பசிபிக் பெருங்கடலின் வட மேற்குப் பகுதியாகிய இதன் தென் மேற்கில் வட கிழக்குப் போர்னியோவும், மேற்கிலும், வட மேற்கிலும் ஃபிலிப்பைன், பலவன் ஆகிய தீவுகளும், வடக்கில் புசுவங்கா மிண்டோரோ தீவுகளும், கிழக்கில் பனாய், நீக்ரா தீவுகளும், தென் கிழக்கில் மிண்டானோ, சுலாத் தீவுத் தொகுதிகளும் (sulu archipelago) எல்லையாக உள்ளன. இதன் நீளம் 790 கி.மீ.; அகலம் 600 கி. மீ.; பரப்பளவு 260,000 ச.கி.மீ.; சில இடங்களில் ஆழம் 5600 மீ. கடலோரங்களில் பவளத் தீவுகள் மிகுதியாக உள்ளன. பரவலாக 4000 மீ. ஆழமும், ஒரு சில இடங்களில் 5600 மீ. ஆழமும் காணப்படும். மீன் பிடித்தல் மிக இன்றியமையாத தொழிலாக உள்ளது. முத்துச் சிப்பி, சுறா மீன் துடுப்பு, கடலாமை முட்டை முதலான வணிகப் பொருள்கள் சேகரிக்கப் பட்டு, ஏற்றுமதியாகின்றன. —அர. கமலதியாகராசன்