எம்எஸ் முன்பக்க விரைவி

emes muṉpakka viraivi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எளிதாகக் கையாளக் கூடிய வலையப் பக்கப் பதிப்பியற்றி இது வைசிவிக் (WYSIWYG - What You Seels What You Get) என்னும் நெறிமுறையில் வேலை செய்கிறது. ஒரு பக்கத்தினை வடிவமைக்கும் பொழுது, அது திரையில் எப்படிக் காட்சியளிக்கிறதோ அப்படியே மேய்வியிலும் காட்சியளிக்கும். இதனால் நாம் மேற்கொள்ளும் வடிவமைப்பு எளிதாகிறது. இதன் நன்மைகளாவன 1) நுண்படங்களைத் தட்டிப் பாடம், பத்திகள் ஆகிய இரண்டையும் படிவமைப்பு செய்யலாம். 2) பெரும்பாலான எச்டிஎம் எல் ஒட்டுகளுக்குரிய நுண் படங்கள் கொண்ட கருவிப் பட்டைகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தலாம்; ஒட்டுகளை அச்சடிக்க வேண்டியதில்லை. 3) அணியப்படங்களையும் செருகலாம். 4) ஒரு கணிப்பொறியிலிருந்தோ ஒரு வலையமைவிலுள்ள கணிப்பொறிகளைக் கொண்டோ இருப்பிலுள்ள பிற வலையப் பக்கங்களைத் திறக்கலாம். 5) இவ்விரைவியுடன் தனியாள் தொடக்கப் பக்க மாயாவியும் உள்ளது. இம் மாயாவி நம்மைப் பல கேள்விகள் கேட்கும்; படிப்படியாகத் தொடக்கப்பக்கத்தை உருவாக்க நம்மை அழைத்துச் செல்லும். — MS Front Page Express
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 160)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/55huj7a8/

தமிழ்
“எம்எஸ் முன்பக்க விரைவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/55huj7a8/
APA
Oliyon Research. (2026). எம்எஸ் முன்பக்க விரைவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/55huj7a8/
MLA
"எம்எஸ் முன்பக்க விரைவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/55huj7a8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment