சீசேரியன் அறுவை மருத்துவம்
cīcēriyaṉ aṟuvai maruttuvam
தற்கால மருத்துவத்தில் குறிப்பிடத் தக்கது தாயையும், சேயையும் பிரித்தெடுக்கும் சீசேரியன் அறுவையாகும், இம்மருத்துவத்தின் நோக்கம், தாயையும், சேயையும் உயிருக்குக் கேடு வாரா வண்ணமும், எவ்வகைப் பாதிப்பும் இல்லாமலும், பிரித்து எடுப்பதேயாகும்.
தற்கால மருத்துவத்தில் குறிப்பிடத் தக்கது தாயையும், சேயையும் பிரித்தெடுக்கும் சீசேரியன் அறுவையாகும், இம்மருத்துவத்தின் நோக்கம், தாயையும், சேயையும் உயிருக்குக் கேடு வாரா வண்ணமும், எவ்வகைப் பாதிப்பும் இல்லாமலும், பிரித்து எடுப்பதேயாகும்.
சீசேரியன் அறுவை முறை கிமு. 100ஆம் ஆண்டிலிருந்து செயல் படுத்தப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. கி.பி. 8ஆம் நூற்றாண்டில் நூமா பாம்ப்பியஸ் என்னும் ரோமாபுரி மன்னர், குழந்தைகள் சரியான நேரத்தில் பிறக்காமல், , இறக்கும் நிலையில் உள்ள தாய்களில் அறுவை மருத்துவம் செய்து மகவை அகற்றியதாகத் தெரிகிறது. ஜுலியஸ் சீசர் இந்த அறுவை வாயிலாகவே பிறந்தவர் என்றும், இதனால், இவர் பெயராலேயே சீசேரியன் அறுவை எனப்படுகிறது என்றும் கருதுவர். சீசேரியன் என்பது அறுப்பது எனப் பொருள்படும் சிடேர் என்னும் லத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டது. முதல் சீசேரியன் அறுவை 1501 ஆம் ஆண்டு ஃபிரான்ஸ் நாட்டில் செய்யப்பட்டது. அறுவை மருத்துவ முறைகள் பழங்காலத்தில் இருந்ததை விடத் தற்போது மிகவும் மேம்பாடு அடைந்துள்ளன.
சீசேரியன் அறுவையின் இன்றியமையாமை. குழந்தையின் தலை பெரியதாக இருந்தாலோ, தாயின் பிறப்புறுப்புச் சிறியதாக இருந்தாலோ, குழந்தை பிறக்கும் வழியில் சிறிய தடங்கள் இருந்தாலோ, குழந்தைக்கு இடம் போதா நிலை ஏற்படும். இந்நிலையில் சீசேரியன் அறுவையே மிகச் சிறந்தது. சில வேளைகளில் பேறு காலத்தில் தாயின் உடல் நிலை ஏதாவது நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், குழந்தை பிறப்பதில் கடினம் இருக்கும். மேலும், கருப்பை சரியாகச் சுருங்காமல் இருந்து, மகப் பேறில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமையாலும், மகப் பேற்றிற்கு முன்பே பனிக் குடம் உடைந்து விடுவதாலும், தாயையும், சேயையும் நோய் நுண்ணுயிரிகள் எளிதாகத் தாக்க வாய்ப்புண்டு. இதனின்று, தாயையும், சேயையும் காப்பாற்ற, சீசேரியன் அறுவையே சிறந்தது.
பேறு காலத்தில், குழந்தையின் கொடி நழுவுதல், கொடி கழுத்தைச் சுற்றிக் கொண்டு குழந்தைக்கு ஆபத்து விளைவித்தல், கருப்பையில் குழந்தை சரியான நிலையில் இல்லாமல், குறுக்காகவோ, மாறுபாடாகவோ இருத்தல் ஆகிய நிலைகளிலும் அறுவை மருத்துவம் சிறந்தது.
சூலடைவதற்கு முன், தாய்க்குக் கருப்பையில் வேறு நோய்க்காக அறுவை மருத்துவம் ஆகியிருந்தாலோ, வயதான காலத்தில் கருத்தரித்தாலோ, பேறு காலத்தில் கடினம் ஏற்படும், இவற்றைத் தவிர்க்க அறுவை மருத்துவமே சிறந்தது. நஞ்சு கீழ்ப் பகுதியில் இருந்தாலோ, வேறு காரணத்தால் நஞ்சு பிரிந்தாலோ, தாய்க்குக் குருதிப் போக்கு மிகையாகும். இதனால் ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்க, உடனடியாகச் சீசேரியன் அறுவை செய்து, குழந்தையை வெளியே எடுக்க வேண்டும்.
சில வேளைகளில், குழந்தை குறிப்பிட்ட நாளில் பிறப்பதில்லை. இதைச் சரியாகக் கவனிக்கா விட்டால், குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம். இதைத் தவிர்க்கவும், சீசேரியன் அறுவை மருத்துவமே சிறந்தது. தற்போது 7—10% மகப்பேறு, சீசேரியன் அறுவை மூலமே நடக்கிறது. தாயையும், சேயையும் மரணத்திலிருந்து காப்பதற்கு இவ்வறுவையே சிறந்தது. —இரா.திரிபுரசுந்தரி
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 400)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7c326srr/
தமிழ்“சீசேரியன் அறுவை மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7c326srr/APA
Oliyon Research. (2026). சீசேரியன் அறுவை மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7c326srr/MLA
"சீசேரியன் அறுவை மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7c326srr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment