சிறுநீரகக் கட்டிகள்
ciṟunīrakak kaṭṭikaḷ
சிறுநீரகத்தைப் பெருமளவில் பாதிக்கும் புற்று நோய் வயது முதிர்ந்தோரையே பெரிதும் பாதிக்கிறது.
சிறுநீரகத்தைப் பெருமளவில் பாதிக்கும் புற்று நோய் வயது முதிர்ந்தோரையே பெரிதும் பாதிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய புற்று, சிறுநீரகத்தில் உள்ள அண்ணீரகத் திசுவிலிருந்து உருவாகிறது என்று தவறாகக் கருதப்பட்டது. சிறுநீரில் குருதி வெளிப்படுவதுதான் இதன் முக்கிய அறிகுறி- யாகும். குருதிக் கட்டிகள் இருந்தால், சிறுநீரகத்தில் குத்தல் வலி ஏற்படும். சில வேளை வயிற்றில் மந்தமான வலி ஏற்பட்டு, இடை விடாத காய்ச்சல் ஏற்படும். நுரையீரல்களிலோ, கல்லீரலிலோ, எலும்புகளிலோ, புற்றுப் பதியங்கள் அல்லது அயலிடப் புற்று (metastasis) தோன்றிய பின்னரே, சிறுநீரகப் புற்றுத் தெரிய வரும். இக்கட்டியைத் தொட்டுப் பார்க்கலாம். எக்ஸ் கதிர்ப் படங்கள் மூலமும், புற ஒலி வரைபடங்கள் மூலமும் நோயை அறுதியிடலாம். தொடக்கத்திலேயே நோயை அறுதி செய்து விட்டால், அறுவை மருத்துவம் மிகு பயன் தரும்.
நெப்ரோபிளாஸ்டோமா. குழந்தைப் பருவத்தில் தோன்றும் மிகவும் கொடிய புற்று நோயான இது, குழந்தையின் முதல் வயதில் தோன்றலாம். வயிற்றில் கட்டியாகத் தொடங்கும் இந்நோயில், சிறுநீரில் குருதி வெளிப்படுகிறது. இப்புற்றுக் கட்டியை, எக்ஸ் கதிர் வீச்சால் கரைத்து விடலாம். புற்று எதிர் மருந்துகளும் பயனளிக்கின்றன.
சிறுநீரகக் குழல், சிறுநீர்ப் பை இவற்றில் தோன்றும் கட்டி, செல் இயல்படி ஒரே தன்மையதாக இருக்கும். இது நேரடியாகவும், விரைவாகவும் பரவும். பாப்பில்லோமா போன்ற புற்றுக் கட்டி தீங்கற்றதாக இருந்த போதும், போதிய மருத்துவம் அளித்த பின்னரும் மீண்டும், மீண்டும் தோன்றக் கூடியது. இதில் பெரும்பாலும், சிறுநீர்ப் பையே பாதிக்கப்படுகிறது. சாய, அச்சுத் தொழில்களில் ஈடுபட்டவர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அனிலின் போன்ற சாயப் பொருள்களுக்கும் இப்புற்று நோய்க்கும் தொடர்பு இருக்கக் கூடும். சிஸ்டோசோமியாசிஸ் என்ற நோய் பரவியுள்ள இடங்களிலும், இப்புற்று நோய் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. இங்கும், சிறுநீரில் குருதி வெளிப்படுகிறது. சிறுநீர்ப் பாதை அடைப்பு, நுண்ணுயிர்த் தாக்கம் ஆகியவற்றிற்கான அறிகுறிகளும் காணப்படுகின்றன.
சிறுநீர்ப்பை உள்நோக்கி, பிணிக் கூறாய்வு. எக்ஸ் கதிர்ப் படங்கள் ஆகியவை நோய் அறுதியிடலில் பெரிதும் உதவுகின்றன. பொசுக்கு முறை கொண்டோ, எக்ஸ் கதிர் மருத்துவம் கொண்டோ நோயை அகற்ற முடியும், சிறுநீர்ப் பையை அகற்றி, சிறுநீரகக் குழாயைப் பெருங்குடல் அல்லது தோலுடன் இணைத்து அறுவை செய்வது பயனளிக்கிறது. —மு.கி. பழநியப்பன் நூலோதி. Bailey and Love's Short Practise of Surgery, E.L.B.S, London, 1979.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 360)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4dfn6vja/
தமிழ்“சிறுநீரகக் கட்டிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4dfn6vja/APA
Oliyon Research. (2026). சிறுநீரகக் கட்டிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4dfn6vja/MLA
"சிறுநீரகக் கட்டிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4dfn6vja/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment