ஒரு கிறித்தவப் பாதிரியார். இவர் கி.பி. 7–ஆம் நூற்றாண்டில் அயோனாவிலிருந்து வரவழைக்கப்பட்டவர். ஆங்கில–சாக்சானியர் காலத்தில் ஆசுவால்டு இளவரசர், நார்த்தம்பிரியாலில் கிறித்தவச் சமயத்தை நிலைநாட்டும் நோக்குடன் அய்டான் பாதிரியாரைக் கொண்டு வந்தார். அய்டான் எளிமைக்கும் சீரிய பணிகளுக்கும் பெயர் பெற்றவர். இறைவனும் பொருள் படைத்தோரும் அளித்த பெரும் செல்வத்தை அவர் ஏழை எளியோருக்குக் கொடுத்து இன்பம் கண்டவர். அய்டானும் அவருடைய துறவிகளும் இங்கிலாந்தின் வட பகுதியிலும் நடுப் பகுதியிலும் வாழ்ந்தவர்களைக் கிறித்தவச் சமயத்திற்கு மதம் மாற்றினார்கள்.