அஷ்டக்கிராமம்
aṣṭakkirāmam
அஷ்டக்கிராமம்: மைசூரை யாண்டுவந்த ஜைன சமயத்தினனான பிஜ்ஜளன் என்னும் ஹொய்சள அரசனை இராமானுசர் வைணவனாக்கினார்.
அஷ்டக்கிராமம்: மைசூரை யாண்டுவந்த ஜைன சமயத்தினனான பிஜ்ஜளன் என்னும் ஹொய்சள அரசனை இராமானுசர் வைணவனாக்கினார். அவன் அப்போது விஷ்ணுவர்த்தனன் என்னும் பெயர் பூண்டான். அந்தச் சமயத்தில் அவன் ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கருகே காவிரியின் இருகரையிலும் உள்ள எட்டுக் கிராமங்களை அவருக்குப் பரிசாக அளித்தான். இவை அஷ்டக்கிராமம் என வழங்கின. 1863-ல் இவை மைசூர், ஹாசன் மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டன. இங்குச் சர்க்கரை உற்பத்தித் தொழில் பிரசித்தமானது. இங்கிருந்து வரும் சர்க்கரை 'அஷ்டக்கிராமம்' என்றே பெயர் பெறும்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 330)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3jppccx2/
தமிழ்“அஷ்டக்கிராமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jppccx2/APA
Oliyon Research. (2026). அஷ்டக்கிராமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3jppccx2/MLA
"அஷ்டக்கிராமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jppccx2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment