ஆட்ட அதிகாரிகள்

āṭṭa atikārikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆட்டத்தை நடத்துவதற்காக, நடுவர், துணை நடுவர், உதவியாளர், கோடு காப்பாளர், குறிப்பாளர், நேரக் காப்பாளர் நேரம் குறிப்பவர் என பல்வேறுபட்டப் பணிகளில் ஏதாவது ஒன்றில் ஈடுபடும் ஒருவர், ஆட்ட அதிகாரி என்று அழைக்கப்படுகின்றார். இந்த ஆட்டத்தில் இரண்டு நடுவர்கள், இரண்டு குறிப்பாளர்கள், இரண்டு நேரக் காப்பாளர்கள், அதிகாரிகளாகப் பணியாற்றுகின்றார்கள். 22.அயலிடம் (Off - Side) எதிர்க்குழு பகுதியில் பந்தை விளையாடிக் கொண்டிருக்கும் தாக்கும் குழு ஆட்டக்காரர்களில் ஒருவர் தடுக்கும் குழு ஆட்டக்காரர்களையும் கடந்து, எதிர்க் குழு இலக்குக்கு அருகில் நிற்பதையே அயலிடம் என்கிறார்கள். இவ்வாறு அயலிடம் ஆகாமல் ஆடிட நான்கு சாதகமான விதிமுறைகள் ஆட்டத்திலே இடம் பெற்றுள்ளன. 1 . ஒருவர் தன்னுடைய சொந்தப் பகுதி ஆடுகளத்தில் நின்று கொண்டிருந்தால் அயலிடம் ஆகமாட்டார். 2. எதிர்க் குழுவினரின் பகுதியில், இலக்குக்கு முன்பாக 2 எதிராட்டக்காரர்களுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தால்; 3. பந்தை கோலால் விளையாடிக் கொண்டு, பந்துக்கு முன்புறம் போகாமல் கூடவே ஓடிக் கொண்டிருந்தால்; 4. அயலிடத்தில் நின்றாலும், ஆட்டத்தில் பங்கு பெறாமலே, பங்கு கொள்ள முயற்சிக்காமல் இருந்தால்; எந்த எதிர்க்குழு ஆட்டக்காரரும் அயலிடமே ஆக மாட்டார். 23. எல்லைக்கு வெளியே (Out of Bounds) ஆடுகள எல்லைக்குள்ளேதான் பந்து விளையாடப்பட வேணடும். ஆடப்படும் பந்தானது, பக்கக் கோட்டிற்கு வெளியே, முழுதும் கடந்து வெளியே சென்று விட்டால், அவ்வாறு பந்து போகக் காரணமாயிருந்த குழுவினரின் எதிர்க்குழுவினர், பந்து எந்த இடத்தில் கடந்து சென்றதோ அதே இடத்தில் வைத்து பந்தை அடித்தாடும் வாய்ப்பை நடுவரிடமிருந்து பெறுகிறார். முன்னர் அந்த இடத்தில் வைத்து கையால் பந்தை உருட்டி விடும் (Roll in) முறை இருந்து வந்தது. அது மாறி இப்பொழுது பந்தைக் காலால் தள்ளி ஆடும் முறை வந்திருக்கிறது. கடைக் கோட்டிற்கு வெளியே பந்து முழுவதும் கடந்து போனால், போகக் காரணமாயிருந்தவர் தாக்கும் குழுவினராக இருந்தால், 16 கெச துரத்தில் பந்தை வைத்து, தடுத்தாடும் குழு அடித்தாட ஆட்டம் தொடங்கும். பந்து வெளியே போக தடுத்தாடும் குழு காரணமாக இருந்தால், தாக்கும் குழுவினர் முனை அடி, அல்லது ஒறு நிலை முனை அடி அடிக்கின்ற வாய்ப்பினைப் பெறுவர். 24. தண்டனை (Fenalty) விதிகளுக்குட்படாத செயல் முறைகள் தவறுகள் அல்லது குற்றங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. அதற்கான தண்டனைகளும் உடனடியாக நடுவர்களால் கொடுக்கப்படுகின்றன. தவறுகளுக்கான தண்டனைகளில் குறிப்பிடத்தக்கவை : தனி அடி; முனை அடி; ஒறு நிலை முனை அடி ; ஒறு நிலை அடி என்பனவாகும். (விரிவினை அந்தந்தப் பகுதியில் காண்க). — officials
கலைச்சொல் · Technical வளைகோல் பந்தாட்டம் மூலம் · source: விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி — எஸ். நவராஜ் செல்லையா (பக். 133)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/55a3gba6/

தமிழ்
“ஆட்ட அதிகாரிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/55a3gba6/
APA
Oliyon Research. (2026). ஆட்ட அதிகாரிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/55a3gba6/
MLA
"ஆட்ட அதிகாரிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/55a3gba6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment