சங்க காலத்தில் வாழ்ந்த குறுநில மன்னர்களுள் ஒருவன், இவனுடைய தனிப்பண்புகளை அறிதற்குமிய அகச்சான்றுகள் சங்கப் பாடல்களில் கிடைக்கவில்லை. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை எதிர்த்துப் போரிட்டுத் தோற்ற ஏழு மன்னருள் ஒருவனாக இருங்கோவேண்மான் சுட்டப் பெறுகிறான். இவனை நக்கீரர், ‘தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோவேண்மான்’ என்று குறிப்பிட்டுள்ளார் (அகம். 36). இன்றைய புதுக்கோட்டைக்கும் குடுமியான் மலைக்கும் இடையே உள்ள பகுதியே கொடும்பாளூரைத் தலைநகரமாகக் கொண்ட இருங்கோவேண்மான் ஆண்ட பகுதியாகக் கருதப்படுகிறது. கொடும்பாளூர் வேளிர் பரம்பரையினர் இன்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பெற்ற பத்திரங்களிலும் தங்கள் குலப்பெயர் உள்ளதாகவும், சங்க கால முதல் இன்று வரை இக்குடியினர் இருந்து வரும் பெருமை இருப்பதாகவும் இவர்கள் கூறுகிறார்கள்.பி.தெ.