நீர்மத்தாலோ, கட்டியான பொருளாலோ ஆன சிறிய வட்ட வடிவ அமைப்பைக் கோளம் (globule) என்பர். தந்தினிக் கோளம் (dentine) என்னும் கால்சியம் படிந்த உருண்டையான கட்டி போன்ற அமைப்பு, பல் வளர்ச்சியின் தொடக்க காலத்தில் தோன்றுகிறது. முதிரும் முட்டையின் மஞ்சள் கருவிலிருந்து துருத்திக் கொண்டிருப்பதைத் திசை காட்டும் கோளம் என்பர். பாலில் காணப்படும் கூழ்மமான கொழுப்புப் பொருள் பால் கோளம் எனப்படுகிறது. நிறமற்ற, வட்டமான அல்லது நீள் வட்டமான பல வடிவங்களிலும் கோளங்கள் காணப்படுகின்றன. கொழுப்புத் துளிகள் போன்றுள்ள இவை சீதம் கலந்த சளியில் காணப்படுகின்றன. கோள வடிவமான சில மருந்துகள் மலமிளக்கிகளாகக் குதத்துள் செலுத்தப்படும். —மு.ப. கிருஷ்ணன் <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. அடுத்த பக்கத்தில் புதிய தலைப்பு ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->