அடைவுச் சோதனைகள்
aṭaivuc cōtaṉaikaḷ
தனி மனிதன் தன்னுடைய தொழிலில் எந்த அளவிற்குத் திறமை பெற்றிருக்கிறான் என்பதை அளவிட உதவும் உளவியல் சோதனைகள், அடைவுச் சோதனைகள் (Achievement Tests) எனப்படும்.
தனி மனிதன் தன்னுடைய தொழிலில் எந்த அளவிற்குத் திறமை பெற்றிருக்கிறான் என்பதை அளவிட உதவும் உளவியல் சோதனைகள், அடைவுச் சோதனைகள் (Achievement Tests) எனப்படும்.
தொழிலகங்களிலும் அரசு அலுவலகங்களிலும் இராணுவத்திலும் நிறுவனங்களிலும் பணியாளர் திறன் மதிப்பீட்டிற்காக அடைவுச் சோதனைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. தொழிலகங்களில் இவை தொழிற் சோதனைகளாக அமைக்கப்படுகின்றன. பணியாளர்களின் பயிற்சி முடிந்த பின் அவர்களைக் குறிப்பிட்ட நுட்பத் தொழிலுக்காகத் தேர்ந்தெடுக்கும் பொழுது, இச்சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன. பதவி உயர்வு, பணிமாற்றம் போன்றவற்றிற்கும் இச்சோதனைகள் பயனுள்ளனவாக இருக்கின்றன. இவை குறிப்பிட்ட தொழில் தொடர்புள்ளவையாக இருப்பதால், பணியாளரும் மேலாண்மையினரும் இவற்றைப் பெரும்பாலும் ஏற்றுக்கொள்கின்றனர். பெரும்பான்மையான அடைவுச் சோதனைகள் பல்வேறு பணிகளுக்காக அவ்வப்போது தரப்படுத்தப்படுகின்றன.
தொழில் அடைவுச் சோதனைகளில் பல்வேறு முறைகளைக் கையாளுகின்றனர். சொற் சோதனைகளும் செயற் சோதனைகளும் பணியாளரின் தொழிலுக்கு ஏற்பவும் அமைக்கப்படுகின்றன. இத்தகைய சோதனைகளில் சில தொழில் செயல் முறையை ஒட்டி அமைந்திருக்கும். எ-டு. ஊர்திகளை ஓட்டுதல், பாடுதல் போன்றவை அச்செயலைச் செய்யும் பொழுதே மதிப்பீடு செய்யப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட பொருளுக்குச் சிறந்த விளம்பரத்தை உருவாக்கும் பணியை மதிப்பீடு செய்யும்பொழுது அச்செயல் நிகழ்முறை முதன்மையானதாகக் கருதப்படுவதில்லை. அதற்கு மாறாக, விளம்பரத்தினால் விற்பனையாகும் பொருள்களின் அளவு, எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து மதிப்பீடு அமைகிறது. அடைவுச் சோதனைகளை மதிப்பீடு செய்யும்பொழுது தனிமனிதனின் விருப்பு, வெறுப்பு, சார்பெண்ணங்கள் போன்றவற்றின் பாதிப்பினைத் தவிர்ப்பதற்காகவும், சாதனை மதிப்பீட்டில் புறவயம் அமைவதற்காகவும் தர அளவுகளும், சரி பார்த்தல் பட்டியலும் துணைக் கருவிகளாப் பயன்படுத்தப்படலாம். எழுத்தர் தொழில், தட்டச்சுப் பணி, சுருக்கெழுத்தர் பணி போன்றவற்றிக்குத் தொழில் அடைவுச் சோதனைகன் தரப்படுத்தப்பட்டு இக்காலத்தில் பல பெரிய நிறுவனங்களால் பயன்படுத்தப்படு- கின்றன. இந்தச் சோதனையில் ஆட்படுநர் ஒன்றை விட ஒன்று மிகுந்த நீளமும் சிக்கலானதுமான கடிதங்களுக்கான சுருக்கெழுத்துக் குறிப்புகளை எடுத்துக் கொள்ளவேண்டும். ஆட்படுநர் இக்கடிதங்களை ஒன்றைவிட மற்றதை மிக விரைவாக ஒப்ப எழுதுமாறு கூறப்படுவர். பின்னர் இக்குறிப்புகள் ஆட்படுநரால் தட்டச்சுச் செய்யப்படுகின்றன.
சில தொழில் அடைவுச் சோதனைகளில் வேலைத் திறமையைவிடத் தொழில் நுட்பம் பற்றிய விவரத்தை அறிவதற்கு முதலிடம் கொடுக்கின்றனர். இவற்றிற்கு இப்பொழுது எழுது சோதனைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பர்டியு தனியாள் சோதனை (Purdue Individual Test) என்பது, பல நிறுவனங்களில் பயன்படுத்தப்படுவதாகும். இதில் வணிக விவரச் சோதனையும் ஒன்றாகும். தச்சு வேலை, பற்றவைப்பு, உலோகத்தகடு வேலை மற்றும் இயந்திர இயக்கச் செயல் போன்ற தொழில்களில் இச்சோதனை பயன்படுத்தப்படுகிறது.
தொழிற்பயிற்சி, மற்றும் அனுபவத்தை மதிப்பீடு செய்வதற்கு வணிகச் சோதனைகள் பல்வேறு நுணுக்கங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகைச் சோதனைகளில் வரிசையான சிறு வினாக்கள் குறிப்பிட்ட வணிக அறிவைப் பற்றியதாக அடங்கியிருக்கும். இவ்வினாக்கள் ஒரு குறிப்பிட்ட வேலையைப் பற்றியதாகவும் அத்துறையில் அனுபவம் உள்ளவர்க்கு எளிதில் புரியக்கூடியதாகவும் இருக்கும்.
இவை, இரண்டு உலகப் போர்களில் படையில் பணிசெய்தவர்களைத் துரிதமாகப் பாகுபாடு செய்வதற்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. தொழிலகங்களில் பல்வேறு பணிகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. இச்சோதனைகள் இந்தியாவில் பெரிய அரசுத் தொழில் நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. காண்க: உளவியல் சோதனைகள்.பி.கே.ச.
துணை நூல்கள்
Anastasi, A., “Psychological Testing”, Macmillan Publishing Co., INC. 1968.
Tiffin, J & Maccormick, E., “Industrial Psychology,” Eaglewood Cliffs, N.J. Prentice–Hall, 1965.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 280)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7bur5pp9/
தமிழ்“அடைவுச் சோதனைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7bur5pp9/APA
Oliyon Research. (2026). அடைவுச் சோதனைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7bur5pp9/MLA
"அடைவுச் சோதனைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7bur5pp9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment