திருகு இணைப்பான்களின் இறுக்கத்தை மேம்படுத்த உதவும். தட்டையான, வளைய வடிவுடைய கருவி, பட்டை வளையம் (washer) எனப் படும். பொதுவாக, எளிய வகை, சுருள் வில் தடுப்பு வகை, எதிர்த் திருப்பு வகைகளில் பட்டை வளையங்கள் பயன் படுகின்றன. தரமான எளிய வகைப் பட்டை வளையங்கள், எந்திர உறுப்பைப் பாதிப்பிலிருந்து காக்கவும், எடையைப் பரவலாக்கவும், பயன் படுகின்றன. ஆனால், இவ்வகையில் மரை (nut) திரும்புவதைத் தடுக்க இயலாது. எனவே, தடுப்பு வகைப் பட்டை வளையங்கள், மரையாணி (bolt) ஆகியவை அதிர்வுகளால் தளர்வடைவதைத் தடுக்க இவை பயன் படுகின்றன. தொழிலகப் பயன்பாடுகளில் சுருள் வில் தடுப்பு வகைப் பட்டை வளையங்கள், பொருத்தப் பட்ட உறுப்புகளுக்கிடையே சிறிது தளர்வை உண்டாக்கப் பயன் படுகின்றன. தடுப்பு வகைப் பட்டை வளையங்கள், இணைப்பானுக்கும், உறுப்புகளுக்குமிடையே, தொடர்ச்சியான அழுத்தத்தை உண்டாக்குகின்றன. எதிர்த் திருப்பு வகைப் பட்டை வளையங்கள், வெளிப் புறப் பற்களையோ, உட்புறப் பற்களையோ கொண்டவை. இவ்வளைந்த பற்கள் தாங்கிப் பகுதியைக் கவ்விப் பிடித்துக் கொள்வதால், மரை திரும்புவதும், அதிர்வினால் இணைப்புகள் தளர்வதும், தடுக்கப் படும். எந்திர உறுப்புகளைப் பொருத்துவதை விரைவு படுத்துவதற்கு, முன்னரே நிலையாகப் பொருத்தப் பட்ட மரையாணிப் பட்டை வளைய அமைப்புகள் தேவைப் படுகின்றன. —வா. அனுசுயா