குறிப்பிட்ட நிறையுடைய ஒரு வளிமத்தின் வழியாக ஒலி அலையின் நெருக்கமும், நெகிழ்வும் கடத்தப் படும் போது, வளிமத்தின் சம நிலை பாதிக்கப் படுகிறது. வளிமத்தில் மீள் பண்பினை அதன் அமுக்கமடையும் தன்மைக்குரிய ஓர் அளவாகக் கருதலாம். இதுவே அதன் பருமக் குணகம் ஆகும். B = - \frac{dp}{dv/v} இங்கு dp மற்றும் dv என்பன முறையே, வளிமத்தின் அழுத்தம் மற்றும் பருமனில் ஏற்படும் நுண்ணிய மாற்றங்களாகும். பரும அதிகரிப்பின் மூலம் ஏற்படும் அழுத்தக் குறைவினை எதிர்க் குறியால் குறிக்கலாம். இப்பருமக் குணக மதிப்பினை ஒரு மாறிலியாகக் கொள்ளும் போது மட்டுமே, ஒலியின் நெட்டலைகளை நேர் தன்மை கொண்டவையாகக் கருதலாம். ஆனால், ஒலி அலையின் வீச்சு மிக அதிகமாக அமையும் போது, மேற்சொன்ன கருத்து மாறு படுகிறது. அப்பொழுது, தலைப் பரவல் புதியதொரு வடிவத்தினைப் பெறுகிறது. இந்நிலையில், நேரிலா பாய்ம இயக்கச் சமன்பாடுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நிறையுடைய ஒரு வளிமத்தில் வெப்பம் மாறாத மாற்றங்கள் ஏற்படும் போது, பருமன் மற்றும் அழுத்தத்திற்குரிய தொடர்பினை \frac {P}{P_0} = \big[ \frac {V_0}{V} \big] ^ \gamma = \big[ \frac{V_0}{V_0 \big(1 + \delta \big)} \big]^\gamma v என்னும் சமன்பாட்டால் குறிக்கலாம். P₀, V₀ என்பன சம நிலையிலமையும் வளிமத்தின் அழுத்த மற்றும் பருமன் மதிப்புகளையும் P, V என்பன ஒலி அலையின் மூலமான அழுத்த மற்றம் பருமன் மதிப்புகளையும் குறிக்கின்றன. γ என்பது வளிமத்தின் அழுத்த மற்றும் பருமன் மாறாத நிலைகளிலுள்ள வெப்ப எண்களின் விகிதமாகும். பருமனில் ஏற்படும் சிறு மாற்றத்தினைப் பெருக்கம் எனலாம். \frac {V}{V_0} = \delta ஆகும். \delta = \frac {\partial n}{\partial x} = - s இதில் δx நீளங் கொண்ட அடுக்கிலுள்ள துகள்களின் இடப் பெயர்ச்சியினை ∂n குறிக்கிறது. S என்பதைத் திரிபு S எனலாம். இந்நேரிலா விளைவுகளைக் கீழ்க் குறிப்பிடும் சோதனை எளிதில் விளக்குகிறது. ஒரு வளிமம் நிரம்பிய நீண்டதொரு குழாயின் ஒரு நுனியில் நகரும் தன்மை கொண்ட உந்து தண்டினைப் பொருத்த வேண்டும். தொடக்கத்தில் விளமம் நிலையாக அமையலாம். இப்போது, திடீரென வளிமத்தை நோக்கி உந்து தண்டு நகர்த்தப் படும் போது, சிறியதொரு திசை வேகம் ஏற்படுகிறது. இதன் பயனாக, ஒரு நெருக்கமுற்ற அலை ஏற்பட்டு வளிமத்தின் வழியாக ஒலியின் திசை வேகத்துடன் பரவிச் செல்கிறது. இப்போது முதல் அலை உற்பத்தியான பின்னர், மீண்டுமொரு சிறு திசை வேகம் உந்து தண்டின் மூலம் செலுத்தப் படும் போது, இரண்டாம் அலை உற்பத்தியாகிப் பரவிச் செல்கிறது. முதல் அலையின் வழியே சிறிதளவு அழுத்தம் அதிகரிப்பதால், வெப்ப நிலையும், ஒலியின் திசை வேகமும் அதிகரிக்கின்றன. மேலும், முதல் அலைக்குப் பின்புறமுள்ள வளிமமும், முதல் தாக்கின் பயனாக, உந்து தண்டின் திசை வேகத்துடன் நகரும் இரண்டாம் அலை விரைவில் முதல் அலையைச் சென்ற டைகிறது. ஆகையால் முடுக்கப்பட்ட உந்து தண்டின் இயக்கம் தொடரும் போது, தொடர்ச்சியாக உருவாகும் சிற்றலைகள் தொடர்ந்து அதிகரிக்கும் திசை வேகங்களுடன் நகர்ந்து செல்கையில், விளைவுறும் நெருக்கமுற்ற விளைவுறு அலை படத்தில் காட்டியுள்ளது போன்று, கூர்மையாக முன்னோக்கிச் செல்கிறது. இது: போன்றே உந்து தண்டின் எதிர் முடுக்கத்துடன் அமைந்த இயக்கத்தால் நெகிழ்வுற்ற விளைவுறு அலை குழாயின் வழியாக விரிந்து கொண்டே நகர்ந்து செல்லும். இவ்விரு முறைகளாலும் ஏற்படும் சீரற்ற தன்மையின் மூலமே, அதிக வீச்சுடைய நெருக்கப்பட்ட அலைகள் தோன்றுகின்றன. இதனை அதிர்ச்சி அலைகள் என்பர். குண்டு வெடிப்பதின் மூலம் ஏற்படும் அலைகள் அதிர்ச்சி அலைகளுக்கான எடுத்துக் காட்டாகும். இவை பாய்ந்து செல்லும் திசையில் ஏற்படும் பாய்ம அடர்த்தி, அழுத்தம் மற்றும் வெப்ப நிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்களே இவ்வலைகளுக்குரிய சிறப்புத் தன்மைகளாகும். புவியின் மேல் ஓடு பரப்பின் குறைகளின் சரியீட்டால் ஏற்படும் நில நடுக்க அலைகளும் அதிர்ச்சி அலைகளேயாகும். ஓர் அதிர்ச்சி அலை முகப்பினை டாப்ளர் விளைவின் ஒரு தொடர்ச்சியாகக் கொள்ளலாம். நிலையானதொரு பாய்மத்தில் அதிக வேகத்தில் நகரும் ஒரு பொருளைக் கருத்தில் கொள்ளலாம். இப்போது பாய்மத்தில் ஏற்படும் மாற்றங்களின் வேகம் பொருளின் வேகத்தினை விடக் குறைவாக அமையும் போது, பாய்மத்தின் எல்லையினைப் படத்தில் காட்டியுள்ளது போல் செயல் மண்டலம், அமைதி மண்டலம் என இரு பகுதிகளாகக் கொள்ள வேண்டும். செயல் மண்டலம், இயக்கத்தால் மாற்றமடைந்த பாய்மப் பகுதியினையும், அமைதி மண்டலம், மாற்றமடையாத பாய்மப் பகுதியினையும் குறிக்கின்றன. P இலிருந்து P' நோக்கி நகரும் ஒரு வானூர்தி t காலத்தில் நகர்வதாகக் கொள்ளலாம். இப்போது அதனைச் சுற்றியுள்ள காற்று V₁ என்னும் ஒலியின் திசை வேகத்துடன் நகர்வதாகக் கருதலாம். t காலத்தில் நகரும் ஒலி அலைகளை வட்டங்கள் குறிக்கின்றன. Δt இரண்டு அலைகளினிடையே ஏற்படும் கால இடைவெளியாகும். ஆனால், வானூர்தியின் திசைவேகம் U, V₂ஐ விட மிகும் போது, ஊர்தியின் நுனிப் பகுதியில் அதிக அடர்த்தியும், அழுத்தமும் ஏற்பட்டு, ஒலி அலையின் தொடு கோட்டுத் திசையில் அதிக வீச்சிலமையும் அதிர்ச்சி அலைகள் தோன்றுகின்றன. ஊர்தியின் திசையினை அச்சாகக் கொண்டமையும் கூம்பினை மாஷ் கூம்பு என்பர். இதன் அரைக் கோணம் ஆனால், Sin \alpha = \frac {vs}{u} இவ்வாறே மின்காந்த அலைகளைத் தரும் ஒரு மின்னூட்டங் கொண்ட துகளின் நுகர்ச்சியினையும் கருதலாம். q என்னும் மின்னூட்டங் கொண்ட துகள் ஒன்றை விட அதிகமான ஒளி விலகல் எண் கொண்ட ஓர் ஊடகம் வழியாக Vq திசை வேகத்துடன் நகரச் செய்யலாம். இந்த Vq மதிப்பினை ஊடகத்தில் மின் காந்த அலையில் கட்டத் திசை வேக மதிப்பான V உடன் ஒப்பிடப் படுகையில் மிக அதிகம் எனக் கொள்ளலாம். V < C; C ஒளியின் திசை வேகமாகும். இப்போது, மின் காந்த அலைகளுக்கான மாஷ் கூம்பு ஏற்படுகிறது. அதன் அரைக் கோணம் α ஆனால், Sin \alpha = \frac {V}{V_q} இதனால், தோன்றும் உதிர்ச்சி அலைகளே செரன்கோவ் கதிர் வீச்சுகள் எனப் படுகின்றன. இக்கதிர் வீச்சுகளின் பரவல் திசையினைத் துல்லியமாக அளவிடுவதன் மூலம் மின்னூட்டங்கொண்ட துகளின் திசை வேகம் கணக்கிடப்படுகிறது. —சிவ. சேதுராமன்