இது ஓர் அமினோ அமிலம், பெர் அயோடேட்டுடன் வினை புரிந்து, கிளையாக்சலேட், அம்மோனியா, ஃபார்மால்டிஹைடு ஆகியவற்றைக் கொடுக்கிறது. கிளைசீன், சிட்ஸ்டைன், கோலின் போன்ற பல முக்கிய ஆக்கச் சிதை மாற்றப் பொருள்களின் (metabolites) உயிர் வேதித் தொகுப்பு முன்னோடியாக (biosynthetic precursor) உள்ளது. பாலிமிக்சின் என்னும் நுண்ணுயிர் எதிர் மருந்தில் (antibiotic) முக்கியக் கூறாக D-செரின் இணைந்துள்ளது. உயிர் வேதித் தொகுப்பின் படி, செரின் 3-பாஸ்ஃபோ கிளைசெரிக் அமிலத்தை மூலமாகக் கொண்டது. கிளைசீனும், செரினும் எளிதில் பரிமாற்றம் அடைவதால், கிளை யாக்சலேட் கிளைசீன் செரின் என்னும் உயிர் வினை வழியின் மூலமும், செரின் விளையலாம், இதன் அமைப்பு வருமாறு: செரின் மாற்றியத்தின் சில இயற்பியல் மாறிலிகள் (25° C இல்) கீழே கொடுக்கப்பட்டுள்ளன. \begin{align} pK_1 (COOH) = 2.21 \\[6pt] pK_2 (NH_3+) = 9.15\end{align} மின்சுமைமாய் நிலை (isoelectric point) = 5.68 ஒளியியல் சுழற்சி திறன் = [\alpha]_D(H_2O) = -7.5 = [\alpha]_D(5HCl) = +15.1 கரை திறன் (கி./100 மி.லி. H_2O) = 5.02(DL) ஆக்கச் சிதை மாற்றத்தின் போது, செரின்டிமேனேஸ் (டிஹைட்ரேஸ்) நொதி செரினைத் தாக்கிப் பைருவேட், அம்மோனியா ஆகியவற்றை விளைவிக்கிறது. வேறொரு வழி முறையில், ஹைட்ராக்சி மெத்தில் தொகுதி டெட்ரா ஹைட்ரோஃபோலிக் அமிலத்திற்குப் பரிமாற்றம் அடைந்து, கிளைசீனை உண்டாக்குகிறது. இறுதியில், டிரான்ஸ் அமினேஸ் நொதி செரினுடன் சேர்ந்து, 3 ஹைட்ராக்சிப் பைருவேட்டை விளைவிக்கிறது. —த. தெய்வீகன்