இது சாட்டின் பருத்தி கொண்ட இரு படை நெசவுடைய துணியாகும். சாய்வரி ஒண்பட்டுப் புறணித் துணி (silesia) மிகுதியாகக் கஞ்சியிடப்பட்டு, சாயமேற்றப்பட்டுப் பளபளப்பான மேற்பரப்புக் கொடுக்கப்பட்டுச் சீராக முடிக்கப்படுகிறது. ஆனால், சில சமயம் கோட்டு வடிவங்களும் அச்சிடப்படுகின்றன. இது 27 சிணுக்கு (பாவில்) எண்ணும், 18 சிணுக்கு (ஊடையில்) எண்ணும் கொண்டுள்ளது. —இரா. சரசவாணி