சார்க்கோமா
cārkkōmā
கருவில் முதன் முதலில் மூன்று வகைத் திசுக்களே காணப்படும்.
கருவில் முதன் முதலில் மூன்று வகைத் திசுக்களே காணப்படும். அவை இடைப்படை, புறப்படை, அகப்படை ஆகும். இவற்றில் இடைப்படைச் செல்களிலிருந்து பல்வேறு திசுக்களில் உண்டாகும் புற்றையே சார்க்கோமா (sarcoma) என்பர். கார்சினோமா (carcinoma) புற்று, சார்க்கோமா புற்றிலிருந்து பின்வரும் வகையில் வேறுபடுகிறது.
கார்சினோமா, சுரப்பி மற்றும் தோல் பகுதியில் உள்ள மேலணித்திசுச் செல்களிலிருந்து உண்டாகிறது. சார்க்கோமா, தசை, எலும்பு, புன்கலன், நார்த்திசு ஆகியவற்றில் உண்டாகிறது. சார்க்கோமா 10—20 வயது வரை அதிகம் காணப்படும். கார்சினோமா வயதானோரிடம் காணப்படும். சார்க்கோமா மிக விரைவாக வளர்ந்து குருதி மூலம் உடலெங்கும் பரவும் தன்மை வாய்ந்தது. கார்சினோமா நிணநீர் வழியாகப் பரவுகிறது. நுண்ணோக்கியால் நோக்க, சார்க்கோமாவில் செல்கள் தனித்துக் காணப்படும். மாறாக, கார்சினோமாவில் செல்கள் தூண்களைப் போலக் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். சில வேளைகளில் சார்க்கோமா. முன்பிருந்த தீங்கற்ற கட்டிகளிலும் தோன்றும்.
நோய்க்குறிகள். சார்க்கோமா கட்டிகள் சதைப் பற்றுடன் கடினமாகவோ, மென்மையாகவோ காணப்படும். குருதி ஓட்டக் குறைவுள்ள நார் சார்க்கோமா (Fibro sarcoma) கடினமாக, வெண்ணிறக் கட்டிகளாகக் காணப்படும். மாறாக முலையில் உண்டாகும் நார் சார்க்கோமா மென்மையாகவும், குருதி ஒழுக்குச் சிரைப் பைகளுடனும் காணப்படுவதற்குக் காரணம் மியூகாய்டு நலிவேயாகும்.
குருதி ஓட்டம் நிறைந்த இப்புற்றுக் கட்டியில் குருதி வாரி உண்டாகக் காரணம் மெல்லிய சுவர்களுடைய நாளங்களே. சில இடங்களில் இவை சிரை குருதி நிறைந்து குடாக்களாகக் (venous space) காணப்படும். இக்கட்டிகள் சூட்டுடன் காணப்படுவதற்கான காரணம், மிகு குருதி ஓட்டமும், குருதி ஒழுக்கில் உண்டான குருதி மீண்டும் குருதியுடன் கலப்பதுமேயாகும்.
மருத்துவம். சுற்றியுள்ள நல்ல திசுக்களுடன் கட்டியை முழுமையாக எடுக்காவிட்டால், எளிதில் பிற இடங்களுக்குப் பரவும். கை, கால்களில் உள்ள சார்க்கோமாவில் அப்பகுதியைத் துண்டித்துக் களைவதன் மூலம் முற்றிலும் நீக்கலாம். —மா.ஜெ. பிரடெரிக் ஜோசப்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 98)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/57cd5rwv/
தமிழ்“சார்க்கோமா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/57cd5rwv/APA
Oliyon Research. (2026). சார்க்கோமா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/57cd5rwv/MLA
"சார்க்கோமா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/57cd5rwv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment