ஆஸ்பிரின்
āspiriṉ
ஆஸ்பிரின்: அசிட்டைல் சாலிசிலிக அமிலம் என்ற ரசாயனப் பொருள் வாணிபத்தில் ஆஸ்ப்பிரின் என வழங்குகிறது.
ஆஸ்பிரின்: அசிட்டைல் சாலிசிலிக அமிலம் என்ற ரசாயனப் பொருள் வாணிபத்தில் ஆஸ்ப்பிரின் என வழங்குகிறது. இது ஒரு வெண்மையான படிக வடிவுள்ள தூள். தலைவலிக்கும், வாத ஜுரத்திற்கும், ஜலதோஷத்திற்கும் இது மருந்தாக மிக அதிகமாகப்பயன்படுகிறது. வாத நோய்களுக்கு இதை மருந்தாக உட்கொண்டால் உடனடியாகச் சுரம் தணிவதுடன் மூட்டுக்களின் வீக்கம் குறைந்து வலி நீங்குகிறது. தலை வலிக்கும் மற்ற நரம்பு வலிகளுக்கும் இதை மருந்தாக உட்கொண்டால், வலி நிவாரணமடையுமே தவிர, வலிக்குக் காரணமான கோளாறு நீங்குவதில்லை. ஆகையால் இது தாற்காலிகமாகவே பயன் தருகிறது. இதை அதிகமாக உட்கொள்வதால் வயிற்றுக் குமட்டல், வாந்தி, காதிரைச்சல், சில சமயங்களில் பார்வை மங்குதல் முதலிய விபரீதங்கள் விளையலாம். இதைக் கொடுப்பதால் சுரத்தின் வெப்பநிலை குறையும்போது நிரம்ப வேர்வையுண்டாகும். அப்போது உடம்பில் குளிர் படாமற் பார்த்துக்கொள்ளவேண்டும்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 542)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3qvdyban/
தமிழ்“ஆஸ்பிரின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3qvdyban/APA
Oliyon Research. (2026). ஆஸ்பிரின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3qvdyban/MLA
"ஆஸ்பிரின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3qvdyban/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment