அந்தோணி கோபு
antōṇi kōpu
முதலாம் எலிசபெத்து அரசியாரின் ஆட்சிக் காலத்தில் கி.பி.
முதலாம் எலிசபெத்து அரசியாரின் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1587–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதத்தில் அந்தோணி கோபு (Antony Cope) என்பார் காமன்சு அவையில் சமயத் தொடர்பான சீர்திருத்தம் கோரி, மிகப் பரந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரும் முன்வரைவு ஒன்றையும், நூல் ஒன்றையும் தாக்கல் செய்தார். இம்முன்வரைவின்படி அரசாங்கத்தைப் பாதிக்கும் எல்லாச் சட்டங்களையும் நீக்குதல் செய்ய வேண்டுமெனத் திருச்சபை கோரியது. புதிதானதொரு பொது வழிபாட்டை நிலைநாட்ட வேண்டிய விவரங்கள். இத்துடன் இணைக்கப்பெற்றிருந்த நூலில் கொடுக்கப்பட்டிருந்தன. அம்முன்வரைவு ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. அந்தோணி கோப்பிற்கும், அவருடைய முன்வரைவை ஆதரித்த ஏனைய உறுப்பினர்களுக்கும் சிறைத் தண்டனை கிடைத்தது. பாராளுமன்றம் கலைக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பின்னர்ச் சிறையிலிருந்த அந்தோணி கோபு விடுதலை ஆனார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 379)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/679dttcq/
தமிழ்“அந்தோணி கோபு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/679dttcq/APA
Oliyon Research. (2026). அந்தோணி கோபு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/679dttcq/MLA
"அந்தோணி கோபு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/679dttcq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment