இனஞ்சுட்டி
iṉañcuṭṭi
பெயர்களை அணைந்து நின்று அவற்றைச் சிறப்பித்து வருவன இனஞ்சுட்டிகள் எனப்படும்.
பெயர்களை அணைந்து நின்று அவற்றைச் சிறப்பித்து வருவன இனஞ்சுட்டிகள் எனப்படும். அந்த மரம், ‘ஒரு மரம்’ போன்றவற்றில் பெயரைத் தழுவி வரும் ‘அந்த’, ‘ஒரு’ ஆகியவை இளஞ்சுட்டிகள். குறிப்பிட்ட ஒரு மனிதன் அல்லது இடம் அல்லது பொருளின் பெயரைக் குறிக்காமல் பொதுவாகக் குறிப்பிடப்படும் மரம், நூல், சிறுமி போன்ற பொதுப் பெயர்கள் இனஞ்சுட்டிகள் (Determinations) இன்றி மொழியில் வருவதில்லை. நான் மரத்தைப் பார்த்தேன் என்று கூறமுடியாது. அந்த, ஒரு போன்ற இனஞ்சுட்டிகளை இட்டே கூற இயலும். ஆகவே, மொழியில் இனஞ்சுட்டிகள் மிகச் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன. அதனாலேயே ஆங்கில அறிஞர்கள் இதனைப் பெயர், வினை, பெயரடை, வினையடை போன்ற எட்டுவகையான சொல்வகைகளில் ஒன்றாகக் கருதினர்.
இனஞ்சுட்டிகளை ஆறு வகையாகப் பிரிக்கலாம். (1) ‘அந்த மனிதன்’, ‘இந்தப் பெண்’ போன்றவற்றில் வரும் ‘அந்த’, ‘இந்த’ போன்ற சுட்டுப் பெயரடைகள், (2) ‘ஒரு மரம்’, ‘முதலாம் ஆண்டு’ போன்றவற்றில் வரும் ‘ஒரு’, ‘முதலாம்’ போன்ற எண்ணுப் பெயரடைகள் (3) ‘பல மனிதர்கள்’, ‘கொஞ்சம் நீர்’ போன்றவற்றில் வரும் ‘பல’, ‘கொஞ்சம்’ போன்ற வரையறையில்லா எண்ணுப் பெயரடைகள். (4) ‘அனைத்து நாடுகள்’ போன்றவற்றில் வரும் ‘அனைத்து’ போன்ற முழுமைப் பெயரடைகள். (5) ‘ஒவ்வொரு பெண்ணும்’ போன்றவற்றில் வரும் ‘ஒவ்வொரு’ போன்ற பகிர்வுப் பெயரடைகள். (6) ‘என்னுடைய வீடு’ போன்றவற்றில் வரும் ‘என்னுடைய’ போன்ற உடைமைப் பெயரடைகள்.
தமிழ் மொழியில் இனஞ்சுட்டிகள் பெயரின் ‘பால், எண்’ ஆகியவற்றிற்குத் தகுந்தபடி மாறுவதில்லை. எடுத்துக்காட்டாக, அந்தச் சிறுவன், அந்தச் சிறுமி, அந்தச் சிறுவர்கள் மூன்றிலும் ‘அந்த’ என்ற இனஞ்சுட்டி மாறாமல் உள்ளது. ஆனால், ஆங்கிலம் போன்ற மொழிகளில் எண் வேறுபாடு இனஞ்சுட்டிகளில் காணப்படுகிறது. எம்.சு.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 610)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/424akeeb/
தமிழ்“இனஞ்சுட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/424akeeb/APA
Oliyon Research. (2026). இனஞ்சுட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/424akeeb/MLA
"இனஞ்சுட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/424akeeb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment