இன்சுகேப்புப் பாறை என்பது இசுகாட்லாந்து கடற்கரையையொட்டி வடகடலில் உள்ள கடற்கரைப் பாறைத் தொடராகும். தாய் கடற்கழியிலிருந்து (Firth of Tay) இதன் நுழைவாயில் 26 கி.மீ. தொலைவிலுள்ளது. இசுகாட்டிய மரபுவழிக் கதையொன்றின்படி, இப்பாறையின் அருகே வருகிறவர்களை எச்சரிக்க மிதவை மணியொன்றைத் துறவியொருவர் வைத்துச் சென்றார். கடற்கொள்ளைக்காரன் ஒருவன் அம்மணியைத் துண்டித்துவிட்டான். பின்னர் அவனுடைய கப்பலே இப்பாறையின்மீது மோதி மூழ்கிவிட்டது. இதைத்தான் இன்சுகேப்புப் பாறை (Inchcape Rock) என்பர். இப்பாறையைப் பற்றி கி.பி. 1774 முதல் 1843 வரை வாழ்ந்த இராபர்ட்டு சதே (Robert Southey) என்னும் ஆங்கிலக் கவிஞர் நாட்டுப்புறப் பாடலாக (Ballad) ‘இன்சுகேப்புப் பாறை’ என்னும் தலைப்பில் எழுதியுள்ளார். இன்சுகேப்புப் பாறையினை மணிப்பாறை (Bell Rock) என்றும் கூறுவர்.