சித்தாந்தம்
cittāntam
பொருள்கள் · Senses
1.
அறுதியான முடிவு/கொள்கை/உண்மை
2.
சைவசித்தாந்தம்
3.
சிவாகமம்
4.
பிடிவாதம்
5.
வானசாத்திரம் கூறும் நூல்
6.
முடிந்த முடிவு, சுத்தாத்துவிதசைவ சமயம்
7.
பொருள்: சித்தம்-சிந்தனை, அந்தம்-முடிவு. சித்தம் + அந்தம் உள்ளத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சிப் பட்டறிவுடன் மேற்கொண்டு முடிந்த முடிபு. அல்லது மேற்கொள்ளப்படும் நெறிமுறை நெறியம் எனலாம். ஆகையால் இதனை மறுப்பதற்கு ஏதுமிலை. - வகை: இது துவைதம், அத்துவைதம் என இருவகை. துவைதம் என்றால் கடவுளும் உயிரும் வேறு என்பது. அத்துவைதம் என்றால் கடவுளும் உயிரும் ஒன்று என்பது. அத்துவித வகை 1) கேவல அத்துவிதம்: வேறுபெயர் சங்கர சித்தாந்தம் 2) விசிட்டாத் துவைதம்: வேறு பெயர் இராமனுசர் சித்தாந்தம் 3) சுத்த அத்துவைதம். வேறு பெயர் மெய்கண்டார் சித்தாந்தம் இதன் வேறு பெயர்கள் : சைவ சித்தாந்தம், முதல் சைவ நெறி, ஆகம சித்தாந்தம், புனித அத்துவைதம், சுத்த அத்துவைதம். கருத்துகள் : 1) பரமாணுக்கள் தாமுங்காரணமாக அவை காரியமே 2) காரியம் என்னும் நிலையில் தோன்றி நின்று மறைவதாயினும், அது மறையும் போது காரண நிலையில் நுண் உருவில் இருப்பதால் உலகம் என்றும் உள்பொருளே. 3) காரணமாகிய மாயையும் என்றும் உள்பொருளே. பா. சைவசித்தாந்த அடிப்படைகள்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4ghe2zfz/
தமிழ்“சித்தாந்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ghe2zfz/APA
Oliyon Research. (2026). சித்தாந்தம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4ghe2zfz/MLA
"சித்தாந்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ghe2zfz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment