இராமானுசர் தாலாட்டு
irāmāṉucar tālāṭṭu
மண்ணுலகில் வாழ்ந்த போதே பெரும்புகழ் பெற்றவர் இராமானுசர்.
மண்ணுலகில் வாழ்ந்த போதே பெரும்புகழ் பெற்றவர் இராமானுசர். இராமானுசரின் கருணைப் பெருக்கை ஞானிகளும் கவிஞர்களும் பக்தர்களும் பொதுமக்களும் உணர்ந்தனர். ஞானிகள் இராமானுசரின் மெய்நெறியைப் பின்பற்றி ஞானானுபவம் பெற்றனர். கவிஞர்கள் இராமானுசர் திருப்புகழைப் பிரபந்தங்களாவும் காவியங்களாகவும் இசைத்தனர். வடுக நம்பி இராமானுசரின் வரலாற்றை ‘எதிராச வைபவம்’ என்னும் வடமொழிக் காவியமாக இயற்றினார். திருவரங்கத்தமுதனார் அந்தாதி பாடினார். இராமானுசரின் திருப்புகழை உணர்ந்த மகளிர் தாலாட்டுகள் பாடிக் குழந்தைகளுக்குச் சாந்தமான உறுக்கத்தை வருவித்தனர்.
மகளிர் இராமானுசர் தாலாட்டுப் பாடிய செய்தியைப் பின்பழகிய பெருமாள் சீயர், ‘ஆறாயிரப்படி குருபரம்பரைப் பிரபாவத்தில்’ பின்வருமாறு குறிப்பாகத் தெரிவிக்கிறார். ‘ஒருநாள் கோவிந்தப் பெருமாள் எம்பெருமானார் அடியாள் வாசலிலே கால்ய (கால) கர்மங்களையும் இழந்து நிற்கக் கண்டு ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் உடையவர் கோஷ்டியில் அத்தை வெளியிட, உடையவரும் கோவிந்தப் பெருமாளே நீர் அங்கே நிற்பானேன் என்ன, அவரும் தேவரீர் தாலாட்டு மதுரமாய் இசையேறிச் செஞ்சொல்லாய் இருக்கத் தேவரீர் குணானுபவம் முன்னடி வலையக் கட்டப் போக்கடியற்று நின்றேன் என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீவைஷ்ணவரும் தாலாட்டும் நடந்தது உள்ளது என்ன உடையவரும் இவர் பிராவண்யம் (பேரன்பு) இருந்தபடி ஏன் என்று உகந்தருளினார்’ என்னும் பகுதி குருபரம்பரையில் காணப்படுகிறது.
மகளிர் பாடிய தாலாட்டு மறைந்துவிட்டது. ஆனால், அதன் சில தொடர்களைப் பன்னீராயிரப்படி குருபரம்பரை குறிப்பிடுகிறது. அவற்றுள் ஒன்று வருமாறு: ‘அத்திரி சூழ் ஞாலம் அனந்தாவ தாரமெனச் சித்திரையில் ஆதிரை நான் வந்துதித்த தேசிகனோ.’ எஸ்.கே.இரா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 157)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3t74dxk9/
தமிழ்“இராமானுசர் தாலாட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3t74dxk9/APA
Oliyon Research. (2026). இராமானுசர் தாலாட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3t74dxk9/MLA
"இராமானுசர் தாலாட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3t74dxk9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment