அரிச்சந்திரன் கதை
ariccantiraṉ katai
புராணம், விலாசம், கும்மி போன்ற இலக்கிய வகையாகவும் கூத்தாகவும் நாடகமாகவும் நாட்டுப் பாடலாகவும் பாரத நாட்டு மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழும் புராணக் கதைகளுள் ஒன்று.
புராணம், விலாசம், கும்மி போன்ற இலக்கிய வகையாகவும் கூத்தாகவும் நாடகமாகவும் நாட்டுப் பாடலாகவும் பாரத நாட்டு மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழும் புராணக் கதைகளுள் ஒன்று.
இது, உண்மையை உயிருக்கும் உடைமைக்கும் மேலாக மதித்துப் போற்றிய மன்னன் அரிச்சந்திரனின் கதை. இக்கதை பாரத நாட்டில் மட்டுமன்றித் திபெத்துப் போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது.
அயோத்தி நாட்டு மன்னன் அரிச்சந்திரன். இவன் மனைவி சந்திரமதி; மகன் உலோகிதாசன். இவன் உண்மை பேசுவதைத் தன் வாழ்வியற் கொள்கையாகக் கொண்டவன். இவனைப் பொய் சொல்ல வைப்பதாகக் கூறி விசுவாமித்திரர் அதனை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டார். இருவருக்கும் நடந்த இந்தப் பலப்போட்டியில் அரிச்சந்திரன் தன் நாடு, நகரம், அரசு அனைத்தையும் இழந்தான். பின்னர் இன்னொரு நாட்டில் தன் மனைவியை விலை கூறி விற்றுத் தானும் சுடுகாட்டினைக் காவல் காக்கும் புலையனிடம் அடிமையானான். தன் மகன் பிணமான போது அவனை எரிக்க வந்த தன் மனைவியிடமே பணம் கேட்கும் நிலை தோன்றியது. அதற்காக அவளது தாலியையும் பணயமாகக் கேட்டான். மனைவி மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு அவளை வெட்டுமாறு ஆணை வந்தபோது அதையும் ஏற்று அவன் அவள் கழுத்தை வெட்டும்போது, வெட்டிய வாளுக்கு மாறாக அவள் கழுத்தில் மாலை விழுந்தது. இறுதியில் வாய்மை வெல்ல அரிச்சந்திரன் இழந்த பொருளையும் மனைவியையும் எய்தினான்.
இக்கதையை, வீரராகவக் கவி 1215 விருத்தங்களில் அரிச்சந்திர புராணம் என்னும் பெயரில் தமிழில் பாடியுள்ளார். அரிச்சந்திரக் கும்மி, அரிச்சந்திர இயட்சகானம், அரிச்சந்திர பாகவத மேளா ஆகிய வகைகளிலும் இக்கதை அமைந்துள்ளது. அரிச்சந்திர விலாசம் என்னும் பெயரிலும் கவிராயர் பாடியுள்ளார். வடமொழி தேவி பாகவதத்தில் இம்மன்னனின் கதை கூறப்பட்டுள்ளது. நெல்லூர் வீரன் என்னும் ஆசுகவிராயர் இக்கதையை வில்லுப் பாடலாகப் பாடியுள்ளார். வாய்மையின் மேன்மையினை விளக்கி நிற்கும் இக்கதை இந்திய மொழிகள் பலவற்றில் திரைப்படமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. காந்தியடிகளின் வாய்மை நாட்டத்திற்கு இக்கதை அவருடைய இளமைக் காலத்தில் வித்தாக அமைந்து விளங்கிய செய்தியினைத் தம் சத்திய சோதனையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.சு.ச.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 777)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5u62xkmv/
தமிழ்“அரிச்சந்திரன் கதை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5u62xkmv/APA
Oliyon Research. (2026). அரிச்சந்திரன் கதை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5u62xkmv/MLA
"அரிச்சந்திரன் கதை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5u62xkmv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment