அறிவின் ஏற்புடைமை
aṟiviṉ ēṟpuṭaimai
பொருள்கள் · Senses
1.
இன்னதை அறிவு என்று ஏற்றல், அளவை இயல் சார்ந்தது. தன்னைக் கொண்டு வருதல், பிறிதைக் கொண்டு வருதல் என்னும் இரு நிலையில் அறிவு அளவையில் செய்யப்படும் ஆய்வு. இந்தியத் தத்துவக் கொள்கைகள் பெரும்பாலும் இவ்விரண்டினுள் அடங்கும். இந்த ஏற்புடைமை சமயத்திற்குத் தகுந்தவாறு வேறுபடும். 1.தகுந்த சான்று கிடைக்கும் வரை அறிவை மெய்ம்மை என்று ஏற்க இயலாது என்பர் பெளத்தர். பருப்பொருள் அறிவியலுக்கு (இயற்பியல், வேதிஇயல்) இது பொருந்தும் 2.மெய்ம்மை, பொய்ம்மை எனக் கண்டறிவதற்கு வேறுவகையில் செயல் முறையில் சரி பார்க்க வேண்டும். இதற்குச் சம்வாதி பிரவர்த்தி என்று பெயர். பயனில்லை எனில் பொய்யெனத்துணிவது பயன் உண்டு என்றால் மெய்யென ஏற்பது. இவ்வாறு பிறிதொன்றினைக் கொண்டு அறிவின் ஏற்புடைமையை நையாயிகர் உறுதி செய்வர். 3.தன்னிலேயே அறிவு மெய்ம்மை உடையது என்றும், பொய்ம்மை புறக் காரணத்தால் ஏற்படுவது என்றும் மீமாம்சகர் கூறுவர். கடவுளை ஏற்காமல் வேதத்தை ஏற்பதால், வேதத்தின் மெய்ம்மையை அறிவிலேயே இருப்பதாக இவர்கள் கருத வேண்டி இருக்கிறது. 4.தன்னால் கொண்டு வருதலைச் (ஸ்வதப் பிராமானியம்) சைவ சித்தாந்தம் ஏற்பது. சிவஞான முனிவர், சித்தியார் சுபக்க உரையில் இதனை நன்கு விளக்குகிறார். 5.மெய்யறிவு அதன் பயன்படும் செயலால் அறியப்படும். பொய்யறிவு அவ்வாறு இல்லை என்பதை ஏற்புடைமைக்கு உரை கல்லாகக் கொள்வது தவறாகும். இவ்வுரைகல் இறந்த காலம், வருங்காலம் ஆகியவை பற்றிய அறிவுக்கும் பொருந்தாது என்பது சைவ சித்தாந்தக் கொள்கையாகும்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4y2zwkjy/
தமிழ்“அறிவின் ஏற்புடைமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4y2zwkjy/APA
Oliyon Research. (2026). அறிவின் ஏற்புடைமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4y2zwkjy/MLA
"அறிவின் ஏற்புடைமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4y2zwkjy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment