அலரி
alari
ஏழெட்டடி வளரும் அழகான குற்றுச்செடி ; அழகும் மணமுமுள்ள பல நிறப்பூக்கள் பூப்பது ; தோட்டங்களில் வைத்து வளர்ப்பது; ஆற்றோரங்களிலும் குளக்கரைகளிலும் தானாக வளர்வது.
ஏழெட்டடி வளரும் அழகான குற்றுச்செடி ; அழகும் மணமுமுள்ள பல நிறப்பூக்கள் பூப்பது ; தோட்டங்களில் வைத்து வளர்ப்பது; ஆற்றோரங்களிலும் குளக்கரைகளிலும் தானாக வளர்வது.
இது இமயமலைப் பிரதேசங்களில் காட்டுச் செடியாக இருக்கிறது. இலை பெரும்பாலும் கணுவுக்கு மூன்று, வட்ட வொழுங்காக இருக்கும்; 4-6 அங்குலம் நீண்ட ஈட்டி வடிவம் ; சற்றுத் தடிப்பாக இருக்கும். பூங்கொத்து வளரா நுனி மஞ்சரிகளடங்கிய ரசீம். சிவப்பு, வெண்மை, மஞ்சள் முதலிய பல நிற அலரிகள் உண்டு. அல்லியின் உட்புறத்தில் இழைபோன்ற நீண்ட செதில்கள் உபமகுடமாக இருக்கும். சில வகைகளில் அடுக்குப் பூக்கள் உண்டு. கேசரப்பையறைகளைச் சேர்க்கும் இணைப்பு மேலே நீண்டு முறுக்கிக்கொண்டிருக்கும். ஒரு பூவில் இரண்டு ஒருபுற வெடிகனிகள் உண்டாகும். விதைகளுக்கு மேலே மஞ்சள் நிறமான பஞ்சுபோன்ற மயிர் மூடியிருக்கும். அலரியில் நீர் போன்ற மஞ்சட்சாறு இருக்கிறது. இந்தச் செடியின் எல்லாப் பாகங்களும் நஞ்சுள்ளவை. வேர் மிகக் கொடிய நஞ்சு. குடும்பம்: அப்போசைனேசீ (Apocynaceae); இனம் : நீரியம் ஓடரம் (Nerium odorum).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 258)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3qzbba7e/
தமிழ்“அலரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3qzbba7e/APA
Oliyon Research. (2026). அலரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3qzbba7e/MLA
"அலரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3qzbba7e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment