்டும் ஏற்படுவதற்குச் செல் பகுபடுதலே காரணம் ஆகும். அதாவது, ஒரு செல் மீண்டும், மீண்டும் பகுபடுவதால், பல செல்கள் தோன்றுகின்றன. இந்நிகழ்ச்சிக்குச் செல் பகுபடுதல் (cell division) என்று பெயர். ஒவ்வொரு செல்லிலும், புரோட்டோபிளாசம் என்ற உயிர்ப் பொருள் உள்ளது. அதில், சைட்டோப் பிளாசம், நியூக்ளியஸ் முதலியன உள்ளன. செல் பகுபடுதல் நடவாத போது, நியூக்ளியஸ் ஓய்வு நிலையில் இருப்பதாகக் கூறப் படுகிறது. அனைத்துச் செல் களின் நியூக்ளியஸ்களும் குச்சி போன்ற அமைப்பு உடைய குரோமோசோம்கள் கொண்டவை. ஒவ்வோர் இனத்திலும், குரோமோசோம்களின் எண்ணிக்கை நிலையாக இருக்கும். மனிதச் செல்களில், 46 குரோமோசோம்கள் உள்ளன. நாயில் 78, பூனையில் 38, வெங்காயத்தில் 16 என இவற்றின் எண்ணிக்கை நிலையாக இருக்கும். ஓய்வு நிலையில் இருக்கும் நியூக்ளியசில் குரோமோசோம்கள் தனித் தனியாகத் தெரிவதில்லை. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து, குரோமேட்டின் வலையாகக் காணப்படும். விலங்குச் செல்களின் நியூக்ளியசிற்கு வெளியில், சென்ட்ரியோல் என்ற அமைப்பும் உள்ளது. செல் பகுபடுதலில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை மறைமுகப் பிரிவு, குன்றல் பிரிவு என்பனவாகும். 1887ஆம் ஆண்டு வீஸ்மேன் என்பார், குன்றல் பிரிவு என்றால், இரு மயச் செல்லிலிருந்து (Diploid) ஒரு மயச் செல்லாகக் (haploid) குறைவதே என்று எண்ணினார். ஆனால், அவர் அவ்வாறு நினைத்ததே சரி என்று கண்டு பிடிக்கப் பட்டது. அதிகமான குரோமோசோம்களிலிருந்து செல் பகுபடுதல் மூலம், ஒரு குரோமோசோமாகக் குறைக்கப் படுவதே குன்றல் பிரிவு (meiosis) எனப் பட்டது. குன்றல் பிரிவு என்பது, ஒரு தனிப்பட்ட சிறப்பான செல் பிரிவு ஆகும். இது பால் வேறுபாடான செல்களைத் தோற்றுவிக்கும் போது, ஏற்படுகிறது. இவ்வாறு செல் பிரியும் போது, குன்றல் பிரிவு ஒவ்வொரு கருவுறுதலுக்குப் பின்பும், குரோமோசோம்களின் எண்ணிக்கையை ஒரே அளவாக நிர்வகிக்கிறது. பல செல்லுடைய அல்லது பின் தோன்றி உயிரிகளில் (metazoans) ஆண் விந்தணு, பெண் விந்தணு உருவாகும் போது, இக்குன்றல் பிரிவு ஏற்படுகிறது. மேலும், தாவரங்களில் விதைகள் (spores) உண்டாகும் போதும், குன்றல் பிரிவு ஏற்படும். குன்றல் பிரிவிலும், மறைமுகப் பிரிவின் பல சிக்கலான மாற்றங்கள் போலவே, நியூக்ளியசிலும், சைட்டோபிளாசத்திலும் நிகழும். இப்பிரிவில், இரண்டு நியூக்ளியஸ் பிரிவு அடுத்தடுத்து ஏற்படும். குரோமோசோம்கள் ஒரு முறை பிளவு படுவதால், நான்கு சேய்ச் செல்கள் தோன்றுகின்றன. இவை ஒவ்வொன்றும், ஒற்றைச் செல்லுடையன. இவ்வாறு, இரண்டு குன்றல் பிரிவுகள் ஏற்படுவதால், இவற்றிற்கு முதல் குன்றல் பிரிவு, இரண்டாம் குன்றல் பிரிவு என்று பெயர். முதல் குன்றல் பிரிவில், இரண்டு சிறிய சேய்ச் செல்கள் தோன்றும். இவை ஒவ்வொன்றும், ஒற்றைச் செல்லுடையவையாகும். இரண்டாம் குன்றல் பிரிவில், இந்த இரண்டு செல்லும் மறைமுகப் பிரிவில் உள்ளபடி நான்கு பிரிவுகளில் சென்று, மேலும் இரண்டு செல்களைத் தோற்றுவிக்கும். அவ்வாறு குன்றல் பிரிவிலுள்ள பல நிலைகள் கீழ்க் காணுமாறு உள்ளன. அவை: முதல் குன்றல் பிரிவு: (புரோஃபேஸ் I. மெடாஃபேஸ் I, அனாஃபேஸ் I, டெலாஃபேஸ் I,) இரண்டாம் குன்றல் பிரிவு : (புரோஃபேஸ் II, மெடாஃபேஸ் II, அனாஃபேஸ் II, டெலாஃபேஸ் II). முதல் குன்றல் பிரிவு. முதலில் செல்லின் நியூக்ளியஸ் சைட்டோப்பிளாசத்திலுள்ள நீரை உறிஞ்சிப் பருத்துக் காணப்படும். நியூக்ளியசின் பருமனளவு மூன்று மடங்காகப் பெருகிக் காணப் படும். இதுவே, நியூக்ளியஸ் மாறுதல் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது. இம்மாறுதல்களுக்குப் பிறகு, இந்தச் செல் முதல் குன்றல் பிரிவிலுள்ள முதல் புரோபேஸ் நிலைக்குச் செல்லும். புரோஃபேஸ் I–இது ஒரு நீண்ட நேரமுள்ள நிலையாகும். இந்நிலையில்தான், குரோமோசோம்கள் பெரும் மாற்றங்களை அடைகின்றன. DNAஇன் அளவு இரட்டிப்பாகிறது. DNAஇன் சேர்க்கை (synthesis) இந்நிலையின் தொடக்கத்தில்தான் நடக்கிறது. முதல் குன்றல் பிரிவிலுள்ள புரோஃபேஸ் Iஇல் காணப்படும் இளநிலைகள் லெப்டோட்டீனின் முந்தைய நிலை (preleptotene). இந்நிலை மறைமுகப் பிரிவிலுள்ள முந்தைய புரோஃபேஸ் நிலையை ஒத்திருக்கிறது. இந்நிலையிலுள்ள குரோமோசோம்கள் ஒல்லியாகவும், தனித் தனியாகவும் வலிவற்ற இழைகள் போன்றும் காணப் படும். லெப்டோட்டீன் (leptotene). இந்நிலையில் குரோமோசோம்கள் மிகப் பெரிய நீண்ட இழைகள் போன்று காணப்படும். சென்ட்ரியோல்கள். ஒவ்வொரு எதிர்த் துருவத்திற்கும் நகரத் தொடங்கும். இதனால், குரோமோசோம்களும் சென்ட்ரியோல்கள் நகர்ந்த திசைக்கு ஏற்றவாறு நகர்ந்திருக்கும். இந்தச் சிறப்பான அமைப்புக்குப் பூச்செண்டு (bouquet) என்று பெயர். சைகோட்டீன் (zygotene). இந்நிலையில், இரண்டு குரோமோசோம்கள் இணை நிலையில் இருக்கும். இரண்டு குரோமோசோம்களும், ஒன்றையொன்று ஒத்திருக்கும். ஒவ்வொரு குரோமோசோமும், தாய். தந்தையிடத்தில் இருந்து வந்ததாகும். பிறகு, இரண்டு குரோமோசோம்களுக்குள் இணைவு ஏற்படும். இந்த இணைவு, குரோமோசோம்களின் நீள்வாட்டத்தில் ஏற்படும். இதில் காணப்படும் மூன்று வகை நிலைகள் பின்வருமாறு: முன் கடை நிலையிலுள்ள இணைவு. இந்நிலை இணையான குரோமோசோம்களின் கடை நிலையில் ஏற்பட்டுச் சென்ட்ரோமியரை நோக்கிச் செல்லும். இடை நிலை இணைவு. இவ்வகை இணைவு முறை சென்ட்ரோமியரில் தொடங்கிக் குரோமோசோம் கரங்களின் இடை நிலைக் கரங்களை நோக்கிச் செல்லும். பல நிலை இணைவு. இவ்வகை இணைவில், குரோமோசோம்கள் ஓரிடத்தில் தொடங்குவதோடு, பல இடங்களிலும் இணை ஏற்படக் கூடும். பாக்ட்டீன் (pachytene or pachynema). இந்நிலையில் இணைவு முடிவுற்று, இரண்டு குரோமோசோம்களும், நீள் வாட்டத்தில் சுருக்கப் படுவதால், குரோமோசோம்கள் தடித்தும், பருத்தும் காணப் படும். பாக்ட்டீனின் இடை நிலையில் குரோமோசோம்களின் நீள் வாட்டத்தில் பிளவு ஏற்பட, அவை இரண்டாகக் காணப்படும். சென்ட்ரோமியர் இடம் மட்டும் பிரியாது. குரோமோசோம்கள் நான்கும், ஒன்று சேர்ந்த கூட்டமாக இந்நிலையில் காணப்படும். அக நியூக்ளியேஸ் (endonuclease) என்னும் நொதி நியூக்ளியசில் அதிகரிப்பதால், இவ்வாறு பிளவு ஏற்படுகிறது. இந்நிலையில், ஒவ்வொரு குரோமோசோமிலும் உள்ள சிறிய கரங்கள் ஒன்றுடன் ஒன்று மாறிக் கொள்ளும். இவ்வாறு ஒத்த நிலையிலுள்ள குரோமோசோம்களுள், குரோமோசோம் தண்டுகள் மாறிக் கொள்ளும் நிகழ்ச்சிக்குக் குறுக்கேற்றம் (crossing over) என்று பெயர். இந்நிலையில் DNAஇன் கூட்டு (synthesis) சற்று மிகையாக ஏற்படும் என்று குறிப்பிடுகின்றனர். நியூக்ளியோலசின் நிலை இது வரை மாறவே மாறாது. டிப்ளோடின். ஒத்த குரோமோசோம்கள் ஒவ்வொன்றும், ஒன்றையொன்று எதிர் நோக்கிப் பிரியத் தொடங்கும். கவர்ச்சி விசைக் குறைவு ஏற்படுவதே, இவ்வாறு பிரியக் காரணமாகும். ஆனால், இந்நிலையில் இது முடிவுறாது. குரோமோசோம்கள் மாற்றியமைக்கப் பட்டுள்ள இடத்தைத் தவிரப் பிற இடங்களில் பிரிக்கப் பட்டிருக்கும். டையாக்கைனெசிஸ் (diakinesis). இந்நிலையில், குரோமோசோம்கள், தடித்தும், பருத்தும் காணப் படும். குரோமோசோம்கள் டிப்ளோட்டீன் நிலையில் இருந்தவாறே பிரியாமல் இருக்கும். இது இரண்டாம் நிலை வரை (metaphase) நீடித்திருக்கும். இந்நிலையில், நியூக்ளியச் சவ்வும், நியூக்ளியோலசும் மறைந்திருக்கும். இழைகள் தோன்றும் இது, புரோஃபேஸ்–Iஇன் கடை நிலையை அறிவிக்கிறது. மெட்டா ஃபேஸ்-I. இந்நிலை வரையிலும், குரோமோ சோம்கள் பிரியாத நிலையில் நீடித்திருக்கும். குரோமோசோம்களிலுள்ள சென்ட்ரோமியர் ஒன்றை யொன்று பார்த்த வண்ணம், செல்லின் இடைப் பகுதியில் (equatorial plate) அமைந்திருக்கும். அனா பேஸ்-I. இந்நிலையில்தான், ஒவ்வொரு குரோமோசோமும் எதிர்த் திசையில் பிரியத் தொடங்கும். இழை நார்களின் சுருக்கமே இதற்குக் காரணம். டிலோ ஃபேஸ்–I. இந்நிலையில் ஒவ்வொரு குரோமோசோமும் தனித் தனியாகப் பிரிந்து, ஒவ்வொரு நியூக்ளியசைத் தோற்றுவிக்கும். இதற்குப் பிறகு, சைட்டோபிளாசத்தில் பிளவு ஏற்பட்டு, இரண்டு செல்களாகப் பிரியும். இவ்வாறு, முதல் குன்றல் பிரிவின் முடிவில், இரண்டு ஒத்த குரோமோசோம்களைக் கொண்ட செல்கள் தோன்றும். இரண்டாம் குன்றல் பிரிவு. இந்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் மறைமுகப் பிரிவு நிலையை ஒத்திருக்கும். இது முதல் குன்றல் பிரிவு முடிந்தவுடன், தொடங்கும். புரோ ஃபேஸ்–II. இந்நிலையில், நியூக்ளியஸ் சவ்வு மறைகிறது. குரோமோசோம்கள் தெரியும். ஆஸ்டர் கதிர்களும், இழை நார்களும் தோன்றும். மெட்டா ஃபேஸ்–II. இந்நிலையில், குரோமோசோமிலுள்ள இழை நார்கள் மையத்தில் இணைக்கப் பட்டுச் செல்லின் இடைப்பட்ட பகுதியில் குரோமோசோம்கள் அமைக்கப் பட்டிருக்கும். அனா ஃபேஸ்–II. இந்நிலையில், குரோமோசோமின் மையப் பகுதி இரண்டாகப் பிளவு பட, இரண்டு சிறிய குரோமோசோம்கள் தோன்றும். இழை நார்களின் சுருக்கத்தால், இவ்வாறு ஏற்படுகிறது. டெலோ ஃபேஸ்–II. இந்நிலையில் சேய்க் (daughter) குரோமோசோம்கள் மீண்டும் நியூக்ளியசாக அமைக்கப் படும் சைட்டோப்பிளாசத்தில் பிளவு ஏற்படும். இவ்வாறு, குன்றல் பிரிவின் முடிவில், நான்கு சிறிய குரோமோசோம்கள் ஒரு செல்லிலிருந்து உருவாகும். ஒவ்வொரு குரோமோசோமும், ஒற்றைப் படைக் குரோமோசோம் எண்ணைக் கொண்டது. செல் மறைமுகப் பிரிவு. இம்முறையில் நியூக்ளியசில் பல்வேறான மாற்றங்கள் ஏற்பட, அதிலுள்ள பொருள்கள் செல்லுக்குள்ளேயே அசைகின்றன. செல்லில், சில இழை போன்ற பொருள்கள் தோன்றுவதால், மறைமுகப் பிரிவு (mitosis) என்று பெயர் கொடுக்கப்பட்டது. Mitosis என்ற கிரேக்கச் சொல்லுக்கு இழைகள் என்று பொருள். இப்பிரிவின் நான்கு நிலைகள்: புரோ ஃபேஸ் அல்லது முதல் நிலை, மெட்டா ஃபேஸ் அல்லது இரண்டாம் நிலை, அனா ஃபேஸ் அல்லது மூன்றாம் நிலை, டெலா ஃபேஸ் அல்லது நான்காம் நிலை என்பன. புரோஃபேஸ் அல்லது முதல் நிலை. இது செல் பிரிதலுக்குத் தொடங்கும் நிலையைக் குறிக்கிறது. செல் ஓய்வு நிலையில் இருக்கையில், நியூக்ளியசில் குரோமோசோம்களைக் கொண்டுள்ள குரோமேட்டின் இழைகள் பின்னிக் கொண்டு, சிக்கலாகக் காணப் படுகின்றன. செல் பிரிதலின் போது, நியூக்ளியசில் பல வகையான முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. சைட்டோப்பிளாசம் சற்றுத் தடிமனாகவும், ஒட்டக் கூடிய பிகபிசுப்பான நிலையிலும், ஒளி விலகலடையும் நிலையிலும் காணப் படும். எதிர் மாறாக, நியூக்ளியோபிளாசம் சற்றுக் குறைந்த பிசுபிசுப்பான நிலையில் தோன்றும். உடனடியாக, குரோமோசோம்களின் கரங்கள் (arms) தடித்தும் குட்டையாகவும் காணப் படும். ஒவ்வொரு குரோமோசோமும், ஒவ்வொரு முறை செல் பிரியும் போதும், ஒரு குறிப்பிட்ட வடிவத்தையும் அளவையும் கொள்ளும். அதே சமயம், ஒவ்வொரு குரோமோசோமும் தன்னைப் போன்ற இன்னொரு குரோமோசோமைச் சுற்றியுள்ள பொருள்களினின்று சேர்த்துக் கொள்ளும். ஆகவே, ஒவ்வொரு குரோமோசோமும் தன்னைப் போன்ற பிறிதோர் இழையை அருகில் இணையாகப் பெற்றுக் கொள்ளும். இச்சமயத்தில், குரோமோசோமின் மையப் பகுதி (centro-mere) தெளிவாகத் தெரியும். செல் பிரிவில் இது முக்கியப் பங்கு கொள்கிறது. செல்லிலுள்ள நடு உறுப்பு (central body) என்ற பகுதியும், செல் பிரிதலில் முக்கிய பங்கு எடுத்துக் கொள்கிறது. இதன் நடுவில், இரண்டு சென்ட்ரியோல்கள் எனப் படும் மணி போன்ற உருவங்கள் தோன்றும். நியூக்ளியசுக்கு அருகில் வந்து, இரண் டாகப் பிரியும் இவ்விரு பகுதிகளில், ஒவ்வொன்றைச் சுற்றிலும், இழைகள் நட்சத்திரக் கதிர்களைப் (astral rays) போன்று அமைகின்றன. இக்கதிர்களைப் பெற்ற நடு உறுப்புப் பகுதிக்கு ஆஸ்டர் என்று பெயர். இரு ஆஸ்டர்களும் நியூக்ளியசின் எதிர் எதிர்த் துருவங்களை நோக்கிப் பிரியும். சென்ட்ரியோல்களை எலெக்ட்ரான் நுண்ணோக்கியின் மூலம் பார்த்தால், உருளை வடிவில் காணப் படும். ஒவ்வொன்றும் 500மில்லி மைக்ரான் நீளமும், 150 மில்லி மைக்ரான் அகலமும் உடையது. ஒரு சென்ட்ரியோலின் நீள அச்சு மற்றொன்றுக்குச் செங்குத்தாக இருக்கும். சென்ட்ரியோவின் உறை, ஒன்பது சிறிய உருளைகளை உடையது. ஒவ்வொரு சிறிய உருளையும் 150–200 மில்லி மைக்ரான் அகலமுடையது. குரோமோசோம்கள் குறிப்பிட்ட உருவத்தைப் பெற்றதும், நியூக்ளியஸ் சவ்வு (nuclear membrane) உள்ளேற்கப்பட்டு மறைந்து விடுகிறது. குரோமோசோம்கள் நியூக்ளிய ரசத்தில் மிதந்து காணப் படுகின்றன. அதே சமயத்தில், சைட்டோப்பிளாசத்தில் சில இழைகள் உண்டாகின்றன. அவை இரு ஆஸ்டர்களுக்கும் இடையில் பரவுகின்றன. இந்த இழைகள் ஓர் இரட்டைக் கூம்பு வடிவம் பெற்று, ஆஸ்டர்களை நோக்கிக் குவிகின்றன. இவ்விழைகளின் கற்றைக்கு, இரட்டைக் கூம்பு வடிவப் பொருள் (spindle shaped body) என்று பெயர். குரோமோசோம்கள் செல்லின் நடுப் பகுதி அல்லது மைய ரேகையை (equator) நோக்கி நகர்ந்து, இரட்டைக் கூம்பு வடிவ இழைகளின் நடுவில் வந்து, நேராக அமைகின்றன. இவை இரு ஆஸ்டர்களினின்றும், சம தொலைவில் உள்ளன. இந்நிலையே புரோ ஃபேஸ் அல்லது முதல் நிலையின் இறுதியைக் காட்டுகிறது. மெடா ஃபேஸ். குரோமோசோம்களின் இரட்டை அமைப்பு. இத்துறையில் தெளிவாகத் தெரிகிறது. ஒவ்வொரு குரோமோசோமும், இரண்டாகப் பிரிந்திருப்பது போல் தோன்றும். இந்நிலையில்தான், குரோமோசோம்கள் ஒழுங்கற்ற முறையில் செல்லின் நடுப் பகுதிக்குச் சென்று, செல்லின் நடுப் பகுதித் தட்டின் மேல் அமையும். குரோமோசோம்கள், குரோமோசோமிலுள்ள சென்ட்ரோமியர் மூலம், இழைகளால் ஒட்டிக் கொண்டிருக்கும். இதனால், குரோமோசோம்களின் இரண்டு கரங்களும் ஒன்று திரட்டப் பட்டிருக்கும். ஆனால், உண்மையில், முன்பு கூறிய படி, ஒவ்வொன்றும் தானாகவே இரட்டைப் படுத்திக் கொண்டுள்ளது. ஒவ்வோர் இணையிலுள்ள இரு பிரிவுகளும் ஒன்றை ஒன்று எல்லாவற்றிலும் ஒத்திருக்கின்றன. அனா ஃபேஸ் அல்லது மூன்றாம் நிலை. இந்நிலையில், மக்கட் குரோமோசோம்கள் பிரிந்து, எதிர் விசையை உண்டாக்கி, இரட்டைக் கூம்பின் ரேகையை விட்டு, எதிர் எதிர்த் துருவங்களுக்கு, இரட்டைக் கூம்பின் மைய இழைகளுடன் செல்கின்றன. எதிர்ப் பக்கம் சென்றவுடன், அங்குள்ள சென்டிரோசோ முடன் (centrosome) சேருகின்றன. இது அனாஃ பேசின் இறுதிக் கட்டத்தைக் குறிக்கிறது. டெலோஃபேஸ் அல்லது நான்காம் நிலை. செல் பிரிதலின் இந்த இறுதி நிலையில், நியூக்ளியஸ் திருப்பி அமைக்கப் படுகிறது. குரோமோசோம்கள் இணை கின்றன. வலைப் பின்னலைப் போல அமைந்து, குரோமேட்டின் மணிகள் (granules), அதில் சிதறினாற் போன்று தோன்றும். இந்நிலையின் போது, ஆஸ்டர் அமைப்பு மறைகிறது. நியூக்ளியல் சவ்வு மீண்டும் தோன்றுகிறது. இதே சமயத்தில், நியூக்ளி யல் திருப்பி அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, சைட்டோப்பிளாசத்தில் ஒரு பிளவு தோன்றி ஆழமாகிக் கொண்டே போகும். இறுதியில், இரண்டு பகுதிகள் உண்டாகின்றன. ஒவ்வொன்றிலும் ஒரு நியூக்ளியசும், சென்ட்ரோசோமும் உள்ளன. இவ்வகையான சிக்கலான மாற்றங்கள் ஏற்படுவதன் நோக்கம், மக்கட் செல்களில் குரோமேட்டின் சமமாகப் பிரிக்கப் பட வேண்டும் என்பதேயாகும். குரோமோசோம்கள்தாம் பாரம்பரிய குணங்களை மக்கட் செல்களுக்குக் கடத்துகின்றன. இக்குரோமோசோம்களை வைத்தே, பால் வேறுபாடு (sex difference) உண்டாகிறது. ஒரு செல், மறைமுகப் பிரிவு நிகழ்ச்சிக்கு எடுத்துக் கொள்ளும் நேரம், மற்றொரு செல்லுக்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை விடக் குறைவாகவோ, மிகுதியாகவோ இருக்கும். பொதுவாக 30 நிமிடம் முதல் மூன்று மணித் துளிகள் வரை எடுத்துக் கொள்ளும். சில தாவரங்களில், கைனடின், ஜிப்பரலின் போன்ற ஹார்மோன்கள் இந்நிலை ஏற்படத் தூண்டும் காரணிகளாக அமையும். மறைமுகப் பிரிவின் இன்றியமையாமை. ஒவ்வொரு சிறிய செல்லிலுள்ள குரோமோசோம் இணைகள், முன்னோரின் செல்லிலுள்ள (parent cell) குரோமோ சோம்களை ஒத்திருக்கும். எனவே, இவை பாரம்பரியக் குணங்களை எடுத்துச் செல்லும் காரணிகளாக அமைகின்றன.செல் பிரிதலில் சைட்டோப்பிளாசத்தின் பங்கு. செல் பிரிதலின் போது, ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடைய இரண்டு நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன. நியூக்ளியஸ் பிரிதல் (karyokinesis) என்பதில், குரோமோசோம்கள் மிக நுட்பமாக இரண்டு சேய்ச் செல்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படுகின்றன. சைட்டோப்பிளாசம் பிரிதல் என்பது சைட்டோப்பிளாசம் பிரிந்து, இரண்டு செல்கள் உண்டாவதைக் குறிக்கிறது. இவ்விரண்டாம் நிகழ்ச்சியின் போது,. பிரிதல் நடை பெறும் செல்லின் குறுக்கே நடுவில் ஒரு சுருங்கு வளையம் (contractile ring) தோன்றும். இது ஆக்டின் இழைகள், மையோசின் இழைகள் ஆகியவற்றால் ஆனது. இந்தச் சுருங்கு வளையம், செல்லின் நடுப் பகுதியில், ஒரு குறுக்கத்தை ஏற்படுத்திச் செல்லை இரண்டாக்குகிறது. விலங்குச் செல்களில், இவ்வாறாகச் சைட்டோப்பிளாசம் பிரிந்து, இரண்டு சேய்ச் செல்கள் உண்டாகின்றன; ஆனால், தாவரச் செல்களில் செல் பிரிதலின் இறுதியில், மிகு விரைவில் செல்லின் நடுப் பகுதியில் புதிய சவ்வு ஒன்றும், அதன் பின் செல் சுவர் ஒன்றும் உண்டாக்கப் படுகின்றன; இதனால், சைட்டோப்பிளாசம் இரண்டாகப் பிரிகிறது. தாவரச் செல்களில் கோல்கை உறுப்பே, இப்புதிய சவ்வை உருவாக்குகிறது. விலங்குச் செல்களில் சைட்டோப்பிளாசம் பிரிதல். செல்லின் நடுப் பகுதியில், அதன் விளிம்பில் ஏற்படும் சுருக்கத்தால் ஒரு பிளவு ஏற்பட்டுச் செல் இரண்டாகப் பிரிகிறது. இதற்கான சுருங்கு வளையம் செல்லின் பரிதியைச் சுற்றி, ஆக்டினால் ஆன நுண் இழைகளால் உண்டாகிறது. மேலும், தசைச் செல்களில் முக்கியமான மையோசினும் சுருங்கு வளையத்தில் இருக்கிறது. ஆக்டினும், மையோசினும் வினை புரிந்து, அத்துடன் ATPஇன் சிதைவால் உண்டான ஆற்றலால் ஒரு சுருக்கும் விசை (contractile force) உற்பத்தி ஆகி, அதன் காரணமாகச் சுருங்கு வளையம் உள் நோக்கி இழுக்கப் படுகிறது. இது செல்லின் மேற்பரப்பில் ஒரு பள்ளத்தை ஏற்படுத்திச் செல்லை, இரண்டு பகுதிகளாகக் கிள்ளி எடுக்கிறது. சுருங்கு வளையம் - பிளாஸ்மா சவ்வின் உட்புறப் பரப்பில் இணைந்துள்ளது. செல் பிரிதலின் இறுதி நிலையில் சுருங்கு வளையம் இரண்டு சேய்ச் செல்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஒரு குறுகிய பாலமாகக் குறைத்து விடுகிறது. இப்பாலத்தினுள் நடுப் பொருள் (mid–body) எனப்படும் ஓர் அமைப்பு, தெளிவாகக் காணப் படும்; இது நெருக்கமாக அமைந்த, நுண் குழாய்களால் ஆனது; இந்நுண் குழாய்க் கட்டே முதலில் உண்டான மறைமுகப் பிரிவுக் கதிர் இழையின் (mitotic spindle) எச்சம் ஆகும். விலங்குச் செல்களில் சைட்டோப்பிளாசம் பிரிதல் என்பது மிக விரைவில் நடை பெறுகிறது; அகான்தமீபாவில் (Acanthamoeba) இதற்கு 40–50 நொடியே தேவைப் படுகிறது. தாவரச் செல்களில் சைட்டோப்பிளாசம் பிரிதல். இவ்வகைச் செல்களில் செல்லின் நடுப் பகுதியில் குறுக்கம் ஏதும் ஏற்படுவதில்லை; மாறாக, புதிய ஒரு பிளாஸ்மா சவ்வு உண்டாவதை, ஒளி நுண்ணோக்கியின் மூலமும், எலெக்ட்ரான் நுண்ணோக்கியின் மூலமும் கண்டுள்ளனர். குரோமோசோம்கள் அனைத்தும், இரண்டு துருவங்களையும் நோக்கி நகரத் தொடங்கிச் செல்லின் மையத்தை விட்டு விலகியதும், கோல்கை அமைப்பிலிருந்து பெறப்பட்ட சவ்வாலான குமிழிகள் (vesicles) ஒருங்கிணையத் தொடங்குகின்றன. இவை, செல்லின் நட்ட நடுப் பகுதியில் சேர்ந்து ஒன்றாகி, ஒரு தட்டையான பெரிய குமிழாகிக் குறுக்குச் சவ்வாக மாறுகின்றன. இதை ஃபிராக்மோ–பிளாஸ்ட் (phrag–moplast) என்பர். (phragmo = enclosure, plast = forming). இவ்விதம் உண்டான ஃபிராக்மோ பிளாஸ்ட் இரட்டைப் பிளாஸ்மா சவ்வை உண்டாக்குகிறது: இவையிரண்டும், செல்லில் முன்பேயுள்ள முதன்மைப் பிளாஸ்மா சவ்வோடு இணைந்து, இரண்டு தனித் தனியான சேய்ச் செல்களை ஏற்படுத்தி விடுகின்றன. அதன் பின், இரு பிளாஸ்மா சவ்வுகளுக்கும் இடையில் இரண்டு புதிய செல் சுவர்கள் உண்டாகின்றன. —சோம. பேச்சிமுத்து செல் மரபியல் செல்லியலின் (cytology) அடிப்படைக் கண்டு பிடிப்புகளும், மரபியல் (genetics) உண்மைகளும் இணைந்து, புதியதொரு கிளையாகச் செல் மரபியல் (cytogenetics) தோன்றியது. குரோமோசோம்கள், மூலக் கூறுகள் ஆகியன பாரம்பரியத்திற்கு அடிப்படையாக அமையும் விதமும், மருத்துவத் துறையிலும், வேளாண் துறையிலும் இவ்வறிவைப் பயன்படுத்தும் முறையும், செல் மரபியலோடு தொடர்புடையவை. பாரம்பரியத்துக்குக் காரணமான ஜீன்கள், குரோமோசோமில் அமைந்துள்ளன. எனவே, குரோமோசோம்களில் ஏற்படும் மாற்றங்கள் பாரம்பரியத்தின் மூலம் உண்டாகின்ற சந்ததிகளில் மாற்றங்களை ஏற்- படுத்துகின்றன. பாரம்பரியத்துக்கு அடிப்படையான குரோமோசோம்களில் உள்ள பொருள்கள் மாறாதிருந்தால், பாரம்பரியம் மிகவும் இயல்பாக அமைகிறது. ஆனால், பல்வேறு நிலைமைகளில் குரோமோசோம்களில் மாற்றங்கள் ஏற்படவே செய்கின்றன; இவற்றால், பாரம்பரியத்தில் பல விளைவுகள் ஏற்படுகின்றன. குரோமோசோம்களின் அமைப்பில், எந்த மாற்றமும் நிகழாமல், அவற்றின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படலாம் அல்லது குரோமோசோம் பிறழ்ச்சி (chromosomal aberration) எனப்படும் குரோமோசோம் அமைப்பு மாற்றங்கள் நிகழலாம். இத்தகைய மாற்றங்களால், பாரம்பரியத்தில் ஏற்படும் விளைவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இம்மாற்றங்கள் இயற்கையிலேயே, தாமாக நடைபெறலாம் அல்லது அயனியாக்கும் கதிர் வீச்சுகளாலோ, வேதிப் பொருள்களாலோ உண்டாகலாம். செல் மரபியல் மாற்றங்கள் படி மலர்ச்சியில் பெரும் பங்கு கொள்கின்றன. குரோமோசோம் எண்ணிக்கை மாற்றங்கள். ஒவ்வொரு தாவரம் அல்லது விலங்கில் ஒரே வகையான வடிவமும், ஜீன்களின் ஒவ்வொரு தொகுதியும் கொண்ட குரோமோசோம்கள் இரண்டிரண்டாக இருக்கும். இவற்றைக் குரோமோசோம் இரட்டைகள் எனலாம். இவ்விரண்டில் ஒன்று, தாயிடமிருந்தும், ஏனையது தந்தையிடமிருந்தும் பெறப் படும். எனவே, ஒரு செல்லில் மொத்தம் உள்ள குரோமோசோம்கள் இரண்டு தொகுதியாக (iwo sets) அமையும். சான்றாக, மனித செல்லில் உள்ள 46 குரோமோசோம்களில் 23 கொண்டது. ஒரு தொகுதி. இது போல், மற்றொரு தொகுதியும் 23 குரோமோசோம் கொண்டது. இவற்றுள் ஒரு தொகுதி மட்டுமே, இனப் பெருக்கச் செல்களான விந்து, முட்டை ஆகியவற்றில் உள்ளது. இதை 2 தொகுதி (diploid) அல்லது 1 தொகுதி (monoploid) என்பர். உடலின் ஏனைய செல்களில் 2 தொகுதி குரோமோசோம்கள் இருக்கும். சில இயல்புக்கு மாறான காரணங்களால், இத்தொகுதிகள் 3 (triploid), 4 (tetraploid) அல்லது அதற்கு மேலும் இருப்பதுண்டு. இவற்றில் முறையே, ஒவ்வொரு வகைக் குரோமோசோமிலும் 3, 4 இருக்கும். படி மலர்ச்சியில், இத்தகைய எண்ணிக்கை மாற்றங்கள் ஏற்படும் போது, அதனால் பெறப்படும் உயிரியின் அமைப்பும் மாறு படுகிறது. பொதுவாக, இரண்டு தொகுதி குரோமோசோம்கள் உள்ள செடியின் இலைகளையும், அதில் உள்ள செல்களையும் விட, ஏறக் குறைய இரு மடங்கு அளவுள்ள செல்களையும், இலையையும், நான்கு தொகுதி குரோமோசோம்கள் உள்ள செடியில் காணலாம். இவை தவிர, முற்றிலும் புதிய அமைப்புள்ள சற்று மாறுபட்ட இனம் தோன்றுவதற்கு இத்தகைய எண்ணிக்கை மாற்றங்கள் உதவுகின்றன. முழுத் தொகுதியும், பன்மடங்காக அதிகரிக்காமல், சில உயிரிகளில் ஒன்று அல்லது இரண்டு குரோமோசோம்கள் மட்டும் அதிகரிக்கவோ, குறையவோ நேரிடலாம். எனவே, இவ்வித எண்ணிக்கை மாற்றம் அடைந்த செல்களையுடைய தாவரம் அல்லது விலங்கு அமைப்பில் மாறு பட்டிருக்கும். செல் மரபியல் வல்லுநர்கள் இரண்டு வெவ்வேறு இனங்களைக் கலப்பினம் செய்து, முற்றிலும் புதிய அமைப்புடைய இனம் ஒன்றை உண்டாக்குகின்றனர். சான்றாக, முன்ட்சிங் (Muntzing) என்பார், காலியோப்சிஸ் புயூப்சென்ஸ் (Galeopsis pubescens) என்னும் தாவரத்தையும், கா. ஸ்பீசியோசா (G.Speciosa) என்னும் தாவரத்தையும் இனக் கலப்புச் செய்தார். இவை இரண்டிலுமே, இரட்டைத் தொகுதி எண்கள், 16 குரோமோசோம்கள் ஆகும். இவற்றால் உண்டான இரட்டைத் தொகுதிக் கலப்புயிரியில் (diploid hybrid) 8 கா. புயூப்சென்ஸ் குரோமோசோம்களும், 8 கா. ஸ்பீசியோசா குரோமோசோம்களும் இருந்தன; கலப்புயிரியின் குரோமோசோம்களை இரட்டிப்பாக்கி, ஒரு நான்கு தொகுதி உயிரியை, அவர் தோற்றுவித்தார். இதில் 32 குரோமோசோம்கள் இருந்தன. இதன் அமைப்பில் சற்றும் வேறுபடாத, கா.டெட்ராஹிட் (G.tetrahit) என்னும் தாவரம் இயற்கையில் இருப்பது தெரிய வந்தது. கலப்புயிரிக்கும், இந்த இயற்கைச் செடிக்கும் சிறிதும் வேறுபாடில்லை. இவையிரண்டையும், கலப்புச் செய்ததில், இவை எளிதில் இனப் பெருக்கம் செய்வதைக் காண முடிந்தது. எனவே, இயற்கையில் உருவாகிய கா.டெட்டராஹிட் தன் படி மலர்ச்சியில், முன் கூறிய கா.புயூப்சென்ஸ், கா.ஸ்பீசியோசா ஆகியவற்றின் கலப்பிலிருந்தே உண்டானதென்பது புலனாயிற்று. செல் மரபியல், ஒப்புமைச் செல்லியல் (comparative cytology) ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் படி மலர்ச்சியைப் பற்றிப் புரிந்து கொள்வது எளிதாகிறது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய இனங்களில் ஜீனோம்களை (genomes) ஒப்பிடுவதன் மூலம், வகைப்பாட்டுக்கும், படி மலர்ச்சிக்கும் செல் மரபியல் இன்றியமையாதது என்பதை மக்ளங், எஸ். நவாஷின் என்போர், முதன் முதலில் வலியுறுத்தினர். வெவ்வேறு இனங்களிடையே உள்ள தொடர்பைத் தெளிவாக்குவதற்குச் சிறந்த வழிகளைத் தருவதால், செல் மரபியல் ஆய்வுகள் வகைப் பாட்டியலில் சிறப்புப் பெறுகின்றன. விலங்குகளிலும், தாவரங்களிலும் உள்ள வெவ்வேறு இனங்களின் குரோமோசோம் தொகுதிகளை (karyo types) ஆராய்வதால், அவற்றைப் பற்றிய உண்மைகள் புலனாயின: செல்லியல் அடிப்படையிலும், மரபியல் அடிப்படையிலும் இயற்கையில் உள்ள உயிர்த் தொகைகள் (wild populations) ஓரளவுக்கு வேறுபாடுடையவை என்பது நிறுவப் பட்டுள்ளது. சிலவற்றில், அவற்றின் ஜீன்கள் ஒரே அமைப்பில் இருந்த போதிலும், குரோமோசோம் துண்டுகளில் (segments) ஏற்பட்ட மாற்றங்களால், ஜீன்களின் வரிசை வெவ்வாறாக அமையும். இம்மாற்றங்கள் படி மலர்ச்சிக்கு அடிப்படையாகின்றன. —சோம. பேச்சிமுத்து —கி. மகிபதி செல்ல விலங்குகள் செல்லமாக அன்பு செலுத்தி, வீட்டில் வளர்க்கப் படுபவை செல்ல விலங்குகளாகும். நாய், பூனை, கிளி, மைனா, குயில், புறா போன்றவை, இவ்வாறு வளர்க்கப் படுகின்றன. நாய் அடிமையைப் போலவும், பூனை தோழனைப் போலவும் பழகுகின்றன. இயற்கைக்கு மாறாகப் புலி, சிங்கம், கீரி, முதலை, குதிரை, பாம்பு போன்றவையும் செல்லமாக வளர்க்கப் படுகின்றன. ஆடு, மாடு போன்றவை பொருளாதாரப் பயன் கருதி வளர்க்கப் படுகின்றன. செல்ல விலங்குகள் சில வித்தைகளைச் செய்யுமாறும், கட்டளைக்குக் கீழ்ப் படியுமாறும் வளர்க்கப் படுகின்றன. இச்செயலால், அவ்வீட்டிலுள்ள குழந்தைகள் பொறுப்புணர்வைப் பெறுகின்றனர். அவ்விலங்குகள் உணவு, பயிற்சி, வசிப்பதற்குத் தகுந்த இடம் இவற்றைப் பெறுவதன் மூலம், குழந்தைகள் மகிழ்ச்சியுடனும், நல்ல உடல் நலத்துடனும் இருப்பர். மேலும், தோழனாக இருப்பதால், பல செல்ல விலங்குகள் இன்றியமையாதவையாகின்றன. நாய், வேட்டையாடவும், வீட்டுக் காவலுக்கும், விழி இழந்தோரை அழைத்துச் செல்லவும் பயன் படுகிறது. மீன், பிற விலங்குகளை விட, ஒரு நன்மையைப் பெற்றுள்ளது. இதை, ஓரிரு நாள்களுக்கு உணவு அளிக்காமல், தனியாக விட்டு விடலாம். பெரும்பாலான மீன்களுக்கு, வாரத்தில் ஒரு சில நேரங்களில் மட்டுமே உணவு தேவைப்படுகிறது. மீன் தொட்டியில் தாவரங்களை வளர்ப்பதன் மூலம், அத்தொட்டியின் நீரைச் சம நிலையில் வைத்திருக்கலாம். அத்தாவரங்கள், மீனுக்கு ஆக்சிஜனைத் தருகின்றன. இதிலுள்ள நீரை மாற்ற வேண்டியதில்லை. ஆனால், இந்நீர் ஆவியாகி விடுவதால், சூழலுக்கேற்றாற் போல், அதிக நீரைத் தொட்டியில் சேர்க்க வேண்டும். வெள்ளைச் சுண்டெலி, கினிப் பன்றிகள், அணில் போன்ற சிறிய விலங்குகளும், வீட்டில் செல்ல விலங்குகளாக வளர்க்கப் படலாம். பண்ணைச் செல்ல விலங்குகள். பண்ணைகளில் வழக்கமாகப் பல வகையான செல்ல விலங்குகளை வளர்க்கின்றனர். ஏறக் குறைய, ஒவ்வொரு பண்ணையிலும் நாய், பூனை இவற்றை எலியைப் பிடித்துக் கொல்வதற்காக வைத்துள்ளனர். குழந்தைகள் இவற்றுடன் விளையாடுகின்றனர். இப்பண்ணையில் வசித்து வரும் குட்டி விலங்குகளைப் பேணிக் காத்து வருகின்றனர். அவர்கள் முயல். சீமைப் பன்றி போன்றவற்றைச் செல்ல விலங்குகளாக வளர்த்து வருகின்றனர். பள்ளிச் செல்ல விலங்குகள். பல பள்ளிகளின் வகுப்பறைகளில் செல்ல விலங்குகள் வளர்க்கப் படுகின்றன. சிறுவர், சிறுமியர் அவ்விலங்குகள் எவ்விதம் உண்ணுகின்றன, உறங்குகின்றன, விளையாடுகின்றன, தங்கள் குட்டிகளைப் பேணிக் காக்கின்றன போன்றவற்றைக் கற்றுக் கொள்கின்றனர். அச்செல்ல விலங்குகளுக்குக் கூண்டுகள் அமைக்கின்றனர், உணவு அளிக்கின்றனர்; பேணிக் காக்கின்றனர். முயல், கினிப் பன்றி, சுண்டெலி, வெள்ளை எலி, மீன், தவளை, தேரை, பாம்பு முதலியவை கூடப் பள்ளியின் வகுப்பறையில் வளர்க்கக் கூடிய செல்ல விலங்குகளுள் சில வகையாகும். சில வேளைகளில் வகுப்பறையில் கண்ணாடி அறை அல்லது தேன் கூடு அமைக்கப் படும். அரிய செல்ல விலங்குகள். சர்க்கசில் யானை, கரடி, சிங்கம், புலி போன்றவை செல்ல விலங்காக உள்ளன. கொடிய சாம்பல் நிறமுள்ள கரடி கூடப் பழக்கப் படுத்தப் பட்டிருக்கிறது. சிலர், பூனை வடிவக் காட்டு விலங்கையும், ஏனைய சிறிய வன விலங்கையும், செல்ல விலங்காக வளர்த்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான வன விலங்குகள் இளம் பருவத்திலிருக்கும் போது மட்டுமே, செல்ல விலங்குகளாக வைக்கப் படுகின்றன. செல்ல விலங்கு தெரிவு செய்தல். ஏதேனும் ஒரு செல்ல விலங்கை விலைக்கு வாங்கு முன், அனைத்து வகைச் செல்ல விலங்குகளைப் பற்றியும், இயலு மட்டும் அறிந்து கொள்ள வேண்டும். அதற்காக ஒதுக்கப் பட்டுள்ள இடத்தின் பரப்பில் வசதியாக வசிக்கக் கூடிய விலங்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். செல்ல விலங்கு நடந்து கொள்ளும் விதம், அதன் உணவு, அது பெரிதாக வளர்ந்த பின்னர் காணப் படும் தோற்றம் போன்றவற்றை அறிய வேண்டும். அவ்விலங்குக்குத் தகுந்த உணவு, நோய்த் தடுப்பு நடவடிக்கை, உடல் நலம் போன்றவற்றையும் நன்கு அறிந்து, செல்ல விலங்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தனியியல்புப் பழக்கம். ஒரு விலங்குக்கு தனியியல்புப் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டுமெனில், முதலில் அது என்ன செய்ய வேண்டுமென்பதைப் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்ய வேண்டும். எடுத்துக் காட்டாக, நாய்க்கு உட்கார கற்றுக் கொடுக்க விரும்பினால், அதை உட்காரும் நிலைக்குக் கீழே தள்ளி விடலாம். பிறகு ‘உட்கார்’ என்று சொல்லலாம். அவ்வாறு சொல்லும் போது, அது சரியாக உட்கார்ந்தால், அதைப் புகழ்ந்து பேச வேண்டும். ‘உட்கார்’ என்று சொல்லும் போதெல்லாம் அந்நாய் உட்கார்வதைக் காணலாம். தரையில் உட்கார்ந்து, அதன் முன் கால்களை மேலே உயர்த்துமாறு சொல்வதால், அது அவ்வாறே செய்யும். நாய் பல கட்டளையையும் அறிந்து கொள்ளும். ஒரு பொருளை எடுத்து வருதல், உருளை போன்று உருண்டு செல்லுதல், கெஞ்சுதல், இறந்ததைப் போல் நடித்தல் போன்ற தனியியல்புப் பழக்கத்தையும் கற்றுக் கொள்ளும். ஒரு பயிற்சியை முழுமையாகச் செய்து முடிக்கும் வரையில், ஓய்வெடுக்க அனுமதிக்கக் கூடாது. அவற்றிற்குத் தனியியல்புப் பழக்கங்களைக் கற்றுக் கொடுக்க முயற்சி மேற்கொள்ளும் போது, பொறுமை இழக்கக் கூடாது. தன் வேலையைச் சரியாகச் செய்து முடிக்கும் போது, நாயின் தலையைச் செல்லமாகத் தட்டிக் கொடுக்க வேண்டும். செல்ல விலங்குகளைப் பேணிக் காத்தல் உணவூட்டல். எந்த ஒரு செல்ல விலங்குக்கும் உணவூட்டுவதற்கு முதலில் கடைப் பிடிக்க வேண்டியது, அதன் உணவுத் தட்டைத் தூய்மையாக வைத்திருத்தலே ஆகும். அதை ஒவ்வொரு நாளும் செம்மையாகக் கழுவித் தூய்மை செய்ய வேண்டும். விலங்குக்கு அளவுக்கு மீறி, உணவு கொடுக்கக் கூடாது. அது போதிய உடற்பயிற்சி பெறுதல் வேண்டும். பார்ப்பதற்குப் பளப்பளப்பாகவும், மெலிந்தும் இருக்க வேண்டும். சிறிதளவு உணவைக் கூட விட்டுச் செல்லாமல், அது உட்கொள்ளும் வரை உணவளிக்கலாம். உணவுத் தட்டிலுள்ள உணவை முழுமையும் தின்னாமல் போய் விட்டால், அத்தட்டை அப்பால் எடுத்துச் செல்ல வேண்டும். அடுத்த முறை அதற்குத் குறைந்தளவே உணவளிக்க வேண்டும். கால முறைப்படி, அதற்கு ஏற்ற சரியான உணவளித்து வந்தால், அவ்விலங்குகளை நோயிலிருந்து காக்கலாம். செல்ல விலங்கு நல்ல உடல் நலத்துடன் இருக்க சரி விகித உணவு இன்றியமையாதது. பெரும்பாலான செல்ல விலங்குகளுக்குத் தயாரிக்கப்பட்ட உணவில் வைட்டமின், தாது உப்பு, புரதச் சத்து ஆகியவை, ஒவ்வொரு விலங்கிலும் சரியான அளவில் அடங்கியிருக்குமாறு திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய உணவைப் பயன்படுத்துவதால், செல்ல விலங்குகள் ஊட்டச் சத்து மிகுந்த பொருளையே பெறும். வழக்கமாக, அவற்றிற்குத் தயாரிக்கப்பட்ட உணவில், கூடுதலாக எதையும் சேர்க்க வேண்டியதில்லை. ஆனால், நாய், பூனை இவற்றிற்குச் சிறிய இறைச்சித் துண்டு, ஆப்பிள் பழத் துண்டு இவற்றைக் கொடுக்கலாம். இருப்பிடம் அமைத்தல். செல்ல விலங்குகள் அனைத்தும், நல்ல இருப்பிடங்களைப் பெற்றிருக்க வேண்டும். அவற்றின் அளவு, செயல்பாடு இவற்றிற்குத் தகுந்தாற் போல, கூண்டு அமைக்க வேண்டும். மிகச் சிறிய பறவைகளின் கூண்டுக் கம்பிகள் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாகயிருக்குமாறு அமைக்க வேண்டும். இடைவெளி அதிகமிருந்தால், அப்பறவைகள் தலையைக் கம்பிகளுக்கு இடையே நுழைத்துக் கொள்ளும் தீமை ஏற்படலாம். நாய் அல்லது பூனை இவற்றுக்கு வெதுவெதுப்பான உலர்ந்த இடத்தையே படுக்கை இடமாகப் பயன் படுத்த வேண்டும். கூடை, பெட்டி அல்லது செல்ல விலங்குகளின் படுக்கை இவற்றை, அவை தொடாமல் அப்பால் வைக்க வேண்டும். காற்றுப் புகாதவாறு, அதன் கதவு அமைய வேண்டும். மழை, பனி இவை தாக்க வண்ணம், முழுதும் மறைக்க வேண்டும். நாயின் இருப்பிடம், அது படுத்து எழுந்து நிற்கவும், இடையூறின்றிச் சுற்றி வரவும், போதிய அளவு பெரிதாகயிருக்க வேண்டும். நோய் மருத்துவம். பெரும்பாலான செல்ல விலங்குகள் முறையான உணவு, பராமரிப்பு, இருப்பிடம் அமைவதால், நல்ல உடல் நலத்துடன் இருக்கும். அது நோய் வாய்ப் பட்டிருந்தாலோ, உடலில் புண் போன்ற தீங்கு ஏற்பட்டாலோ, உடனடியாகக் கால் நடை மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும். —அ. அரங்கநாதன் செல்லில் கோல்கை உறுப்பு 1898இல் கேமில்லோ கோல்கை என்னும் இத்தாலி நாட்டவர், ஆந்தையின் சிறு மூளையில் உள்ள நரம்புச் செல்களில் ஒரு வகைச் சிறப்பு உறுப்பு இருப்பதைக் கண்டறிந்து, அதற்கு உள் வலைக் கருவி எனப் பெயரிட்டார். பின்னர், பல வகைச் செல்களிலும், இதைக் கண்ட அறிவியலார், இதற்குக் கோல்கை உறுப்பு (golgi body) அல்லது கோல்கைக் கூட்டு அமைப்பு (golgi complex) என்று பெயரிட்டனர். இவ்வமைப்பிற்கு, வேறு பல பெயர்களும் உள்ளன. கோல்கை அமைப்பை ஆஸ்மியம், வெள்ளி போன்ற உலோகங்களின் உப்புகளைச் செல்லின் உட்புகச் செய்து, தோன்றச் செய்யலாம். கோல்கை உறுப்பு என்று ஒன்று உள்ளதா அல்லது அது செயற்கையாக வேதிப் பொருள்களின் சேர்க்கையால் உண்டானதா என்னும் ஐயம் எழுந்தது. 1963இல் கோல்கை உறுப்பு செல்லின் ஓர் அமைப்பே என ஒப்புக் கொள்ளப் பட்டது. சுரப்பிகளின் செல்கள், நரம்புச் செல்கள் ஆகியவற்றில் கோல்கை அமைப்பைத் தெளிவாகக் காண முடியும். ஆனால், உயிருள்ள செல்களை நுண்ணோக்கியில் நோக்கும் போது, கோல்கை உறுப்பின் வழக்கமான தோற்றம் தெரியாது. முன் கூறிய ஆஸ்மிய, வெள்ளி உட்புகச் செய்த செல்களே இதன் வடிவத்தைக் காட்ட உதவும். சுரப்புச் செல்களிலும், முதுகெலும்புள்ள விலங்குகளின் தைராய்டு, கணையம், ஈரல் ஆகிய உறுப்புகளின் செல்களிலும், கோல்கை உறுப்பைச் சிறப்பாகக் காண இயலும், தைராய்டு, கணையம் போன்ற சுரப்புச் செல்களின் கோல்கை உறுப்பு, நியூக்ளியசின் ஒரு புறமாக நியூக்ளியசிற்கும், செல்லின் ஒரு முனைக்கும் இடையில் இருக்கும். நரம்புச் செல்கள், ஈரல் செல்கள் ஆகியவற்றில், கோல்கை உறுப்பு சைட்டோப்பிளாசத்தில் நியூக்ளியசைச் சுற்றிப் பரவிக் கிடக்கும். முதுகெலும்பற்றவையின் செல்களில், கோல்கை உறுப்பு, தனித் தனியாக அமைந்திருக்கும்; இவ்வாறே, தாவரச் செல்களிலும் தனித் தனியாகவே இருக்கும்; இவற்றை, டிக்டியோசோம்கள் எனலாம். முதுகெலும்புள்ளவற்றின், நரம்புச் செல்களில் கோல்கை உறுப்பு வலைப் பின்னலாக நியூக்ளியசைச் சுற்றி இருப்பது குறிப்பிடத் தக்கது. ஒளி நுண்ணோக்கியில் பார்க்கும் போது, பல்வேறு தோற்றங்களில் காணப் படும் கோல்கை உறுப்பு, எலெக்ட்ரான் நுண்ணோக்கியில் பார்க்கும் போது, அடிப்படையான சில அமைப்பைக் கொண்ட அதிக வேறுபாடற்ற செல் உறுப்பாகத் தோன்றும். ஒளி நுண்ணோக்கியில் தோன்றும் வடிவங்கள். கோல்கை உறுப்பு ஒழுங்கற்ற வடிவுள்ள சிறு, சிறு தட்டையான துணுக்குகள், தகடுகள் ஆகியவற்றால் ஆனது போலக் காணப்படும். சிறு உருண்டை வடிவான குமிழ், பிறைச் சந்திரன் அல்லது வளைந்த வாழைப் பழம் போன்ற வடிவம், வளையம் போன்ற வட்ட வடிவம் எனப் பல்வேறு உருவங்களின் தொகுதியாக இருக்கும். ஒவ்வொரு கோல்கை வடிவத்திலும், ஆழ்ந்த கருமையான ஆஸ்மியம்–ஏற்கும் அல்லது வெள்ளி–ஏற்கும் (பொதுவில் நிறம் ஏற்கும்) வெளிப் பகுதியும், இலேசான சாம்பல் நிறம் அல்லது நிறமற்ற மேற்சொன்ன இரு உலோகங்களையும் ஏற்காத உட்பகுதியும் இருக்கும். இவற்றை முறையே, கோல்கை வெளிப் பகுதி, கோல்கை உட் பகுதி எனலாம். கோல்கை உறுப்பு செல்லின் வெவ்வேறு செயல் நிலைகளில் வெவ்வேறான தோற்றம் கொண்டிருக்கும். எலெக்ட்ரான் நுண்ணோக்கியில் பார்க்கும் போது, பெரும்பாலும் அனைத்துச் செல்களிலும், கோல்கை உறுப்பு சற்றேறக் குறைய, ஒரே தோற்றம் பெற்றிருக்கும். அதன் பகுதிகளாக, அருகருகே இரண்டு சவ்வுகளும், இடையில் ஓர் இடைவெளியும் கொண்ட தட்டையான கோணிப் பை போன்ற வளைவான பைகள் (cisternae), ஏறத் தாழ 60 நானோ மீட்டர் அளவுள்ள குமிழ்கள் மற்றும் சில குழாய்கள், சற்றுப் பெரிய குமிழ்கள் (vacuoles) போன்றவை காணப் படும். பெரிய குமிழ்களில், வடிவமில்லாத அல்லது துகள் போன்ற பொருள் நிரம்பியிருக்கும். சிறு குமிழ்களுக்கும், பெரிய குமிழ்களுக்கும் சவ்வாலான சுவர் ஒன்று இருக்கும். செல்லின் சவ்வாலான பிற பகுதிகளினின்றும் கோல்கை உறுப்பு, தெளிவான வேற்றுமையுடையது. அதைச் சுற்றியோ, அருகிலோ கிளைக்கோஜன் துணுக்குகள், ரிபோசோம்கள், மைட்டோகாண்டிரியங்கள் போன்றவை இருக்கா. கோல்கை உறுப்பின் தட்டையான பைகள் இணையாக, ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட சற்றுக் குழிவான தட்டுகள் போல இருக்கும். ஒவ்வொரு தட்டுப் போன்ற பைக்கும் ஒரு குழிவான பரப்பும், ஒரு குவிந்த பரப்பும் உண்டு. அடுத்தடுத்த இரு பைகளுக்கு இடையில் உள்ள இடைவெளி 20–30 நா.மீ. இருக்கும். பெரும்பாலான விலங்குகள், தாவரங்களின் செல்களில் ஓர் அடுக்கில் 3–7 பைகள் இருக்கும். சில வகைப் பாசிகளில் 10–20 பைகள் ஓர் அடுக்கில் இருப்பதுண்டு. கோல்கைப் பை அடுக்கு. ஓர் அடுக்குப் பையை ஒரு டிக்டியோசோம் எனலாம். நியூக்ளியஸ் சவ்வின் அருகிலுள்ள குவிந்த கோல்கைப் பையை முகம் அல்லது உண்டாகும் முகம் எனலாம். நியூக்ளியசிலிருந்து அப்பாலுள்ள குழிந்த பை மற்றும் பெரிய சுரப்பு நிறைந்த குமிழ்கள் ஆகியவை உள்ள பகுதியைத் தொலைவில் உள்ள முகம் அல்லது முதிர் முகம் எனலாம். சிறு, சிறு உருண்டையான குமிழ்கள் கோல்கையில் உண்டாகும் முகத்தின் அருகில் இருக்கும்; எண்டோப்பிளாச வலையிலிருந்து மேற்கூறிய சிறு குமிழ்கள் பிரிந்து நகர்ந்து, பின்னர், அவற்றின் சேர்க்கையால், கோல்கைப் பகுதியில், அதன் உண்டாகும் முகம் ஏற்படுவதால், இக்குமிழ்களை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குச் செல்லும் குமிழ்கள் எனலாம். முதிர் முகப் பகுதியிலிருந்து, சுரப்புக் குமிழ்கள் தொடர்ச்சியாக உண்டாக்கப் பட்டு விடுவிக்கப் படுகின்றன. முதிர் முகத்துக்கு அண்மையில், அமில பாஸ்ஃபேட்டேஸ் நிறைந்த பை ஒன்று இருக்கும். இதை GERL என்று கூறுவர். லைசோசோம்களை உற்பத்தி செய்யும். ரிபோசோம்கள் இல்லாத எண்டோப்பிளாச வலை–கோல்கை உறுப்பின் அருகே உள்ளது என்பதை GERL என்னும் பெயர்ச் சுருக்கம் குறிக்கிறது. கோல்கை உறுப்பைச் சேர்ந்த பெரிய குமிழ்கள் கூட GERL உண்டாக்குவதாக, இப்போது கண்டு பிடித்துள்ளனர். எண்டோப்பிளாச வலையிலிருந்து, கோல்கை உறுப்பு, பிளாஸ்மா சவ்வு ஆகியவற்றின் சவ்வுகளில் தடிமன் கூடிக் கொண்டே வருவது சிறப்புத் தன்மையாகும். நியூக்ளியஸ் சவ்லின் தடிமன் 65 நா.மீ. எனில், எண்டோப்பிளாச வளையின் சவ்வும் 65 நா.மீட்டரும், இரண்டாம் பை 68 நா. மீட்டரும், மூன்றாம் பை 72 நா. மீட்டரும், நான்கு, ஐந்தாம் பைகளின் சவ்வு 80 நா.மீட்டரும் தடிமன் கொண்டிருக்கும்., சுரப்புக் குமிழ்களின் சுவர் 83 நா.மீ. தடிமனுள்ள சவ்வு ஆகும். பிளாஸ்மா சவ்வு 85 நா.மீ, தடிமனிருக்கும். சுரப்புக் குமிழ்களின் சுவர் 83 நா.மீட்டர் தடிமனுள்ள சவ்வு ஆகும். பிளாஸ்மா சவ்வுப் பகுதியிலிருந்து தோன்றி, சிறிது சிறிதாக நகர்ந்து, வெவ்வேறு செல் உறுப்பாக மாறி, இறுதியில் பிளாஸ்மா சவ்வாக மாறுவதையும், அதன் தடிமன் அதிகரிப்பதையும் அறியலாம். எலெக்ட்ரான் நுண்ணோக்கியில் காணும் போது, கோல்கை உறுப்பின் தோற்றம் படத்திலுள்ளவாறு காணப் படும். பைகள் அடுக்காக உள்ளமையையும், ஒவ்வொரு பையும் இரண்டுச் சவ்வைப் பெற்றுள்ளமையையும், பைகளின் விளிம்புகள் பருத்து, உருண்டை வடிவில் உள்ளமையையும், இவை தனியாகப் பிரிந்து, குமிழ்களாகி உள்ளமையையும் காணலாம். சில பெரிய குமிழ்கள், கோல்கையின் குளிந்த முதிர் முகத்தின் அருகில் காணப் படுகின்றன. கோல்கை உறுப்பின் செயல்கள். கோல்கைப் பைகள் வேதிப் பண்பில் தமக்குள் வேறுபடுகின்றன. எலெக்ட்ரான் நுண்ணோக்கியின் மூலம், இவ்வேறுபாடுகள் காட்டப் படுகின்றன. உண்டாகும் முகத்தில் உள்ள பைகளை, ஆஸ்மியம் மிகுதியாகப் பற்றிக் கொண்டு, எலெக்ட்ரான் நுண்ணோக்கியில் தெளிவாகக் காண உதவுகிறது. அதே போல, தயமின் பைரோபாஸ்ஃபேட்டேஸ் என்னும் நொதி முதிர் முகப் பைகளில் உள்ளமையைக் காணலாம். தைராய்டு செல்களிலும், வேறு சிலவற்றிலும் ஆராய்ந்த போது, கோல்கைப் பைகளின் வழியாகப் புரோட்டின் சுரப்புச் செல்லும் போது, முதிர் முகப் பகுதியில், அதனுடன் கார்போஹைட்ரேட்டுகள் சேர்க்கப் படுவதை அறிய முடிந்தது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> கிளாட் என்பார், லிப்போப் புரதங்கள் உண்டாக்கப் பட்டு எடுத்துச் செல்லப் படுவதை ஆராய்ந்த போது, முதலில் இத்துகள்கள் தோன்றும் விதம் தெளிவாயிற்று. லிப்போப் புரதங்களின் புரதப் பகுதி ரிபோசோம்கள் இணைந்த எண்டோப்பிளாச வலையால் உருவாக்கப் படும். டிரைகிளிசரைடுகள் எனப் படும் கொழுப்புப் பொருள் ரிபோசோம்களற்ற எண்டோப்பிளாச வலையால் உண்டாக்கப் பட்டு, இரண்டும் இணைகின்றன. இணைந்த லிப்போப்புரதம் கோல்கை உறுப்பினுள் செல்கிறது. நீண்ட நேரத்துக்குப் பிறகு, லிப்போப் புரதம் கோல்கைப் பைகளின் ஓரங்களின் விரிவடைந்த பகுதிகளிலிருந்து உண்டாகும் பெரிய குமிழ்களில் நிறைவதைக் கிளாட் கண்டார். அதன் பின்னர், இக்குமிழ்கள் கோல்கைப் பைகளினின்றும் பிரிந்து சுரப்புக் குமிழ்களாகின்றன. செல் வேதியியல். மைட்டோகாண்டிரியா, எண்டோப்பிளாச வலை ஆகியவற்றை விடக் கோல்கை உறுப்பு ஒப்படர்த்தி குறைந்ததாகும். எலியின் ஈரல் செல்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கோல்கை உறுப்பு 60% புரதத்தாலும், 40% கொழுப்பாலும் ஆனது. கூழ் மின் சவ்வூடு பரவல் (gel electrophoresis) மூலம், புரதங்களைப் பிரித்தெடுத்து ஆராயும் போது, எண்டோப்பிளாச வலையிலும், கோல்கை உறுப்பிலும், பொதுவான சில புரதங்கள் உள்ளமை தெரிய வந்தது. ஆனால், கோல்கை உறுப்பில் புரதப் பகுதிகள் குறைவாகக் காணப் படுகின்றன. கோல்கை உறுப்பின் பாஸ்ஃபோலிப்பிடுகள் எண்டோப்பிளாச வலையுடையவற்றுக்கும், பிளாஸ்மா சவ்வுடையவற்றுக்கும் இடைப்பட்ட அமைப்புடையன. கோல்கை உறுப்புக்கே உரிய நொதி டி.பி.பியேஸ் ஆகும். மேலும், சில கிளைக்கோ டிரான்ஸ்பரேஸ்களும் உள்ளன; இவை, புரதங்களுடன், சில கார்போஹைட்ரேட்டுகளை இணைக்க உதவுகின்றன. மூல லைசோசோம்கள் கோல்கை உறுப்பிலிருந்து தோன்றுவதால், இவ்வுறுப்பில் அமில பாஸ்ஃபேட்டேசும், லைசோசோமில் உள்ள பிற நொதிகளும் உள்ளன. கோல்கை உறுப்பின் பணி. சுரப்பதே கோல்கை உறுப்பின் சிறப்பான பணி ஆகும். செல்லின் பெரிய மூலக் கூறுகள் உண்டாக்கப் படுவதும், எடுத்துச் செல்லப் படுவதும், வெளியாக்கப் படுவதுமான செயல்களில் எண்டோப்பிளாச வலையும், கோல்கை உறுப்பும், நேரடியான தொடர்புடையன. வேறோரிடத்தில் ('எண்டோப்பிளாச வலையில்) உருவாக்கப் பட்ட பொருள்கள், தனித் தனியாகப் பிரிக்கப் பட்டு, மாற்றம் அடைவதற்கேற்ற, செல் தடுப்பு அறைகளாகக் கோல்கை உறுப்பின் பைகள் உள்ளன. மாற்றமடைந்த பைகள் கோல்கை உறுப்பின் பைகளிலிருந்து குமிழ்களாக விடுவிக்கப் படுகின்றன. இவ்வாறு கோல்கை உறுப்பு, செல்லின் சுரப்புத் தயாரிப்புகளைச் செம்மையாகச் சேமிக்க அல்லது வெளியே அனுப்ப உதவும் சவ்வாலான தடுப்பு அறையாக விளங்குகிறது. GERL உம் லைசோசோம் உண்டாதலும், சுரப்புக் குமிழ்களுக்கு ஒரு வெளிச் சவ்வு தந்து, உருப் பெறச் செய்வது மட்டுமன்றி, மூல லைசோசோம்கள் உண்டாவதிலும் கோல்கை உறுப்பு தொடர்புடையது. சுரப்புக் குமிழ்கள் உண்டாவதைப் போலவே, அதே வரிசையில் நொதிகளின் உற்பத்தி, மொத்தமாதல், எடுத்துச் செல்லப் படுதல், அடைக்கப் படுதல் ஆகியன மூல லைசோசோம்கள் உருப் பெறும் போதும் நிகழ்கின்றன. லைசோசோமின் பெரும்பாலான நொதிகள், கிளைக்கோப் புரதங்களாக உள்ளன; எனவே, கிளைக்கோசை ஆக்குதலில் கோல்கை உறுப்பு பங்கேற்கிறது என்பது தெளிவாகிறது. கோல்கை உறுப்பின் முதிர் முகத்தில் GERL இருக்கிறது. லைசோசோமுக்குரிய அமில பாஸ்ஃபேட்டேஸ் GERL இல் உள்ளமையால், லைசோசோம் உருவாதலில், இப்பகுதி அடிப்படையாகக் கருதப் படுகிறது. நோவிக்காஃப் என்பார், கறுப்பு நிறத்தினை உண்டாக்கும் மெலானின் துகள்கள் உண்டாதல், நாளமுள்ள மற்றும் நாளமில்லாத சுரப்பிகளின் சுரப்புப் பொருள்களைப் பக்குவப் படுத்திக் குமிழ்களில் அடைத்தல், கொழுப்பின் ஆக்கச் சிதை மாற்றம் ஆகியவற்றில் கோல்கை உறுப்பிற்கும் GERLக்கும் தொடர்பு உண்டு என்று குறிப்பிட்டுள்ளார். புரதங்கள், கொழுப்புகள் ஆகியவற்றைக் கிளைக்கோசைடு ஆக்குதல். கொழுப்புப் பொருளைக் கிளைக்கோ கொழுப்புகளாகவும், புரதங்களைக் கிளைக்கோப் புரதங்களாகவும் ஆக்குவதற்கான கிளைக்கோசிடேஸ் என்னும் நொதி கோல்கை உறுப்பில் உள்ளமையால், அது மேற்காணுமாறு கார்போஹைட்ரேட்டுகளை இணைக்கிறது. பாலி சாக்கரைடுகளை உற்பத்தி செய்தல். குளூக்கோசிலிருந்தோ, காலக்டோசிலிருந்தோ, இவ்விரண்டிலுமிருந்தோ, பாலிசாக்கரைடுகள் எனப் படும் பெரிய மூலக் கூறுகளைக் கோல்கை உறுப்பு உண்டாக்குகிறது. குடலின் மதுக் கிண்ண வடிவச் செல்கள் போன்றவற்றில், சர்க்கரைகளைச் சல்ஃபேட்டாக்குவதையும், கோல்கை உறுப்புச் செய்கிறது. விந்துச் செல்லின் நுனிப் பகுதியில் உள்ள அக்ரோசோம் என்பது கோல்கை உறுப்பால் உண்டாக்கப் படுகிறது. ஹைட்ரோசோவாவின் கொட்டும் செல்கள் கோல்கை உறுப்பால் உண்டாக்கப் பட்டவையாகும். கோல்கை உறுப்பும் புற்று நோய்ச் செல்களும். ஸ்ஃபிங்கோ கொழுப்புகளைக் கிளைக்கோசைடாக ஆக்கும் நொதிகள், கோல்கை உறுப்பில் செறிந்துள்ளன. புற்று நோய்ச் செல்லின் மேற்புறச் சவ்வில் கிளைக்கோ ஸ்ஃபிங்கோ கொழுப்புகள் இழக்கப் படுவதால், சில மாற்றங்கள் உள்ளன. கோல்கை உறுப்பில் உள்ள கிளைக்கோ டிரான்ஸ்ஃபரேஸ்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை குறைவாக இருப்பதே இம்மாற்றங்களுக்குக் காரணம் ஆகும். செல்லில் புற்று நோய்ப் பண்புகள் வளர்வதற்கும், அதன் மேற்புறப் பரப்பில் உள்ள கிளைக்கோப் புரதங்கள், கிளைக்கோஸ்ஃபிங்கோ கொழுப்புகள் ஆகியவற்றில் ஏற்படும் மாறுபாடுகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதில் இப்போது மிகுந்த கவனம் செலுத்தப் படுகிறது. கோல்கையின் தோற்றம். எண்டோப்பிளாச வலையினின்றும், கோல்கை உறுப்பின் சவ்வுகள் தோன்றுவதாக இப்போது கருதப் படுகிறது. எண்டோப்பிளாச வலையினின்றும் தோன்றும் சிறு, சிறு குமிழ்கள் நகர்ந்து சென்று, ஒரு வரிசையாக அமைந்து, ஒன்றாகச் சேர்ந்து ஒரு பையை உண்டாக்குகின்றன. மேன்மேலும் இப்பைகள் தோன்றத் தோன்ற, முதலில் உண்டான பை முன்னோக்கித் தள்ளப் படுகிறது. இவ்விதம் அடுக்கடுக்காகப் பைகள் உண்டாகி, டிக்டியோசோமாக உருவெடுக்கின்றன, முதிர் முகத்தில் உள்ள பை, சிறு சிறு குமிழ்களாகப் பிரிந்து சுரப்புக் குமிழ்களாக மாறும். 1957இல் கிராஸ் என்பாரால் வெளியிடப் பெற்ற இக்கருத்து இப்போது வலிமை பெற்றுள்ளது. —சோம. பேச்சிமுத்து செல்லுலாய்டு முதன் முதலில் தயாரிக்கப்பட்ட செயற்கை நெகிழிப் பொருள் செல்லுலாய்டு (celluloid) ஆகும். இது செயற்கைத் தந்தம் அல்லது சைலோனைட் என்றும் குறிப்பிடப்படும். ஜெ. டபிள்யு. ஹயாத், ஐ.எஸ். ஹயாத் என்போரால் 1870ஆம் ஆண்டில் அமெரிக்காவில் செல்லுலாய்டு கண்டு பிடிக்கப் பட்டது. செல்லுலாய்டு என்பது அமெரிக்காலின் வணிகப் பெயராகும். இச்சேர்மம் செல்லுலோஸ் நைட்ரேட்டும், கற்பூரமும் கலந்த ஒருபடித்தான கூழ்மமாகும். இது விறைப்புத் தன்மை மிக்கது. இதன் அடர்த்தி 1.4. மிகவும் கடினமானது; பளபளப்பானது; சீரானது. மிகக் குறைந்த செலவில் இதைத் தயாரிக்கலாம். நீர், எண்ணெய், அமிலம் இவற்றால் செல்லுலாய்டு பாதிக்கப் படுவதில்லை. இதை எளிதில் கையாளலாம். பல நிறங்களிலும் பெறலாம். ஏறத் தாழ 200–220°F வரையில் பல வார்ப்புகளில் தயாரிக்கச் செல்லுலாய்டுகள் பயன் படுகின்றன. -70°F இல் இது பொடியாகும் தன்மையுடையது. அறை வெப்ப நிலையில் இதை ரம்பம் கொண்டு அறுக்கலாம்; துளையிடலாம்; நன்கு மெருகூட்டலாம். சூரிய ஒளி அல்லது 120°Fக்கு மேல் செல்லுலாய்டுகள் நிறமிழக்கின்றன. 365°Fக்கு மேல் சிதைவடைகின்றன. செல்லுலாய்டுகள் எளிதில் தீப்பிடிப்பதில்லை. எனவே, எளிதில் வெப்பத்தைச் சிதற அடிக்கக் கூடிய சேர்மங்களைச் செல்லுலாய்டு கொண்டு பாதுகாக்கலாம். தற்போது செல்லுலாய்டுகளுக்கு மாற்றாக, செயற்கைப் பல்லுறுப்பிகள் கண்டு பிடிக்கப் பட்டிருப்பினும், செல்லுலாய்டு 1970ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்துள்ளது. —கோ. கோவிந்தராஜு <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்து ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> செல்லுலோஸ் இது தாவரச் செல்களில் இருக்கும் முக்கியப் பகுதிப் பொருளாகும். செல்லுலோஸ் (cellulose) ஒரு பாலி சாக்கரைடு; தாவரச் செல் சுவரின் (cell wall) முக்கிய அமைப்பாக உள்ளமையால், செல்லுலோஸ் என்னும் பெயர் வந்தது. செல்லுலோஸ் தாவரங்களில் தூய்மையாகக் கிடைப்பதில்லை. உறிஞ்சும் பஞ்சு, பருத்தி, லினன், உயர் வகை வடி தாள்கள் ஆகியவற்றில் பெருமளவு செல்லுலோஸ் உள்ளது. பருத்தியில்தான் 90%க்கும் மேல் உள்ளது. மரக்கட்டையில் 40–50% செல்லுலோஸ், 20–30% லிக்னின், 10–30% ஹைமி செல்லுலோஸ்கள், கனிம உப்புகள், புரதங்கள், உயர் வேதிப் பொருள்கள் ஆகியன அடங்கியுள்ளன. செல்லுலோஸ் என்பது β–D–குளூக்கோ பைரனோசின் பகுதிகள் பல இணைந்த பல்லுறுப்பி (polymer) ஆகும். இப்பல்லுறுப்பியில், நீர் மூலக் கூறுகள் குறுக்கப் பிணைப்பில் இணையும் போது, வெளியேற்றப்பட்டு, 2000–4000 பகுதிகள் ஒன்றாகப் பிணைந்துள்ளன. இதன் அமைப்பு வருமாறு: β–குளூக்கோபைரனோசின் தொகுதிகளுக்கிடையே காணப்படும் β–D கிளைக்கோசைடு பிணைப்பின் பண்பைத் தவிர, ஏனையவற்றில் செல்லுலோஸ், ஸ்டார்ச் அமைலோசின் வேதிப் பண்புகளைப் பெரிதும் ஒத்துள்ளது. இயற்கையில் கிடைத்தல். செல்லுலோஸ், தாவரச் செல் சுவர்களில் நுண் இழைகளாக (fine fibrils) அமைந்துள்ளது. இதை நுண்ணோக்கி வழியே காணலாம். முதன்மை (primary), இரண்டாம் நிலைச் (secondary) செல் சுவர்களில், செல்லுலோஸ் இழைகள் பக்க–பக்க இணைப்பால் இணைக்கப்பட்டுப் பல அடுக்குகளாக (lamellae) அமைந்துள்ளன. எலெக்ட்ரான் நுண்ணோக்கியின் வழியாகப் பார்த்தால், இந்த நுண் இழைகள், மேலும் பல மீநுண் இழைகளால் உருவாக்கப் பட்டுள்ளமையை அறியலாம். இயற்பியல் பண்புகள். இது நீர், ஈதர், ஆல்கஹால் கரைப்பான்களில் கரைவதில்லை. சாதாரண சூழலில், நீர்த்த அமில, காரங்கள், ஆக்சிஜனேற்றிகள் ஆகியவற்றால் பாதிக்கப் படுவதில்லை. ஆனால், ஸ்விட்சர் காரணியில் (Schweitzer's reagent) செல்லுலோஸ் கரைகிறது. (அடர் அம்மோனியாவில் கரைந்த தாமிர (II) ஹைட்ராக்சைடின் நீர்த்த கரைசல் ஸ்விட்சர் காரணி ஆகும்). மேலும் துத்தநாகக் குளோரைடின் ஹைட்ரோ குளோரிக் அமிலக் கரைசல், அடர் சல்ஃப்யூரிக் அமிலக் கரைசல் ஆகியவற்றிலும் செல்லுலோஸ் கரைகிறது. தயாரிப்பு. வணிகத்தில் பஞ்சு, மரக் கூழ் (முக்கியமாக பைன், ஸ்புரூஸ் மரங்கள்) போன்றவற்றிலிருந்து செல்லுலோஸ் பெருமளவு தயாரிக்கப் படுகிறது. காகிதத்தைத் தயாரிக்கும் போது, செல்லுலோஸ் தூய நிலையில் பெறப் படுகிறது. தொடக்க காலத்தில், லினன், பருத்திக் கந்தல் துணிகளிலிருந்து காகிதம் தயாரிக்கப் பட்டது. காகிதத் தேவை அதிகரித்ததால், மரக் கூழிலிருந்து காகிதம் தயாரிக்கும் முறை உருவாக்கப் பட்டது. காகிதத் தயாரிப்பில் பயன் படும் எந்திர, பகுதி எந்திரத் தாவர இழைகளைப் பிரித்தெடுக்கும் முறைகள் தவிர, சல்ஃபேட் (கிராஃப்ட்) சோடா, சல்ஃபைட் ஆகிய முறைகளும் வழக்கில் உள்ளன. இதில், சல்ஃபேட் முறையே பொதுவாகப் பயன் படுகிறது. சல்ஃபேட் முறையில் மரக் கட்டைகள் தோலுரிக்கப் பட்டுச் சிறு, சிறு துருவல்களாகப் பொடியாக்கப் பட்டு, 160–170°Cஇல் 2–6 மணி நேரம் சோடியம் சல்ஃபைடு, சோடியம் ஹைட்ராக்சைடு ஆகியவை 1:3 என்று கலக்கப் பட்ட கரைசலில் இட்டு வேக வைக்கப் படும். இவ்வாறு வேக வைக்கப் பட்ட பொருள்கள் துளையுள்ள அடித் தளமுடைய கற்காரை கொள் கலத்துள் செலுத்தப்பட்டு அழுத்தப்படும். செல்லுலோஸ் கரைசலிலிருந்து பிரிக்கப் பட்டு, நீருடன் கழுவப் படும். சோடா முறையில் சோடியம் ஹைட்ராக்சைடு கரைசல் மட்டுமே வேக வைக்கும் நீர்மமாகப் பயன் படுகிறது. சல்ஃபைட் முறையில் மரத் துண்டுகள் மிகை அளவில் சல்ஃபர் டைஆக்சைடு கரைந்துள்ள கால்சியம் அல்லது மக்னீசியம் பைசல்ஃபைட் கரைசலில் இடப் பட்டு, வேக வைக்கும் போது, லிக்னின்கள், கரையும் லிக்னோ சல்ஃபோனேட்டுகளாக மாற்றப் படுகின்றன. இம்முறைகளால் பெறப் படும் மரக் கூழ் குளோரின், காரம் போன்றவற்றால் தூய்மையாக்கப் படும். நீராற்பகுப்பு. செல்லுலோஸ் அமிலக் கரைசல் களால் நீராற் பகுப்படைந்து, D-குளூக்கோசைக் கொடுக்கிறது. அடர் சல்ஃப்யூரிக் அமிலத்துடன் வினைப் பட்டு, அமைலாய்டு எனும் சேர்மத்தை உண்டாக்குகிறது. இது அயோடினுடன் வினைப் பட்டு, நீல நிறத்தை உண்டாக்குகிறது. இவ்வினை செல்லுலோசைக் கண்டறியப் பயன் படுகிறது. அமைலாய்டு பார்ச்மெண்ட் (parchment) தாள் தயாரிப்பில் பயனாகிறது. ஹைட்ரோகுளோரிக், சல்ஃப்யூரிக் ஆகிய கனிம அமிலங்கள் செல்லுலோசுடன் வினைப் படுவதால், பாதியளவு நீராற்பகுப்பு ஏற்படுகிறது. அமிலங்களுடன் செல்லுலோஸ் எளிதில் வினைப் பட்டாலும், காரங்களுடன் எளிதில் வினைப் படுவதில்லை. 18% சோடியம் ஹைட்ராக்சைடு கரைசல் செல்லுலோசுடன் வினைப்பட்டு [(C₈H10O₅)₂NaOH]₂ எனும் வாய்ப்பாடுடைய சேர்மத்தை உண்டாக்குகிறது. பருத்தித் துணிகள், நூல் இழைகளுடன் காரத்தை வினைப் படச் செய்து, நீரால் கழுவும் முறைக்குக் கார வினையாக்கம் (mercerisation) எனப் பெயர். இதனால், இழைகள் கெட்டியாகவும், நெருக்கமாகவும் அமைகின்றன. ஆக்சிஜனேற்றம். ஹைட்ரஜன் பெராக்சைடு, பொட்டாசியம் பெர்மாங்கனேட் போன்ற ஆக்சிஜனேற்றிகள் செல்லுலோசை ஆக்சிஜனேற்றி, பல்வகை ஆக்சி செல்லுலோஸ்களை உண்டாக்குகின்றன. இச்சேர்மங்கள் ஃபீலிங் கரைசலை ஒடுக்குகின்றன. எஸ்ட்டர்களும் ஈதர்களும். இவை செல்லுலோஸ் சேர்மங்களில் முதன்மையானவை. செல்லுலோஸ் நைட்ரேட் (நைட்ரோ செல்லுலோஸ்), செல்லுலோஸ் அசெட்டேட் ஆகியவை இவற்றுள் முக்கியமானவை. இவை 1850–60ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப் பட்டன. பஞ்சு இழை அல்லது மரக் கூழை நைட்ரிக், சல்ஃப்யூரிக் அமிலக் கரைசலோடு வினை புரியச் செய்தால், செல்லுலோஸ் நைட்ரேட் உண்டாகிறது. நைட்ரோ தொகுதி ஏற்றம் (nitration) பல்வேறு நைட்ரேட்டுகளின் கலவையை உண்டாக்குகிறது. அதிக அளவு நைட்ரஜனைக் (13–13.6%) கொண்டுள்ள நைட்ரோ தொகுதி ஏற்றம் அடைந்த விளைபொருள் செல்லுலோஸ் டிரைநைட்ரேட் ஆகும். இது வெடி பஞ்சு (gun cotton), கார்மைட் எனவும் குறிப்பிடப் படுகிறது. நைட்ரோ ஏற்றம் முழுமையாக நிகழாவிடில், டைநைட்ரேட், மோனோ நைட்ரேட் சேர்மங்கள் உண்டாகின்றன. செல்லுலோஸ் டைநைட்ரேட்டுகள் பெருமளவில் மெருகுப் பூச்சு (lacquer), மென் படலம் (film), நார்த் தயாரிப்பிலும், மோனோ நைட்ரேட்டுகள் நெகிழி (plastic), மெருகுப் பூச்சுத் தயாரிப்பிலும், பயன் படுகின்றன. ஆல்கஹால், ஈதர் கலந்த கரைசலில் கலக்கப் பட்ட நைட்ரோ ஏற்றம் பெற்ற செல்லுலோஸ், கொல்லோடியானை (collodion) உண்டாக்குகிறது. கர்ப்பூரம் நெகிழியாக்கியாகப் (plasticiser) பயன் படத் தொடங்கியது முதலே செல்லுலோஸ் நைட்ரேட் நெகிழிப் பொருளாகப் பயன் படுத்தப் பட்டது. இந்த நெகிழி, செல்லுலாய்டு எனப் பெயரிடப் பட்டது. காண்க: செல்லுலாய்டு . செல்லுலோசின் கரிம எஸ்ட்டர்களைப் பெற, செல்லுலோசும் அசெட்டிச் நீரிலியும் தேவையான எஸ்ட்டரைப் பெறுவதற்குரிய கரிம அமிலங்கள் (அசெட்டிக், பியூட்ரிக்) உடனிருக்க, வினை புரிய வேண்டும். இரண்டு அல்லது மூன்று ஹைட்ராக்சில் தொகுதிகள் எஸ்ட்டராக்கத்திற்குட்பட்ட அசெட்டேட்டுகள் (டைஅசெட்டேட்டுகள், ட்ரை அசெட்டேட்டுகள்), இழை, மென்படலம், சிப்பம் கட்டப் பயன் படும் பொருள் (packaging material), உரு வார்க்கப் படும் பொருள் (moulded article) ஆகியவற்றின் தயாரிப்புகளில் பயன் படுகின்றன. செல்லுலோஸ் ஈதர்கள் (எ.டு: எத்தில் செல்லுலோஸ்), அல்க்கைல் குளோரைடுகளுடன் செல்லுலோஸ் காரங்கள் உடனிருக்க வினை புரிவதால், கிடைக்கும். இவை பிதிர்வு (extrusion), உரு வார்த்தல், பூச்சுப் பூசல் ஆகியவற்றில் பயனாகின்றன. செல்லுலோசின் சோடியம் பெறுதியுடன் குளோரோ அசெட்டிக் அமிலச் சோடியம் உப்பை வினை புரியச் செய்தால், சோடியம் கார்பாக்சில் மெத்தில் செல்லுலோஸ் விளைகிறது. இது, நீரில் ஒரு பெறுதி ஆகும். பெரும்பாலான அழுக்கு நீக்கிகளிலும் (detergents) நுரைப் பெருக்கப் பொருள்களிலும் சேர்க்கப் படும். செல்லுலோஸ் புரோப்பியோனேட் நிறமுடைய நெகிழிகள் (எ டு: பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப் படும் தொலைபேசிக் கருவிகள்) தயாரிப்பில் முக்கியமாகப் பயன் படுகிறது. சோடா செல்லுலோசைச் (சோடியம் ஹைட்ராக்சைடையும் செல்லுலோசையும் வினைப் படுத்திக் கிடைக்கும் பொருள்) கார்பன் டைசல்ஃபைடுடன் வினையுறச் செய்தால், செல்லுலோஸ் சாந்தேட் என்னும் பொருள் உண்டாகிறது. சாந்தேட் நீர்த்த சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலில் கரைக்கப் படும் போது, விஸ்கோஸ் (viscose) என்னும் பாகு போன்ற கரைசல் கிடைக்கிறது. ரேயான் இழைத் தயாரிப்பில் இக்கரைசல் பயன் படுகிறது. காண்க: ரேயான். சோடா செல்லுலோசும், மெத்தில் குளோரைடும் வினை புரிந்து, மெத்தில் செல்லுலோஸ் உண்டாகிறது. முழுமையாக ஈதராக்கப் படாத, இந்தப் பெறுதி பாதுகாப்புப் பொருளாகவும், நிரப்பியாகவும் (filler) பயன் படுகிறது. கார்பாக்சில் மெத்தில் செல்லுலோஸ் என்பது முழுமையான எஸ்ட்டராக்கம் பெறாத செல்லுலோஸ் பெறுதி ஆகும். குளோரோ அசெட்டிக் அமிலத்துடன் சோடா வினை புரிவதால் இது கிடைக்கிறது. இந்தப் பெறுதி, சிறப்பாக அழுக்கு நீக்கிகள் தயாரிப்பில், சலவை செய்யப் பட்ட ஆடைகளில் மீண்டும் மாசுப் பொருள்கள் படிவதைத் தடுக்கும் பொருளாகச் சேர்க்கப் படுகிறது. —த. தெய்வீகன் செல்லுலோஸ் அசெட்டேட் செல்லுலோஸ் என்ற இயற்கையில் கிடைக்கும் பல்லுறுப்பியை வேதி வினைகளின் மூலமாகத் திருத்திக் கிடைக்கும் நெகிழிப் பொருளே செல்லுலோஸ் நெகிழிகள் ஆகும். செல்லுலாய்டு, செல்லுலோஸ் அசெட்டேட், செல்லுலோஸ் நைட்ரேட் முதலியன செல்லுலோஸ் வகை நெகிழிகளே. இவ்வகை நெகிழிகள் தயாரிக்கத் தேவையான மூலப் பொருளான செல்லுலோஸ், பஞ்சின் குட்டை இழைகளிலிருந்து பெறப் படுகிறது. இவ்விழைகளில் 90% வரை செல்லுலோசும் எஞ்சிய சதவீதத்தில் மெழுகு, கொழுப்பு அமிலங்கள், சாயப் பொருள்கள் போன்றவையும் உள்ளன. பஞ்சு இழைகளை நீர்த்த சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலில் நன்கு கலக்கித் தூய்மை மிக்க செல்லுலோசைப் பிரித்தெடுக்க வேண்டும். செல்லுலோசின் விகித வாய்ப்பாடு (empirical formula) C₆H10O₅ : குளூக்கோஸ், டெக்ஸ்ட்ரின், ஸ்டார்ச் ஆகியவற்றின் விகித வாய்பாடு C₆H10O₅ ஆகும். இப்பொருள்கள், தாவரங்களில் சூரிய ஒளியில் கலந்துள்ள புற ஊதாக் கதிர்களின் முன்னிலையில் தொகுக்கப்பட்டுச் செல்லுலோசாக மாறுகின்றன. இந்தப் பல்லுறுப்பி, குளூக்கோஸ் மூலக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டது. குளூக்கோஸ் ஒரு பாலிஹைட்ரிக் ஆல்கஹால் ஆகும். இதன் முக்கியமான பண்புகளில் ஒன்று, அசெட்டால் தோன்றும் வினையாகும். இவ்வினையின் உதவியால் ஆல்டிஹைடு தொகுதி மறைந்து, ஆல்கஹால் சேர்மமாகவே செல்லுலோஸ் காணப் படுகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> செல்லுலோசில் உள்ள ஒவ்வொரு குளூக்கோஸ் மூலக் கூறிலும், மூன்று ஹைட்ராக்சில் தொகுதிகள் உள்ளன. கீழே கொடுக்கப்பட்ட அமைப்பு வாய்ப்- பாட்டில் இதனைத் தெளிவாக அறியலாம். ஆல்கஹால் தொகுதிகள் அமிலங்களுடன் வினைப் பட்டு, மூவகை எஸ்ட்டர்களைத் தரலாம். அவை மோனோ அசெட்டேட், டைஅசெட்டேட், டிரை அசெட்டேட் எனப்படும். இந்த அசெட்டேட் பல்லுறுப்பியே செல்லுலோஸ் அசெட்டேட் நெகிழி ஆகும். செல்லுலோஸ் அசெட்டேட் நெகிழி, குறுக்குப் பிணைப்புகளற்ற பல்லுறுப்பி என்பதை, அதன் அமைப்பிலிருந்து அறியலாம். குறுக்குப் பிணைப்புகள் இல்லை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு, வெப்பத்தால் இளகும் நெகிழிகளைத் (thermoplastics) தயாரிக்க, செல்லுலோசை நேரடியாகப் பயன் படுத்த இயலாது; ஏனெனில், செல்லுலோஸ் அமைப்பில், பல ஹைட்ராக்சைடு தொகுதிகள் உள்ளமையால், ஹைட்ரஜன் பிணைப்புகள் தோன்றுகின்றன. இப்பிணைப்புகள் இறுகும் நெகிழிகளில் காணப்படும் குறுக்குப் பிணைப்புகளாகவே செயல்படுகின்றன. எனவே, செல்லுலோஸ் நெகிழி, நெகிழ் தன்மையுடன் காணப்படுவதற்குப் பல்லுறுப்பியில் காணப் படும் எண்ணற்ற ஹைட்ரஜன் பிணைப்புகளிலிருந்து விடுபட வேண்டும். இதன் விளைவாக, மூலக் கூறுகள் ஒன்றின் மீது மற்றொன்று நகர முடியும். மேலும், செல்லுலோசை வெப்பப் படுத்தும் போது, ஹைட்ரஜன் பிணைப்பிலிருந்து அது விடுபடுவதற்கு முன்பே, நிலையிறக்கம் அடைகிறது. மேலும் ஹைட்ரஜன் பிணைப்புகள் காரணமாக, இதன் கரை திறனும் குறைவாகக் காணப் படுகிறது. செல்லுலோசைப் பயனுள்ள நெகிழியாக மாற்ற. அதில் உள்ள ஹைட்ரஜன் பிணைப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். ஹைட்ரஜன் பிணைப்புகளை ஏற்படுத்த வல்ல ஹைட்ராக்சில் தொகுதிகளை நீக்கி விட்டு, அந்த இடங்களில் ஹைட்ரஜன் பிணைப்புகளை ஏற்படுத்த இயலாத தொகுதிகளைத் தகுந்த வேதி வினைகள் மூலம் இணைக்க வேண்டும். இதனை எஸ்ட்டராக்குதல் மூலமாகவும், ஈதராக்குதல் மூலமாகவும் செயல்படுத்தலாம். செல்லுலோஸ் அசெட்டேட் என்பது எஸ்ட்டராக்கப்பட்ட செல்லுலோஸ் ஆகும். பஞ்சு, அசெட்டிக் நீரிலியுடன் சல்ஃப்யூரிக் அமிலம் உடனிருக்க, வினை புரிந்து செல்லுலோஸ் அசெட்டேட்டை உண்டாக்குகிறது. இந்த எஸ்ட்டர் தொழில் துறைக்கு ஏற்ற நெகிழியாக, நீண்ட நாளாகக் கருதப்படவில்லை. இதற்குக் காரணம் இது, பொதுவான கரிமக் கரைப்பான்களில் குறைந்த கரை திறனைப் பெற்றிருந்தமையே ஆகும். 1905ஆம் ஆண்டில்தான் செல்லுலோஸ் அசெடேட்டை வீரியமற்ற நீர்ச் சிதைவுக்கு உட்படுத்தி, அசெட்டோனில் கரைவது கண்டறியப் பட்டது. பின்னரே, செல்லுலோஸ் அசெட்டேட் நெகிழி பரவலாகப் பயன்பட்டது. இந்நெகிழியின் சிறப்புப் பண்புகளில் ஒன்று, எளிதில் தீப்பிடிக்காது என்பதே ஆகும். எனவே, முதல் உலகப் போர் சமயத்தில் படலங்கள் (films) தயாரிக்கவும், விமானங்கள் எளிதில் தீப்பிடிக்காமல் தடுக்கப் பூச்சுப் பொருளாகவும் பயன் பட்டது. இதன் வார்ப்புத் தன்மை 1916ஆம் ஆண்டிற்குப் பின்பே அறியப் பட்டது. எனினும், பாலிஎத்திலீன் வகை நெகிழிகள் கண்டறியப் பட்ட பின், இதன் முக்கியத்துவம் குறைந்தது. கிளேசியல் அசெட்டிக் அமிலம், அசெட்டிக் நீரிலி, மெத்திலீன் குளோரைடு, செல்லுலோஸ் என்பவை செல்லுலோஸ் அசெட்டேட் தயாரிக்கத் தேவையான அடிப்படைப் பொருள்கள் ஆகும். அசெட்டோனை 650–800°C வெப்ப நிலை வரம்பிற்குள் பிளக்கும் போது, சீட்டீன் கிடைக்கிறது. இதனை அசெட்டிக் அமிலத்தில் உறிஞ்ச, அசெட்டிக் நீரிலி பெறப் படுகிறது. தூய செல்லுலோசின் வளைய அமைப்பை முதலில் உடைத்து, பின்பு அசெட்டிக் நீரிலியுடன் வினைப் படுத்தலாம். கரை திறனை மேம்படுத்த மெத்திலீன் குளோரைடு கலக்கப் படுகிறது. இத்தயாரிப்பில், சல்ஃப்யூரிக் அமிலம் 1 பங்கு, அசெட்டிக் நீரிலி 300 பங்கு, மெத்திலீன் குளோரைடு 400 பங்கு, செல்லுலோஸ் 100 பங்கு எனப் பல காரணிகளும் பயன் படுகின்றன. ஏனைய குழைமங்கள் போல, இதனையும் தகடுகளாகவும், படலங்களாகவும் பெறலாம். பிழிந்து வார்த்தல், பீச்சி வார்த்தல் என்ற செயல் முறைகள் மூலம் செல்லுலோஸ் அசெட்டேட் நெகிழியைப் பெறலாம். டிரைஃபினைல் பாஸ்ஃபேட், டைமெத்தில் தாலேட் போன்ற மென்மையூட்டிகளும் பேரியம் சல்ஃபேட், வெள்ளைக் களிமண் போன்ற நிரப்பிகளும் உடன் பயன்படும் பொருளாகும். செல்லுலோஸ் அசெட்டேட்டிலிருந்து தயாரிக்கப் படும் ரேயான் இழை சிறப்பு மிகுந்தது. இது ஒளி புகும் தன்மை உடையது. இதன் படலங்கள் வழியே, நீராவி போன்ற வளிமங்கள் புகுந்து செல்லும்; ஆனால், நீர்மங்கள் புகா. எனவே, நீரில் அழுகக் கூடிய காய்கறிகளைக் கட்டி வைக்க, இப்படலங்கள் உதவுகின்றன. மேலும் திரைப் படம், எக்ஸ் கதிர் முதலிய துறைகளுக்குத் தேவைப்படும் படலங்கள் தயாரிக்கப் பயன் படுகின்றன. பிழிந்து வார்க்கும் முறையில் எழுது கோல். மிதி வண்டி, எக்கி (pump) குழாய் முதலியவை தயாரிக்கப் பயன் படுகின்றன. எனினும், இதன் பயன்பாடுகளை PVC நெகிழிகள் பெருமளவில் குறைத்து விட்டன. —பி.ஈ.எம். லியாகத் அலிகான் நூலோதி. மே.ரா. பாலசுப்பிரமணியம், நா. அய்யாசாமி, பிளாஸ்டிக்களுக்கு ஓர் அறிமுகம், தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1974. செல்லோஃபேன் செல்லுலோசிலிருந்து விஸ்கோஸ் முறையால் ரேயான் தயாரிக்கும் போது கிடைக்கும் ஒளி ஊடுருவும் பல் படிகப் படலமே செல்லோஃபேன் (cellophane) ஆகும். மரக் கூழ், பருத்தி இழை, ஏனைய செல்லுலோஸ் மூலப் பொருள்களுடன் நீரிய சோடியம் ஹைட்ராக்சைடைச் சேர்த்துப் பல மணி நேரம் வைத்திருக்கும் போது, சோடா செல்லுலோஸ் உண்டாகிறது. இதனுடன், கார்பன் டைசல்ஃபைடுக் கரைசலைச் சேர்த்தால், விளையும் சோடியம் செல்லுலோஸ் சாந்தேட்டை நீர்த்த சோடியம் ஹைட்ராக்சைடில் பிரிகையுறச் செய்தால், விஸ்கோஸ் உண்டாகிறது. இம்முறையில், குறைந்த பாகுத் தன்மை உடைய கரைசல் கிடைக்குமாறு தகுந்த அளவில் வினை வழியை மாற்றி அமைத்து, அந்தக் கரைசலைச் சோடியம் சல்ஃபேட், கார்பன் டைசல்ஃபைடு கரைந்துள்ள சல்ஃப்யூரிக் அமிலக் கரைசலினுள் சிறு துளை வழியாகச் செலுத்தினால், மெல்லிய படலம் உண்டாகிறது. இதுவே செல்லோஃபேன ஆகும். ஆனால், உயர் பாகுத் தன்மையுடைய சாந்தேட் கரைசலைச் சல்ஃப்யூரிக் அமிலத் தொட்டியில் துளையினூடே செலுத்தினால், செயற்கை இழை உண்டாகும். அமில சல்ஃபேட் தொட்டியில், விஸ்கோஸ் மீள் உருவாக்கப்பட்ட செல்லுலோசாக (regenerated cellulose) மாற்றமடையும் போது, ஹைட்ரஜன் சல்ஃபைடு, கார்பன் டைசல்ஃபைடு ஆகியன வெளியாகின்றன. தேவையான பண்புகளையுடைய இறுதிப் பொருள் கிடைக்குமாறு மேற்சொன்ன முறையால் விளையும் செல்லோஃபேன் படலத்தைக் கழுவியும், வேறு முறைகளால் செம்மை ப்படுத்தியும், பின்னர் உலர்த்தியும் பெறலாம். இப்படலத்தின் மேல், ஈர எதிர்ப்புக்குள்ளாகும் பொருள்களால் மேற்பூச்சுப் பூசி, அதை உணவுப் பொருள்களைப் பாதுகாக்க உதவும் சிப்பம் கட்டும் (packaging) காகிதமாகப் பயன்படுத்தலாம். —த. தெய்வீகன் செல்லோபயோஸ் இது ஒரு டைசாக்கரைடு. இதன் வேதிப் பெயர் 4–O–β–D-குளூக்கோபைரனோசில் –D–குளூக்கோஸ். பொதுவாக, செல்லோபயோஸ் (cellobiose) செல்லுலோசிலிருந்து தயாரிக்கப் படுகிறது. இதன் அமைப்பு வருமாறு: இதில் β–D–குளூக்கோபைரனோசில் தொகுதிகள், 1→4 கிளைக்கோசைடு பிணைப்பில், D–குளூக்கோசுடன் இணைக்கப் பட்டுள்ளன. இயற்கையில் அரிதாக இந்தச் சர்க்கரை காணப் படுகிறது. பைன் மர ஊசிகளில் செல்லோபயோஸ் உள்ளமை கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. —த. தெய்வீகன் செலஸ்டைட் இது ஒரு சல்ஃபேட் கனிமம். இது ஸ்ட்ரான்சியம் சல்ஃபேட் (SrSO₄) ஆகும். இதில் சிறிதளவு கால்சியமும், பேரியமும் கலந்திருக்கும். இது செலஸ்டைன் என்றும் குறிப்பிடப் படும். இது செவ்வகத் தொகுதியைச் சேர்ந்தது. இதன் அணுக் கோப்பு இயல்பு அடிப்படை வகையைச் சேர்ந்தது. இதன் ஓர் அணுக் கோப்பில், நான்கு கூட்டணுக்கள் உள்ளன. இக்கனிமத்தின் அணு அமைப்பில், அணுக்களுக்கு இடையேயுள்ள தொலைவு முன் பின்னாக, 8.36 ஆகவும், பக்கவாட்டில் 5.36 ஆகவும், கீழ் மேலாக 6.84 ஆகவும் இருக்கும். செலஸ்டைட்டின் (celestite) படிகங்கள் (001) பக்கத்திற்கு இணையாகத் தட்டையாக இருக்கும். சில பட்டகங்களாகக் காணப்படும். இக்கனிமம் இழைகளாகவும், உருண்டைகளாகவும், திண்மத் துகள்களாகவும், ஏடுகளாகவும், மண் போன்றும் காணப் படும். இதில் (001) கனிமப் பிளவு தெளிவாக இருக்கும். (210) கனிமப் பிளவு தெளிவாகவும் (010) கனிமப் பிளவு தெளிவற்றும் காணப் படும். செலஸ்டைட் நிறமற்றதாயும், வெள்ளை, சாம்பல் நிறம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு மற்றும் சருகு நிறத்திலும் காணப் படும். இதன் கடினத் தன்மை 3–3.5; ஒப்படர்த்தி 3.97, இது கண்ணாடி மிளிர்வு உடையது. கனிமப் பிளவுத் தளங்களில் முத்து மிளிர்வு காணப் படும். இது சீரற்ற முறிவு உடையது. நொறுங்க கூடியது. இதன் கீற்றின் நிறம் வெண்மை. இது ஒளி புகும் அல்லது ஒளி கசியும் தன்மையுடையது. செலஸ்டைட் இரண்டு ஒளி அச்சுகளை உடைய கனிமம். இதன் ஒளி அச்சுத் தளம் (010) தளத்திற்கு இணையாக அமைந்துள்ளது. இதன் குறைந்த அதிர்வுத் திசை (Z) (100) தளத்திற்குச் செங்குத்தாக உள்ளது. இதன் ஒளி அச்சுகளுக்கு இடையேயுள்ள கோணம் (2V) 50° ஆகும். இது நேர் ஒளிக் குறியை உடையது. இதன் ஒளி விலகல் எண்கள் α = 1.6215; β = 1.6237; γ = 1.6308 ஆகும். செலஸ்டைட்டின் ஒளிச் சிதறல் சிவப்பு ஒளியில் குறைவாகவும், ஊதா ஒளியில் மிகுதியாகவும் இருக்கக் காணலாம். செலஸ்டைட்டின் இருண்ட நீல நிறமுடைய படிகங்களில் அதிர்வுத் திசை நிற மாற்றம் தெளிவாகக் காணப் படும். செலஸ்டைட் வெப்ப நீர்ப் படிவுகளாகக் காணப் படுகிறது. இது பெரும்பாலும், கடலில் உண்டான படிவுப் பாறைகளில், குறிப்பாக சுண்ணப் பாறைகளில் காணப் படுகிறது. இது கார–அனற் பாறைகளில் அரிதாகவும், நரம்பு போன்றும், பொந்துகளிலும் காணப் படுகிறது. செலஸ்டைட் கால்சைட், ஃபுளூரைட், பேரைட், கந்தகம், அரகோனைட் முதலான கனிமங்களுடன் சேர்ந்து காணப்படும். செலஸ்டைட் அமெரிக்காவிலுள்ள தெற்கு பாஸ்தீவு, ஒஹியோ, நியூயார்க், டெக்ஸாஸ், காலிக்கோ குன்றுகள், கலிஃபோர்னியா ஆகிய பகுதிகளில் கிடைக்கிறது. இக்கனிமம் கனடாவிலும், இங்கிலாந்திலும், சிசிலி, ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி, சோவியத் ஒன்றியக் குடியரசு, எகிப்து, டுனீசியா ஆகிய இடங்களிலும் கிடைக்கிறது. இது மடகாஸ்கரில் பொந்து படிவுகளாகவும், பெரிய நீல நிறப் படிகங்களாகவும், ஒளி புகுந் தன்மையுடன் காணப் படுகிறது. செலஸ்டைட் இந்தியாவில், தமிழ்நாட்டில் மட்டும் காணப் படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், நம்பக்குறிச்சி என்னுமிடத்திற்கு அருகே, செலஸ்டைட் படிவுகள் நரம்புகளைப் போன்ற சிறிய தாரைகளில் காணப் படுகின்றன. இங்கு, இக்கனிமம் பேரைட்டுடன் சேர்ந்து கிடைக்கிறது. இக்கனிமப் படிவு இங்கு 30 மீ. ஆழம் வரை இருப்பதாகக் கருதப் படுகிறது. இது கிரெட்டேசியக் காலப் பாறைகளில் காணப் படுகிறது. இங்கு சிறிய அளவில் கிடைக்கும் செலஸ்டைட் வெடித் தயாரிப்பில் பயன் படுகிறது. —இல. வைத்திலிங்கம் —ந. சந்திரசேகர் நூலோதி. L.G. Berry and B. Mason, Mineralogy, Second Edition, CBS Publishers and Distributors, New Delhi, 1985. செலிபீஸ் கடல் இது சுலாவெசிக் கடல் என்றும் கூறப் படும். இது மேற்குப் பசிபிக் பெருங்கடலில் உள்ளது. இதன் வடக்கில், சுலூத் தீவுத் தொகுதிகளும், கிழக்கில் சாங்கித் தொடர்களும், தெற்கில் செலிபீஸ் தீவும், மேற்கில் போர்னியோவும் எல்லையாக உள்ளன. நீளம் 840 கி.மீ.; அகலம் 675 கி.மீ., பரப்பளவு 280,000 சதுர கி.மீ. தென் மேற்கில் ஜாவா கடலுடன் தொடர்பு கொண்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இதன் ஆழம் 4000 மீ. வரை இருப்பினும், ஒரு சில பகுதிகளில் இது 6500மீ. வரையிலும் இருக்கும். ஓரப் பகுதிகளில், ஆங்காங்கே பரவலாக எரிமலைக் கூம்புகளும், குன்றுகளும் தென்படுகின்றன. மீன் பிடித்தல் இங்கு மிக முக்கிய தொழில். பதப் படுத்தப் பட்ட மீன்கள், உலகின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப் படுகின்றன. செலீனியம் இது தனிம மீள் வரிசை அட்டவணையில் VIA தொகுதியில், கந்தகத்திற்கு அடுத்து அமைந்துள்ள தனிமமாகும். இதன் குறியீடு Se; அணு எண் 34; அணு எடை 78. 96. செலீனியத்தை (selenium) முதன் முதலாக, ஜெ.ஜெ. பெர்சீலியஸ் என்பார், 1917ஆம் ஆண்டில் கந்தகத்திலிருந்து பிரித்தெடுத்தார். இதன் பண்புகள் டெலூரியத்தின் பண்புகளை ஒத்துள்ளன. தனிம அமைப்புகள். செலீனியம் ஆறு புற வேற்றுமை உருவங்களாக, இயற்கையில் காணப் படுகிறது. இவற்றுள் α–மோனோ கிளினிக், β–மோனோ கிளினிக், சாம்பல் முக்கோண (grey trigonal) அமைப்பைக் கொண்ட திண்மப் படிக உருவங்கள் முக்கியமானவை. கார்பன் டைசல்ஃபைடில் கரைந்த செலீனியம் கரைசலைப் படிகமாக்கினால், மோனோ கிளினிக் அமைப்புக் கிடைக்கிறது. இப்புற வேற்றுமை உருவங்களின் அடிப்படை அமைப்பு எட்டுச் செலீனியம் அணுக்கள் மடிப்பான (puckered) அமைப்பில் இணைந்து, α, β வடிவங்களாக மாறி அமைவதைப் பொறுத்துள்ளது. முக்கோண அமைப்புகளை விட, மோனோ கிளினிக் அமைப்புகள் குறைந்த நிலைப்புத் தன்மையுடையவை. மோனோ கிளினிக் படிகத்தை, 217°Cக்குக் கீழ் வெப்பப் படுத்தினால், அது சாம்பல் முக்கோண அமைப்புடைய படிகமாகிறது; அறை வெப்ப நிலையில், இருளான சூழலில் இவ்வமைப்பு குறைந்த மின் கடத்தும் திறனைப் பெற்றுள்ளது. ஆனால், ஒளியுள்ள சூழ்நிலையில், இதன் மின் கடத்தும் திறன் ஆயிரம் மடங்கு மிகுதியாகிறது. வெப்ப நிலை உயர்வும் கடத்தும் திறனை அதிகரிக்கிறது. செலீனியம் சிவப்பு, கறுப்பு ஆகியன படிகமில்லா உருவங்களாகவும், கண்ணாடி போன்ற அமைப்புடனும், மேலும் மூன்று படிகமில்லா உருவங்களிலும், காணப் படுகின்றன. சிவப்பு உருவம் கார்பன் டைசல்ஃபைடில் கரைகிறது. இதை மெதுவாக 30°Cக்கு வெப்பப் படுத்தினால், கறுப்பு நிறப் புற வேற்றுமை உண்டாகிறது. உருகிய செலீனியத்தை வேகமாக குளிர்வித்தால், கண்ணாடி மிளிர்வு செலீனியப் புற வேற்றுமை உண்டாகிறது. இப்படிகமில்லாப் புற வேற்றுமைகளின் அமைப்புப் பற்றிய விவரங்கள் தெளிவாக அறியப் படவில்லை. நீர்ம செலீனியம் பெருமளவில் சேர்த்து வைக்கப் பட்டிருக்கும் நிலையில் கறுப்பு நிறமாகவும், மெல்லிய படலமாக இருக்கும் போது, சிவப்பு நிறத்துடனும் உள்ளது. வெப்ப நிலை உயர்வால், பாகுத் தன்மையும் (viscosity) அதிகரிக்கிறது. கொதி நிலை வெப்பத்திற்கு மேல், 685°C இல் செலீனியம் ஆவி Sen ((n=2–8) என்னும் பல அணு மூலக் கூறாகவும், 900°C இல் Se₂ மூலக்கூறுகளைக் கொண்டதாகவும், 2000°Cஇல் Se ஓரணு மூலக் கூறுகளைப் பெற்ற அமைப்பாகவும் உள்ளது. தயாரிப்பு. செலீனியம் உள்ள கனிமங்களை வறுத்தோ, அடர் சல்ஃப்யூரிக் அமிலத்துடன் வினைப் படுத்தியோ, செலீனியம் டை ஆக்சைடு (SeO₂) பெறப் படுகிறது. இதைப் பதங்கமாக்கல் (sublimation) செய்து, அல்லது செலீனியஸ் அமிலமாக (H₂SeO₃) மாற்றித் தூய்மையாக்கலாம். செலீனியம் சல்ஃபர் டைஆக்சைடால் ஒடுக்கமடைந்து, தூய செலீனியத்தைக் கொடுக்கிறது. H_2SeO_3 + 2SO_2 + H_2O \longrightarrow Se + 2H_2SO_4 செலீனிய உற்பத்தியில், அமெரிக்க ஒன்றியக் குடியரசு, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. முக்கியச் சேர்மங்கள். செலீனியம் காற்றில் நீல நிறச் சுவாலையுடன் எரிந்து, செலீனியம் டைஆக்சைடை உண்டாகுகிறது. செலீனியம் பல்வேறு உலோகங்கள், அலோகங்களுடன் வினை புரிகிறது. நைட்ரிக் அமிலம், அடர் சல்ஃப்யூரிக் அமிலம், அடர் கார ஹைட்ராக்சைடுகள் ஆகியவற்றில் செலீனியம் கரைகிறது. செலீனியச் சேர்மங்களின் முக்கியப் பண்புகள் அட்டவணை 1 இல் கொடுக்கப்பட்டுள்ளன. ஹைட்ரஜன் செலீனைடு (H₂Se) என்பது நிறமற்ற, எளிதில் தீப்பற்றிக் கொள்ளும், தனித் தன்மையான நெடியுடைய ஹைட்ரஜன்–செலீனைடு சேர்மமாகும். இது ஹைட்ரஜன் சல்ஃபைடைவிட அதிக நச்சுத் தன்மையும், ஆனால், அதை விடக் குறைந்த வெப்ப நிலைப்புத் திறனும் கொண்டது. H—Se—H என்னும் இதன் வாய்பாட்டில் H—Se ஆகியவற்றிற்கிடையேயான பிணைப்பு நீளம் 0.146 nm; பிணைப்புக் கோணம் 91°. தனிம செலீனியத்தை ஹைட்ரஜன் சூழலில் வெப்பப் படுத்தும் போது, இச் சேர்மம் உண்டாகிறது. மேலும், அலுமினிய செலீனைடை நீராற்பகுத்தும் (1) ஃபெர்ரஸ் செலீனைடுடன், நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை வினைப்படுத்தியும் (2) H₂Se ஐப் பெறலாம். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> (2) நீரில் கரைந்த ஹைட்ரஜன் செலீனைடுக் கரைசல் அதிக எடையுடைய உலோக அயனிகளை, அதன் செலீனைடுகளாக வீழ்படிவாக்குகிறது. M₂Se என்னும் இயல்பான வாய்ப்பாடுடைய செலீனைடு களும், MHSe என்னும் அமில செலீனைடுகளும் உள்ளன. இவற்றில் உலோக அயனி +1 ஆக்சிஜனேற்ற நிலையில் உள்ளது. கார மற்றும் கார மண் உலோகச் செலீனைடுகளின் நீரியக் கரைசல் தனிம செலீனியத்தைக் கரைத்து M₂SeX என்னும் வாய்ப்- பாடுடைய (பாலிசல்ஃபைடுகளை ஒத்த) பாலி செலீனைடுகளை உண்டாக்கும். .ஆக்சைடுகள், ஆக்சி அமிலங்கள். செலீனியமும், ஆக்சிஜனும் நேரடியாக வினை புரிந்து செலீனிய டைஆக்சைடை உண்டாக்குவது போலவே, தனிம செலீனியத்தை நைட்ரிக் அமிலத்தால் ஆக்சிஜனேற்றம் அடையச் செய்தும் (3,4) பெறலாம். (4) செலீனியம் டைஆக்சைடு எளிதில் ஆவியாகும் நிறமற்ற திண்மம். இதில் செலீனியம், ஆக்சிஜன் அணுக்கள் மாறி மாறி அமைந்து, சங்கிலித் தொடராக உள்ளன. Se—O ஆகிய அணுக்களுக்கிடைப்பட்ட தொலைவு 0.178nm. இச்சேர்மம் 315°C இல் மஞ்சள்–பச்சை வண்ணமுடைய ஆவியாகிப் பதங்கமடைகிறது. நீரில் கரைந்து செலீனியஸ் அமிலத்தை உண்டாக்குகிறது. இந்த அமிலம் ஒரு வீரிய மிக்க ஆக்சிஜனேற்றி ஆகும். இது சல்ஃபர் டைஆக்சைடு, ஹைட்ரஜன், அம்மோனியா, பாஸ்ஃபரஸ், கார்பன் போன்றவற்றுடன் வினை புரிந்து, செலீனியத்தை உண்டாக்குகிறது. செலீனியம் டைஆக்சிகுளோரைடில் கரைக்கப் பட்ட செலீனியத்துடன் ஓசோன் வினைப் படும் போது, செலீனியம் டிரைஆக்சைடு (5) உண்டாகிறது; மேலும் செலீனிக் அமிலத்தைப் பாஸ்ஃபரஸ் பென்ட்டாக்சைடால் நீர் நீக்கம் செய்யும் போதும், இது விளைகிறது (6). 3 SeO_2 + O_3 & \stackrel {Se O Cl_2} {\longrightarrow} 3SeO_3 \\ 3H_2SeO_4 + P_2 O_5 & \longrightarrow 3SeO_3 + 2H_3PO_4 3 \end{alignat} (6) டிரை ஆக்சைடு ஊசி வடிவம், கன சதுரம் ஆகிய இரு விதப் படிக உருவில் உள்ளது. நீருடன் செலீனியம் டிரை ஆக்சைடு வெப்ப உமிழ்வுடன் தீவிரமாக வினை புரிந்து, செலீனிக் அமிலத்தை உண்டாக்குகிறது. செலீனியஸ் அமிலத்தை ஃபுளூரினேற்றம் செய்வதாலும், செலீனிக் அமிலத்தைப் பெருமளவில் பெறலாம் (7). H_2SeO_3 + H_2O + F_2 \longrightarrow H_2 SeO_4 + 2HF செலீனிக் அமிலத்தின் பண்புகள், சல்ஃப்யூரிக் அமிலப் பண்புகளைப் பெரும்பாலும் ஒத்துள்ளன. சான்றாக, தாமிரத்துடன் சேர்ந்து, தாமிர செலீனேட்டை (CuSeO₄) உண்டாக்கியும், கரிமப் பொருளைத் தீய்த்தும், வினை புரிகிறது. உயர் அணு நிறை உலோக செலீனேட்டுகள் (எ-டு; பேரியம் செலீனேட், BaSeO₄) குறைந்த அளவிலேயே நீரில் கரைகின்றன. ஹாலைடுகள். செலீனிய ஹாலைடுகளில் மோனோஹாலைடுகள், Se₂X₂ (X = CI அல்லது Br), டைஹாலைடுகள் Se X₂ (X = CI அல்லது Br), டெட்ராஹாலைடுகள் SeX₄ (X = F. CI, Br), ஹெக்சாஃபுளூரைடு (SeF₆) ஆகியன அடங்கும். செலீனியத்துடன் ஹாலோஜன் நேரிடையாக வினை புரிவதன் மூலம் மோனோஹாலைடுகள் உண்டாகின்றன. செலீனியம் மோனோகுளோரைடு (Se₂Cl₂) பழுப்புக் கலந்த சிவப்பு நிறமுடைய நீர்மமாகும்; இது நீருடன் பின் வருமாறு (8) வினை புரிகிறது. டைஹாலைடுகள் வளிமப் பொருள்களாக உள்ளன; அயோடைடுகளைத் தவிர, ஏனைய டெட்ராஹாலைடுகள் தயாரிக்கப் பட்டுள்ளன. செலீனியம் டெட்ராகுளோரைடு, டெட்ராபுரோமைடு ஆகியன அறை வெப்ப நிலையில் திண்மங்கள். டெட்ராஃபுளூரைடு ஒரு நீர்மம். உயர் வெப்ப நிலையில் ஆவியாகும் போது, டெட்ராகுளோரைடு, டெட்ராபுரோமைடு ஆகியன சிதைவடைந்து, செலீனியம் டைஹாலைடையும், தனிம ஹாலோஜனையும் கொடுக்கின்றன. டெட்ராஹாலைடுகள் எளிதில் நீராற்பகுப்படைகின்றன (9). செலீனியம் ஹாலைடுகளில் மிகக் குறைந்த வினைத் திறன் உடைய சேர்மம் செலீனியம் ஹெக்சா ஃபுளூரைடு ஆகும். உயர் வெப்ப நிலையில் மட்டும் இது அம்மோனியா (10) அல்லது கார உலோகங்களுடன் வினை புரிகிறது. ஆக்சிஹாலைடுகள். செலீனியம் ஆக்சிகுளோரைடு நிறமற்ற, பெரிதும் பயன் படும் நீரியமில்லா (non aqueous) கரைப்பான் ஆகும். மூடிய குழாய் அல்லது கார்பன் டெட்ராகுளோரைடு கரைசலில், செலீனியம் டெட்ராகுளோரைடும், செலீனியம் டைஆக்சைடும் வினைப் படுவதால் (11) இதைப் பெறலாம். இந்த ஆக்சிகுளோரைடு எளிதில் நீராற் பகுப்படையும் வீரிய மிக்க குளோரினேற்றக் காரணி ஆகும். ஆக்சிபுரோமைடு (SeOBr₂) ஆரஞ்சு நிறமுடைய, ஆக்சிகுளோரைடுகளை ஒத்த பண்புடைய திண்மம். ஆக்சிஃபுளூரைடு (SeOF₂) நிறமற்ற நீர்மம்; எரிச்சலூட்டக் கூடிய நெடியுடன், நீர், கண்ணாடி, சிலிக்கான் போன்றவற்றுடன் வினை புரியக் கூடியது. கூட்டுச் சேர்மங்கள் உண்டாக்க வல்லது. நைட்ரைடு. டெட்ராசெலீனியம் டெட்ரா நைட்ரைடு (Se₄N₄) என்பது ஆரஞ்சு–சிவப்பு நிறமுடைய திண்மமாகும். கார்பன் டைசல்ஃபைடில் கரைக்கப் பட்ட செலீனியம் டெட்ராகுளோரைடு கரைசலுடன், அம்மோனியாவை வினைப் படுத்தி, இதைத் தயாரிக்கலாம் (12). இதன் மூலக் கூறு S₄N₄ என்னும் வளைய அமைப்பை ஒத்த வடிவுடையது. இது உயர் வினை புரியும் திண்மமாகும்; உரசினாலோ, 200°Cக்கு வெப்பப் படுத்தினாலோ வெடிக்கும் தன்மையுடையது. பல் அணு நேரயனிகள். தனிம செலீனியம் சல்ஃப்யூரிக் அமிலத்தில் கரைக்கப் படும் போது. பச்சை அல்லது மஞ்சள் நிறக் கரைசல்கள் உண்டாகின்றன. இந்தக் கரைசலை ஆய்வு செய்யும் போது, பச்சை வண்ணம் Se8+ அயனியாலும், மஞ்சள் வண்ணம் Se அயனியாலும் ஏற்படும் என்பது தெளிவாகிறது. கரிமச் சேர்மங்கள். C–Se என்னும் பிணைப்புக் கொண்ட பல கரிமச் சேர்மங்கள் உள்ளன. இவை செலீனால் (RSeH), செலீனிக் அமிலங்கள் (RSeOH), கரிம செலீனிய ஹாலைடுகள் (RSeX), டைஆர்செனைல் செலீனைடுகள் (R₂SeX, R₂Se₂), செலீனோ அமினோ அமிலங்கள், செலீனோ பெப்டைடுகள் எனப் பலவாறாகக் காணப்படுகின்றன. சில கரிம செலீனியச் சேர்மங்களின் பெயர்களும், அவற்றின் பண்புகளும் அட்டவணை 2ல் குறிப்பிடப் பட்டுள்ளன. இயற்கையில் கிடைத்தல். புவி மேற்தோட்டில் செலீனியத்தின் மலினம் 7×10-5% என்னும் புவியின் எடை சதவீத அளவில் உள்ளதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. இது தனிம நிலையில் கந்தகத்துடன் சேர்ந்தும், உயர் அணு நிறையுடைய உலோக செலீனைடுகளாகவும் பரவியுள்ளது. இது செலியானைட் (zelianite, Cu₂ Se)₂, யுகெய்ரைட் (AgCuSe), ஜெர்மாய் (As(S₂Se)₂) கனிமங்களாகக் கிடைக்கிறது. பயன்கள். செலீனியத்தின் முக்கியப் பயன்களுள் நிழற்படி எடுக்கும் உத்தியில் படிக உருவமற்ற செலீனியப் படிவுகளின் ஒளி உணர் திறன் தன்மையைப் பயன்படுத்துவதைக் குறிப்பிடலாம். இரும்புச் சேர்மங்கள் உடனிருக்கும் போது, கண்ணாடியில் ஏற்படும் ஒளி மிளிர்வை அகற்றி, நிற நீக்கம் செய்யவும், நெகிழிகள் (plastics), வண்ணப் பூச்சுகள் (paints), மெருகுப் பூச்சுகள் (enamels), கண்ணாடி, மட்பாண்டம், எழுதும் மை போன்ற பொருள்களில் நிறமிகளாகவும் செலீனியம் பயன் படுகிறது. இதன் ஏனைய பயன்களுள் முதன்மையானவை, விலங்குகளின் ஊட்டச் சத்துப் பொருளாகச் சேர்க்கப் படுதல், உலோகப் பூச்சுப் பூசுதல், உயர் வெப்ப நிலை மசகுப் பொருளாகப் பயன் படுதல், சில பெட்ரோலியப் பொருள்களை மாற்றியமாக்கும் (isomerisation) வினையில் வினையூக்கியாகச் செயல் படுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். —த. தெய்வீகன் செலுத்தத் தொடர்கள், மின் மின்நிலையங்களில் உற்பத்தியாகும் மின்னோட்டத்தை மின் சுமையுள்ள மையப் பகுதிகளுக்குச் சுமந்து செல்ல, மின் செலுத்தத் தொடர்கள் (electric transmission lines) உதவுகின்றன. அனல், புனல் அணு போன்ற வழக்கத்திலுள்ள மின் நிலையங்கள் வெவ்வேறு சூழ்நிலைகளைப் பொறுத்து, அமைக்கப் படுகின்றன. புனல் மின் நிலையங்கள் மிகு நீர்த் தேக்கமுடைய மலைப் பாங்குகளில், ஆழமான பகுதிகளைக் கொண்ட வற்றாத நீர் வளமுடைய ஆற்றுப் பகுதிகளில் அமைக்கப் படுகின்றன. அனல் மின் நிலையங்கள், நிலக்கரிச் சுரங்கங்களுக்கு அருகிலும், போக்குவரத்து வசதிகள் உள்ள இடங்களுக்கு அருகில் இருக்கும் கடற்கரைப் பகுதிகளிலும், நீர் வளமிக்க நதிகளுக்கு அருகிலும் ,அமைக்கப் படுகின்றன. அணு மின் நிலையங்கள், மக்கள் அருகிலுள்ள இடங்களிலும், எடை மிகுந்த எந்திரப் பகுதிகளை எடுத்துச் செல்வதற்கு ஏற்ற போக்குவரத்து வசதிகள் மிகுந்த இடங்களுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதிகளிலும், அணுக் கருக் கழிவுப் பொருள்களை அகற்ற வல்ல பயன் படுத்த முடியாத நிலப் பகுதிகளிலும், வற்றாத நீர் வளமுடைய ஆற்றுப் பகுதிகளிலும் நிறுவப் படுகின்றன. பொதுவாக, மின் உற்பத்தி நிலையங்கள் மின் நுகர்வோர் அடங்கிய மையப் பகுதிகளுக்கு நீண்ட தொலைவில்தான் அமைக்கப் படுகின்றன. எனவே, பேரளவு மின் திறனை மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து, நீண்ட தொலைவில் இருக்கும் மின் சுமை மையங்களுக்கு (loadcentres) அனுப்புவதற்கு மின் செலுத்தத் தொடர்கள் இன்றியமையாதவையாக விளங்குகின்றன. மின் நிலையங்களிலுள்ள மின்னாக்கிகளின் (generators) மின்னழுத்தம் 11,000 வோல்ட் இருக்கும். தொழில் நுட்ப அடிப்படையிலும், பொருளாதார முறையிலும், சிக்கனமாகவும், எளிமையாக இயங்குவதற்கு ஏற்றவாறும், மின்னழுத்த அளவு மாறு திசை மின்னோட்ட அமைப்பில் அறுதியிடப் பட்டுள்ளது. இந்தக் குறைந்த மின்னழுத்தத்தில், நீண்ட தொலைவில் உள்ள மின் சுமைகளுக்குத் தேவையான மின் திறனை அனுப்பினால், மிகுதியான மின் தொடர் இழப்பும் (line loss), மிகுதியான மின்னழுத்த வீழ்ச்சியும் (voltage-drop), மிகுந்த மின்னழுத்தச் சீர்மைக் (voltage regulation) கேடும் ஏற்படுகின்றன. எனவே, மிகக் குறைந்த மின்னிழப்பில் பயன் தரக் கூடிய மிகுந்த திறமையுடனும் குறிப்பிட்ட மின்னழுத்தச் சீர்மை வரம்புக்குள் நீண்ட தொலைவிலுள்ள மின் சுமைகளுக்கு மின்னோட்டம் வழங்குவதற்கும், மாறு திசை மின்னோட்ட அமைப்பில் 11 கிலோ வோல்ட் மின்னழுத்தம், அளவைப் பெருக்கு மின் மாற்றிகள் (step-up transformers) மூலம் 33, 66, 110, 220 கிலோ வோல்ட் மிகை உயர் மின்னழுத்தத்திற்கு (extra high voltage) உயர்த்தப் படுகிறது. இத்தகைய மிகை உயர் மின்னழுத்த அளவு பின் வரும் காரணங்களைப் பொறுத்திருக்கும். தற்போதைய உச்ச மின் திறன் தேவையுடன் அடுத்த 15 அல்லது 20 ஆண்டுகளின் தேவையையும் கருத்தில் கொண்டு, மின் செலுத்தத் தொடரில் செலுத்தப் படும் மின் திறனின் மொத்த அளவு; மின் உற்பத்தி நிலையத்திற்கும், மின் சுமை மையத்திற்கும் இடையேயுள்ள தொலைவு; அருகிலுள்ள பெரிய மின் திறன் அமைப்புகளுடன் இணைக்கப்படும் மின்னழுத்தத்தின் அளவு; குறை மின்னழுத்தத் தொடர்களுடன் கலப்பு இணைப்புக் கொள்ளும் விதம். மாறு நிலை மின்னோட்ட அமைப்பு முறையில் ஏற்படும் தொழில் நுட்ப முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, மின்னழுத்தத்தை உயர்த்துதல், அதாவது, 110 கிலோ வோல்ட் மின்னழுத்தத்தை 230 கிலோ வோல்ட் மின்னழுத்தத்திற்கு ஏற்றவாறு, தொழில் நுட்ப வளர்ச்சியால் சிறிய மாற்றங்கள் செய்வதன் மூலம், மாற்றியமைத்தல், பொருளாதார அடிப்படையில் உயர் மின்னழுத்த மாற்று நிலை மின்னோட்ட அமைப்பை விட (high voltage alternating current system) உயர் மின்னழுத்த நேர் மின்னோட்ட அமைப்புச் சிக்கனமாயிருந்தால், பின்னர் உள்ளதைத் தேர்ந்தெடுத்தல்; இவ்வாறு, மின் செலுத்தத் தொடர்களின் மூலம், மின் சுமை மையப் பகுதிகளுக்குக் கொண்டு வரப் பட்ட மின் திறன், அளவுக் குறைப்பு மின் மாற்றி (step down transformer) மூலம், மின்னழுத்த அளவைக் குறைத்து, மின் பகிர்வுத் தொடர்களின் மூலம் (electric distribution lines) நுகர்வோருக்குப் பகிர்ந்தளிக்கப் படுகிறது. மின்தொடரின் அளவுருக்கள். மாறு மின்னோட்ட மின் செலுத்தத் தொடரில், மின் கடத்தியின் தடை (resistance) மட்டுமன்றி, அத்தொடரின் மின் கடத்திகளுக்கிடையே தூண்டம் (inductance) மின் தேக்கம் (capacitance) போன்ற அளவுருக்களும் (parameters) உள்ளன. இந்த அளவுருக்களை மின் செலுத்தத் தொடரின் மாறிலிகள் (transmission line constants) என்றும் கூறுவர். மின் கடத்திகளின் தடை. ஒரே சீரான அளவுருக்களைக் கொண்ட மின் கடத்தியின் தடை (R) ஓம் எனவும், அக்கடத்தியின் நீளம் 1 மீ எனவும், அதன் குறுக்கு வெட்டுப் பரப்பு 3 சதுர மீட்டர் எனவும் கொண்டால், விகித மாறிலியைப் (constant of proportionality) பயன் படுத்திப் பின் வரும் சமன்பாட்டைப் பெற முடியும். ஓம் இதில் ‘p’ என்பது மின் கடத்தும் உலோகப் பொருளின் தடைமை (resistivity) அல்லது தன்தடை (specific resistance) எண். இது வெப்ப நிலையைச் சார்ந்திருக்கும். 0°C இல் உள்ள தன்தடை எண் P₀ என்றால், tC இல் அல்லது R_1 = R_0 ( 1 + \alpha_0 t_1) (3) இதில் α₀ என்பது சுழி மதிப்பு, °C இல் உள்ள வெப்ப நிலைக் குணகம் (temperature co-efficient) இயல்பான வளி மண்டல வெப்ப நிலை t₂°C என்றால், இவ்வெப்ப நிலையிலுள்ள மின் கடத்தியின் தடை R₂ = R₁ ( 1+α₁ (t₂-t₁} ] இதில் α₁ என்பது t₁°C இல் உள்ள வெப்ப நிலைக் குணகம். α₁ இன் மதிப்பைப் பின் வரும் சமன்பாட்டின் மூலம் பெறலாம். இதே போல் α₂ என்பது t₂ °C இலுள்ள வெப்ப நிலைக் குணகம் என்றால் சமன்பாடு R₁ = R₀ (1+α₀t) ஐக் கொள்ளலாம். அறிமுறையில் கணக்கிட்டால், ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் மின் கடத்தியின் தடை சுழி மதிப்பு அடையும். அதாவது, தூய உலோகத்தின் தடை எந்த வெப்ப நிலையில், அறிமுறைப்படி சுழி மதிப்பை அடைகிறதோ, அவ்வெப்ப நிலையைத் தனிச் சுழி வெப்ப நிலை (absolute zero temperature, T₀) எனலாம். தாமிரத்தின் தனிச் சுழி வெப்ப நிலை (T₀) = 234.5°C அலுமினியத்தின் தனிச் சுழி வெப்ப நிலை (T₀) = 236. 4 °C ஒரு மின் கடத்தியின் t₁°C, t₂°C வெப்ப நிலைகளிலுள்ள மின் தடைகள் முறையே R₁, R₂ எனக் கொண்டால். எனவே, ஒரு மின் கடத்தியின் தடை வெப்ப நிலையுடன் மாறுபடுகிறது. இவற்றைத் தவிர, மாறு திசை மின்னோட் டத்தில் ஒரு மின் கடத்தியின் தடை, புற விளைவு (skin–effect), அண்மை விளைவு (effect of proximity) ஆகியவற்றால் மாறு படும் விதத்தையும் அறியலாம். புற விளைவு. மின் தொடர் அளவுருக்களைக் கணிக்கும் போது. மின் கடத்தியில் பாயும் மின்னோட்டம், அதன் குறுக்களவுப் பரப்பில் சமச் சீராகப் பகிர்ந்து கொள்வதாகக் கற்பிதம் செய்து கொள்ளப் படுகிறது. நேர் மின்னோட்ட அமைப்பைப் பொறுத்த வரையில், இந்த ஊகம் சரியானதே. ஆனால், மாறு திசை மின்னோட்டத்தில், மின் கடத்தி யின் தூண்டல்–எதிர் வினைப்பு (inductive–reactance) அதன் புறப் பகுதியின் தூண்டல் எதிர் பிணைப்பினை விட மிகுதியாயிருப்பதால், பெரும்பான்மையான மின்னோட்டம் மின் கடத்தியின் புறப் பகுதியிலேயே பாய்கிறது. இவ்விளைவு புற விளைவு எனப்படுகிறது. மேக்ஸ்வெல், ரேலே ஆகியோர் கணித்த படி, புற விளைவுத் தடைக்கும் (Rs) நேர் மின்னோட்டத் தடைக்கும் (R) உள்ள விகிதம் இதில், ஆகவே, புற விளைவு மின் திறன் அலைவெண்ணைச் சார்ந்திருக்கும். புற விளைவுத் தடையைக் கீழ்க் காணும் பட்டறிவு சமன்பாட்டின் மூலம் கணக்கிடலாம். R_3 = R \{ \big( 1 + \frac{m^2}{48}\big)^{\frac{1}{2 + 1 \} அண்மை விளைவு. மேற்குறிப்பிட்ட மின் கடத்தியின் புற விளைவு, மாறு திசை மின்னோட்டத்தைச் சுமந்து செல்லும் வேறெந்த மின் கடத்தியும், அதன் அருகில் இல்லை என்ற நிலையில் எடுத்துக் கொண்ட முடிவாகும். ஆனால், நடைமுறையிலுள்ள மின் செலுத்தத் தொடரில் மின்னோட்டத்தைச் சுமந்து செல்லும் மின் கடத்திகள் மின்னழுத்தத்திற்கேற்றவாறு, குறிப்பிட்ட இடைவெளியில் அருகருகே செல்கின்றன. இங்ஙனம், அருகில் மின் கடத்திகள் செல்வதால், மாறு மின்னோட்டத்தைச் சுமந்து செல்லும் ஒரு மின் கடத்தியின் காந்தப் பாய்வு, மற்றொரு மின் கடத்தியுடன் இணைகிறது. அருகிலுள்ள மின் கடத்தியின் காந்தப் பாய்வு–இணைப்புகள் தொலைவிலுள்ள மின் கடத்தியின் காந்தப் பாய்வு இணைப்புகளை விட, மிகுதியாக உள்ளமையால், இதுவும் புற விளைவைப் போல், ஒரு விளைவை ஏற்படுத்தி மின்னோட்டப் பகிர்வைப் பாதிக்கச் செய்- கிறது. இங்ஙனம் பாதிக்கப்பட்டு, மின் கடத்தியின் மின்னோட்டப் பகிர்வின் மதிப்புக் குறைவதால், அந்த மின் கடத்தியின் தடை உயருகிறது. இவ்விளைவையே அண்மை விளைவு என்பர். தூண்டம். ஒரு மின் சுற்றில் (circuit) பாயும் ஓரலகு மாறு மின்னோட்டத்தால் ஏற்படும் காந்தப் பாய்வு இணைப்புகளை அந்தச் சுற்று வழித் தூண்டம் என்பர். விகிதமுறு மீட்டர் கிலோ கிராம் நொடி அலகில் குறிப்பிட்டால், இதில் Ψ–காந்தப் பாய்வு (magnetic flux) N–சுற்றுகளின் எண்ணிக்கை I–மாறு மின்னோட்டம் ஆனால், மின் செலுத்தத் தொடரில் காந்தப் பாய்வோடு இணையும் மின்னோட்டப் பாதை ஒன்று (∴N = 1) இரு மின் கடத்திகள் கொண்ட ஒற்றைத் தறுவாய் (single phase) மின்தொடரின் தூண்டம் கீழ்க்காணும் சமன்பாடுகளின் மூலம் அறியப்படும். ஹென்றி/மீட்டர் இவற்றில் D–மின் கடத்திகளுக்கு இடையேயுள்ள தொலைவு (மீட்டர்); r–மின் கடத்தியின் ஆரம் (மீட்டர்) r'– ன் கடத்தியின் வடிவியல் சராசரி ஆரம் (geometric mean 0.77888 r radius) (மீ) ஓம் இதில் f–அலைவெண் (ஹெர்ட்ஸ்) L–தூண்டம் (ஹென்றி) மேற்குறிப்பிட்ட சமன்பாடுகள், ஒரு மின் கடத்தியில் சுமந்து செல்லும் மின்னோட்டம் +1 ஆம்பியர் எனவும், மற்றொரு மின் கடத்தியில் சுமந்து செல்லும் மின்னோட்டம் -I ஆம்பியர் எனவும் கொண்டு, கணிக்கப் பட்டிருக்கும். ஒரு மின் கடத்திக்குப் பதிலாக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இணை நிலை வடிவில் மின்னோட்டம் எடுத்துச் செல்லும் இணைப்பும், மின்னோட்டம் மீண்டு வரும் இணைப்பும் படம் 2இல் காட்டியபடி இருந்தால், அத்தகைய மின் தொடரின் தூண்டத்தைக் கீழ்க் காணுமாறு தருவிக்கலாம். P என்னும் வெளிப் புள்ளியிலிருந்து, வட்டத்தின் மேலுள்ள A,B,C,D ஆகிய நான்கு புள்ளிகளின் வடிலியல் சராசரித் தொலைவு (geometric mean distance) படம் 1இல் காட்டிய படி,நான்கு தொலைவுகளின் பெருக்குத் தொகையின் நான்காம் வர்க்க மூலமாகும். ஆகவே வடிவியல் சராசரித் தொலைவு D_{eq} = \sqrt[4]{D_1 D_2 D_3 D_4} ஒற்றைத் தறுவாய் (single phase) மின்தொடரில் படம் 2இல் காட்டிய படி, மீட்டர் ஆரமுடைய நான்கு மின் கடத்திகள் உள்ளன எனக் கொள்ளலாம். மின் கடத்தியின் வடிவியல் சராசரி ஆரம் Daa = 0.7788 r = Da'a' தன் வடிவியல் சராசரித் தொலைவு (self geometric mean distance) D_8 = \sqrt[4]{D_{aa} \times D_{aa^{' \times D_{a^{'}a^{' \times D_{a^{'}a பிறிதின் வடிவியல் சராசரித் தொலைவு (mutual geometric mean distance) D_m = \sqrt[4]{D_{ab} \times D_{ab^{' \times D_{a^{'}b^{' \times D_{a^{'}b இணை நிலையில் உள்ள மின் கடத்தியின் தூண்டத்தைக் கீழ்க் காணும் சமன்பாட்டின் மூலம் பெறலாம். முத்தறுவாய் மின் தொடரின் தூண்டம். முக்கோண வடிவிலுள்ள மூன்று தறுவாய் மின் தொடரில் 1,2,3 என்னும் மூன்று மின் கடத்திகள் படம் 3-1இல் காட்டிய படி, சமச் சீர் (symmetrical) இடைவெளிகளில் இருப்பதாகக் கொண்டால், ஒவ்வொரு மின் கடத்தியின் தூண்டம் அதாவது முத்தறுவாயில், சமச் சீர் இடைவெளிகளில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு மின் கடத்தியின் தூண்டமும், ஒற்றைத் தறுவாயின் ஒரு மின் கடத்தியின் தூண்டத்திற்குச் சமமாயிருக்கிறது. படம் 3-2இல் காட்டிய படி, மூன்று மின் கடத்திகள் சமச் சீரற்ற இடைவெளிகளைக் கொண்டனவாக இருந்தாலும், ஒவ்வொரு மின் கடத்தியின் தூண்ட அளவையும் கணிப்பது எளிதன்று. இத்தகைய அமைப்பில், மின் கடத்திகளை மட்டும் இட மாற்றி வைப்பதன் (transposition) மூலம், வெவ்வேறு தறுவாயின் மின் கடத்தியின் சராசரித் தூண்டத்தைக் கீழ்க் காணும் சமன்பாட்டின் மூலம் கண்டறியலாம். {\sqrt[3]{D_{12}D_{23}D_{31}{r^2} \big \} ஹென்றி/மீட்டர் <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இடமாற்றி வைப்பு. இம்முறை மின் தொடர் அமைப்பில் ஒவ்வொரு தறுவாய் மின் கடத்தியும், 1, 2, 3 ஆகிய இருப்பிடங்களைப் படம் 5இல் காட்டிய படி E மின் தொடரின் முழு நீளத்தில் ஏறக் குறைய 1/3 மடங்கு தொலைவில் மாறி, மாறி இடங் கொள்ளும். மின் தேக்கம். ஒரு மின் தேக்கி (capacitor) அரிதில் கடத்தும் மின் காப்புப் பொருளால் பிரிக்கப்பட்ட இரு கடத்திகளைக் கொண்டது. இவ்விரு கடத்தி களுக்கிடையே, மின்னழுத்தம் வழங்கினால், நேர் முனையுடன் இணைக்கப்பட்ட கடத்தி, நேர் மின்னூட்டம் பெற்றும், எதிர் முனையுடன் இணைக்கப்பட்ட கடத்தி எதிர் மின்னூட்டம் பெற்றும் விளங்கும். மின் தேக்கியின் இத்தகைய பண்பிற்கு மின் தேக்கம் (capacitance) எனப் பெயர். மின் தேக்கிக்கிடையே வழங்கப்பட்ட ஒரு வோல்ட் மின்னழுத்தம், ஒரு கூலூம் மின்னூட்டத்தைத் தருமானால், அம்மின் தேக்கியின் மின் தேக்கம் ஒரு ஃபாரட் (farad) எனப் படும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> ஒற்றைத் தறுவாய் மின் தொடரின் a, b ஆகிய இரு மின் கடத்திகளுக்கிடையே உள்ள மின் தேக்கத்தைச் சமன்பாடு 18இன் மூலம் பெறலாம். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இதில் D = a, b ஆகிய இரு மின் கடத்திகளுக்கிடையேயுள்ள தொலைவு (மீட்டர்) r = என்பது மின் கடத்தியின் ஆரம் (மீ) ஒற்றைத் தறுவாய் மின் மாற்றியின் நடுவில் தரையிடப் பட்டிருந்தால், ஒவ்வொரு வெளிப் புறக் கடத்திக்கும், தரையிடப்பட்ட நடு நிலைப் புள்ளிக்கும் (neutral point) இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாடு, இரு மின் கடத்திகளுக்கிடையேயுள்ள மின்னழுத்த வேறுபாட்டில் பாதியாய் இருக்கும். ஆகவே, ஒவ்வொரு மின் கடத்திக்கும், நடு நிலைப் புள்ளிக்கும் இடையேயுள்ள மின் தேக்கம் முத்தறுவாய் (three phase) மின் தொடரில், சமச் சீர் இடைவெளிகளுடன் மூன்று மின் கடத்திகள், கொண்ட அமைப்பில் ஒவ்வொரு மின் கடத்திக்கும் நடு நிலைப் புள்ளிக்கும் இடையேயுள்ள மின் தேக்கம் மைக்ரோ ஃபாரட்/கி.மீ. இட மாற்றி வைப்பு மூலம் அமைக்கப்பட்ட முத்தறுவாய் மின் தொடரில் உள்ள மூன்று மின் கடத்திகள் சமச் சீரற்ற இடை வெளிகளில் இருந்தால், ஒவ்வொரு மின் கடத்திக்கும் நடு நிலைப் புள்ளிக்கும் இடையேயுள்ள சராசரி மின் தேக்கம் மைக்ரோ ஃபாரட்/கி.மீ. மின் தேக்க எதிர் வினைப்பு (capacitive reactance) மின்னூட்ட மின்னோட்டம் (charging current) மின் செலுத்தத் தொடரில் பயன் படுத்தப் படும் புரியிழைக் கம்பிகள் (stranded wires) தலைமிசை (overhead) மின் செலுத்தத் தொடர்களில் பயன் படும் மின் கடத்திகள் ஆகியன புரியிழைக் கம்பிகளால் ஆனவை. இதற்கான காரணங்கள் பின் வருமாறு: (1) திண்மக் கம்பிகள் (solid wires), மெலிவுறும் விளைவுகளுக்குள்ளாகி, (fatigue effect) முறிந்து விடும். (2) சிதறொளி இழப்பு (corona loss) ஏற்படாமலிருக்க, மிகை உயர் மின்னழுத்தத் தொடர்களில், உயர் விட்டமுடைய மின் கடத்திகளைப் புரியிழைக் கம்பிகளாகவோ, உள்ளீடற்ற குழாய் வடிவமாகவோ, பயன் படுத்துகின்றனர். சிதறொளி இழப்பைத் தவிர்க் கப் பயன்படுத்தப்படும் மின் கடத்தியின் சிறும விட்டத்தை என்ற சமன்பாட்டின் மூலம் கண்டறியலாம். இதில் d என்பது மின் கடத்தியின் விட்டம் (செ.மீ), E என்பது இரு மின் கடத்திகளுக்கிடையேயுள்ள மின்னழுத்தம் (கிலோ வோல்ட்), மேலும் புரியிழைக் கம்பிகளைப் பயன் படுத்தினால், கொடுக்கப் பட்ட மின்னோட்ட அளவிற்குத் தேவைப் படும் புரியிழைக் கம்பிகளைக் கொண்ட மின் கடத்தியின் விட்டம், திண்மக் கம்பியின் விட்டத்தை விட மிகுதியாக இருக்கும். (3) ஒரு மின்கடத்தியினூடே பாயும் மாறு மின்னோட்டம், புற விளைவினால், அந்த மின் கடத்தியின் புறப் பகுதியிலேயே பாயும். ஆகவே, மின் கடத்தி, மின்னோட்டமிராத உட்புறப் பகுதி எஃகுப் புரியிழைக் கம்பிகளாலும் இதன் வெளிப் புறம் அலுமினியப் புரியிழைக் கம்பிகளாலும், ஆனவை. இதனால், மின் கடத்தியின் இறுதியிழு வலிமை (ultimate tensile strength) உயர்கிறது. மின் கடத்தியின் புரியிழைக் கம்பிகளின் ஒன்று விட்ட அடுக்குகள் (layers) சுருள் வட்டமாக எதிர்த் திசையில் படிய வைக்கப் படும். இதனால், சுருளாக உள்ள அடுக்குகள் பிரிபடாமலிருக்கின்றன. புரியிழைக் கம்பிகளின் எண்ணிக்கை, அடுக்குகளின் எண்ணிக்கை ஆகியன புரியிழைக் கம்பிகளின் விட்டத்தைப் பொறுத்திருக்கும். வளைவு வடிவமான இடைவெளியைச் சமச் சீர் வட்டமுடைய புரியிழைக் கம்பியால் நிரப்பும் படி அமைந்த ஒரு மையப் புரியிழை மின் கடத்தியிலுள்ள மொத்தப் புரியிழைகளின் எண்ணிக்கை என்ற சமன்பாட்டிலிருக்கும். xஇன் மதிப்பு 2,3,4,5,6 ஆக ஈடு செய்தால், புரியிழைகளின் எண்ணிக்கை முறையே 7, 19, 37, 61,91 ஆக இருக்கும்; அட்டவணை 1இல், மின் தொடர்களில் பயன் படும் பல்வேறு வகை எஃகு வலிவூட்டப் பெற்ற அலுமினியக் கடத்திகளின் (A.C.S.R) விவரம் கொடுக்கப் பட்டுள்ளது. கட்டு மின் கடத்திகள். மிகை உயர் மின்னழுத்த மின் செலுத்தத் தொடரமைப்புகளுக்கு, ஒற்றைத் தறுவாயில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனி மின் கடத்திகளைப் பயன் படுத்துகின்றனர். இப்பல வகை அமைப்பிலுள்ள மின் கடத்திகள் இடைவெளிகள் (spacers) மூலம் தனிப் படுத்தப் பட்டு, ஒரே மின் காப்பால் தாங்கப் படும். இத்தகைய, பல் தர மின் கடத்திகள் அடங்கிய அமைப்பைக் கட்டு மின் கடத்திகள் (bundle conductors) எனலாம். கட்டு மின் கடத்திகள் ஒற்றைத் தறுவாய் மின் கடத்திக்குள் அடங்கும். இம்மின் கடத்திகளின் அட்டவணை இடுகுறிப் பெயர் கடத்திக்குச் சரி நிகர் பரப்பளவு (ச.மி.மீ.) அலுமினிய மின் கடத்தியின் புரியிழைக் கம்பிகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு புரியிழைக் கம்பியின் விட்டமும் (மி.மீ.) கடத்தியின் அளவுருக்கள் வெப்ப நிலைக்கு மேல் 35°C வெப்ப நிலையில் மின் கடத்தி சுமந்து செல்லும் மின்னோட்டம் (ஆம்பியர்) நிலையில் மாறு மின்னோட்டத்தில் ஏற்படும் தடை (ஓம்) வினைப்பு (ஓம்) இடைவெளி மின் கடத்தியின் விட்டத்தைப் போல், ஏறத் தாழ 10 மடங்கு (20–50 செ. மீ. வரை இருக்கும்). இவ்விடைவெளி ஒவ்வொரு தறுவாய் மின் கடத்திகளுக்கிடையேயுள்ள தொலைவோடு ஒப்பு நோக்க மிகக் குறைவாகும். சிதறொளி இழப்பைத் தவிர்க்க, 400 கிலோ வோல்ட் அமைப்பில், பயன் படுத்தப் படும் மின் கடத்தியின் சிறும விட்டம் 4.6 செ.மீ (∵ d= X 2.54). இத்தகைய பெரிய விட்டமுடைய மின் கடத்தியை எளிதில் கையாள முடியாது, மேலும், இத்தகைய உயர் விட்டமுடைய மின் கடத்தி மிகுந்த வளிச் சுமைக்கும் (wind load) பனிச் சுமைக்கும் (ice load) உள்ளாகும். இத்தகைய சிக்கலைக் கட்டு மின் கடத்திகளைக் கொண்டு தவிர்க்கலாம். உத்திரப் பிரதேச மாநிலத்தில் பயன் படுத்தப் பட்டு வரும் 400 கிலோ வோல்ட் மின் தொடரமைப்பில், 0.5 சதுர அங்குலத் தாமிரக் கடத்தியின் பரப்பிற்கு நிகராக, எஃகு வலிவூட்டப் பட்ட இரு அலுமினியக் கடத்திகளைக் கட்டு மின் கடத்திகளாகப் பயன் படுத்துகின்றனர். இம்மின் கடத்திகளின் இடைவெளி 45 செ. மீ; ஒரு தறுவாய் மின் கடத்திக்கும் மற்றொரு தறுவாய் மிகைக் கடத்திக்கும் இடையேயுள்ள இடைவெளி 11.5 மீ; கட்டு மின் கடத்திகளால் சுமந்து செல்லப் படும் மின்னோட்டம் அதற்கு, நிகரான ஒற்றை மின் கடத்தியில் செலுத்தப் படும் மின்னோட்டத்தின் அளவை விட மிகுதி. இதனால், மின்னூட்டக் கிலோ வோல்ட் ஆம்பியர் அளவு உயருகிறது. மேலும், இவ்விரு மின் கடத்திகளுக்கு நிகரான ஒற்றை மின் கடத்தியால் ஏற்படும் தூண்ட எதிர் வினைப்பை விட, இரு மின் கடத்திகளடங்கிய கட்டு மின் கடத்திகளின் தூண்ட எதிர் வினைப்பு குறைவு. மேலும், இந்தத் துணை மின் கடத்திகளால் ஏற்படும் பிறிதின் கவசமிடல் விளைவுகள் (mutual shielding effects) சிதறொளி இழப்பையும், வானொலிக் குறுக்கீடுகளையும் குறைக்கின்றன. மின் செலுத்தத் தொடரின் செயல். ஒரு மின் செலுத்தத் தொடரின் செயல், தொடர் நிலையில் (serles) இருக்கும் தடை, தூண்டம், இணை நிலையில் இருக்கும் மின் தேக்கம் ஆகிய மூன்று அளவுருக்களைப் பொறுத்திருக்கிறது. அத்தொடரில் பாயும் மின்னோட்டம், இம்மூன்று அளவுருக்களால் மின்னழுத்த வீழ்ச்சியை ஏற்படுத்தும். எனவே, மின் சுமையுடைய ஒரு மின் தொடரின் வாங்கு முனை மின்னழுத்தம் (receiving end voltage), அத்தொடரின் அனுப்பு முனை மின்னழுத்தத்தை விடக் (sending end voltage) குறைவாக உள்ளது. மின் செலுத்தத்தொடர் வகை மின் செலுத்தத் தொடர்களை அவற்றின் நீளத்திற்கேற்றவாறு குறு–மின்தொடர் (short line), இடை மின் தொடர் (medium line), நெடு மின் தொடர் (long line) எனப் பிரிக்கலாம். ஏறத் தாழ, 60 கி.மீ. நீள மின் தொடரைக் குறு மின்தொடர் என்றும், 60–200 கி.மீ. வரையிலுள்ள மின் தொடரை இடை மின் தொடர் என்றும், 200 கி. மீட்டருக்கு மேற்பட்ட மின் தொடரை நெடு மின் தொடர் என்றும் கொள்ளலாம். இவ்வாறு, வகைப் படுத்தும் போது, மின் தொடர் அளவுருவுக்களை எந்த அளவுக்குத் தோராயமாகப் பயன் படுத்தினால், மின் செலுத்தத் தொடரின் செயல் பாதிக்கப் படாமலிருக்கும் என்பதைப் பின் வருமாறு விளக்கலாம். தடை, தூண்டம், மின் தேக்கம் ஆகியவை மின் தொடர் முழுதும் சீராகப் பரவியிருப்பதால், நெடு மின் தொடரின் அனைத்து மின் தொடர் அளவுருக்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். இடை நிலை மின் தொடரின் தொடர் நிலை மறிப்பின் (series impedance) பாதியளவு அனுப்பு முனை, வாங்கு முனை ஆகியவற்றில் குவிந்திருப்பதாகவும், இணை நிலை மின் தேக்கம் (parallel capacitance) மின் தொடரின் மையத்தில் இருப்பதாகவும் கொள்ளப் படுகிறது அல்லது, இணை நிலை மின் தேக்கத்தின் ஒவ்வொரு பாதியளவும் அனுப்பு முனை, வாங்கு முனை ஆகியவற்றில் பகிர்ந்திருப்பதாகவும், இவற்றிற்கிடையே தொடர் நிலை மறிப்பின் முழு அளவும் இருப்பதாகவும் கருதப் படுகிறது. முன்னர்க் குறிப்பிடப்பட்டது T வடிவம் எனவும், பின்னர், குறிப்பிடப்பட்டது σ வடிவம் என்றும் கூறப் படும். குறு மின் தொடரில் இணை நிலை மின் தேக்சுத்தின் மதிப்பு தவிர்க்கக் கூடிய அளவிற்கு மிகச் சிறியதாக இருப்பதால், இதைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. ஆகவே, குறு மின் தொடரில், தொடர் நிலை மறிப்பு மட்டும் இருப்பதாகக் கொள்ளப் படும். படம் 5 இல் y வடிவ முத்தறுவாய் மின்னாக்கி y வடிவச் சரி சம நிலைச் சுமைக்கு (balanced load) மின் செலுத்தத் தொடர்கள் மூலம் மின் திறன் அளிப்பதாகக் கொள்ளலாம். இத்தகைய முத்தறுவாய்ச் சுற்றுக்குப் (three–phase circuit) பதிலாகப் படம் 7இல் காட்டியபடி ஒவ்வொரு தறுவாய்க்கும், ஒற்றைத் தறுவாய்ச் சுற்று (single–phase circuit) இருப்பதாகக் கருதி, ஒவ்வொரு வகை மின் செலுத்தத் தொடர் செயல்பாட்டையும் விளக்கலாம். குறு மின் தொடர். குறு மின் தொடரின் இணை மாற்றுச் சுற்று (equivalent circuit) படம் 6இல் கொடுக்கப் பட்டுள்ளது. (அ) இத்தகைய சுற்றின் அனுப்பு முனை மின்னழுத்தத்தைக் கீழ்க் காணும் சமன்பாட்டின் மூலம் பெறலாம். V_s = V_r \sqrt {\big( cos \phi_r + \frac {IR}{V_r} \big)^2 + \big(Sin \phi_r + \frac {IX}{V_r} \big)^2 } குறிப்பு: (1) பிந்து (lagging) மின் திறன் காரணியில் Vrஐ I பிந்தும். (2) முந்து (leading) மின் திறன் காரணியில் Vrஐ I முந்தும். (3) மின்திறன் காரணி 1 ஆக இருக்கும். Vrஉம், Iஉம் ஒன்றிய நிலையில் (inphase) இருக்கும். படம் 6இல் குறு மின் தொடர் இணை மாற்றுச் சுற்றின் நெறிய வரை படம் (vector diagram) கொடுக்கப் பட்டுள்ளது. (ஆ) மின் செலுத்தித் தொடர்த் திறமையைப் (line efficiency) பின் வரும் சமன்பாட்டின் மூலம் பெறலாம். மின் தொடர்த் திறமை = (இ) சிற்சில சமயங்களில், அனுப்பு முனை மின்னழுத்தத்தையும் (V) வாங்கு முனை மின் திறன் காரணியையும் (CosΦr) மாறா நிலையில் வைத்துக் கொண்டு, பல்வகையான நிலைமைகளில் (mixed conditions) வாங்கு முனை மின்னழுத்தத்தைக் (Vr) கண்டு பிடிக்க வேண்டியதாகிறது. இதனைப் பின் வரும் சமன்பாட்டால் தீர்க்கலாம், V_r = \big( -A \pm \frac {\sqrt {A^2-4B{2} \big) ^\frac{1}{2} Q = \frac {V_r I Sin \phi_r}{1000} மின்தொடர் மறிப்பு, Z = \sqrt{R^2 + X^2} R–மின் தொடரின் தடை X–மின்தொடரின் தூண்ட–எதிர் வினைப்பு ஒரு மின் தொடரில், அனுப்பு முனை மின்னழுத்தம், வாங்கு முனை மின்னழுத்தம், மின் தொடரின் தடை, தூண்ட எதிர் வினைப்பு ஆகியவை கொடுக்கப் பட்டிருந்தால், அந்த மின் தொடரில் செலுத்தக் கூடிய பெரும மின் திறனைக் கீழ்க் காணும் சமன்பாட்டின் மூலம் பெறலாம். Vs=Vr=V எனக் கொண்டால், பெரும நிலைத்த நிலை (maximum steady state) மின் திறன் மின்தொடரின் தடை (R) மாறா நிலையிலிருந்து, தூண்ட எதிர் வினைப்பு X மாறுந் தன்மையுடையதாயிருந்தால், X =\sqrt{3}R ஆக இருக்கும் போதுதான் நிலைத்த நிலை மின் திறன் பெருமமாக இருக்கும். இடையின் தொடர். ஏறத் தாழ, 60 கி.மீட்டருக்கு மேற்பட்ட நீளமுள்ள மின் தொடரில் மின் தேக்க அளவு குறிப்பிடத் தகுந்தது. அதாவது, மின்னூட்டம் பெற்ற ஒரு மின் தொடர் கம்பித் தரையுடன் ஒப்பு நோக்க ஒரு மின் தேக்கமாக விளங்குகிறது. மின் தொடர்க் கம்பிக்கும், தரைக்கும் இடையேயுள்ள காற்று இம்மின் தேக்கத்தின் மின் காப்பியாகச் செயல் படுகிறது. ஆகவே, மின் தேக்கம் மின் தொடர் நீளம் முழுதும் பரவலாக உள்ளது. இங்ஙனம், பரவிச் செல்லும் மின் தேக்கத்தினைக் குவித்து, மின் தேக்கியாக (condenser) மின் தொடரின் குறுக்கே இணை நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளில் குறிப்பிடுவர். இவற்றை உள்ளிட மின் தேக்க முறைகள் (localised capacitance methods) என்பர். இவை பெயரடையாள T முறை, பெயரடையாள (nominal ) முறை என இரு வகைப் படும். பெயரடையாள T முறை. இம்முறையில் மின் தொடரின் மின் தேக்கம், மின் தொடரின் மையத்தில் மின் தொடருக்கும், ஒரு நிலைப் பகுதிக்கும் இடையே குவிந்திருப்பதாகக் கருதப் படும். அதாவது, மின்னூட்ட மின்னோட்டம் (charging current_lc) மின் தொடரில் முதல் பாதி தொலைவே பாய்வதாகக் கொள்ளப் படும். இடை மின் செலுத்தத் தொடரின் பெயரடையாள T முறை அமைப்பின் சமச் சுற்று (equivalent circuit) படம் 8இல் கட்டப்பட்டுள்ளது. படம் 9இல் அதன் நெறிய வரை படம் கொடுக்கப்பட்டுள்ளது. வாங்கு முனை மின்னழுத்தத்தைக் (Vr) குறிப்பீட்டு வெக்டராகக் கொண்டு (reference vector), பகு முறையில் (analytically) அனுப்பு முனை மின்னழுத்தத்தைப் பின் வருமாறு கணக்கிடலாம். \begin{alignat}{3} V_r & = V_r + jo \\ I_r & = I_r \big( Cos \phi_r - jSin \phi_r \big) = I_x - jI_y \\ V_m & = V_r + \big( I_x -jI_y \big) \big( \frac{R}{2} + j \frac{X}{2} \big) \end{alignat} இதை Vm = Vx + jVy எனக் குறிக்கலாம். மின் தேக்கி மின்னோட்டம் Ic = L = I + j என இருக்கலாம். ∴ Is = Ir + Ic = (Ix - jIy ) + (I + jI) = Ix + I -j(Iy - II Tan α = Vs = m + s( + j ) I + jI Vs = V + jV Vs, Vr ஐ δ கோணத்தில் முந்துவதால், Tan δ =(V / V) Φs = α+ δ உள்ளீட்டு மின்திறன் (input power) = 3Vs Is CosΦs வெளியீட்டு மின்திறன் (output power) = 3Vr Ir CosΦr மின்செலுத்தத்தொடரின் திறமை (efficiency) = X 100% பெயரடையாள π முறை. இம்முறைப்படி, மின் தொடரின் மின் தேக்கத்தை அனுப்பு முனை, வாங்கு முனை ஆகிய இரு முனைகளில் படம் 10இல் காட்டிய படி குவிந்திருப்பதாகவும், தொடர்நிலையின் மதிப்பு முழுதும் இவற்றிற்கிடையே இருப்பதாகவும் கொள்ளலாம். மின் தேக்கத்தினை மின் தேக்க எடுப்பில் (capacitive susceptance) கு றிப்பிடுவர். பெயரடையாள π முறை அமைப்பின் நெறிய வரை படம் படம் 11இல் காட்டப்பட்டுள்ளது. வாங்கு முனை மின்னழுத்தத்தைக் (Vr) குறிப்பீட்டு வெக்டராகக் கொண்டு, பகு முறையில் அனுப்பு முனை மின்னழுத்தத்தைக் கீழ்க் காணுமாறு கணக்கிடலாம். Vr = (Vr) + jO Ir = Ir (CosCosΦr - jSInΦr) = Ix - j Iy Ic2 = (Vr + jO ) X (O + j I = r + Ic2 I = I - j I மின் தொடரில் ஏற்படும் வீழ்ச்சி IZ = (I - j I) (R + j x) ∴ Vs = VIr + (I - j I) (R + jx) இதை Vs = VVx + jVy எனக் குறிப்பிடலாம். Tan δ = \begin{align} I_ & = (V_x + jV_y) (O + j \frac{y}{2}) = I^'_x - I^'_y \\ I_ & = I + I_ = ( I^'_x - jI^'_y) + I^'_x - I^'_y \\ & = I^'_x + I^{} _x - j (I^'_y + I^{}_y ) \\ Tan \alpha & = - \frac {I^'_y + I^{}_y}{I^'_x + I^{}_x}; \phi_s = \delta -(-\alpha) = \delta + \alpha \end{align} பொதுச் சுற்று மாறிலிகள் (generalised circuit constants). முத்தறுவாய் மின் செலுத்தத்தொடரைப் படம் 12இல் காட்டிய படி மின் திறன் உட்செல்லும் இரண்டு உள்ளீட்டு ஈறுகளையும் (input terminals) மின் திறன் வெளிச் செல்லும் இரண்டு வெளியீட்டு ஈறுகளையும் (output terminals) கொண்ட ஒரு சுற்று மூலம் குறித்துக் காட்டலாம். மேலும் ஓர் இணையிலுள்ள ஓரீற்றின் வழியாய்ச் செல்லும் மின்னோட்டம், மற்றோரீற்றின் வழியாக வெளி வரும். இவ்விரு இணைகளையும், முறையே, அனுப்பு முனை, வாங்கு முனை எனக் குறிப்பிடலாம். இச்சுற்றில் எந்த விதமான மின்னியக்கு விசை (e.m.f.) மூலங்களும் இல்லாமையால், உயிர்ப்பு அற்ற (passive) சுற்று எனக் கூறலாம். இச்சுற்றிலடங்கிய தனிமங்சுளின் மறிப்புகள் மின்னோட்ட அளவைச் சார்ந்திராமையால், நேர்க் கோட்டுச் (linear) சுற்றாகும். மேலும், இம்மதிப்புகள் மின்னோட்டப் பாய்வின் திசையைப் பொறுத்திராமையால், இரு பக்கச் சுற்று (bilateral circuit) என்றும் குறிப்பிடலாம். இத்தகைய இரண்டு ஈறு முனை இணை மின்னமைப்பை T அல்லது வடிவ அமைப்பாகக் குறிப்பிடலாம். படம் 13இல் இரட்டை ஈறு முனை இணை அமைப்புக்கு நிகரான வடிவ மின் அமைப்புக் காட்டப் பட்டுள்ளது. அனுப்பு முனை மின்னோட்டம் \begin{align} I_s & = I_r + Y (V_r + I_r Z_2) = YV_r + (1 + YZ_2) I_r \\ V_s & = V_r + I_r Z_2 + I_3Z_1 \\ & = (I + Y Z_1) V_r + (Z_1 + Z_2 + YZ_1Z_2) I_r \end{align} மேற்குறிப்பிட்ட சமன்பாடுகளை எளிய வடிவில் கீழ்க் காணுமாறு குறிப்பிடலாம். \begin{align} A & = I_1 + Y Z_1 C = Y \\ B & = Z_1 + Z_2 + Y Z_1 Z_2 ; D = 1 + Y Z_2 \\ \therefore V_3 & = AV_r + BI_r \\ I_3 & = CV_r + DI_r \end{align} முக்கிய குறிப்புகள்: (1) இரண்டு ஈறு முனைஇணை அமைப்பில் AD - BC =1 என்ற தொடர் இருக்கும். (2) மின்னமைப்பு, சமச் சீருள்ளதாக (symmetrical) இருந்தால், A=D (3) அனுப்பு முனை மின்னழுத்தம் Vs அனுப்பு முனை மின்னோட்டம் Irஆகியவற்றை முறையே A,B,C,D மாறிலிகள் மூலமாகக் கீழ்க் காணும் சமன்பாடுகளைக் கொண்டு கண்டு பிடிக்கலாம். \begin{align} V_r & = DV_3 - BI_3 \\ I_r & = -CV_3 + AI_3\end{align} படம் 14இல் இரட்டை ஈறு முனை இணை அமைப்புக்கு நிகரான வடிவ மின் அமைப்புக் காட்டப்பட்டுள்ளது. T வடிவ அமைப்பிற்குச் செய்தது போல், இந்த அமைப்பிலும், அனுப்பு முனை மின்னழுத்தம், அனுப்பு முனை மின்னோட்டம் ஆகியவற்றிற்கான சமன்பாடுகளைத் தருவித்தால், கீழ்க்காணும் மாறிலிகளின் மதிப்புகள் கிடைக்கும். \begin{align} A & = I +Y_r Z; C = Y_s + Y_r + ZY_s Y_r \\ B & = Z; D = I + Y_sZ \end{align} குறு மின் தொடருக்கான ABCD மாறிலிகள். குறு மின் தொடரில் மின் தேக்கத்தினைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாததால், கிளை விடுப்பு (shunt admittance) சுழி மதிப்பாகும். \begin{align} \therefore A & = 1 ; B = Z \\ C & = 0; D = I \end{align} இடை மின் தொடர் (1) பெயரடையாள ‘T’ முறையில் . \begin{align} A & = D = 1 + \frac {1} {2} ZY \\ B & = Z ( 1 + \frac {1} {4} YZ) \\ C & = Y \end{align} இடை மின் தொடர் (2) பெயரடையாள π முறையில் . \begin{align} A & = D = 1 + \frac {1} {2} YZ \\ C & = Y ( 1 + \frac {1} {4} YZ) \\ B & = Z \end{align} நெடு மின் தொடர். பெயரடையாள T முறை அல்லது π முறையினைக் கொண்டு, மின் தொடரின் மின்னழுத்தம், மின்னோட்டம் ஆகியவற்றைக் காணலாம். இவ்வாறு கணக்கிடும் போது, மின் தொடர் அளவுருக்கள் எல்லாம் ஒரு நிலையில் குவிந்திருப்பனவாகக் கருதலாம். உண்மையில், மின் தொடர் அளவுருக்கள் சீராக மின் தொடர் முழுதும் பரவியிருக்கின்றன. எனவே, நெடு மின் தொடர்களில் துல்லியமாகக் கணக்கிடுவதற்குச் சமச் சீர் பரவல் அளவுருக்களைப் பயன் படுத்தலாம். சமச் சீர் அளவுருக்களைப் பயன் படுத்திக் கணக்கிடும் முறை வன் கடுமைத் தீர்வு (rigorous solution) எனப் படும்.. வன் கடுமைத் தீர்வு. படம் 12இல் மூன்று தறுவாய் மின் தொடரின் ஒற்றைத் தறுவாய்க்கும், நடு நிலைக்கும் உள்ள இணைப்புக் காட்டப் பட்டுள்ளது. வன் கடுமையான தீர்வு முறையில் தொடர் நிலை மறிப்புகளும் (series impedance) கிளை நிலை விடுப்புகளும் (shunt admittance) சீராகப் பரவியுள்ளன என்று கொள்ளலாம். அதாவது, நெடு மின் தொடர் முடிவிலா எண்ணிக்கையுடைய பகுதிகளைக் (sections) கொண்டுள்ளது என்றும், ஒவ்வொரு பகுதியிலும் கீழ்க் காணும் அளவுருக்கள் அடங்கியுள்ளன என்றும் கொள்ளலாம். இந்த நெடுமின் தொடரின் அனுப்பு முனை மின்னழுத்தம், அனுப்பு முனை மின்னோட்டம் ஆகிய வற்றைக் கீழ்க் காணும் சமன்பாட்டின் மூலம் கணக்கிடலாம். Z = r + j x – ஓரலகு நீள மின் தொடரின் மறிப்பு/ தறுவாய்/கி.மீ. y = g+ jb – ஓரலகு நீள மின் தொடரின் விடுப்புதறுவாய்/கி.மீ. \begin{align} V_s & = V_r Cosh \sqrt{YZ} + I_r \sqrt {\frac{Z}{Y Sinh \sqrt{YZ} \\ I_s & = V_r \sqrt {\frac{Y}{Z Sinh \sqrt{YZ} + I_r Cosh \sqrt{YZ} \\ V_r & = V_s Cosh \sqrt{YZ} - I_s \sqrt {\frac{Z}{Y Sinh \sqrt{YZ} \\ I_r & = I_s cosh \sqrt {YZ} - V_s \sqrt {\frac{Y}{Z Sinh \sqrt{YZ} \end{align} A, B, C, D துணை மாறிலிகளைக் கொண்டு, இச்சமன்பாடுகளைக் கீழ்க் காணுமாறு அமைக்கலாம். V_s & = AV_r + BI_r \\ I_s & = CV_r + DI_r \\ \end{align} B & = \frac {\sqrt{Z{Y} Sinh \sqrt {YZ} \\ C & = \frac {\sqrt{Y{Z} Sinh \sqrt {YZ} \\ V_r & = AV_s - BI_s \\ I_r & = -CV_s + DI_s \\ \end{align} துணை மாறிலிகளாகிய A, B, C, D முதலியவற்றை மெக்ளாரின் தொடர் மூலம் விரிவாக்கிக் கண்டு பிடிக்கலாம். \begin{align} A & = D = Cosh \sqrt {YZ} = I + \frac {YZ}{2} + \frac {(YZ)^2}{24} + \frac {(YZ)^3}{720} + \ldots \\ B & = \sqrt {\frac {2}{Y Sinh \sqrt {YZ} = Z(I + \frac {YZ}{6} + \frac {(YZ)^2}{120} + \frac {(YZ)^3}{5040} + \ldots \end{align} \begin{align} C & = D = \sqrt {\frac {Y}{Z Sinh \sqrt {YZ} \\ & = Y ( 1 + \frac {YZ}{6} + \frac {(YZ)^2}{120} + \frac {(YZ)^3}{5040} + \ldots) \end{align} இரு சுற்றுகளை இணையாகக் கொண்ட நெடு மின் தொடர். படம் 16இல் காட்டியபடி, இரு சுற்றுகள் (two circuits) இணை நிலையில் இணைக்கப் பட்ட ஒரு நெடு மின் செலுத்தத் தொடரைச் சான்றாகக் கொள்ளலாம். முதல் சுற்றின் தொடர் மறிப்பு, கிளை விடுப்பு, சிக்கல் கோணம் (complex angle) முறையே Z₁, Y₁, θ₁. அதே போல், இரண்டாம் சுற்றின் தொடர் மறிப்பு, கிளை விடுப்பு, சிக்கல் கோணம் முறையே Z₂, Y₂, θ₂, முதல் சுற்றின் துணை மாறிலிகள் A₁, B₁, C₁, D₁ இரண்டாம் சுற்றின் துணை மாறிலிகள் A₂, B₂, C₂, D₂. இரு சுற்றுகளைக் கொண்ட நெடு மின் தொடரின் அனுப்பு முனை மின்னழுத்தம், அனுப்பு முனை மின்னோட்டம் ஆகியவற்றைக் கீழ்க் காணும் சமன்பாடுகள் மூலம் கண்டறியலாம். V_s = AV_r + BI_r இதில் \begin{align} A = \frac {A_1B_2 + A_2B_1}{B_1 + B_2} \\ I_s = CV_r + DI_r \end{align} \begin{align} C & = C_1 + C_2 + \frac {(A_1 - A_2)(D_2 - D_1)}{B_1 + B_2}, B = \frac {B_1 B_2} {B_1 + B_2} \\ D & = \frac {B_1D_2 + B_2 D_1} {B_1 + B_2} \end{align} ஃபெராண்டி விளைவு. உயர் மின் தேக்கத்தினைக் கொண்ட ஒரு நெடு மின் தொடர் சுமையற்றிருந்தால், வாங்கு முனை மின்னழுத்தம், அனுப்பு முனை மின்னழுத்தத்தை விட மிகுதியாயிருக்கும். சுமையற்ற அல்லது மிகக் குறைந்த சுமையுடன் இயங்கும் மின் தொடரின் வாங்கு முனையில், மின்னழுத்த உயர்வு ஏற்படும். இந்த இயல் நிகழ்ச்சியினை, ஃபெராண்டி விளைவு என்று கூறலாம். டி. ஃபெராண்டி என்பார், கி. பி. 1890ஆம் ஆண்டில் இவ்விளைவைக் கண்டு பிடித்தமையால், அவருடைய நினைவாக இவ்விளைவுக்கு ஃபெராண்டி விளைவு எனப் பெயரிடப் பட்டது. படம் 14இல் இவ்விளைவைக் குறிக்கும் நெறிய வரை படம் காட்டப் பட்டுள்ளது. <!---- படம் 14 படம் 17 ----> அலைப்பு மறிப்பு (surge impedance). ஒரு மின் தொடரின் \sqrt {\frac {Z}{YZ_c எனக் குறிப்பிட்டால், இம்மறிப்பைப் பண்பியல் மறிப்பு (characteristic impedance) எனலாம். மேலும், இதை அலைப்பு மறிப்பு என்றும் குறிக்கலாம். பேரலை மறிப்பு என்ற தொடர் குறிப்பாக, இழப்பற்ற மின் தொடருக்கும், பொருந்தும். ஒரு மின் செலுத்தத் தொடரில், தடையும், கடத்துமையும் (conductance) சுழி மதிப்புடையதாயிருந்தால், அந்த மின் தொடரை, இழப்பற்ற மின் தொடர் என்பர், அலைப்பு மறிப்புக்குச் சமமான தடையைக் கொண்ட சுமைக்கு, ஒரு மின் தொடரைக் கொண்டு, மின் திறன் வழங்கினால், அச்சுமையை அந்த மின் தொடரின் பேரலை மறிப்புச் சுமை (Surge–Impedance-Loading–SIL) எனலாம்.. உயர் மின்னழுத்த நேர் மின்னோட்டம். உயர் மின்னழுத்த மாறு மின்னோட்டத்திற்குப் (high voltage alternating current) பதிலாக உயர் மின்னழுத்த நேர் மின்னோட்டத்தை (high voltage direct current), மீஉயர் மின்னழுத்த (extra high voltage) அமைப்பிற்குப் பயன் படுத்துகின்றனர். உயர் மின்னழுத்த நேர்-மின்னோட்ட அமைப்பின் மேன்மைகள் மின் திறன் / மின் கடத்தி. மாறு மின்னோட்ட அமைப்பை விட, நேர் மின்னோட்ட அமைப்பில் ஒரு மின் கடத்தியில் செலுத்தப்படும் மின்திறன் (power per conductor) மிகுதி. \begin{alignat}{2} & = \frac {V_d \cdot I_d}{V_a \cdot I_a Cos\phi} \\ \frac {P_d}{P_a} \big( \frac {V_d}{V_a} \big) \frac {I_d}{I_a} \cdot \frac {1}{Cos \phi} & = \sqrt{2} \times 1 \times \frac {1}{Cos \phi} \end{alignat} மின்திறன் காரணியின் (CosΦ) மதிப்பு 0.945 ஆகக் கொண்டால், block_center|\frac {P_d}{P_a} = 1.5 ஆகும். ஆகவே ஒரே குறுக்களவு பரப்பைக் கொண்ட மின் கடத்தி நேர் மின்னோட்ட அமைப்பில் மாறு மின்னோட்ட அமைப்பைப் போல் 1.5 மடங்கு மின் திறனைச் செலுத்தும் திறன் வாய்ந்தது. மின் செலுத்தத் தொடர்க் கட்டமைப்பு. மீஉயர் மின்னழுத்த மாறு மின்னோட்ட அமைப்பின் மின் செலுத்தத் தொடரிலிருக்கும் தூண்டல் எதிர் வினைப்பைச் (inductive reactance) சரியீடு செய்யத் தொடர் நிலை மின் தேக்கி (series capacitor) அமைப்பைப் பயன் படுத்துவர். இந்த மின் தேக்கி அமைப்பை நிறுவ ஓர் இடைப் பட்ட சுற்றிணை நிலையம் (intermediate switching station) தேவைப் படுகிறது. ஆனால், நேர் மின்னோட்ட மின் செலுத்தத் தொடர் அமைப்பில் தூண்டல் எதிர் வினைப்பு இல்லாமையால், இந்த அமைப்பிற்கு இடைப்பட்ட சுற்றிணை நிலையம் தேவையில்லை. எனவே, நேர் மின்னோட்ட மின் செலுத்தத் தொடருக்கு ஆகும் கட்டுமானச் செலவு குறைவு. தரை திருப்பி. மின் மூலத்திலிருந்து மின் சுமையுள்ள இடத்திற்கு, மின்னோட்டத்தை எடுத்துச் செல்லும் மின் கடத்தியும் மின் சுமையிலிருந்து மின்னோட்டத்தை எடுத்து வரும் மின் கடத்தியும் (return conductor) தேவை. மின்னோட்டத்தை எடுத்து வரும் மின் கடத்திக்குப் பதிலாகத் தரையினை மின்னோட்டம் திரும்பி வரும் பாதையாகப் பயன் படுத்துவர். இங்ஙனம் பயன் படுத்தும் தரைப் பாதையைத் தரைத் திருப்பி (ground return) என்பர். தரை நேர் மின்னோட்டத்தை எளிதில் கடத்தும் ஆனால், மாறு மின்னோட்டத்திற்கு அந்தத் தரைப் பகுதி மிகுதியான எதிர்ப்பினைத் (உயர் மறிப்பு) தரும். எனவே, நேர் மின்னோட்ட அமைப்பிலுள்ள இரு மின் கடத்திகளில், ஏதேனும் ஒரு மின் கடத்தியில் பிழை (fault) ஏற்- பட்டால், அப்பிழையைச் சீராக்கும் வரை, தரையினை மின்னோட்டத்தைத் திருப்பி எடுத்துச் செல்லும் மின் கடத்தியாகப் பயன் படுத்தலாம். ஆனால், இது மாறு மின்னோட்ட அமைப்பில் இயலாது. எனவே, இரு மின் கடத்திகள் நேர் மின்னோட்ட இரட்டை முனை (bipolar) மின் செலுத்தத் தொடர் அமைப்பு மூன்று மின் கடத்திகள் கொண்ட மாறு மின்னோட்ட மின் செலுத்தத் தொடர் அமைப்பை விடச் சிறந்தது. நிலைப்புத் தன்மை. மாறு மின்னோட்ட மின் தொடரின் நிலைப்புத் தன்மை (stability), அந்த மின் தொடர் சுமந்து செல்லும் மின் திறனின் அளவு, மின் தொடரின் நீளம் ஆகியவற்றைப் பொறுத்திருக்கும். ஆனால், நேர் மின்னோட்ட மின் தொடரில், மின் தொடரின் நீளத்திற்கும், நிலைப்புத் தன்மைக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.எனவே, நேர் மின்னோட்ட மின் தொடரை எவ்வளவு நீளத்திற்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். மின்னூட்ட மின்னோட்டம். 50 அல்லது 60 ஹெர்ட்ஸ் அலைவெண் கொண்ட மாறு மின்னோட்ட வடம் (A.C. cable) ஏறக் குறைய 40–80 கி.மீ. நீளமுடையதாக இருந்தால், அந்த மின் வட்டத்தின் மின்னூட்ட மின்னோட்டம், அந்த வட்டத்தின் திட்ட வரை மின்னோட்டத்திற்குச் சமமாக இருக்கும். அதாவது, இத்தகைய நீள் மின் வடத்தில், சுமை மின்னோட்டத்திற்கு (load current) இடமே இராது. எனவே, மாறு மின்னோட்டக் கடலடி வடத்தின் (marine cable) நீளம் 32 கி.மீ.க்கு மேல் போடுவது நடைமுறையில் இயலாது. ஆனால், நேர் மின்னோட்ட மின் செலுத்தத் தொடரில் மின்னூட்ட மின்னோட்டம் (charging current) இல்லாமையால், கடலடி மின் வடத்தை நீண்ட தொலைவிற்கு எடுத்துச் செல்லலாம். புற விளைவு. மாறு மின்னோட்ட அமைப்பில் புற விளைவு (skin effect) உண்டு. ஆனால், நேர் மின்னோட்ட அமைப்பில், அலைவெண் இல்லாமையால், புற விளைவு ஏற்படுவதில்லை. இதனால், மின் கடத்தியில் செல்லும் மின்னோட்டம், மின் கடத்தியின் குறுக்களவுப் பரப்பு முழுதும் சீராகப் பரவியுள்ளமையால், மின் கடத்தியாகப் பயன் படுத்தும் உலோகத்தை, முழுமையாகப் பயன் படுத்த முடிகிறது. வடத்தின் மின்னழுத்தச் சரிவு (voltage gradient). மாறு மின்னோட்ட வடத்தின் மின்னழுத்தத் தகைவு (stress) 10 கிலோ வோல்ட் செ.மீ. ஆனால், நேர் மின்னோட்ட வடத்தின் மின்னழுத்தச் சரிவு 30–40 கிலோ வோல்ட் / செ.மீ. ஆகும். எனவே, நேர் மின்னோட்ட வடத்தின் மூலம் மின் செலுத்தம் செய்தால், பயன் படும் வடத்தின் எடை, உருவளவு, ஆகியவை மாறு மின்னோட்ட வடத்துடன் ஒப்பு நோக்கக் குறைவாக இருக்கும். மின் திறன் காரணி (power factor). மாறு மின்னோட்ட மின் செலுத்தத் தொடரில் ஏற்படும் குறைந்த மின் திறன் காரணியைச் சரி செய்யக் கிளை மின் தேக்கி பயன் படும். ஆனால், நேர் மின்னோட்ட மின் செலுத்தத் தொடரின் மின் திறன் காரணி ஒன்று. ஆதலால், இத்தகைய சீர் செய்யும் கருவிகள் தேவையில்லை. சிதறொளி இழப்பும் வானொலிக் குறுக்கீடும். நேர் மின்னோட்ட மின் செலுத்தத் தொடரில், மாறு மின்னோட்ட மின் தொடரினை ஒப்பு நோக்க, சிதறொளி இழப்பும் (corona loss), வானொலிக் குறுக்கீடும் (radio interference) மிகக் குறைவு. அதுவும், மழைக் காலத்தில் குறிப்பிட்ட மின் கடத்தியின் விட்டத்திலும், மின்னழுத்தத்திலும் இந்நிகழ்ச்சிகள் ஏற்படுகின்றன. ஒத்தியங்கு இயக்கம் (synchronous operation). மாறு மின்னோட்ட மின் தொடர் செயல்பாட்டிற்கு ஒத்தியங்கு இயக்கம் தேவை. ஆனால், நேர் மின்னோட்ட மின் தொடர் அமைப்பிற்கு இவ்வியக்கம் தேவையில்லை. இதனால், நேர் மின்னோட்ட இணைப்பில் (D.C. link) பாயும் மின் திறனை, அலைவெண், மின்னழுத்தம் ஆகியவற்றைச் சார்ந்திராதவாறு ஒழுங்கு படுத்த முடிகிறது. வெவ்வேறு அலைவெண்கள் கொண்ட மாறு மின்னோட்ட அமைப்பு களை நேர் மின்னோட்ட இணைப்பு மூலம் இணைக்க முடிகிறது. குறுக்குச் சுற்று மின்னோட்டம் (short circuit current). நேர் மின்னோட்ட அமைப்பிலுள்ள தைரிஸ்டரின் (thyristor) பற்றி எரியும் கோணத்தைச் (firing angle) சீராக்குவதால், நேர் மின்னோட்ட மின் தொடரில் பாயும் மின்னோட்டத்தை வரம்புக்குட்படுத்தலாம். மாறு மின்னோட்ட மின் தொடர் அமைப்பில், இத்தகைய கட்டுப்பாட்டு அமைப்பு இல்லை. எனவே, நேர் மின்னோட்ட மின் தொடரில் பாயும் குறுக்குச் சுற்று மின்னோட்டம், மாறு மின்னோட்ட மின் தொடரில் பாயும் குறுக்குச் சுற்று மின்னோட்டத்தை விடக் குறைவு. மேலும், இரு மாறு மின்னோட்ட அமைப்புகளை இணைக்கும் நேர் மின்னோட்ட இணைப்பு (D.C. link) மாறு மின்னோட்டத்தில் ஏற்படும் குறுக்குச் சுற்றுப் பிளவுக்கு (short-circuit fault) மின்னோட்டப் பங்கினை அளிக்காது. உயர் மின்னழுத்த நேர்–மின்னோட்ட அமைப்பின் தீமைகள் (1) மாறு மின்னோட்டத்தை, நேர் மின்னோட்டமாக்கும் திருத்திகள் (rectifiers) இவ்வமைப்பில் மிகவும் விலை உயர்ந்தவை. (2) இவ்வமைப்பில் பயன்படும் திருத்திகளுக்கு, எதிர் வினைப்பு மின் திறன் (reactive power) தேவைப் படுகிறது. மேலும், இந்தத் திருத்திகள் நேர் மின் னோட்டத் தொடரில் கிளை அலைகளைத் தோற்றுவிக்கின்றன. கிளை அலைகளைச் சரி செய்ய, வடிப்பிகள் (filters) தேவை. திருத்திகளின் மிகைச் சுமை (overload) ஏற்கும் திறன் மிகக் குறைவு. இவ்வமைப்பு, மாறு மின்னோட்ட அமைப்பைப் போல், மிகைச் சுமையைத் தாங்காது. (3) இவ்வமைப்பில் போதுமான உயர் மின்னழுத்த நேர் மின்னோட்டச் சுற்றுப் பிரிப்பிகள் (HVDC circuit breakers) இல்லாமையால், பல் ஈறு (multi terminal) இயக்கத்திற்கு ஏற்றவாறில்லை. (4) மாறு மின்னோட்டத்தில், ஒரு மின்னழுத்தத்திலிருந்து மற்றொரு மின்னழுத்தத்திற்கு எளிதாக மின் மாற்றி (transformer) மூலம் மாற்ற முடியும். இத்தகைய எளிய முறை மின்னழுத்த மாற்றம் நேர் மின்னோட்ட அமைப்பில் இல்லை. மாறாக, மாறு மின்னோட்டத்தை நேர் மின்னோட்டமாக மாற்றும் நிலையத்தில்தான் இத்தகைய மின்னழுத்த மாற்றம் மாறு மின்னோட்டப் பகுதியில் நிகழ்கிறது. (5) மாறு மின்னோட்ட மின் தொடர் அமைப்பில், ஒற்றைச் சுருணை மின் மாற்றியைப் (autotransformer) பயன் படுத்தி, தேவையான மின்னழுத்த மாற்றத்தைப் பெறலாம். ஆனால், நேர் மின்னோட்ட மின் தொடர் அமைப்பில், மாறு மின்னோட்டப் பகுதியில் இரட்டைச் சுருணை மின் மாற்றியையே (two winding transformer) பயன் படுத்த முடியும். ஆகவே, நேர் மின்னோட்ட மின் தொடரமைப்புக்காகும் செலவு மிகுதி. —எல். கே. இராமலிங்கம் நூலோதி. S.L. Uppal, Electrical Power, Twelfth Edition, Khanna Publishers, New Delhi, 1986. செலுத்தம் ஒரு பொருளுக்கு எதிராக விசையை ஏற்படுத்தி, அப்பொருளை நகர்த்துவதைச் செலுத்தம் (propulsion) எனலாம். ஒவ்வொரு செயலுக்கும், அதே அளவான எதிர்ச் செயல் ஏற்படும் என்ற நியூட்டனின் மூன்றாம் விதியை ஒட்டி ஏற்பட்ட எதிர்த் தாக்குக் கொள்கையை உள்ளடக்கியதே செலுத்தம் ஆகும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> செலுத்தக் கொள்கை. நியூட்டனின் இரண்டாம் விதிப் படி, பொருண்மை வேகத்தில் (momentum) ஏற்படும் எந்த மாற்றமும், ஓர் உருவத்தின் மீது செலுத்தப்பட்ட செலுத்த விசைக்குச் சமமாக இருக்கும். காட்டாக, படம் 1இல் உள்ள அமைப்பைக் கூறலாம். இது ஒரு பக்கம் சிறிய துளையுடனும், உள்பக்கம் வெற்றிடமாகவும் உள்ள ஒரு பந்தைப் போன்றது. இதன் உள்ளே உயர் அழுத்தத்தில் வளிமத்தை நிரப்பினால், வெற்றிட உட்புறத்தில் வளிமத்தின் அழுத்தம் தாக்கப் படும். அதே வேளையில், சிறிய துளை வழியாக வளிமம் மிக விரைவில் வெளியேறும். இதனால், துளையின் நேர் எதிராக A என்ற பரப்பில் வளிம அழுத்தம் தாக்கும். அந்- நிலையில் ஏனைய பக்கங்களில் ஏற்படும் வளிம அழுத்தங்கள் ஒன்றுக்கொன்று சமமாகி விடும். இறுதியில் எஞ்சியுள்ள விசை, படத்தில் காட்டப்பட்டுள்ள திசையில் தாக்கும். ஓர் ஏவுகணை, வளி மண்டலத்தை விட, வெற்றிடத்தில் உயர் உந்தத்தைப் பெறுகிறது என்பதை இதன் மூலம் அறியலாம். விமான இறக்கைகளின் மேல் செல்லும் காற்றின் மீது, கீழ் நோக்கிய உந்தம் ஏற்படுகிறது. இதனால், மேல் நோக்கிய எதிர்த் தாக்கு விசை ஏற்பட்டு, விமானம் தூக்கப் படுகிறது. உந்து விசை. ஓர் ஊர்தி ஏற்படுத்தும் உந்தத்தின் அடிப்படையில் செலுத்தத் திறனை அளக்கலாம். செலுத்தப் பொறி உட்கொள்ளும் வளிமம், நீர் போன்றவற்றின் அழுத்தத்தைக் கணக்கில் கொள்ளாமல், செலுத்தக் கருவிகளால் ஏற்படும் இறுதி உந்துதலைச் சமன்பாடு 1இல் காணலாம். செயல் திறன். செலுத்த ஆற்றலால் வகுக்கப் பட்ட, பயனாகும் உந்த ஆற்றலே செலுத்தச் செயல் திறன் என்று வரையறுக்கப் படுகிறது. தன் எரி பொருள் நுகர்வு (specific fuel consumption) உந்தத்தைச் சமன்பாடு (3)இல் காணலாம். SFC = \frac {W_f g_0}{F} & = g_0 \frac {W_f}{W_a} \frac {1}{\big[ \big( 1 + \frac {W_r}{W_a}\big) V_e - V \big]} \\ & = g_0 \frac {W_f}{W_a} \frac {1}{V_c -V} \end{align} இதில் SFC என்பது எரி பொருளின் பவுண்ட்/நொடி g0 = ஈர்ப்பு ஆற்றலின் முடுக்கம் ≤ 1 என்று இருக்கும். தன் தூண்டுகைச் சமன்பாடு (4) இல் காணலாம். வளிமத்தைப் பயன்படுத்தும் வேதிச் செலுத்த அமைப்பில், நிலக்கரி, பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் போன்ற ஹைட்ரோகார்பனை எரி பொருளாகவும், வளிமத்தை எரியூட்டியாகவும் பயன்படுத்தலாம். —டி. இந்திரன் நூலோதி. John D. Anderson, Introduction to Flight, McGraw-Hill Book Company, New York, 1978, செலுத்தி இதில் ஆற்றலால் செலுத்தப் படும் அச்சுத் தண்டில் அலகுகள் பொருத்தப் பட்டிருக்கும். காற்று அல்லது நீர் ஆகியவற்றில் இது ஒரு முன் செல்லக் கூடிய தள்ளு விசையை உண்டாக்கும். கப்பல் மற்றும் வானூர்திகளைச் செலுத்தப் பயன் படும் செலுத்திகளே (propeller) சிறந்த வகையாகும். 1796ஆம் ஆண்டு ஜான் பிட்ச் என்பார் கப்பல்களுக்கான முதல் திருகு செலுத்தியைக் கண்டு பிடித்தார். இச்செலுத்தி ஓர் உருளையான தண்டைச் சுற்றிய அகல் சுருள் அமைப்பைக் கொண்டிருக்கும். 1836ஆம் ஆண்டில் ஸ்வீட–அமெரிக்கக் கண்டு பிடிப்பாளரான ஜான் எரிக்சன் என்பார் இறகுகள் கொண்ட செலுத்தியைக் கண்டு பிடித்தார். கடல் வழி செலுத்தி. திருகு மரத்தைத் துளையிடுவது போலச் செலுத்தி, நீரினுள் செல்லும். ஒவ்வொரு சுற்றின் போதும் செலுத்தி முன்னே செல்வது, புரியிடைத் தொலைவு (pitch) எனப் படும். புரியிடைத் தொலைவுக்கும், செலுத்தி, நீரில் முன் செல்லும் உண்மையான தொலைவுக்கும் உள்ள வேறுபாடு நழுவல் (slip) எனப் படும். திறன் வாய்ந்த கடற்படைச் செலுத்திக்கு நழுவல் 15% இருக்கும். கப்பற் படைக் கப்பல்களில் 3 இறகுகளைக் கொண்ட செலுத்திகள் இருக்கும். வணிகக் கப்பல்களில் நான்கு இறகுகளைக் கொண்ட செலுத்திகள் இருக்கும். கப்பல் சென்று கொண்டிருக்கும் போது, அதன் பின் புறத்திலிருந்து நோக்கினால், ஒற்றை–திருகு கப்பல்களிலுள்ள செலுத்திகள் வலத் திசையாகவோ, வலஞ்சுழியாகவோ திரும்பும். இரு–திருகு கப்பல்களில் வெளித் திரும்பும் செலுத்திகள் இருக்கும். முன் பக்க நகர்வுக்கு, கப்பலின் வலப் பக்கத் திருகு வலஞ் சுழியாகவும், இடப் பக்கத் திருகு இடஞ் சுழியாகவும் திரும்பும். இரு பொறிகளில், ஒன்றின் திசையைத் திருப்பியும், மற்றொன்றை முழுதுமாக முன் செல்லுமாறு வைத்திருப்பதன் மூலமும், இரட்டைத் திருகு கப்பல்களை எளிய வழிகாட்டியாகச் செய்யலாம். வெப்பச் சலனச் செலுத்திகள் உயர் விரைவுகளில் குறைந்த திறன் கொண்டிருக்கும். ஏனெனில், அவற்றில் வெற்றிடம் ஏற்படும். இவ்வெற்றிடம் செலுத்தி திரும்பும் போது உண்டாகும். உயர் விரைவுகளில் செலுத்தியின் திறனை உயர்த்துமாறு வெற்றிடம் அமைந்திருக்கும். இவ்வகைச் செலுத்திகள் மீ உயர் வெற்றிடச் (super cavitating) செலுத்திகள் எனப் படும். வானூர்திச் செலுத்தி. இதைக் காற்றுத் திருகு எனவும் கூறுவர். இது பொறியின் ஆற்றலை உந்து விசையாக மாற்றும். இவ்வுந்து விசை வானூர்தியைக் காற்றில் முன் செலுத்தவோ, இழுக்கவோ பயன் படும். வானூர்தியின் இறக்கைகளைப் போல, வடிவமைக்கப் பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அலகுகளைக் கொண்டிருக்கும். இதன் குறுக்கு வெட்டுத் தோற்றம், இறகுகளில் பயன் படுத்தும் அலகுகளைப் போலக் காற்றிதழ்ப் பகுதிகளாக (airfoil sections) இருக்கும். இதன் திறன் குறைந்தால், அலகுகளின் நுனியிலுள்ள வேகம் ஒலியின் வேகத்தை விட விரைவாக உயர்வதால், இதன் இரைச்சலும் உயரும். நிலையான புரியிடைத் தொலைவுச் செலுத்தி. அலகுகள் அமைக்கப் பட்டிருக்கும் கோணம் நிலையாக இருக்கும். இவ்வகைச் செலுத்திகள், பறத்தலின் ஒரே ஒரு விரைவிற்கும், குறிப்பிட்ட ஆற்றல் வெளியீட்டிற்கும் திறன் பெற்றிருக்கும். கட்டுப் படுத்தக் கூடிய புரியிடைத் தொலைவுச் செலுத்தி. செலுத்தி சுழன்று கொண்டே தலை கீழாக இறங்கும் போது, அலகுகளின் கோணம் செம்மைப் படுத்துமாறு அமைந்தால், அது கட்டுப் படுத்தக் கூடிய புரியிடைத் தொலைவுச் செலுத்தி எனப் படும். இம்முறை மனிதராலோ, தாமாகவோ கட்டுப் படுத்தப் படும். வெவ்வேறு காற்று விரைவுகளில் வெவ்வேறு இயங்கு முறைகளுக்கு, திறன் மிகுந்த அலகின் கோணம் கிடைப்பதற்கு இம்முறை பயன் படும். இறகுத் தொகுதிச் செலுத்தி. பொறி இயங்காமலிருக்கும் போது, அலகுகளின் கோணம் அவற்றிற்குச் சீரோட்டம் கிடைக்குமாறு உயர்த்தப்படுமானால், அச்செலுத்திகள் இறகுத் தொகுதிச் செலுத்திகள் (feathering propeller) எனப் படும். பொறி இயங்காமலிருக்கும் போது, விமானி விமானத்தை இறகு போல் பறக்க விடுவார் அல்லது அலகுகளின் முன் மற்றும் பின் முனைகளைப் பறக்கும் பாதைக்கு இணையாக இருக்குமாறு சுழல விடுவார். இது செலுத்தியின் காற்றுத் தடையைக் குறைத்துப் பொறியைக் காக்கும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> திசை மாற்றக் கூடிய புரியிடைத் தொலைவுச் செலுத்தி. இதில் உந்து விசையின் திசை மாற்றப் படும் போது, புரியிடைத் தொலைவின் திசையும் மாற்றப் படும். இது ஒரு தடையாக விளங்கி, நிலத்திற்குச் செல்லும் நில ஓட்டத்தைக் குறைக்கும். சக்கரத் தடைகள் இயங்கா வண்ணம் வானூர்தியின் ஏற்ற இறக்க ஓடு பாதை உறைநீர் அல்லது பனி ஆகியவற்றால் மூடப் பட்டால், பெரிய வானூர்திகளில் இதன் பயன் இன்றியமையாததாகக் கருதப் படும். —இரா. இந்து நூலோதி. John D. Anderson. Introduction to Flight, McGraw-Hill Book Company, New York, 1970. <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்த பக்கத்தில் ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> செலுத்துகைத் திறன் உந்து விசையால் செலுத்தப் படும் பொறிகளின் திறன், செலுத்துகைத் திறன் (propulsion efficiency) எனப் படும். ஒரு வான் கலத்தில், எரிந்த வளிமங்கள் வெளியேறுமிடத்தில் உள்ள தாரையின் திசை வேகம் (jet velocity) ‘Cj’ என்றும், வான் கலத்தின் முன் செல்லும் திசை வேகம் (Cα) என்றும் கொண்டால், இந்நிலையில் வான் கலத்தை விட்டு வெளியேறும் காற்றின் ஆதி திசை வேகத்தை (Cj - Cα) என்ற வாய்ப்பாட்டின் மூலம் கணக்கிடலாம். இதற்கென, வளிக் காற்று (atmospheric air) நிலையாக இருப்பதாகக் கொண்டு, வான் கலத்தைச் சார்ந்திருக்கும் காற்று உள்ளே செல்லும் போது, அதன் திசை வேகம் “Cα” என்றும் கொள்ள வேண்டும். வான் கலத்தினுள் செலுத்தப் படும் காற்றின் தொடக்க திசை வேகம் = O ∴ ஒரு நொடியில் ஒரு கிலோகிராமிற்கு மாறு படும் உந்துவிசை : (Cj - Cα) Kgf இவ்வுந்துவிசை மாறுபாடே, பொறியமைவு முன்னோக்கிச் செல்வதற்கு உரிய செலுத்து விசையை (propulsive force) அளிக்கிறது. ∴ செலுத்து விசை = (Cj - Cα) Kgf செலுத்துகை வேலை = செலுத்து விசை X வான் கலத்தின் திசை வேகம் செலுத்துகை வேலை என்பது, வான் கலம் ஒரு நிலையான திசை வேகத்தில் (Cα) எல்லா வித உராய்வு, இழுப்பு முதலியவற்றை மீறிச் சென்று கொண்டிருக்கும் போது, பொறியினால் உண்டாக்கப் படும் பயன் மிக்க ஆற்றல் எனப் படும். கனற்சிக் கலனிலிருந்து உண்டாக்கப்படும் செலுத்துகை ஆற்றல் இரு வகைகளில் பயன் படுகிறது. அவை:செலுத்துகை வேலையை ஆக்குதல், காற்றிற்கு இயக்க ஆற்றலை அளித்தல் என்பன. செலுத்துகை ஆற்றல் & = \frac {1}{2} g \big( C_j^2 - C_\alpha^2) \\ & = \frac {\big(C_j^2 - C_\alpha^2 \big)} {2gc} \end{alignat} (2) இவ்வகையில் செலுத்துகை ஆற்றல், தாரையிலிருந்து அளிக்கப் படும் உயர்ந்த இயக்க ஆற்றலுக்குச் சமமாகிறது. ஒரு செலுத்துகையமைப்பின் திறன் என்பது அதன் செலுத்துகை வேலைக்கும் செலுத்துகை ஆற்றலுக்கும் உள்ள விகிதமாகும். செலுத்துகைத் திறன் & = \frac {2C \alpha} {C_j + C_\alpha} && = \frac {2J}{1 + J} \\ \therefore J & = \frac {C_\alpha}{C_j} \cdot \big(C_j^2 - C_\alpha^2 \big) && = \big( C_j + C_\alpha \big) \big( C_j - C_\alpha \big) \\ \end{alignat} இவ்வாறு செலுத்துகையின் திறன் வான் கலத்தின் திசை வேகத்தைப் (Cα) பொறுத்தது. வான் கலத்தின் திசை வேகம் உயர உயரத் திறனும் கூடும். வான் கலம் அசைவற்று நின்றிருக்கையில், அதன் திசை வேகம் (Cα = 0) சுழியாகும் போது, திறனும் சுழியாகவே இருக்கும். வான் கலத்தின் திசை வேகமும், தாரையின் திசை வேகமும் (Cj) ஒன்றாக இருக்கையில், திறன் 100% ஆயின், அந்நிலையில் எரி பொருள் தேவையில்லை. அதனால், செலுத்துகை வேலையும் சுழியாகும். உயர்ந்த அளவு ஒட்டு மொத்தத் திறனிற்குத் தாரையின் திசை வேகம், கலத்தின் திசை வேகத்தில் பாதியாக இருக்க வேண்டும். —கே. ஆர். கோவிந்தன் நூலோதி. Baumeister, A. Avallone and Baumeister III, Marks Standard Handbook for Mechanical Engineers, Sixth Edition, McGraw-Hill Book Company, New York, 1978. செலுத்தும் சுழலி இது ஒரு வகை எதிர் வினைச் சுழலியாகும். இதன் ஓடியில் (runner) உள்ள அலகுகள் (blades) மறைக்கப் படாமல் வெளிப்படையாகவே இருக்கும். ஊற்றுக் கோல் தாங்கியிலிருக்கும் (penstock) நீர், சுருள் உறையில் நுழைந்து, புழை வாயில் (wicket-gate) வழியாக ஓடிக்கும். இழுவைக் குழாய்க்கும் செல்லும். இதற்கு நிலைப்பு வளையங்கள் பயன் படும். இறுதியாக, பின் கை நீர்த் தேக்கத்திற்குச் (tail water reservoir) செல்லும். இச்சுழலியில் அலகுகள் நிலையானவையாகவோ, சீராக்கக்கூடியவையாகவோ இருக்கும். 4–9 அலகு- களைக் கொண்டிருக்கும். நிலையான அலகுகள் செலுத்தும் சுழலியில், அலகுகள் நிலையான இடத்தில் இருக்கும். சீர் செய்யக் கூடிய அலகுகள் செலுத்தும் சுழலியில், அலகுகளின் கோணங்கள் சீர் செய்யக் கூடியவையாக இருக்கும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படங்கள், பக்கத்தின் ஆரம்பத்தில் / கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகின்றன.----> நிலையான அலகுகள் ஓடியில், அலகுக் கோணம் 20–28° வரை இருக்கும். சீராக்கக் கூடிய அலகுகள் ஓடியில், அலகுக் கோணம் 6–35° வரை இருக்கும். பற்சக்கரத் தொடர் மூலம் மின்னோடி (motor) வழியாகவோ, கையினாலேயோ அலகுகளைச் சீர் படுத்தலாம். எண்ணெய் அழுத்தத்தால் இயக்கப் படும் அலகுகள், தற்போது முதன்மை பெறுவதால், இம்முறை கை விடப் பட்டது. இவற்றைக் கப்லான் சுழலி (kaplan turbine) என்றும் கூறுவர். படம் 2இல் கப்லான் சுழலியின் ஏற்ற வெட்டுத் தோற்றம் காட்டப் பட்டுள்ளது. முதன்மை அச்சுத் தண்டினுள் இருக்கும் எண்ணெயால் இயங்கக் கூடிய உந்து தண்டு மூலம் அலகுகள் சீராக்கப் படுகின்றன. இயங்கும் உந்து தண்டை ஓடியின் குடத்திலும் (hub) வைக்கலாம். உந்து தண்டிற்கு மேலும், கீழும் எண்ணெய் உட்செல்வதற்கும், வெளியேறுவதற்கும் எண்ணெய் வழங்கி (oil distributor) பயன் படுகிறது. இது மின்னாக்கியின் (generator) உச்சியிலோ, அச்சுத் தண்டைச் சுற்றி மின்னாக்கியின் கீழோ அமைந்திருக்கும். ஆளிகை எண்ணெய்–அழுத்த முறை (governor oil–pressure system) மூலம் எண்ணெய்க்கு அழுத்தம் வழங்கப் படும். எண்ணெயின் ஓட்டத்தை ஆளிகை கட்டுப் படுத்தும். கட்டுப் படுத்தியில் ஒரு நெம்புருள் (cam) இருக்கும். அலகின் நிலை, புழை வாயிலின் நுழைவிற்கேற்ப மாறக் கூடியதாக இருக்கும். —இரா.இந்து நூலோதி. Donald G. Fink, H. Wayne Beaty, Standard Handbook for Electrical Engineers, Eleventh Edition, McGraw-Hill Book Company, New York, 1978. செலுத்தும் பொருள் பொதுவாக ஏவூர்திப் பொறியில் பயன் படுத்தக் கூடிய எரி பொருளே செலுத்தும் பொருள் (propellent) எனப் படும். இது ஆற்றலுக்கு மூலப் பொருளாகவும் பயன் படு பொருளாகவும் உள்ளது. வேதிப் பொருள் மற்றும் பிற பொருள்களைக் கொண்டு, வான வெளியில் உந்து விசையால் ஏவூர்திப் பொறியைச் செலுத்துவதற்குப் பயன் படுவதால், இது செலுத்தும் பொருள் எனக் குறிப்பிடப் படுகிறது. இது நீர்ம வகை, திண்ம வகை எனப் பகுக்கப் படும். வளிம வடிவில் எரிக்கப் பட்டாலும், இட வசதிக்காக (விண் கலங்களில் இடங் கவர்தலைக் குறைக்க வேண்டும்) அழுத்தப் பட்ட நிலையில் எரி பொருள் கொண்டு செல்லப் படும். காட்டாக நீர்ம ஆக்சிஜன், நீர்ம ஹைட்ரஜன் முதலியவை குறிப்பிடத் தக்க உயர் ஆற்றலை அளிக்க வல்ல செலுத்தும் துணைப் பொருள் ஆகும். நீர்மச் செலுத்தும் பொருள் கனற்சிப் பகுதியிலிருந்து தனித்துத் தனிப் பெட்டகங்களில் எடுத்துச் செல்லப் படுகிறது. திண்மச் செலுத்தும் பொருள் கனற்சிப் பகுதியிலேயே எடுத்துச் செல்லப் படுகிறது. எடுத்துச் செல்ல இவ்விதம் பயன் படுவதால், பொறியின் வடிவம், உள்ளமைப்பு யாவும் நீர்மச் செலுத்தும் பொருள், திண்மச் செலுத்தும் பொருள் பயன்படும் பொறிகளுக்கு ஏற்றவாறு வேறுபடுகின்றன. நீர்மச் செலுத்தும் பொருள் வேதியியல் முறையில் எரிந்து ஆற்றலை வெளியிடுகிறது. இது மூன்று வகையாகப் பயன் படுகிறது. அவை: தனி, இரட்டை, கலந்த வகை என்பன, தனி வகை என்பது கலவையான அல்லது கரைசலான தனி எரி பொருளாகவும் இரட்டை வகை என்பது எரி பொருளும், ஆக்சிஜனேற்றியும் பொறியில் ஒன்றாகக் கலக்கப் பட்டுப் பயன் படும் பொருளாகவும் கருதப் படும். கலந்த வகைச் செலுத்தும் பொருள் என்பது நீர்ம மற்றும் திண்மச் செலுத்தும் பொருள்களைப் பயன்படுத்தும் முறையாகும். திண்மச் செலுத்தும் பொருள். இது ஆக்சிஜனேற்றம் செய்ய வல்ல குறைப்பான்களும் திண்ம நிலையிலேயே ஒரே வெப்ப நிலையில் நிலைத்திருக்கச் செய்ய உதவும் வகையாகும். எரிக்கும் போது, செலுத்தும் பொருள் நன்கு எரிந்து, சூடான வளிமத்தை வெளியிடும். வெடி மருந்துப் பொருள்கள், திண்மச் செலுத்தும் பொருள் வகையைச் சார்ந்தவை. இருப்பினும், திண்மச் செலுத்தும் பொருள் என்பது ஏவூர்திச் செலுத்துதலுக்குப் பயன் படும் எரி பொருளையே குறிக்கும். <!---- இப்பத்தியில் உள்ள சில பகுதிகள் அழிந்த நிலையில் இருந்தாலும், இப்பக்கத்தில் பிற இடங்களில் பயின்று வரும் சொற்களைக் கொண்டு அழிந்த வார்த்தைகளை ஊகிக்க முடிகிறது.உதாரணமாக பெர்குளோரேட் என்ற வார்த்தை. எனவேதான், Reconstruct குறியீடு பயன் படுத்தப் பட்டுள்ளது.----> எரி பொருள்கள். ஹைட்ரோகார்பன்கள் அல்லது அவற்றிலிருந்து உருவான வினைப்படு பொருள்கள் அதாவது, செயற்கை இழுவை, செயற்கை ரெசின், செல்லுலோஸ், செல்லுலோஸ் வினைப்படு பொருள்கள் முதலியன எரி பொருள்களாகப் பயன் படுகின்றன. சிறிய அளவில், பல்வேறு விதமான செயல்களுக்காக வினையூக்கிகளும் பயன் படுகின்றன. திண்மச் செலுத்தும் பொருளை இரு வகையாகப் பிரிக்கலாம். அவை: ஒற்றைக் கலந்த வகை அல்லது இரு வகைப் பரிமாண வகை என்பவை. ஒன்று கலந்த வ்கையில், ஆக்சிஜனேற்றம் செய்ய வல்ல செயற்கை இழுவையிலுள்ள அம்மோனியம் பெர்குளோரேட் போன்ற கனிம உப்பு அடங்கிய கரிம எரி பொருள் அடங்கும். இரு பரிமாண வகையே பொதுவாக உயர் வலிமை கொண்டிருக்கும். —வி. சண்முகசுந்தரம் நூலோதி. P. L. Ballaney, Theory of Machines, Fifteenth Edition, Khanna Publishers, New Delhi, 1987. செவ்வக ஆயங்கள் காண்க: கார்ட்டீசியன் ஆயங்கள் <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்த பக்கத்தில் ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> செவ்வகம் நான்கு கோணங்களும் செங்கோணங்களாக உடைய நாற்கரம் (quadrilateral) செவ்வகம் (rectangle) எனப் படும். இதே போல, ஓர் இணை கரத்தில் ஒரு கோணம் செங்கோணமானால், ஏனைய கோணங்களும் செங்கோணங்களாவதால், இணை கரம் செவ்வகமாகும். செவ்வகத்தின் எதிரெதிர் முனைகளை இணைக்கும் கோடு மூலை விட்டம் எனப்படும். செவ்வகத்தின் பக்கங்களின் அளவுகள் a, b ஆனால், மூலை விட்டத்தின் அளவு \sqrt {a^2 + b^2} ஆகும். செவ்வகத்தின் பரப்பு, இரு அடுத்தடுத்த பக்கங்களின் பெருக்கலுக்குச் சமமாகும். ஒரு செவ்வகத்தின் பக்கங்கள் சமமானால், அது சதுரமாகும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —பங்கஜம் கணேசன் செவ்வணுப் புரத ஆக்கம் முதுகெலும்புள்ள உயிரினங்களின் சிவப்புக் குருதி அணுக்களிலும், தசைகளிலும் காணப்படும் நிறமியை ஹீமோகுளோபின் எனலாம் (கிரேக்க மொழியில் ஹீம் என்றால் குருதி என்றும், குளோபின் என்றால் புரதம் என்றும் பொருள் படும்). ஹீமோகுளோபின் ஒரு கருமை நிறச் சிவப்புப் பொருளாகும். அதைப் படிக வடிவத்தில் பெறலாம். இது நீரில் கரையக் கூடியது. சாராயத்திலும், ஈதரிலும் கரையாதது; வெப்பத்தால் பாதிக்கப் படுவது; அதன் மூலக் கூறு எடை 68,000. இது ஒரு குரோமோ புரதமாகும். இதில், ஹீம் எனப் படும் குரோமோஜென், குளோபின் என்ற புரதத்துடன் இணைந்துள்ளது. பல்வேறு உயிரினங்களில் ஹீமோகுளோபினின் தன்மை மாறு படுகிறது. இது மூலக் கூறின் புரதத் தன்மையைப் பொறுத்துள்ளது. நுரையீரலில் உள்ள ஆக்சிஜனுடன் இணைந்து, ஆக்சிஹீமோகுளோபினாக மாறி, தமனிகள் வழியாகத் திசுக்களுக்குச் சென்று, ஆக்சிஜனை வழங்குகிறது. தசைகளில் மையோ ஹீமோகுளோபினாகக் காணப் படுகிறது. சிவப்பு நிறமியான ஹீம், பார்ஃபைரின், இரும்புச் சத்து ஆகியவற்றின் கூட்டால் உருவாகிறது. ஹீமோகுளோபின் ஆக்சிஜனை வழங்குவதுடன், திசுக்களிலிருந்து கார்பன் டைஆக்சைடு வளிமத்தை யும், கார்போனிக் அமிலத்தையும் நடுநிலையாக்குகிறது. குருதியின் மிக இன்றியமையாத பணிகளுக்கு, ஹீமோகுளோபினே காரணமாகிறது. —மு.கி.பழனியப்பன் நூலோதி. Jay H.Stein, Internal Medicine, First Edition, Little Brown and Co., Boston, 1983. செவ்வந்திக் கல் இது சிவப்புக் கலந்த இருண்ட நீல நிறத்தில் காணப் படுவதால், இப்பெயர் பெற்றது. செவ்வந்திக் கல் (amethyst) குவார்ட்ஸ் கனிமத்தின் ஒரு வகையாகும். ஆனால், குவார்ட்ஸ் போன்று நிறமற்றதாக இருக்காது. குவார்ட்சில் சிறிதளவு மாங்கனீஸ் மாசு படிந்தால், நிறம் செங்கரு நீலமாகி விடுகிறது என்பர். சூடு படுத்தினால், நிறமற்றதாகி விடும். இதன் நிறத்திற்குக் காரணம், இதில் மாங்கனீஸ் கலந்திருப்பது அன்று எனவும், இக்கனிமத்தின் அறுகோணத் தொகுதி அணு அமைப்பில் உள்ள மிகச் சிறிய அளவிலான மாறுபாடே எனவும் சர். சி.வி. இராமன் விளக்கியுள்ளார். இதன் வடிவம் பார்வைக்குக் குன்றிமணி போல இறுகியதாகக் காணப் படும். இதன் மிளிர்வு கண்ணாடி அல்லது மங்கிய மிளிர்வு வரை காணப் படலாம். ஏனைய கனிமப் பண்புகளில் இது குவார்ட்சை ஒத்திருக்கும். இதன் கடினத் தன்மை 7; ஒப்படர்த்தி 2.65. குறைசங்கு முறிவுடையது; கனிமப் பிளவற்றது. இதன் வேதி இயைபு சிலிக்கான் டைஆக்சைடு (SiO₂). செவ்வந்திக் கல் அறுகோணப் படிகத் தொகுதியில் அடங்கும். பொதுவாக இது மிகவும் முக்கியமான கனிமமாகக் கிரானைட், பெக்மடைட் பாறையில் உள்ளது என்பதை நிலவியல் வல்லுநர் தெளிவாகக் கண்டறிந்துள்ளனர். வாதுமைக் கொட்டை வடிவத் துளை நிரப்பிகளாகப் பசால்ட்டுப் பாறைகளிலும் காணப் படும். இது சோவியத் ஒன்றியத்திலும், பிரேசில், அரிசோனா ஆகிய இடங்களிலும், இந்தியாவில் தக்காண பீடபூமியிலும், கர்நாடக மாநிலத்தில் தார்வாரிலும், ஆந்திர மாநிலத்தில் நெல்லூர், கடப்பை ஆகிய மாவட்டங்களிலும் கிடைக்கிறது. மிக அருகிய அளவில், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலுள்ள பெக்மடைட்டுப் பாறைகளில் கிடைக்கிறது. இது அணிமணிகள் செய்யும் அருங்கல்லாகப் பெரிதும் பயன்படுகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —ந. சந்திரசேகர் நூலோதி. A.N. Winchell and H. Winchell, Elements of Optical Mineralogy, Wiley Eastern private Ltd., New Delhi, 1968. செவ்வாய் <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இது புவிக்கு முதல் புறக் கோள், புவியை விடச் சிறிய கோள். இதன் நிறை, புவியின் நிறையில் 1/10 பங்கு ஆகும். செவ்வாய், வெள்ளிக் கோள்கள் போலல்லாமல், மெல்லிய வளி மண்டலமுடையது. இக்கோளில் உயிரினம் இருப்பதற்கான அறிகுறிகள், இதன் ஆய்விற்கான ஆர்வமாக அமையும். ஏனைய உட்கோளை விட அடர்த்தி குறைவானது; ஆனால், சந்திரனை விட அடர்த்தி மிகுந்தது. இதன் விட்டம் புதன் கோளின் விட்டத்தை விட 3800 கி.மீ. மிகுதி. என்றாலும், இதன் பரப்பின் ஈர்ப்பு, புதனின் பரப்பு ஈர்ப்புக்கு ஏறக் குறைய சமம். சூரியன்–செவ்வாய் தொலைவு 1.54 வானியல் அலகு, செவ்வாயின் நடு வரை விட்டம் 6794 கி.மீ. இதன் அச்சுச் சுழற்சிக் காலம் 24 மணி 37 நிமிடம் 23 நொடி. அதன் சுற்றுப் பாதையுடன் (இயங்கு வழியுடன்) கொண்ட சாய்வுக் கோணம் 24°46' (அட்டவணை 1). <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> ஏவூர்திகள், செயற்கைக் கோள்கள் அளித்த விவரங்கள் மூலம் செவ்வாயின் மையப் பகுதி சிறியது என்றும், ஏனைய கோளை விட அடர்த்தி குறைந்தது என்றும், அதில் இரும்பு–கந்தகப் பொருளே (FeS) மிகுதியாக உள்ளது என்றும் தெரிகிறது. இதன் மூலம், சோவியத் நாட்டின் செவ்வாய் ஆய்வுப் படியும், வைக்கிங் விண்வெளிக் கப்பல்களின் ஆய்வுப் படியும், செவ்வாய் வலிமை குன்றிய காந்தப் புலன் உடையது என அறியப் பட்டது. அதன் பின் தொடர்ந்த அமெரிக்காலின் மூன்று மெரினர் கப்பல்களின் ஆய்வு இது பற்றி குறிப்பிடத் தக்க விவரம் கொடுக்கவில்லை. எரிமலை வாய்கள். விண் கப்பல்கள் மெரினர் 4, 7 இரண்டும், செவ்வாயின் பரப்பு பள்ளமாகவும், படு குழியாகவும் இருப்பதைத் தெரிவித்தன. ஆனால், மெரினர் 9தான் சரியான பரப்பைப் பற்றியும், அதில் பரவியுள்ள எரிமலைவாய்களைப் பற்றியும், ஏனைய தகவல்களையும் விளக்கியது. 1971ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட மெரினர்–9, நவம்பர் 11. 1971 அன்று செவ்வாய்க்கு 1200 கி.மீ. அருகில் சென்று 11 மாதங்கள் அதைச் சுற்றி வலம் வந்து கொண்டே, 7329 படங்களை அனுப்பி வைத்தது. அவை கோளின் பரப்பு, வளி மண்டலம், துணைக் கோள்கள், வாய்க்கால்கள் ஆகியவற்றைப் பற்றியும், கோள்களின் படிமலர்ச்சி பற்றிய வியத்தகு தகவல்களையும் அறியப் பயன் பட்டன. ஒலிம்பஸ் எரிமலை வாய் 640 கி.மீ. விட்டம் கொண்டு காணப் பட்டது. இமய மலையை விட, 21 மடங்கு உயரமுடைய விளிம்புகளையும் (26 கி.மீ.), 480–2240 கி.மீ. அகலத்தையும் கொண்டிருந்தது. பல கி.மீ. ஆழமுள்ள எரிமலை வாய்கள் காணப் பட்டன. 160–1600 கி.மீ. நீளமுள்ள வளைந்த வாய்க்கால்கள் நெடுநாள் நிலைத்தவையாகக் காணப் பட்டன. 1976ஆம் ஆண்டு செவ்வாயின் மீது இறக்கப்பட்ட வைக்கிங் விண்வெளிக் கப்பல் செவ்வாயின் பரப்பு மணல், உள் அடுக்கு (உள் கூடு) ஆகியவற்றைத் தோண்டி எடுத்து, அங்கு நுண்ணுயிரிகள் இருக்கக் கூடுமா என்று ஆய்வு செய்ததில், தெளிவான கருத்துக் கிடைக்கவில்லை. பரப்பில் குறுகிய பள்ளத்தாக்குகளும், ஆற்றுக் குடைவும், நெடுந்தொலைவு செல்லும் வாய்க்கால்களும் இருக்கக் கூடுமோ என்ற ஐயப்பாடு எழுந்தது. சோலியத் செவ்வாய்–5 நுண்ணாய்வி தெளிவான படங்களுடன் திரும்பியது. பின்னர் சென்ற வைக்கிங் சுற்றிகள், புதிதாக மிக வியப்பான உண்மையை உணர்த்தின. இதன் பரப்பு தோராயமான இரு பாதிக் கோளங்களாகப் பிரிக்கப் பட்டு, இடைப் பட்ட வரம்பு சீரான 1–2 கி.மீ. உயரமுள்ள சரிவு மேட்டினால் (மேட்டுச் சரிவு) பிரிக்கப் பட்டு, அழகான மரச் சித்திர வேலைப்பாடு அமைந்த தரையெனக் காட்சி தரு- கிறது. உயர்ந்த நிலங்கள் அரிக்கப் பட்டுச் சிதறிக் காணப் படுகின்றன. தென் பாதிக் கோளம் உயர்ந்தும், கனத்தும், பழமையாகவும், எரிமலை வாய்கள் நிறைந்ததாகவும், காணப் படுகிறது. வட பாதிக் கோளம் தாழ்ந்த நிலப் பரப்புடன், குறிப்பிடத் தக்க ஏதுமில்லாத சமவெளியாகக் காட்சி தருகிறது. புதிய எரிமலை வாய்கள் எங்கும் பரவி, இந்நிலப் பகுதி காணப்படும். எரிமலைச் சிதறல்கள் நிறைந்த தோற்றம் தரும். இப்பகுதி எரிமலை வாய்கள் பெருமமாக 10 கி.மீ. விட்டம் கொண்டுள்ளன. ஆனால், தென் பகுதியில் பல வளையங்களையுடைய 4 கி.மீ. ஆழம், 2000 கி.மீ. குறுக்களவு உடைய ஹெல்லாஸ் (hellas) தென் படுகிறது. அதன் மத்திய உச்சிச் சிகரம், சிகர வளையம் ஆகியன புதன் கோளின் பரப்பில் உள்ளனவற்றுடன் ஒத்துள்ளன. எரிமலைத் தன்மை. வளைந்த மலைத் தொடர்களின் பரப்பில் எலிசியம், ஹெல்லாஸ் ஆகிய எரிமலைப் பகுதிகள் உள்ளன. இவற்றுள், தார்லிஸ் எரிமலைப் பகுதியில் விரிந்த எரிமலை நிலப் பரப்பு வாய்ந்த 4 பெரிய எரிமலைகள் என எண்ணப் பட்டதும், சிறப்பாகக் கருதக் கூடியதும், மிகப் பெரியதுமான ஒலிம்பஸ் மான்ஸ் (Olympus mons) உள்ளது. இது வெள்ளிக் கோளில் உள்ள பெரிய எரிமலை பீட்டாவைப் போல் இரு மடங்கு உயரமும், புவியின் மிகப் பெரிய எரிமலையை விடப் பெரியதுமாகும். மைய எரிமலை முகப்பு (central caldera) எரிமலை எச்சங்களின் அதிக வெளிப்பாடு இருந்ததை உணர்த்துமாறு அதன் விளிம்பு அமைந்திருக்கிறது. ஏனைய மூன்று எரிமலைகள் 400 கி.மீ. விட்டமும், 19 கி.மீ. உயரமும் உடையன. இதன் வடக்குப் பகுதியில், ஆல்பா பாட்டிரா (alba patera) என்ற சீரற்ற அமைப்பு 1600 கிமீ. விட்டமுடைய எரிமலைத் தோற்றமாகக் காட்சியளிக்கிறது. இக்கோளின் மீப்பெரு எரிமலையாகத் தோற்றம் அளிக்கும் ஆல்பா பாட்டிரா செவ்வாய் தோன்றியது தொடங்கி, இது நாள் வரை எரிமலை குமுறல் செய்த வண்ணம் செயற்பாடு பெற்றுள்ளது. பிளவு வெடிப்பு, நீண்ட தொட்டி, பள்ளத்தாக்குகள். தார்சிஸ் எரிமலை. 5000 கி.மீ. குறுக்களவு உடையதாகவும், ஏறக் குறைய 7 கி.மீ. அளவுக்கு மிகப் பெரிய உயர்த்தப் பட்ட பகுதியாகவும் புடைத்து (bulge) அமைந்து இருக்காது. தொகுப்பு செவ்வாய் மையம் குளிர்ந்ததும், விரிவடைந்ததால், இவ்வாறு புடைத்து இருக்கலாம் எனக் கருதப் படுகிறது. இதன் வடக்குப் பகுதியில் நீண்ட தொட்டி போன்ற அமைப்புகள் பல ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுடையவையாக உள்ளன. கிழக்குப் பகுதியில் உள்ள வாலிஸ் மாரினரிஸ் (vailis marineris) ஆற்றுக் குடைவு (canyons) அமைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தன. பல கிலோ மீட்டர் ஆழத்துடன் 4000 கி.மீ. நீளமுடையதாகக் கோளுக்குக் குறுக்கே நடுவரைக்கு இணையாகச் சென்று, கிழக்குப் பகுதியில் காணப்படும் வடக்குத் தெற்காக அமைந்த கிரைஸ், நீண்ட தொட்டியுடன் இணைகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> துணைக் கோள்கள். மெரினர், வைக்கிங் சுற்றிகள் வெளியிட்ட விவரங்களினால், துணைக் கோள்களின் சுழற்சிக் காலம், கோளுக்கு இடைப்பட்ட தொலைவு ஆகியவற்றைப் பற்றி அறிய முடிந்தது. 1877ஆம் ஆண்டில் செவ்வாயின் இரு துணைக் கோள்களான ஃபோபாஸ் (phobos). டெய்மாஸ் (deimos) இரண்டையும் கண்டு பிடித்தனர். ஃபோபாஸ், செவ்வாய்க்கு அண்மையில் 9350 கி.மீ. தொலைவில் செவ்வாய்ச் சுற்றுக்கு நேர் திசையில் இயங்கி வருகிறது. அதனால், அது மேற்கில் தோன்றிக் கிழக்கில் மறைவது போல் தோன்றுகிறது. டெய்மாஸ் செவ்வாய்க்கு 23940 கி.மீ. தொலைவில் வலம் வருகிறது. ஃபோபாஸ் தன் தாய்க் கோளைச் சுற்றி வர 7 மணி 39 நிமிடம் எடுத்துக் கொள்ளும். எனவே, ஃபோபாஸ் ஒரு நாளில் இரு முறை தோன்றுகிறது. செவ்வாயின் வளி மண்டல அழுத்தம் 7.4 X 10-3 வளி மண்டலங்கள். அதன் சராசரி வெப்ப நிலை 230K (43°C). கோடையில் இது 269K (-4°C) ஆகவும், குளிர் காலத்தில் 150K (-123°C) ஆகவும் இருக்கும். புளியில் உள்ளது போல், செவ்வாய்க்கு இரு துருவப் பகுதிகள் உண்டு. அங்கு உறை பனி வெண்மையாக மூடியிருப்பது போலவும், கோடையில் அளவு குறைந்தும், குளிர் காலத்தில் மிகுதியாகவும், தொப்பிகள் போன்று காட்சியளிக்கின்றன. தற்போது, உயிரினம் செவ்வாயில் வாழவில்லையென வானியலார் பலர் அறுதியிட்டுக் கூறினாலும், அங்கு உயிரினம் வாழக் கூடிய சூழ்நிலை இருக்கலாம் என்ற ஐயம் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. —கே. இராஜேந்திரன் நூலோதி. James S. Pickering, Captires of the Sun, Sterling Publishing Pvt. Ltd., New Delhi, 1967. செவ்வாலி இது 15 செ.மீ நீளமுள்ள செம்பழுப்பு நிறப் பறவை. ஊர்க் குருவியளவே இருக்கும் இது அடிக்கடி தன் சிவப்பு வாலை உதறியபடியே இருக்கும். பறக்கும் போது, முன் பகுதியைக் கீழே தாழ்த்தி, வாலை உதறிக் கொண்டேயிருக்கும். ஆண் பறவையின் தலை, முன்னுடல் ஆகியவை கருமை நிறத்திலும், வயிறு, பின்னுடல் வால் ஆகியவை கிச்சிலிச் செம்பழுப்பாகவும் இருக்கும். பெண் பறவையின் தலை, முன்னுடல் பழுப்பு நிறமாகவும், வயிறு, பின்னுடல் கிச்சிலி நிறத்துடனும் இருக்கும். அலகும், கால்களும், கருநிறமும், விழித் திரை கரும் பழுப்பு நிறமும் பெற்றவை. செவ்வாலி, குளிர் பருவத்தில் இமய மலைக்கு வடக்கிலிருந்து, தெற்கே வலசை வரும். 6500 மீ. உயரத்திலும், இவை தென்பட்டுள்ளன. செப்டெம்பர்–ஏப்ரல் மாதங்களில் சமவெளிகளில்–வயல்களிலும், தோட்டங்களிலும் காணலாம். வாலை உதறிக் கொண்டு, “விட்… விட்… விட்” என்று ஒலித்துக் கொண்டே பறக்கும். இவை பெரும்பாலும் பூச்சியுண்ணிகள். சிறு வண்டு, பூச்சிகளின் இளவுயிரி முதலியவற்றை விரும்பியுண்கின்றன. காஷ்மீர், நேப்பாளம், திபெத் ஆகியவற்றிற்கும் அப்பாலுள்ள பாரசீகம் முதல் மங்கோலியா பகுதிகளில் மே–ஆகஸ்ட் வரையில் கூடு கட்டி வாழ்ந்து, முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். கூடு, பொதுவாகப் புல், பாசி, இலை, மயிர், இறகு ஆகியவற்றைக் கொண்டு கிண்ணம் போல் கட்டப் பட்டிருக்கும். ஒரு முறையில் 4–6 முட்டையிடும். முட்டை வெண்மையாகவோ, நீலப் பச்சையாகவோ இருக்கும். தென்னாட்டுக்கு வலசை வரும் செவ்வாலி ஃபீனீக்கியூரஸ் அக்ரூரஸ் ஆகும். —க. ரத்னம் செவி கடினமாதல் எலும்பு உறை இறுக்கம், அங்கவடியின் தகட்டில் பரவுவதால், அதன் அசையும் தன்மை குறைந்து இறுகி விடும். இதனால், ஒலி கடத்தல் செவிடும், காதில் இரைச்சலும் உண்டாகும். இரு செவியும் பாதிக்கப் படலாம். சில சமயம் ஒரு காது செவிடாக இருக்கலாம். இளம் வயதிலும் குறிப்பாக 15–25 வயது பெண்களிடம் நோயின் அறிகுறிகள் தோன்றுகின்றன. ஒவ்வொரு மகப் பேற்றிற்குப் பிறகும் கேட்கும் திறன் குறைகிறது. நெருங்கிய உறவினர்களுள் திருமணம் செய்து கொள்பவரின் குழந்தைகளுக்கு இது பரம்பரையாக வருகிறது. நோய் உடலில் இருந்தாலும், பருவ வயதில்தான் கேட்கும் திறன் குறைவது தெரியும். அங்கவடி எலும்பின் அடித் தகட்டின் முன் பகுதியில் பெருமளவிலும், பின் பகுதியில் சில சமயங்களிலும், மாற்றங்கள் ஏற்படுகின்றன. அங்குள்ள கடினமான எலும்பும், எலும்பு மஜ்ஜையும், பஞ்சு போன்ற எலும்புத் திசுவாக மாறும். இம்மாற்றம் முட்டை வடிவச் சாளரம் (oval window), நடுச் செவியின் உட்புறப் புடைப்பு, காக்ளியாவின் உச்சி ஆகிய இடங்களில் தோன்றினாலும், முக்கியமாக, அங்கவடி எலும்பின் முன் பகுதியில் பரவுகிறது. எலும்பு இறுக்கமடைந்து, முட்டை வடிவச் சாளரம் மூடப் படுகிறது. இதனால், அங்கவடியின் முன் விளிம்பு, ஒலி அசைவினால், உள்ளே சென்று திரும்பும் அசைவு பாதிக்கப் பட்டு, முடிவில் முற்றிலும் அசைவற்று விடுகிறது. செவிட்டுத் தன்மை அதிகரிப்பதுடன், அதிகமான காது இரைச்சலும் தோன்றும். இது முற்றிலும் ஒலி கடத்தல் செவிடேயாகும். நாளடைவில், காக்ளியா பாதிக்கப் பட்டால், நரம்பு வகைச் செவிடும் சேர்ந்து விடும். தொடக்கத்தில் கீழ் ஒலி பாதிக்கப்படும். தொடர் வண்டி நிலையம், பேருந்து நிலையம், சந்தை ஆகிய இடங்களில் உள்ள இரைச்சல் கீழ் ஒலியாகும். இச்சூழ்நிலையில், நோயாளி எதிரே நிற்பவர் பேச்சைக் கேட்கிறார். இரைச்சல் கேட்காமையால். இரைச்சலால் பாதிக்கப்பட்டவர் குரலை உயர்த்திப் பேசுகிறார். செவிடாக இருந்தும், கேட்கும் திறனுக்கு முரண்பாடாக நன்கு கேட்கும் திறன் (paracusis of willis) என்று பெயர். ஆய்வில் செவிப் பறையும், தொண்டை நடுச் செவிக் குழாயும் நல்ல நிலையில் உள்ளமை தெரியும். ஒலிக் கட்டு ஆய்வில் ஒலி, கபாலம் வழியாக நன்கு கடத்தப் படுவதை அறியலாம். செவித் திறன் ஆய்வுக் கருவி (audio meter) மூலம் ஆய்வு செய்யும் போது, ஒலி கடத்தல் திறன் குறைந்திருப்பதும் தெரியும். நரம்புத் திறன் நன்றாக இருக்கும். நோயாளிக்கு விரைவில் மனத் தளர்ச்சியும், தாழ்வு மனப்பான்மையும் தோன்றுவதால், அவர் மிகவும் மென்மையாகப் பேசுவார். மருத்துவம். நோயின் காரணம் தெரியாத நிலையில், எந்த வித மருந்தும் பயன் தருவதில்லை. ஃபுளூரைடை நீண்ட காலம் உண்டு வந்தால், எலும்பு இறுகுவதை ஓரளவு தவிர்க்கலாம். —டி.எம். பரமேஸ்வரன் செவிட்டுக் குழந்தை பிறவிக் கோளாறுகளால் குழந்தைக்குக் காது செவிடாகலாம். பெற்றோர் செவிடாக இருந்தால், குழந்தையும் செவிடாக வாய்ப்புண்டு. முதல் மூன்று மாதச் சூல் காலத்தில், தாய்க்கு அம்மை, மணல் வாரி நோய் வந்தால், அவற்றின் நச்சுத் தன்மையாலும், நச்சுத் தன்மையுள்ள மருந்துகளைச் சாப்பிடுவதாலும், சிசுவின் உள் செவி குன்றி விடும். குழந்தை பிறந்ததும், நன்கு அழுது சுவாசிக்காவிடில், (asphyxia) மூளைக்கு ஆக்சிஜன் இல்லாமல், கை, கால் நரம்புகளின் கேட்கும் திறன் குன்றி விடும், மேலும், குருதிக் கோளாறுடன் மஞ்சள் காமாலை, பிறவிக் கிரந்தி, இரண்டு வயதிற்கு மேல், தொண்டை அடைப்பான், பொன்னுக்கு வீங்கி, மூளை வெளி உறை சுழற்சி (meningitis) ஆகிய நோய்களும், செவி நரம்பைப் பாதிக்கலாம். காது கேட்டால்தான் பேச்சு வரும். கேட்பதை மீண்டும் சொல்லப் பழகுவதால், குழந்தைக்குப் பேச்சு வருகிறது. அதனால், காது கேட்காத குழந்தை ஊமையாகி விடும். இதைச் செவிட்டூமை என்பர். மருத்துவம். கருவிலிருக்கும் சிசுவிற்கும், பிறந்த குழந்தைக்கும், வளரும் குழந்தைக்கும், நோய் வாராமல் தவிர்ப்பதே நல்லது. செவிட்டூமைக் குழந்தை 10 மாதம் அல்லது 1 வயதிற்குள் அப்பா, அம்மா என்று சில சொற்களாவது பேச வேண்டும். அதற்கு முன்பே 2–3 மாதங்களில், குரல் வரும் திசையில் கண்களைத் திருப்பிப் பார்க்க வேண்டும். இல்லாவிடில், காது கேட்கும் திறனை ஆய்வு செய்ய வேண்டும். செவித் திறனை, ஆய்வுக் கருவி மூலம் கணிக்க வேண்டும். பிறவியிலே செவிடாக இருந்தாலும், சிறிது கேட்கும் திறன் இருப்பதைக் காணலாம். இந்த மிஞ்சிய திறனைக் கேட்கும் கருவியைப் பயன் படுத்திப் பழக்கலாம். இதனால், குழந்தை ஊமையாக மாறி விடாமல், சிறிதளவேனும் பேசக் கற்றுக் கொள்ளும். வளர்ந்த பிறகு, காது கேளாத குழந்தைகளுக்கான தனிப் பள்ளியில் பயிற்சியளிக்க வேண்டும். அங்கு, கேட்கும் கருவியுடன், உதட்டசைவு, வாய் அசைவு, பார்வை இவற்றின் மூலம் பேசவும் படிக்கவும் பழக்கலாம். —டி.எம். பரமேஸ்வரன் செவிட்டுத் தன்மை கேட்கும் திறன் குறைதல் அல்லது முழுதுமாகக் காது கேளாதிருத்தல் செவிட்டுத் தன்மை எனப் படும். 8ஆம் சுபால நரம்பு பாதிக்கப்படும் போதும், சாலிசிலேட், குயினின் போன்ற மருந்துகள் உட்கொள்ளும் போதும், புறச் செவிக் கால்வாய், செவிப் பறை ஆகியன பாதிக்கப்படும் போதும், செவிட்டுத் தன்மை உண்டாகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> ஆய்வின் போது, ஒரு காதை மூடிக் கொண்டு, மற்றக் காதினருகே கைக்கடிகாரத்தையோ, இசைக் கவையையோ (tuning fork) வைக்கலாம். இசைக் கவை தவிர, மின்னாற்றல் கொண்ட கேள் அளவி அல்லது கேள் திறன் வரைபடத்தைக் (audiogram) கையாளலாம். செவிட்டுத் தன்மை இரண்டு வகைப் படுகிறது. நரம்பு நோய். இதில் காதின் சுருள் வளையமோ, (cochlea) 8 ஆம் கபால நரம்பிழைகளோ பாதிக்கப் படும். கடத்தல் திறன் குறைவு (conduction defect). நடுச் செவி எலும்புகள் நெகிழ் தன்மையிழந்து கடினமடைதல், நடுக் காது சீழ் நிலை, புறச் செவிக் கால்வாய் அடைபடுதல், நடுச் செவிக் குழல் பாதிக்கப் படல் ஆகியவற்றில் இந்நிலை ஏற்படுகிறது. இவற்றை அறுதியிடப் பல வகையான திறன் கொண்ட இசைக் கவைகளைப் பயன்படுத்தலாம். இரண்டு முக்கியமான ஆய்வுகள் செய்யப் பட்டுச் செவிட்டுத் தன்மையின் காரணம் அறுதியிடப் படுகிறது. வீபர்ன் ஆய்வு. நோயாளியின் நெற்றி மையத்தில் அதிர்வுடன் கூடிய இசைக் கவையை வைத்தால், நடுச் செவி பாதிப்பில் தாக்கமுற்ற காதில் ஒலி கேட்கும். நரம்புத் தொடர்பான செவிட்டு நிலையில் நன்கு கேட்கும். ரின்னி ஆய்வு. இசைக் கவை, மாஸ்டாய்டு துருத்தியின் மீது வைக்கப் படுகிறது. மற்றக் காது, விரலால் மூடப் படுகிறது. அதிர்வு நின்றவுடன், இசைக் கவை புறச் செவித் துளையின் அருகே வைக்கப் படுகிறது. நடுச் செவியின் செவிட்டுத் தன்மையில், இசைக் கவையின் ஒலி கேளாது. நரம்புத் தொடர்பான செலிட்டுத் தன்மையில், மேற்கூறியதற்கு எதிர் மாறாகக் கேட்கும். நடுச் செவிச் சீழ் நிலை, நடுச் செவி எலும்புகளின் கடினமடைந்த நிலை, செவிப் பறை கிழிந்து விடல் போன்றவையே செலிட்டுத் தன்மையின் பொதுவான காரணங்களாகும். நரம்புச் சார்ந்த செவிட்டுத் தன்மைக்குப் பிறவி ஊனம், மூளை உறை அழற்சி. மூளையில் தோன்றும் புற்றுக் கட்டிகள், மேக நோய், மருந்துகள், அறுவை ஆகியன காரணமாகலாம். —மு. ப. கிருஷ்ணன் செவித் திறன் குறைதல் அறுபது வயதை அடையும் போது, ஆண் பெண் இரு பாலாருக்கும் இரு செவிகளிலும் கேட்கும் திறன் குறைவது இயல்பு. இது பரம்பரையாகவும் வரலாம். முதியோர் மிகு ஓசையால் பாதிக்கப் பட்டு, விரைவில் செவிடாகி விடுவர். உள் செவிக்குக் குருதி ஓட்டம் குறைவதால், காக்ளியாவின் அடிச் சுருள் திசு, மயிர்க் கால் நரம்பு முனை ஆகியவை நசிந்து விடுகின்றன. அடிப்படைச் சவ்வும் விறைப்புக் குறைந்து விடுகிறது. இதனால், மின்னழுத்தம் மாறு படுகிறது. நரம்புச் செவிட்டு நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர் அதிர்வுகள் பாதிக்கப் படுவதால், மணி ஓசை, பறவைகளின் ஒலி, கைக்கடிகார ஒலி ஆகியவை கேளா. செவிடு மிகுந்து கொண்டே போவதால், தொழில் செய்வதிலும், பிறரோடு பழகுவதிலும் துன்பம் இருக்கும். இவர்களுடன் மென்மையாக, மெதுவாகப் பேச வேண்டும். உரக்கப் பேசினால், அவர்களுக்குச் சரியாகக் கேட்காததுடன், பேசுபவர்களிடம் வெறுப்பும் வளரும். —டி. எம். பரமேஸ்வரன் செவித் திறன் நச்சு கொய்னா, சாலிசிலேட் போன்ற மருந்துகள் செவிக்கு நஞ்சாகலாம். இவற்றை உடனே நிறுத்தி விட்டால், தொடக்க காலச் செவிடு குணமாகும். இன்று உயிர் காக்கும் பல மருந்துகளும், ஊசி மருந்துகளும் கேட்கும் திறனையும், சமன் நிலையையும், நச்சுத் தன்மையால் பாதிக்கின்றன. இவற்றால், நிலையாகக் கடும் விளைவு தோன்றலாம். மிகு அளவான ஸ்ட்ரெப்டோமைசின் மருந்து கேட்கும் திறனைக் குறைக்கிறது. நியோமைசின், கானாமைசின், ஜென்டாமைசின், வேனோமைசின் ஆகியவை காதையும், சிறுநீரகத்தையும் தாக்குகின்றன. சிறுநீர் பிரிய வைக்கும் மருந்து, புற்று நோய் ஊசி மருந்து, சில பூச்சி மருந்து ஆகியவையும் காது நரம்பிற்கு நச்சாகின்றன. சில சமயம், காதில் ஊற்றும் மருந்து, செவிப் பறைத் துளை வழியாக நடுச் செவிக்குச் சென்று, குருதியில் உறிஞ்சப் படுவதால், நச்சுத் தன்மை கொடுக்கும் மருந்துகளை நெடுங்காலம் பயன் படுத்தக் கூடாது. —டி. எம். பரமேஸ்வரன் செவி நரம்பு ஒலியை ஏற்று, மூளைக்குச் செலுத்தும் நத்தை எலும்புப் பிரிவும், சம நிலை உணர்வை இடைகழியிவிருந்து (vestibule) செலுத்தும் இடைகழிப் பிரிவும் இணைந்த உணர்வு நரம்பு, எட்டாம் கபால நரம்பாகும். இது செவி எலும்பின் உள் செவித் துளை வழியாக வெளியே வந்து, மூளைத் தண்டின் உள்ளே செல்கிறது. நத்தை எலும்பு நடுவே சுருள் முடிச்சு (spiral ganglion) உள்ளது. இதில் உள்ள இரு துருவ நரம்புச் செல்களின் உள் துருவப் பகுதி கேட்கும் நரம்பாகிறது. வெளித் துருவப் பகுதி, உள் வெளி மயிர்க் கால் செல்களை அடைகிறது. பிற நரம்பு, நார்கள் சுழன்று, அடிப்படைச் சல்வின் உட்பகுதியை அடைகின்றன. நரம்பின் வெளி நரம்பு நார் ஒவ்வொன்றிலும், நான்கு மயிர்க் கால்கள் வீதம், ஒரு காதில் 30,000 மயிர்க் கால்கள் உள்ளன. எத்தனை மயிர்க் கால்கள் உள்ளனவோ, அத்தனை நரம்பு நார்களும் இருக்கும். ஒரு மயிர்க் காலுடன், பல நரம்பு நார்களும், ஒரு நரம்பு நார் பல மயிர்க் கால்களுடனும் இணைந்திருக்கும். மூளைத் தண்டின் உள்ளே புகுந்ததும், நார்கள் இணைப்புகளாகப் பிரிந்து, மேல், கீழ் நத்தை எலும்பு நியூக்ளியஸ்களில் முடிகின்றன. இங்கிருந்து, மிகு அளவில் நார்கள் குறுக்கே சென்று, எதிர்ப் பக்க நார்களுடன் பிணைந்து விடுகின்றன. பின்னர், நார்கள் மூளையின் கேட்கும் பகுதியான மேல் பொட்டுப் (temporal) புடைப்பில் சேர்கின்றன. சம நிலை உணர்த்தும் இடைகழிப் பிரிவிலும் இரு துருவச் செல்கள் உள்ளன. இடைகழி முடிச்சில் உள் செவித் துளைகள் உள்ளன. முடிச்சின் மேல் பகுதியிலிருந்து நரம்பு நார்கள், மேல் இடைகழி நரம்பு, யுட்ரிக்கிள், மேல் கிடை மட்ட அரை வட்டக் குழல்களுக்குச் செல்கின்றன. முடிச்சின் கீழ்ப் பகுதியிலிருந்து இடைகழி நரம்பு வழியாக நார்கள் சில அரை வட்டக் குழல்களுக்குச் செல்கின்றன. இவை வெளி, மேல், உள் நியூக்ளியஸ்களில் முடிகின்றன. —டி. எம். பரமேஸ்வரன் செவிப் பறைக் கிழிவு செவிப் பறை பல்வேறு வகைகளில் கிழிபடலாம். கொண்டை ஊசி, குச்சி, பென்சில் இவற்றால் காது குடையும் போது, செவிப் பறை கிழிந்து, துளை ஏற்படலாம். காதில் பலமாக அறையும் போதும், கடலில் முத்துக் குளிக்கும் போதும், விமானத்தை விரைவாகக் கீழே இறக்கும் போதும், நீரில் குதித்து மூழ்கும் போதும், அதிகக் காற்றழுத்தத்தால் செவிப் பறை கிழியக் கூடும். பலமான வேட்டுச் சத்தத்தாலும் செவிப் பறை கிழிய வாய்ப்புண்டு. தடுமன் இருக்கும் போது, தவறான முறையில் இரண்டு மூக்குப் பாதையையும் அடைத்துக் கொண்டு சிந்துவதால், நடுச் செவி அழுத்தம் கூடிச் செவிப் பறை கிழியும். தாங்க முடியாத வலி, குத்தல், இரைச்சல் தலைச் சுற்றலுடன், காதும் கேட்காமல் குருதி வடியலாம், வலியையும், மூக்கடைப்பையும் குறைக்க மருந்து தேவை. காதில் தூய பஞ்சு வைத்து மூட வேண்டும். நடுச் செவிப்பாதிப்பைத் தவிர்க்க, காதில் எண்ணெய், நீர் விடக் கூடாது. சொட்டு மருந்திடவும் கூடாது. —டி. எம். பரமேஸ்வரன் செவிப் பறை தடித்தல் செவிப் பறை இயல்பாக முத்துப் போன்ற நிறத்தில் இருக்கும். அதிலுள்ள நார்த் திசுக்களில் கால்சியம் உப்புச் சேர்ந்து கொள்வதால், ஒரு விதப் பனிப் படலம் வெண்மையாக உறைந்து விடுகிறது. நடுச் செவி மித அழற்சியால் அங்குச் செல்கள் உறைந்து விடுகின்றன. இதனால், சிற்றெலும்புகளின் தொடர் நிகழ்ச்சி பாதிக்கப்பட்டுச் செவிட்டுத் தன்மை தோன்றினால், அறுவை செய்து செவிப் பறையின் உள் பகுதி வழியாக இந்தத் திசுக்களை அகற்றி விடலாம். —டி.எம்.பரமேஸ்வரன் செவிப் பறை மாற்று இது செவிப் பறையில் துளை விழுந்து, நடுச் செவிச் சிற்றெலும்பு சிதைந்து செவிடு ஏற்பட்டால், அக்குறைகளை நீக்கி, ஒலி கடத்தலை ஒழுங்கு செய்யத் தோல், சிரைத் தசைப் போர்வை அல்லது வேறு பொருளைப் பயன் படுத்தும் அறுவை முறையாகும். சில சமயம் இறந்தவர்களின் ஒட்டுறுப்பு, செவிப் பறை, சிற்றெலும்புக் கோவையை முழுதுமாக எடுத்துப் பதிப்பதும் உண்டு. செவிப் பறை, சிற்றெலும்புகள் முழுமையாக அல்லது பகுதியாக நோயால் சிதைந்திருந்தாலோ, அறுவையால் பாதிக்கப் பட்டிருந்தாலோ, மாற்று மருத்துவம் தேவைப் படுகிறது. தொண்டை நடுச் செவிக் குழாய்கள் செயல் படாமலிருப்பதுடன், நரம்புச் செவிடும் சேர்ந்துள்ள நிலையில் மாற்று அறுவை கூடாது. மாற்று உறுப்பான தோல் அழிந்து விடுவது, ஒட்டுறுப்பு நகர்ந்து விடுவது, கேட்கும் திறன் மேலும் சீரழிவது, அழற்சி உண்டாவது, ஒவ்வாமை, தடுமன் இருப்பது ஆகியவற்றில் ஒட்டுச் சவ்வு நிலைத்து நில்லாது. எனவே, நான்கு வகை மாற்று அறுவை தேவைக்கேற்பச் செய்யப் படும். அறுவை முறை 1. செவிப் பறையின் நடுப் பகுதியில் துளையிருந்தால், நடுச் செவியை ஆய்ந்து, தூய்மை செய்து, செவிப் பறைத் துளையைச் சுற்றியுள்ள வெளிச் செல்களைச் சுரண்டி, பின்னர், கையின் மேல் பகுதியிலிருந்து எடுக்கப் பட்ட ஒரு துண்டுச் சிரையை வெட்டி, அதன் உள்பகுதி வெளியே தெரியுமாறு வைக்கலாம் அல்லது, காதின் பின் பகுதியிலிருந்து முழுத் தோலையும் எடுத்து வைக்கலாம். அறுவை முறை 2. மாஸ்ட்டாய்டு அறுவை முடிந்து, தூய்மை செய்த பின், காதின் பின் பக்கமிருந்து எடுக்கப் பட்ட முழுத் தோலைச் செவிப் பறை, சுத்தி, பட்டடை எலும்புகளின் மேலும் வெளிச் செவிக் குழலின் தோல் மீதும் ஒட்டும் படி வைக்கலாம். அறுவை முறை 3. செவிப் பறையும் சுத்தி, பட்டடை எலும்புகளும் சேதமாயிருந்தும், அங்கவடி எலும்பு அசையும் திறனுடன் இருந்தால், இம்முறை நல்லது. மாஸ்ட்டாய்டு அறுவை செய்து, எலும்பு, திசுக்களை அகற்றிய பின், ஒட்டுத் தோலை அங்கவடியின் தலைப் பகுதியிலும் வெளிச் செவிக் குழலின் தோல் பகுதியிலும் படுமாறு வைக்க வேண்டும். அறுவை முறை 4. அங்கவடியின் பாதம் மட்டும் நல்ல நிலையிலிருந்தால், மாஸ்ட்டாய்டு அறுவைக்குப் பின், ஒட்டுத் தோலை வட்டச் சாளரத் திரை மீது வெளிச் செவிக் குழாய்த் தோலுடன் ஒட்ட வைக்கலாம். ஒலி அலைகள், அங்கவடியின் பாதம் மீது விழும்; ஆனால் வட்டச் சாளரம் மீது விழாது. அறுவை முறை 5. எஞ்சிய அங்கவடிப் பாதமும் அசைவற்றிருந்தால், மாஸ்ட்டாய்டு அறுவை செய்து. தூய்மைப் படுத்திய பின்பு, கிடை மட்ட அரை வட்டக் குழாயில் ஒரு சிறு துளை இட்டு, ஒட்டுத் தோலை அந்தத் துளையின் மேலும், வெளிச் செவித் தோலின் மேலும் ஒட்ட வைக்கலாம். ஒலி வழித் திருப்புதல் முறையில் ஒட்டுத் தோல் வட்ட சாளரத் திரை மீது வைக்கப் படும். தொண்டை நடுச் செவிக் குழாய் நீள் வட்டச் சாளரம் இணைந்த ஒரு காற்றறை உருவாக்கப் படும். ஒலி அலைகள் பின் பாதையாக வட்டச் சாளரம் மீது விழுந்து, நீள் வட்டச் சாளரம் வழி வெளியேறும். —டி.எம். பரமேஸ்வரன் செவியட் கம்பளி ஆடை ஆட்டுக் கம்பளத்தால் தயாரிக்கப் படும் துணி செவியட் கம்பளி ஆடை (cheviot cloth) எனப் படும். இங்கிலாந்துக்கும், ஸ்காட்லாந்துக்கும் இடையேயான மலைத் தொடரில் வளர்க்கப் படும் செவியட் எனும் ஆட்டு இனம் ஒரு குட்டை வகைச் சிறப்பு கம்பளி இழைக்குப் பெயர் பெற்றது. இந்த ஆட்டில் தோலின் மீது அடர்த்தியாக வளரும் இக்கம்பளியைக் கொண்டு, உறுதிக் கட்டுத் துணியைத் (tweed) தயாரிக்கலாம். இத்துணியைத் தயாரிப்பதற்குப் பொதுவாகப் பயன் படும் கம்பளி நூல்களை விடச் செவியட் கம்பளி நூலை நுண்மை மிக்கதாகத் தேர்வு செய்து நெய்தால், உயர் வகை உறுதிக் கட்டுத் துணி கிடைக்கும். ஒரே வண்ணம் அல்லது மாறி, மாறி எதிர் பலிப்புக் கோலங்கள் (mirror obliqueness or herringbone) கொண்ட அமைப்பைச் செவியட் கம்பளித் துணியில் உருவாக்குதல் வழக்கம். செவியட் துணி சாதாரண செவியட் கம்பளி நூலிலிருந்தும், உயர் வகை நன்கு முறுக்கப்பட்ட மணிக் கம்பளி நூலிலிருந்தும் (worsted yarns) தயாரிக்கப் படுகிறது. மணிக் கம்பள செவியட் ஆழ்ந்த நிறங்களில் வலம்புரி இரு படை நெசவால் (right-hand twill) தயாரிக்கப் படுகிறது. —மே.ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. B.P. Corbman, Textiles–Fibre to Fabric, Sixth Edition, McGraw–Hill Book Company, Singapore, 1985. செவியால் வரும் உட்கபாலச் சிக்கல்கள் உடல் கூற்று இயலின் படி, செவி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் படும். அவை புறச் செவி, நடுச் செவி, உட்செவி எனப் படும். நடுச் செவியை அடுத்துள்ள மாஸ்ட்டாய்டு காற்றறைகள் செவியில் ஏற்படும் தொற்றினால் பாதிக்கப் படும். நடுச் செவியும், உட்செவியும், கபாலத்துடன் இணைவதால், இங்கு ஏற்படும் தொற்றுகள் புற்றுக் கட்டிகள் ஆகியன கபாலத்தைப் பாதிக்கக் கூடும். திடீரெனத் தோன்றும் மாஸ்ட்டாய்டு அழற்சி நுண்ணுயிர் எதிர் மருந்து, வேதி மருந்துகளால் குணமாகும். தொற்று வீரியம் இருந்தாலோ, சரி வர மருத்துவம் செய்யாவிடிலோ, இத்தொற்று கபாலத்துள் குருதி மூலம் பரவும். நாட்பட்ட நடுச் செவி அழற்சியில் காற்றறைச் செல்களிலிருந்து, கபாலத்தினுள் அவ்வப்போது தொற்றுப் பரவக் கூடும். பக்கவாட்டுச் சைனஸ் குருதி உறைதல், கடின வெளிச் சீழ்க் கட்டி, மூளைத் தோல் அழற்சி, பெரு மூளைச் சீழ்க் கட்டி, சிறுமூளைச் சீழ்க் கட்டி, முகச் சோர்வாதம், கபால என்பு அழற்சி போன்றவை இதன் மூலம் ஏற்படும் உட்கபாலச் சிக்கல்களாகும். அறிகுறிகள். பாதிக்கப்பட்ட பகுதியைப் பொறுத்து நோய்க்குறிகள் மாறினாலும், தாங்க முடியாத தலைவலி, வாந்தி, பார்வையில் மாற்றம் முதலியன ஏற்படும். காதில் கீழ், காது கேட்காமை, காதுக்குப் பின்னால் வலி ஆகியன தோன்றும். மாஸ்ட்டாய்டு அழற்சியின் நோய்க் குறிகளாகிய தலைவலியோ, வாந்தியோ தொடங்கினால், மூளைப் பாதிப்பின் அறிகுறியாகக் கருதலாம். மூளைத் தோல் அழற்சியால் கழுத்தில் வலியும், கழுத்தைத் திருப்ப முடியாத நிலையும் தோன்றலாம். கழுத்தை முன், பின் வளைக்க, வேதனை கூடும். மருத்துவம். மாஸ்ட்டாய்டு பகுதியை எக்ஸ் கதிர்ப் படம் எடுத்துத் தொற்றுப் பற்றியுள்ளதா என்று கண்டு பிடிக்கலாம். காதில் உள்ள சீழில் நுண்ணுயிரி உள்ளதா என்று ஆய்வு செய்வதுடன், நுண்ணுயிர் வளர் ஆய்வில் தகுந்த நுண்ணுயிர் எதிர் மருந்தையும் கொடுக்க வேண்டும். மூளை பாதிக்கப் பட்டால். சி.டி. துழாவுதல் (CT Scan), தலை எக்ஸ் கதிர், தமனி எக்ஸ் கதிர் வரை படம், மூளைத் தண்டு வட நீர் ஆய்வு முதலியவற்றால் பாதிக்கப்பட்ட பகுதியைக் கண்டுணர்ந்து, மருத்துவம் அளிக்க வேண்டும். தொடக்கக் காலக் குழப்பங்கள், மருத்துவத்தில் மாறக் கூடும். சீழ்க் கட்டியை உடனே முனை மழுங்கிய உறிஞ்சும் ஊசி மூலம் வெளியேற்றி, நுண்ணுயிர் எதிர் மருந்து கொடுக்க நோய் மாறும். தொற்றுள்ள மாஸ்ட்டாய்டு காற்றறையை அறுவை மூலம் களையலாம். —மா.ஜெ. ஃபிரடெரிக் ஜோசப் செவியால் வரும் மூளைச் சீழ்க் கட்டி உட்செவியால் வரும் மூளைச் சீழ்க் கட்டி அடுத்துள்ள பொட்டுப் (temporal) பகுதியிலும், சிறு மூளையிலுமே காணப் படும். திடீரெனத் தோன்றும் உட்செவி அழற்சி பொதுவாக, மாஸ்ட்டாய்டு காற்றறை அழற்சியோடு காணப் படும், நாட்பட்ட மாஸ்ட்டாய்டு காற்றறை அழற்சியில், தொற்று காற்றறைகளில் தோன்றி, மூளைக்குக் குருதி மூலம் பரவும். கபாலத்தில் உள்ள இக்காற்றறை ஸ்பினாய்டு என்பின் மெல்லிய பகுதியை அரித்து, என்பு அழற்சியை உண்டாக்கி, மூளைக்கு நேரடியாகப் பரவலாம். மூளைச் சீழ் கட்டிகள் இரண்டு வகைப் படும். அவை மென்தோல் (piamater) அடிச் சீழ்க் கட்டி, மூளையடிச் சீழ்க் கட்டி என்பன. மென்தோல் அடிச் சீழ்க் கட்டி. அடி வரை பரவிய சீழ் அழற்சியுடன் சிறு, சிறு சீழ்க் கட்டிகளையும் உண்டாக்குவதால், மூளை பெரிதும் பாதிக்கப் படுவதில்லை. இதனால், ஒருங்கிணைந்த நோய்க் குறிகள் காணப் படாமல், தோல் அழற்சிக்குரிய குறிகளே தெரியும். நெடுநாள் நுண்ணுயிர் எதிர் மருந்தை, ஊசி மற்றும் வாய் வழியாகக் கொடுத்து, தொற்றை முறிக்கலாம். எக்காரணங்கொண்டும், இடையே மருத்துவத்தை நிறுத்தக் கூடாது. நிறுத்தினால், விளைவுகள் கடுமையாக இருக்கும். மூளை அடிச் சீழ்க் கட்டி. செவித் தொற்று, மூளைத் தோலில் பரவி, சிலந்தி வலைத் தோல் போல் பரவி, மூளையின் அடியில் உள்ள வெள்ளைப் பகுதியில் (white matter) தங்கிச் சீழ்க் கட்டியை உருவாக்கும். இக்கட்டியில் மூன்று நிலைகள் உண்டு. முதல் நிலைத் திடீர்ச் சீழ்க் கட்டி. இந்நிலையில், மூளை அழற்சியுடன், கீழறை அழற்சியும் காணப்படும். சில சமயங்களில், சீழ் கோத்துக் கட்டியாக மாறும். இரண்டாம் நிலைச் சீழ்க்கட்டி. மூன்று வாரங்களுக்குப் பின், உண்டாகும் கட்டிகளைச் சுற்றிக் கிளையல் சுவர் காணப் படும். நரம்புச் செல்களால் ஆன இச்சுவரின் ஒட்டுப் (cortex) பகுதியில், கனமாகவும். கீழே கீழறையை அடுத்து மெல்லிய சுவராகவும் காணப்படும். ஓரறை அல்லது பல அறைகளைக் கொண்ட இச்சீழ்க்கட்டியில் தொற்று உண்டாக்கக் கூடிய நோய் நுண்ணுயிரிகள் உயிருடன் காணப் படும். நாளடைவில், சுவரின் கனம் கூடிச் சீழில் உள்ள நுண்ணுயிரியை அழிக்கும். இருப்பினும், ஸ்டெஃபைலோ காக்கஸ் என்னும் நுண்ணுயிரி மட்டும் பல நாள் உயிருடன் இருக்கும் தன்மையுடையது. நாட்பட்ட கட்டியில் உள்ள சீழ் கெட்டிப் படுவதுடன், நோய் நுண்ணுயிரியற்றும் காணப் படும். மருத்துவம். உடனடியாக நுண்ணுயிர் எதிர் மருத்துவத்தைத் தொடங்கி, கட்டியின் வளர்ச்சியை சி.டி. துழாவுதல் மூலம் (CT Scan) ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட கபாலத்தில் துளையிட்டுச் சீழை வெளியேற்ற வேண்டும். நாட்பட்ட கட்டியை அறுவையால் சுவருடன் எடுக்கலாம். —மா.ஜெ.ஃபிரடெரிக் ஜோசப் செவியின் குருதி நாள அமைப்பு உட்செவியின் குருதி நாளங்களுக்கு ஏற்படும் குறை பாடுகளால் தோன்றும் செவிட்டுத் தன்மையும், சமன்பாட்டுச் சீரழிவும், உட்செவியின் குருதி நாளக் கேடுகளாகும். உட்செவித் தமனிகள். உட்செவிக்கான குருதி பெரும்பாலும், வணரியத் தமனி (labyrinthine artery) வழியாக வழங்கப் படுகிறது. மோனத் தமனியின் (basilar artery) கிளையாகவோ, முன் கீழ்ச் சிறு மூளைத் தமனியின் கிளையாகவோ வரும் வணரியத் தமனி, உட்செவிப் புழையுள் (internal aconotic meatus) நுழைந்து, உட்செவியின் உறுப்புகளை அடைகிறது. உட்செவியினுள் வணரியத் தமனி இரண்டாகப் பிரியும். இவ்விரு கிளைகளுள் ஒன்றான முன் இடைகழித் தமனி (anterior vestibular artery), இடைகழிக் கருவியின் பகுதியான யூட்ரிகிள் முழுமைக்கும், மற்றொரு பகுதியாக அரை வட்டக் குழல்களின் சில உறுப்புகளுக்கும் குருதியைக் கொண்டு செல்கிறது. இடைகழி நரம்பும், இத்தமனி மூலமே குருதியைப் பெறுகிறது. வணரியத் தமனியின் மற்றுமொரு கிளை, பொதுச் சுருள் வளைத் தமனியாகும். இது சுருள் வளையின் நடுகத்தை (modiolus of cochlea) அடைந்து, இரு கிளைகளாகப் பிரியும். இடைகழிச் சுருள் வளைத் தமனி சுருள் நடுகத் தமனி என்னும் இரு கிளைகளுள், முன்னது இடைகழியை நோக்கியும், எஞ்சியது கருள் வளையைச் சார்ந்தும் ஓடும். இடைகழிச் சுருள் வளைத் தமனி மீண்டும் இடைகழிக் கிளை, சுருள்வளைக் கிளை எனப் பிரியும். இடைகழிக் கிளை, அரை வட்டக் குழல்களின் எஞ்சிய பகுதிகள். சுருள் வளையின் அடிப் பகுதி ஆகியவற்றுக்குக் குருதியளிக்கும், சுருள் வளைக் கிளை, சுருள் வளை அடிச் சுற்றின் எஞ்சிய பகுதிக்குக் குருதியளிக்கும். சுருள் நடுகத் தமனி, நடுகத்தைச் சார்ந்து, அதன் வளைவு, நெளிவுகளில் தொடர்ந்தோடிச் சுருள் வளை நுனியை அடையும். அடிச் சுற்றைத் தவிர, எஞ்சிய சுருள் வளைச் சுற்றுகள், இத்தமனி மூலமே குருதி பெறுகின்றன. நடுகத்தில் இத்தமனி சுற்றிச் செல்கையில், புறப்படும் ஆரக் குறுந்தமனிகள் தந்துகிகளாகப் பிரிகின்றன. சுருள் வளையின் வெளிச் சுவரில் ஆரக் குறுந் தமனிகளை ஒன்றோடொன்றாகப் பல வளைவுக் கிளைகள் இணைக்கின்றன. இவ்வளைவுகளே குறுந் தமனிக் குடிலங்கள் (arteriolar arcades) ஆகும். ஆரக் குறுந் தமனிகளின் தந்துகிகள், குருதிப் பட்டையத்திற்கே (stria vascularis) சிறப்பாகக் குருதியைக் கொடுக்கின்றன. குருதிப் பட்டையம் என்பது வெளிச் சுவரில் காணப்படும் ஒரு தந்துகி வலையப் பட்டையாகும். ஆரக் குறுந் தமனிகளோடு மட்டுமல்லாது, சிரை களோடும், குருதிப் பட்டையம் தொடர்பு கொண்டுள்ளது. மொத்தத்தில், ஆரக் குறுந் தமனிகளின் பல் வேறு கிளைகளின் வாயிலாக ஆக்சிஜனேற்ற குருதி வழங்கப் படுகிறது. உட்செவியின் சிரைகள். தந்துகிகளிலிருந்து ஆக்சிஜன் அகற்றிய குருதியைத் தொகுத்துக் கிளம்பும் குறுஞ்சிரைகள் (venules) வெளிச் சுவரில் காணப் படுகின்றன. இடைகழிச் சவ்வின் தந்துகிகளினின்று இடைகழிச் சவ்வு நாளம் தோற்றுவிக்கப் படுகிறது. இவ்வாறே, தந்துகிகளிலிருந்து பறை விளிம்பு நாளம் {vessel of tympanic tip)உருவாகிறது. மோனச் சவ்வின் கீழ்ப் பரப்பில், தந்துகிகளின் சேர்க்கைக் காரணமாக மோனச் சவ்வு நாளம் தோன்றுகிறது. சுருள் வளையின் வெளிச் சுவரின் அனைத்துப் பகுதிகளிலும் ஆக்சிஜன் அகற்றிய குருதியோடும் தொகுப்புக் குறுஞ்சிரைகள் உண்டு. மேற்கூறிய நாளங்கள் யாவற்றையும், பல குறுக்கு நாளங்கள் இணைக்கின்றன. அரை வட்டக் குழல்கள், சுருள் வளை அடிச் சுற்று ஆகியவற்றிலிருந்து உருவாகும் குறுஞ்சிரைகள் ஒன்று கூடி, இடைகழிச் சுருள் வளைச் சிரையாக உருவாகி, பொது நடுகச் சிரையோடு இணையும். இவ்வாறு உருவாக்கப்படுவதே சுருள் வளைச் சிரையாகும். இடைகழியின் பிற பகுதிகளிலுள்ள தந்துகிகளிலிருந்து இரு சிரைகள் தோன்றுகின்றன. முன் பகுதியினின்று வரும் வணரியச் சிரை உட் செவிப் புழையின் வழி வெளியேறுகிறது. பின் பகுதியினின்று வரும் இடைகழிச் சாலகச் சிரை வளைப் பரிகையை (sigmoid sinus) அடைகிறது. இடைகழிக் கருவி உடலின் தோரணை மாற்றங்களைச் (postural changes) சீரமைக்கிறது; வெட்ட வெளியில் உடல் பகுதிகள் இயங்குகையில், சமன்பாட்டை நிர்வகிக்கிறது. ஆனால், இடைகழியின் குருதி நாளங்களைப் பற்றிய நுண்ணிய குறிப்புகள் இது வரை ஆய்வாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும் கிட்டவில்லை. எனவே, குருதி நாளக் கோளாறுகளால் இடைகழியில் ஏற்படும் நோய்களையும், கேடுகளையும் பற்றிய செய்திகள் சரியாகக் கணிக்கப் படவில்லை. சுருள் வளைக் குருதியோட்டத்தைப் பற்றிய குறிப்புகள் பெருமளவு அறியப் படுவதால், இவற்றின் நோயாக்கமும், தாக்கமும். மிகுதியும் ஆயப்பட்டுள்ளன. சுருள் வளைக் குருதி நாளங்களின் குறிப்புப் பண்புகள். சுருள் வளையின் குருதியோட்டம் சில சிறப்புகளைக் கொண்டது. சுருள் நடுகத் தமனியிலிருந்து புறப்படும் ஆரக் குறுந்தமனிகள், உடலின் பிற தமனிகளிலிருந்தும், செவியின் பிற தமனிகளிலிருந்தும் மாறுபட்டவை. இவற்றின் சுவர்களில் உள்ள வழுக்குந் தசை நார்கள் தட்டையானவை; பிற தமனிகளின் வழுக்குந் தசை நார்களோ உருண்டையானவை. பல்வேறு ஆய்வு முடிவுகளின் படி, இத்தட்டைத் தசை நார்கள் (flat muscle fibres) மிகக் குறைந்த அளவில், சுருங்கி விரியுந் தன்மையைப் பெற்றுள்ளன. எனவே, சுருள் வளைக் குருதியோட்டம், பெரும்பாலும் ஒரே முறையாக அமைகிறது. நடுகத் தமனி, அதன் கிளைகள் ஆகியவற்றின் சுவர்களிலும், துளைகள் மிகுதியாகக் காணப் படுகின்றன. இவை அகவண்ணீர் (endolymph), புறவண்ணீர் (perilymph) உருவாக்கத்தில், பெரும் பணியாற்றுகின்றன. வணரியத் தமனி ஒரு முடிந்த தமனி (end artery) ஆகும். எனவே, இதன் வெவ்வேறு கிளைகளும், தங்களுக்குள் இணைந்து பிரிவடையினும் வேறொரு தமனியின் கிளைகளோடு இணைவதில்லை. குறிப்பாகப் படல வணரியத்திற்குக் (membranous labyrinth) குருதி வழங்கும் வணரியத் தமனியின் கிளைகளுக்கும், இதைச் சுற்றியுள்ள பிற பகுதிகளின் தமனிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் ஏற்- படுவதில்லை. எனவே, வணரியத் தமனியில் அடைப்போ, தாக்கமோ ஏற்படும் போது, ஒத்திசைக் குருதியோட்டம் (colateral circulation) ஏதும் இல்லா நிலையில், சுருள் வளைக்கும், இடைகழிக்கும் குருதிப் பரிமாற்றம் தடைப் படுகிறது. இது உட்செவிக் கோளாறுகளை உண்டாக்கும். —சுதா சேஷய்யன் செவியின் கோளாறு தோலில் உள்ள பிளவுகள், கீறல்கள் வழியாக மயிர்க் குமிழ்களையும், செபச் சுரப்பிகளையும், ஸ்டெஃபைலோ காக்கை நுண்ணுயிரிகள் அடைந்து, கொப்புளச் செவி அழற்சியை உண்டாக்குகின்றன. செவித் துளையின் குருத்தெலும்புப் பகுதியில்தான் கொப்புளங்கள் காணப் படும். அறிகுறிகள். பற்கள் மற்றும் கழுத்து நோக்கிச் செல்லும் வலியால், நோயாளி துன்பமடைவார். வாயைத் திறக்க முயற்சிக்கும் போதும், சுவைக்கும் போதும், வலி மிகுதியாகிறது. துளையின் குருத்தெலும்புப் பகுதி சுருக்கமடைகிறது. செவிச் சிறு மடலையும், குருத்துப் பகுதியையும் அழுத்தினால், வலி மிகும்; நிண முடிச்சுகள் வீங்கித் தொடு வலி கொண்டுள்ளன. உடல் வெப்பம் மிகும். கேட்கும் திறன் பாதிக்கப் படுவதில்லை. இந்நோய் 5–7 நாள் நீடிக்கலாம். ஆனால், கொப்புளங்கள் மீண்டும், மீண்டும் தோன்றுகின்றன. அப்போது, நோய், பல வாரங்களுக்கு நீடிக்கும். நீரிழிவு நோய், சிறுநீரக நோய், கடும் ஆக்கச் சிதை மாற்ற நோய்கள் உள்ளவரிடம் மேற்கூறிய நிலை காணப் படும். மருத்துவம். உலர்ந்த வெப்பம், 70 டிகிரி ஆல்கஹால் அல்லது 10% அலுமினியம் அசெட்டேட் கரைசல் ஆகியவற்றால் செறிவடைந்த குறுகிய வலைத் துணி அடைப்பானைச் செவித் துளையினுட் செலுத்துதல், குவார்ட்ஸ் விளக்கு மற்றும் சொல்லூக்ஸ் விளக்கு கொண்டு கதிர் வீச்சுச் செய்தல் ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன. தடுப்பு முறைகளும், பராமரிப்பும். தோலின் எக்ஸ் மாவின் போது, 70 டிகிரி ஆல்கஹால் அல்லது மஞ்சள் பாதரச ஆக்சைடு களிம்பு கொண்டு செவித் துளையின் சுவர்கள் மீது பூசினால், மீண்டும், மீண்டும் நோய் ஏற்படுவது தவிர்க்கப் படுகிறது. துளைக்குள் களிம்பைச் செலுத்த. 1.5–2 செ.மீ. நீளமுள்ள பஞ்சை மழமழப்பாகச் சுற்றிப் பயன் படுத்தலாம். மருத்துவர் பரிந்துரைத்த களிம்பைப் பஞ்சின் மீது தடவி, அதைத் துளையினுட் செலுத்த வேண்டும். செலியுள்ளே 15–20 நிமிடங்களுக்குப் பஞ்சை வைத்து விட வேண்டும். பொதுப்படையான மருத்துவம் (அயச் சத்து, ஆர்செனிக், மீன் எண்ணெய், வைட்டமின் முதலியன) மிகையான கொப்புளங்களின் போது, பரிந்துரைக்கப் படும். பெனிசிலின் தசை ஊசியாகச் செலுத்தப் படலாம். கட்டியான குறும்பி. புறச் செவித் துளையின் தோலில் உள்ள குறும்பிச் சுரப்பிகளின் மிகுதியான சுரப்பால், செவியில் மெழுகு தேங்கிக் கட்டியான குறும்பி உண்டாகிறது. அறிகுறிகள். கட்டியான அடைபட்ட குறும்பி, செவித் துளையை முழுமையாக அடைத்து விட்டால், கேள் திறன் குறைகிறது. குளித்த பின்னரோ, தலை மயிர்க் கழுவலின் போதோ, நீர் காதினுட் செல்ல, கேள் திறன் குறைகிறது. இங்கு குறும்பி வீக்கமடைந்து, செவிக் கால்வாயை முழுமையாக அடைக்கிறது. மருத்துவம். குறும்பியை அகற்றி, நோயாளியைக் கேட்கச் செய்ய, வெப்பமான (37°C) நீரை 100 செ.மீ. ஊசி மூலம் காதினுள் பாய்ச்சலாம். நீர் பாய்ச்சல் முறை கொண்டு, கட்டியான குறும்பியை அகற்றச் செவிலியர்களைப் பணிக்கலாம். துளைச் சுவரின் பின் புற, மேற்புறச் சுவர் வழியாகச் செலுத்தப் பட்ட நீர்த் தாரை, செவிப் பறைப் படலத்தையும், துளையின் சுவர்களையும் கழுவுகிறது. நீர்ப் பாய்ச்சல் சரியாகச் செய்யப் படாவிடில், நீர்த் தாரை நேரடியாகச் செவிப் பறைப் படலத்தின் மீது செலுத்தப் படுகிறது. இதனால், வலி உண்டாகிப் படலம் சேதமடைவதுடன், குறும்பியும் முழுமையாக வெளிப் படுவதில்லை. நீர்ப் பாய்ச்சலிலேயே அடைக்கப் பட்ட குறும்பியை அகற்றி விட முடியாது. அந்நிலையில், 2–3 நாளுக்குக் காரச் சொட்டுகளை உட்சொட்டிட்டு, மெழுகை மென்மையடையச் செய்ய வேண்டும். குறும்பி வீக்கமடைவதால், கேட்பது தற்காலிகமாகக் குறையலாம். செவியிலிருந்து முன்னரே சீழ் வெளிப்பட்டிருந்தால், நீர்ப் பாய்ச்சல் தேவையில்லை. செவியில் வேற்றுப் பொருள்கள். விளையாடும் போது, வேற்றுப் பொருள்களைக் காதில் செருகும் நிலை 2–8 வயது குழந்தைகளிடம் காணப் படலாம். செவியிலுள்ள பொருள் எந்த விதமான உணர்வுகளையும் உண்டாக்குவதில்லை. சில போது, அனிச்சை இருமல் உண்டாகும் அல்லது கேட்கும் திறன் குறையலாம். செவியிலிருந்து பொருள்களை அகற்றத் தவறான முறையைக் கையாண்டால், பின் வரும் விளைவுகள் நேருகின்றன. புறச் செவித் துளையின் அழற்சி, சில போது செவிப் படலம் கிழிந்து விடல், நடுச் செவியின் கடும் அழற்சி ஆகியன ஏற்படும். செவிக்குள் பூச்சி நுழைந்தால், துளைச் சுவர் வழியாக ஊர்ந்து சென்று, செவிப் பறைப் படலத்தை அடைந்து, தாங்க முடியாத அரிப்பு, செவியில் சடக்கென்ற ஒலி ஆகியவற்றை உண்டாக்கும். மருத்துவம். செவித் துளையினுள் வெப்ப நீர்ப் பாய்ச்சல் மூலம், இப்பொருள்கள் அகற்றப் படுகின்றன. வெப்பமான கிளிசரின் மற்றும் வாசலைன் எண்ணெய், சூட எண்ணெய், சாராயம் ஆகியவற்றின் சில சொட்டுகளை உட்சொட்டிடுவதன் மூலம், செவியின் உள்ளேயுள்ள பூச்சியைக் கொன்று விடலாம். அயற் பொருளை அகற்ற முடியாவிடில், நேரடிப் பார்வையின் மூலம், மருத்துவர் ஒரு மொட்டையான அல்லது கூர்மையான கொக்கி கொண்டு, அகற்றி விடலாம் (சில போது உணர்வகற்று முறை கையாளப் படுகிறது). வட்டமான பொருளைச் சாமணம் கொண்டு அகற்ற முயலக் கூடாது. ஏனெனில், அது வழுக்கி, துளையின் ஆழ்ந்த பகுதிகளுக்குச் செல்லக் கூடும். உப்பக் கூடிய தன்மை கொண்ட பட்டாணிக் கடலை போன்ற பொருள்களை, அதன் நீர் அடக்கத்தை அகற்றும் முறையில், முதலில் செவிக் கால்வாய்க்குள் 96 டிகிரி ஆல்கஹாலின் வெப்பக் கரைசலை உட்சொட்டிட வேண்டும். செவியிலிருந்து பொருள்களை அகற்றுவதற்குத் தேவையான அனைத்துக் கருவிகளையும் செவிலியர் ஆயத்தமாக வைத்திருக்க வேண்டும். செவிக்கான ஊசி, வெப்பமான 3% போரிக் அமிலக் கரைசல், கொக்கிகள், வளைந்த சாமணங்கள், தொற்றற்ற பஞ்சு முதலியன இன்றியமையாதவை. இதற்கு முன், பொருளை அகற்ற முயற்சி செய்யப் படாவிடில், நீர் பாய்ச்சல் முறை கொண்டு பொருளை அகற்ற வேண்டும். சிறந்த வல்லுநரே, கருவிகள் கொண்டு பொருள்களை அகற்ற முயல வேண்டும். நடுச் செவியின் கடும் அழற்சி. இது குழந்தைகளிடம் பெரும்பான்மையாகக் காணப் படுகிறது. கேட்கும் குழல் வழியாகச் செவிப் பறைப் படலம் பாதிக்கப் படுவதால், நடுச் செவி அழற்சி தோன்றுகிறது. அரிய நிலைகளில், சேதமடைந்து, செவிப் பறைப் படலத்தின் வழியாக நடுச் செவிக்குள் தொற்று பரவுகிறது. அறிகுறிகள். பொதுப்படையான உடல் நலக் குறைவு, உடல் வெப்ப உயர்வு, கேட்கும் திறன் குறைவு, செவியில் மட்டுமல்லாமல், மாஸ்ட்டாய்டு புடைப்பிலும் வலி, தலைவலி ஆகியவை இந்நோயில் தோன்றுகின்றன. செவியில் காணப்படும் குத்து வலி தாங்க முடியாமல் இருப்பதால், அவசர மருத்துவத்திற்கு வல்லுநர் உதவி தேவை. கார்பால் கிளிசரின் சொட்டுகளை இடுவதால், வலி குறைகிறது. அசெட்டைல் சாலிசிலிக் அமிலம், அமிடோபைரின், நுண்ணுயிர் எதிர் உயிர் மருந்துகள் ஆகியவற்றையும் பயன் படுத்தலாம். செவியிலிருந்து வெளிப்பாடு தோன்றினால், சொட்டிடுதலை நிறுத்தி விட வேண்டும். ஏனெனில், ஈரமான சீழ் கொண்ட சூழ்நிலையில் கார்பாலிக் அமிலம் தோல் மற்றும் செவிப் பறைப் படலத்தை அரித்து விடலாம். செவியிலிருந்து வெளிப்பாடு கண்டவுடனே, கார்பால் கிளிசரைன் சொட்டு இடுவதை நிறுத்தி விட வேண்டும். தேவையிருந்தால், மயக்க மருந்துகளும், தூக்க மருந்துகளும் தரப் படலாம். இரண்டு, மூன்று நாளில் முன்னேற்றம் எதுவும் இன்றி, உடல் வெப்பம் மிகையாக இருந்தால், துளையிடல் முறையைக் கையாளுவதன் மூலம் சீழ் வெளிப்படுவதுடன், சிக்கல்கள் உண்டாவதும் தவிர்க்கப் படும். அனைத்து வகையான நடுச் செவி அழற்சிகளிலும், குருதி நாளச் சொட்டு மருந்துகள் இடப் பட வேண்டும். நடுச் செவியின் நாட்பட்ட சீழ் அழற்சி. முறையான மருத்துவம் செய்யப் படாத நடுச் செவியின் கடும் அழற்சி, நாட்பட்ட வகையாக மாறலாம். மூக்குக் குழிவிலுள்ள நாட்பட்ட அழற்சி நிகழ்வுகளும், மூக்கு மேல் தொண்டையின் நிகழ்வுகளும், இதற்குக் காரணமாகின்றன. நாட்பட்ட சளி கொண்ட நடுச் செவி அழற்சியில் இரண்டு வகைகள் உள. செவி அழற்சி, செவிப் பறைப் படலத்தின் நடுத் துளையுடன் கூடியது. செவிப் பறைப் படலத்தின் விளிம்பில் துளையுடன் கூடிய செவி அழற்சியில், நடுச் செவியின் எலும்புச் சுவர்கள் பாதிக்கப் படுகின்றன. அறிகுறிகள். நடுச் செவியின் நாட்பட்ட சீழ் கொண்ட அழற்சியில் பின் வருவன காணப் படுகின்றன. அவை: செவிப் பறைப் படலத்தில் நிலையான துளை, செவியிலிருந்து விட்டு விட்டோ, இடை விடாமலோ, சீழ் வெளிப் படல், கேட்கும் திறன் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளமை, நடுச் செவியின் சிலேட்டுமப் படலம் பெருமளவில் பாதிக்கப் பட்ட போது, வெளிப்பாடு சீதச் சீழுடன் உள்ளமை, எலும்புத் திசு பாதிக்கப் படுவதால், சிதைவு ஏற்படல் ஆகியன. சிதைவு நிலையில் செவியிலிருந்து வெளிப் படுவது கெடு நாற்றத்துடன் உள்ளது. இவ்வகைச் செவி அழற்சியில் முக நரம்புச் செயலிழப்பு, எலும்புச் சார்ந்த சீழ் நிலை போன்ற சிக்கல்கள் தோன்றலாம். மருத்துவம். நாட்பட்ட சீழ் கொண்ட செவி அழற்சியைப் பராமரிப்பதில், பஞ்சு சுற்றப் பட்ட துழாவி கொண்டு, செவியைத் தூய்மை செய்தல், போரிக் கரைசல் மற்றும் சாலிசிலிக் ஆல்கஹால். ஃபியூரசில்லின் கரைசல் ஆகியவற்றை உட்சொட்டிடல், போரிக் அமில அல்லது சர்பனிலைடு தூளைச் செவியினுட் தூவல் ஆகியவை அடங்கும். வாரத்தில் ஓரிரு முறை உப்புக் கரைசலைச் செவியினுட் பாய்ச்சுதல் செவிப் பறைப் படலத்தின் துளைகளுக்குப் பயனளிக்கும். காண்க, காது வலி. —அ. கதிரேசன் செவியும் ஒலியும் செவியும் ஒலியும் மிகை ஒலியால், காது தாக்குதலுக்குள்ளாகிச் செவிடாகக் கூடும். ஹிப்போகிரேடிஸ் காலத்திலேயே காதில் அடி, காயம், மிகை ஒலி ஆகியவற்றால் இரைச்சலும், செவிட்டுத் தன்மையும் உண்டாகின்றன என்று அறியப் பட்டது. 1831இல் பாஸ் பிரோக், கொல்லன் ஆகியோர் செவிடு பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். கன ரகத் தொழிற்சாலையில் தொழில் வழியாகச் செவிடு வரும் என்பதை 1882இல் ஹோல்டும், கொதி கலன் தொழிலாளர் செவிடு பற்றி 1886இல் பார் என்பாரும் விளக்கியுள்ளனர். இன்றும் மிகை ஒலியால், காது செவிடும், தொழில் திறன் குறைவும், நரம்புக் கோளாறும், மனக் கோளாறும் உண்டாகின்றன. பாதிக்கப்பட்ட சிலர் வெளியே தெரிவிக்காமல், உதட்டசைவைப் பார்த்தே பேசவும், கேட்கவும் பழகிக் கொள்கின்றனர். ஓர் இடத்திலிருக்கும் ஒலி அதிர்வின் அளவையும், அழுத்தத்தின் அளவையும், ஒலி அளவு ஆய்வின் மூலம் அறியலாம். பாதுகாக்கப் படாத செவியில் 80dB ஒலி அழுத்தம், தீமை பயக்கும். 90dB அழுத்தம் உள்ள தொழிற்சாலை பாதுகாப்பற்றது. உயர் அதிர்வுகளில் அழுத்தம் 80dB இருந்தால், தீங்கு மிகுதி. கன ரகக் கொதி கலன் ஆலை ஒலிகளால், தொழிலாளர்களில் இளஞரை விட முதியவரே பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். சாலை, ஆலை, சுரங்கம் போன்ற தொழில்களில் துளையிடும் கருவிகள் தொழிற்சாலைகளில் உலோகங்களை இணைப்பது, பளபளப்பூட்டுவது போன்ற வேலைகளில் ஒலி தீங்கு செய்யும். தாரை விமானம் ஏறி இறங்கும் போது அதிர்வுகள், தற்காலிகமாகச் சேதப் படுத்துகின்றன. கேளா ஒலி (ultrasonic) மனித உடலுக்குத் தீமை செய்யும்; அதனால், மிகை ஒலி விமானங்களில், மிகை ஒலி வெடிப்பை 25–55 கி.மீ. மேலேயே நடத்திப் பிறகே, விமானத்தைத் தரையில் இறக்குவர். ஒலியால் ஏற்படும் தீமைகள். கவனக் குறைவும், தூக்கமின்மையும், மனக் கோளாறைத் தோற்றுவிக்கின்றன. படை வீரர், துப்பாக்கிக் குண்டு ஒலியை எப்போதும் கேட்டுக் கொண்டிருப்பதால், குண்டுக் காயத்தை விட, ஒலியால் மிகுதியாகத் துன்பமடைகின்றனர். அவர்களுக்கு விரைவாகத் தோன்றும் செவிடு குணமாக நெடுநாள் ஆகும். முன்னரே, காதில் கோளாறு உள்ளவர்கள் ஒலியினால் விரைவாகப் பாதிக்கப் படுகின்றனர். முதியவர்க்கு நரம்புத் தளர்ச்சியால் செவிட்டுத் தன்மை விரைவில் வரும். ஒலியின் தீமையால், மூன்றாண்டில் வரக் கூடிய செவிடு, ஓராண்டிலேயே வந்து விடும். ஒலியின் கடுமையால், உட்செவியில் உள்ள நுண்ணுயிர், மயிர்க் கால், நரம்பு முனை முதலியன நசிந்து விடுகின்றன. இவற்றில், தற்காலிகச் செவிடும், நிலையான செவிடும் வர வாய்ப்புண்டு. தற்காலிகச் செவிடுடையவர், மிகு ஒலிச் சூழ்நிலையிலிருந்து சில நாளேனும் விலகியிருந்தால்தான் கேட்கும் திறன் சீராகும். —டி. எம். பரமேஸ்வரன் <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்து ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> செவிலி மென் துணி நுண்மையான, இலேசான, சாதா நெசவு வகைத் துணி, செவிலி மென் துணி (nun's veiling) ஆகும். இத்துணி முன்பு பெண்களின் முகத் திரையாகப் பயன் பட்டது. தற்போது, குழந்தைகளுக்கான ஆடைத் தயாரிப்பில் பயன் படுகிறது. பொதுவாக, ஒரே வண்ணத்தில் தயாரிக்கப் படும் இத்துணி, தொடக்கத்தில் கம்பளி நூலால் மட்டும் நெய்யப் பட்டு வந்தது. தற்போது செயற்கை இழைகளும், இதற்குப் பயனாகின்றன. லினோ அல்லது வலையமைவு நெசவினால் தயாரிக்கப்படும் கிரெனடீன் (grenadine). மார்க்விசெட் (marquisette), காசமெர் (gossamer) ஆகியனவும் செவிலி மென் துணியாகக் கருதப் படுகின்றன. —மே. ரா. பாலசுப்பிரமணியன் செவுள் விலங்குகள் நீரில் மூச்சு விடுவதற்குச் செவுள் (gill) பயன் படுகிறது. நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனை உறிஞ்சிக் கொண்டு, கார்பன் டைஆக்சைடை வெளியே விடுவதற்கேற்பச் செவுள் அமைந்துள்ளது. நீரிலுள்ள பல சிறு விலங்குகளின் சுவாசம், அவற்றின் மேற்பரப்பின் வாயிலாகவே நடைபெறுகிறது. உயிரின விலங்குகளில், அவற்றின் உடலின் குறிப்பிட்ட சில உறுப்புகளில் சுவாசம் நடைபெறும். சுவாசத்திற்குப் பயன் படும் செவுள் அகன்ற, மெல்லிய மேற்பரப்பைக் கொண்டது. இது குச்சம் போன்ற நீட்சிகளாகவோ, மெல்லிய தகடுகள் போலவோ இருக்கும். நீரில் வாழும் சில பூச்சிகளைத் தவிர, ஏனைய நீர் வாழ் விலங்குகளின் செவுள்களில் குருதி அல்லது நிணம் போன்ற சாறு பாயும். கடல் நட்சத்திரங்களில், அவற்றின் நீர்க் குழாய் மண்டலத்திலிருந்து உடலின் மேற்பரப்பில் காணப்படும் புடைப்புகளே செவுள்களாக உள்ளன. முதுகெலும்புகளின் செவுள்கள் தொண்டையின் சுவர்களில் வளர்கின்றன. அங்கு பக்கத்துக்கு ஒரு வரிசையாக அமைந்த செவுள் பிளவுகள், வெளியே திறக்கின்றன. வாயின் வழியாகத் தொண்டைக்குள் செல்லும் நீர், செவுள்களை நனைத்துக் கொண்டு, செவுள் பிளவுகள் வழியாக வெளியேறும். மீன்களின் செவுள் முதிர்ச்சி வெவ்வேறு நிலைகளில் காணப் படுகிறது. சில நீர்–நில வாழ் உயிரிகளின் செவுள்கள், உடலுக்கு வெளியே நீட்டிக் கொண்டுள்ளன. சிலவற்றுள் இளவுயிரி நிலையிலேயே செவுள்கள் இருக்கும். செவுளில் செவுள் இழை, செவுள் தகடு, செவுள் முள் எனப் பல பகுதிகள் உண்டு. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —அர. கமலதியாகராசன் <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்து ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> செறிப்பான், ஆவி செறிப்பானை (condenser) வெப்பப் பரிமாற்றி எனவும் கூறலாம். செறிப்பானில், வரிசையான இணை குழாய்களைக் கொண்ட ஒரு கலம் இருக்கும். இக்- குழாய்களில் நீரோட்டம் காணப் படும். சீராக இடைவெளி விடப் பட்ட துணைத் தகடுகள் இக்குழாய்களை நிலை நிறுத்த உதவும். குழாய்த் தகட்டின் ஒவ்வொரு முனையிலும், இக்குழாய்கள் பற்றுக் கோடாக வைக்கப் பட்டிருக்கும். செறிப்பானின் மேல் கலத்திற்குள் இருக்கும் நீராவி இக்குழாய்களின் வெளியே சுருக்கப் படும். செறிப்பானின் கீழே இருக்கும் சுடு கிணறு (hotwell) என்னும் பெரிய தேக்கக் கிண்ணத்தில் நீராவி பெறப் படும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> செறிப்பானில் குளிர்ந்த நீரோட்டத்தின் அளவு, உள் மற்றும் வெளி வெப்பம், நீராவி வெப்பம் இயல்பாற்றல், குழாய்ப் பொருள், வடிவளவு ஆகியவை வழியலகுகளாக (parameters) இருக்கும். இவையனைத்தும் கணக்கிடப் பட்டவுடன், பரப்பளவு, வெப்பத்தை மாற்றத் தேவையான குழாய்களின் எண்ணிக்கை ஆகியவை பின் வரும் சமன்பாட்டிலிருந்து கணக்கிடப் படும். q = UA\theta_m இதில் q என்பது வெப்ப மாற்றி மதிப்பீட்டைக் குறிக்கும். U என்பது வெப்ப மாற்றிக் குணகத்தைக் குறிக்கும். θm என்பது சராசரி வெப்ப வேறுபாட்டு மடக்கையைக் குறிக்கும், இது °F இல் இருக்கும். A என்பது குழாயின் பரப்பளவைக் குறிக்கும். நீராவியைக் குளிர்விக்கப் பயன் படுத்தும் நீரின் தன்மை, கலத்தினுள் இருக்கும் செறி பொருள் (condensate), நீராவியின் வேதியியல்பு ஆகியவற்றைக் கொண்டே ஒரு செறிப்பான் தேர்ந்தெடுக்கப் படும். பொதுவாக, நன்னீருக்கு, மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் ஆழ் குழாய்கள் (admiralty tubes) பயன் படும். இக்குழாய்கள், செறிப்பான் குழாய்த் தகட்டினுள் உருட்டப் படும். எனினும், அணு ஆற்றல் பயன்களில் குளிர்ந்த நீரின் கசிவு நிகழ்வதைக் குறைக்க, குழாய்த் தகட்டினுள் குழாய்களுக்குப் பற்று வைக்கப் படும். சிறிது உப்பான அல்லது கடல் நீர்ப் பயன்களுக்கும் குழாய்த் தகடுகளில் உருட்டும் (roll) இணைப்புகளுக்கும் தற்போது டைட்டேனியம் பயன் படுகிறது. குழாய் தாங்கும் தொலைவு, குழாய் வேறுபடும் முறை, நீர்–சம்மட்டி முறை, சுடு கிணற்றில் குளிர்ந்த நீரின் கசிவு, குழாய்த் தகடுகளின் இறுக்கம், குழாய்களில் நீராவியின் தாக்குதல் போன்றவை பெரிய செறிப்பான்களைத் தயாரிக்கும் போது, உண்டாகும் சிக்கல்களாகும். முதலீட்டிற்கும், இயக்கச் செலவுக்கும் இடையே உள்ள தொடர்பின் உயர் மதிப்பீட்டை வைத்தே செறிப்பானின் இறுதித் தேர்வு நடை பெறும். செறிப்பானைப் பயன் படுத்தும் ஒரு குளிர்ந்த நீர்ச் சுற்று வழியைப் படத்தில் காணலாம். —இரா. இந்து நூலோதி. Donald D. Fink, H. Wayne Beaty, Standard Hand Book for Electrical Engineers, Eleventh Edition, McGraw-Hill Book Company, New York, 1978. <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்த பக்கத்தில் ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> செறி பருப் பொருளில் பாசிட்ரான் அழிப்பு பொருள்கள் பாசிட்ரானை உட்கவர்வதைப் பற்றிய ஆய்வுகள் தொடக்கத்தில் பாசிட்ரானுக்கும், எலெக்ட்ரானுக்கும் இடையிலுள்ள ஒற்றுமையை நிறுவுவதற்காகவே செய்யப் பட்டன. இவற்றின் மூலம், திபாடு என்பார் பாசிட்ரான்கள், சம ஆற்றலுள்ள எலெக்ட்ரான்களைப் போலவே, பருப் பொருள்களுக்குள் ஊடுருவுகின்றன என்று கண்டு பிடித்தார். பருப் பொருள்கள் பாசிட்ரானை உட்கவர்வதைப் பற்றிய ஆய்வுகளிலிருந்து துகள் அழிந்து, ஃபோட்டானாக மாறுகிறது என்ற கருத்து, சரிதானா என்பதை ஆய்வு செய்யும் வாய்ப்புக் கிட்டியது. அதிலிருந்து, பாசிட்ரான்களின் இறுதி முடிவையும் தெரிந்து கொள்ளலாம். எலெக்ட்ரான் கூட்டங்கள் நிறைந்துள்ள பொருள்களுக்குள் நுழைகிற பாசிட்ரான் நெடு நேரத்துக்கு இருக்காது. ஏனெனில், எலெக்ட்ரான்களைப் போல மின் கடத்தலிலோ, வளிம நிலைக் கடத்தலிலோ, உலோகவியல் அல்லது மின்னாற் பகு பொருள் கடத்தலிலோ, பாசிட்ரான்களின் பங்கு எதுவும் இல்லை. அத்துடன் ஒன்றுக்கொன்று நெருங்கி வரும் எலெக்ட்ரானும், பாசிட்ரானும் ஒன்றையொன்று ஈர்த்து மோதிக் கொண்டு அழிந்து விடும். ஒரு வேளை, எதிர்ப் புரோட்டான் என ஒன்று இருந்தால், பாசிட்ரான் அதனுடன் சேர்ந்து, ஓர் எதிர் ஹைட்ரஜன் அணுவை உருவாக்கக் கூடும். ஆனால், இது வரை, எதிர்ப் புரோட்டான் இருப்பதாகக் கண்டு பிடிக்கப் படவில்லை. எனவே, பாசிட்ரான் எலெக்ட்ரானுடன் மோதி அழிவதே ஒரு வழியாகத் தெரிகிறது. இத்தகைய பிணைவு காரணமாகக் கதிர் ஆற்றல் வெளிப் பட வேண்டும் என ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை கூறுகிறது. E= mc² என்னும் சமன்பாட்டில் m–ஐ ஒத்த நிலை ஆற்றல்கள் இரண்டு துகள்களும் அழியும் போது, கதிர்களாக வெளிப்பட்டே ஆக வேண்டும். இரண்டு அழிந்து போன துகள்களின் ஓய்வு நிறைகள் ஏறத் தாழ, ஒரு மில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்டுக்குச் சமமாக இருப்பதால், வெளிப் படும் கதிரின் ஆற்றலும், அதே அளவில் இருக்கும். துகள்களுக்கு இயக்க ஆற்றல் ஏறத் தாழ இல்லை எனவே வைத்துக் கொள்ளலாம். இந்தப் பொருள் அழிவு நிகழ்ச்சியில் ஆற்றல் மற்றும் உந்தத்தின் அழியாத் தன்மை விதிகளைப் பொருத்திப் பார்க்கும் போது வெளிப் படும் கதிர்களின் தன்மை, ஆற்றல் அளவு ஆகியவற்றைப் பற்றி இரண்டு இயலக் கூடிய கூறுகள் அறியப் பட்டுள்ளன. சுற்றுப் புறத்தில், வேறு துகள்கள் எதுவுமில்லாத வெற்றிடத்தில் எலெக்ட்ரானும், பாசிட்ரானும் கூடுமானால், ஒவ்வொன்றும் அரை மில்லியன் எலெக்ட்ரான் வோல்ட் ஆற்றலுள்ள இரண்டு ஃபோட்டான்கள் எதிரான திசைகளில் வெளிப் படும். அப்போதுதான், ஆற்றல், உந்தம் ஆகிய இரண்டுமே அழியாமலிருக்கும். இதற்குப் பதிலாக ஓர் அணுக் கருவுடன் பிணைந்திருக்கும் எலெக்ட்ரானுடன் பாசிட்ரான் கூடுமானால், ஏறத் தாழ ஒரு மில்லியன் எலெக்ட்ரான் வோல்ட் ஆற்றலுள்ள ஒரே ஒரு ஃபோட்டான் வெளிப் படும். எலெக்ட்ரான் மற்றும் பாசிட்ரானின் உந்தத்தை அணுக் கரு எடுத்துக் கொண்டு விடும். இதனால், மீண்டும் ஆற்றலும், உந்தமும் அழியாமல் காக்கப் படுகின்றன. பாசிட்ரான்–எலெக்ட்ரான் மோதலின் போது, அரை மி.எ. வோல்ட் ஆற்றலும், ஒரு மி எ. வோல்ட் ஆற்றலும் கொண்ட இரு வகை ஃபோட்டான்கள் வெளிப் படும் என எதிர் பார்க்கலாம். ஆனால், பருப் பொருளுக்குள் நுழைகிற பாசிட்ரான்கள் அழிவதற்கு முன்னால், ஏறத் தாழ தம் இயக்க ஆற்றல் முழுதையும் இழந்து விடுவதால், அணுக் கருவின் உள்ளே ஊடுருவ முடிவதில்லை. எனவே, அரை மி.எ. வோல்ட் அளவில் ஆற்றலுள்ள இரண்டு ஃபோட்டான்கள் வெளிப் படுவதற்கான நிகழ் வாய்ப்பே மிகுதியாக இருக்கிறது. இந்த ஊகங்களை ஆய்வுகள் உறுதிப் படுத்தியுள்ளன. தோரியத்தின் கதிரியக்க ஐசோடோப்பிலிருந்து பெறப் பட்ட உயர் ஆற்றல் காமாக் கதிர்களைக் காரீயத்திற்குள் செலுத்தினால், அதற்குள்ளேயே பாசிட்ரான்கள் உண்டாக்கப் படுகின்றன. அவை உடனடியாக ஏனைய எலெக்ட்ரான்களுடன் கூடி அழிந்து, அரை மி.எ. வோல்ட், ஒரு மி.எ. வோல்ட் ஆகிய ஆற்றல் அளவுகள் கொண்ட காமாக் கதிர்களை வெளியிடுகின்றன. இந்தத் துணைக் காமாக் கதிர்களின் ஆற்றல் படு காமாக் கதிர்களின் ஆற்றலையோ, உட்கவர் பொருளின் தன்மையையோ பொறுத்திருக்கவில்லை.உட்கவர் பொருள் வெளியிடக் கூடிய சிறப்பியல்புக் காமாக் கதிர்களுக்கும், துணைக் காமாக் கதிர்களுக்கும் எந்த வித ஒற்றுமையும் இல்லை. அவற்றின் அலை நீளங்கள் சிதறல் கோணத்தைப் பொறுத்திருக்கவில்லை. எனவே, அவை காம்ப்டன் சிதறலால் தோற்றுவிக்கப் பட்டவையல்ல, படு காமாக் கதிரின் ஆற்றல் 1.5 அல்லது 2 மி.எ. வோல்ட்டுக்கு மேற்பட்டதாக இருக்கும் போது, மட்டுமே துணைக் காமாக் கதிர்கள் தோன்றின. இப்பண்புகளிலிருந்து படு காமாக் கதிர்கள் காரியத்துக்குள் உண்டாக்கிய பாசிட்ரான்கள் அழிவிலிருந்தே நுணைக் காமாக் கதிர்கள் தோன்றின என்பது உறுதிப் பட்டது. இத்தகைய ஆய்வுகள் பாசிட்ரான்கள் தம் இயக்க ஆற்றலில் பெரும் பகுதியை இழக்கும் வரையே தன்னிச்சையாக இருக்க முடியும் என்பதையும், அதன் பிறகு, அவை எலெக்ட்ரான்களுடன் கூடி, அழிந்து விடுகின்றன என்பதையும் காட்டுகின்றன. ஒரு பாசிட்ரானின் சராசரி வாழ் நேரம், அதைச் சுற்றியுள்ள. எலெக்ட்ரான்க௧ளின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும், இயல்பாகவே எலெக்ட்ரான்கள் மிகுதியாக உள்ளமையால், பாசிட்ரான்௧ள் 10-13 நொடி அளவுக்கு மேல் நிலைப்பதில்லை. பாசிட்ரான்கள் இது வரை கண்டு பிடிக்கப் படாமலிருந்ததற்கு இதுவே காரணம், காஸ்மிக் கதிர் ஆய்வுகள், இயற்கையில் கடல் மட்டத்தில உள்ள எலெக்ட்ரான்களுக்குச் சமமான அளவுகளில் பாசிட்ரான்களும் உள்ளன என்று காட்டுகின்றன. அறிவியலார் சிலர் அனைத்து அணுக் கருக்களும் நியூட்ரான், பாசிட்ரான் ஆகியவற்றின் கூட்டமைப்பே என்ற கருத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால், அது பரவலாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பாசிட்ரான் என்பது எலெக்ட்ரானின் எதிர்த் துகள். சாதாரணமான பருப் பொருளுக்குள் அதைப் புகுத்தினால், அது முதலில் சுற்றியுள்ள அமைப்புடன் மின் காந்தத் தன்மையில் இடை வினை செய்து, அதன் பிறகு, ஓர் எலெக்ட்ரானுடன் மோதும். அப்போது, இரண்டும் அழிந்து, காமாக் கதிர்களாக மாறி விடுகின்றன. அவ்வாறு அழிவதற்கு முன், பாசிட்ரானின் வாழ் நேரம், அதைச் சுற்றியுள்ள எலெக்ட்ரான் அடர்த்தியைப் பொறுத்தது. எலெக்ட்ரான்–பாசிட்ரான் அழிவிலிருந்து தோன்றும் காமாக் கதிர்களில் அத்துகள்களின் ஆற்றல், உந்தம், சார்புத் தற்சுழற்சி ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன. கடந்த நாற்பதாண்டுகளில் மெதுவான பாசிட்ரான்கள் பருப் பொருளுடன் செய்யும் இடை வினைகளைப் பற்றி ஆய்வு முறைகளிலும், கொள்கை முறைகளிலும், தீவிரமான ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றின் மூலம், இயற்பியலிலும், வேதியியலிலும் உள்ள பல சிக்கல்களுக்கு விடை காணப் பாசிட்ரான் அழிவு உத்தியை வெற்றிகரமாகப் பயன் படுத்தும் வழி முறைகள் வளர்ந்துள்ளன. பாசிட்ரான் வாழ் நேரம், ஆற்றல் பரவீடு, அழிவுக் காமாக் கதிர்களின் கோணத் தொடர்புகள் ஆகியவற்றை அளவிட்டு அழிவுக்கு முன் எலெக்ட்ரானும், பாசிட்ரானும் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி, மிகவும் மதிப்பு வாய்ந்த தகவல்களைப் பெற முடியும். அவற்றிலிருந்து ஆய்வு செய்யப் படும் பொருள்களின் பண்புகளைப் பற்றி ஊகித்தறியவும் முடியும். நீர்மங்களிலும், திண்மங்களிலும் பாசிட்ரானின் வாழ்நேரம் 10-10 10-8 நொடி அளவிலேயே உள்ளது. அதை மின்னணு முறையில், துல்லியமாக அளந்து விடலாம். இதற்குச் சோடியம்–22 போன்ற பாசிட்ரான் தோற்றுவாய்கள் பயன் படுகின்றன. சோடியம்–22 ஒரு பாசிட்ரானை உமிழும் போது, கூடவே ஓர் அணுக் கருக் காமாக் கதிரையும் உமிழ்கிறது. இந்தக் காமாக் கதிர் பதிவாகும் நேரம், பாசிட்ரான் பிறந்த நேரம் ஆகும். அடுத்து, பாசிட்ரான் ஏதாவது ஓர் எலெக்ட்ரானுடன் மோதி அழியும் போது, அழிவு மூலக் காமாக் கதிர் வெளிப் பட்டுப் பதிவாகிறது. இவ்விரு பதிவுகளுக்கும், இடைப்பட்ட நேர இடைவெளி பாசிட்ரானின் வாழ் நேரம் ஆகும். இரட்டைக் காமாக் கதிர்கள் வெளிப்படும் வினைகளில், அவற்றுக்கிடையிலுள்ள கோணத் தொடர்பு பாசிட்ரான்–எலெக்ட்ரான் இரட்டை உந்தப் பரவீட்டை எதிர்பலிக்கிறது. திண்ம நிலை இயற்பியல் ஆய்வுகளில், பாசிட்ரான் அழிவைப் பயன்படுத்தும் போது, இந்தக் கோணத் தொடர்பைக் கண்டு பிடிக்கும் உத்தி பரவலாகப் பயன் படுகிறது. இரண்டு காமாக் கதிர்களின் திசைகளுக்கிடையிலான கோணம், சில மில்லி ரேடியன்கள் அளவிலேயே இருக்கும். இரட்டைக் காமாக் கதிர் உமிழ்வு வகையில் ஒரு காமாக் கதிரின் ஆற்றல் பரவீடு அழிவடைகிற இரட்டை உந்த அடர்த்தியையும் பொறுத்திருக்கிறது. இதற்கு டாப்ளர் விளைவு காரணமாகும். வழக்கமான பாசிட்ரான் ஆய்வுகளில், சோடியம்–22 அல்லது கோபால்ட்–58 போன்ற பெரும் வாழ்நாளுள்ள கதிரியக்கத் தோற்றுவாய்களிலிருந்து வெளிப் படும் உயர் ஆற்றல் பாசிட்ரான் கற்றை ஆய்வு செய்யப் படும் அமைப்புக்குள் புகுத்தப் படுகிறது. அழிவுக்கான நிகழ் வாய்ப்பை விட, அயனியாக்கத்திற்கும், கிளர்வூட்டலுக்குமான நிகழ் வாய்ப்புகள் மிகவும் அதிகமாகையால், படு கற்றையிலுள்ள பாசிட்ரான்கள் தம் இயக்க ஆற்றலை விரைவாக இழந்து விடுகின்றன. சில எலெக்ட்ரான் வோல்ட்டுகளுக்கும், குறைவான ஆற்றல் உள்ள போதே, அழிவு மேம்படுகிறது. இத்தகைய மெது பாசிட்ரானின் முடிவு, அதன் சுற்றுப் புறத்தைப் பொறுத்தது. வளிமங்களிலும், நீர்மங்களிலும், சில மின் கடவாத் திண்மங்களிலும், சில பாசிட்ரான்கள் எலெக்ட்ரான்களைப் பிடித்துக் கொண்டு, பாசிட்ரோனியமாக மாறி விடும். பாசிட்ரோனியம் என்பது 6.8 எலெக்ட்ரான் வோல்ட் பிணைப்பு ஆற்றலுள்ள இரு துகள் அமைப்பு ஆகும். பாசிட்ரான் அணு பாசிட்ரான் மூலக் கூறு போன்ற ஏனைய கட்டுண்ட நிலைகளும் தோன்ற முடியும், ஆனால், அவை மிகுதியாகக் காணப் படுவதில்லை. ஒரு குறிக்கோள் தன்மையான உலோகப் படிகத்தில் பாசிட்ரோனியம் தோன்றாது. அதில், வெப்பச் சமநிலையை எட்டியவுடன், பாசிட்ரான் அழிந்து விடும். சமமான சீர்மைக் கருத்துகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்டு, நன்கு தெரிந்திருக்கும் தேர்வு விதிகள் வலிமையான தற்சுழற்சிச் சார்ந்த அழிவுப் பண்புகளைக் கண்டு பிடிக்க உதவியதன் காரணமாகவே மேற்காணும் விளக்கத்தை உருவாக்க முடிந்தது. பாசிட்ரான் எலெக்ட்ரான் அமைப்பு ஒற்றைத் தற்சுழற்சி நிலையிலிருக்குமானால், அழிவின் போது இரண்டு காமாக் கதிர்களும், அது மூன்று தற்சுழற்சி நிலையிலிருக்கும் போது, மூன்று காமாக் கதிர்களும் வெளிப் படும். ஒற்றைக் காமாக் கதிர் வெளிப் படுவது அணுக் கருப் பின் வாங்கலுடன் மட்டுமே நடைபெறும். அதற்கான திகழ் வாய்ப்பு மிகவும் குறைவு. மூன்று காமாக் கதிர் வெளிப்படும் அழிவு ஏற்படுவதற்கான நிகழ் வாய்ப்பு இரட்டைக் காமாக் கதிர் வெளிப்படும் அழிவுக்கான நிகழ் வாய்ப்பை விட ஏறத் தாழ ஆயிரம் மடங்கு குறைவு. எனவே, மூன்று காமாக் கதிர்கள் வெளிப் படும் நிகழ்வுகளின் எண்ணிக்கைக்கும், இரட்டைக் காமாக் கதிர்கள் வெளிப் படும் நிகழ்வுகளின் எண்ணிக்கைக்கும் இடையிலான தகவு, பாசிட்ரானைச் சூழ்ந்துள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை மிக நுட்பமாகப் பொறுத்திருக்கிறது. பாசிட்ரோனியம் உருவாகி, அதன் பின்னர், மோதல்கள் எதுவும் ஏற்படாமலிருந்தால், மேற்காணும் தகவு 3:1 ஆக இருக்கும். உலோகம் போன்ற ஒரு தற்சுழற்சிச் சராசரியாக்கப் பட்டஊடகத்தில், பாசிட்ரோனியம் உருவாகாமல், பாசிட்ரான் ஒரு சிதறல் நிலையிலிருந்து அழியுமானால், இந்தத் தகவு ஆயிரம் மடங்கு சிறியதாகி விடுகிறது. அழிவு வாழ் நேரம் தற்சுழற்சிச் சார்ந்த நிகழ் வாய்ப்பை எதிர்பலிக்கிறது. வெற்றிடத்தில் சிறும ஆற்றல் நிலையிலுள்ள ஒற்றைத் தற்சுழற்சிப் பாசிட்ரோனியம் 1.25 X 10-10 நொடியில் அழிந்து, இரண்டு காமாக் கதிர்களை வெளியிடுகிறது. மூன்று தற்சுழற்சியுள்ள பாசிட்ரோனியம் 1.4 X 10-7 நொடி வரை நீடிக்கிறது. செறிவுள்ள ஓர் ஊடகத்தில், இந்நீண்ட வாழ்நாள் உள்ள பாசிட்ரோனியம், அடுத்துள்ள எலெக்ட்ரான்களுடன் இடை வினை செய்கிறது. அப்போது, வெளியிலிருந்து வரும் ஓர் எலெக்ட்ரான், அதிலுள்ள பாசிட்ரானுடன் மோதி, இரட்டைக் காமாக் கதிர் வெளிப்படும் முறையில், அழிவு ஏற்படுத்துவதால், அந்தப் பாசிட்ரோனியத்தின் வாழ் நேரம் பெரிதும் குறைந்து விடக் கூடும். இவ்வாறு, ஒரு சிக்கலான வகையில், பல விதமான வாழ் நேரங்கள் காணப் படுகின்றன. இரட்டைக் காமாக் கதிர் கோணத் தொடர்பும், ஒரு சிக்கலான வாழ் நேரப் பரவீடு இருப்பதைக் காட்டுகிறது. ஊடகத்தின் அணுக்களில் கட்டுண்ட எலெக்ட்ரான்களுடன் மோதிப் பாசிட்ரான்கள் அழிவடையும் போது, வாழ் நேரப் பரவீடு அகன்றிருக்கும். பாசிட்ரோனியம் உருவாகும் சமயங்களில், அது தன் நிறை மைய உந்தத்திற்கு நேரிணையாக ஒரு குறுகிய முகட்டுப் பட்டையைத் தோற்றுவிக்கிறது. ஆய்வுகள் மூலமாக, வெவ்வேறு சிதைவு வகைகளைப் பிரித்தறிய முடிகிறது. இதன் அடிப்படையில், பாசிட்ரோனியத்தின் உள்ளார்ந்த பண்புகளை ஆராய்வதற்கும், பாசிட்ரோனியமும், பாசிட்ரான்களும், அணுக்களுடனும், மூலக் கூறுகளுடனும் செய்யும் இடை வினைகளைக் கண்டு பிடிப்பதற்கும் பல முக்கியமான ஆய்வு உத்திகள் உருவாக்கப் பட்டுள்ளன. வளிமங்களில், மெது பாசிட்ரான்கள் சிதறும் முறைகள், பாசிட்ரோனியம் உருவாவது, பாசிட்ரோனியம் சிதறப் படுவது ஆகியவை முக்கியமாக, ஆய்வு செய்யப் படுகின்றன. கூட்டு மூலக் கூறுகளுடன் குறிப்பாக நீர்மங்களில் உள்ளவற்றுடன் பாசிட்ரானும், பாசிட்ரோனியமும் செய்யும் இடை வினைகளைப் பற்றிய ஆய்வுகள் ஒரு புதிய வேதியியல் துறையே உருவாக வழி செய்துள்ளன. எளிய நீர்மங்களில், குறிப்பாக, நீர்ம ஹீலியத்தில் பாசிட்ரான் அழிவு ஏற்படும் போது, வியக்கத் தக்க அளவில் மிகுதியான நிகழ்வுகள் தோன்றுகின்றன. நீர்ம ஹீலியத்தில் தன்னிச்சையான எலெக்ட்ரான்கள் உண்டாக்கும் குமிழ்களைப் போலவே, பாசிட்ரோனியமும் தான் அழிவதற்கு முன்னால், ஒரு தன் நிலைப்புள்ள குவாண்டம் குமிழியை உண்டாக்குவதாக, ஆய்வுகளிலிருந்து உறுதியான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இரட்டைக் காமாக் கதிர்களின் கோணத் தொடர்பைப் பயன் படுத்தி, இத்தகைய குமிழில் சிக்கிக் கொண்டிருக்கிற பாசிட்ரோனியத்தின் சுழிப் புள்ளி ஆற்றலை அளவிட முடியும். அதன் மூலம், குமிழின் ஆரத்தையும், கணக்கிட்டுக் கொள்கையடிப்படையில் பெறப் பட்ட மதிப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். கரிமத் திண்மங்களில் பாசிட்ரான் அழிவு ஆய்வுகளிலிருந்து தெரிய வரும் பல வகையான வாழ் நேர அளவுகளும், குறுகிய கோணத் தொடர்பு ஆக்கக் கூறுகளும், அவற்றில் ஓரளவுக்குப் பாசிட்ரோனியங்கள் தோன்றும் நிகழ் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. பல வகையான வாழ் நேர ஆக்கக் கூறுகள் வெப்ப நிலை, அழுத்தம், படிகவியல் தன்மை ஆகியவற்றைப் பொறுத்திருப்பதிலிருந்து, இத்தகைய திண்மங்களில் பாசிட்ரோனியத்தின் நடத்தை பற்றிய தன்னிச்சைப் பருமக் (free volume) கொள்கை உருவாக்கப் பட்டது. குறைந்த அணு அடர்த்தியுள்ள பகுதிகளில் தோன்றுவதற்குப் பாசிட்ரான்கள் காட்டும் நாட்டத்தைப் பயன் படுத்தி, நீர்மப் படிகங்களிலும், பல்லுறுப்பிகளிலும் நிகழும் கட்ட மாற்றங்கள் (phase changes) ஆராயப் பட்டுள்ளன. அயனி நிலைப் படிகங்களில் பாசிட்ரான்கள் தலம் பெயர்ந்த நிலைகளிலிருந்து அழிவதுடன் சில, படிகத்தின் வெவ்வேறு பிழை மையங்களிலும் சிக்கிக் கொள்ளக் கூடும். பாசிட்ரோனியம் உருவாவதற்கான அறிகுறிகளும், ஒரு பாசிட்ரானும், எதிரின அயனிகளும் இணைந்த கட்டுண்ட நிலைகள் தோன்றுவதற்கான அறிகுறிகளும் காணப் படுகின்றன. ஆக்சைடுகளிலும், நிலைமை மிகவும் சிக்கலானதாகவே உள்ளது. ஆக்சைடு தூள்களை வைத்துச் செய்யப்பட்ட ஆய்வுகள், பாசிட்ரோனியம் உருவாவதற்கான பெரும் நிகழ் வாய்ப்பு இருப்பதையும், தூள்களிலிருந்து பாசிட்ரோனியம் விரவி, வெளிப் படுவதையும் காட்டுகின்றன. குவார்ட்ஸ் போன்ற சில ஒற்றைப் படிகங்களில் களர் துகள்களை ஓத்துள்ள ஒரு தலம் பெயர்ந்த பாசிட்ரோனியம் போன்ற நிலை காணப் பட்டு, ஆய்வு செய்யப்பட்டுள்ளது. உலோக இயற்பியலில், பாசிட்ரான் அழிவு உத்திகள் பலவிதமாகப் பயன் பட்டுள்ளன. உயர் தரமான ஒற்றைப் படிகங்களில், பாசிட்ரான்கள் தலம் பெயர்ந்த நிலைகளிலிருந்து அழிவுறுகின்றன. அவற்றின் நேர் மின் காரணமாக, அவை நேர் மின்னுள்ள அயனி மையங்களால் விலக்கப் படுகின்றன. அவை கடத்தல் எலெக்ட்ரான்களுடன் கூடி, இரட்டைக் காமாக் கதிர் உமிழ்வு முறையில் அழிகின்றன. இவ்விரு காமாக் கதிர்களின் திசைகளுக்கிடையிலான கோண வேறுபாட்டை நுட்பமாக அளவிட்டால், பாசிட்ரான் சந்திக்கும் எலெக்ட்ரான்களின் உந்த அடர்த்தியைப் பற்றிய விவரம் தெரிய வரும். உலோகங்களில் இந்தக் கோணத் தொடர்புகளில் ஏற்படும் கூரிய முறிவுகள், கடத்தல் பட்டை எலெக்ட்ரான்களின் ஃபெர்மி பரப்பின் நிலைக்கு நேரிணையானவை. ஒழுங்கு பிறழ்ந்த பதிலீட்டு உலோகக் கலவைகள் போன்ற பொருள்களில், வேறு எந்த முறையாலும் ஃபெர்மி பரப்பின் வடிவத்தையும், பரிமாணத்தையும் கண்டு பிடிக்க முடியாத போது, உயர் பிரிகைத் திறனுள்ள கோணத் தொடர் ஆய்வுகள் பயன் படுகின்றன. சமம் (parity) பேணப் படாத கதிரியக்கப் பாசிட்ரான் சிதைவிலிருந்து வெளிப்படும் ஒரு திசைப் பட்ட தற்சுழற்சிகள் உள்ள பாசிட்ரான்களைப் பயன் படுத்தி, அயக் காந்த எலெக்ட்ரான்களின் உந்த அடர்த்தியைப் பற்றி விவரம் அறிய முடிகிறது. கடத்தல் எலெக்ட்ரான்கள் ஏறக் குறைய, தன்னிச்சையாக உள்ள அலுமினியம், கார உலோகங்கள் போன்றவற்றில் பாசிட்ரானின் வாழ் நேரம், காமாக் கதிர்களின் கோணத் தொடர்பு ஆகியவற்றை அளவிடுவதன் மூலம், பல பன்பொருள் இயற்பியல் கொள்கை ஆய்வு உத்திகள் சரியானவையா என்பதைக் கண்டறிய முடிந்திருக்கிறது. பல உலோக அமைப்புகளில், பாசிட்ரானின் நடத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளப் பட்டிருப்பதாலும், பாசிட்ரான்–எலெக்ட்ரான் இடை வினைகள் நன்கு விளக்கப் பட்டிருப்பதாலும், எலெக்ட்ரான் பட்டைக் கட்டமைப்பின் அடிப்படையில், இரட்டைக் காமாக் கதிர்க் கோணத் தொடர்பைப் பகுப்பாய்வு செய்து, எலெக்ட்ரான் அலைச் சார்பெண்களின் தன்மையை ஆய்ந்து பார்க்க முடிகிறது. பாசிட்ரான்களின் வாழ் நேரங்களைக் கவனத்துடன் அளவிட்டதிலிருந்து, அவை அணுக் காலியிடங்கள், இடப் பெயர்ச்சிகள், நுண் துளைகள் போன்ற அணிக் கோவைப் பிழைகளில் சிக்கி விட முடியும் என்பது தெரிய வந்திருக்கிறது. தலமாக்கப் பட்ட நிலையில், பாசிட்ரான் ஒரு குறைந்த மின்னடர்த்தியைச் சந்திக்கும் காரணத்தால், அதன் வாழ் நேரம் மிகுதியாகிறது. அழிவு மூலக் காமாக் கதிர்களின் ஆற்றலும், இரட்டைக் காமாக் கதிர்க் கோணத் தொடர்பும், உந்த அடர்த்தியிலும், ஒப்பான ஒரு மாற்றத்தைக் காட்டுகின்றன. இவ்விளைவுகளைப் பயன் படுத்தி, உலோகவியல் சிக்கல்களை நுணுக்கமாக ஆய்வு செய்ய முடிகிறது. எடுத்துக் காட்டாக, ஓர் உலோகத்தின் வெப்ப நிலை உயரும் போது, வெற்றிடங்களின் எண்ணிக்கை மிகுந்து கொண்டே போகிறது. அதன் காரணமாகப் பாசிட்ரான் வாழ் நேரப் பரவீட்டில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வதன் மூலம், வெற்றிட உருவாக்க ஆற்றலைக் கண்டு பிடிக்க முடிகிறது. சூடாக்கி மெல்லக் குளிர்விப்பது, சூடாக்கித் திடீரெனக் குளிர்விப்பது போன்ற பல ஆய்வுகள் உலோகங்களிலும், உலோகக் கலவைகளிலும் செய்யப் பட்டுள்ளன. எலெக்ட்ரான்களாலும், நியூட்ரான்களாலும் ஏற்படுத்தப் படுகிற கதிரியக்க அழிவினால் வெற்றிடக் கொத்துகள், நுண் துளைகள் ஆகியவை தோன்றுவதையும், பாசிட்ரான் அழிவு அளவீட்டு முறைகளால் கண்டு பிடிக்கலாம். பொருள்களைச் சிதையாமல் சோதிக்கும் உத்திகளில் இவற்றைப் பயன் படுத்த, பல ஆய்வுக் குழுக்கள் முயன்று வருகின்றன. —கே. என். ராமச்சந்திரன் நூலோதி. A.T Stewart and L.O. Roelling, Position Annhilation, Academic Press, New York, 1967. செறிவு அளவுகள் கலவைகளின் செறிவு (concentration) மிக முக்கிய பண்பாகும். கரைசல்களின் செறிவை, அதில் கரைந்திருக்கும் கரை பொருளின் (solute) அளவைக் கொண்டு, பருமனளவிலோ, எடையளவிலோ குறிப்பிடலாம். ஒவ்வொரு செறிவு அளவுகளும், ஆய்வகங்களிலும், தொழிலகங்களிலும் பயன் படுகின்றன. சதவீத முறை. செறிவு அளவகளில் மிக எளியது சதவீத முறையாகும். எனவே, மருந்துப் பொருள் தயாரிப்புகளிலும், வீட்டில் பயன் படத் தயாரிக்கப் படும் கரைசல்களிலும், இச்செறிவு முறை பயன் படுகிறது. நிறை சதவீதம் என்பது, நூறு பகுதி கரைசலில் எவ்வளவு நிறை கரை பொருள் பகுதி கரைந்துள்ளது என்பதைக் குறிப்பிடுவதாகும். சான்றாக. 10% உப்புக் கரைசலில், 10 கிராம் உப்பு, 90 கிராம் நீரில் கரைக்கப் படுவதால், அதன் மொத்த எடை 100 கிராமாக உள்ளது. வளிமங்களை எடையிடுவதில், மிகு சிக்கல் உள்ளமையால், அவை பருமன் சதவீதமாகக் குறிப்பிடப் படுகின்றன. காட்டாக, காற்றில் 78% நைட்ரஜன் வளிமம் பருமளைவில் உள்ளதாகக் குறிக்கப் படுகிறது. நீரில் ஆல்கஹால் கரைந்துள்ளதைப் போன்றே, நீர்மங்களில் கரைந்துள்ள கரைசல்களையும் பருமன் சதவீதத்தால் குறிப்பிடலாம். மோலாரிட்டி. வேதியிலார், எவ்வளவு மோல் கரை பொருள் கரைந்துள்ளது என்பதையே கருதுவர்; எவ்வளவு கிராம் கரை பொருள் கரைந்துள்ளது என்பது முக்கியமன்று. மோலாரிட்டி (molarity) சுருக்கமாக M என்று குறிப்பிடப்படுகிறது. மோலாரிட்டி என்பது, எவ்வளவு மோல் கரை பொருள் ஒரு லிட்டர் கரைசலில் உள்ளது என்பதாகும். சான்றாக, 12M HCl கரைசல் என்பது 12 HCl மூலக் கூறு எடை, அதாவது, 438 கிராம் HCl ஒரு லிட்டர் நீரில் கரைந்திருக்கிறது என்று பொருள். மேலும், 0.5 லிட்டர் கரைசலும், 12 M கரைசலேயாகும். இங்கே குறிப்பிட்டதைப் போல, மோல் என்பது, கிராமில் பொருளின் எடை அதன் மூலக் கூறு எடைக்குச் சமமானதாகும் வேதிப் பொறியாளர் சில நேரங்களில், மோல் என்பதைப் பவுண்ட்-மூலக் கூறு எடையில் குறிப்பிடுகின்றனர். மோலாலிட்டி. உப்பைச் சேர்ப்பதால், நீரின் உறை நிலை குறைகிறது. இத்தகைய கரைசல்களின் செறிவுகளை எவ்வளவு மோல் கரை பொருள் ஒரு லிட்டர் கரைசலில் கரைத்திருக்கிறது என்பதை விட, எவ்வளவு எடையுடைய கரைப்பானில் கரைந்துள்ளது என்பதே தேவையாகிறது. எனவே, இவ்வகைச் செறிவுகளை மோலாலிட்டியில் (molality) குறிப்பிடுதல் பொருத்தமாகும். மோலாலிட்டி m என்ற குறியீட்டால் குறிக்கப் படுகிறது. மோலாலிட்டி என்பது எவ்வளவு மோல் கரை பொருள் 1000 கிராம் கரைப்பானில் கரைந்துள்ளது என்பதாகும். சான்றாக, 31.2 கிராம் சுக்ரோஸ் (C₁₂H₂₂O₁₁) மூலக் கூறு எடை 342) 200 கிராம் நீரில் கரைக்கப் பட்டால், (அதாவது 0.5 மோல் சுக்ரோஸ் / 100 கி. நீர்) அக்கரைசலின் செறிவு 0.5m ஆகும், நீர்த்த நீரிய கரைசல்களில் (dilute aqueous solutions) மோலாரிட்டிச் செறிவும், மோலாலிட்டிச் செறிவும் ஏறக் குறைய சமமாக இருக்கும். ஒன்றிற்கு மேற்பட்ட அடர்த்தியுடைய இரு வேறு கரைசல்களில், மோலாலிட்டியும், மோலாரிட்டியும் வேறு படுகின்றன. மோலாலிட்டியை, மோலாரிட்டியுடன் பின் வரும் சமன்பாட்டால் தொடர்பு படுத்தலாம். நார்மாலிட்டி. மோலாரிட்டி என்கிற செறிவு ஒரு மூலக் கூறில் ஒன்றிற்கும் மேற்பட்ட வினைப் படு உறுப்புகளைக் கொண்ட கரைசல்களின் வினைத் திறனை விளக்குவதில்லை. சான்றாக, சல்ஃப்யூரிக் அமிலம், ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைப் போல் இரண்டு மடங்கு ஹைட்ரஜன் அயனிகளை வழங்குவதால், O.IM சல்ஃப்யூரிக் அமிலம், O.IM ஹைட்ரோ குளோரிக் அமிலம் நடுநிலையாக்கும் காரத்தைப் போல் இரு மடங்களவு காரத்தை நடு நிலையாக்குகிறது. பருமனறி பகுப்பாய்வு போன்று, வினைப் பொருள்களின் வினைத் திறன்களைக் கணக்கிடும் இடங்களில் நார்மாலிட்டி (normality) எனும் செறிவு அலகு பயன் படுகிறது. இதன் குறியீடு N. மோலாரிட்டியை வினைப் பொருளில் இருக்கும் வினை திறன் மிக்க உறுப்புகளின் எண்ணிக்கையால் பெருக்கினால், நார்மாலிட்டி கிடைக்கிறது. இரட்டைச் சிதைவு (double decomposition) வினைகளில், நார்மாலிட்டி என்னும் செறிவு குறிப்பிட்ட வினைகளுக்கு உரியதாக இல்லா விட்டால், ஏற்ற செறிவன்று. சான்றாக, பாஸ்ஃபோரிக் அமிலம் சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினை புரிந்து, NaH₂PO₄, Na₂HPO₄ அல்லது Na₃PO₄ ஆகியவற்றை உண்டாக்கலாம். எனவே, பாஸ்போரிக் அமிலத்திற்கு, மூன்று நார்மாலிட்டிகள் இருக்கும். அது வெளியேற்றும் ஹைட்ரஜன் அயனிகளைப் பொறுத்து, நார்மாலிட்டி மாறுபடுகிறது. ஆச்சிஜனேற்ற இறக்க வினைகளில் இணை திறன் மாறுபாடு நிகழ்கிறது. எனவே, ஆக்சிஜனேற்ற எண் மாறுபாட்டிலிருந்தே, நார்மாலிட்டியைக் கணக்கிட வேண்டும். இரு கரைசல்கள் ஒன்றையொன்று முறித்தல் வினையில் ஈடு படும் போது, பயன் படுத்தப் பட்ட கரைசல்களின் நார்மாலிட்டி பெருக்குத் தொகை சமமாக இருக்கும். சான்றாக V₁ பருமனளவு கரைசலை முறித்தல் வினையில் ஈடுபடச் செய்கையில், N₂ நார்மாலிட்டி கரைசல் V₂ பருமனளவு கரைசலை முறிக்கிறது. எனவே, V₁ கரைசலின் நார்மாலிட்டி, \begin{align}N_1 & = \frac {V_2 N_2}{V_1} \\ \therefore V_1 N_1 & = V_2 N_2\end{align} கரைசலின் பருமனளவு மில்லி லிட்டரில் குறிப்பிடப்படும் போது, பருமனளவு, நார்மாலிட்டி பெருக்குத் தொகை மில்லி சமமாகவும் (milli equivalents) லிட்டரில் இருந்தால், சமான அளவிலும் (equivalents) இருக்கும். ஃபார்மாலிட்டி. தற்காலத்தில், மோலார் செறிவை விட, ஃபார்மாலிட்டி (formality) என்ற அலகை வேதியியலார் பயன் படுத்துகின்றனர். ஏனெனில், மின் பகுளி கரை பொருள் அயனிகளாக இல்லாமல், மூலக் கூறுகளாகவே இருக்கும். இதன் குறியீடு F. ஃபார்மாலிட்டி என்பது மூலக் கூறு எடை லிட்டர் ஆகும். அயனியாகாத கரை பொருள்களின் மோலாரிட்டியும், ஃபார்மாலிட்டியும் சமமாக இருக்கும். மோல் சதவீதம் (மோல் பின்னம்). கரைசல்களின் பல பண்புகள் காட்டாக, ஒன்றின் ஆவியழுத்தம் எவ்வளவு மோல்கள், கரை பொருள் எவ்வளவு மோல்- கள் கரைப்பானில் கரைந்துள்ளது என்பது பற்றிய விகிதம் முக்கியமேயன்றி, பருமன் அல்லது எடை விகிதம் முக்கியமன்று. மோல் பின்னம் என்பது கரை பொருளுக்கு (எவ்வளவு மோல்கள்), கரைசலிலிருக்கும் மொத்த உறுப்புகளின் (மொத்த மோல்கள்) விகிதமாகும். இதன் குறியீடு NA அல்லது XA (A பொருளுக்கு). சான்றாக, 16 கிராம் மெத்தனால் (0.5 மோல்) 18 கிராம் நீரில் (ஒரு மோல்) கரைந்தால், மெத்தனாலின் மோல் பின்னம் = 0.5/1.5 அல்லது 1/3; மோல் சதவீதம் 33.3. வளிமங்களுக்கு மோல் சதவீதமும், பருமன் சதவீதமும் ஒன்றே ஆகும். —த. தெய்வீகன் செறிவுக் கலம் வேறுபட்ட மின் முனைகளை இணைக்கும் போது, பொதுவாக இரு வகை மின் கலங்கள் (cells) கிடைக்கின்றன. இவை வேதிக் கலங்கள் (chemical cells), செறிவுக் கலங்கள் (concentration cells) என்று வகைப் படுத்தப் படுகின்றன. வேதிக் கலத்தின் மின் இயக்க விசைக்குக் (electromotive force) காரணம், மின் கலத்தில் நிகழும் வேதி வினை ஆகும். செறிவுக் காலத்தில், பொருள் (matter) ஒரு பகுதியினின்றும், மறு பகுதிக்கு மாற்றப் படுகிறது. இம்மாற்றத்தால், கட்டின்மை ஆற்றலில் (free energy) குறைவு ஏற்படுகிறது. இக்கட்டின்மை ஆற்றல் குறைவால், செறிவுக் கலத்தில் மின்னியக்க விசை ஏற்படுகிறது. மேலும், இவ்விரு வகைக் கலங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு நீர்மச் சந்திப்பு (liquid function) இருக்கக் கூடும். அதாவது, கலம் அயனிப் பெயர்ச்சியுடன் கூடியதாகவோ, அற்றதாகவோ இருக்கலாம். இதன் அடிப்படையில், மின் வேதிக்கலங்களைப் பின் வருமாறு வகைப் படுத்தலாம்: செறிவுக் கலன்களின் மின்னியக்க விசை (emf), இரு மின் முனைகளுக்கு இடையே உள்ள செறிவைப் பொறுத்து அமைகிறது. இரு மின் முனைகளுக்கு இடையில் உள்ள செறிவு வேறுபட்டால், பொருள் ஒரு மின் முனையிலிருந்து, மற்றொரு மின் முனைக்கு மாற்றப் படுகிறது. ஒரே விதமான இரண்டு மின் முனைகள், ஒரே கரைசலில் வைக்கப் பட்டிருப்பினும், வெவ்வேறு செறிவுகளைப் பெற்றிருக்கக் கூடும். காட்டாக, கீழ்க் காணும் செறிவுக் கலத்தில் H_2 \big( P_1 \big) | H\oplus | H_2 \big( P_2 \big) இரண்டு ஹைட்ரஜன் மின் முனைகள், P₁, P₂ என்ற வெவ்வேறு அழுத்தங்களில், ஒரே ஹைட்ரஜன் அயனிக் கரைசலில் வைக்கப் பட்டுள்ளன. இக்கலத்தின் மின்னியக்க விசை, இரண்டு ஹைட்ரஜன் மின் முனைகளின் அழுத்த வேறுபாட்டால் விளைகிறது. இவ்வாறே, இரு வேறு செறிவுள்ள ரசக் கலவை மின் முனைகள், (amalgam electrodes) உலோக அயனிகளைக் கொண்ட கரைசலில் வைக்கப் படும் போது, மின்னியக்க விசை ஏற்படுகிறது. காட்டாக, Cd \big( Hg \big)C_1 | Cd^{2+} கரைசல் Cd \big( Hg \big) | C_2 என்ற செறிவுக் கலத்தில் C₁, C₂ என்ற இரு வேறு செறிவுகளைக் கொண்ட கேட்மியம் ரசக் கலவைகள் [Cd(Hg)]₂ கேட்மியம் அயனிகளைக் (Cd²+) கொண்ட கரைசலில் வைக்கப் படுகின்றன. இச்செறிவு கலத்தின் மின்னியக்க விசை, ரசக் கலவைகளிலுள்ள கேட்மியம் உலோகத்தின் செறிவு வேறுபாட்டால் ஏற்படுகிறது. மேற்கூறிய ஹைட்ரஜன் கேட்மியம் ரசக் கலவை மின் முனைகள், அயனிப் பெயர்ச்சியற்ற மின் முனைச் செறிவுக் கலங்கள் ஆகும். இவ்வாறு, மின் முனைகளின் செறிவுகளில் வேறுபாடில்லாமல், மின் முனைகள் வைக்கப் படும் மின் பகுளிக் கரைசல்களின் செறிவுகளில் வேறுபாடு இருத்தல் கூடும். இவை மின் பகுளிக் கரைசல் செறிவுக் கலங்கள் (electrolytic concentration cells) எனப் படும். சான்றாக, மின் வேதிக் கலங்கள் ┌────────────┴────────────┐ ↓↓ வேதிக் கலங்கள்செறிவுக் கலங்கள் ┌─────┴─────┐┌─────┴─────┐ ↓↓↓↓ அயனிப்அயனிப்அயனிப்அயனிப் பெயர்ச்சியுடன்பெயர்ச்சிபெயர்ச்சியுடன்பெயர்ச்சி கூடியவைஅற்றவைகூடியவைஅற்றவை <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> செறிவுக் கலம் 1இல் இரண்டு ஹைட்ரஜன் மின் முனைகள் ஒரே அழுத்தத்தில் a₁, a₂ என்ற இரு வேறு செயல் திறன்களைக் கொண்ட ஹைட்ரஜன் அயனிக் கரைசல்களில் வைக்கப் படுகின்றன. இச்செறிவுக் கலத்தின் மின்னியக்க விசை, ஹைட்ரஜன் அயனிக் கரைசல்களின் செறிவுகளின் வேறுபாட்டால் ஏற்படுகிறது. கலம் 2இல் இரு வெள்ளி (Ag) முனைகள், a₁, a₂ என்ற இரு வேறு செயல் திறன்களைக் கொண்ட வெள்ளி Ag+ அயனிக் கரைசல்களில் வைக்கப் பட்டுள்ளன. இக்கலத்தில், வெள்ளி அயனிக் கரைசல்களின் செறிவு வேறுபாட்டால், மின்னியக்க விசை ஏற்படுகிறது. மேலும், இவ்விரண்டு மின் கலங்களும், கரைசல்களுக்கிடையே நீர்மச் சந்திப்பைப் பெற்று விளங்குகின்றன. ஆகவே, இவ்விரண்டு கலங்களும், அயனிப் பெயர்ச்சியுடன் கூடிய செறிவுக் கலங்களாகும். மின்முனைச் செறிவுக் கலங்களும் சமன்பாடுகளும், ஹைட்ரஜன் மின்முனைச் செறிவுக் கலத்தில், H_2 (P_1) | H^\bigoplus | H_2 (P_2) \qquad (P_1 > P_2) P₁, P₂ ஆகிய இரு வேறு அழுத்தங்களில் ஹைட்ரஜன் மின் முனைகள் ஒரே செறிவுள்ள ஹைட்ரஜன் அயனிக்(H+) கரைசலில் வைக்கப்பட்டுள்ளன. இக்கலத்தின் முழு வேதி வினை: சமன்பாடு (அ) இன் படி, இச்செறிவுக் காலத்தில் 0.5 மோல் எண்ணிக்கை ஹைட்ரஜன் வளிமம், ஒரு மின் முனையின் P, வளி மண்டல அழுத்தத்திலிருந்து, மற்றொரு மின் முனையிலுள்ள P. வளி மண்டல அழுத்தத்திற்கு மாற்றப்படுகிறது. அதாவது, இக்கலத்தின் வினை ஹைட்ரஜன் வளியில் P, அழுத்தத்திலிருந்து P₂ அழுத்தத்திற்கு இயல்பாக விரிவடையும். 25°C இல் இக்கலத்தின் மின்னியக்க விசை E ஐப் பின் வரும் சமன்பாட்டின் மூலம் கணக்கிடலாம். E = \frac {0.059}{2} \ log \big( \frac {P_1}{P_2} \big) இச்சமன்பாட்டிலிருந்து, இச்செறிவுக் கலத்தின் மின்னியக்க விசை ஹைட்ரஜன் மின் முனைகளின் அழுத்தங்களைப் பொறுத்ததேயன்றி, அவை வைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் அயனிக் கரைசலின் செறிவைப் பொறுத்ததன்று என்பது தெளிவாகிறது. இதே போல், துத்தநாக ரசக் கலவைகளாலான செறிவுக் கலத்தைச் சான்றாகக் கூறலாம். Z_n (Hg)(Z_n \rightleftharpoons C_1) | Z_n^{2+} கரைசல் | Z_n (Hg)(Z_n \rightleftharpoons C_2) இக்கலத்தில், C₁, C₂ என்ற இரு வேறு செறிவுகளில் துத்தநாகத்தைக் கொண்ட, துத்தநாக ரசக் கலவை (Zn /Hg) மின் முனைகள், துத்தநாக அயனிகளைக் கொண்ட (Zn2+) கரைசலில் வைக்கப்பட்டுள்ளன. இக்கலத்தின் முழு வேதி வினை, Zn (Hg)C_1 = Zn (Hg)C_2 ஆகும். அதாவது C₁ அடர்வின் துத்தநாகத்தைக் கொண்ட ரசக் கலவையிலிருந்து துத்தநாகம், C₂ அடர்வில் துத்தநாகத்தைக் கொண்ட ரசக் கலவைக்கு மாற்றப் படுகிறது. இவ்வினையால், இச்செறிவுக் கலத்தின் மின்னியக்க விசை விளைகிறது. இச்செறிவுக் கலத்தின் மின்னியக்க விசை E ஐ 25°Cஇல் தோராயமாகக் கணக்கிட என்ற சமன்பாட்டைப் பயன் படுத்தலாம். மின் பகுளிச் செறிவுக் கலங்கள் (அயனிப் பெயர்ச்சியற்றவை). கீழே கொடுக்கப்பட்டுள்ள மின் கலத்தின் வேதி வினை H_2 \text {( வ . ,1 வ . ம. )}|HCl (a_1),AgCl (தி.) |Ag \frac{1}{2}H_2 \text{(வ )} + AgCl (திண்) \rightleftharpoons Ag (திண்) + HCl(a_1) ஆகும். (a₁⇌ ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் செயல் திறன்) இக்கலத்தை a₂ செயல் திறன் கொண்ட ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைப் பெற்ற, மற்றொரு வேதிக் கலத்துடன் ஒன்றையொன்று எதிர்க்கும் வகையில் இணைத்தால், பின் வரும் வாய்பாடுடைய கலம் கிடைக்கும். H_2 \text {( வ . ,1 வ . ம. )} HCl (a_1) AgCl (தி.)| Ag \cdot Ag | AgCl (தி.)HCl (a_2) | H_2 \text {( வ . ,1 வ . ம. )} இக்கலத்தின் முழு வேதி வினை, HCl(a₂) = HCl(a₁) ஆகும். அதாவது, கலத்திலிருந்து பெறப் படும் ஒரு ஃபாரடே மின்னோட்டத்திற்கு, ஒரு மோல் எண்ணிக்கை ஹைட்ரோகுளோரிக் அமிலம், செயல் திறன் a₂ஐக் கொண்ட கரைசலிலிருந்து, செயல் திறன் a₁ உள்ள சுரைசலுக்கு மாற்றப் படுகிறது. இக்கலத்தின் மின்னியக்க விசை Eஐ 25°C இல் E = 0.059 \ log \big( \frac {a_2}{a_1} \big) என்ற சமன்பாட்டின் மூலம் கணக்கிடலாம். a₁, a₂ ஆகியவை ஹைட்ரோகுளோரிக் அமிலக் கரைசல்களின் செயல் திறன்கள் ஆகும். இத்தகைய கலங்களின் மின்னியக்க விசைகளை அளந் தறிவதன் மூலம், கரைசல்களின் செயல் திறன் குண கங்களைக் கண்டறியலாம். அயனிப் பெயர்ச்சியுடன் கூடிய செறிவுக் கலம். என்ற செறிவுக் கலம் அயனிப் பெயர்ச்சியுடன் கூடிய செறிவுக் கலத்திற்குச் சான்றாகும். இக்கலத்தின் மின்னியக்க விசை, கலத்திலுள்ள நீர்மச் சந்திப்பால் ஏற்படும் மின்னழுத்தமும் சேர்ந்ததாகும். இக்கலத்திலிருந்து பெறப் படும் ஒவ்வொரு ஃபாரடே மின்னோட்டத்திற்கும், கலத்தில் t(-) சமான எடை (equivalent weight) ஹைட்ரோகுளோரிக் அமிலம் செயல் திறன் a₂ஐக் கொண்ட கரைசலிலிருந்து, செயல் திறன் a₁ கொண்ட கரைசலுக்கு மாற்றப் படுகிறது. இதனையே, t_{(-)}HCl (a_2) = t_{(-)}HCl (a_1) எனக் குறிப்பிடலாம். இங்கு t (-) என்பது எதிர் மின் அயனியின் அயனிப் பெயர்ச்சி எண்ணாகும். இத்தகைய அயனிப் பெயர்ச்சியுடன் கூடிய கலத்தின் மின்னியக்க விசையை (E) 25°C இல் கணக்கிட, E = 2xt_{(-)}\times 0.059 \ log \big( \frac {m_2r_2}{m_1r_1} \big) என்ற சமன்பாட்டைப் பயன்படுத்தலாம். இங்கு m₂ , m₁ ஆகியவை ஹைட்ரோகுளோரிக் அமிலக் கரைசல்களின் மோலாலிட்டிகள்: r₁, r₂ ஆகியவை கரைசல்களின் செயல் திறன் குணகங்கள். t(-) என்பது எதிர் மின் அயனியின் அயனிப் பெயர்ச்சி எண் ஆகும். ஆகவே, இத்தகைய செறிவுக் கலத்தை அமைத்து, அதன் மின்னியக்க விசை Eஐ அளந்தறிந்தால், எதிர் மின் அயனிப் பெயர்ச்சி எண்ணை t(-) அறிய முடியும். மேலும், இக்கலத்தில் இவ்விரு கரைசல்களுக்கிடையே உள்ள நீர்மச் சந்திப்பு மின்னழுத்தத்தை (E) 25°C இல் E = 2 \times t_{(-)}\times 0.059 \ log \big( \frac {m_2r_2}{m_1r_1} \big) என்ற சமன்பாட்டின் மூலம் கணக்கிடலாம். m₂, m₁ ஆகியவை ஹைட்ரோகுளோரிக் அமிலக் கரைசல்களின் மோலாலிட்டிகள். r₁, r₂ ஆகியவை இக்கரைசல்களின் செயல் திறன் குணகங்கள். இதே போல் நேர் மின் அயனியின் அயனிப் பெயர்ச்சி எண்ணைப் பின் வரும் செறிவுக் கலத்தில் அமைத்து, அதன் மின்னியக்க விசையை அளந்தறிதல் மூலம் கணக்கிடலாம். Ag|AgCl(தி), HCl(a₁) | HCl(a₂), AgCl(தி)|Ag| இக்கலத்தின் மின்னியக்க விசை Eஐக் கணக்கிட, 25°Cஇல், E = 2 \times t_{(+)}\times 0.059 \ log \big( \frac {m_1r_1}{m_2r_2} \big) என்ற சமன்பாட்டைப் பயன்படுத்தலாம். இக்கலத்தில் a₁ > a₂. முன் போலவே, m₁ m₂ ஆகியவை கரைசல்களின் மோலாலிட்டிகள். r₁, r₂ ஆகியவை கரைசல்களின் செயல் திறன் குணகங்கள். t(+) என்பது நேர் மின் அயனியின் அயனிப் பெயர்ச்சி எண்ணாகும். செறிவுக் கலங்களின் பயன்கள். தகுந்த செறிவுக் கலங்களை அமைத்து, அவற்றின் மின்னியக்க விசைகளை அளந்தறிவதன் மூலம், கரைசல்களின் pH மதிப்புகள், ரசக் கலவைகளில் உலோகங்களின் செறிவுகள், நேர், எதிர் மின் அயனிகளின் அயனிப் பெயர்ச்சி எண்கள், கரைசல்களின் செயல் திறன் மற்றும் செயல் திறன் குணகங்கள், அணைவுச் சேர்மங்களின் தோன்றுதல் மாறிலிகள், அரிதிற் கரையும் உப்புகளின் கரை திறன், அவற்றின் கரை திறன் பெருக்கங்கள், நீராற் பகுபடு வீதம் மற்றும் நீராற் பகுபடு மாறிலிகள், நீரின் அயனிப் பெருக்கம் போன்றவற்றைக் கணக்கிட இயலும். —ஆர். கல்யாணசுந்தரம் நூலோதி. Samuel H. Maron and Carl F. Pruton, Principles of Physical Chemistry, Third Edition, The Macmillan Company, New York, 1963. சென்ட்டாரஸ் தென் வானக் கோளத்தில் உள்ள பெரிய விண் மீன் குழுவான சென்ட்டாரஸ் (Centaurus) விண் மீன் குழு, பகுதி மனித உருவிலும், பகுதி குதிரை அமைப்பிலும், உள்ள ஓர் உருவமான கிரேக்கப் புராணக் கதைகளில் இடம் பெறும் இனத்தின் பெயரே இக்குழுவிற்குப் பயன் படுகிறது. பால் வழி (milky way) வரையிலும் இக்குழு பரவியிருக்கிறது. இக்குழுவில் உள்ள α–3 என்ற விண் மீன்கள் முதல் ஒளித் தர விண் மீன்களாகும்.. இவற்றில் α–சென்டாரி (α–Centauri) மூன்று விண் மீன்களின் கூட்டிணைப்பு ஆகும். இது 4.3 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இக்கூட்டிணைப்பின் ஒளித் தரம் முறையே +0.04, 1.1,7, 10.68 ஆகும். இவற்றில் மிக வெளிச்சமுள்ள விண் மீன், நிற மாலையிலும், பொருண்மையிலும் சூரியனை ஒத்துள்ளது. இதில் உள்ள மூன்றாம் விண் மீனை 1915ஆம் ஆண்டு ஆர். டி. எ. இன்னஸ் என்பார் கண்டு பிடித்தார். β–விண்மீன் ஓர் இரும விண் மீன் (binary star) ஆகும். இதன் ஒளித் தரம் முறையே 0.8, 4.0 ஆகும். α, β ஆகிய விண் மீன்களை இணைக்கும் கோடு தென் சிலுவை (Southern Cross) விண் மீன் குழு வழியாகச் செல்கிறது. மேலும், இக்குழுவில் ஒமேகா சென்ட்டாரி (ω-Centauri) என்ற கோளக விண் மீன் முடிச்சுகளும் (globular cluster), கதிர் வீச்சு மூலங்களும், எக்ஸ் கதிர் இரும சென்ட்டாரஸ் 3உம் உள்ளடங்கியுள்ளன. கோளக விண் மீன் முடிச்சுகள் 2,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. இதில் 167 மாறு விண் மீன்கள் உள்ளன. சென்ட்டாரஸ் விண் மீன் குழு வானக் கோளத்தில் 1060 சதுரப் பாகைகள் இடத்தை நிரப்பிக் கொண்டுள்ளது. —பெ. வடிவேல் சென்னா இதன் தாவரவியல் பெயர் கேசியா சென்னா (Cassia senna) ஆகும். இது சீசல்பினேசி என்ற இரு வித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. பெருவாரியான அண்மைக் கால நூல்களில் சென்னாவின் தாவரவியல் பெயர் கேசியா ஆங்கஸ்டிஃபோலியா (Cassia angustifolia) என்று குறிப்பிடப்பட்டுள்ள போதும், அதன் பெயர் கே. சென்னாவே ஆகும். இப்பெயர் முதலிலேயே 1753இல் லின்னேயஸ்ஸால் சூட்டப் பட்டதாகும். இதற்குப் பல வட்டாரப் பெயர்களுண்டு. திருநெல்வேலி–சென்னா, நில ஆவாரை, இந்தியன் சென்னா என்பன அவற்றில் சிலவாம். தாயகம். ஆப்ஃரிக்காவைச் சேர்ந்த சோமேலியாவையும், அரேபியாவையும் தாயகமாகக் கொண்ட சென்னாவை, இன்றும் காசியா சிற்றினமாக அரேபிய வறள் பகுதிகளில் காணலாம். மேலும் கே. ஆகுடிஃபோலியா (C. acutifolia) எனப்படும் அலெக்சாண்ட்ரியன் சென்னாவும், திருநெல்வேலி–சென்னாவும் தென்னிந்தியாவில் பயிரிடப் படுகின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> வளரியல்பு. சென்னா 1.5 மீ. வரை வளரக் கூடிய செடியாகும். இலைகள். மாற்றிலையடுக்கு அமைப்பு, சிறகுக் கூட்டிலைகள், 4–7 இணைச் சிற்றிலைகள். இலை எதிரெதிர் அமைப்புக் கொண்டவை. 3 X 0.5 செ.மீ. அளவுடையவை. சொர சொரப்பானவை. தோல் போன்று, இலைக் காம்பில் சுரப்பி இல்லை. இலையடிச் செதில்கள் இரண்டு; மிகச் சிறியவை. மஞ்சரி. நுனி அல்லது இலைக் கோண ரெசீம் ஆகும். மஞ்சரிக் காம்பு கிளைத்தோ, கிளைக்காமலோ இருக்கும். ஏறக் குறைய, 8 செ.மீ. நீளமிருக்கும். பூவடிச் செதில்கள் 2 மி.மீ. நீளமுடையவை. முட்டை வடிவம். மலர். முழுமையான இரு பால் மலர்கள்; ஒழுங்கற்றவை. 1.5 செ.மீ. குறுக்களவு கொண்டவை. புல்லி வட்டம். 5 புல்லிகள் தனித்தவை; கரண்டி போன்றவை. அல்லி வட்டம். 5 அல்லிகள், தனித்தவை; மஞ்சள் வண்ணமும், வட்ட வடிவமும், சிறிய காம்பும் கொண்டவை. மகரந்தத் தாள்கள். 10. அவற்றில் மேலுள்ள மூன்றும் மலட்டுத் தாள்கள், ஏனைய ஏழும் மகரந்தப் பை கொண்டவை. அவற்றில் 2 பெரியவை, 5 நடுத் தரமானவை. மகரந்தப் பைகளின் நுனி துளைகளைக் கொண்டிருக்கும். சூலகம். சூலிலை 1, சூலறை 1, மேல் மட்டம். பல சூல்கள், விளிம்பு ஒட்டு முறை, சூலகம் சிறிய காம்பு கொண்டது. சூலகத் தண்டு 1 செ.மீ. நீளமிருக்கும். சூலகம் புறத்தே மஞ்சள் தூவிகள் கொண்டிருக்கும். கனி. உலர் வெடி கனி (legume); தட்டையாக 5 X 2 செ.மீ. அளவு கொண்டது, விதைகள் ஏறக் குறைய 8, முட்டை வடிவம். சவ்வு போன்றவை. சூழ்நிலை. வளமான கரிசல் மண்ணிலும், வளம் குறைந்த செம்புரை மண்ணிலும் சென்னா பயிராகும். சாகுபடி. சென்னா செடிகள் மூலம் இனப் பெருக்கமடைகின்றது. மானாவாரி விதைப்பிற்கு ஏக்கருக்கு 10–12 கிலோவும், பாசனப் பயிருக்கு 6 கிலோவும் தேவைப் படும். விதைகளை வீசி விதைத்து, உழுது, மூடி, பாத்தி வெட்டி வாய்க்கால் அமைக்கலாம். விதைத்தவுடன் நீர் பாய்ச்சி, மூன்றாம் நாள் உயிர் நீர் விட வேண்டும். பின்னர் 15–20 நாளுக்கு ஒரு முறை பாசனம் தேவை. மொத்தத்தில் 5–8 முறை நீர் தேவை. சில பகுதிகளில் சென்னாவைப் பாத்திகளில் விதைத்து, நாற்றுத் தயாரித்து, பறித்து நடுவர். டிசம்பரில் விதைத்து, பிப்ரவரி மாதத்தில் நாற்றுகள் நன்கு வளர்ந்தவுடன் பறித்து நட வேண்டும். செடிக்குச் செடி 1 X 1 மீ. இடைவெளி இருக்க வேண்டும். மானாவாரியில் ஜுன்–ஜூலையில் விதைப்பர். வறட்சியான ஏப்ரல், மே மாதங்களில் மிகுதியான பாசனம் தேவை. ஆனால், செடிகளுக்கு நிழலிடத் தேவையில்லை. சென்னா, லெகுமினேசி எனப்படும் பெரும் குடும்பத்தைச் சேர்ந்ததால், அதன் வேரில் வளி மண்டல நைட்ரஜனை நிலைப் படுத்தும் பாக்டீரியா வேர் முடிச்சுகள் காணப் படுகின்றன. இதனால், பொதுவாக இப்பயிருக்கு உரமிடத் தேவையில்லை. இருந்த போதிலும், ஏக்கருக்கு முதலுரமாக 8–10 வண்டி எரு இடுவதுண்டு. சென்னாச் சாகுபடியில் பல வகைகளுண்டு. நெல் வயல்களில், அறுவடையான பின் விதைக்கப் படுவது ஒரு வகை. சில இடங்களில், கலப்புப் பயிராகச் சாகுபடி செய்வதுண்டு. தோட்டக்கால் நிலங்களில் மிளகாய், எள் இவற்றுடன் ஊடு பயிராகச் சாகுபடி செய்யப் படுகிறது. கரிசல் நிலத்தில் பருத்தியுடன் விதைப்பர். அறுவடை. சென்னா 5–7 மாதப் பயிராகும். ஏப்ரல்–மே மாதத்தில் செடிகள் பூக்கத் தொடங்கும். இவ்வாறு தொடக்கத்தில், தோன்றும் பூக்களைக் கொய்து விட வேண்டும். இவ்விதம் செய்யா விடில், செடிகள் விரைவில் காய்ந்து விடும். பூக்களை நீக்குவதால், புதுக் குருத்துக்கள் தோன்றிச் செடிகள் விரிந்து படரும். பாசனப் பயிரில் விதைத்த 90 நாளில், மே மாதத்தில் முதல் முறை இலைகளை உருவலாம். முதிர்ந்த, தடித்த, நீலப் பசுமை இலைகளைக் கையால் உருவ வேண்டும். ஒரு மாதத்திற்குப் பின், இரண்டாம் முறை இலைகளை உருவலாம். இறுதியில் இலைகளும், காய்களும் சேர்ந்து உருவி எடுக்கப் படும். இவ்வாறு, ஒரு பருவத்தில் செடியிலுள்ள இலைகள் மூன்று முறை உருவப் படுகின்றன. காய்கள் முற்றிலும் முதிரு முன், கொய்ய வேண்டும். இவ்விதம் செய்தால்தான், காயின் பசுமை நிறம் நிலைத்திருக்கும். ஒரு முறை, காய்களைக் கொய்த பின், செடிகளை நீக்கி விடுவர், இலை பறிக்கும் பயிரில் காய்கள் குறைவாகயிருக்கும். உருவிய இலைகளை மர நிழல் அல்லது ஓலைப் பந்தலின் கீழ் 3–4 நாள் உலர விட வேண்டும். பசுமை நிறம் மாறாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இலைகளின் வண்ணத்தைப் பொறுத்து, சென்னா இலைகளின் தரம் அறுதியிடப் படும். காய்களைக் கொத்துக் கொத்தாகப் பறித்துக் காற்றோட்டமான கொட்டகைகளில் 10–12 நாள் கட்டித் தொங்க விட வேண்டும். வெயிலில் உலர்த்தினால், பசுமை நிறம் மாறி விடும். உலர்ந்த நெற்றுகளை அடித்து, விதைகளை எடுக்க வேண்டும். விளைச்சல். பாசனப் பயிர் ஹெக்டேருக்கு 250–300 கி.கி. உலர்ந்த இலைகளும், 25–30 கி.கி. நெற்றும் கொடுக்கும். மானாவாரியில் 100–125 கி.கி. இலைகளும், 15–30 கி.கி. நெற்றும் கிடைக்கும். சென்னா மருந்தாக இந்திய மேற்கத்திய மருத்துவத்தில் பயன்படுவதால், இது அயல் நாடுகளில் சிறப்புப் பெற்றுள்ளது. மருத்துவப் பயன். இச்செடியின் இலைகள், காய்களில் காணப்படும் மருந்துப் பொருள்கள் வயிற்றைத் தூய்மையாக்கும் பண்பு கொண்டவை, இவை சிறந்த மலச் சிக்கல் நீக்கியாகும், பாலூட்டும் தாய்மார்கள் இம்மருந்தை உட்கொண்டால் அவர்களிடம் சுரக்கும் பாலிலும், மலமிளக்கும் பண்பு காணப்படுவ- தாக அறியப் பட்டுள்ளது. மலமிளக்குவதற்குக் காரணம், ஆந்த்ரோகியூனோன் எனும் துணைப் பொருளேயாகும். இது பெருங்குடல் வளையத் தசை நார்களின் சுருங்கி விரியும் தன்மையை, அலைகள் போல் தூண்டி விடுவதால், குடலிலுள்ள பொருள்கள் வெளியேற்றப் படுகின்றன. சென்னா ஓர் உடல் வளர்ச்சி மருந்தும் ஆகும். அலெக்சாண்ட்ரியன் சென்னா, திருநெல்வேலி சென்னாவைப் போன்று, தென்னிந்தியாவில் பயிரிடப்படுவதில்லை. மேலும், அலெக்சாண்ட்ரிடியன் சென்னா இலைகள் தன்னிச்சையாக வளரும் காட்டுச் செடிகளிலிருந்து எடுக்கப் படுகின்றன. —தி. ஸ்ரீகணேசன் நூலோதி. S.L. Kochhar, Economic Botany in the Tropics, Macmillan Indian Ltd., Madras, 1981; S.C. Datta, Medicinal Plants, NCERT, New Delhi, 1973. சென்னாக் கூனி சுடின ஓட்டுக் கணுக்காலி (crustacea) வகையைச் சேர்ந்த கடல் வாழ் சென்னாக் கூனி, இறாலைப் போன்று வளைந்த உடலையுடையது. உணர் கொம்புகள், கால்கள் போன்ற தொங்குறுப்புகள் இறாலில் உள்ளவை போலவே காணப் படுகின்றன. 2–2.5 செ.மீ. நீளமேயுள்ள இதைச் சிற்றிறால்(shrimp) என்று குறிப்பிடுவர். இதன் இளவுயிரி மிகச் சிறியது. அசெட்டிஸ் (acetes) என்னும் இனம் இந்தியாவின் கிழக்குக் கரை, பர்மா, மலேயாத் தீவுக் கூட்டம் ஆகியவற்றின் மேற்குக் கரைப்பகுதிகளில் மிகுதியாகக் கிடைக்கிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சென்னாக் கூனி கடலில் வாழும் மிதவை நுண்ணுயிரிகளைத் (plankton) தின்று வாழ்கிறது. இறந்து போன விலங்குகளை அரித்தும் தின்கிறது. இது சிறிதாக உள்ளமையால், கடல் நீரோட்டங்களால் கரையை நோக்கி வாரிக் கொண்டு வரப் படுகிறது. உயிரினங்களில் காணப்படும் உணவுத் தொடரில் (food chain) சென்னாக் கூனி முக்கிய பங்கு வகிக்கிறது. இது மிக நுண்ணிய மிதவையுரியை உண்டு வாழ்கிறது. இதைச் சிறு மீன்கள் விழுங்குகின்றன. மிதவையுயிரிகளுக்கும், சிறு மீன்களுக்கும் இடையே சென்னாக் கூனிகள் சிறப்பான இணைப்பாக இருக்கின்றன. ஜனவரி–ஏப்ரல் மாதங்களில் ஆயிரக் கணக்கான முட்டைகள் இடப் படுகின்றன. ஏப்ரல்–ஜூலை மாதங்களில் இளவுயிரிகள் வளர்ந்து செப்டம்பர்–அக்டோபர் மாதங்களில் முதிர்ச்சி நிலை அடைகின்றன. பொதுவாக, பருவ மழைக் காலங்களில், சென்னாக் கூனி கடலில் பெருமளவு காணப் படுவதற்குக் காரணம், இது இனப் பெருக்கத்தால் மட்டுமன்றி, கடல் நீரோட்டத்தாலும் பெருமளவு கரையை நோக்கித் தள்ளப்படுவதேயாகும். நவம்பர்–பிப்ரவரி மாதங்களில் வலைஞர்களால் பெருவாரியாகப் பிடிக்கப் படுகிறது. உடனடியாக விற்பனையாகாதவற்றைக் கடற்கரையில் உலர்த்திப் பக்குவப் படுத்தி விற்பர். செனான் இது ஒரு மந்த வேதித் தனிமம். இதன் குறியீடு Xe. அணு எண் 54. உயர் வளிமத் (noble gas) தொகுதியைச் சார்ந்த இத்தனிமம், தனிம மீள் வரிசை அட்டவணையில் பூஜ்யத் தொகுதியில் இடம் பெறுகிறது. பயன்கள். புகைப்பட மின்னல் விளக்குகளில் செனான் வளிமமே நிரப்பப் பட்டுள்ளது. இவ்விளக்கிலிருந்து சிறந்த வெண்மை நிற ஒளி கிடைக்கும். இவ்வெண்மை நிற ஒளியில் பார்வைப் புல வரம்பிற்குட் பட்ட ஏழு நிறங்களும் சமன் செய்யப் பட்ட முறையில் அமைந்துள்ளன. இவ்வளிமம் எரிந்து முடிவதற்குள் 10.000 முறை அல்லது அதற்கு மேலும் பயன் படுத்தலாம். செனான் வளிமம் நிரப்பப் பட்ட விளக்கு, கார்பன் மின் வில்லிலிருந்து கிடைக்கும் ஒளியின் செறிவுக்கு நெருங்கும் செறிவுடைய வெண்மையான ஒளியைத் தரும். எனவே, பேசும் படங்களைத் திரையிடும் கருவிகளில் இது பெருமளவில் பயன் படுகிறது. செனான். கதிர் வீச்சுகளை எளிதில் உறிஞ்சும். காட்டாக, எக்ஸ் கதிர்களை நன்கு உறிஞ்சும். அசெட்டிலீனுடன் கலக்கப் பட்ட செனான் வளிமக் கலவையில் எக்ஸ் கதிர்களை விழச் செய்தால், செனான் எக்ஸ் கதிர்களை உறிஞ்சி, அசெட்டிலீன் மூலக் கூறுகளுக்குப் பரிமாறுகிறது. இதன் விளைவாக, அசெட்டிலீன் வளிமம் பல்லுறுப்பாகிறது. திசுக்களில் செனானின் ஒப்புக் கரை திறன் மிகுதி. 20% ஆக்சிஜனும், 30% செனானும் சேர்ந்த கலவையைச் சுவாசிக்கும் மனிதன், உடனடியாக ஆழ்ந்த மயக்கத்திற்கு உட்படுகிறான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, இக்கலவை அறுவை மருத்துவப் பிரிவில் பயன்படுகிறது. இக்கலவையைப் பயன் படுத்திய மனிதன், குறிப்பிட்ட காலம் கடந்தவுடன், எவ்வித விளைவும் இல்லாமல் விழித்தெழுகின்றான். செனான் வேதி வினைகளில் மந்தமானது என்பதால், பயன் படுத்துவோருக்கு, எவ்வித நச்சுத் தன்மையையும் ஏற்படுத்துவதில்லை. ஈதர், எத்திலீன் போன்ற ஏனைய மயக்க மருந்துப்பொருள்கள், தீப்பற்றும் அல்லது வெடிக்கும் அபாயம் உள்ளவை; ஆனால், செனான் வளிமம் தீப்பற்றாது; வெடிக்காது; மூளை பற்றிய ஆய்வில் (encephalography) செனான் வளிமம் இன்றியமையாதது. காற்றைச் செலுத்துவதை விடச் செனான் வளிமத்தைக் கபாலத்துள் ஊசியின் மூலமாகச் செலுத்தி, மிகத் தெளிவான எக்ஸ் கதிர்ப் படத்தைப் பெறலாம். மேலும், செனான் வளிமம் தீராத நீண்ட தலைவலியை ஏற்படுத்துவதில்லை; ஆனால், காற்றைச் செலுத்தினால், சிலருக்குத் தீராத தலைவலி ஏற்படும். உயர் ஆற்றல் இயற்பியலின் முக்கியமான கண்டு பிடிப்பு அணுக் கருக் கதிர்கள் ஆகும். எ-டு: காமாக் கதிர்கள். மெசான்கள் முதலியன. குமிழ் அறை (bubble chamber) ஒன்றில், நீர்மம் அதன் கொதி நிலைக்குச் சற்று கூடுதலான வெப்ப நிலையில் வைக்கப் பட்டிருக்கும். அணுக் கரு வினையின் மூலமாகத் தோன்றும் துகள்கள் செல்லும் பாதையில் குமிழ்கள் தோன்றும். இப்பாதையை எளிதில் புகைப் படமாகப் பெறலாம். இம்முறையில் செனானும், குமிழ் அறை நீர்மமாகவே பயன் படுகிறது. நியூட்ரான் எண்ணிகள் (neutron counters), எக்ஸ் கதிர் எண்ணிகள், வளிமம் நிரப்பப் பட்ட தைரட்ரான்கள் (thyratrons), காஸ்மிக் கதிர்கள், இவற்றை அயனியாக்கும் அறைகள் முதலிய துணைக் காரணிகளிலும், புற ஊதாக் கதிர்கள் உருவாக்கும் உயர் அழுத்த மின் வில் விளக்குகளிலும் செனான் வளிமம் பயன் படுகிறது. யுரேனியத்தை எரி பொருளாகக் கொண்ட அணு ஆற்றல் உலைகளில் 3–5% அணுப் பிணைப்பு விளை பொருள் செனான்–135 ஆகும். இந்தச் செனான் மிகச் சிறந்த நியூட்ரான் உறிஞ்சி. எனவே, அணுவாற்றல் உலைகளில், ஹீலியத்தின் உதவியால், இவ்வளிமம் தனித்துச் சேகரிக்கப் பட்டுத் தேவையான இடத்தில், நியூட்ரான்களை உறிஞ்சப் பயன் படுகிறது. கிடைக்கும் விதம். இது நுண் அளவுகளில் தாதுக்களிலும், விண் வெளிக் கற்களிலும் காணப் படுகிறது. தொழில் முறையில் பெறுவதற்கான ஒரே இடம் வளி மண்டலம் மட்டுமே. மில்லியன் பங்கிற்கு 0.086 பங்கு என்ற பருமனளவு வீதத்தில் உலர்ந்த காற்றில் செனான் உள்ளது. காற்றில் காணப் படும் செனான் பின் வரும் 9 ஐசோடோப்புகளைக் கொண்டது. Xe–129 (26.44%), Xe–131 (21.18%), Xe–132 (26.89%), Xe–134 (10.44%), Xe–136 (8.87%), Xe–124, Xe–126, Xe–128 மற்றும் Xe–130 (6.18%). அடைப்புக் குறியுள் குறிக்கப் பட்டுள்ளவை செனானின் பருமனளவு விகிதம் ஆகும். செனானின் மேற்காணும் எந்த ஐசோடோப்பும் கதிரியக்கத் தன்மையைப் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அணு ஆற்றல் உலைகளில், யுரேனியம் அணுக்களை நியூட்ரான் கொண்டு பிளக்கும் போது, நிலைத்த கதிரியக்கமுள்ள செனான் ஐசோடோப்புகள் கிடைக்கின்றன. புவியின் நிறையில் ஏறத் தாழ, 3 X 10-9% செனான் இருப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. மிகச் சிறந்த அளவீட்டின் மூலமாக, 10,00,000 சிலிக்கான் அணுக்களுக்கு 4 அணுக்கள் செனான் இருப்பதாக அறியப் பட்டுள்ளது. இங்கு, தனிமம் கிடைக்கும் அளவை, சிலிக்கான் தனிமத்தை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப் பட்டுள்ளது. கண்டு பிடிப்பு. இங்கிலாந்தில் 1898ஆம் ஆண்டு சர் வில்லியம் ராம்சே என்பாராலும், எம்.டபிள்யூ.- டிராவர்ஸ் என்பாராலும் இவ்வளிமம் கண்டறியப் பட்டது. மாசு நீக்கப் படாத கிரிப்ட்டான் பகுதியிலிருந்து, பின்னக் காய்ச்சி வடித்தல் மூலமாகச் செனானைப் பிரித்தெடுத்தனர், வெளியிடுதல் நிரலியலில் (emission spectra) புதிய கோடுகள் கிடைத்தமையால், இதைப் புதிய தனிமம் எனக் கண்டறிந்தனர். கதிரியக்க ஐசோடோப்புக்கள். பின்வரும் கதிரியக்க ஐசோடோப்புக்கள் அறியப் பட்டுள்ளன. Xe121, Xe122, Xe123, Xe127, Xe129, Xe131, Xe133, Xe135, Xe137, Xe138, Xe139, Xe140, Xe141, Xe143 மற்றும் Xe134. இவை அனைத்துமே யுரேனிய அணுப் பிளப்பு வினையில் தோன்றுபவை. இவை துகள் முடுக்கிகள் (சைக்ளோட்ரான்) உதவியால் பொருத்தமான தனிமத்தை நியூட்ரான் கொண்டு தாக்கும் போதும் பெறப் படுகின்றன. Xe–133 என்ற 5.3 நாளை வாழ் காலமாகக் கொண்ட செனான் ஐசோடோப்பும் Xe–135 என்ற 9.2 மணி நேரத்தை அரை வாழ் காலமாகக் கொண்ட ஐசோடோப்பும் குறிப்பிடத் தக்க அளவில் அணுக் கருப் பிளப்பு வினையில் தோன்றுகின்றன. அணு ஆற்றல் உலைகளில் ஐசோடோப்புகள் தோன்றுவது இடையூறே ஆகும். ஏனெனில், Xe–135 உம் அதை விடக் குறைந்த அளவில் Xe–133உம் மெதுவாக உலையின் எரி பொருளை நச்சுப் படுத்துகின்றன. இதனால், பிளப்பு வினையின் வேகம் குறைகிறது. பண்புகள். செனான் நிறம், மணம், சுவையற்றது; அட்டவணை 1இல் இதன் சில இயற்பியல் பண்புகள் கொடுக்கப் பட்டுள்ளன. மந்த வளிமங்களில், கதிரியக்கமற்ற செனான் மட்டுமே ஏனைய வேதிச் சேர்மங்களுடன் வினைப் பட்டுச் சாதாரண வெப்ப நிலையில் நிலைத்த வினைப் பொருள்களைத் தருகிறது. மேலும், இது நீர், ஹைட்ரோகுய்னோன், ஃபீனால் போன்றவற்றுடன் வலிமை குன்றிய பிணைப்புகளால் இணைந்து படிகக் கூட்டுச் சேர்மங்களைத் (clathrate compounds) தருகிறது. பெருமளவில் தயாரித்தலும் விற்பனை செய்தலும். தொழில் முறையில் காற்றிலிருந்து, செனான் பிரித்தெடுக்கப் படுகிறது. காற்று. நீர்மமாக்கப் பட்டு, வாலை வடிக்கப் படுகிறது. இம்முறையில் கிடைக்கும் ஆக்சிஜன் மீண்டும் வாலை வடிக்கப் படுகிறது. இறுதியில், ஆவியாகாமல் எஞ்சியிருக்கும் பகுதியில் செனானும், கிரிப்ட்டானும் குறைந்த அளவில் உள்ளன. இவ்வளிமங்கள் சிலிக்கா களியால் (silica gel) உறிஞ்சப் பட்டுப் பிரிக்கப் படுகின்றன. இவ்வாறு, பெறப் பட்ட இரு மந்த வளிமங்களும், மாசு நிறைந்தவை. இவற்றைத் தூய்மையாக்க, மீண்டும் வாலை வடிக்கப் படும். பின்பு தேர்ந்தெடுக்கப் பட்ட முறையில், கட்டுப்பாடான வெப்ப நிலைகளில் கிளர்வு கொள் கார்பனால் உறிஞ்சப் பட்டுப் பிரிக்கப் படும். இறுதியில், எஞ்சி நிற்கும் மாசுகளை நீக்க, சூடான டைட்டேனியத்தின் மீது செலுத்தப் படும். இத்தனிமம், மந்த வளிமம் தவிர, ஏனைய வற்றுடன் வினை புரியும் என்பதால், மாசுகள் அனைத்தும் நீக்கப் பட்டுத் தூய செனான் கிடைக்கிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> அணு ஆற்றல் உலைகளில் பெறப் படும் உடன் விளை பொருள்களிலிருந்தும், செனான் வளிமத்தைப் பெறலாம். முதலில் உலையிலுள்ள ஏனைய வளிமப் பொருள்களிலிருந்து, செனானைப் பிரித்தல் வேண்டும். பின்பு, சில மாதங்கள் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க வேண்டும். இதனால், அதில் உள்ள கதிரியக்க ஐசோடோப்புகள் சிதைவுற்று அழியும். கதிரியக்க ஐசோடோப்புகளில் மிக நீண்ட அரை வாழ்காலம் 30 நாளே என்பதால், ஏறத் தாழ 10 மாத காலம் சேமித்து வைத்தால், கதிரியக்கச் செனான் முற்றிலுமாகச் சிதைந்து விடும். எஞ்சியுள்ள நிலைத்த செனானைத் தூய்மைப் படுத்த வேண்டும். தற்காலத் தேவையை நிறைவு செய்ய, காற்றிலிருந்து பெறப் படும் செனான் வளிமமே போதுமானதாக உள்ளது. பகுப்பாய்வு முறைகள். கண்டறியவும், அளந்தறியவும், தற்காலத்தில் நிறை நிரல் வரைவு (mass spectrometry), வளிம நிறச் சாரல் பிரிகை (gas chromatography) ஆகியவை பயன் படுகின்றன. இம்முறைகளைக் கண்டறிவதற்கு முன்னர், குறைந்த வெப்ப நிலையில் தேர்ந்தெடுத்த முறையில், கிளர்வுற்ற கார்பனால் வளிமம் உறிஞ்சப் பட்டே அளந்தறியப் பட்டது. பழைய முறையில் உமிழ் நிற மாலை மூலமாகவே செனான் கண்டறியப் பட்டது. செனான் சேர்மங்கள். இத்தனிமம் பிளாட்டினம் ஹெக்சா ஃபுளுரைடுடனும், (PtF₆) தனிம ஃபுளுரினுடனும் வினைப் படுவதை அறிந்த பிறகே, 1962இல் செனானின் வேதியியல் முற்றிலுமாகத் தெளிவாக ஆராயப் பட்டது; செனான், தன்னுடைய இரட்டை எண் இணை திறன்களான II, IV, VI, VIII ஆகிய நான்கு நிலைகளைக் காட்டிய பின்னும், ஒவ்வொரு நிலைக்கும், நிலைத்த சேர்மங்களைப் பிரித்துப் பெற்ற பின்னும், செனானின் சேர்மங்கள் என்பன சில நிலைத்த ஃபுளுரைடுகள், ஆக்சிஃபுளுரைடுகள், இவற்றின் பகுப்புச் சேர்மங்கள், இரண்டு ஆக்சைடுகள், ஆக்சிஃபுளுரைடுகள், இவற்றின் பகுப்புச் சேர்மங்கள், இரண்டு ஆக்சைடுகள் ஆகியவற்றையே குறிக்கும். செனான் டைகுளோரைடு இருப்பதாகக் கருதப் படுகிறது. ஃபுளுரைடுகள். XeF₂, XeF₄, XeF₆ ஆகிய மூன்று சேர்மங்களும் வெப்ப இயக்கவியல் நிலைப்புத் தன்மைமைப் பெற்றவை. இவற்றைத் தயாரிக்க, ஏறத் தாழ 300–400°C இல் செனானையும், ஃபுளூரினையும் நேரடியாக வினைப் படுத்துதல் வேண்டும். இவ்வெப்ப நிலையில், ஃபுளூரின் மூலக் கூறுகள், குறிப்பிடத் தக்க செறிவுள்ள ஃபுளூரின் அணுக்களுடன் சம நிலையில் உள்ளன. இவ்வணுக்கள் வினை வலி மிக்கவை என்பதால், மந்த வளிமமான செனானுடன் வினைப்பட்டுச் செனான் ஃபுளுரைடு களைத் தரும்; பொதுவாக நிக்கல், தாமிரம் அல்லது அலுமினியக் கலன்களே வினை நிகழப் பயன் படுகின்றன. ஏனெனில், இவையே உயர் வெப்ப நிலைகளிலும், ஃபுளூரினின் வினைத் திறனுக்கு ஈடு கொடுப்பவை. 300°C இல் ஃபுளூரின், ஃபுளுரைடுகளின் சம நிலைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. \begin{alignat}{6} Xe + F_2 & \leftrightharpoons XeF_2 \qquad K_1 && = 1.02 \times 10^4 \text { வ ம}^{-1} \\ Xe F_2 + F_2 & \leftrightharpoons XeF_4 \qquad K_2 && = 155 \text { வ . ம}^{-1} \\ Xe F_4 + F_2 & \leftrightharpoons XeF_6 \qquad K_3 && = 0.291 \text { வ . ம}^{-1} \\ \end{alignat} (வ.ம = வளி மண்டலம்) டைஃபுளுரைடைத் தயாரிக்க, ஃபுளுரினுடன் சிறிது மிகையாகச் செனானைச் சேர்த்தாலே போதும். டெட்ரா ஃபுளுரைடைத் தயாரிக்க, மிகை ஃபுளுரினுடன் ஓரளவு வளி மண்டல அழுத்தத்தைப் பயன் படுத்தினால் போதும். ஆனால், ஹெக்சா ஃபுளுரைடைத் தயாரிக்க, மிக அதிக அளவு ஃபுளுரினைச் சேர்த்து, மிக அதிக அழுத்தத்தையும் பயன் படுத்த வேண்டும். இவ்வுண்மைகளைச் சம நிலை மாறிலிகளின் மதிப்புகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அறை வெப்ப நிலையிலேயே, செனான் டைஃபுளுரைடைத் தயாரிக்கலாம் இதற்கு, ஃபுளூரின் மூலக் கூறை அணுக்களாகச் சிதையச் செய்தல் வேண்டும். அதாவது, புற ஊதாக் கதிர்கள், அயனியாக்கும் கதிர்கள் அல்லது மின்னிறக்கம் போன்ற முறைகளால் மூலக் கூறுகள் அணுக்களாகப் பிரிதலைத் தூண்ட வேண்டும். பண்புகள். சில எளிய செனான் ஃபுளூரைடுகள் மற்றும் XeOF₄ ஆகியவற்றின் பண்புகள் அட்டவணை 2இல் தொகுக்கப் பட்டுள்ளன. அனைத்துச் செனான் ஃபுளுரைடுகளையும், ஹைட்ரஜன் கொண்டு ஒடுக்கிச் செனானாகவும், ஹைட்ரஜன் ஃபுளுரைடாகவும் மாற்றி, அவற்றின் உருவாதல் வெப்பம் அளக்கப் படும். இவ்வாறு பெறப்பட்ட செனான்-ஃபுளூரின் பிணைப்பு ஆற்றல் சராசரியாக 30 கி.கலோ. மோல்-1. இவ்வாற்றலே ஃபுளுரைடு சேர்மங்களை நிலைக்கச் செய்கிறது. செனான் ஃபுளுரைடுகள், சிறந்த ஃபுளுரின் ஏற்றக் காரணிகள் ஆகும். இவற்றின் வினை வரிசை XeF₂ < XeF₄ < XeF₆. இவ்வாறு XeF₆ வலிமை மிக்க ஃபுளூரின் ஏற்றக் காரணி என்பதால், சிலிக்கா அல்லது கண்ணாடியை ஃபுளுரின் ஏற்றமடையச் செய்கிறது. அரோமாட்டிக் வளையங்களில், ஹைட்ரஜனுக்குப் பதிலாக, ஃபுளூரின் அணுவைப் பதிலீடு செய்யவும், நிறைவுறாச் சேர்மங்களுடன் சேர்க்கை வினை நிகழத்தவும், இவை பயன் படுகின்றன. ஃபுளூரின் ஏற்ற வினை வழி முறை ஓர் எலெக்ட்ரான் கவர் வழி முறையே; இயங்கு உறுப்புகள் வினை வழி முறையன்று. ஆக்சைடுகள். செனான் ஹெக்சா ஃபுளுரைடுடன் நீர் வினைப் பட்டு, XeOF₄ என்ற சேர்மம் உண்டாகிறது. தொடர்ந்து, நீருடன் வினை புரிய அனுமதிக்கும் போது, XeO₃ என்ற நிறமற்ற, மணமற்ற, வெடிக்கும் திறன் கொண்ட, எளிதில் ஆவியாகும். வெண்மையான திண்மம் கிடைக்கிறது. செனான் டெட்ராக்சைடு (XeO₄) என்பது சோடியம் பெர்செனேட்டுடன், அடர் சல்ஃப்யூரிக் அமிலம் வினைப் பட்டுக் கிடைக்கும் வளிமம் ஆகும். Na_4XeO_6 + 2H_2SO_4 \rightarrow XeO_4 + 2Na_2SO_4 + 2H_2O O°Cஇல் இதன் ஆவி அழுத்தம் 25 மி.மீ.; நிலையற்ற இச்சேர்மம் வெடிக்கும் இயல்புடையது. ஆக்சி ஃபுளுரைடுகள். செனான் ஆக்சிஃபுளுரைடு (XeOF₄) நீர் அல்லது சிலிக்காவுடன் XeF₅ வினைப் படும் போது கிடைக்கிறது. ஓரளவு நிலைப்புத் தன்மையுடைய இச்சேர்மத்தின் உருகு நிலை 46.2°C; கொதிநிலை 101°C; XeOF₄ உடன் XeO₃ வினைப் படுவதால், செனான் டைஆக்சைடு டைஃபுளுரைடு (XeO₂F₂) உண்டாகிறது. மேலும் XcOF₄ நீருடன் வினை புரியும் போது, இது ஓர் இடை நிலைப் பொருளாகவும் தோன்றுகிறது. XeOF₄ போன்று எளிதில் ஆவியாகாத இச்சேர்மத்தின் நிலைப்புத் தன்மை குறைவு. எனவே, இது எளிதில் XeF₂ ஆகவும் O₂ ஆகவும் சிதையும். செனான் டிரைஆக்சைடு டை ஃபுளுரைடைப் (XeO₃F₂)பெற XeF₆ உடன் பெர்செனேட்டுகளை வினைப் படுத்த வேண்டும். எளிதில் ஆவியாகும் இச்சேர்மம் வெடிக்கும் இயல்புடையது. XeF₄ குறைந்த வெப்ப நிலைகளில் பகுக்கும் போது, XeOF₂ தோன்றுவதாகச் சான்றுகள் உண்டு. அணைவுக் கூட்டுச் சேர்மங்கள். செனான் ஃபுளுரைடுகளும், XeOF₄ உம் பல வகை அணைவுக் கூட்டுச் சேர்மங்களைத் (complex addition compounds) தருகின்றன. நான்கு ஃபுளுரைடு சேர்மங்களும், SbF₆ TaF₅, OsF₅ போன்ற ஃபுளுரைடு ஏற்கும் உலோக ஃபுளுரைடுகளுடன், 2:1, 1:1, 1:2 என்ற இயைபுகளில் வினைப் பட்டு, ஃபுளுரின் பால அமைப்புடைய அணைவுக் கூட்டுச் சேர்மங்களைத் தருகின்றன. இவ்வணைவுச் சேர்மங்களில் XeF+, Xe₂F₃+, XeF₃+, XeF₅+, XeOF₅ என்ற நேரயனிகள் காணப் படுகின்றன. டெட்ராஃபுளுரைடு ஏனைய ஃபுளுரைடு சேர்மங்கள் போல விரைவாகப் பெருமளவில் அணைவுக் கூட்டுச் சேர்மங்களைத் தருவதில்லை. செனான் சேர்மங்கள் பிளாட்டினம் ஹெக்சாஃபுளுரைடுகளுடன் புரியும் வினை, மந்த வளிமங்களின் வரலாற்றில் ஓர் புதிய திருப்பத்தையே உருவாக்கியது. இதன் விளைவாக XeF+, PtF போன்ற அணைவுக் கூட்டுச் சேர்மங்கள் தோன்றலாயின. XeF₆, XeOF₄ ஆகியவை கார ஃபுளுரைடுகள் NaF போன்ற ஃபுளுரைடு அயனி ஈனிகளுடன் வினைப்பட்டு, ஃபுளுரின் அணு, பால அமைப்புடைய அணைவுக் கூட்டுச் சேர்மங்களை உண்டாக்கும். இவ்வணைவுச் சேர்மங்களில் XeF, XeF, XeOF போன்ற எதிரயனிகள் காணப்படுகின்றன. மிகவும் வலிமை மிக்க அமிலங்களான HSO₃F₇ HOTeF₄ போன்றவற்றுடன் செனான் டைஃபுளுரைடு வினைப்பட்டு ஆக்சிஜன் பால அமைப்பைக் கொண்ட FXeOTeF4, Xe (SO₃F)₂ போன்ற அணைவுக் கூட்டுச் சேர்மங்களைத் தரும். XeF₂ உடன் HN(SO₂F)₂ என்ற வலிமை மிக்க அமிலம் வினைப் பட்டு FXeN (SO₂F)₂ என்ற அணைவுக் கூட்டுச் சேர்மத்தைத் தருகிறது. இச்சேர்மம் ஒன்றில் மட்டுமே செனான் நைட்ரஜன் பிணைப்பு உள்ளது. இது AsF₅ உடன் பின் வரும் வாய்ப்பாடுடைய அணைவுக் கூட்டுச் சேர்மங்களைத் தருகிறது. XeN(SO₂F)+AsF₆- [XeN (SO₂F₂)]₂, F+, AsF இவ்வணைவுச் சேர்மங்கள், நிலைப்புத் தன்மைகளில் மாறுபட்ட திண்மங்கள். உலோக பெண்டாஃபுளுரைடு அணைவுச் சேர்மங்கள் சிறந்த ஃபுளூரின் என்ற வினைப் பொருள்கள், ஆன்ட்டிமனி பெண்டாஃபுளுரைடில் கரைக்கப் பட்ட செனான் டைஃபுளூரைடு, தனிமச் செனானுடன் வினைப் பட்டு முற்றிலும் எதிர்பாராத டைசெனான் அயனியைத் (Xe) தரும். நீரியக் கரைசல் வேதியியல். செனான் டைஃபுளுரைடு நீரில் 0°C இல் 25 மி.கி./மி.கி. என்ற அளவில் கரைகிறது. XeF₂ மூலக் கூற்றைக் கொண்ட இக்கரைசல் பின் வருமாறு சிதைகிறது. XeF_2 + H_2O \rightarrow Xe + \frac{1}{2} O_2 + 2HF 0°C இல் அரைச் சிதைவு நேரம் (half time decomposition) ஏறத் தாழ 7 மணி; இதன் மதிப்பு அறை வெப்ப நிலையில் 1/2 மணி. காரக் கரைசல் அல்லது Th4+ போன்ற ஃபுளுரைடு நீக்கி, உடனிருக்க, உடனடியாகச் சிதைவடைகிறது. இதிலிருந்து Xe2+ அயனி நிலையற்றது என்பதையும், அது ஃபுளுரைடு அயனிகள் போன்ற நிலை நிறுத்தியின் முன்னிலையில்தான் நீர்க் கரைசலில் நிலைப்புத் தன்மையைப் பெறும் என்பதையும் அறியலாம். செனான் டைஃபுளுரைடு கரைசல், ஆற்றல் மிக்க ஆக்சிஜனேற்றி, அயோடேட்டைப் பெர்அயோடேட் டாகவும், புரோமேட்டைப் பெர்புரோமேட்டாகவும், குளோரேட்டைப் பெர்குளோரேட்டாகவும், சீரஸ் அயனியைச் சீரிக் அயனியாகவும், கோபால்ட்டஸ் அயனியைக் கோபால்ட்டிக் அயனியாகவும், Ag+ஐ Ag2+ ஆகவும், ஆக்ஜனேற்றம் அடையச் செய்கிறது. காரக் கரைசலில் செனான் டைஃபுளுரைடு ஆறு இணை திறன் கொண்ட செனான் அயனியை எட்டு இணை திறன் நிலைக்கு உயர்த்துகிறது. நீரில் கரைக்கப் பட்ட செனான் டைஃபுளூரைடின் இந்த ஆக்சிஜனேற்றப் பண்புகளுக்கு அது நீரினால் சிதைவடையும் போது தோன்றும் இடைப் பொருளே காரணம். எனலாம். எனினும், இவ்விடைப் பொருள்களை இன்றும் கண்டறிய வேண்டியுள்ளது. XeF₄ அல்லது XeF₆ ஐ நீரில் கரைக்கும் போது, பின் வரும் வினை நடை பெற்று, XeO₃ என்ற இடை நிலைச் சேர்மம் உண்டாகிறது. இக்கரைசல்களும் சிறந்த ஆக்சிஜனேற்றிகள் ஆகும். அதனால் XeF₂ கரைசலை விட வலிமை குன்றியதே ஆகும். \begin{align} 3XeF_4 + 6H_2O & \rightarrow XeO_3 + 2Xe + \frac{3}{2}O_2 + 12HF \\ XeF_6 + 3H_2O & \rightarrow XeO_3 + 6HF\end{align} இக்கரைசல்கள் ஹைட்ரோகுளோரிக் அமிலத்திலிருந்து, குளோரினையும், Mn2+ அயனியை மெதுவாக Mn7+ ஆகவும், அயோடினை அயோடேட்டாகவும், புரோமினைப் புரோமேட்டாகவும் ஆக்சிஜனேற்றம் அடையச் செய்கின்றன. ஆக்சிஜனேற்றம் பெறுவதற்குத் தேவையான காரணி இல்லாத போது, XeO₃ கரைசல் நிலைப்புத் தன்மை உடையது. செனான் டிரைஆக்சைடு கரைசல் வலிமை குன்றிய அமிலக் கரைசல் ஆகும். XeO_3 + H_2O \leftrightharpoons H^{+} + HXeO_4^{-} இதன் சம நிலை மாறிலி 2 X 10-11. இந்த ஆக்சைடின் கார உப்புகளைத் தயாரிப்பது எளிதன்று. இது போல MXeO₃F என்ற கார ஃபுளுரோசெனேட் உப்புக் கிடைக்கிறது. வீரிய மிகு சோடியம் ஹைட்ராக்சைடில் HXeOஐ ஓசோன் கொண்டு, ஆக்சிஜனேற்றம் செய்தும், இதைத் தயாரிக்கலாம். 2HXeO_4^- + 4Na + 2OH^- \rightarrow Xe + O_2 + Na_4 XeO_4 + 2H_2O இங்கு HXeO விகிதமற்ற முறையில் (disproportination) ஏற்ற ஒடுக்க வினைக்கு உட்பட்டுச் சோடியம் பொசெனேட்டைத் தருகிறது. இவ்வுப்பு சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலில் அரிதில் கரையும் என்பதால், வீழ்படிவாகிறது. இக்கரைசலில் இது புரோட்டான் ஏற்றம் பெற்ற பெர்செனேட் எதிரயனியாக உள்ளது. Na_4 Xe O_6 + H_2O \rightarrow 4Na^+ + OH^- + HXeO_6^{3-} பெர்செனேட் கரைசல்கள் நிலையற்றவை; சிதைந்து ஆக்சிஜனை வெளியேற்றுவதுடன், ஆறு இணை திறனுடைய செனானையும் தரும், இவ்வினை வருமாறு: HXeO_6^{3-} + H_2O \rightarrow HXeO_4^- + \frac{1}{2}O_2 + 2OH^- காரத்தில் மெதுவாக நடை பெறும் இவ்வினை pH = 7 க்குக் கீழ் உடனடியாக நிகழும். பெர்செனேட்டுகள் ஆற்றல் மிகு ஆக்சிஜனேற்றிகள்: குறிப்பாக, அமிலக் கரைசலில் வினைத் திறன் மிகுதி. அமிலக் கரைசலில் உள்ள பெர்செனேட்டுகள், மிகு விரைவாக Mn2+ அயனியைப் பெர்மாங்கனேட்டாகவும், Cr3+ஐ டைகுரோமேட்டாகவும், Ag+ஐ Ag2+ ஆகவும், கோபால்ட்டஸ் அயனியைக் கோபால்ட்டிக் அயனியாகவும், ஆக்சிஜனேற்றம் அடையச் செய்யும். அரோமாட்டிக் ஹைட்ரோகார்பனையும், விரைவாக ஆக்சிஜனேற்றம் அடையச் செய்கிறது. இவ்வாக்சிஜனேற்றம் பெர்செனேட்டும், நீரும் வினைப் பட்டுத் தோன்றும் ஹைட்ராக்சில் உறுப்பு இடைப் பொருள் வழியாக நடை பெறுகிறது. சோடியம் பெர்செனேட் தவிர லித்தியம், பேரியம், லாந்தனம், பேரியம் பெர்செனேட்டுக்களும் உள்ளன. கரைசல்கள் போல் அல்லாமல், பெர்செனேட் திண்மங்கள் நிலைப்புத் தன்மை மிக்கவை. அதே சமயத்தில், திண்ம பெர்செனேட் செனேட் K₄XeO₆—2XeO₃ என்ற ஆற்றல் மிகு வெடி பொருளும் தயாரிக்கப் பட்டுள்ளது. பின் வரும் தோராயமான ஆக்சிஜனேற்ற அழுத்த விளக்கப் பட்டியல், செனான் சேர்ம நீர்க் கரைசல்களுக்கு வோல்ட் அலகில் கொடுக்கப் பட்டுள்ளது. நேரடியாகச் செனான் தனிமத்திலிருந்து செனான் சேர்மம் ஒன்றை, நீர்க் கரைசலாகத் தயாரிக்க இயலவில்லை. செனான் தனிமத்தை ஃபுளுரின் அல்லது வினை வலி மிக்க ஃபுளுரைடுகளால் மட்டுமே சேர்மமாக நிலைப் படுத்த முடியும். அமைப்புகள். வளிம நிலையில் உள்ள செனான் டைஃபுளுரைடு சீர்மையான மற்றும் நேர் கோட்டு வடிவுடையது. வளிம நிலையில் உள்ள செனான் டெட்ராஃபுளுரைடு மட்டுமே சம தள சதுர வடிவுடையது. 16 தனிமங்கள் ஹெக்சா ஃபுளுரைடு களைத் தரும். இவற்றில், செனான் ஹெக்சா ஃபுளுரைடு மட்டுமே சீர்மையான எண் கோண வடிவைப் பெறவில்லை. திண்ம அல்லது நீர்ம நிலையில் உள்ள செனான் ஹெக்சாஃபுளுரைடு, வலி மிகு பிணைப்புகளால் பிணைக்கப்பட்ட பல்லுறுப்பிகளாக அமைந்து, ஏனைய ஹெக்சாஃபுளுரைடுகளிலிருந்து மாறுபட்டுக் காணப் படுகிறது. செனான் டிரை ஆக்சைடு முக்கோண பிரமிடு வடிவுடையது. பெர்செனேட்டுகள் எண்கோண வடிவுடையவை. —பி. ஈ. எம். லியாகத் அலிகான் செனிப்புத் தடச் சேதங்கள் விடபம், அல்குல். யோனி, கருப்பை ஆகியவை மகப் பேற்றின் போது சேதமடையும் குருதி உறை கட்டி, கூபக எலும்புச் சேதம், சிறுநீர்ப் புற வழிக்கும், யோனிக்கும் இடையேயான புரையோடிய புண், கருப்பைக் கிழிதல் ஆகியவையும் ஏற்படலாம். விடபச் சேதம். வயது முதிர்ந்த தலைச் சூலிகளில் திசு நெகிழ் தன்மை இல்லாமையாலும், இடுக்கி கொண்டு சிசுவை வெளியே எடுப்பதாலும், குறுகிய, தட்டையான நசிந்த கூபகங்களில் தவறான மகப் பேறு முறையில் செய்வதாலும், விடபத்திற்குச் சேதம் ஏற்படலாம். மிகவும் மோசமான நிலைகளில் சிறுநீர்ப் புற வழிச் சுருக்குத் தசை, மலக் குடல், விடபத் தசைகள், யோனிச் சுவர் அனைத்துமே சேதமடைந்து விடும். இவற்றை, உடனடியாக அறுவை மூலம் சீர் செய்ய வேண்டும். யோனிக்குச் சேதம் ஏற்படும் போது, யோனிச் சுவர்கள் போதிய அளவு விரிவடைவதில்லை. அறுவை முறை மகப் பேறு, சிசுவின் மிகப் பெரிய தலை போன்றவை இதற்குக் காரணங்களாக அமைகின்றன. இதையும் அறுவை கொண்டு செம்மைப் படுத்தலாம். அல்குலிலும், யோனியிலும் குருதி உறை கட்டி. மகப் பேற்றில் குருதி நாளங்கள் கிழிந்து, குருதி தோல் அடித் திசுவில், குருதி உறை கட்டியை உண்டாக்கும். உறை கட்டியைக் கீறி விட்டு வெளியேற்றிச் சிதைந்த குருதி நாளங்களைச் செப்பனிட வேண்டும். கருப்பைக் கழுத்துக் கிழிதல். கடின மகப் பேற்றில் கருப்பைக் கழுத்துக் கிழிந்து, குருதிப் பெருக்கும் வலியும் உண்டாகும். பொதுவாக, இடப் பக்கமாகக் கிழிகிறது. அறுவை மூலம் கருப்பைக் கழுத்தை வெளியே இழுத்துத் தையலிட்டுச் சீர் செய்ய வேண்டும். கருப்பைக் கழுத்துக் கிழிவு. இது தானாகவோ, காரணமின்றியோ, அறுவைக் காயங்களாலோ, நிகழலாம். கருப்பைக் கிழிதலே மிகவும் சிக்கலாகும். குருதிப் பெருக்காலும், அதிர்ச்சியாலும், தாய் மரணமடையலாம். சோகை நோயும் உண்டாகிறது. தடைப்பட்ட பேற்றில், தடையை எதிர்த்துக் கருப்பை முனைப்பாகச் சுருங்கி விரிகிறது. இதன் திட்பம் மெல்லியதாவதால், எளிதில் கிழிதல் ஏற்படுகிறது. இதற்கு முன் தடுப்பாக மருத்துவம் செய்வது நல்லது. கிழிதல் ஏற்பட்டு விட்டால், இதன் தன்மையைப் பொறுத்துச் செப்பனிடலாம் அல்லது அகற்றி விடலாம். கருப்பை உள் நோக்கித் திரும்புவதும், பூப்பிணைப்பு எலும்புகள் தனியாகப் பிரிந்து விடுவதும் அரிய சிக்கல்களாகும். அனைத்துக்கும் ஓய்வு, துயிலூட்டி, வலி நீக்கி, மருந்துகள் அளித்தல், அறுவை முறை என்பவை மருத்துவமாகும். —அ. கதிரேசன் நூலோதி. Bodyzhina, Text Book of Obstetrics, First Edition, Mir Publishers, Moscow, 1983. செனிப்புத் தட மாறுபாடுகள் பிறப்புகளின் குறை வளர்ச்சி, கருச் சிதைவுக்குக் காரணமாக முன்பு கருதப் பட்டது. பொதுவாக, இது சூலகக் குறைபாடுடன் காணப் படுகிறது. இந்நோயுடையோர் மலடியாகவே இருப்பர். இரு கொம்புக் கருப்பை, வளை கருப்பை, அரை வட்டக் கருப்பை போன்ற பிறவி ஊனங்கள் கருச் சிதைவுக்குக் காரணமாகலாம். செனிப்புத் தட மாறுபாடுகளில் (malformations of the female genital tract) முக்கியமானது, பின்னோக்கி வளைந்த கருப்பை ஆகும். ஃபைப்ரோமையோமாக் கட்டிகள், தொங்கு தசை ஆகியவையும் இம்மாறுபாட்டில் அடங்கும். உடலுக்கு ஏற்படும் காயங்கள், இடுக்கி உதவியால் மகப் பேறு, கருப்பைக் கழுத்தை விரித்துச் சுரண்டியெடுக்கும் முறை, கருப்பைக் கழுத்தை அகற்றி எடுத்தல் ஆகியவை கருப்பைக் கழுத்தில் கேடுகளை உண்டாக்கிச் செயலிழக்கச் செய்கின்றன. இது பிறவி ஊனமாகவும் தோன்றலாம். இரண்டு முல்லேரியன் குழல்களிலிருந்து உருவாகும் செனிப்புத் தடம் பல மாறுபாடுகளை உண்டாக்கும். சூலகம், கருவகக் குழல், கருப்பை, யோனி ஆகியவை முழுமையாகவே வளர்ச்சியடையாமல் இருக்கலாம். சில போது குறை வளர்ச்சியுடனும் காணப்படலாம். கன்னிச் சவ்வின் வளர்ச்சியின்மையால் கருப்பையில் குருதித் தேக்கம், கருவகத் தசையில் (myometrium) குருதித் தேக்கம் ஆகியவை தோன்றுகின்றன. இவ்விதமே கருவகக் குழலும் பாதிக்கப் படலாம். இரண்டு கருப்பைகள், இரண்டு கொம்புகள், தடுப்புச் சுவர்கள் ஆகியவை காணப் படலாம். சில சமயம் ஆண், பெண் இரு பாலரின் பிறப்புறுப்புகளும் ஒரே மனிதரில் காணப் படலாம். சில போது ஒரு பகுதி சூலகமாகவும், ஒரு பகுதி விதையாகவும் காணப் படும், சிறுநீர்ப் புறவெளித் துளை உரிய இடத்தில் காணப் படாமல் மேலேயோ, கீழேயோ காணப் படலாம். சிறுநீர்ப் பையே வெளியே தெரியும்படிக் காணப்படும். —அ. கதிரேசன் நூலோதி. Gordon Bourne, Text Book of Gynaecology, Ninth Edition, Churchill Livingstone, London, 1976. செனோலித் இது நுழைவு அனற்பாறைகளில் (intrusive igneous rocks) உள்ளடங்கிக் காணப் படும். முன்னரே, உருவான அனற்பாறைகளின் துணுக்கு அல்லது உள் நுழைவுப் பாறைகள் வரும் வழியிலுள்ள தலப் பாறைகளின் துணுக்குகளைச் செனோலித் (zenolith) என்பர். இவற்றை உள்ளீர்க்கப்பட்ட அயல் பாறைகள் (enclave) என்றும் கூறுவர். இப்பாறைகள் மிகு வெப்பத்திலிருக்கும் உள் நுழைவுப் பாறைக் குழம்புகளில் கலக்கப் படும் போது, இத்துணுக்குகளைச் சுற்றியுள்ள பாறைக் குழம்பின் வேதித் தன்மையும், இத்துணுக்குகளின் வேதித் தன்மையும் மாறுபட்டு, இரண்டிற்கும் பொதுவான புதிய கனிமங்கள் அப்பகுதியில் உருவாகின்றன. இவ்வாறு, சிற்சில இடங்களில் நிறத்திலும், கனிமக் கூட்டுச் சேர்க்கையிலும் வேறுபட்டுக் காணப்படும் ஒரு சிறிய பாறை வளாகப் பகுதியே செனோலித் சேர்க்கையை அறிவதற்கு உதவும். செனோலித் நுழைவுப் பாறைகளான பேத்தோலித் (batholith), சில் (sill), டைக்(dyke) போன்றவற்றை எரிமலை (உமிழ்வு) வாய்ப் பகுதிகளிலும் காணலாம். இவற்றின் அறைகள் நுண்ணிய துகள்களினின்று பல நூற்றுக் கணக்கான மீட்டர் வரை நீளமுடைய பாறைத் துகள்களாக இருக்கலாம். உள்ளடக்கப் படும் அயல் பாறைகளோ, முன்னரே உருவான பாறைகளோ, ஒரே கனிமப் பண்புகளையும் ஒரே உருவாக்கத்தையும் பெற்றவையாக இருப்பின், அவற்றை மரபுச் செனோலித் (cognate zenolith) என்று கூறுவர். முதலில் பாறைக் குழம்பிலிருந்து படிகமாகும் இயல்புடைய பாறை வகைகளில் இவை காணப்படும். இப்பாறைகளுக்கு எடுத்துக் காட்டாகப் பசால்ட் பாறைகளில் காணப் படும் ஆலிவின் கனிம முடிச்சுகளைக் கூறலாம். இக்கனிம முடிச்சுகள் கூர்மையான பக்கங்களையும், உடைந்த பாறைகளின் வடிவமைப்பையும் பெற்றுக் காணப் படும். இப்பாறைகள் கிரானைட் பாறைகளில் காணப் பட்டால், அவற்றின் நிற மாற்றத்திலிருந்து வேறுபடுத்திக் காணலாம். பாறைகளில் முன்னரே படிகமான ஒரே கனிமங்கள் முக்கியமாக, லேப்ரோடோரைட், ஆகைட், ஆலிவின் ஆகியன ஒன்றோடொன்று திராட்சைக் கொத்துப் போல் அமைந்து, குளோமோரோபோர்பைரைட்டிக் என்ற நுண் இழைமையை உருவாக்கியிருப்பதும், இச்செனோலித் பாறைகளுக்கு அடையாளமாகும். கிரானைட் நுழைவுப் பாறைகளில் முன்னரே உருவான கருநிறக் கனிமங்கள் ஆங்காங்கே கொத்துக் கொத்தாகப் புதிதாக ஏனைய இடங்களை விட மிகுதியாகக் காணப் படுவதும் ஒரு சிறிய வளாகப் பகுதியில், இப்பாறைகள் கருநிறம் பெற்றுக் காணப் படுவதும் செனோலித் பாறைகள் இருந்தமைக்கு அடையாளமாகும். மேலும், நுழைவுப் பாறைகளின் குழம்புகளில் தலப் பாறைகளின் துகள்களோ, அயல் அனற்பாறை, படிவுப் பாறை (sedimentary rock), உருமாற்றப் பாறை (metamorphic rock) இவற்றின் பெருந்துகள்களாக உள்ளடக்கப்பட்டோ இருப்பின், அவற்றைத் தற்செயலாக உருவான செனோலித் எனலாம். இப்பாறைகள் சுற்றியுள்ள நுழைவுப் பாறைகளின் வேதிப் பண்பில் பெரிதும் மாறுபட்டுக் காணப்படும். இவற்றில் எளிதில் காணக் கூடிய அளவிற்குத் தொடு மாற்று உருப் பாறைகளின் (contact metamorphic rocks) பண்புகள் மிகுதியாக இருக்கும். செனோலித் பாறைகள் உட்புகுந்த பாறைக் குழம்புகளால் முற்றிலும் மாற்றப்பட்டோ, வெளி ஓரங்களின் ஒரு பகுதி மட்டும் மாற்றப்பட்டோ காணப் படலாம் செனோலித்தும் வேதிப் பண்பை இழந்து, அனற்பாறைக் குழம்பிலிருந்து கிடைக்கக் கூடிய புதிய மூலக் கூறுகளோடு சேர்ந்து இரண்டிற்கும் தொடர்பில்லாத புதிய கனிமங்களை உருவாக்கி, கலப்புப் பாறைகளையே (hybrid rock) உருவாக்கலாம். இம்மாற்றங்களில் முக்கியமான கனிம உருளை அமைப்பும் (orbicular structure) ஒன்றாகும். இதில் ஒரு செனோலித் துகளைச் சுற்றி, வெளிப்புறம் முற்றிலும் மாறுபட்டுக் காணப்படும். பிளவுகளினிடையே புதிய மறு படிகக் கனிமங்களும் காணப் படும். எடுத்துக் காட்டாக, ஒரு டையோரைட் செனோலித் பாறையில் உட்கரு (core) டையோரைட்டாகவே இருக்க, அதைச் சுற்றி பைடவ்னைட் ஃபெல்ஸ்பார் (bytownite feldspar) சுனிமங்களால் நிறைந்த வளையமும், பைராக்சின் ஹார்ன் பிளெண்டு (Hornblende) கனிமங்கள் நிறைந்த வளையமும் மாறி, மாறிக் காணப்படும். செனோலித் பாறைகள் அவற்றின் பண்பிற்கு ஏற்பவும், அவற்றை ஈர்த்துக் கொண்ட பாறைக் குழம்புகள் வெப்ப அழுத்த நிலைகளுக்கும், அவற்றின் வேதிப் பண்புகளுக்கும் ஏற்றவாறும், உண்மை நிலையில் மாறுபட்டுப் புதிய தனிமங்களை உருவாக்குவதோடல்லாமல், பல வகையான புதிய நுண்ணிய அமைப்பையும் உருவாக்கிச் சுற்றியுள்ள பாறைகளுடன் மாறுபட்டுக் காணப் பட- லாம். இவற்றின் அடிப்படையைக் கொண்டே பாறைக் குழம்புகள் படிகமாகும் முறைகளில் ஒன்றாகிய தன்வயப்படுத்தல் முறை (assimilation) ஆய்வுசெய்யப் படுகிறது. —ஞா. விக்டர் இராஜமாணிக்கம் நூலோதி. W.A. Deer, et.al, An Introduction to Rock Forming Minerals, Longmans Publications, London, 1966. செஸ்டாய்டியா தட்டைப் புழுக்கள் தொகுதியில் உள் ஒட்டுண்ணிகளை மட்டுமே கொண்ட வகுப்பு செஸ்டாய்டியா (cestoidea) ஆகும். பொதுவாக, இவற்றின் இனங்கள் முதுகெலும்பிகளின் உணவு மண்டலத்தில் காணப் படுகின்றன. செஸ்டாய்டா வகுப்பைச் சேர்ந்த தட்டைப் புழுக்கள் 1.00 மி. மீட்டருக்கும் குறைவான அளவிலிருந்து பல மீட்டர் நீளம் வரை காணப் படுகின்றன. இவற்றின் இனங்களில் உடலின் மேற்பகுதியில் செல்களால் ஆன வெளிப்புறச் செல் அடுக்கு (epidermis) இல்லை. மாறாகச் செல்களற்ற தடித்த கியூட்டிகிள் (cuticle) என்ற பகுதி புறத்தே அமைந்துள்ளது. வாயும், உணவு மண்டலமும் இல்லாமையே இவ்வினங்களின் சிறப்பாகும். இவ்வினங்களின் வாழ்க்கை சுழற்சியில் வெளிப்புறக் குற்றிழைகள் (external cilia) எந்த நிலையிலும் காணப் படவில்லை. இருப்பினும், இவற்றின் கியூட்டிகிள் மேற்பரப்பில் நுண்ணிய முள்கள் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். இம்முள் 0.1–1.0 குறுக்களவைக் கொண்டுள்ளது. இவ்வகுப்பில் உள்ள பெரும்பாலான இனங்களின் உடற் பகுதி புரோகிளாட்டிஸ் எனும் கண்டங்களாக அமைந்துள்ளது. ஒவ்வொரு கண்டமும், அதனுள் இரு பால் இனப் பெருக்க மண்டலத்தைக் (hermaphrodite) கொண்டிருக்கும். உடலின் முன் பகுதி ஒட்டும் உறுப்பாகக் காணப் படும். இவற்றில், உறிஞ்சிகளும் (suckers) உறிஞ்சி, வரிப் பள்ளங்களும், கொக்கிகளும் காணப் படுகின்றன. கரு வளர்ச்சி. இவற்றின் தொடக்க காலக் கரு வளர்ச்சி, கருப்பையில் கருவின் கொக்கி வளர் நிலை வரை நடை பெறுகிறது. இந்தக் கொக்கி நிலைக் கரு கொக்கி நிலை உருண்டை (oncosphere) எனப் படும். கருப்பைத் துளை மூலமாகவோ, தட்டைப் புழுவின் இறுதிக் கண்டம் விடுபடுவதன் மூலமாகவோ, அப்புழுவின் முதன்மையான இடத்தை விட்டு வெளியேறும். இவற்றை விருந்தோம்பிகள் உட்கொள்ள நேர்ந்தால், இப்புழுக்களின் அடுத்த வளர்ச்சி விரும்பியின் உடலில் நிகழும். முதுகெலும்பிகளே பெரும்பாலும், இவற்றின் விருந்தோம்பிகளாகக் காணப் படுகின்றன. இளவுயிரிகளின் வளர்ச்சியில் பல தொடர்ச்சியான மாற்றங்கள் அவற்றின் ஒட்டுறுப்பில் காணப் படுகின்றன. சில இனங்களில் மொட்டு விடுதல் எனும் பாலிலி (budding) இனப் பெருக்கத்தின் மூலம் அவற்றின் இனம் பெருகுவதை விருந்தோம்பிகளின் உடலில் காண இயலும். இவ்வுயிரிகளின் இனப் பெருக்க மண்டல வளர்ச்சி வேறோரு விருந்தோம்பியிடமே நடை பெறுகிறது. இவற்றைக் குறிப்பாக, முதுகெலும்பிகள் இளவுயிரிகளையோ, இளவுயிரிகளைக் கொண்ட விருந்தோம்பிகளையோ உணவாகக் கொள்வதன் மூலம் பெறுகின்றன. முதுகெலும்பிகளை விருந்தோம்பிகளாகக் கிடைக்கப் பெற்ற இப்புழுக்களின் இனப் பெருக்க மண்டலத்தின் வளர்ச்சி இவ்விருந்தோம்பிகளின் உடலில் தொடரும். எ-டு: சூடோபில்லிடே. சூடோஃபில்லிடே. இவை துணை வகுப்பு செஸ்டோபாவின் ஒரு வரிசையாகும். அனைத்து முதுகெலும்பிகளின் உணவு மண்டலத்திலும் காணப் படும் ஒட்டுண்ணிகளாகும். இவ்வினங்களில் எளிமையான அமைப்புடைய தலை காணப் படுகிறது. தலையில் இரு வரிப் பள்ளம் போன்ற ஒட்டுறுட்புக் (bornria) காணப் படுகிறது. சூடோபில்லியன்கள் பெரும்பாலும் பல அமைப்புகளில் கண்டங்களைப் பெற்றுள்ளன. இவ்வினங்களின் இனப் பெருக்க உறுப்புகளின் புழைகள் உடலின் நடுக் கோட்டிலேயே திறக்கின்றன. கருப்பைத் துளையும் உடலின் நடுக் கோட்டில் திறக்கிறது. இதன் மூலம் கருக்கள் வெளியேற்றப் படுகின்றன. எ-டு. டிபோதிரியோசெபாலஸ் லேட்டல் என்னும் ஒட்டுண்ணிகள் மீன்களின் மூலமாகத் தொற்றிக் கொண்டு மனிதனின் உணவு மண்டலத்திற்கு வந்து சேர்கின்றன. உணவூட்டம். உணவுப் பொருள்கள் இவ்வுயிரினங்களின் மேற்பரப்பு வழியாகவே உட்கொள்ளப் படுகின்றன எளிய சர்க்கரைகள் மற்றும் அமினோ அமிலங்களை வினையூக்கச் செயலின் மூலமாக, அவற்றின் சுற்றுப் புறத்திலிருந்து மிக விரைவாக உட் கவர்ந்து கொள்கின்றன. இவற்றின் உடலில் காணப் படும் நொதிகள் பற்றிய தெளிவான விவரங்கள் இன்னும் அறியப் படவில்லை. இத்தட்டைப் புழுக்களின் காய்ந்த திசுவில் பாலி சாக்கரைடுகளும் மிகுதியாகக் காணப் படுகின்றன. இவற்றின் அளவு அவற்றின் உடலில் காணப் படும் புரதத்தின் அளவை விட மிகுதியாக இருப்பது இவற்றின் சிறப்பாகும். —ந. இராமலிங்கம் —கி. வாசுதேவன் செஸ்டீடா இவ்வரிசையில் காணப் படும் இனங்கள் நாடா போன்ற உடலமைப்புடைய டீனோபோர்கள் ஆகும். செஸ்டீடா (cestida) இனங்கள், உணர் நீட்சிகளைக் கொண்டுள்ளமையால், சுரணைக் கொம்புகள் (tentaculates) என்று பெயர் பெறுகின்றன. உடலின் மேற்பரப்பில், இரண்டு முதன்மையான சுரணைக் கொம்புகள் உறைகளால் மூடப் பட்டுள்ளன. அவற்றிலுள்ள வரிப் பள்ளங்களில், எண்ணற்ற உணர் நீட்சிகள் காணப் படுகின்றன. இவ்வரிசை முழுதும் கடல் வாழ் டீனோபோர் இனங்களைக் கொண்டதாகும். இவை டீனோபோரா (ctenophora) தொகுதியைச் சார்ந்தவை. பெரும்பாலும் நீரின் மேற்பரப்பில் வாழ்பவை. இருப்பினும், ஒரு சில இனங்கள் ஊர்ந்து செல்வன. ஒளி ஊடுருவும் தன்மை பெற்ற பெரும்பாலான இனங்கள் காணப் படுகின்றன. இவற்றில் ஒரு சில சிறந்த நிறங்களைச் கொண்டுள்ளன. இவற்றின் இளவுயிரிகள் இரு பக்க ஆரச் சமச் சீர் அமைப்பை (biradial symmetrical) வளர்ச்சி நிலைகளில் வெளிப் படுத்துகின்றன. பொதுத் தன்மைகள். இவ்வரிசையில் உள்ள இனங்களை, இவற்றிற்கு முன்னுள்ள குழியுடலிகளான (coelenterates) ஹைட்ரோசோவா, ஆந்தோ சோவா போன்றவற்றுடன் ஒப்பிடும் போது, பெரும்பாலும் அனைத்து இனங்களும் நீரின் மேற்பரப்பில் காணப் படுவனவேயாகும். இருப்பினும், டீனோபோராக்களில் ஓர் இனம் கூடக் காலனி வாழ்க்கை முறையைக் கொள்ளவில்லை. இவற்றின் உடல் உறுதிக்காக உள்ளீட்டுச் சட்டங்கள் அமையவில்லை. உணர்க் கொம்புகளின் அமைப்பும், கால்வாய் மண்டலத்தின் அமைப்பும் மிகுந்த வேறுபாடுகளுடன் வெவ்வேறு இனங்களில் காணப் படுகின்றன. எ-டு: செஸ்டஸ் வெனிரிஸ். செஸ்டஸ் வெனிரிஸ். தட்டையாகவும், நீளமாகவும் அமைந்துள்ள இவை சில இனங்களில் 1.5 மீ. வரை நீண்டுள்ளன. இவற்றின் உடல், பக்கவாட்டில் இரு புறமும் நன்கு ஒடுக்கப் பட்டுள்ளது. எனவே, இவ்வினங்களின் அமைப்பு ஓரு நாடா போன்று காணப் படும். உடலில் காணப்படும் நீந்தும் தகடுகளின் அமைப்பு அலை அலையாக இவை வளைவதற்கு உதவுகிறது. உடல் அமைப்பில் நீந்தும் தகடுகள் நான்கும், உடலில் மேற்புற விளிம்பை ஒட்டிக் காணப் படுகின்றன. இவற்றின் முதன்மையான உணர் நீட்சிகளின் அடிப் பரப்பு பெரிதாகவுள்ளது. இவற்றை உறைகள் மூடியுள்ளன. மிகுதியான சிறு உணர் நீட்சிகள் வரிப் பள்ளங்களிலிருந்து தோன்றுகின்றன. இவை வாய்ப் பகுதியின் முழு நீளத்திற்கும் பரவியுள்ளன. இவற்றின் இளவுயிரிகள் சைப்பிடுகள் போன்ற உடல் அமைப்பைப் பெற்றுள்ளன. பொருளாதாரச் சிறப்பு. டீனோபோர்கள் முக்கியமான உயிரிகளாகும். உலகின் அனைத்துக் கடற் பரப்பிலும் இவை காணப்படுகின்றன. ஆங்காங்கே பெருமளவிற்குக் கூட்டம் கூட்டமாகக் காணப் படும். சில பேரினங்களின் செயல், கடல் நீரின் உப்புத் தன்மையை மாற்றக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது. பெருமளவிற்கு மிதவை உயிரிகளை (planktons) உணவாகக் கொள்வதன் மூலம், மிதவை உயிரிகளின் சம நிலையிலும், மீன் வளத் துறையிலும் இவை இன்றியமையாதவையாகின்றன. —ந. இராமலிங்கம் —கி. வாசுதேவன் செஸ்டோடேரியா இது தட்டைப் புழுக்களின் தொகுதியில் செஸ்டோடேரியா என்னும் துணை வகுப்பில் செஸ்டாய்டியே எனும் வகுப்பைச் சார்ந்ததாகும். இத்துணை வகுப்பில் ஒரு சில இனங்களே அறியப் பட்டுள்ளன. இவற்றின் அனைத்து இனங்களும் தொன்மையான மீன்களில் உள் ஒட்டுண்ணிகளாகக் (endoparasites) காணப் படுகின்றன. இத்துணை வகுப்பை ஆம்பிளினிடே (இவை பெரும்பாலும் எலும்புச் செதில் மீன்களின் உடற்குழியில் காணப் படுகின்றன), கிரையோகோரைடைலிடே (இவை கைமேரா என்னும் இன மீன்களின் உணவு மண்டலத்தில் காணப் படுகின்றன) எனப் பிரிக்கலாம். <!---- Amphilinidea and Gyrocotylidea ----> பின் வரும் சிறப்புப் பண்புகளால் மேற்கூறிய வரிசைகளில் காணப் படும் புழுக்களைப் பிற செஸ்டாய்டியே இனங்களிலிருந்து எளிதில் பிரித்தறிய இயலும். இவ்வினங்களின் உடல் கண்டங்களாகப் பிரிக்கப் படாமல் காணப் படும். இவற்றின் தழைப் பகுதி ஒட்டுறுப்பாக மாற்றுரு அடையாமலிருக்கும். இவ்வினங்கள் உணவு மண்டலத்தை விட விருந்தோம்பிகளின் உடற் குழிகளிலேயே (coelomic cavity) காணப் படும். இருப்பினும், ஒரு சில இனங்களின் உடல் முன் பகுதி ஒட்டுறுப்பாக மாறு பட்டுக் காணப் படும். இவற்றின் பெரும்பாலான இனங்கள் இரு பாலிகள். பாலினப் பெருக்கத்தை (sexual reproduction) மேற்கொள்ளும் இனங்கள் முதுகெலும்பிகளையே தம் விருந்தோம்பிகளாகக் கொண்டுள்ளன. கரு (oncosphere) செஸ்டாய்டியே வகுப்பின் இனங்களை விடப் பெருமளவில் கொக்கிகளைப் பெற்றிருக்கும். செஸ்டாய்டியே இனங்கள் பெருமமாக, ஆறு கொக்கிகளைக் கொண்டுள்ளன. ஆனால், செஸ்டோடேரியா இனங்களில் பத்துக் கொக்கிகள் வரை காணப் படுகின்றன. —ந. இராமலிங்கம் —கி. வாசுதேவன் <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->