ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள எத்தியோப்பிய நாட்டின் தலைநகர். இதுவே இந்நாட்டின் பெரிய வாணிக நகரம். சில தொழிற்சாலை, கல்வி மையங்கள் ஆகியவை இங்கு அமைந்துள்ளன. இங்குத்தான் அரசாங்கத்தின் அலுவல்கள் நடைபெறுகின்றன. ஆப்பிரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமை அலுவலகமும் ஆப்பிரிக்க ஐக்கிய நிறுவனத்தின் தலைமை அலுவலகமும் இங்குள்ளமையால் பன்னாட்டு மாநாடுகள் பல இங்கு நடைபெறுகின்றன. அடிசு அபாபா இருப்பிடம் அடிசு அபாபாவின் (Addis Ababa) பரப்பு 218 ச.கி.மீ. இந்நகர் 2400 மீ. உயரத்தில் இருக்கிறது. எனவே இங்கு எப்போதும் குளிராக இருக்கும். அடிசு அபாபா என்ற சொற்றொடருக்குப் ‘புதுமலர்’ என்பது பொருள். கி.பி. 1886-ஆம் ஆண்டில் பேரரசர் இரண்டாம் மெனலிக்கு (Menelik II) என்பவர் இந்நகரை உருவாக்கினார். கி.பி. 1890-இல் இது தேசியத் தலைநகராயிற்று. மக்கள் தொகை 11,25,340 (1978) அடிசு அபாபா