அட்லான்டிக் உடன்படிக்கை
aṭlāṉṭik uṭaṉpaṭikkai
மேற்கு ஐரோப்பாவிலுள்ள சில நாடுகளுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடையே 1949-ல் ஒரு ராணுவ உடன்படிக்கை ஏற்பட்டது.
மேற்கு ஐரோப்பாவிலுள்ள சில நாடுகளுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடையே 1949-ல் ஒரு ராணுவ உடன்படிக்கை ஏற்பட்டது. ரஷ்ய கம்யூனிஸ்டு நாடுகள் ஒன்று சேர்ந்து இயங்குவதற்கு எதிரிடையாக ஜனநாயக நாடுகள் ஐக்கியப்பட்டு நிற்கவேண்டும் என்னும் எண்ணத்தோடு இவ்வுடன்படிக்கை ஏற்பட்டது. இந்த ஐக்கியத்தை ஒரு கூட்டாட்சி என்றோ நாட்டுக்கூட்டம் என்றோ கூறமுடியாது. இது ராணுவ நிலைமைகளைச் சமாளிப்பதற்கு ஏற்பட்ட ஓர் உடன்படிக்கையேயாம். இவ்வுடன்படிக்கையில் கையெழுத்திட்ட எந்த அதன் உறுப்புநாடும் பகைவர்களால் தாக்கப்பட்டால் மற்ற உறுப்பு நாடுகள் உதவி கோரப்படாமலே உதவிக்குச் செல்லவேண்டும் என்பது இதன் கருத்து.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 75)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3xt2naqs/
தமிழ்“அட்லான்டிக் உடன்படிக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3xt2naqs/APA
Oliyon Research. (2026). அட்லான்டிக் உடன்படிக்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3xt2naqs/MLA
"அட்லான்டிக் உடன்படிக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3xt2naqs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment