இராமசாமி நாயுடு, சீ
irāmacāmi nāyuṭu, cī
இராமநாதபுரம் மாவட்டம் சிவகாசிக்கு அண்மையில் உள்ள செங்கமல நாச்சியார் புரத்தில் சீனிவாச நாயுடுவுக்கும், நாச்சியாரம்மாள் என்ற இலட்சுமியம்மாளுக்கும் மூன்றாம் மகனாக 23.12.1901–இல் பிறந்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் சிவகாசிக்கு அண்மையில் உள்ள செங்கமல நாச்சியார் புரத்தில் சீனிவாச நாயுடுவுக்கும், நாச்சியாரம்மாள் என்ற இலட்சுமியம்மாளுக்கும் மூன்றாம் மகனாக 23.12.1901–இல் பிறந்தார்.
இராமசாமி நாயுடு, சீ.
இவர் சிரீவில்லிபுத்தூரிலும், சிவகாசியிலும் பயின்று 1918–இல் உயர்பள்ளிப்படிப்பை முடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரி, சென்னை இராசதானிக் கல்லூரி ஆகியவற்றில் பவின்று பி.ஏ. (ஆனர்சு) பட்டமும் பின்னாப் பி.எல். பட்டமும் பெற்றார்.
மதுரையில் அரங்கசாமி நாயுடுவிடம் வழக்கறிஞர் பயிற்சிபெற்றுப் பின் சாத்தூரில் (1927–42) வழக்கறிஞராகப் பணியாற்றினார். பொருள் ஈட்டுவதில் நாட்டமின்றி, நீதிமன்றத்திற்கு வெளியிலேயே வழக்குகளைத் தீர்த்தல், கிராம மேம்பாடு, வேளாண்மை வளர்ச்சி, கிராம ஒற்றுமை போன்ற துறைகளில் மிகுதியும் கவனம் செலுத்தினார். இவர் 21.8.1928–இல் தாயம்மாள் என்பாரை மணந்தார். இவருக்கு நான்கு பெண்மக்கள்.
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு வழக்கறிஞர் தொழிலை 1942–இல் நிறுத்திவிட்டார். காங்கிரசு இயக்கத்தில் தீவிரப்பற்றுக் கொண்டு உப்புச் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டார். சாத்தூர் வட்டாட்சிமன்றத் தலைவராக (Taluk Board President) 1933–இல் பொறுப்பு வகித்தார். கிராமச்சாலைகள், கல்வி, சுகாதாரம் ஆகிய சமூக சேவைகளில் ஈடுபட்டார். நாடு விடுதலை பெற்றதும் இடைக்காலப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து இந்திய அரசியலமைப்பு உருவாக உழைத்தார். சென்னை மாநிலச் சட்டமன்ற உறுப்பினராக 1952 முதல் 1961 வரை நீடித்திருந்தார். பின்னர் 1954–58–ஆம் ஆண்டுகளில் இராமநாதபுரம் மாவட்டக் கழகத் தலைவரானார் (District Board President). இவர் காலத்தில் ஐந்தாக இருந்த கழக உயர்நிலைப் பள்ளிகள் ஐம்பதாக வளர்ந்தன. சாத்தூர்க் கூட்டுறவு விற்பனை மையத்தின் தலைவராகவும், சாத்தூர் நிலவள வங்கியின் தலைவராகவும், இராமநாதபுரம் மாவட்டக் கூட்டுறவு மத்திய வங்கியின் இயக்குநராகவும், வட்டார நூலக வளர்ச்சிக் குழுவின் இராமநாதபுர மாவட்டத் தலைவராகவும் இருந்து மக்களுக்குத் தொண்டாற்றினார். தேசிய வளர்ச்சித் திட்டங்கள் மூலம் பல கிராம மருத்துவமனைகள் (Primary Health Centres) ஏற்பட உதவினார்.
இவர் மாணவப் பருவத்திலேயே உடன் பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவும் குணமுடையவராக விளங்கினார். ஆரம்பப்பள்ளிகள், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி போன்ற கல்வி நிறுவனங்கள் நடைபெற உதவினார். இவர் நல்ல எழுத்தாளரும் ஆவார். பல இதழ்களில் தலையங்கம், கதை முதலியன எழுதினார். இவர் தீவிர வைணவர்; நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நல்ல புலமையுடையவர். திருத்தண்கால் திருநின்ற நாராயணப் பெருமாள் கோவில் அறங்காவலராகவும் பணிபுரிந்தார்.
சாத்தூர்க் கூட்டுறவு நிலவள வங்கியின் தலைவர் என்ற முறையில் வேளாண்மக்களின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்த போது 1.1.61 அன்று திடீரென உலக வாழ்வை நீத்தார். இவரது நினைவாகத் திருத்தாண் காலில் ஓர் அரசினர் மேனிலைப்பள்ளியும், சாத்தூரில் ஒரு கலைக் கல்லூரியும் இயங்கிவருகின்றன. இவரைத் தமிழ்மக்கள் ‘எஸ்.ஆர். நாயுடு’ என அன்பாக அழைத்து மகிழ்ந்தனர். எஸ்.சீ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 114)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6upwgjcx/
தமிழ்“இராமசாமி நாயுடு, சீ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6upwgjcx/APA
Oliyon Research. (2026). இராமசாமி நாயுடு, சீ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6upwgjcx/MLA
"இராமசாமி நாயுடு, சீ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6upwgjcx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment