சாம்பல் நரையான்
cāmpal naraiyāṉ
இது,சிக்கோனிபார்பீஸ் வரிசையில் ஆர்டைடே குடும்பத்தைச் சேர்ந்தது.
இது,சிக்கோனிபார்பீஸ் வரிசையில் ஆர்டைடே குடும்பத்தைச் சேர்ந்தது. நீர்நிலை மீன்களைத் தின்று வாழும் சிறப்பினம் உலகெங்கும் காணப்படுகின்றது. நீண்ட கால்களும், உறுதியான கூரிய அலகும் கொண்ட சாம்பல் நரையானின் கழுத்து, மீன்களைப் பற்ற உதவும் விசைச் சுருள் அமைப்புடையது. வெண்மையான நீள் கழுத்தின் முன் பக்கத்தில் மேலிருந்து கீழாகக் கறுப்பு நிறப் பட்டைகள் ஆரம் போல அமைந்திருக்கும். உடலின் மேற்பகுதி கருஞ்சாம்பல் நிறமுடையது. இறக்கைகள் கறுப்பு நிறத்தன. வயிறும், மார்பும் வெள்ளையாக இருக்கும். முழு வளர்ச்சி பெற்ற நாரையின் உச்சியிலிருந்து கறுப்பு நிறக் கொண்டை சிறு கொத்தாகப் பின்னோக்கித் தொங்கும். பெண் நாரை உருவில் சற்றுச் சிறியதாக இருப்பதோடு, இறகுகள் சற்று நிறம் மங்கியும் இருக்கும். தலைக் கொண்டையும் ஓரளவே வளர்ச்சி பெற்றிருக்கும்.
தென் இந்தியாவில் நீர் வளமிக்க இடங்களைச் சார்ந்து ஆங்காங்கே காணப்படும். இது வேடந்தாங்கலில் இனப் பெருக்கம் செய்கிறது. பெரும்பாலும் தனித்தே காணப்படும் இது, இனப்பெருக்க காலத்தில் குழுவாக ஏனைய நீர் வாழ் பறவைகளோடு கூடிக் கூடு கட்டும். வைகறை, நேர அளவு: ஒரு நாள் என்பது காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை என ஆறு சிறுபொழுதுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் எற்பாடு என்பது மாலை \(14\) மணி முதல் \(18\) மணி வரை உள்ள காலமாகும்.அடிப்படைக் காரணம்: 'எல்' என்பது கதிரவனைக் குறிக்கிறது. 'படுதல்' என்பது மறைதல் ஆகும். எனவே, கதிரவன் மறையத் தொடங்கும் நேரம் (மாலை) 'எற்பாடு' என்று அழைக்கப்படுகிறது. நேரங்களில் நீர் நிலை அருகே தோள்களுக்கு இடையே கழுத்தை உள்ளே இழுத்து வைத்துக் கொண்டு, அசையாமல் மீன், தவளைகள் நெருங்கும் வரை ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு காத்திருந்து, பின் கழுத்தை நொடிப் பொழுகில் விரைந்து நீட்டி, இரையை அலகால் பற்றும். பிடித்த மீனின் தலைப் பகுதி முதலில் வாயுள் செல்லுமாறு விழுங்கும். நீரிடையே ஆரவாரமின்றிக் கால் மாற்றி வைத்து மெல்ல நடந்து சென்று இரை தேடுவதும் உண்டு.
மரக்கட்டைகளில் கட்டையோடு கட்டையாக அசையாது அமர்ந்திருந்து, அருகே வரும் மீன்களைப் பிடிப்பதோடு, நீர்ப்பரப்பை ஒட்டிச் சற்றே உயரப் பறந்து, மீன்களைப் பிடிக்கும் பழக்கமும் காணப்படும். அமர்ந்திருக்கும் இது மக்கள் நெருங்கும் போது, ‘க்வார்ங்’ எனக் கூவியவாறே எழுந்து பறக்கும். அப்போது நீண்ட கழுத்தை முன் நீட்டி, இறக்கைகளை வேகமாக அடித்துக் கொண்டு எழுந்து பறப்பதில், இது அடையும் துன்பம் புலனாகும். உயர எழுந்து, பின் அகன்ற இறக்கைகளைச் சீராக அசைத்தவாறு, கழுத்தை S வடிவில் மடக்கி உள்ளிழுத்துக் கொண்டும், கால்களை வாலோடு ஒட்டி நீட்டியவாறும் பறப்பது காணத்தக்கது. இரவில் தோப்புகளிலும், சதுப்பு நிலக் காடுகளிலும் உள்ள மரங்களில் தங்கும் இது, பகல் நேரத்திலும் அங்கு ஓய்வு கொள்ளும்.
தென் இந்தியாவிலும், ஸ்ரீலங்காவிலும் நவம்பர்—மார்ச் வரை இது இனப்பெருக்கம் செய்கிறது. ஆண் பறவையே நீரினுள் அல்லது நீர் நிலைக்கு அருகே நிற்கும் மரங்களில் கூடு கட்டும் இடத்தைத் தேர்ந்தெடுக்கிறது. குச்சிகளைக் கொண்டு நடுவே குழிவுடைய பரண் அமைப்பிலான கூட்டினை ஆணும், பெண்ணுமாகக் கட்டி முடித்த பின் இலைக் கொத்துகள், வைக்கோல், நீரில் மிதக்கும் பாசி ஆகியன கொண்டு கூட்டினை மென்மையாக்கிக் கொள்ளும். கூடு கட்டும் சமயத்திலும், இணை சேரும் போதும் சில மரபு ஆட்டங்களைக் குரல் ஒலி எழுப்பியவாறே நிகழ்த்தும். வெளிர் கடற்பச்சை அல்லது பசு நீல நிறத்தில் நீள்வட்ட வடிவமான மூன்று அல்லது நான்கு முட்டைகளிடும். ஆணும், பெண்ணும் சில மணி நேரங்களுக்கு ஒரு முறை மாறி, மாறி அடை காப்பதோடு, கடும் வெயில், மழை ஆகியவற்றிலிருந்து முட்டைகளையும், குஞ்சுகளையும் இறக்கைளை விரித்துப் பாதுகாக்கும்.
முதல் முட்டை இட்ட உடனேயே அடை காக்கத் தொடங்குவதால், ஒரே கூட்டிலுள்ள குஞ்சுகளிடையே வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க வேறுபாடு புலப்படக் காணலாம். 25 நாளுக்குப் பின் வெளிப்படும் குஞ்சுகளுக்கு ஆணும், பெண்ணும், உண்டு செரித்த மீன்களைக் கக்கி இரையூட்டுகின்றன. இரை கொண்டு வரும் பறவை கூட்டில் வந்து இறங்கியவுடன், குஞ்சுகள் ஆவலோடு, அதன் அலகினைப் பற்றி வேகமாக ஆட்டி, இரையைத் தங்கள் வாயினுள் கக்கச் செய்கின்றன. குஞ்சுகள் சற்று வளர்ந்தவுடன் ஆணும், பெண்ணும் கூட்டின் மீதே இரையினைக் கக்க, குஞ்சுகள் அதைத் தேடித் தின்னும். ஏழு அல்லது எட்டு வாரங்களுக்குப் பின் குஞ்சுகள் கூட்டை விட்டுப் பறந்து செல்கின்றன. —க. ரத்னம் நூலோதி. Salim Ali, and S. Dillon, Ripley Hand Book of the Birds of India and Pakistan, Vol. I. Oxford Press, New Delhi, 1968.
<!---- மேலேயுள்ள கோட்டை நீக்க வேண்டாம். பக்க ஒருங்கிணைப்பின் போது, topicகளுக்கு இடையே வேறுபாடு காட்டத் தேவைப்படுகிறது.---->
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 56)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3wbmjqb3/
தமிழ்“சாம்பல் நரையான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3wbmjqb3/APA
Oliyon Research. (2026). சாம்பல் நரையான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3wbmjqb3/MLA
"சாம்பல் நரையான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3wbmjqb3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment