நெருப்புக் கோழி
neruppuk kōḻi
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> இது பறவைகள் வகுப்பில் ஸ்ட்ருத்தியோனி ஃபார்மிஸ் வரிசையைச் சேர்ந்ததாகும்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> இது பறவைகள் வகுப்பில் ஸ்ட்ருத்தியோனி ஃபார்மிஸ் வரிசையைச் சேர்ந்ததாகும். தற்போது உலகில் வாழும் பறவைகளுள், நெருப்புக் கோழியே மிகப் பெரியது. ஆண் பறவை நிற்கும் போது 20 மீ. உயரம் இருக்கும். கழுத்துப் பகுதி மட்டும் 1 மீ. இருக்கும். ஆண் பறவையின் இறகுகள் கருமையானவை. சிறகிலும், வாலிலும் வெண்ணிற இறகுகள் காணப் படுகின்றன. பெண் பறவையின் இறகுகள், பழுப்பு நிறத்துடனும், இறகு விளிம்புகள் மங்கிய நிறத்துடனும் இருக்கும். இப்பறவையின் கழுத்து, தலை, கால் ஆகிய பகுதிகளிலும், இறகுகள் இல்லை. ஒவ்வொரு காலின் பாதத்திலும், நன்கு வளர்ந்த விரல்கள் இரண்டு உள்ளன. விரல் நுனியில் பெரிய நீளமான கூர் நகங்கள் இருக்கின்றன. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிளியோசின் காலத்தில் 9 வகை நெருப்புக் கோழி இனங்கள் இருந்தன. ஆனால், இக்காலத்தில் ஒரே ஒரு இனம் மட்டுமே உள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்கா, சிரியா, அரேபிய நாட்டுப் பாலைவனங்களில், ஐந்து இனங்கள் வாழ்ந்து வந்தன. இப்போது கிழக்கு ஆப்பிரிக்காவிலும், தெற்கு ஆஸ்திரேலியாவிலும் மட்டும் நெருப்புக் கோழி காணப் படுகிறது.
இருப்பிடம். பொதுவாக இப்பறவை பாலைவனங்களில் வாழ்கிறது. பாலைவனத்தில் பெருங் கூட்டமாகக் கூடி, உணவைத் தேடிச் செல்லும். நீர், ஈரம் மிகுந்த இடங்களில் சிறு சிறு கூட்டடங்களாகப் பிரியும். ஒவ்வொரு சிறு கூட்டத்திலும், ஓர் ஆண், பெண் பறவைகளும், இளம் பறவைகளும் இருக்கும். பெற்றோர் பறவை உணவு சேகரிக்கும் இடத்தையும், எப்பொழுது அங்கு செல்ல வேண்டும் என்பதையும் உறுதி செய்யும். நீர் கிடைக்கும் இடங்களில் சிறிய பறவைகள், நீர் குடித்த பின்னரே, பெற்றோர் பறவைகள் நீரினைப் பருகுகின்றன. இப்பறவை உயரமாக இருப்பதால், எதிரிகளிடமிருந்து எளிதாகத் தப்பி விடுகின்றன.
உணவு. நெருப்புக் கோழி செடி, இலை, பழம், விதை ஆகியவற்றை உண்ணுகிறது.மேலும் சிறு விலங்குகளையும், பல்லி, ஆமை போன்றவற்றையும் உணவாக உட்கொள்கிறது. உணவு எளிதாகச் செரிப்பதற்கு ஏற்ற வகையில், இப்பறவை சிறிதளவு மணலையும் சேர்த்து உண்ணுகிறது. ஒவ்வோர் ஆண் பறவையும், பல பெண் பறவைகளுடன் இனப் பெருக்கத்தில் ஈடுபடும். நெருப்புக் கோழியின் சமூக வாழ்க்கை குறிப்பிடத் தக்க இயல்புகளைக் கொண்டது. சிறு குஞ்சுகளும், பெண் பறவையும் செல்லும் போது, தந்தையற்ற ஆண் பறவை கூடச் சில வேளைகளில், அவற்றிற்குத் தலைமை தாங்கி அழைத்துச் செல்லும்.
இனப் பெருக்கம். இனப் பெருக்கம் மழையைப் பொறுத்து, ஆண்டில் எந்தக் காலத்திலும் நடைபெறும். இனப் பெருக்கக் காலத்தில், ஆணின் தலையில் சிவப்பு வண்ண நிறமிகள் உண்டாகின்றன. பல ஆண்கள், ஒரு பெண் இருக்குமிடத்தில் சிறகை விரித்து, வெள்ளை இறகுகள் தெரியும் படிக் கூத்தாடும். ஓர் ஆண் பறவை, மூன்று, நான்கு, ஐந்து பெண் பறவைகளை வளைத்துக் கொண்டு, இனப் பெருக்கத்தில் ஈடுபடுகிறது. இனச் சேர்க்கையின் போது, ஓர் ஆணும், பெண்ணும் தனியே பிரிந்து சென்று, தலையையும், கழுத்தையும் ஒரே விதமாக அசைத்துச் சேர்த்து உண்கின்றன. ஆண் பறவை தன் கழுத்தை அசைத்துச் சுழற்றும் போது, பெண் பறவை, ஆணைச் சுற்றி வந்து, இனச் சேர்க்கைக்கு ஏற்ற வகையில் நிற்கிறது.
முட்டை. ஒவ்வொரு பெண் பறவையும், 6–8 முட்டைகள் இடுகிறது. ஒவ்வொரு முட்டையும், 15 செ.மீ. நீளமும், 1.25 கிலோ எடையுமுள்ளது. முட்டைகள் 3 வார காலத்திற்குள் இடப் படுகின்றன. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பெண் பறவைகள் அனைத்தும், 3 மீ. விட்டமுள்ள ஒரே குழியில் முட்டையிடுகின்றன. முட்டையிட்டு முடிந்த பின்னர், வலிமை மிக்க தாய்ப் பறவை, ஏனைய பெண் பறவைகளை அவ்விடத்தை விட்டு விரட்டுகிறது. 6 வாரங்களில், முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளி வருகின்றன.இவ்வாறு வெளி வந்த குஞ்சுகளால், உடனே ஓட முடிகிறது. ஒரு மாத காலத்தில், இக்குஞ்சுகள் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் ஓடும் ஆற்றல் பெறுகின்றன. இப்பறவை 4–5 வயதில் முதிர்ச்சியடைந்து இனப் பெருக்கம் செய்யும்.
தற்காப்பு. வயது வந்த பறவைகள் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் ஓடி எதிரி விலங்குகளிடமிருந்து தப்பி விடுகின்றன. ஆனால், குஞ்சுகள் நரி போன்ற ஊணுண்ணிகளுக்கு இரையாகின்றன. சில வேளைகளில், முதிர்ந்த ஆணும், பெண்ணும், சிறகுகளை விரித்துக் குஞ்சுகளைப் பாதுகாக்கின்றன. ஊணுண்ணி இவற்றை நெருங்கும் போது, ஆண் பறவை எதிர்த்து நின்று தடுக்கும். அப்போது, பெண் பறவை குஞ்சுகளுடன் தப்பி ஓடும். இடர் வரும் போது, இப்பறவை தன் தலையை மண்ணிற்குள் புதைத்துக் கொள்ளும் என்று கூறுகின்றனர். இது முற்றிலும் மெய்யன்று என்றாலும், இடர் வரும் போது, இப்பறவை தன் கழுத்தை நீள வாட்டத்தில் தரையோடு தரையாக வைத்துக் கொண்டு, தலையைச் செடி, கொடிகளில் மறைத்துக் கொள்ளும் என்று அறியப்பட்டுள்ளது. —ஏ. நடராசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 197)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6agjdcmf/
தமிழ்“நெருப்புக் கோழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6agjdcmf/APA
Oliyon Research. (2026). நெருப்புக் கோழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6agjdcmf/MLA
"நெருப்புக் கோழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6agjdcmf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment