சால்க்கோசைட்
cālkkōcaiṭ
இது CuS உட்கூறு கொண்ட கனிமமாகும்.
இது CuS உட்கூறு கொண்ட கனிமமாகும். சால்கோசைட் (chalcocite) செஞ்சாய்சதுரத் தொகுதியைச் (orthorhombic system) சேர்ந்தது. படிகங்கள் அரியவாகவும், சிறியனவாகவும் காணப்படுகின்றன. இரட்டுறலால் படிகங்கள் அறுகோண எல்லை வரையைப் பெற்றுள்ளன (படம்), இக் கனிமம் பெரிதும் நுண் மணிகளாகவும், திரட்சியாகவும் காணப்படும். சால்கோசைட் உலோக மிளிர்வுடையது; பளபளப்பான ஈயச் சாம்பல் நிறமுடையது.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> படிகங்கள் போலி உருவ அறுகோணங்களைக் கொண்டும், இரட்டுறல் படிகத் தன்மையைப் பெற்றும் காணப்படும். இரட்டுறல் படிகத்தளம் (110) பட்டகத்தில் காணப்படும். இரட்டுறல் படிகத் தன்மை (032) அல்லது (112) பக்கத்தில் அரிதாகக் காணப்படும். வழக்கமாகத் திண்ணிய உருவைப் பெற்றுக் கட்டமைப்புத் திண்துகள் அமைப்பு முதல் இறுகிய துகள் வடிவு அமைப்பு வரை காணப்படும்.
இது ஈருருவமாதல் (dimorphism) தன்மையுடன் காணப்படும். 91°Cக்கு மேல் செஞ்சாய் சதுரத் தொகுதி உருவம் உடையது. சம அச்சுத் தொகுதிப் படிக உருவத்திற்கு மாறக் கூடியது. செயற்கைச் சால்கோசைட் படிகங்கள் கன சதுர வடிவம் (100), எண்முக வடிவப் (111) பக்கங்களில் இரட்டுறல் தன்மையுடன் காணப்படும். பிளவு, பட்டகப் பக்கத்தில் (110) குறிப்பிடுமளவில் காணப்படும். சங்கு முறிவு உடையது. ஒளி புகாத் தன்மையுடன் காணப்படும்.
உட்செறிவு. தாமிர சல்ஃபைடு (Cu₂S), கந்தகம் 20.2%, தாமிரம் 79.8%, சில சமயம் இரும்பு, வெள்ளி முதலியவை சிறிய அளவில் சேர்ந்து காணப்படும். அமிலத்தில் கரையும் தன்மை உடையது. இக்கனிமம் வெள்ளிக் கனிமமான அர்ஜென்டைட் போல் காணப்படும். ஆனால், இது எளிதில் உடையக் கூடியது. சால்கோசைட் செயற்கையாகத் தாமிர குளோரைடு வளிமத்தையும், ஹைட்ரஜன் சல்ஃபைடு வளிமத்தையும் சூடுபடுத்தித் தயாரிக்கப்படுகிறது. சால்கோசைட்டைத் தனித் தாமிரமாகவோ, சால்கோபைரைட்டாகவோ, போர்னைட், கோவிலைட், மாலகைட், அசூரைட் போன்று மாற்ற முடியும்.
தோன்றுமிடம். தாமிரத்தின் விலை உயர்ந்த தாதுவான இது, பரந்து காணப்படுகிறது. சால்கோசைட் தோன்றுமிடத்தை அறிவது மிகவும் கடினம். இது பெரும்பாலும் சல்ஃபைடு செறிவூட்ட முறையில் (sulphide enrichment) உண்டான கனிமமாகக் காணப்படும். திறந்த நிலையில் இக்கனிமத்தின் மேல் மாசு போன்ற கறை படிய, இது வெளிர் கறுப்பாக மாறுகிறது. கத்தியால் இக்களிமத்தை வெட்டினால், சீரற்ற முறையில் உடைகிறது. மோஸ் அளவில் இதன் கடினத் தன்மை 2.5; ஒப்படர்த்தி 5.7. செயற்கைக் கனிமம் 5.785 வரை பெற்றுக் காணப்படும். இது செம்பின் முக்கியமான தாதுவாகும். மியாமி, மொரென்சி, பிஸ்பி, ஆரிஸ் முதலிய இடங்களிலுள்ள சல்ஃபைடு படிவுகளில் காணப்படுகிறது. —அ.வே. உடையனபிள்ளை —இரா. சரசவாணி
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 133)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5npzcgfu/
தமிழ்“சால்க்கோசைட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5npzcgfu/APA
Oliyon Research. (2026). சால்க்கோசைட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5npzcgfu/MLA
"சால்க்கோசைட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5npzcgfu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment