உயிர்வாழ் வீதம்
uyirvāḻ vītam
இது குறிப்பிட்ட ஒரு காலத்தில் அல்லது பல்வேறு காலங்களில் ஓராயிரம் மக்களுள் எத்தனை பேர் உயிருடன் வாழ்கின்றனர் என்பதைக் குறிக்கும்.
இது குறிப்பிட்ட ஒரு காலத்தில் அல்லது பல்வேறு காலங்களில் ஓராயிரம் மக்களுள் எத்தனை பேர் உயிருடன் வாழ்கின்றனர் என்பதைக் குறிக்கும். ஒரு நாட்டின் உயிர்வாழ் வீதத்தைப் (Survival Rate) பற்றிய புள்ளி விவரங்கள் பொருளாதாரத் திட்டங்களை உருவாக்கவும், அவற்றைச் செயற்படுத்தும்பொழுது மக்கள்தொகையின் தேவைக்குகந்த வகையில் உற்பத்தி, பங்கீடு ஆகியவற்றை வரையறுக்கவும் இன்றியமையாதனவாயுள்ளன. பொதுநலத் துறையின் பயன்பாட்டிற்கும் ஆயுள் காப்பீட்டுப் பணிகளுக்கும் மக்கள் தொகையின் உயிர்வாழ் வீதம் நன்கு பயன்படுகிறது. ஒரு நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி அல்லது குறைவைப்பிற நாட்டு மக்கள்தொகையோடு ஒப்பிட்டு ஆய்வுகள் நடத்தவும் இது தேவைப்படுகிறது.
இறப்பு வீதம் (Mortality Rate) கணக்கிடுவதற்கு பல்வேறு குறியீடுகளைப் (Indices) பயன்படுத்துகின்றனர். அவை பொது இறப்பு வீதம் (Crude Death Rate), இளங்குழவி இறப்பு வீதம் (Infant Mortality Rate), பால் அடிப்படையில் பல்வேறு வயதுகளில் இறப்பு வீதம் (Death rate at Different Ages by Sex) போன்றவையாகும். மக்கள்தொகையின் பொது இறப்பு வீதத்தைக் கணிக்கப் பின்பற்றும் முறைகளுள் சிறப்பானவை ஆயுள் பட்டியல்கள் (Life Tables).
ஆயுள் பட்டியல் மூலம் குறிப்பிட்ட ஒரு காலத்தில் பிறந்த குழந்தைகள் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன என்பது கணிக்கப்படுகிறது. அந்த மக்கள்தொகையின் உயிர்வாழ் காலம் கணிக்க (Longevity) இது பயன்படுகிறது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகைக் கணிப்பு (Decennial Census) நடைபெறுகிறது. இவைகளைக் கொண்டு இறப்பு வீதம் அல்லது உயிர்வாழ் வீதம் கணிக்கப்படுகிறது. ஆண் பெண் இரு பாலாருக்கும் தனித்தனியாக ஆயுள் பட்டியல்கள் உருவாக்கப்படுகின்றன. சில காலங்களில் ஒரு நாட்டின் பல்வேறு இனங்களுக்கும் பகுதிகளுக்கும் கூட இவ்விதப் பட்டியல்கள் கணிக்கப்படுவதுண்டு.
சில நோய்கள் வரவிடாமல் தடுக்கப்பட்டால் ஒரே காலத்தில் பிறந்த குழந்தைகளது உயிர்வாழ் வீதம் எப்படி இருக்கும் என்று ஆயுள் பட்டியல் மூலம் அறியலாம். இதைக்கொண்டு வருங்காலத்தில் ஒரு சமுதாயத்தில் கிடைக்கக்கூடிய தொழிலாளர் எண்ணிக்கையைப் பெற முடியும். மேலும், பள்ளி செல்லும் சிறுவர் எத்தனைபேர் இருப்பார்கள்? அவர்களுக்கு எத்தனைப் பள்ளிக் கட்டிடங்கள், தளவாடங்கள், ஆசிரியர்கள் வேண்டுமென்னும் கணிக்க இது உதவுகிறது.
ஆயுள் பட்டியல்களை உருவாக்கப் பிறப்பு, இறப்பு ஆகியன அடங்கிய அடிப்படைப் புள்ளி விவரங்- கள் (Vital Statistics) ஒழுங்காகாகப் பதிவு செய்யப்பட வேண்டும். பிறப்புகள் மக்கள் தொகைக் கணிப்பில் பதிவாகலாம். ஆனால், இறப்புகள் பதிவு செய்யப்படாமற் போவதுண்டு. துல்லியமாக இத்தகைய புள்ளி விவரங்கள் கிடைக்காமற் போனால் அவற்றை ஒப்பிட்டு ஆராய (Comparative Analysis) இயலாது போகும். ஆயுள் பட்டியல் ஒன்றை எடுத்துக்காட்டாகக் கொண்டு அதை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் காணலாம். கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள ஆயுள் பட்டியல் படிவத்திலுள்ள பல்வேறு கலங்களுள் (Columns) முக்கியமான ஒன்றுதான் உயிர்வாழ் வீதமாகும்.
இடையே உயிரோடு இருப்பவர்
1 || 132645 114531 || 18114 — || 0.13656 — || 0.86344 — || 123588 —
1. x = பிறப்பில் தொடங்கி 0, 1, 2, 3, என்று 99 வரை வயதைக் குறிக்கும்.
2. Ix = முதலாண்டு முடிய உயிருடன் இருப்பவர்கள் = 132645
3. dx = முதலாண்டு முடிந்து ஆனால் இரண்டு ஆண்டு முடிவதற்குள் இறந்தவர்கள்
::d_x = I_x - I_{x+1} = 132645 - 114531 = 18114
4. முதல் ஆண்டில் உயிருடன் இருந்தவர்களின் எண்ணிக்கையான 132645 பேரில் மறு ஆண்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 18114 பேர் என்றால் இறப்பு வீதம் (முதலாண்டுக்கு)
::q_x = \frac{d_x}{I_x} = \frac{18114}{132645} = 0.136559 = 0.13656
5. px என்பது x வயதுள்ளவர்கள் மறு ஆண்டு வரை உயிருடன் இருக்கக் கூடிய வாய்ப்பு (Chance of Probability) 1–இலிருந்து இறந்தவர்களின் வீதத்தைக் கழித்து வரும் தொகையாகும்.
(ஒருவர் வாழும் வாய்ப்பு p; இறக்கும் வாய்ப்பு q; p+q = 1 formula)
::p_x = 1 - q_x = 1 - 0.13656 = 0.86344
6. L_x = I_x - \frac{1}{2} d_x ::L_o = I_o - \frac{1}{2} d_o = 132645 - \frac{1}{2} \times 18114 :::= 123588
இவ் ஆயுள் பட்டியலின் ஆய்வின் ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் இறப்புகள் ஆண்டு முழுவதும் பரவலாக நிகழ்வதாகவும், இறப்பினால் உண்டாகும் இழப்புகள் தவிரக் குடியேற்றம் போன்றவை நடக்கவில்லை என்றும், வறையறை செய்யப்பட்ட பிறப்புகள் 10,000 அல்லது 1 இலட்சம் என்னும் எடுகோள்களாகக் (Assumptions) கொள்ளப்படுகிறது.
உயிர் வாழ் வீதம் பற்றிய புள்ளி விவரங்கள் துல்லியமாக எல்லா நாடுகளிலும் கிடைப்பதில்லை. ஐக்கிய நாட்டுச் சபை ஆண்டு மக்கள் தொகை பற்றிய அறிக்கையில் 1900–ஆம் ஆண்டு முதல் கிடைக்கக்கூடிய அனைத்து விவரங்களையும் ஒவ்வோர் ஆண்டும் தொகுத்து அளிக்கிறது.
கிரேக்கர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த மக்களது கல்லறைகளில் இருந்து பெறப்படும் புள்ளி விவரங்களிலிருந்து அக்காலத்திலேயே உயிர்வாழ் வீதங்கள் கணிக்கப்பட்டுள்ளன என அறியப்படுகிறது. ஆயினும் இவை முழுமையாக ஏற்புடையனவா என்பது ஆய்வுக்குரிய கருத்தாகும்.
ஆயிரம் பிறப்புகளில் பற்பல வயதுகளில் உயிர்வாழ் வீதம் என்னவாக இருக்கும் என்பதைக் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள வரைபடம் விளக்குகிறது.
இக்காலத்தில் உயிர்வாழ் வீதம் உயர்ந்து கொண்டே வருகிறது. இறப்பு வீதம் மருத்துவக் கண்டுபிடிப்புகளாலும், தொற்று நோய்கள் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டிருப்பதாலும் குறைந்து வருகிறது. குழந்தைகள் உயிர்வாழ் வீதமும் உயர்ந்துளளது. ஆயிரம் குழந்தைகள் பிறந்தால் 250 இனங்குழவிகள் தாய் வயிற்றிலேயே இறந்துவிடும் அவலநிலை இருந்தது. இப்போது தாய் சேய் நலப் பாதுகாப்பு வசதிகள் பெருகியுள்ளதாலும், பிறப்புக்கு முன்னும் பின்னும் தாய் சேய் நலம் நாடப்பட்டுத் தேவையான மருத்துவவசதி அளிக்கப்படுவதாலும் இத்தகைய இறப்பு வீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது மகப்பேறு மருத்துவம் வளர்ச்சி பெற்று நாடெங்கிலும் கிடைப்பதாக உள்ளது.
காண்க: இளங்குழவி இறப்பு, இறப்பின் போக்கு. தா.செ.
துணை நூல்கள்
Clark, Colin, Population Growth and Land Use, Mc Millan, London, 1977.
Gupta, S.P., Statistical Methods, Sultan Chand, New Delhi, 1981.
Part, J.E. and Park, K., Preventive and Social Medicine, Banarsidas Bhanet, Jabalpur, 1985.
Ashish Bose, E.d., Studies in Demography, George Allen, London, 1970.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 980)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5ydxqpab/
தமிழ்“உயிர்வாழ் வீதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5ydxqpab/APA
Oliyon Research. (2026). உயிர்வாழ் வீதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5ydxqpab/MLA
"உயிர்வாழ் வீதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5ydxqpab/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment