கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் சென்னையில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். வல்லக காளத்தி நகர் அயோத்திதாச கவிராச பண்டிதர் என்ற வேறு பெயரும் இவருக்கு உண்டு. இவர் பல நூல்கள் இயற்றியுள்ளார். தன்வந்திரி பகவான் இயற்றிய ‘பால வாகடம்’ என்னும் ‘சிமிட்டு ரத்தினச் சுருக்கம்’ நூலை ஏட்டுப் பிரதிகள் கொண்டு ஆராய்ந்து கி.பி. 1869–இல் வெளியிட்டார். இதில் 360 பாடல்கள் அடங்கியுள்ளன.நா.ஜெ.