உக்சுமால்
ukcumāl
மாயா நாகரிகம் நிலவிய நகரம்.
மாயா நாகரிகம் நிலவிய நகரம். இது மெக்சிகோவில் யுகாதன் (Yucatan) மாநிலத்தில் மிரிதா (Merida) என்னும் ஊருக்குத் தெற்காக 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்நாகரிகம் சற்றேறக்குறைய கி.பி. 600க்கு முற்பட்டது. கி.பி. 1000–இல் தோல்தெக்குக் குடியினர் இந்நகரின் மீது படையெடுத்தனர். இவர்கள் தங்களின் தலைநகரைச் சிக்கன் இட்சாவில் (Chichen Itza) அமைத்துக் கொண்டு உக்சுமாலில் இருந்த கட்டடங்களை அழித்தனர். உக்சுமால் தொடர்ந்து மாயபன் கூட்டு (League of Mayapan) ஆட்சிக் காலத்திலும் அரசியல் சிறப்புப் பெற்று விளங்கியது என்று மாயா நாகரிக மரபுவழிச் செய்திகள் குறிப்பிடுகின்றன. உக்சுமால் பகுதியைச் சுற்றிக் காடுகள் பெருமளவில் உள்ளன. இவ்வூர் வறண்ட பகுதியாக விளங்கியது. உக்சுமால் (Uxmal) கட்டடக் கலைச் சிறப்புப் பெற்ற நகரம். இக்கட்டடங்கள் கி.பி. 600 முதல் 900 வரையிலான காலகட்டத்தைச் சார்ந்தவை. இவற்றின் சிதைவுகள் ஏறக்குறைய 160 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படுகின்றன. இங்குள்ள தொன்மைக் கட்டடங்களுள் குறிப்பிடத்தக்கவை ஆளுநர் மாளிகையும் மாயவித்தை செய்பவரின் கோயிலும் (Temple of the Magecian) துறவறம் பூண்ட பெண்களுக்கான மடமும் ஆகும்.
ஆளுநர் மாளிகை 90 மீ. உயரமுடையது. இது கட்டட வடிவியல் முறைப்படி கட்டப்பட்ட மாளிகையாகும். வித்தை செய்பவரின் கோயில் பிரமிடு அமைப்புடையது. பெண்களுக்கான மடம் நாற்-
சிதைவுற்ற கட்டடங்கள் – உக்சுமால்
கோண அமைப்புடையது; இம்மடம் நான்கு செவ்வக அமைப்பிலான கட்டடங்களை ஒருங்கே கொண்டது. பல சிறு அறைகளையும் ஒரு பெரிய முற்றத்தையும் கொண்டது. ஆமைகள் வீடு (House of Turtles) என்ற கட்டடத்தில் ஆமைகளின் உருவங்களை ஒப்பனைப் பட்டைகளில் செதுக்கி உள்ளனர். எனவே, இப்பெயரை இக்கட்டடம் பெற்றுள்ளது. மேலும்; புறாக்கள் வீடு (House of Pigeons) என்றொரு கட்டடமும் சிறப்பானது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 706)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7bz85gac/
தமிழ்“உக்சுமால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7bz85gac/APA
Oliyon Research. (2026). உக்சுமால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7bz85gac/MLA
"உக்சுமால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7bz85gac/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment