உயிர்ப்பு
uyirppu
அடைப்பொலிகள் (Stops) பிறப்பதற்குரிய சூழ்நிலையில் நுரையீரல் காற்றின் அழுத்தத்தினை மிகுதியாக்கிக் காற்றினை முழுமையும் தடைபடாமல் ஒரு குறிப்பிட்ட அளவு காற்று வெளிவரச் செய்யும் நிலையில் உயிர்ப்புடை அடைப்பொலிகள் (Aspirated stops) பிறக்கின்றன.
அடைப்பொலிகள் (Stops) பிறப்பதற்குரிய சூழ்நிலையில் நுரையீரல் காற்றின் அழுத்தத்தினை மிகுதியாக்கிக் காற்றினை முழுமையும் தடைபடாமல் ஒரு குறிப்பிட்ட அளவு காற்று வெளிவரச் செய்யும் நிலையில் உயிர்ப்புடை அடைப்பொலிகள் (Aspirated stops) பிறக்கின்றன. இங்ஙனம் அடைப்பொலியினைத் தொடர்ந்து வெளிவரும் மூச்சுக் காற்றே உயிர்ப்பு (Aspiration) எனப்படுகிறது.
அடைப்பொலிகள் உயிர்ப்புடை அடைப்பொலிகள் எனவும் உயிர்ப்பிலா அடைப்பொலிகள் (Unaspirated stops) எனவும் இரு வகைப்படும். உயிர்ப்பிலா அடைப்பொலிகள் பிறக்கும்போது வாயின் கண்ணுள்ள தடை விலகியதும் மூச்சுக் காற்று வெளி வருவதில்லை. தமிழ்மொழியில் காணப்பெறும் க, ச, த, ப, ட போல்வன இத்தகைய உயிர்ப்பிலா அடைப்பொலிகளாகும். தமிழில் உயிர்ப்புடை அடைப்பொலிகள் இல்லை.
இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் உயிர்ப்புடை அடைப்பொலிகள் காணப்படுகின்றன. (p) என்பது ஒலிப்பிலா உயிர்ப்புடை அடைப்பொலியாகும். இது தமிழிலுள்ள பகர ஒலிபோன்று பிறப்பினும் வாயின்கண்ணுள்ள தடை விலகும்போது அதிக அளவு மூச்சுக் காற்று வெளிவருகிறது. இதனைக் காற்று வாயிலிருந்து வெளிவரும் நிலையில் கையின் பின்பாகத்தை வைத்து அறிந்து கொள்ளலாம். அடைப்பொலியும் மூச்சுக் காற்றும் (Puff of Breath) இணையும் நிலையில் உயிர்ப்புடை அடைப்பொலிகள் பிறக்கின்றன.
உயிர்ப்புடை ஒலிகள் ஒலிப்புடை ஒலிகளாகவோ (Voiced sounds) ஒலிப்பிலா ஒலிகளாகவோ (Voiceless sounds) அமைய வாய்ப்பிருப்பினும் பெரும்பாலும் மொழிகளில் ஒலிப்பிலா உயிர்ப்புடை ஒலிகளே காணப்படுகின்றன.
வாயின்கண்ணுள்ள தடை விலகியதும் வெளி வரும் மூச்சுக் காற்றின் அளவினை அடிப்படையாகக் கொண்டு உயிர்ப்புடை ஒலிகள் இரண்டு வகையினவாகக் குறியீடிட்டுக் காண்பிக்கப்பெறும். குறைந்த அளவு மூச்சுக்காற்று வெளிவரும் நிலையில் உயிர்ப்புடை ஒலிகள் குறை உயிர்ப்புடை ஒலிகள் (p) எனவும், அதிக அளவு மூச்சுக் காற்று வெளிவரும் நிலை யில் உயிர்ப்புடை ஒலிகள் நிறை உயிர்ப்புடை ஒலிகள் (p) எனவும் குறிக்கப்பெறும். ஏ.ஆ.
துணை நூல்கள்
Jones, Daniel., An Outline of English Phonetics, Cambridge University Press, Cambridge, 1980.
Heffner, R.M.S., General Phonetics, The University of Wisconsin Press, Amcrica, 1964.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 979)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4nnce4pv/
தமிழ்“உயிர்ப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4nnce4pv/APA
Oliyon Research. (2026). உயிர்ப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4nnce4pv/MLA
"உயிர்ப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4nnce4pv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment