சிமெட்டிடின்
cimeṭṭiṭiṉ
இரைப்பைப் புண்ணுக்கு எதிரான இம்மருந்து (H) ஏற்பிகள் வகையைச் சார்ந்ததாகும்.
இரைப்பைப் புண்ணுக்கு எதிரான இம்மருந்து (H) ஏற்பிகள் வகையைச் சார்ந்ததாகும். இரைப்பைப் புண்கள் உருவாவதற்கான ஹைட்ரோகுளோரிக் அமில மிகைச் சுரப்பு, எதிர் அங்க ஊக்கி-எதிர் அங்கமறு வினைகள், நோயாளியின் உளஞ் சார்ந்த பகுதிகள், உடலினுள் உற்பத்தியாகும் ஹிஸ்டமின் போன்றவை காரணங்களாகும்.
ஹிஸ்டமின் எதிர் மருந்துகள் அண்மைக் காலமாகப் பரவி வருகின்றன. பழக்கத்திலுள்ள ஹிஸ்டமின் எதிர் மருந்துகள் குருதி நாள மண்டலத்திலும், மூச்சு மண்டலத்திலும், நன்கு வினை புரிந்த போதும், இரைப்பைச் சுரப்பை இதனால் நிறுத்த முடியவில்லை. பின்னர், நடந்த ஆய்வுகளின் விளைவாக இரண்டு வகை ஹிஸ்டமின் ஏற்பிகள் இருந்தமை அறியப்பட்டது. அவை (H₁) ஏற்பிகள், (H) ஏற்பிகள். ஆகவே H ஏற்பி தடை மருந்துகள் கேஸ்டிரின் மற்றும் இன்சுலின், புரத உணவு, ஹிஸ்டமின் ஆகியவற்றின் தூண்டலால் உண்டாகும் அமிலச் சுரப்பைத் தடை செய்தன.
H ஏற்பி தடை மருந்தில் முதலாவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது பூரினமைட் (Burinamide) ஆகும். இதன் பக்க விளைவுகள் தீவிரமாக இருந்தமையால், இவை பயன்படுத்தப்படவில்லை. இறுதியாகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தான சிமெட்டிடின் (cemetidine) மிகவும் நன்மையளித்தது. தீமையான பக்க விளைவு எதுவும் உண்டாகவில்லை. இரைப்பைப் புண் முன் சிறு குடல் புண், எதிர்க்களிப்பு, உணவுக் குழலழற்சி, இரைப்பைப் புண் அழற்சி ஆகிய நோய் நிலைகளில் சிமெட்டிடின் மிகு பயன் அளித்தது.
200 மி.கி, சிமெட்டிடின் நாளும் 4 வேளையாகக் கொடுக்கப்பட வேண்டும். இது 300 மி.கி. மாத்திரைகளாகக் கிடைக்கிறது. இது போன்றே ரானிடிடின் (ranitidine) என்ற மருந்தும் பயன்படுகிறது. சிமெட்டிடின் பயன்படுத்தப்படும் போது, அரிதாக ஆண்களில் முலை வீக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவை உண்டாகின்றன. வயது முதிர்ந்தவர்களில், ஒரு குழப்ப நிலை உண்டாகிறது. 4 வார மருத்துவத்தில் முன் சிறு குடல் புண் 80% உம், இரைப்பைப் புண் 70% உம் குணமடைவதாகத் தெரிகிறது. —மு. கி. பழனியப்பன் நூலோதி. Charles R Craig, Modern Pharmacology, First Edition, Little Brown and Co., Boston, 1982.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 248)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5m7g4mzs/
தமிழ்“சிமெட்டிடின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5m7g4mzs/APA
Oliyon Research. (2026). சிமெட்டிடின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5m7g4mzs/MLA
"சிமெட்டிடின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5m7g4mzs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment