அணுவிரதம்
aṇuviratam
அணுவிரதம் என்பது சமண சமயத்து இல்லறத்தவர் மேற்கொள்ள வேண்டிய நோன்பாகும்.
அணுவிரதம் என்பது சமண சமயத்து இல்லறத்தவர் மேற்கொள்ள வேண்டிய நோன்பாகும். சமண சமயச் சான்றோர் கூறும் அறவுரை கேட்டு ஒழுகவேண்டிய இல்லறத்தவர் சிராவகர் – சாவகர்-என அழைக்கப்படுவர். இவர்கள் மேற்கொள்ளும் விரதம் அணுவிரதம் எனப்படும். இதனைச் ‘சாவக நோன்பு’ என்றும் கூறுவர். இச்சமயத் துறவறத்தார்க்குரிய விரதம் மாவிரதம் எனப்படும். இந்த அணுவிரதம் மாவிரதம் பற்றிய விளக்கம் சமண அறநூல்களிலும் காப்பியங்களிலும் சுட்டப்பட்டுள்ளது. அணுவிரதமானது, அகிம்சை, அசத்தியத் தியாகம், அசுதேயம், பிறனில் விழையாமை, பொருள்வரைதல் என்று ஐந்து வகைப்படும். இவை முறையே கொலை, பொய், களவு, காமம் ஆகியவற்றை நீக்குதல், பொருள்வரைதல் எனப்படும். இவற்றைச் சமந்த பத்ராச்சாரியாரால் இயற்றப்பட்ட இரத்தின கரண்டவம் என்னும் சமண சமயநூல், “பெரிய கொலை பொய் களவொடு காமம் பொருளை வரைதலோடைந்து” என்று காட்டியுள்ளது. இவற்றோடு கள்ளுண்ணாமை, ஊன் உண்ணாமை, தேன் உண்ணாமை, இரவுண்ணாமை, குரவரைப் பணிதல் ஆகியன சேர்ந்த பத்தும் சமண சமய இல்லறத்தார்க்குரிய விரதங்கள் என்று மேருமந்தர புராணம் முதலிய சமணத் தமிழ் நூல்கள் சாற்றுகின்றன. அணு விரதிகளுக்குச் சுவர்க்கம் உண்டாகும் என்று அருங்கலச் செப்பு கூறுகிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 313)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/59u62ptm/
தமிழ்“அணுவிரதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/59u62ptm/APA
Oliyon Research. (2026). அணுவிரதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/59u62ptm/MLA
"அணுவிரதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/59u62ptm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment