தெற்கு இசுபெயின் (Southern Spain) நாட்டிலுள்ள மலையும் சமவெளியும் கொண்ட மிகப் பெரிய பகுதி. கி.பி. 1833–இல் இப்பகுதி எட்டுச் சிறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. செவில் (Seville) இப்பகுதியின் பழைய தலைநகரமாகும். அண்டலூசியாவில் (Andalusia) உள்ள சிறப்பான நகரங்கள் கிரனாடா (Granada), காடிசு (Cadiz), மலாக்கா (Malaga), கார்டோபா (Cordoba) என்பனவாம். இப்பகுதியின் பரப்பளவு 87,268 ச.கி.மீ. ஆகும்; மக்கள் தொகை 6,441,755 (1981), கி.பி. 8–ஆம் நூற்றாண்டிலிருந்து 18–ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதியை மூர்கள் (The Moors) என்னும் முசுலீம்கள் ஆண்டனர். கல்வி கேள்விகளில் சிறந்த இவர்கள் அழகான பல கட்டிடங்களைக் கட்டித் தங்கள் கலைத் திறனைக் காட்டியுள்ளார்கள். அவற்றின் சின்னங்களை இன்றும் காணலாம்.